ஜெ -சசி நாடகம் ஜன. 23 வரைதானா?

Posted on

அண்ணே வணக்கம்ணே ! அக்டோ 30 முதல் மார்ச் 22 வரைங்கற தலைப்பு ல சிம்மத்துல செவ் ஸ்தம்பனம் ஆறதை பற்றி ஒரு பதிவை போட்டிருந்தேன். படிக்காதவுக – படிச்சுட்டு விஷயத்தை மறந்து போனவுக இங்கன அழுத்தி மறுபடி ஒரு ஓட்டு ஓட்டிருங்க. பொறுமையில்லாதவுகளுக்காக அதனோட சுருக்கம்:

45 நாள்ள ஒரு ராசிய விட்டு காலி பண்ண வேண்டிய செவ் 2011 அக்டோ 30 முதல் 158 நாள் சிம்மத்துல கேம்ப் அடிக்கிறாரு. இதுல 2012 ஜனவரி 23 வரை சாதா சஞ்சாரம், மார்ச் 22 வரை வக்ர சஞ்சாரம்.

இதுக்கும் ஜெ -சசி விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக.சொல்றேன். அம்மா ராசி சிம்மம். சிம்மத்துலதேன் செவ் கேம்ப் அடிச்சிருக்காருங்கறது சொல்லவும் வேண்டுமோ?

செவ் சகோதர காரகர். சசி அம்மா உடன் பிறவா சகோதரி, ஜன்ம செவ் 4 ஐ பார்ப்பாரு. அதனால ” உள்ளடி” வாங்கனும். 7 ஐ பார்ப்பாரு.அதனால கூட இருக்கிறவுகளோட முட்டிக்கனும். எட்டை பார்ப்பாரு. அதனால எதிரிகள் சதிக்கு பலியாகியிருக்கனும்.

அம்மா ஜாதகத்துல செவ் 2 ல் நின்று எட்டை பார்த்து 09/Jun/2011 முதலாக ராகு தசையில் தன் புக்தியை நடத்திக்கிட்டிருக்காரு. ( 1 வ. 18 நாளைக்கு அதாவது 27/ஜூன்/2012 வரைக்கும் ) . கணக்கு டேலி ஆகுதுங்களா?

இதை வச்சுத்தேன் சசி -ஜெ வெட்டுக்குத்தை முன் கூட்டி கணிச்சு சொல்லியிருந்தம். சரி செவ் புக்தி , செவ் ஸ்தம்பனம்லாம் சேர்ந்து வேலை கொடுத்துருச்சு. இது இன்னம் எத்தீனி நாளைக்குன்னு கேப்பிக சொல்றேன்.

செவ் 2012, ஜனவரி 23 வரை சாதாரண சஞ்சாரம். அதுக்கப்பாறம் படக்குனு வக்ரமாயிர்ராரு. கிரகம் வக்ரமாகும் போது தன் நிலைக்கு – இயல்புக்கு முற்றிலும் மாறுபாடான பலனை தரனும்ங்கறது விதி. கிரகங்கள் வக்ரமாகும் போது பழைய சம்பவங்கள் ரிப்பீட் ஆறது நம்ம அனுபவம்.

இந்த கணக்கு பிரகாரம் ஜெ -சசி மறுபடி சேர்ந்துக்குவாய்ங்கன்னு சொல்ல முடியும். இந்த பேட்ச் அப் மார்ச் 22 வரை தொடர்ந்தாலும் வக்ர நிவர்த்திக்கு பிறகு பழைய குருடி கதவை திறடின்னு ஆனாலும் ஆயிரலாம்.

இந்த சிச்சுவேஷன்ல நாம அம்மாவுக்குன்னு ஸ்பெசலா நாலு வரி சொல்லலின்னா அது துரோகமாயிரும். நமக்கு ஆன்லைன் மூலமா படியளக்கிற புண்ணியாத்மாக்கள் தமிழ் பேசறவுக -தமிழ் நாட்டை சேர்ந்தவுக. அம்மா நல்லபடியா இருந்து – நல்ல விதமா அரசாண்டா அவிகளும் நல்லாருப்பாய்ங்க. நமக்கு படியளக்கிற அன்னதாதாதாக்களும் நல்லாருப்பாய்ங்க. அதனாலதேன் இந்த நாலுவரி.

ஓவர் டு அம்மா..

