சசிக்கு கல்தா – 2011 மார்ச்,31 லேயே கணித்த அ.ஜோ

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜெ வின் உ.பி.ச சசி அண்ட் கும்பல் கட்டம் கட்டப்பட்டதை இவ்ள “சீக்கிரமா” தெரிவிக்கிறதுக்காவ இந்த பதி வை போடலை.

ஆனால் இந்த மேட்டரை 2011,மார்ச் ,31 ஆம் தேதியே நம்ம சைட்ல கணிச்சு எழுதி வெளியிட்டிருக்கோம். அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டைத்தான் கீழே பார்க்கிறிங்க.

அந்த பதிவை இப்பமே படிச்சு வச்சுக்கறது நெல்லது. அந்த கணிப்புகள்ள இன்னம் என்னெல்லாம் பலிக்கப்போவுதோ ஆருக்கு தெரியும்.

அந்த பதிவுக்கான சுட்டி :

http://anubavajothidam.com/jj-horo-gandam/ வழக்கம் போல இன்னைக்கும் கேள்வி பதில் பகுதி தொடருது.

கேள்வி: Sankar Gurusamy
anubhudhi.blogspot.com/
sankar22k@yahoo.com

நம்ம நாட்டுக்கு இந்த ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை எப்போது?? ஒரு சிறந்த தலைவனை நம் தேசம் காண்பது எப்போது?? நம் தேசத்தின் ஜாதகம் / கிரஹநிலைகள் படி இது பற்றி ஏதாவது கணிக்க முடியுமா?? நன்றி..

பதில்:
அய்யா! நாட்டுக்கு சோசியம் கேட்ட உங்களுக்கு நன்றி. இத பத்தி ஏற்கெனவே ஒரு பதிவு போட்டிருக்கம். அதுக்கான சுட்டியை தரேன்.

http://kavithai07.blogspot.com/2011/03/blog-post_08.html

இதெல்லாம் பழைய தகவல். இதன் சுருக்கம்:

27/Sep/2011 =>முதல் 15/Jul/2012 வரையிலான சூரிய தசை குரு புக்தி டாப்ல கொண்டு போகும். அரசாங்கம் தன் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்று நல்லாட்சி வழங்கும்.

உபரி தகவல்:
நம்ம நாட்டுது ரிசப ராசி. இதுக்கு சனி அனுகூலமா வர்ர காலங்களில் ஊழல் குறைந்த ஆட்சி கிடைக்க வாய்ப்பிருக்கு.

குன்சா சொன்னா காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சி அ ஆட்சியின் ரிமோட் காங்கிரஸ் அல்லாத கட்சியின் கையில்

Sankar Gurusamy
anubhudhi.blogspot.com/
sankar22k@yahoo.com

2012 டிசம்பர் 21ல் உலகம் அழிந்துவிடும் அல்லது பேரழிவு ஏற்படும்னு ஒரு வதந்தி உலவிக்கொண்டு இருக்கிறது.. நம் பூமியின் / தேசத்தின் ஜாதக / கிரகநிலைப்படி இது பற்றி சற்று விளக்கினால் நலம்.. நன்றி..

அடடே மீண்டும் ஒரு பொது நல கேள்வி. வாழ்க. இதைப்பற்றியும் பல பதிவுகள் ஏற்கெனவே எழுதி க்ளியர் பண்ணியிருக்கேன்.2012 டிசம்பர் 21ல் உலகம் அழிவுல்லாம் ச்சொம்மா பேச்சு.

ஆனால் இப்பம் செவ் ஸ்தம்பனம் ஆகி இருக்காரு. வக்ரமும் ஆகப்போறாரு.அப்பம் கொஞ்சம் ரத்தக்களறி,ரணக்களறி,பூகம்பம், வெடிகுண்டு சம்பவங்கள் நடக்கலாம்.

இதே போல சனி செவ் பார்வை /சூரிய ராகு சேர்க்கை /சூரிய சனி சேர்க்கை நடக்கறச்ச கொஞ்சம் போல அழிவு சாஸ்தியாகும் அம்புட்டுதேன்.

