சேவை நிறுத்தம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல ஒரு கெட்ட சேதிய அறிவிச்சுட்டு பதிவுக்கு போயிரலாம்.

இன்று முதல் நான் ஆன்லைனில் வழங்கும் முழு ஜாதக பலன் சேவை நிறுத்தப்படுகிறது. ஆனால் இலவச ஆலோசனை மற்றும் ஜோதிடம் 360 நூல் முன் பதிவு செய்வோர்களுக்கு + 10 கேள்விகளுக்கு பதில் தரும் சேவை தொடரும். ( புஸ்தவத்தை வித்தாகனுமே). ஆக இந்த ரெண்டு சேவைகளும் தொடரும்.

முழுப்பலன் கேட்டு கட்டணம் செலுத்திவிட்டு தொடர்பு கொள்பவர்களுக்கு நிச்சயமாக 10 கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமே தரப்படும்.

பதிவுக்கு போயிரலாமா?

அந்த காலத்துல தமிழ் வாணன் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்னு போட்டுக்குவாரு. நம்மை பொருத்தவரை மாஸ்டர் இல்லின்னாலும் எந்த சப்ஜெக்டை பத்தியும் ஒரு குன்ஸ் இருக்கும். ஜஸ்ட் அவுட் லைன் அண்ட் சென்ட்ரல் தீம் தெரியும். கொஞ்சமா மாத்தி யோசிப்பம். சக்ஸஸ் ஆக இது போதாதா என்ன ?

இப்படி சுருக்கமா தெரிஞ்சுக்கறதுல ஒரு வசதி உண்டு. கிணத்து தவளையாயிரமாட்டோம். திரைக்கதையை ரெண்டு வரில ரோசிச்சா அதுக்கு ஏற்கெனவே வெளிவந்த சினிமா கதைகளுக்கு எதுனா ஒற்றுமை இருந்தா தெரிஞ்சுருமாம். அதைபோல சப்ஜெக்ட்ஸோட நாட் தெரிஞ்சு வச்சுக்கறதால ஒரு சப்ஜெக்டுக்கும் அடுத்த சப்ஜெக்டுக்கும் இருக்கிற ஒத்திசைவு -முரண்பாடெல்லாம் குளியல் காட்சியில ஹீரோயினோட முகம் மாதிரி பளிச்சுன்னு தெரிஞ்சுரும்..

தெரிஞ்சுக்கறது-ரோசிக்கிறதுல்லாம் நோகாத வேலை. ஐ மீன் மூளை தொடர்பான வேலை. எத்தீனி ப்ராஜக்டை வேணம்னாலும் சமாளிச்சுரலாம். ( நாம வேற சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்கு)

ஆனால் ஒரே ஆசாமி ஒரே நேரத்துல உடல் ரீதியாவும் – மனோ ரீதியாவும் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கிறது கொஞ்சம் சிரமம்தேன்.

அதே நேரம் மென்டல் ஸ்ட்ரெய்ன் மட்டும் இருந்தா பாடி பீடி மாதிரி ஆயிரும். ஃபிசிக்கல் ஸ்ட் ரெய்ன் மட்டுமிருந்தா மூளை ஆட்டு மூளை மாதிரி ஆயிரும்.

ரெண்டையும் ப்ளான் பண்ணி- உரிய ஷெட்யூலோட செய்தா தூள் பண்ணலாம். இல்லேங்கலை. இத்தனாம் பெரிய மொக்கைய எதுக்கு ஆரம்பிச்சேன்னு சிண்டை பிச்சுக்காதிங்க. நாம நடத்தற AD PAGES சார்பில் ஒரு காலண்டர் ப்ரிண்ட் பண்ணி அதை வினியோகம் செய்து முடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துருச்சு.

நம்மை பொருத்தவரை ஃபிசிக்கல் ஸ்ட்ரெய்னுக்கு ரெடி தான். ஆனால் ஃபீல்டுல இறங்கினதும் வயசு மறந்து போயி ஓவரா டீ அடிச்சு – ஓவரா தம் போட்டு பாடி நாறிருது. கு.ப ஒரு நாள் தலைமறைவாயிர வேண்டியிருக்கு.

