மன்னிக்க வேண்டுகிறேன்

Posted on

மன்னிக்க வேண்டுகிறேன்

வழக்கம் போல நிர்வாண உண்மைகள் மற்றும் அனுபவஜோதிடம் வலைப்பூவை வாசிக்க நினைச்சவுக “ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லி” என்ற அறிவிப்பை படிச்சுட்டு வா.வெ. இலவசமா கிடைச்சதை இலவசமா கொடுக்கனுங்கறதுதேன் கொள்கை முடிவு.ஆனால் இந்த மின் கட்டணம், ப்ராண்ட் பாண்ட் கட்டணம், ஒர்க்கிங் ஹவர்ஸ்னு சில பிரச்சினைகள் இருக்கிறதால அடையாள சம்பளம் கணக்கா ரூ.250 கட்டணத்துக்கு வாழ் நாள் முழுதுக்குமான பலன்களை மாங்கு மாங்குன்னு கொடுத்துக்கிட்டு வந்தம்.

அப்படியே நம்ம வலைப்பூக்களையும் அல்லாருக்கும் திறந்து வச்சிருந்தம். இப்பம் ஜோதிடம் 360 நூலை வெளியிடனும்னு இறங்கின பிற்காடுதேன் யதார்த்தம் பல்லை இளிக்குது. ரிலீஸ் தேதியை முன் கூட்டி அறிவிச்சு முன் பதிவு செய்துக்க சொல்லி அறிவிப்பு கொடுத்தம். ஆனால் இதுவரை முன் பதிவு செய்துக்கிட்டவுக எத்தீனி பேருன்னு நினைக்கிறிங்க? மாணாம் .. மானம் பூடும்.

நமக்கு 500 பிரதி முன்பதிவானா போதும். மிச்சத்தை நம்மை போன்ற ஞான தாகம் கொண்ட சூத்திரப்பயலுவ படிக்க வசதியா லைப்ரரிகளுக்கு இலவசமா கொடுத்துட்டாலும் கைய கடிக்காதுன்னு நினைச்சிருந்தம். ஆனால் பொங்கலுக்கு 6 நாட்கள் கூட இல்லாத நிலையில் முன் பதிவு மேட்டர் நொண்டியடிக்குது.

இதை முடுக்கி விட வேற வழியில்லை. ஜோதிடம் 360 நூலுக்கு முன் பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே வலைப்பூவை வாசிக்கும் வாய்ப்பை தர முடிவு கட்டியிருக்கம். (ரூ.250+கூரியர் சார்ஜ் செலுத்தி முன் பதிவு செய்துக்கறவுகளுக்கு அவர்கள் எதிர்காலம் தொடர்பான 10 கேள்விகளுக்கு விரிவான பதில் +பரிகாரம் இலவசம்.

மேலும் நம்ம வாசகர்கள் இரண்டு வலைப்பூக்கள் மற்றும் ஒரு வலைதளம்னு சிதறிக்கிடக்கிறதால அலெக்ஸா ரேங்கும் நொண்டியடிக்குது.

மேலும் ஒரு சில புல்லுருவிகள் நம்ம சரக்கை உருவி நம்ம கிட்டயே கடை பரப்பற அளவுக்கு வந்தாச்சு. அதனால இனி ஜோதிடம் 360 நூலுக்கு முன் பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே மேற்படி 2 வலைப்பூக்களை வாசிக்கும் வாய்ப்பை தர முடிவு கட்டியிருக்கம்.

இந்த பதிவை படிக்கும் இந்த அனுபவஜோதிடம் டாட் காம் மட்டும் ஓப்பன் டு ஆல். (மேட்டர் இன்னாடான்னா.. இதுல ஒரு வருச சரக்குதேன் இருக்கும். மேற்படி வலைப்பூக்களில் 12 வருட சரக்கு கீதுங்கோ..

என்ன? ஜோதிடம் 360 நூலுக்கு முன் பதிவு செய்ய தயாராயிட்டிங்களா? அப்பம் இன்விட்டேஷன் தேடி வரும்..

Advertisements

14 thoughts on “மன்னிக்க வேண்டுகிறேன்

  சுந்தரேசன் said:
  January 9, 2012 at 12:09 pm

  ஐயா!

  என் படைப்புகளை தொடர்ந்து இந்த தளத்தில் எழுத விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா? (வாசகர்கள் லட்டு திங்க)

  “நொப்படியே ஆகட்டும்” என்று பதில் கூறிவிட்டு வேறு தளத்தில் (உங்கள் சிஸ்டர் தளத்தில்) வெளியிட்டு விடாதீர்கள்.

  தினத்தந்தியில் போடுகிறேன் என்று கூறிவிட்டு தினமலரில் போட்ட கதை போல் ஆக்கிவிடாதீர்கள். அனுப்பலாமா?

  “வெளிய விடுவது என் வேலை. உள்ளுக்க விடுவது உங்க வேலை” என்று டபுள் மீனிங்கில் பதில் அனுப்பி விடாதீர்கள்.

  அனுப்பவா?

   S Murugesan said:
   January 9, 2012 at 12:17 pm

   Mr.Sundaresan !
   I think Dinamalar is not a sister concern of Daily thanthi. நாங்க பாட்சா ரஜினி மாதிரி. ஒரு தாட்டி சொன்னா 100 தாட்டி சொன்னாப்ல. நீ அனுப்பு ராசா..