ISMAIL
ismaa@sify.com
கேள்வி: அய்யா வணக்கம். ராகு கேது, சனி போன்ற கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் கெடுபலன் கொடுக்கும் இடத்தில இருந்தால், கோச்சராரத்தில் கெடுபலன் தரும் இடத்திற்கு வரும்போது கெடுதல் செய்யுமா? உதாரணம்: எட்டில் சனி (கோச்சாரத்தில் அஷ்டம சனி)

பதில்:
ஏற்கெனவே ஒரு கை முறிஞ்சிருக்குன்னு வைங்க. அந்த கையாலயே உ.வசப்பட்டு நமீதாவை தூக்கி தொலைச்சா என்னாகும்.அதே தியரிதான் இங்கயும் ஒர்க் அவுட்டாகும். உங்கள் சந்தேகம் சரியானதுதான்.

Rajesh
rajesh@ymail.com
கேள்வி: ஐயா, தாங்கள் கேட்ட கேள்விக்கு அந்த இணையதளத்தில் மறுமொழி போடும் வசதி இல்லாததால் இந்த இணையதளத்தில் கேட்டிருக்கிறேன். மேலும் அந்த பையனின் தந்தைக்கும் சுக்கிர தசை நடந்து வருகிறது. ஆனால் அவரின் பெர்சனல் லைப் எனக்கு தெரியாது. தந்தையின் சுக்கிர தசை மகனை பாதிக்க வாய்ப்பிருக்கிறதா? சுக்கிரன் அவரது ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. ஐந்தாம் இடம் என்பது குழந்தைகளை குறிக்கும் என்று நீங்கள் கூறியதை படித்திருக்கிறேன்.

அவரது ஜாதக விபரம்:

கடகம் ராசி
பூசம் நட்சத்திரம்
கடகம் லக்கினம்
துலாம் செவ்வாய்
விருச்சிகம் சுக்கிரன், புதன்
தனுசு வியாழன், சூரியன், ராகு
ரிஷபம் சனி
மிதுனம் கேது

தொடர்ந்து கேள்விகள் கேட்டு தங்கள் நேரத்தை வீணடிப்பதற்கு மன்னிக்கவும்.

பதில்:
அப்பாவுக்கு சுக்கிர தசைன்னா அவருக்கு நிச்சயம் 30வயசு முடிஞ்சிருக்கும். மினிமம் கியாரண்டி.அதே நேரம் சுக்கிரன் சுபனா இருந்தா டபுள் ஓகே. அவருக்கு சுக்கிரதசை நடந்தா கிருக வாகன யோகங்கள் அமையுமே தவிர அது பையனை “கெடுக்க” வாய்ப்பில்லை.

குறிப்பு:
ஜா.ரா ! நீங்க நம்ம சைட்டுக்கு நல்ல புள்ளையா வந்து போயிட்டிருந்த காலத்துலயே “கொணஷ்டை “புத்தி தலை தூக்கினப்ப கமெண்ட் போட இந்த பேரைத்தானே உபயோகிச்சிங்க..

கேள்வி: Dinesh
chummaah@gmail.com
ஸார்,
என்னுடைய கேள்வி ஆபாசமாக இருப்பது தெரிந்திருந்தும் துணிச்சலாக வெளியிட்டமைக்கு நன்றி. ஆபாச கேள்வி கேட்பதால் என் பெயரை மாற்றி கேட்க வேண்டியதாயிற்று. எனக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இதனை படிக்க நேர்ந்தால் என் மானம் பறந்து விடும் என்பதால் இந்த மாற்றம் செய்தேன். பெயரை மாற்றியதற்காக மன்னித்து விடுங்கள்.

தாங்கள் ஜோதிடத்தில் உள்ள எந்த விஷயங்களையும் (செக்ஸ் விஷயங்கள் உட்பட) ஒளிமறைவின்றி அப்படியே வெளிச்சம் போட்டு விளக்குவதை கண்டு இன்ஸ்பையர் ஆகி ஒரு தூண்டுதலில் இந்த கேள்வியை தங்களிடம் முன் வைத்தேன்.

