பிட்டு படம் பார்த்த அனுபவம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

நாலாம் க்ளாஸ் படிக்கறச்சயே “பருவம்”படிச்ச கேஸு நாம. அல்லாமே ரெண்டு வருசத்துல போரடிச்சுரும். இப்படி பல விஷயங்களை தொட்டதுண்டு, அப்பாறம் விட்டதும் உண்டு. அப்படிப்பட்ட பட்டியல்ல ஒன்னுதேன் பிட்டுப்படம்.

நம்ம ஊருல ஒரு தியேட்டர் மொக்கையாயிட்டா நஷ்டத்தை சமாளிக்க ரெண்டு மூனு வழிதேன்.ஒன்னு எம்.ஜி.ஆர்,சிவாஜி பழைய படங்கள்,ரெண்டு என்.டி.ஆர் ,ஏ.என்.ஆர் பழைய படங்கள் போடனும். இல்லாட்டி பிட்டுதேன்.

பிட்டு படம் ஓட்டறது – பார்க்கிறதுல்லாம் அல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் இருக்கும்னு நினைக்கிறேன்.
இருந்தாலும் அனுபவங்களை மேட்ச் பண்ணி பார்த்துக்க வசதியா இந்த பதிவு. இந்த படத்துக்கெல்லாம் பிகின் பண்றதுக்கு ஒரு டைம் -இன்ட்ரோலு – ஊட்டுக்கு உடறதுல்லாம் இருக்காது.

மெயின் பிக்சர் ஒரு நல்ல படமா கூட இருக்கலாம். ஆனால் அதுக்கான போஸ்டர் புதிய தலைவரின் “எழுச்சி உரை” மாதிரி பம்பார்டா இருக்கும். பத்துமணியிலருந்து சட்டசபைக்கு எம்.எல்.ஏங்க கணக்கா பார்வையாளர்கள் வந்துக்கிட்டே இருப்பாய்ங்க. ஆனால் லைட்ஸ் ஆஃப் ஆனபிற்காடுதேன் என்ட்ரியே கொடுப்பாய்ங்க.

சுமாரா கூட்டம் சேர்ர வரைக்கும் மெயின் படம் தேமேன்னு ஓடிக்கிட்டிருக்கும். கூட்டம் ஒரு மாதிரியா சேர்ந்து இனி ஆரும் வரமாட்டாய்ங்கன்னு ஆப்பரேட்டர் முடிவு பண்ணிட்டா பிட்டை தூக்கி கோர்த்துவிடுவாரு.

தொந்தியும் தொப்பையுமா ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அவசர அவசரமா- அப்பப்போ கேமராவை திரும்பி பார்த்துக்கிட்டு கெ.கா செய்வாய்ங்க.ஆண் பெண்ணுன்னு சொல்றது ஒரு உத்தேசமான அவுட் லைனை வச்சுத்தேன். இன்னைக்கு ? வாழ்க தகவல் தொழில் நுட்பம். பிட்டு முடிஞ்சதும் தலைவர் பேச்சுக்கு பின்னான மாநாடு கணக்கா சனம் படக்குனு காலியாயிருவாய்ங்க. செக்ஸும் குழந்தை பிறப்பும் -குப்த ஞான் – எய்ட்ஸ் & பால்வினை நோய்கள் இதெல்லாம் வேறு சாதி.

இப்படி பிட்டு படத்துக்காகவே ஒரு தியேட்டர் சுடுகாட்டை தாண்டி இருந்தது.செகண்ட் ஷோ போறச்ச சுடுகாட்டுக்குள்ளாற போயி போனா “சுருக்க” போயிரலாம்னு கூட்டாளிகளை ஏமாத்தி சமாதிகள் மேல உட்கார்ந்து பஞ்சாட்சரி சொன்ன நாட்களும் உண்டு.

பிட்டு கதை இதோட முடிஞ்சுரலை. இப்பத்தேன் அசலான விஷயத்துக்கு வரப்போறேன். பேசும்போது பிட்டை போடறதை பத்தி கொஞ்சம் பேசுவம். பேசும் போது பிட்டை போடலாம் .ஆனால் ஆளுக்கேத்த பிட்டா போடனும் !

ஆளுக்கேத்த பிட்டா போடனும்ங்கற பாய்ண்டை பார்த்துட்டு சந்தர்ப்ப வாதம் பண்ண சொல்றதா நினைச்சுராதிங்க.