இத்தனை வருசம் இதெல்லாம் ஒரு நாள் கூத்து. பார்சல் வரும் . சிஷ்ய கோடிகளை வச்சு அடிச்சு பிடிச்சு தீர்த்துருவம். இந்த தாட்டி சென்னையில பிரிண்டர்ஸ் ஒரு பக்கம் கம்பி அடிக்கிறவுக ஒரு பக்கம் புண்ணியம் கட்டிக்கிட்டு மொதல்ல ஆயிரம் பிரதிதேன் கைக்கு வந்தது. அதுக்கு ஒரு கூத்து.

நேத்துதேன் மத்த நாலாயிரம் பிரதி கைக்கு வந்தது. அதுக்கு ஒரு கூத்து. வினியோகத்தை முடிச்சு வீட்டுக்கு வந்து காதுல கோக்கனட் ஆயில் விட்டு வென்னீர் வச்சு குளிச்சு – லெமன் ஜூஸ் அடிச்சு – ZINTAC போட்டு என்னென்னமோ தகிடு தத்தம் பண்ணியும் தூக்கமும் வரமாட்டேங்குது -வேலை செய்யவும் தோனமாட்டேங்குது. லாலா பார்ட்டிங்க ஏன் லாலா போடறாய்ங்கன்னு புரிஞ்சது.

எப்படியோ காரியம் முடிஞ்சது . மிச்சம் மீதிய வண்டியில வச்சுக்கிட்டு எதிர்படற விஐபிக்கள் /வெல் விஷர்ஸுக்கு கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. இது நாம நகர்வலம் போற சமயம் கையோட கையா செய்யற வேலை.

ஆக காலண்டர் வேலை முற்றும். அடுத்த கண்டம் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை. இதுல உடல் பலம் மட்டும் செலவழிஞ்சா பரவாயில்லை . ஆன்ம பலமும் ஏகத்துக்கு செலவழிஞ்சுருது.

சக்தி எங்கருந்து வருதுன்னு தெரிஞ்சவன் அதை இழக்கிறதே இல்லைன்னு ஓஷோ சொல்றாரு. நம்முது கடக லக்னமாச்சா திடீர்னு மூளை பஜ்னு ஆயிருது. உடம்பு சுஸ்தாயிருது.மனசு வெல வெலத்து போகுது.
அதனாலதேன் இந்த விபரீத முடிவு. அல்லாரும் மன்னிக்கனும்.

இந்த முடிவை நான் எடுக்கலின்னா ஜோதிடம் 360 புஸ்தவம் 2013 பொங்கலுக்கு கூட ரிலீஸ் ஆகாது. நம்ம சைட்ல புதுசா ஜோதிட கட்டுரைகள் எழுதி வரும் சுந்தரேசன்ல ஜா.ரா வாசம் மூக்கை துளைக்குது. போலி கமெண்டெல்லாம் போட்டு தன்னை தானே ப்ரமோட் பண்ணிக்கிறது ஜா.ராவோட ஸ்டைல்.

பார்ப்போம் இது எதுவரை போகுதோ? ரிமோட் நம்ம கையில இருக்கு. ஓவரா போனா சேப்பு பட்டனை அழுத்திருவம்ல. “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்ககும் மணமுண்டு”ங்கறது அண்ணா வாக்கு. அதனாலதேன் இந்த போக்கு.

Advertisements

6 thoughts on “சேவை நிறுத்தம்

  சுந்தரேசன் said:
  January 6, 2012 at 4:47 am

  ஐயா!

  நேற்று “மூலம் நட்சத்திரத்தைப் பற்றி” ஒரு படைப்பை அனுப்பியிருந்தேன். தங்கள் மின்னஞ்சல் பெட்டியை திறந்து பாருங்கள். வந்து சேரவில்லையா? மீண்டும் ஒரு முறை அனுப்பவா?ஒருவேளை தமிழ்நாட்டிலிருந்து ஆந்திர மாநிலம் வரை வந்து சேர தாமதமாகி இருக்குமோ? தயவுசெய்து பரிசோதனை செய்து பாருங்கள்.

