Birth Star Makes

Posted on

ஜென்ம நட்சத்திரம் என்ன செய்கிறது?

இன்று கார்த்திகை… திருவண்ணாமலை சிவன், மலையாக வீற்றிருக்க, உச்சியில் தீபமேற்றி சிவனை பிழம்பாக காணும் நாள். நமக்குள் இருக்கும் இருளை அகற்ற அந்த அகன்ற தீபத்தை வழிபடுவோம்.

நாம் இந்த பூஉலகில, கண்ணுக்குத்தெரியாத, எளிதில் உணர முடியா மாயவலையால் இந்த கிரகங்களோடும், நட்சத்திரங்களோடும் பின்னப்பட்டிருக்கிறோம். பின்னலுக்கு வெளியே என்பது அந்த கிரகங்களுக்கே இல்லை என கருதலாம்… மனிதன் எம்மாத்திரம்?

இன்று கார்த்திகை நட்சத்திரம்… தொடங்கும் பொழுது மேசராசியிலும், பிறகு ரிஷப ராசியிலும் முடிவடைகிறது. மேசராசி முதற்கொண்டு அடுத்த 11 ராசிகளும் நட்சத்திரங்களின் தொகுப்பு. அசுவினி முதற்கொண்டு அனைத்தும் தனிப்பட்ட ஒன்றல்ல. பலகோடி நட்சத்திரங்கள் கூட்டு.

கண்ணிற்கு தெரிந்தும், தெரியாத அந்த நட்சத்திரங்கள் தினம் தினம் ராசிகள் வழியாக கிழக்கிலிருந்து மேற்காக வந்துகொண்டே இருக்கின்றன.

அந்தந்த நாளில் பிறந்த அந்த மனிதர்களுக்கு அவை என்ன செய்கின்றன? ஜென்ம நட்சத்திரநாளில் ஏதேனும் கோவிலுக்கு செல்லும்படி, நல்ல காரியங்களை தவிர்க்க சொல்லப்படுகிறது.

ஆனால் அனுபவ வாயிலாக என்ன நேர்கிறது என்றால்…
அன்றைய நாளில் நீங்கள் பரபரப்பாக உணர்வீர்கள்… இனம் புரியாத சோகம் உங்கள் முகத்திலிருப்பதை யாராவது கேள்வி கேட்கக்கூடும். எது கேட்டாலும் சட்டென எடக்குமுடக்காக வாயை கொடுக்க தோன்றும். என்னை ஆளை விடு என்பதான பதட்டம் மனதையும், உடலையும் ஆட்கொள்ளும். உறக்கமின்மை இருக்கும். எந்த வேலையிலும் மனம் ஒன்ற இயலாதுபோகும். எதிர்காலம் பற்றி நிச்சயமற்ற தன்மை தோன்றும்…

இது எதனால்… கிரகங்களின் ஆதிக்கத்தை ஒப்பிடும் பொழுது, நட்சத்திரங்களின் தூரம் எப்படி அதிகமோ அதே போல பலத்தை ஒப்பிடும் பொழுது நிகரில்லாத ஒன்று….

ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் தாக்கம் நம்மோடு பிறப்புமுதல் கலந்திருக்கும் பொழுது, மீண்டும் அதே நட்சத்திரத்தின் வருகை, அதன் தாக்கம் ஏற்படும் பொழுது, நமக்குள் அதீத குழப்பத்தின் விளைவுதான், நாம் இப்பொழுது “ஜென்ம நட்சத்திரத்தின் நாளில்” ஏற்படுகிற உள, மன பிரச்சனைகள்…

இதில் உங்களின் கருத்து என்ன? ஆலோசிப்போமா?

4 thoughts on “Birth Star Makes

  Vimalathithan said:
  December 8, 2011 at 5:19 pm

  Dear Sir,

  If It lead like “Chandrastaman”

  yoghi said:
  December 8, 2011 at 9:07 pm

  வழக்கு,போட்டி,சன்டை,வெட்டுகுத்து எதா இருந்தாலும் நம்ம ஜென்ம நட்சத்திரம் அன்னைக்கு நடந்தா 100% வெற்றி நமக்கே இந்த கான்செப்ட் எல்லாறுக்கும் சரியா வரும்
  பட் ஏன் எதனால எப்டின்னு நம்ம தலதான் சொல்லனும்.

   S Murugesan said:
   December 9, 2011 at 2:16 pm

   வாங்க யோகி !
   சுகுமார்ஜீ ரெம்ப நாளைக்கபபாறம் ஒரு பதிவோட வந்திருக்காரு.

   நீங்க அந்த பதிவின் மைய கருத்தின் மீது நேர் எதிர்கருத்தோட கமெண்ட் போட்டிருக்கிங்க.

   இந்த மேட்டர்ல நம்ம கருத்து என்னடான்னா..

   ஜன்ம நட்சத்திரம்னா என்ன? மனோகாரகனாகிய சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரம்.

   அதாவது நாம பிறக்கும்போது நம்ம மனம் சந்திரனால் எந்த விதமான பாதிப்புக்குள்ளாகியிருந்ததோ அதே பாதிப்பு ஜன்ம நட்சத்திரத்து தினத்திலும் ஏற்படும்.

   அதாவது நாம எந்த லட்சியத்தோட வந்தோமோ அந்த லட்சியங்கள் மீதி நம் (ஆழ்) மனம் குவியும் தினம்.

   சாதாரணமா நம்ம எண்ணங்களுக்கெல்லாம் மூலம் நம்ம ஈகோ. அந்த ஈகோ நம்மை நம்மோட லட்சியத்துலருந்து டைவர்ட் பண்றதையே லட்சியமா கொண்டிருக்கும்.

   சுகுமார்ஜீ சொல்ற ஜன்ம நட்சத்திர தினத்து குழப்பங்களுக்கு காரணம் நம் மனம் லட்சியத்தை விட்டு விலகிவிட்டதோ என்ற சம்சயத்தால் ஏற்படுதுன்னு புரிஞ்சிக்கலாம்.

   மற்றபடி யோகி சார் வழக்கு போட்டி சண்டை வெட்டுக்குத்து எதா இருந்தாலும் ஜ.ந தினம் வெற்றிதாங்கறாரு.

   ஜ.ந தினத்தில் போர்களம் மட்டுமல்ல காமக்களமும் அங்கீகரிக்கப்பட்டிருக்கு.

   மனோகாரகனாகிய சந்திரன் – நாம் பிறந்த தினத்து “மூட்” ஐ ரீகால் செய்து – ரீ ஸ்டோர் செய்து – ரீ இன்ஸ்டால் செய்கிறார்.

   மற்ற தினங்களில் “இதர விஷயங்களில்” சிதறிக்கிடக்கும் மனம் – தான் வந்த காரணத்துக்கு தடை என்று கருதும் விஷயங்களை “அடித்து தூள் கிளப்ப ” கமிட் ஆயிரும் போல.

   யோகி சார் சொல்ற வெற்றிக்கு இது காரணமா இருக்கலாம்.

   ஸ் அப்பாடி.. கம்பும் முறியலை -பாம்பும் சாகலை .

  yoghi said:
  December 9, 2011 at 10:15 pm

  கருத்தாழம் மிக்க விளக்கங்கள் நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s