பெருகி வரும் தற்கொலைகள்: திகீர் ரிப்போர்ட்

Posted on

தமிழ் திரைக்கவிஞர்களை பொருத்தவரை ஒவ்வொருத்தருது ஒவ்வொரு ஸ்டைல் . ஆனால் எல்லாரோட ஸ்டைலயும் முளை கட்டி காய வச்சு சத்து மாவு கணக்கா அரைச்சு , அல்லாரும் விரும்பக்கூடிய ஒரு ஃப்ளேவரை கலந்து கவர்ச்சியான டின்ல அடைச்சா அதான் தெலுங்கு திரைக்கவிஞர் வேட்டூரி சுந்தரராமமூர்த்தியோட ஸ்டைல்.

உலகத்தோட எந்த மூலையில மனித வாழ்வில் எந்த சம்பவம் நடந்தாலும் -அவனுக்குள்ள எந்த உணர்வு கிளர்ந்தெழுந்தாலும் அந்த சிச்சுவேஷனுக்கு வேட்டூரியோட ஒரு பாட்டாவது சிக்குனு பொருந்தும்.

தற்கொலைகள் பற்றிய புதிய சர்வேக்கும் வேட்டூரிக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக .சொல்றேன். பொதுவா சனம் ரிட்டையர் ஆகிற வயசுலதான் அவரு பாட்டு எழுதவந்தாரு. அதை போல நமக்கு வலையுலகத்துல ஒரு பெரிய ரவுண்டு முடியற இந்த சமயம் நம்மோட டாப் ப்ரியாரிட்டில என்டர் ஆறோம். நம்ம டாப் டென் ப்ரியாரிட்டி என்னனு தெரிஞ்சுக்க அவா உள்ளவர்கள் இங்கே அழுத்தவும்.

சமீபத்துல – தேசிய குற்ற பதிவு துறை தற்கொலைகளை பற்றி தயாரித்த அறிக்கையோட முக்கிய அம்சங்களை – அவை உணர்த்தும் உண்மைகளை இங்கன பார்ப்போம்.

நம்ம நாட்ல ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்துக்கறாய்ங்க. ஒரு மணி நேரத்துக்கு 15 பேருன்னா நெம்பர் சின்னதா தெரியும்.

24 மணி நேரத்துக்கு – ஒரு நாளைக்கு 360 பேரு. ஒரு வாரத்துக்கு 2,520 பேரு ஒரு மாசத்துக்கு 10 ஆயிரத்து 80 பேரு. ஒரு வருசத்துக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 960 பேரு.

இதே விகிதத்துல அடுத்த பத்து வருசத்துக்கு தற்கொலைகள் தொடர்ந்தா 12 லட்சத்து 9 ஆயிரத்து 600 பேர் தற்கொலை செய்துக்கிடுவாய்ங்க.

எவனோ செத்தால் எனக்கென்ன போச்சுன்னு நீங்க நினைக்கலாம். ரோபோ படத்துல க்ளைமேக்ஸ்ல ரோபோ ரஜினி லட்சக்கணக்கான ரோபோக்களை உருவாக்கியிருக்க அந்த ரோபோக்கள் எல்லாம் ஒரு மெகா ரோபோவா ரோட்ல நடந்து வரும்.

அப்பம் சைன்டிஸ்ட் ரஜினி கம்ப்யூட்டர்ல ஏதோ தகிடுதத்தம் பண்ண மெகா ரோபோல இருந்து ரோபோக்கள் புளியம்பழம் கணக்கா உதிரும்.

இந்த தற்கொலைகளும் ஏறக்குறைய இதே எஃபெக்டை தரும். நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கிடலைன்னாலும் இந்த உலக உயிர்கள் அனைத்தும் ஒரு மர்மமான முறையில இணைக்கப்பட்டிருக்கு.

சமீபத்துல தமிழ் நாட்ல நடந்த சட்டமன்ற ,உள்ளாட்சி தேர்தல்கள்ள கூட்டணியில நின்னாலும் -தனிய நின்னாலும் திமுகவுக்கு ஆப்படிக்கனும் – அம்மாவுக்கு லைஃப் கொடுக்கனும்னு சனம் எப்படி டிசைட் பண்ணாய்ங்க?

அவிகல்லாம் டிவிட்டர் -ஃபேஸ்புக்ல மெம்பராயிருந்து பேசி முடிவு பண்ணாய்ங்களா? இல்லையே. பின்னே எப்படி இது சாத்தியம்?

நாமெல்லாம் ஏதோ ஒரு மோட்ல இணைக்கப்பட்டிருக்கோம். நம்மிடையில் இத்தீனி காலம் வாழ்ந்திருந்து அடுத்த பத்து வருஷ காலத்துல 12 லட்சத்து 9 ஆயிரத்து 600 பேர் தற்கொலை செய்து செத்துப்போயிட்டாய்ங்கன்னு வைங்க.

அந்த தற்கொலைகள் நம்மையும் நிச்சயமா பாதிக்கும். விபத்துல கை ,காலை இழந்தவுகளுக்கு பல காலத்துக்கு அந்த உறுப்புகள் தம் உடலோடு ஒட்டியிருப்பதாகவே ஒரு ஃபீலிங் இருக்குமாம். இது இன்னாடா கூத்து எவனோ தற்கொலை பண்ணா அது எப்படி என்னை பாதிக்கும்னு கேப்பிக. சொல்றேன்.