  அப்புறம் ஒரு விஷயத்தை தங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். என் பெயர் ஜானகி ராமன் இல்லை. என் பெயர் சுந்தரேசன் என்று (பனங்)கொட்டை எழுத்தில் எழுதியுள்ளேனே! தயவு செய்து கண்களை அகலத் திறந்து வைத்து படியுங்களேன். கணேசன் என்ற பெயரை கேட்டதும் சிலருக்கு பிள்ளையார் ஞாபகத்துக்கு வருவார். அதே போல் தங்களுக்கு சுந்தர தமிழில் உள்ள என் பெயரான சுந்தரேசன் என்ற நாமத்தை கண்டவுடன் தங்களுக்கு யாரோ ஒரு நல்லவர் பெயர் தங்கள் ஞாபகத்துக்கு அடிக்கடி வருகிறது என்று நினைக்கிறேன். இவ்வாறு நினைப்பதில் தவறொன்றும் இல்லை. போகப்போக சரியாகி விடும்.

  தங்களுக்கு என் பெயரை வாசிப்பதில் சிரமம் இருப்பின் ஆங்கிலத்திலோ அல்லது தெலுங்கிலோ தட்டச்சு செய்து அனுப்புகிறேன்.

  தங்களுடைய சேவையே என்னுடைய தேவை.

  நன்றி.

  arul said:
  January 6, 2012 at 4:48 am

  thanks for the information

  சுந்தரேசன் said:
  January 6, 2012 at 5:54 am

  //நம்ம சைட்ல புதுசா ஜோதிட கட்டுரைகள் எழுதி வரும் சுந்தரேசன்ல ஜா.ரா வாசம் மூக்கை துளைக்குது. போலி கமெண்டெல்லாம் போட்டு தன்னை தானே ப்ரமோட் பண்ணிக்கிறது ஜா.ராவோட ஸ்டைல்//

  ஐயா!

  ஜானகிராமன் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது. அவர் கருப்பா, சிவப்பா, குட்டையா, நெட்டையா என்று எந்த விபரமும் எனக்குத்தெரியாது.

  தயவுசெய்து தாங்கள் என்னை ஜானகிராமன் என்று தவறாக நினைத்துக் கொண்டு குழம்பாதீர்கள். ப்ளீஸ். தங்கள் மனம் குழப்பமடைந்து மனவிரக்தியில் இருப்பது எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்தது மட்டுமல்லாமல் என்னுடைய வெந்த புண்ணில் ஸ்டீல் ஸ்கேலை கொண்டு குத்துவது போல் உள்ளது.

  //பார்ப்போம் இது எதுவரை போகுதோ?//
  ஐயா..இது என்ன உடலுறவு சமாச்சாரமா! தயவுசெய்து பழிவாங்கி விடாதீர்கள். நீங்கள் நினைக்கும் நபர் நான் அல்ல.

  //ரிமோட் நம்ம கையில இருக்கு. ஓவரா போனா சேப்பு பட்டனை அழுத்திருவம்ல//
  ஐயா… ரிமோட்டில் உள்ள பேட்டரியில் சார்ஜ் இருக்கிறதா? என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே நிறைய பேருக்கும் சேப்பு பட்டனை அழுத்தி ஆப்பு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தயவுசெய்து எனக்கும் அவ்வாறு செய்து விடாதீர்கள் ப்ளீஸ். தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது உங்கள் இயல்பு.

  // “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்ககும் மணமுண்டு”ங்கறது அண்ணா வாக்கு. //
  (தயவுசெய்து இதனை டி.எம்.சவுந்தர் ராஜனைப்போல் பாடிக்கொண்டே வாசிக்கவும்)
  எனக்கும் இடம் உண்டு
  அருள் மணக்கும் முருகேசன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு

  அதனாலதேன் இந்த போக்கு.

  டவுசர் பாண்டி said:
  January 6, 2012 at 4:24 pm

  திடீர்னு சேவை நிறுத்திட்டு காரச்சேவை குடுத்துட்ட. சீக்கிரம் சீனிச்சேவை குடுப்பா.

  Mani said:
  January 6, 2012 at 4:28 pm

  அண்ணே!

  “இளமையின் ரகசியம்” படத்துல உள்ள ஹீரோ யாருணே? உங்களோட பையனா?

  MINNAL said:
  January 11, 2012 at 6:57 am

  how to pay the money to 360 deg book and to read the website?

  reply me

  thx
  minnal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s