யம்மா ! சொந்த விஷயமா தமிழ் நாட்டு ஊர்காவலரை ஃபேஸ் பண்ற “தேஜஸ்” கூட இல்லாத பார்ட்டி நானு .ஆனால் சோ மாதிரி சாணக்யர்களையே கிச்சன் கேபினட்ல வச்சிருக்கிற உங்களுக்கு அட்வைஸ் பண்ற தில் எப்படி வந்துருச்சுன்னா இதுல சுய நலம் கடியாது.

நான் சொல்ல வேண்டிய வரிகளை சொல்றதுக்கு மிந்தி என் அனுபவத்துல நான் தெரிஞ்சுக்கிட்டு பஞ்சா விட பஞ்சை சொல்லிர்ரன்.

நல்லவனுக்கு நல்ல நேரம் வரும்போது கடவுள் அவனுக்கு கொஞ்சமா கெட்ட புத்தியை கொடுத்து லைஃப்ல செட்டில் பண்ணிர்ராரு.

கெட்டவனுக்கு கெட்ட நேரம் வரும் போது அதே கடவுள் அவனுக்கு கொஞ்சமா நல்ல புத்தியை கொடுத்து ஸ்மாஷ் பண்ணிர்ராரு.

உங்களுக்குன்னு இருந்த கொஞ்சம் நஞ்சம் பேரையும் நாறடிச்ச கூட்டம் சசி அண்ட் கோ. இதுல ஆருக்கும் எந்த சந்தேகமும் கடியாது. அவிகளுக்கு கல்தா கொடுத்தது நல்ல மேட்டரு தான். ஆனால் இது நம்ம பஞ்ச்ல ரெண்டாவது பாரால சொன்ன விதமா இருந்துரக்கூடாதுங்கறதுதேன் நம்ம கோரிக்கை.

தப்பான வழியில எம்மாந்தூரம் போயிட்டம்ங்கறது மேட்டரே கடியாது. எப்பம் யூ டர்ன் எடுக்கிறோங்கறதுதேன் மேட்டர்.

தப்பான வழியில போறச்ச சிக்ஸ் ட்ராக் ரோட்ல போற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்.ஆனால் அதனோட முடிவு அதல பாதாளமாத்தான் இருக்கும்.

நல்ல வழிக்கு திரும்பினதும் எல்லாமே ரிவர்ஸ் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங் வந்துரும். தப்பு பண்ணிட்டமோங்கற சந்தேகம் வரும். பழைய ரூட்டுக்கே திரும்பிரலாமாங்கற ஊசலாட்டம் வரும். ஆனால் இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தேன். மெறிச்சு நின்னுட்டா எல்லாம் பளிங்கு மாதிரி துல்லியமாயிரும்.

நாம கால் பந்தாட்டத்து பந்து. கிரகங்கள் எல்லாம் ஃபுட் பால் ப்ளேயர்ஸுங்கற மாதிரி உங்காளுங்க சொல்வாய்ங்க. அதையெல்லாம் நம்பாதிங்க. கடவுள் மன்சனை சுதந்திரமா வாழச்சொல்லித்தேன் அனுப்பியிருக்காரு.

இந்த கெரகம் -வாஸ்துல்லாம் நாம சுய நலத்தோட செய்ற வேலைகளை தான் பாதிக்கும். பொது நலத்தோட செயல்பட ஆரம்பிச்சுட்டா நம்ம செயல்களால ஆரெல்லாம் பயனடைய போறாய்ங்களோ அவிகளோட நலல நேரம்லாம் நமக்கு ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சுரும்.

சமச்சீர் கல்வி முதலாக அண்ணா நூற்றாண்டு நூலகம் வரை நடந்ததெல்லாம் நடந்ததா இருக்கட்டும். நடக்கப்போறது நல்லதா இருக்கட்டும்.

அரசியலே ஒரு பிரமிட் மாதிரி . இதுல அடித்தளத்துல நிக்கிற தொண்டன் தேன் ரெம்ப முக்கியம். சோ மாதிரி கேரக்டர் எல்லாம் கோபுரத்து பொம்மை மாதிரி . அன்னைக்கு திமுக வை மைனாரிட்டி திமுக அரசுன்னு கிழிச்சிங்க.

சோ மாதிரி ஆட்களோட கோட்டரியை எல்லாம் சேர்த்துக்கிட்டா நீங்களும் மைனாரிட்டி ஆயிருவிங்க. தகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருக்கு. புரோக்கர்களோட அவசியமே இல்லாம மக்களோட நீங்க இன்டராக்ட் ஆகமுடியும். உ.ம் ஜெயா டிவியில மக்களோடு முதல்வர்னு ஒரு ஃபோன் இன் புரோகிராம் பண்ணலாம், ட்விட்டர்,ப்ளாக் அது இதுன்னு ஆயிரம் இருக்கு.

