நான் படித்த பலான கதை

Posted on

சொல்லப்போற கனமான மேட்டரை உங்க மைண்ட் ஏத்துக்கறதுக்காக – ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ணிக்க நான் படித்த பலான கதையோட சுருக்கத்தை உங்களுக்கு சொல்லிர்ரன்.

பலான கதைன்னதும் ஏதோ பஸ் ஸ்டாண்டுல இருட்டு மூலையில திருட்டுத்தனமா வாங்கி படிச்ச கதைன்னு நினைச்சுராதிங்க. லீடிங் தமிழ் பத்திரிக்கையின் தீபாவளி மலர்ல படிச்சேன். ஒரு ஹையர் மிடில் க்ளாஸ் ஃபேமிலிய எழுத்தாளர் படம் பிடிச்சு காட்டறாரு. மம்மி,டாடி ரெண்டு பேரும் பிசியோ பிசி. பாட்டிய கழட்டி விட்டுட்ட ஃபேமிலி. ஒரே மகள். மகளோட கைப்பையில மம்மி காண்டோமை கண்டெடுக்கிறாள். என்ன ஏதுன்னு கேட்டா மகள் ” நான் தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே .. நீ பார்த்த பையனை நான் கல்யாணம் பண்ணிக்குவன் – மத்த மேட்டரையெல்லாம் கண்டுக்கப்படாது “ங்கறாள். உடனே அம்மாக்காரி பாட்டிக்கு ஃபோன் போட்டு “அம்மா.. நீ ஒடனே வந்துரு”ங்கறா. இதான் கதை.

எத்தீனி பெண்கள் இப்படி கைப்பயில காண்டோமோட அலையறாய்ங்கன்னு நமக்கு தெரியலை. மேலும் இந்த மேட்டர்ல பாட்டி வந்து என்னத்தை கழட்டறதுன்னும் புரியலை. உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்க. கேட்டுக்கறேன்.

இந்த கதை சொல்லும் நீதி:

இளைய தலைமுறை ஊர் மேயப்போனாலன்றி முதியோர் ஆசிரமங்கள் ஹவுஸ் ஃபுல்?
தாய்மாரெல்லாம் பெண்ணோட ஹேண்ட் பாகை குடையனும். அப்பத்தேன் காண்டோம் இருந்தா கிடைக்கும்?
குடும்பத்தலைவி வேலைக்கு போனா மகள் பாக்ல காண்டோம்தான் வரும்?

இந்த கதை வெளிவந்த தீபாவளி மலர் ………………பத்திரிக்கையோடது. சரி சொல்லவந்த கனமான மேட்டருக்கு வந்துர்ரன்.

இப்பம் நான் சொல்லப்போறதெல்லாம் வெத்தலையில மை போட்டு பார்த்த சமாசாரம் கிடையாது, ஞான திருஷ்டி இத்யாதி மேட்டரும் கடியாது. நம்முது கடகலக்னமாச்சா லக்னத்துலயே குருவேற கீறாரா இயற்கைக்கும் -இறைவனுக்கும் நெருக்கமான ராசி/லக்னம் கடகம்தேன்.

அதனால நாம வள்ளாட்டு பராக்கா ரோசிச்சா கூட அசலான மேட்டர்லாம் நம்ம மைண்ட்ல ஃப்ளாஷ் ஆகும். அப்படி ஃப்ளாஷ் ஆன மேட்டருதேன் இந்த பதிவுல வரப்போவுது. அல்லா கிரகங்களும் கேந்திர கோணங்கள்ள இருந்தா அதுக்கு பரிவ்ராஜக யோகம்னு பேரு. அவிகளுக்கு கர்மாவே அண்டாது – மறு பிறவி கடியாதுன்னு ஒரு தியரி.

நம்ம ஜாதகத்துல சந்திர,சுக்கிரன் தவிர மத்த கிரகமெல்லாம் கேந்திர கோணம்தேன். சந்திர சுக்கிரன் கூட வாக்குஸ்தானத்துலதேன் இருக்காய்ங்க. தாளி அன்னா ஹசாரே மாதிரி காலவரையற்ற மவுன விரதம் ஆரம்பிச்சுட்டா இதுவும் ஓகே ஆயிரும்.

