ஒரு அனுபவம் -சில பாடங்கள்

Posted on

சின்னவயசுல சித்தி வீட்டுக்கு போறச்ச -மூட்டை முடிச்சை இறக்கிவச்சுட்டு நாம வாய திறந்தா அந்த வீட்ல எந்த வேலையும் ஓடாது. அல்லாரும் நம்ம வாய பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. அந்த வீட்ல நமக்கு ஒரு அக்கா, நாலு தங்கச்சினு ஞா. சித்தி மட்டும் என்னவாம் ஒரு பக்கம் திட்டித்தீர்த்துக்கிட்டே கரண்டியும் கையுமா சமையலறைக்கும் ஹாலுக்கும் ரன் எடுத்தபடி இருப்பாய்ங்க. நம்ம வாய் சாலம் அப்படி.

அந்த வயசுல முக்கியமா பட்ட மேட்டர்லாம் இப்பம் சப்பை மேட்டராயிருச்சு. அதனால வயசு பிள்ளைங்க கிட்ட எதையாவது பேசனும்னா ரோசிக்க வேண்டியதாயிருக்கு. துருக்கி பூகம்பம்தேன் நம்மை அதிகமா பாதிக்குது. இப்பம் கேரளா ,தமிழகத்துல 3.5 வருசத்துல பூகம்பம் கியாரண்டின்னு சொல்றாய்ங்க.

பூகம்பத்தை விட அதை ஃபேஸ் பண்ணக்கூடிய நிலையில இல்லாத அரசு இயந்திரம்தேன் பேதியாக்குது.பசங்க கிட்டே இடையில என்னப்பா போரடிக்கிறேனா? ச்சொம்மா என் திருப்திக்கு சொல்லாதே..போரடிச்சா சொல்லிருன்னு பேசவேண்டியதாயிருக்கு.

நியூஸ் பேப்பரை எடுத்தா சில பிள்ளைங்க கிரிக்கெட் -சினிமா மட்டும் பார்த்துட்டு (அண்டர்லைன்) போட்டுர்ராய்ங்களா பகீருங்குது. அத்வானியோட மொத ரதயாத்திரையின் போது ஹின்டுவை கூட படிக்கவேண்டியதாயிருந்ததுன்னா பார்த்துக்கங்க. இதனால வீட்ல சின்ன உலகயுத்தமே நடக்கும்.

ஆனால் நம்ம பசங்க ஊஹூம்.. தெலுங்கு பேப்பர்ல தாய்குலத்துக்குன்னு ஒரு இணைப்பு வச்சிருப்பாய்ங்க. வாழைப்பழத்துல அழுகின பாகத்தை கிள்ளிபோடறாப்ல அதை கழட்டி வீசினப்பறம் தான் நாம பேப்பரையே படிக்க ஆரம்பிப்போம்.ஆனால் அதை என்னமோ எஸ்.எஸ்.சி ரிசல்ட் வந்த பேப்பர் மாதிரி என் பொண்ணு வாரிக்கிட்டு போறதை பார்த்தா பகீருங்குது.

நம்ம வாய் சாலத்து மேல நம்பிக்கைய வச்சு ஒரு மேட்டரை சொல்லலாம்னுதேன் இந்தபதிவை ஆரம்பிச்சோம். ரெம்ப சாதாரணமான சம்பவங்கதேன்.ஆனால் இந்த சம்பவங்களை இயற்கை கோர்க்கிற விதமிருக்கே ச்சொம்மா சொல்ல கூடாது நெசமாலுமே தூள் தான்.

நாம விளம்பரத்தையே உள்ளடக்கமா கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்தறது உங்களுக்கு ஞா இருக்கலாம். ஆரம்பத்துல டிடிபி,டிசைன்னு ரெம்பவே அல்லாட வேண்டியிருக்கும்.

இடையில மக டிசைன்ல விளையாட ஆரம்பிச்சபிறகு இம்சை குறைஞ்சது. ( நம்ம சுகுமார்ஜி அவளோட டிசைனை பார்த்துட்டு கண்ணு வலிக்குதுன்னுட்டாரு – அப்படி சொன்னதோட நிக்காம கலர் செலக்சனுக்கு ஒரு சூட்சுமத்தையும் சொல்லிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கிட்டாரு.) இப்பம் தீபாவளி ஸ்பெஷல் டிசைன் பண்ணிக்கிட்டிருக்கம்.

