கீதையே உட்டாலக்கடின்னாலும் தடை கூடாது

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ரஷ்யாவுல கீதைய தடை பண்ணப்போறாய்ங்கன்னு ஒரே லொள்ளு. இது நம்ம பாராளுமன்றத்துல கூட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கு.

நம்மை கேட்டா தடை பண்ணனும்ங்கறது நம்ம ஸ்டாண்ட் இல்லை. ஆனால் நாளாவட்டத்துல கரப்ட் ஆயிட்ட இன்றைய கீதைய ஒரு இந்து இளைஞன் பதினெட்டு புராணங்கள் ,வேதங்களின் சுருக்கம்னு நம்பி ஏமாந்துராம இருக்க ஒரு விழிப்புணர்வை தர வேண்டிய கட்டாயம் இருக்கு. அதிக பட்சமா அப்டேட் பண்ணலாம். குறைந்த பட்சமா சில பகுதிகளை நீக்கலாம். ( உ.ம் வர்ணாசிரம தர்மம்/ அன் சைன்டிஃபிக்/ பகுதிகள்)

விளம்பரங்கள்ள ஸ்டார் மார்க் கொடுத்து “ரிஸ்கை” விவரிக்கிறாப்ல பொடி எழுத்துலயாச்சும் “இதன் மீது பல்வேறு விமர்சனங்க இருக்கு . அதையும் படிச்சு முடிவெடுக்கிறது நல்லதுன்னு போட்டாகனும்.

இங்கன பவர் கட் நேரம் நெருங்கிருச்சு. அதுக்குள்ளாற பதிவையும் போட்டு பிங் பண்ணவும் வேண்டியிருக்கு.அதனால ஒரு சில வெளி பதிவுகளின் சுட்டிகளை கொடுத்து கழண்டுக்கறோம். கடேசியில நாம எழுதின பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி பதிவின் சுட்டியையும் தந்திருக்கம்.

சனம் படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வர்ரது நல்லது,

பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டும் இலக்கியமா? தீர்ப்பு வழங்க காத்திருக்கும் சைபீரிய நீதிமன்றம்
http://www.tamilkudiyarasu.com/?p=2242

பகவத்கீதை புனித நூலா? ‘மனுதர்ம’ கையேடுவா?
http://www.generationneeds.blogspot.com/2011/12/blog-post.html

ஜோசப் இடமருகு எழுதிய “பகவத் கீதை ஓர் ஆய்வு” மற்றும் “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” ஒரு பார்வை…
http://paraneetharan-myweb.blogspot.com/2011/08/blog-post_19.html

நாம எழுதின தொடர்பதிவோட சுட்டி :

http://anubavajothidam.com/geetha-fake/

Advertisements

6 thoughts on “கீதையே உட்டாலக்கடின்னாலும் தடை கூடாது

  சுந்தரேசன் said:
  December 20, 2011 at 2:33 pm

  அடுத்த முதல்வர் அம்மாதான் என்று தேர்தலுக்கு முன்பே கணித்து கூறினீர்கள். அதே போல் நடந்தது. அம்மாவால் முதல்வர் நாற்காலியில் ஐந்து வருடங்கள் (2011-16) முழுமையாக அமர முடியாது போல் தோன்றுகிறது (ஐ மீன் நீதிமன்றத்திற்கு அடிக்கடி செல்வதால்!?)

  தற்பொழுது அடுத்த முதல்வர் யார்? என்ற பேச்சு அடிபடுவதால், முதல்வர் நாற்காலி ஆட்டம் காண்பது போல் தோன்றுகிறது.

  இப்பொழுது அம்மாவுக்கு நேரம் நன்றாக உள்ளதா? பெங்களூரு வழக்கு விஷயம் சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா என்பதை ஜாதகரீதியாக விளக்க முடியுமா?

  தாங்கள் அரசியல் ஜோதிடத்தில் கைதேர்ந்தவர் என்பதால் கேட்கிறேன். விளக்க முடியுமா? ப்ளீஸ்.

  vinoth said:
  December 22, 2011 at 6:31 am

  தல.. நீங்க நினைக்கிறது சரின்னா..
  யுத்தத்தால் இனக்கலப்பு ஏற்படும் பிராமண குலம் அழியும்னா .. யுத்தம் கூடாத்ன்னு தான் கீதை சொல்லி இருக்கணும் ? இப்போ கீதை தடை பண்ண காரணம் வன்முறை இலக்கியம்னு தானே ?

   S Murugesan said:
   December 22, 2011 at 10:40 am

   வினோத்ஜீ !
   யுத்தத்தால் ஏற்படக்கூடிய தீமைகளை பட்டியல் போடறது அர்ஜுனன். ஆனால் கிட்ணரோ ஒரு ப்ளான் ப்ரகாரம் யுத்தத்தை நடக்க செய்றாரு.

   அர்ஜுனன் பிராமணீயத்தின் பிரதி நிதி. கிட்ணர் சின்ன வயசுல கோகுலத்துல சூத்திராளோட “பொளப்பை “பார்த்து கடுப்பான பார்ட்டி.

   ராஜா கிட்டே தானமா வாங்கின பசுவை கொண்டு வந்து யாதவர்ங்க கிட்டே மேய்க்க கொடுத்துட்டு ஜல்சா பண்ணிக்கிட்டிருந்த பிராமணர்களை கிட்ணர் பார்த்து வளர்ந்திருக்கனும்.

   இந்த சுரண்டல் – சாதீயம் எல்லாம் ஒழியனும்னே – இனக்கலப்பு ஏற்படனும்னே யுத்தத்தை இன்ஸ்டிக்ட் பண்ணியிருக்கலாம்

    vinoth said:
    December 22, 2011 at 1:13 pm

    தல .. நீங்க சொல்ற மாதிரி கிட்னர் பிராமணியத்தை ஒழிக்கனும்னு நினைச்சா .. அத திருஷ்டியில் பார்த்து / கற்பனை பண்ணி எழுதியது ஒரு பிராமனர்னு தானே சொல்றீங்க .. அவங்க தங்களுக்கு பாதகமான பகுதிய(பத்திரிக்கைகளில் சொல்றமாதிரி) மாறறியோ, திருத்தியோ, நீக்கியோ எழுதி இருக்கலாம் இல்லை..

    தங்களின் பலவீனம் வெளிப்படும் இடத்தை மாற்றாமல் வெளியிட்டு இருக்காங்கன்னா.. ரொம்ப நேர்மையானவர்களாக இருக்கணும்.. அப்புரம் எப்படி அவங்களை குறை சொல்வீங்க ?

    இல்லைனா கீதை பிராமனர் அல்லாதவர் எழுதி இருக்கணும் , இதுக்கும் அவங்களை குறை சொல்ல முடியாது இல்லை?

    S Murugesan said:
    December 22, 2011 at 4:27 pm

    வினோத்ஜீ !
    சூத்திரன் வாழ்ந்தா சமுதாயத்துக்கு லாபம்.பிராமணன் கெட்டா தான் லாபம். அதை எழுதின பிராமணர் கெட்டுப்போன பார்ப்பானா இருந்திருக்கலாம்.

    ஆனால் அதை அப்டேட் பண்ணவுக மட்டும் அப்படியில்லை. அற்புதமான ஆன்டிவைரஸ் ஃபோல்டர்ல வைரஸ் புகுந்துருச்சுங்கோ

  vinoth said:
  December 27, 2011 at 3:23 pm

  டெலிவரி ஆகட்டும் அப்புறம் சாதகம் கன்பார்ம் பண்ணிகறேன். இல்லைனா வேறு எதுனா கிடைக்குமான்னு பார்போம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s