சனி பிடிச்சா ஆரை வணங்கனும்?

Posted on

அண்ணே வணக்கம்ணே !

இன்ன நோய்க்கு இன்ன வைத்தியம்ங்கறாப்ல இன்ன கிரகம் சரியில்லின்னா இன்ன தெய்வத்தை வணங்குன்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. இதெல்லாம் போது போகாம சொல்லி வச்ச மேட்டரு இல்லிங்ணா.
செம மேட்டரு கீது.

முந்தா நாளு பொஞ்சாதி ஊர்ல இல்லின்னு நம்மூரு முனியாண்டி விலாஸுக்கு போனேன். மழையும் -கிழையுமா இருந்துதா சிலோன் பரோட்டா கொடுப்பாண்ணேன். அதை தின்னு முடிக்கிறதுக்குள்ள ஆண்டவன் தெரிஞ்சாரு.. தின்ன பரோட்டாவும் – சேர்வாவும் பாதி ராத்திரி தொண்டை வரைக்கும் வந்து களுக்குன்னு எட்டிக்கூட பார்த்துருச்சு. இந்த இழவெடுக்கிறதுக்கு ரூ.34 கழுத்துல துண்டை போட்டு வாங்கிட்டானுவ.

( எமெர்ஜென்சி கால கலைஞருக்கும் கனிமொழியை தியாகிங்கற கலைஞருக்கும் வித்யாசம் இருக்கில்லியா.. அப்படி மேற்படி மு.வி நாறிப்போன கால கட்டம் போல – நாம லாலா போடறதும் இல்லை – லாலா பார்ட்டிகளோட போனாலும் வெறுமனே திங்கலாமேன்னுட்டு பொணமும் திங்கறதில்லை -புரோட்டாவும் திங்கறதில்லை.. அதான் மேட்டரு தெரீலை. ஒரு காலத்துல பத்து நாள் ஜூரம் அடிச்சு எத்தனா காராசாரமா தின்னா நல்லாருக்குமேன்னு தோனும் போது மு.வி பரோட்டா ரெண்டு அடிச்சா போதும் ஜூரம் ஓடிப்போயிரும். அப்படி ஒரு காரம் -மணம்-குணம் )

இன்னாபா ஏதோ கெரகம் – சாமின்னு ஆரம்பிச்சு பரோட்டா தின்ன கதைக்கு பூட்டேன்னு பேஜார் படாதிங்ணா. மேட்டருக்கு வரேன்.

பொஞ்சாதி ஊர்ல இருந்திருந்து ” ஆமா.. நீ வயசுக்கு வந்த புதுசுல எவனோ கோலத்து மேல லவ் லெட்டர் வச்சுட்டு போவான்னு சொன்னியே அவன் பேரென்ன”ன்னு கலாய்ச்சுக்கிட்டே மேற்படி ரூ.34 + இன்னொரு 34 மூட்டை அவுத்துருந்தா நாலு சுக்கா ரொட்டியும் -சிக்கன் ஃப்ரையும் பண்ண சொல்லிட்டு பெரிய நாயக்கரம்மாவும் (பொஞ்சாதி) ,சின்ன நாயக்கரம்மாவும் சிக்கனை ஒரு பிடி பிடிக்கிறதை பார்த்துக்கிட்டே மசாலாவை மட்டும் தொட்டு தின்னிருந்தா மழை கொடுத்த -மச மச எஃபெக்ட் ஓடியே போயிருக்கும்.

பரோட்டா -சேர்வா , சுக்கா ரொட்டி -சிக்கன் ஃப்ரை. ரெண்டுக்கும் பெரிய வித்யாசம் எதுவுமில்லை. பரோட்டா சேர்வா “ஊருக்காவ பண்ணது” ,சுக்கா ரொட்டி -சிக்கன் ஃப்ரை பேசிக்கல் ஃபார்முலாவை என்ரிச் பண்ணி நமக்காவ ப்ரிப்பேர் பண்ணது. எது சுரத்தா இருக்கும்?

இன்ன கிரகத்துக்கு இன்னா சாமிய கும்பிடனும்ங்கற மேட்டர்ல ஒரிஜினலா என்ன சொல்லி
வச்சாய்ங்களோ நமக்கு தெரியாது. (புள்ளி விரப்புலிகள் மேட்டர் எதுனா இருந்தா அவுத்து விடலாம்) . கீதைய என்ன கதி பண்ணிட்டாய்ங்கன்னு ஒரு தொடர்பதிவே போட்ட ஆசாமி நாம இந்த மேட்டர்ல “அவாளை” அவ்ளோ ஈசியா நம்பிடுவமா என்ன?