நீங்க ஜெயிச்சு வந்த புதுசுல தமிழகத்தின் நிதி நிலையை சீராக்க – மக்கள் மேல் பாரம் சுமத்தாது வருமானத்தை அதிகரிக்க சில ஐடியால்லாம் வச்சு ஒரு பதிவு போட்டிருந்தன்.அதனோட சுட்டி இதோ

பென்னி குக் சொன்னாராம். ” நான் இந்த பூமிக்கு வந்தது இதுவே முதலும் கடைசியும்.போறதுக்கு மிந்தி எதையாவது செய்துட்டு போகனும்”

நான் சொல்றேன். நீங்களும் பல கோடி கணக்கான முறை இதே வாழ்க்கைய வாழ்ந்து இதே ராஜபோகத்தை பெற்று இதே மாதிரி மிஸ் யூஸ் பண்ணி மறுபடி மறுபடி வந்துக்கிட்டிருக்கிங்க.

நானும் இன்னைக்கு சொல்ற இதே மேட்டரை பல கோடிக்கணக்கான முறை உங்களுக்கு சொல்லிக்கிட்டுதான் இருந்தேன். கேட்டுக்கலை. இந்த முறையாவது காதுல போட்டுக்கங்க.

தப்பு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் அதை சொந்த புத்தியோட செய்யனும். ஆரோ செய்த தப்புக்கு தண்டம் அழறது கிரிமினல் வேஸ்ட்.

பெஸ்ட் ஆஃப் லக்..

Advertisements

5 thoughts on “ஜெ -சசி நாடகம் ஜன. 23 வரைதானா?

  vinoth said:
  December 28, 2011 at 5:01 am

  thala .. namma kelvkku patil solluveengala…

   S Murugesan said:
   December 28, 2011 at 6:01 am

   வினோத்ஜீ !
   உங்களுக்கில்லாததா? தனிய தொகுத்து வச்சிருக்கன்.தனிப்பதிவே போட்டுருவம் இல்லை.

  கிருஷ்ணா said:
  December 28, 2011 at 8:07 am

  ///நாம கால் பந்தாட்டத்து பந்து. கிரகங்கள் எல்லாம் ஃபுட் பால் ப்ளேயர்ஸுங்கற மாதிரி உங்காளுங்க சொல்வாய்ங்க. அதையெல்லாம் நம்பாதிங்க. கடவுள் மன்சனை சுதந்திரமா வாழச்சொல்லித்தேன் அனுப்பியிருக்காரு. //

  🙂

  yoghi said:
  December 28, 2011 at 9:40 pm

  ;;;;நான் சொல்றேன். நீங்களும் பல கோடி கணக்கான முறை இதே வாழ்க்கைய வாழ்ந்து இதே ராஜபோகத்தை பெற்று இதே மாதிரி மிஸ் யூஸ் பண்ணி மறுபடி மறுபடி வந்துக்கிட்டிருக்கிங்க.

  நானும் இன்னைக்கு சொல்ற இதே மேட்டரை பல கோடிக்கணக்கான முறை உங்களுக்கு சொல்லிக்கிட்டுதான் இருந்தேன்.;;;;

  இதெல்லாம் தேவ,படைப்பின்,மறைவான சிருஸ்டியின் ரகசியஙகள் , மனசுக்குள்ளதானெ வச்சுக்கனும்??**
  இப்டி பப்லிக்ல போட்டு ஒடைச்சுட்டா எப்டி? இன்டியூசன் கெப்பாசிட்டி இல்லாதவஙக குழம்பி போயிட்டா?? அதனால நீஙக எத சொன்னாலும் சூசகமா சொல்லிட்டா நல்லது
  ஏதோ என்மனசுக்கு பட்டது….

  yoghi said:
  December 31, 2011 at 7:46 pm

  என்னா ஆச்சுன்னே தெரியலியே நம்ம தல தேவ ரகசியத்த வெளிப்படுத்துன‌தால
  தேவ கோபத்துல‌ ஏதும் மாட்டிக்கினாரா?//

  3 நாளா எதுனா நமக்கும் எதுனா சொல்லுவாருன்னு காத்துகெடக்கம் ஒன்னுமே சொல்லாம இருக்காரே?? ம்ம்ம்ம் எதுக்கும் வெயிட் பன்னி பாக்க வேன்டியதுதான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s