நிச்சயம் மற்ற ஜோதிடர்களுக்கு இந்த துணிச்சல் வராது என்பதை நன்கு அறிவேன். அதற்காக ஜோதிடர்களை குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். நான் கண்ட ஜோதிடர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமான ஜோதிடர். ஏனெனில் செக்ஸ் விஷயத்தை இலைமறை காயாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி செக்ஸ் விஷயத்தை பற்றி விளக்க வேண்டும் என்றால் அதில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். மாத்ருபூதம், நாராயண ரெட்டி போன்ற செக்சாலஜிஸ்ட் போன்றோர் விளக்கினால் அது மருத்துவ ரீதியாக போய் விடும். ஆனால் ஒரு ஜோதிடரானவர் செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை ஜோதிட ரீதியாக இன்டர்நெட்டில் விளக்கி வருகிறார் என்றால் அது நிச்சயம் நீங்கள் ஒருவரே. தங்களுடைய இந்த துணிச்சலை கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். இது ஐஸ் வைப்பதற்கு கூறுவதாக நினைக்க வேண்டாம். என் மனதில் நீண்ட நாளாக ஓடிக்கொண்டிருந்தது.

பதிலை என்னுடைய மின்னஞ்சலுக்கு (மனமிருந்தால்) chummaah@gmail.com அனுப்ப முடியுமா? ப்ளீஸ்.

பதில்:
இதுல கேள்வியே இல்லியே.. இழந்த சக்தி வைத்தியர் காட்டற சர்ட்டிஃபிக்கேட் மாதிரி இருக்கு..அதனால போட்டு தாக்கிட்டம். ஹி ஹி…….

கேள்வி: P.A.Kumar
kumarpak@gmail.com

தல, எல்லாமே தீர்மானிக்கப் பட்டதுன்னா எதுக்கு ஜோதிடம். ஜோதிடப்படிதன்னா எதுக்கு தவம் / தியானம். நொந்து நூலானப்பிறகு ஆன்மா விழிக்கும்னா, அனுபவிச்சே தீத்திரலாமே? நீங்க முக்கியமா ஜோதிடம் தேவையில்லையே?

பதில்:
வாங்க குமார் ! பிரச்சினையின் தீவிரம் பிரச்சினைய பொருத்தது கிடையாது. அந்த பிரச்சினையை ஃபேஸ் பண்ற பார்ட்டியோ சென்சிட்டிவிட்டிய பொருத்தது. உடலை,மனதை,புத்தியை மந்தப்படுத்தும் விஷயங்களை விலக்கி வைத்தால் சென்சிட்டிவிட்டி அதிகரிக்கும்.

சின்ன பிரச்சினையே பெரிய பிரச்சினையாக “உறைத்து” ஆன்மா விழிக்க வாய்ப்பிருக்கே.டோன்ட் ஒர்ரி. சோதிடம் எதுக்குன்னா… கோழி தான் ஃப்ரை ஆகப்போறோமா,குருமா ஆகப்போறோமான்னு ரெம்ப ஒர்ரி பண்ணிக்கிட்டா ஹெல்த் பாழா போகுமில்லை.அதுக்குத்தேன் அட்வான்ஸா சொல்லிர்ரம். அதுக்குத்தேன் சோசியம்..

Advertisements

3 thoughts on “சசிக்கு கல்தா – 2011 மார்ச்,31 லேயே கணித்த அ.ஜோ

  கிருஷ்ணா said:
  December 19, 2011 at 12:34 pm

  /// அந்த கணிப்புகள்ள இன்னம் என்னெல்லாம் பலிக்கப்போவுதோ ஆருக்கு தெரியும். ///

  சரி சரி விடுங்க …பத்துல்ல ஒன்னு ரெண்டு பலிக்கறதுதான் 🙂 🙂 மீதி பலிக்காக போனதுக்கு யார் மீது பலி போடா போறீங்க 🙂

  Tamilselvan said:
  December 19, 2011 at 6:29 pm

  Sir,
  Husbend & wife ku at a time ராகு அல்லது கேது தசா நடக்க கூடாது என்று சொல்கிறார்கள் என்? அப்படி

  நடந்தால் என்ன பலன்.விளக்கவும்.

   S Murugesan said:
   December 20, 2011 at 7:21 am

   வாங்க தமிழ் !
   கணவன் மனைவின்னே கடியாது ராகு/கேது தசை குடும்பத்தில் ஒரே நேரத்தில் ரெண்டு பேருக்கு நடந்தா தலைவலிதான்.

   அந்த ரெண்டு பேருல அவிக ஜாதகத்துல ஒருத்தருக்கு ராகு கேது நல்லாருந்து இன்னொருத்தருக்கு நல்லா இல்லைன்னாலும் லொள்ளு ,ரெண்டு பேருக்கும் நல்லா இல்லேன்னா பயங்கர லொள்ளு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s