நாம வாழறது தெலுங்கு தேசத்துலயாச்சே அதனால என்னதான் வெறுமனே விளம்பரம்னாலும் சுந்தரதெலுங்குலயும் மேட்டர் வரும். வந்தே தீரும். இந்தபிரச்சினைய ராம்பாபு சாஃப்ட்வேரை வச்சு சமாளிச்சிட்டிருந்தோம். சிஸ்டத்தை ஃபார்மட் அடிக்கிறப்ப பேக் அப் எடுக்காம கோட்டை விட்டாச்சு.

நெட்ல தேடு தேடுன்னு தேடறோம். ஒன்னும் பெயரலை. தேடலின் சமயம் மாலை 4.30 முதல் 7 வரை. பொஞ்சாதி டிவி ரிமோட்டை தேட நொந்து போயிட்டம். கொய்யால தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்ங்கறதெல்லாம் பீலாவா? எவனோ ஒருத்தனுக்கு அம்பதோ நூறோ கொடுத்து அடிச்சுவிடாம இந்த ஸ்ட்ரெய்ன் தேவையான்னு ஆயிருச்சு.

சில அட்வர்டைசர்ஸை சந்திக்கவேண்டியிருந்ததால தேடும் பணியே பணியா கொள்ளாம வெளிய புறப்பட்டாச்சு. ஒரு பார்ட்டி ஃபோட்டோ கொடுக்க அதை ஸ்கான் பண்ணியாகனும். வீட்ல மெகாசைஸ் ஸ்கானர் இருந்தாலும் அதை கனெக்ட் பண்ணா தாளி கீ போர்ட் வேலை செய்யாது அ மௌஸ் வேலை செய்யாது அ ரெண்டும் வேலை செய்யாது.

இந்த லொள்ளை தாங்கமுடியாமயே ஸ்கான் பதிவுக்கெல்லாம் லாங் லீவ் விட்டாச்சு.அதனால ஓரளவு பழக்கமான நெட் சென்டருக்கு போய் ஸ்கான் பண்ண சொன்னேன்.

கொக்குக்கு ஒன்னேமதிங்கற மாதிரி டொக்கா நெட் ஆசாமிய தெலுங்கு சாஃப்ட்வேர் பற்றி விஜாரிச்சேன். அவரு அங்குர் சாவ்ட் வேரை சிபாரிசு பண்ணதோட சி.டி.கொண்டாங்க லோட் பண்ணித்தரேன்னாப்ல.

ரூ.25000 ஐ ஒரே நாள்ள செலவழிச்ச ரிக்கார்டுக்கு சொந்தக்காரங்கற பயத்துல வெளியவர்ரச்ச ரூ30க்கு மேல கொண்டு வர்ரதில்லை. அந்த ரூ30 செலவழியற வரை வீடு திருமபறதில்லை. செலவழிஞ்சுட்டா வெளிய நிக்கறதில்லை.

பையில பார்த்தா சிடிக்கு தான் தேறும் போல.என்னதான் சாஃப்ட் வேர் ஓசின்னாலும் ரைட்டிங் சார்ஜாச்சும் தரனும்னு வீட்டுக்கு ஃபோன் அடிச்சு சில்லறை கொண்டுவரச்சொன்னேன். அம்பதா கொண்டுவந்தாய்ங்க.

சரி இருக்கட்டும்னு வச்சுக்கிட்டு நெட் ஆசாமிக்கு ரைட்டிங் சார்ஜு கொடுத்துட்டு ரூ40 ஐ பையில வச்சுக்கிட்டு பஜாருக்கு போனேன்.

ம்னசுல எல்லையில்லாத தகிரியம் தாளி எவனையும் போய் கெஞ்சத் தேவையில்லை. தன் கையே தனக்குதவின்னு அடிச்சு தூள் கிளப்பலாம்.( நம்முது சிம்மராசி -சனி ரெண்டுலருந்து மூணை பார்க்கிறாரு)

அங்கருந்து நேர சத்யாவோட நகைக் கடை. ச்சொம்மா இருந்தவனை தீபாவளி பூஜைக்கு ஆந்தை வாகனத்தோட லட்சுமி சிலை வச்சு செய்யுன்னு ஜும் ஏத்தி விட்டாச்சு. ஆனா ஆர்டர் கொடுக்கிற சமயம் இன்னொரு ஆசாமி சத்யாவுக்கு டபுள் டோஸா வினோலாக்ஸ் கொடுக்க ஆந்தை வாகனம் கான்சல். ஆனாலும் சிலை ஓகே.