சுற்றுச்சூழலை அட்மாஸ்ஃபியர்னு சொல்றாப்ல மக்களின் எண்ணங்களால் உருவாகும் சூழலை நூஸ்ஃபியர்னு சொல்றாய்ங்க. எவனோ ஒரு டயரை கொளுத்திவிட்டா அந்த ஏரியாவே நாறிப்போறாப்ல ஆரோ ஒருத்தரு தற்கொலை செய்தா அந்த வட்டாரமே – அந்த வட்டாரத்து நூஸ்ஃபியர் கடுமையா பாதிக்கப்படும்.

ஒரு அப்பார்ட்மென்ட்ல ஒரு தற்கொலை நடந்தா வருசத்துக்கு ஒரு தற்கொலையாவது அந்த அப்பார்ட்மெண்ட்ல நடந்துக்கிட்டே இருக்கும். எத்தீனி குடுமி அய்யர் வந்து எத்தீனி யாகம் பண்ணாலும் அந்த நூஸ்ஃபியரை சரி செய்யவே முடியாது.

இது மட்டுமில்லை ஒரு குடும்பத்துல ஒரு தலைமுறையில ஆரோ ஒருத்தர் சூசைட் பண்ணிக்கிட்டா அடுத்தடுத்த தலைமுறையில ஆரோ ஒருத்தர் தற்கொலை செய்துக்கிட்டே இருப்பாய்ங்க.

இது மட்டுமா? இப்படி தற்கொலை நடந்த குடும்பத்துல பெண்ணெடுத்தாலோ – பெண் கொடுத்தாலோ உங்க குடும்பத்துலயும் அந்த தற்கொலைகள் நடக்க வாய்ப்பிருக்கு.

இதெல்லாம் தொற்று நோய் மாதிரி . ஒரு கோழிபண்ணையில ஒரு கோழிக்கு நோய் வந்தா அல்லாங்கோழிகளும் பாதிக்கப்படும். அதே போல ஒரு ஆட்டு மந்தையில ஒரு ஆட்டுக்கு நோய் வந்தா அல்லா ஆடுகளும் பாதிக்கப்படும்.

என்ன மிருகங்களுக்கு ஈகோ ரெம்ப குறைச்சல் அதனால சீக்கிரமா பாதிக்கப்படும். மன்சன்ல ஈகோ கொஞ்சம் அதிகம் அதனால லேட்டா பாதிக்கப்படுவான்.

மேலும் நம்மோட ஈகோ எல்லாம் கன்னித்திரை மாதிரி காலம் தக்ஜம் பண்ணா ஒரு நொடியில கிழிஞ்சுரும். அதனாலதான் சொல்றேன். அட்லீஸ்ட் சுய நலம் கருதியாவது தற்கொலைகளை தடுக்க ஒவ்வொருத்தரும் முயற்சி எடுத்துக்கனும்.

இப்பம் இந்த தற்கொலை விஷயத்துல ஒரு சில புள்ளிவிவரங்களை பாருங்க..

2010 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துக்கிட்டாய்ங்க

மொத்த தற்கொலைகளில் மேற்கு வங்காளம் 11.9 சதம் ( முதல் இடம்)
ஆந்திரம் 11.08 சதம் (இரண்டாவது இடம்)

ஆந்திரம், கர்னாடகா ,கேரளா,மகாராஷ்டிரா மானிலங்களில் அதிகம் (51.7)

தற்கொலைசெய்தவர்களில் 55.9 சதம் பேர் மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம், கர்னாடகா ,தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.

2009 ஆண்டுடன் ஒப்பிட்டால் 2010 ல் தமிழ் நாட்ல தற்கொலைகள் அதிகரிச்சிருக்கு. 2009 ல் 14 ஆயிரத்து 424 பேர் தற்கொலை

2010 ல 16 ஆயிரத்து 561 பேர் தற்கொலை செய்திருக்காய்ங்க

ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பீகார் ( 23) கேரளா (22) மத்திய பிரதேசம் (21) ஆந்திரா (20)

இப்பம் கீழ்காணூம் 3 அம்சங்களை படிச்சதும் “ஏன் ஏன் ஏன்”னு பல கேள்விகள் உங்க மைண்ட்ல ரெய்ஸ் ஆகும். அந்த கேள்விகளை அப்படியே மனசுல வைங்க அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுத்துருவம்ல.

தற்கொலை செய்துக்கறவுகள்ள கண்ணாலம் கட்டினவுக அதிகம்.69.2 சதவீதம். தற்கொலை செய்து கொள்பவர்களில் ஐந்தில் ஒருவர் இல்லத்தரசி.

ஆண்கள் : சமூக ,பொருளாதார காரணங்கள்
பெண்கள் விஷயத்துல மானசிக உணர்வு பூர்வ தனிப்பட்ட பிரச்சினைகளே காரணம்

நகரங்களில் தற்கொலை அதிகம். நகரங்களை பொருத்தவரை 30 பெரு நகரங்களில் பார்க்கும்போது பெங்களூர்,சென்னை, தில்லி,மும்பை முதலிடத்தில் உள்ளன.

Advertisements

2 thoughts on “பெருகி வரும் தற்கொலைகள்: திகீர் ரிப்போர்ட்

  superrsyed said:
  October 29, 2011 at 8:33 pm

  தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து தடுக்க அ. மினிமைஸ் பன்ன எதுனா சொன்னிங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்

   S Murugesan said:
   October 29, 2011 at 8:55 pm

   வாங்க சையத்!
   அரைகுறையா விடுவமே தவிர.. அரைகுறையாவே விட்டுரமாட்டமில்லை. நம்ம டாப் 10 ப்ரியாரிட்டில இதான் டாப்பு. விட்டுருவமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s