இந்த ரெண்டு பாய்ண்டையும் கொலைட் பண்ணி முக்கி ரோசிச்சப்ப நமக்கு ஸ்பார்க் ஆன மேட்டர் அபத்தமா இருந்தாலும் மறுபடி மறுபடி ஸ்பார்க் ஆயிட்டே இருக்கு. கு.பட்சம் 1986 லருந்து. கேவலத்திலும் கேவலமா ரோசிச்சாலும் முன்னொரு காலத்துல நான் ஒரு தேவனா இருந்திருக்கனும். அதான் வாக்காளர் பட்டியல் கணக்கா முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்காய்ங்களாமே.அதுல ஒரு கிராக்கின்னு வச்சுக்கங்க.

ஒரு தாட்டி ஏதோ மாநாடு கணக்கா கூட்டி பேசிக்கிட்டிருக்காய்ங்க. அப்பம் நாம எந்திரிச்சு பழைய படத்துல ரஜினி கணக்கா “இன்னாபா விதி விதி… விதி . பொல்லாத விதி. மன்சங்களோட வாழ்க்கை . விதிப்படி தான் நடக்கும் – நடக்கனும்னா அப்பாறம் நாமெல்லாம் இங்கன இருந்து என்னத்தை கழட்டறோம். மொதல்ல விதின்னா என்னன்னு சனத்துக்கு தெரியமாணாமா? ஆட்டத்தோட விதி என்னன்னு எக்ஸ் பார்ட்டிக்கு தெரியாம இருக்க்ச்சொல்ல விதிங்கற பேர்ல டார்ச்சர் பண்ற விளையாட்டு இன்னா விளையாட்டு? இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.”ன்னு சொல்ட்டாப்ல கீது..

அப்பம் மத்த தேவருங்கல்லாம் இவன் இன துரோகி இவனை பாய்க்காட் பண்ணுங்க. இவன் விதியோட ரகசியத்தையெல்லாம் சனத்துக்கு போட்டு உடைச்சு ஸ்ருஷ்டி தர்மத்தையே தாறுமாறாக்கிருவான் போலனு ப்ரொட்டெஸ்ட் பண்ணாய்ங்க போல.

அப்பம் கல்கி பகவான் ,அம்மா பகவான் ரேஞ்சுல மேடையில உட்கார்ந்திருந்த சிவ+ சக்தி நம்மை கூப்டு கொஞ்சம் போல காம்ப்ரமைஸ் பண்ணாய்ங்க போல.

அந்த உரையாடல்:

“மகனே! சனத்துக்கு தேவையான டேட்டா மொத்தம் அவிக மைண்ட்ல ஸ்டோர் பண்ணித்தானே அனுப்பறோம். அதுல விதியின் மர்மங்களும் அடக்கம்”

“யம்மா .. கம்ப்யூட்டர்ல ஹிடன் ஃபைல்னு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதை பார்க்கனும்னா ஃபோல்டர் ஆப்ஷன்ல போய் மாத்தனும். அப்பத்தேன் கண்ணுக்கு தெரியும். அந்த மாதிரிதானே அந்த டேட்டால்லாம் சப் கான்ஷியஸ் மைண்ட்ல புதைஞ்சு கிடக்கு”

“அதை தோண்டி எடுக்கிற கடப்பாறையும் கொடுத்துத்தானப்பா அனுப்பறோம்.”