சினிமா உலகத்துல நேட்டிவிட்டின்னு ஒரு சமாசாரத்தை பத்தி மஸ்தா பேசுவாய்ங்க. நீங்க பேசற மேட்டரு எதிராளிக்கு அன்னியமா தோனாம அட நமக்கு சம்பந்தப்பட்ட மேட்டரா இருக்கேன்னு தோனும்படி பேசனும்.அதைத்தேன் ஆளுக்கேத்த பிட்டா போடனும்னு சொன்னேன்.

சட்டியிலிருந்தாதானே அகப்பையில வரும் – இது மேட்டரு. இதை ஒரு டூவீலர் மெக்கானிக்குக்கு சொல்லனும்னா “டாங்குல இருந்தாதானே கார்ப்பெட்டர்ல வரும்”னு சொல்லனும் .( கார்ப்போரேட்டர் – இது சரியான உச்சரிப்பு -ஆனால் இப்படி உச்சரிச்சா நீங்க அன்னியமாயிருவிக)

லைஃப்ல பாலன்ஸ் பண்ணிக்கிட்டு போகனும்னு ஒரு தாய்குலத்துக்கு சொல்றாப்ல இருந்தா தயிர் குழம்புல இஞ்சி போடறோம் சாம்பார்ல பெருங்காயம் போடறோம் ஏன்? தயிர் சீதளம் இஞ்சி சூடு. பருப்பு வாயு. பெருங்காயம் அதை சால்வ் பண்ணும்னு சொல்லனும்.

ஆளுக்கேத்த பிட்டா போடனும்ங்கற யதார்த்தத்தை நான் உணர்ந்துக்கிட்டது டீன் ஏஜ்லன்னா ஆச்சரியபடுவிங்க.ஆனா இது நெஜம். அந்த காலத்துல நம்ம கொலிக்ஸ் எல்லாம் “பலான” மேட்டர்னா உடனே வாயை பொளப்பாய்ங்க.

ஆனால் நாம வர்ஜியா வர்ஜியமில்லாம படிச்சுட்டு கண்டதையும் ரோசிச்சு கண்டதையும் கண்டுபிடிச்சுக்கிட்டிருப்பம். அதை பகிர்ந்துக்கிட்டா அது நம்ம மனசுல பச்சக்குனு பதியும்.எப்படி பகிர்ந்துக்கறது?

உன்னதமான மேட்டரை கூட பலான உவமான உவமேயங்களோட சொல்ல ஆரம்பிச்சம். ஃபார்முலா சூப்பர் சக்ஸஸ். (அதை இப்பயும் கன்டின்யூ பண்ண வேண்டி இருக்கிறது சோகம்) சொல்ல வேண்டிய ஃபார்ம் எவ்ளோ முக்கியமோ சொல்ல வேண்டிய மேட்டரை ஷேப் அப் பண்ணிக்கிறது ரெம்ப முக்கியம். இதுக்கு ரோசிக்கனும்.

அதென்னமோ நமக்கு ரோசிக்க வேண்டிய அவசியமே இல்லாம மைக்ரோ செகண்ட்ல ஸ்பார்க் ஆகும்.
இன்னைக்கு ஒரு கேள்வி.மாமியாரு அடிமை மாதிரி நடத்தறாய்ங்க.கேவலமா பேசறாய்ங்க. இதுக்கு என்ன பரிகாரம்?

ஒரு கருப்பு கயிறு எடுத்துக்க அதுல ஒரு சங்கை கோர்த்துக்க . அதை கழுத்துல மாட்டிக்க. இப்படி இன்னம் ரெண்டு கயிறு ரெடி பண்ணி வீட்டு வாசல், வாகனத்தோட பம்பருக்கு கட்டிக்க. ஒரு ப்ளூ நிற ப்ளாஸ்டிக் உண்டியல் வாங்கிக்க.அது மேல வராக ஸ்வாமி படத்தை பேஸ்ட் பண்ணு. வாராவாரம் 8 ரூ உண்டியல்ல போட்டுக்கிட்டே வா. பிரச்சினை தீர்ந்தா அந்த பணத்தை திருமலை வராகஸ்வாமி உண்டியல்ல சேர்த்துருன்னு சொல்ட்டு கழண்டுக்கிட்டோம்.

இதுல உள்ள லாஜிக் என்ன? மொத்தத்துல பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ரோசிச்சு சொல்றவுகளுக்கு ஜோதிடம் 360 பாம்லெட் இலவசம்.

Advertisements

14 thoughts on “பிட்டு படம் பார்த்த அனுபவம்

  சுந்தரேசன் said:
  December 24, 2011 at 9:50 am

  ஐயா,

  தங்கள் கேள்விக்கு பதில் கூறும் தகுதி எனக்கு இல்லை. இருப்பினும் கூற விரும்புகிறேன்.