ஒரிஜினலில் உள்ள படி சனி பிடிச்சா நீங்க ” சாஸ்தா”வை வணங்கனும். சாஸ்தான்னதும் ஐயப்பனுக்கு தாவிராதிங்க..சாஸ்தாங்கறது வேற கேரக்டர். விவரமானவுக அவுத்துவிடுங்கப்பு. மனோகராவுல “ஆண்டவன் கட்டளைக்கே காரணம் கேட்கிறார்கள்”ங்கறா மாதிரி பெரியவுக சொன்னதாவே இருந்தாலும் காரண காரியத்தை பார்க்கனும்ல.

அப்படி பார்த்து “ஏன் “என்ற கேள்வியோடா ஆராய்ச்சி பண்ணினதுல அவிகளோட அடிப்படை லாஜிக்கை கேட்ச் பண்ணி சனி பிடிச்சா ஆரை வணங்கனும்ங்கறதை மட்டுமில்லே அந்த கிரகம் கெட்டால் எந்த தெய்வத்தை வணங்கனும்னு பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்லிர்ரன்.

அதுக்கு மிந்தி சின்ன க்ளேரிஃபிகேஷன். ஒன்றே குலம் ஒருவனே தேவன்ங்கறாய்ங்க -விவேகானந்தரோ உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைச்சா அது வேற எங்கே இருந்தோ வந்தது இல்லே. உனக்குளே இருந்துதான் வந்தது”ங்கறாரு.

அப்பாறம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில இன்னின்ன நாள்ள இன்னின்ன ஸ்பெஷலிஸ்டுக வருவாய்ங்கனு போர்டு போட்டாப்ல இது இன்னாபா லிஸ்டை நீட்டறேன்னு கேப்பிக.சொல்றேன்.

புவனா ஒரு கேள்விக்குறியில நடிச்சதும் ரஜினிதேன் -பைரவி ,சதுரங்கத்துல நடிச்சதும் ரஜினிதேன். பில்லா ரங்காவும் ரஜினிதேன், பாட்சா,அண்ணாமலையில நடிச்சதும் ரஜினிதேன் , சந்திரமுகியில ,நடிச்சதும் ரஜினிதேன் ,சிவாஜி,ரோபோல நடிச்சதும் ரஜினிதேன் .ஆனால் சிலருக்கு சிலது பிடிக்கும்.சிலது அறவே பிடிக்காம இருக்கலாம். ஒவ்வொரு படத்துல ரஜினியோட ஒவ்வொரு கோணம் வெளிப்பட்டிருக்கும். ஒவ்வொரு விதமான வைபரேஷன் கிடைச்சிருக்கும். ரஜினிக்கே இத்தீனி கோணம், இத்தீனி வைபரேஷன் இருக்குன்னா கடவுளுக்கு?

கரண்டு ஒன்னுதேன். டிவிடியில பாய்ஞ்சா பலான படம் பார்க்கலாம், கம்ப்யூட்டர்ல பாய்ஞ்சா ட்ரிபிள் எக்ஸ் வீடியோ பார்க்கலாம், ஏ.சியில பாய்ஞ்சா ஜில்லு , ஹீட்டர்ல பாய்ஞ்சா ஊ.. அந்த மாதிரிதேன் தெய்வீக சக்தியும்.

தற்சமயத்துக்கு இன்ன கிரகம் சரியில்லின்னா இன்ன தெய்வத்தை வணங்கனும் ..ஐ மீன் தெய்வத்தை இன்ன வடிவத்துல வணங்கனும்ங்கற பட்டியலை மட்டும் தந்துர்ரன். நாளைக்கு காரண காரியங்களை விளக்கறேன்.

1.சூரியன்:

சூரியன்,சூரிய நாராயணன்,காயத்ரி (நான் படிச்ச புஸ்தவங்கள்ள சிவன்)

2.சந்திரன்:
ஆயுதம் தரிக்காத அம்மன் சிறப்பாக கன்னியாகுமாரி அம்மன் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள பார்வதி)

3.செவ்வாய்:
சுப்பிரமணியர்

4.ராகு:
துர்கை

5.குரு:
பிரம்மா ,தட்சிணா மூர்த்தி

6.சனி
ஆஞ்சனேயர் , கிராம தேவதைகள், காவல் தேவதைகள், பிதுர்கள் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள சாஸ்தா )

7.புதன்
கிருஷ்ணர் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள விஷ்ணு )

8.கேது

வினாயகர்

9.சுக்கிரன்

லட்சுமி

எதுக்கு பலான சாமிய கும்பிடசொன்னாய்ங்க/சொல்றேன்னு கொஞ்சம் ரோசிச்சு வைங்கண்ணா..தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம். நாளைக்கு காரண காரியங்களை சொல்றேன்.