“அந்த கடப்பாறைய எங்கன சார்த்தி வச்சுருக்குன்னு தெரியனுமே”

(தேவர்கள் “வெட்கம்.. வெட்கம்.. உட்கார் உட்கார்”னுட்டு கோஷம் போடறாய்ங்க)

“இதையெல்லாம் சனத்துக்கு சொல்ல எத்தனையோ மகான்களை அனுப்பினோம்பா”

“யம்மா .. அதெல்லாம் அந்தக்காலம் இப்பம் காலம் மாறிப்போச்சு. நெல்ல விஷயத்தை கூட கெட்ட விசயம் கணக்கா சொன்னாதான் ரீச் ஆகுது. பலான ஜோக் சொல்லிக்கிட்டு உபதேசம் பண்ண ஓஷோவையே அவரு செத்த பிற்காடுதேன் தீபாவளி மலர்ல எல்லாம் அவரோட உபதேசங்களை தொட்டுக்க ஆரம்பிச்சாய்ங்க .. எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க. நான் சொல்றேன் சனத்துக்கு விதியோட சூட்சுமத்தை”

“சொல்..சொல்..சொல்லிப்பார்”

“உங்க மாடுலேஷனே சரியில்லை. உங்க உத்தேசம் என்ன? கலிலியோவை கல்லாலடிச்ச மாதிரி அடிப்பாய்ங்கங்கறிங்களா?”

“பார்க்கத்தானே போகிறாய்.. செல்..செல்..சென்று பார்”

“ஆனா ஒரு கண்டிஷன் ”

“அதையும் சொல்..”

“என் பேச்சால் நன்மை மட்டும் தான் நடக்கனும்”

“அது ஸ்ருஷ்டி தருமத்துக்கு விரோதம். நோக்கத்துடனான செயல்னு இறங்கினா நன்மை தீமை கலந்தே வரும் ”

“நோக்கம்னா சுய நல நோக்கம் தானே”

“பொது நல நோக்கமானாலும் இதுவே விதி”

“உங்க விதியில இடி விழ.. சரி மானுட குலம் வாழ நான் போய் வருகிறேன்”

“போகலாம்.. ஆனால் வரமுடியாது”

“ஏன்?”

“நோக்கத்துடனான செயல் கருமமூட்டையை சேர்க்கும் ”

“சூப்பர் ரின் போட்டு வெளுத்துக்கறேன் வரேன்..”

“சூப்பர் ரின்னா ? அது எது?”

“ச்சொம்மா பேச்சுக்கு சொன்னேன். உங்களை மறக்காம இருக்கிறதே .. சதா மனசுல நிறுத்தறதே கருமமூட்டைய வெளுக்கும்னு சொன்னேன்”

“நோக்கம் பிறந்தால் .. மனம் தடுமாறும்”

“ஸ்டெடி பண்ணிக்குவம்ல”

“ஒழி .. உன் பேச்சால் ஒரே புல்லுக்கு கூட விதியின் மருமத்தை உணர்த்தமுடியாது”

“அதையும் பார்த்துர்ரன்”

( இப்படித்தேன் இங்கன வந்து அல்லாடறதா ஒரு சம்சயம். )

கொசுறு:
நம்ம நல்ல நேரம் சதீஷுக்கும் தமிழ்மணத்தில் கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அவரை கட்டணசேவைக்கு மாறும் படி கேட்டதாகவும் -தன்னிச்சையாக க.சேவுக்கு மாற்றியதாகவும் குமுறியிருக்கிறார்.

நல்லவேளை (அல்லது நம்ம காட்டடிக்கு பயந்தோ என்னமோ ) நம்மை க.சேவுக்கு கூப்பிடலை. பொய்யா ஏன் புழுதி வாரி இறைக்கிறது.

சோதிடப்பதிவுகளைமட்டும் நீக்கினதா தகவல் கொடுத்து தொடர்ந்து சோ.பதிவுகள் போட்டா நீக்கிருவம்னு வார்ன் பண்ணாய்ங்க. ” காண்டோமை ஒளிச்சு வச்சா முதலிரவு நிக்காது “ன்னு பஞ்ச் பேசிட்டு கழண்டுக்கிட்டோம். த.கருவிப்பட்டையையும் நீக்கிட்டம்.

இதுல சவூதி அரேபியால தடை – தமிழ்மண நிர்வாகியின் அ நாகரிக கமெண்டுன்னு ஏதேதோ கண்ல படுது எதுவும் நல்லா இல்லை.

தப்பு செய்யறது தப்பே இல்லை. தப்பை திருத்திக்கமாட்டேன்னு அடம் பிடிக்கிறதுதேன் தப்பு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s