    அலாவுதீன் said:
    January 10, 2012 at 6:44 am

    ஐயா!

    தங்கள் கொள்கை மிகவும் பாராட்டுக்குரியது. நாங்கள் தங்களது புத்தகத்தை வாங்குவதற்காக, ஒரு ரூபாயை செலுத்திவிட்டு நூறு ரூபாய் செலுத்தியதாக அர்த்தம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா ஐயா.

  சுந்தரேசன் said:
  January 10, 2012 at 6:25 am

  ஐயா!

  என் படைப்புகளை அனுப்புவதற்கு வழக்கமாக “மேய்கிற மையத்திற்கு” சென்று மொழிமாற்றம் செய்யும் தளத்தில் தட்டச்சு செய்து அங்கிருந்தே அனுப்பி விடுவேன். இதனால் என்னால் முழுமையாக யோசித்து முழுமையாக படைப்புகளை வெளியிட முடிவதில்லை.

  என்னுடைய சந்தேகம் என்னவென்றால், படைப்புகளை இணைய தொடர்பு இல்லாத ஒரு கணிப்பொறியில் ஆற அமர தட்டச்சு செய்து, பிறகு அந்த தகவல்களை நகல் எடுத்து, இணைய தொடர்பு உள்ள கணிப்பொறி மூலம் அனுப்ப விரும்புகிறேன்.

  இணைய தொடர்பின்றி தகவல்களை தட்டச்சு செய்ய ஏதேனும் (ammaa என்று தட்டினால் சுந்தர தமிழில் அம்மா என்று சொல்லும்) மென்பொருள் இருக்கிறதா?

  அல்லது இதற்கு ஃபான்ட் வசதி ஏதேனும் உள்ளதா?

  பணிச்சுமை ஒரு பக்கம் இருந்தாலும், நிறைய படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.

  தொடர்ந்து தங்களது நல்லாதரவை தாருங்கள் ஐயா.

   S Murugesan said:
   January 10, 2012 at 6:38 am

   சுந்தரேசன் வாங்க !

   http://www.azhagi.com வலைதளத்துக்கு போங்க. அழகி சாஃப்ட் வேரை டவுன் லோட் செய்துக்கிட்டு ( பென் ட்ரைவ்ல) ஆத்துக்கு போயி கம்ப்யூட்டர்ல இன்ஸ்டால் பண்ணிட்டு டெஸ்க் டாப்ல வர்ர ஷார்ட் கட்டை டபுள் க்ளிக் பண்ணுங்க. அப்பாறம் F10 அழுத்திட்டு வோர்ட் பேட் திறந்து அடிச்சு தள்ளுங்க

    சுந்தரேசன் said:
    January 10, 2012 at 6:48 am

    மிக்க நன்றி ஐயா. இதோ உடனே சென்று தள்ளுகிறேன் ஐயா.

  Sugumarje said:
  January 10, 2012 at 6:37 am

  அய்யா,

  போலியின் அலைகள் அதிகம் இருந்ததால் மறுமொழியிடாமல் இருந்தேன். இருப்பினும் இந்த பதிவிற்கு மறுமொழியிட வில்லை என்றால் நான் வயிற்றுக்கு அரிசி சாதம் சாப்பிடுவதில் அர்த்தம் இல்லை என்பதால் மறுமொழியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

  தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை “மன்னிப்பு”

  surya said:
  January 10, 2012 at 6:46 am

  same direction as classroom.. concept??

   S Murugesan said:
   January 10, 2012 at 8:58 am

   வாங்க சூர்யா..
   தொடர்ந்து உங்க கிரணங்களை வீசுங்க. உண்மை சகலருக்கும் விளங்கட்டும்

    Surya said:
    January 10, 2012 at 11:19 am

    I come here for the spontanity but pls dont be like classroom.. but choice is yours!!

    S Murugesan said:
    January 10, 2012 at 11:29 am

    வாங்க சூர்யா !
    ஜோதிடம் 360 வெளியவந்துரட்டும். தூள் பண்ணிருவம். ப்ளீஸ் வெய்ட்!

    Surya said:
    January 10, 2012 at 12:13 pm

    ok will do. and best of luck.. will make the payment this week.

  Name ssr sukumar said:
  January 10, 2012 at 10:22 am

  Message
  pl.inform me the bank account and place! thank you,
  ssr.sukumar

   S Murugesan said:
   January 10, 2012 at 10:37 am

   ssr sukumar அவர்களே !

   ஜோதிடம் 360 முன் பதிவுக்கு கேட்கறிங்கன்னு நினைக்கிறேன்.

   நீங்க ரூ.250 + கூரியர் செலவை செலுத்த வேண்டிய அக்கவுண்ட் விவரம் கீழே :

   எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கு பதில் இலவசம்.

   இந்த சலுகை வேணாம்னா ரூ.150+ கூரியர் செலவை செலுத்தவும்.

   Name: Sundaresan MuruganA/C No: 030333022274

   Name of the Bank : State Bank of India

   Branch Name: GREAMSPET Branch Code: 7083

   IFSC Code: SBIN0007083

   Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

   Pincode: 517002 Swift Code: N/A RTGS : YES

   எம்.ஓ அனுப்புவோர்:சித்தூர்.எஸ்.முருகேசன் என்ற பெயருக்கு # 17-201, கும்மர தெரு , சித்தூர் ஆ.பி 517001 என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

   செக் அனுப்புவோர்:

   S.Murugan என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s