அணு உலைக்கு கலாம் ஆதரவு:காலம் செய்த கோலம்

Posted on

கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும். இயங்கவும் ஆரம்பித்துவிடும். என்னைக்கோ சுனாமியோ பூகம்பமோ வந்தா சனம் கொத்தா சாவாய்ங்க. இந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம்லாம் சோனி. நிக்காது.

இப்பமே போராட்டத்துக்கு பின்னாடி அமெரிக்க பணம் விளையாடுதுன்னு பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க. அணு உலைக்கு ஆதரவா போலி அமைப்புகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சு. இனி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை அவிழ்த்துவிடப்படும். அல்லாரும் சைடு வாங்கிக்கினு அவிகவிக வேலைய பார்க்க ஆரம்பிச்சிருவாய்ங்க. மிஞ்சிப்போனா நம்ம வை.கோ வீரகர்ஜனை செய்துட்டு ஜெயில்ல டென்னிஸ் டோர்னோ நடத்தவேண்டி வரும்.
Read More

Advertisements

3 thoughts on “அணு உலைக்கு கலாம் ஆதரவு:காலம் செய்த கோலம்

  vinoth said:
  November 9, 2011 at 6:08 am

  அப்துல் கலாம் பற்றி நான் என்ன நினனத்தேனோ .. அதை தான் இப்பொது பார்க்கிறேன். அவரின் மெயில் முகவரியை தாருன்க்கள் இந்த மெயிலை அவருக்கு அனுப்பவேண்டும்.
  அரசின் அல்லகையாக தான் இருப்பார் என நினைத்தேன்… அது சரியாகவே உள்ளது..
  //…(tsunamigenic fault)என்று சொல்லப்படுகிற
  சுனாமியை எழுப்பக்கூடிய பூமி பிளவு ஏற்படக்கூடிய
  பூகம்ப பகுதி 1500 கிலோமீட்டர்க்கு அப்பால்
  சாகோஸ் ரிட்ஜ் (Chagos Ridge) என்று
  கன்னியாகுமரிக்கு கீழே தென் மேற்கே அமைந்துள்ளது.
  எனவே மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிற
  திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள கூடங்குளத்தில்
  சுனாமியால் பாதிப்பு ஏற்படும் என்ற கூற்றில் எள்ளளவும்
  உண்மையில்லை…….//

  இந்த அறிக்கையின் நம்பக தன்மையை சந்தெகிக்க இந்த பகுதி மட்டுமே போதுமானது..

  இதற்குமுன் பூமியதிர்ச்சி ஏற்படவில்லை என்பது
  இனிமேல் ஏற்படாது என்பதற்கு சான்றா? 2004 க்குமுன் சுனாமி தமிழகததை தாக்கியதில்லை.. 2004க்கு முன் கேட்டிருந்தால் .. சுனாமி தமிழகத்தை தாக்க 100% வாய்ப்பில்லை என தானே சொல்லி இருப்பார் ?

  //….ஒரு ஒப்பீட்டிற்காக நாம் பார்ப்போமேயானால்,
  மின்சார உற்பத்தி செலவு சூரிய ஒளிமூலம் Rs 20/kWh,
  காற்றாலை மூலம் Rs 10/kWh நமக்கு கிடைக்கிறது.
  இந்திய அணுசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரம்
  தாராப்பூரில் இருந்து Rs 1/kWh க்கும், கைகாவில்
  இருந்து Rs 3/kWh க்கும், கூடங்குளத்தில் இருந்து
  Rs 3/kWh க்கும் குறைவாக கிடைக்கும்…//

  அணுமின்நிலைய இயங்கு செலவை கணக்கிட்டு இப்படி காட்டலாம்…
  நிர்மானிக்க ஆகும் செலவு, இயக்கத்தை நிறுத்தி மூட ஆகும் செலவு..
  விபத்து ஏற்பட்டால் அதனால் ஆகும் செலவு,உயிர் சேதம், நட்ட ஈடு.. எல்லாவற்றையும் சேர்த்தல் உண்மையில் இது தான் வருமா ?
  அப்படியெனில் ஏன் 2000 கோடிக்கு மேல் நட்ட ஈடு தரவேண்டியதில்லை ஏன மசோத கேட்கின்றனார் ? சூரிய ஒளி .. காற்றலையில் இப்படி ஆபத்து உள்ளதா ?