பி.கு:
ஹி ஹி நேத்து கண்ணால நாளாச்சா .. கானிப்பாக்கம் போயிருந்தம். அங்கன ஃபோட்டோ எடுத்ததுல பரதேசி மாதிரி வந்துருச்சு. இன்னாங்கடா இது கு.ப சின்னத்திரையில சித்தப்பா ,மாமா ரோலுக்கு கூட அன்ஃபிட் ஆயிட்டாப்ல இருக்குன்னு ஒரே ஒர்ரியா போச்சு.

அதனால இன்னிக்கு ஆன தகிடுதத்தம்லாம் பண்ணி யூத்தா மாறி ஃபோட்டோ பிடிச்ச பிற்காடுதேன் மனசு ஆறுதலாச்சு. ஃபோட்டோவுல உள்ள கேரக்டருங்க ரெண்டும் நாமதேன். பயந்துக்காதிங்க..

Advertisements

7 thoughts on “சனி பிடிச்சா ஆரை வணங்கனும்?

  kalyan said:
  November 30, 2011 at 7:15 am

  வணக்கம் தல. நல்ல பதிவு, என்னென்ன கிரகத்துக்கு என்னென்ன தெய்வம்னு சொல்லிருகீங்க, அருமையான பதிவு. ஆனா உங்க போட்டோவை காணலியே தலைவா. ரெண்டும் நாமதேன், பயந்துக்காதீங்கன்னு சொல்லிட்டு உங்க போட்டோவை காணலியே. நல்லா தேடி பார்த்தேன், வலதுபக்கம் ஒரு விளம்பரத்தில் ரெண்டு சின்ன குழந்தைங்க இருக்குது அதுவும் வெள்ளைக்கார குழந்தைங்க,
  இது நம்ம தலையா இருக்க சான்ஸ் இல்லியேன்னு நினைச்சேன். உங்க போட்டோவை போடுங்க தல.
  அன்புடன்
  கல்யாண்

  arul said:
  November 30, 2011 at 8:24 am

  murugesh anna ,

  expecting you to give some good reasons about worshipping particular gods for particular planets

  ThirumalaiBaabu said:
  November 30, 2011 at 11:11 am

  போட்டோ காணோம் நே !

  கிருஷ்ணா said:
  December 1, 2011 at 6:04 am

  ///// ஃபோட்டோவுல உள்ள கேரக்டருங்க ரெண்டும் நாமதேன். பயந்துக்காதிங்க.. ////

  அந்த ஜீன்ஸ் டி-சர்ட் தம்பிய பார்த்து அது உங்க மகனோ என்று ஒரு நிமிடம் நினைத்தேன் 🙂

  வயசு ஆனா கூட அதை ஏத்துக்காம முடிக்கு பெயிண்ட் அடிச்சுகறது …..உடம்புக்கு நாத்த மருந்து அடிசுச்கறது எல்லாம் சந்திர -சுக்கிர தோஷம் தானே??…..இதுக்கு என்ன பரிகாரம் தல 🙂

   S Murugesan said:
   December 2, 2011 at 5:53 am

   வாங்க கிருஷ்ணா,
   அது ஒரு நாள் கூத்துன்னு கூட சொல்ல முடியாது. ஃபோட்டோ செஷன் முடிஞ்சதும் களுவி விட்டாச்சு.

   நம்ம வாழ்க்கையே ஒரு நாடக மேடை மாதிரி ஒவ்வொரு கெட் அப்பா வந்து போய்க்கிட்டே இருக்கும்.

   எப்பயாச்சும் வேலை வெட்டி இல்லாதப்ப ச்சொம்மா நெனச்சு பார்ப்பதுண்டு அம்புட்டுதேன். மறுபடியும் மொதல்ல இருந்தா ..வேண்டான்டா சாமி.

  arul said:
  December 1, 2011 at 12:30 pm

  enna oru matram murugesh anna intha rendu photoslayum

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s