வீடு- இணையத்தில் இலவசமாய் சொந்த வீடு…

Posted on

கூகிள் நிறுவனம் இந்தியர்க்ளுக்கு இலவச வலை மனை தருகிறது.ஆர்வமாக வலை மனை பயன்படுத்துபடுத்துபவர்கள் பலருக்கும் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பெயர் பதிவு, வலை மனை அமைக்க இடம், 1 வருடம் கால பயன்பாடு எல்லாம் முற்றுலும் இலவசம்.உங்கள் சொந்த பெயரில் , ஈமெயில் , வலை மனை அமைத்து கொள்ளலாம் உதாரணமாக ..

writetome@dhanabalan.in dhanabalan@dindugul.in

இணையம் என்பது தற்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றாகி விட்டது. இணையத்தில் கிடைக்காதது எதுவும் இல்லை. ஒரு குண்டூசி தேவை என்றால் கூட எங்கு கிடைக்கும் என இணையத்தில் முகவரியை தேடி பிறகு சென்று வாங்கும் அளவுக்கு இணையம் மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. இணையதளங்கள் மிகப்பெரிய விளம்பர மையமாக உள்ளது. வெளிநாடுகளில் ஒரு சிறு நிறுவனம் என்றால் கூட அதற்க்கான இணையதளம் உருவாக்கி அவர்கள் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்புகின்றனர். ஆனால் இந்த முறை இந்தியாவில் குறைவு. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் எண்ணிக்கையிலும், சிறு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையிலும் கூகுள் நிறுவனம் ஒரு புதிய சலுகையை அளித்துள்ளது. இந்தியாவில் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இலவசமாக இணையதளங்கள் உருவாக்கி கொள்ளும் வசதியை கொடுத்துள்ளது.


இந்த சலுகையின் படி இலவச ஹாஸ்டிங், இலவச டொமைன் போன்ற வசதிகளை ஒருவருடத்திற்கு இலவசமாக பெறலாம். முக்கியமான விஷயம் இதன் மூலம் இணையதளங்கள் ஆரம்பிக்க நீங்கள் தொழில்நுட்ப அறிவு அதிகம் பெற்று இருக்க வேண்டிய அவசியமில்லை வெறும் 15 நிமிடத்தில் உ

ங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம்.

ஒருவருடத்திற்கு பிறகு இந்த சேவையை தொடர்ந்து பெற விரும்பினால் பணம் கட்டி தொடரலாம் இல்லை அப்படியே விட்டுவிடலாம் நமக்கு எந்த பண விரயமும் ஆகாது. இந்த வசதியின் மூலம் உருவாக்கப்படும் இலவச இணையதளங்களில் .in டொமைன் தான் கிடைக்கும்.

மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் டொமைன் பெயரில் ஈமெயில் முகவரிகளும் உருவாக்கி கொள்ளலாம் இதுவும் இலவசம் தான்.

இந்த லிங்கில் சென்று India Get Online இலவச இணையத்தை உருவாக்கி கொள்ளுங்கள். ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகம் வந்தால் 1800-266-3000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் இதற்கும் எந்தவிதமான கட்டணமும் உங்களிடம் இருந்து மாட்டார்கள். இது சம்பந்தமாக கூகுள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

இந்த இலவச சேவை வசதியை பிரபல ஹாஸ்டிங் நிறுவனமான HostGator நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் வழங்குகிறது.

மேலும் விவரங்கள் அறிய கூகுளின் இந்த google offers free websites to indian அறிவிப்பை பாருங்கள்

உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து அவரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டுங்கள். சொந்த வீட்டை பற்றி பேசும்போது சொந்தமாக இணையத்தில் வீடு அமைப்பது குறித்த தகவலை பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

மேலாதிக்க தகவலுக்கு பார்க்க http://www.vandhemadharam.com/2011/11/blog-post_03.html
இது வந்தேமாதரம் வலைபூவின் மறுபதிப்பு.

நிஜமாவே நம்ம ஊரில் சொந்த வீடு வாங்குவது பற்றிய டிப்ஸ், டிஸ்கஷனுக்கு http://mydreamonhome.blogspot.com

Advertisements

3 thoughts on “வீடு- இணையத்தில் இலவசமாய் சொந்த வீடு…

  rishvan said:
  December 5, 2011 at 11:03 am

  very good news… please read my blog http://www.rishvan.com and leave your comments.

  ThirumalaiBaabu said:
  December 5, 2011 at 11:04 am

  உபயோகமான தகவல் நன்றி !!!

  arul said:
  December 6, 2011 at 7:18 am

  nalla thagaval anna

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s