  அவ்வளவு பாதுகாப்பன 24 மணிநெரமும் மின்சாரம் தரும் உலையை
  டெல்லி சுற்றிலும் அமைத்துகொள்ள வேண்டியது தான்னே… சுனாமி வர 100% வாய்ப்பில்லையே.. கடல் இருந்தால் தானே சுனாமி வரும் ? டெல்லியை சுற்றிலும் அணு உலை அமையுங்கள் .. மாருதி கார் தொழிற்ச்லையை கூடங்குழத்துக்கு மாற்றுங்கள் … யார் எதிர்ப்பர் இதை…?

  ஆயிரகணக்கான கோடி செலவில் அணு உலை அமைத்தால் தான் நுற்றுகணக்கான கோடி லஞ்சம் வாங்க முடியும்… கோடிகணக்கில் எரிபொருளாக யுரெனியம் வாங்கினால் தான் அதிலும் லஞ்சம் சாத்தியம்.. சூரிய ஒளியில் ஆயிரம் கோடியில் வாங்க வேண்டியது எதுவும் இல்லை.. எரிபொருள் தேவையே இல்லை.. இதுதான் சுரிய சக்தியை அரசு வெறுக்க காரணம்..

  அப்துல் கலாம் மேல் ஒரு மரியாதை இருந்தது.. தொடர் செயலகளினால் தானும் ஒரு சுயநலமி தான் என்பதை காட்டிவிட்டார்..பணத்திற்காக நாட்டை காட்டிகொடுப்பதும்…வீட்டு பெண்களை அனுப்புவறக்கும் தர்க்க ரீதியில் பெரிய வித்த்யாசம் ஒன்றும் இல்லை.. அவர்களுக்கு சாமரம் வீசும் இவரை இனி நாம் மதிக்க முடியுமா?

  ஆபத்தை மடியில் கட்டிகொண்டு.. அனு மின்சாரம் வேண்டாம் என்பது தான் கோரிக்கை…அது ரஷ்ய அனு உலையானாலும் சரி, அமரிக்க அனு உலையானாலும் சரி…அதை வசதியாக மற்ந்துவிட்டு மேம்போக்கன ஆறிக்கை விடுவது.. சுயமை தனத்தை தோலுறிக்கின்றாது..

  Muthuraman V said:
  November 10, 2011 at 5:16 pm

  Nuclear plant will not be affected due to tsunami since height of the plant is more than 13 meters.1 crore people are living nearer to the Kalpakkam Plant.Is there any problem due to Nuclear plants in India?There are more people are dead in Thermal power plants than Nuclear plant.Our scientists and engineers take more care in these plants because they will be affected first if anything is happens.So please dont afraid the new technology.There are more pollution due to solar power plant.This is clean energy.So support Nuclear technology.

   S Murugesan said:
   November 11, 2011 at 8:27 am

   வாங்க முத்துராமன் சார்!

   //Our scientists and engineers take more care in these plants because they will be affected first if anything is happens.//

   நம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் அதிக பட்ச ஜாக்கிரதைகளை மேற்கொள்வார்கள் ஏன்னா “எதுனா” நடந்தா மொதல்ல எஃபெக்ட் ஆகப்போறது அவிங்கதான்னு சொல்றிங்க.

   ஸ்பெக்ட்ரம் முதல் துண்டு துக்கடா நில அபகரிப்பு வரை கிரவுண்ட் ஒர்க் பண்ணிக்கொடுத்ததெல்லாம் அதிகாரிங்க தான். மாட்டினா அவிகளும் கைக்கு காப்பு போட்டுக்கவேண்டியதுதான்.ஆனாலும் தில்லு முல்லு செய்தாய்ங்களா இல்லையா?

   தெலுங்கு கங்கை கால்வாய் முதல் ஆந்திரத்தில் கட்டப்பட்டுவரும் அணைகள் வரை கட்டினது கட்டிக்கிட்டிருக்கிறது நம்ம பொறியாள்ர்கள் தான். அவற்றின் லட்சணங்கள் ஒவ்வொரு மழை காலத்துலயும் வெட்ட வெளிச்சமாயிட்டே இருக்கு.

   புதுசா கட்டறது ஒரு பக்கம். தாளி இருக்கிறதை ஒழுங்கு மரியாதையா பரமாரிக்க/மராமத்து செய்யவே வக்கில்லாத கூட்டம் இந்த பொறியாளர்கள் கூட்டம்.

   இவிகளை நம்பி அணு உலைய திறக்கறது உப்பு குதிரைய நம்பி கடல்ல இறங்கின கதைதேன்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s