  இன்று ஹனுமத் ஜெயந்தி. தமிழ் தேதி எட்டு. எட்டு என்பது சனி கிரகத்தை குறிக்கும். இன்று கிழமையும் சனி. சனி கிரகத்தால் பாதிப்படைந்தவகள் அனுமார் கவசத்தை பாடினால் பாதிப்பு விலகும். இன்றைய திதி அமாவாசை. அமாவாசை என்பது இருட்டைக்குறிக்கும். இருட்டும் சனியை குறிக்கும். தங்கள் கேள்விகளிலும் சனியின் காரகத்துவம் அதிகம் தெரிகிறது.

  கிரகங்களும் உறவு முறைகளும்:

  ஆண் ஜாதகத்தை பொறுத்தவரையில்:

  சந்திரன்:
  மாமியார், அண்ணி, மனைவியின் அக்காள்.

  புதன்:
  மாமியாரின் அக்காள் மகள், மாமியாரின் தங்கை மகள், மாமன் மகள், அத்தை மகள், அக்காள் மகள், அண்ணியின் தங்கை, மனைவியின் தங்கை

  சுக்கிரன்:
  அத்தை, மனைவி, தம்பியின் மனைவி, தாய்மாமன் மகள்.

  தாங்கள் கூறிய லாஜிக்கை லாரிகளிலும், மாட்டு வண்டிகளிலும் பார்த்திருக்கிறேன்.

  எல்லாம் சந்திரன், சனி ஆக்டிவேஷன்.

  பாம்லெட் ப்ளீஸ்.

   S Murugesan said:
   December 24, 2011 at 12:58 pm

   வாங்க ஜா.ரா @ சுந்தரேசன் !
   பிராமணாளே தங்கள் பிராமணீயத்தால சப்ஜெக்ட் வைஸ் டைல்யூட் ஆயிர்ராய்ங்க.

   இதுல அந்த லேபிளுக்கு ஆசைப்பட்டு ஓவரா ரோசிச்சு ஏன் மொக்கை ஆகறிங்க.

   மாமியார் அடிமைத்தனமா நடத்தறாய்ங்கன்னா அடிமைக்கு காரகம் சனி.

   கேவலமா பேசறாய்ங்கன்னா சனி நீச கிரகம்ங்கறதால இந்த உபத்ரவத்துக்கு சனி காரகனா இருப்பார்னு ஒரு ஹன்ச்.

    ஸ்ரீனிவாச ஐயங்கார் said:
    December 25, 2011 at 2:39 am

    ஏண்டா அபிஷ்டு,

    சுந்தரேசன் அத்திம்பேர்தான் சரியா சொல்லிட்டாரோன்னோ. பின்ன ஏண்டா பாம்லேட்ட அனுப்பாம பல்ட்டி அடிச்சிண்டு இருக்கேழ். நோக்கு ஸ்டெடியான புத்தி இருக்காதோன்னோ. நீ சொன்ன ஆண்சரும் சனின்னு தானடா வருது. அந்த அத்திம்பேர் சொன்ன பதிலையும் சனின்னுதானடா இருக்கு. இரண்டு பேரும் சனியின் காரகத்தை விளக்கிண்டு பின்ன ஏண்டா ஜகா வாங்கிண்டு இருக்கேழ்.

    sugumarje said:
    December 25, 2011 at 3:22 pm

    யப்பா ஸ்ரீனிவாசா…… முருகேசன் அய்யா கட்டாயம் பாம்லெட்ட அனுப்புவாருப்பா.

    sugumarje said:
    December 29, 2011 at 3:46 pm

    எப்படியோ என் பெயர் புகழ் பரப்புகிறார் மனிதர். இப்பொழுதெல்லாம் காசு கொடுத்தால் தான் விளம்பரம் கிடைக்கும். பைசா செலவில்லாமல் என் புகழ் பரப்பும் நல்ல மனிதரே… வாழ்க, வாழ்க…
    தயவு செய்து இன்னும் வரும் எல்லா பதிவுகளிலும், என் பெயரை பதிவு செய்து, தங்கள் பின்னூட்டத்தை தந்துவிடுங்கள். எனக்கும் தினமும் வந்து பின்னூட்டம் போடும் பணி மிச்சம். எனக்கும் ஓவிய வேலைப்பளு அதிகமாக இருக்கிறது…
    தங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  vinoth said:
  December 26, 2011 at 11:24 am

  சோதிடம் 360 புத்தகம் இலவசம் ஆபர் எல்லாம் கிடையாதா தல ?