அன்னைக்கப்பாறம் சத்யாவுக்கு கான்டாக்டல போகலை. இந்த கேப்ல சென்னை போய் பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சு வந்திருக்காரு போல. நம்மை பார்த்ததும் கண்ணனை பார்த்த ராதை கணக்கா வா வா ..னுட்டு கடைய விட்டு இறங்கி வண்டியேறிட்டாப்ல ( அவரோட வண்டிதான்)

ஷகரான கடை பூஜை முடிக்க பகல் 12 ஆகும் (இடையிடையில வியாபாரம்) டிஃபன் 2 மணிக்கு சோறு நாலு மணிக்கு ராத்திரி சோறு பன்னெண்டு மணிக்குத்தேன்.

வண்டி நேர புக்ஸ்டோர் போயிருச்சு. அங்கன பூஜைக்கான இன்விட்டேஷனை போட பந்தா கவர் (டிசைன்+ப்ரிண்டிங் நம்ம மகதேன்) , ரெண்டு மார்க்கர்லாம் வாங்கியாச்சு. பையில கைய விடறாரு காசை காணோம் . கொஞ்ச நா இடைவெளிக்கப்பாறம் நம்மை பார்த்த உணர்ச்சி வேகத்துல கல்லாவுல இருந்து காசை எடுக்காமயே கிளம்பிட்டாப்ல.

சித்தூரு ஊரு சின்னதா இருந்தப்ப வேற கதை. ஒவ்வொரு கடைகாரருக்கும் தன்னோட ஒவ்வொரு கிராக்கியோடவும் பர்சனல் டச் இருக்கும். இப்பம் எவன் முகத்தை பார்க்கிறான்? அந்த நிமிசத்துல சத்யாவோட மன நிலைய வர்ணிக்கனும்னா தனிப்பதிவே போடனும். தீபாவளி பர்ச்சேஸ் மட்டும் ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு செய்துட்டு வந்திருக்கிற பார்ட்டி. என்னமா ஃபீல் பண்ணியிருப்பாருன்னு நினைச்சுப்பாருங்க.

பில்லு எவ்ளோங்கறிங்க? கரீட்டா நாப்பது ரூவா. நாம படக்குனு எடுத்து நீட்ட சத்யாவுக்கு ஒரே ஆச்சரியம் . ( இவன் முப்பதுக்கு மேல வச்சிருக்க
மாட்டானே..அதுலயும் நேரம் இப்ப ராத்திரி எட்டாகுதே)

ராத்திரி எட்டுங்கறது சத்யாவோட டீ டைம். கடைலருந்து “டுப்கி”அடிச்சாவது டீ குடிக்கிற கிராக்கி.ஆனால் அவர் கையிலயும் கால் காசில்லை. நம்ம கையிலயும் காசில்லை.

புஸ்தவ கடைக்கும் – சத்யா கடைக்கும் மிஞ்சிப்போனா 100 அடி தூரமிருக்கலாம் அவ்ளதான்.ஆனால் கையறு நிலை.

சத்யாவுது மீனராசி.சனி எட்டை பார்க்கிறாரு. ரெண்டு மூனு வாரத்துக்கு மிந்திதான் 407 வேன் காரன் ரைட்ல பூந்து வண்டியோட டேஞ்சர் லைட்ஸ் காலி, நெம்பர் ப்ளேட் வளைஞ்சு போச்சு. இப்பம் இந்த மாதிரி.

இப்பம் சொல்லுங்க .ஜோதிடம் மூட நம்பிக்கையா?

Advertisements

3 thoughts on “ஒரு அனுபவம் -சில பாடங்கள்

  Sankar G said:
  October 25, 2011 at 7:24 am

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

  yoghi said:
  October 25, 2011 at 11:04 am
  sugumarje said:
  October 25, 2011 at 7:45 pm

  மிகச் சொற்பமாக எனக்கும் நிகழும்…
  //ஜோதிடம் மூட நம்பிக்கையா?//
  இங்கே வருகிற அன்பர்கள் கேட்கிற, பதில் சொல்லுகிற கேள்வி இல்லை இது 🙂
  தீபாவளி வாழ்த்துகள்
  எல்லோருக்கும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s