   கிருஷ்ணா said:
   December 26, 2011 at 12:18 pm

   இலவசம்லாம் இல்லைமையா தல வெளியிடுவாறு. கட்டண ஜோதிட சேவையை பயன்படுத்துனா கூடவே புத்தகம் இலவசம்னு சொல்லிருக்கிறாரே. பார்க்கலையா அண்ணே? 😦

   ஏற்கனவே பலன் கேட்டிருந்தால் இலவசம் நஹி 🙂

   இலவசம் என்பது இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களை தன்வசம் இழுத்து வீழ்த்துவதற்காகபயன்படுத்தும் ஒரு வசிய முறை ஆகும். 😉

   ஆஃபர் என்பது ஆப்படிப்பதற்காக பயன்படுத்தப்படும் பம்பர் டெக்னிக் ஆகும். எனிதிங் ஆப்பு வாங்க ரெடியா? 🙂 🙂

    vinoth said:
    December 27, 2011 at 4:22 am

    கிருஷ்ணா அவர்களே..
    நான் என்ன கேட்டேன்னா.. நீங்க சொல்லுற மாதிரி ஏற்கனவே கட்டண சேவைய பயன்படுதினவங்களுக்கு சலுகைவிலை/ இலவசம்னு எதுனா திட்டம் கொடுங்கனு கேட்டேன்.

    S Murugesan said:
    December 27, 2011 at 6:02 am

    வினோத் ஜீ !
    ஒரு 500 பேர் உடனே காசு கொடுத்து வாங்கிட்டாய்ங்கன்னா கையை கடிக்காது.. அந்த நிலை வந்ததும் ஆடித்தள்ளுபடிதேன்.

    இந்த 45 வயசுக்கு நஷ்டப்பட்டுரக்கூடாதுங்கற எச்சரிக்கை உணர்வு இருக்கே தவிர லாப பட்டுரனுங்கற வெறி இல்லவே இல்லை.

    கிருஷ்ணா said:
    December 27, 2011 at 5:23 am

    வர வர போலி முருகேசு மாதிரி போலி கிருஷ்ணா கெளம்பிட்டான்யா…..ஒரே குஷ்டமப்பா ….ச்சே …கஷ்டமப்பா 🙂

    போலி மணி,போலி சுகுமர்ஜி எல்லாம் ஏன் இன்னும் கெளம்பலை ? 🙂

    S Murugesan said:
    December 27, 2011 at 6:01 am

    கிருஷ்ணா !
    ஏற்கெனவே கிளம்பி கேட் வாக் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.ஆனால் பட்டா பட்டி கூட போடாததால மு(ம)டக்கி வச்சிருக்கேன்.

  vinoth said:
  December 27, 2011 at 11:55 am

  1) வாக்கிய பஞ்சாங்கம், திருகணித பஞ்சாங்கம் எது சரி ?
  2) ராமன் அயனாம்சம், லகிரி அயனாம்சம் எது சரி ?
  3) ஆயுர் பாவம் பார்பது எப்படி( நான் பார்கிறது இல்லைன்னு சொல்ல கூடாது .)
  நீங்க பார்காட்டியும் நாங்க பார்கணும்.
  3) புத்தாண்டு பலன், மாத பலன் எல்லாம் லக்னத்துகு பார்பது சரியா?

  vinoth said:
  December 27, 2011 at 12:03 pm

  4) தனி நபர், குடும்பம், நிறுவனம் நாடு சோதிடத்தில் என்ன வித்தியாசம்..
  5) சோதிடம் படிக்க என்ன அமைப்பு வேண்டும் ?

  VINOTH said:
  December 27, 2011 at 2:58 pm

  5) அதற்கு முதலில் புத்தாண்டு பலன் பார்பதே சரியா?
  6) சாதகத்தில் பெரியவர்களிக்கு அவர்களுக்கு செல்லாத பலன் குழந்தைகளுக்கு போகுமா?
  7) சிரியவர்களுக்கு அதுபோல் நடக்குமா?
  8) மூலம் மாமனார்க்கு ஆகாது என்பது போல் விதி உண்மையா? ( இந்த வருட ஆற்காடு பஞ்சாகங்கத்தில் உள்ளது )
  9) வேலைக்கு தகுந்தபடி பலன் மாறுமா ? ஒரே ராசி லக்னம் உள்ளவர் ஆசிரியர் வேலையிலும் இன்னொறுவர் ராணுவத்திலும் இருந்தால் .. இருவருக்கும் ஒரே பலன் தான் கிடைக்குமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s