சனிப்பெயர்ச்சி பலன் ( 2011 -2013)

Posted on

அண்ணே வணக்கம்ணே!
நீங்க இந்த வலைப்பூ/வலைதளத்துக்கு புதுசு – வெறுமனே இன்னொரு ராசிபலனின்னுட்டு நீங்க வந்திருந்தாலும் நோ ப்ராப்ளம் உங்க ராசிய தேடி மேய்ஞ்சுட்டு போயிரலாம். மற்றபடி பழைய பறவை போல வந்த ” நம்மாளுங்க ” ளுகளுக்கு ஒரு விருந்தே காத்திருக்கு. பன்னெண்டு ராசிகளுக்கான பலனை அடுத்து சனியோட ஜாதகத்தையே தந்திருக்கம்ல.. உடுங்க ஜூட்.

1.மேஷ ராசி:

இவிகளுக்கு சனி 10,11 க்கு அதிபதி. இவர் 7 ல நின்னது பொதுவிதிப்படி நாட் ஓகேன்னாலும் சிறப்புவிதிகளின் படி சில நல்ல பலன்களை பெறமுடியும். செய் தொழிலில் ஒரு பார்ட்னர் அமைய வாய்ப்பிருக்கு. அவரு கருப்பா பயங்கரமா அ பயங்கர கருப்பா இருக்கலாம். ஒரு தலித்தா கூட இருக்கலாம்.

கண்ணாலமாகாத பார்ட்டிங்க தங்கள் தகுதிக்கு பல படி தாழ்ந்த பெண் மீது காதல் கொள்ளலாம். வெகு சிலர் வேலைக்காரி மேட்டர்ல ஜொள்ளு விட்டு ஜோட்டடி வாங்கலாம். அல்லது அப்படி ஒரு அபவாதம் வரலாம். டேக் கேர்.

மூத்த சகோதரர்/ரி வகையில தாமதமாகவேனும் உதவிகள் கிடைக்கலாம். என்ன ஒரு லொள்ளளுன்னா 7 ல உள்ள சனி ஜன்மத்தை பார்க்கிறதால கால், நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகளும் வரலாம்.

குறிப்பு: லக்னாதிபதியான செவ் வக்ரம் பெறுவதால் 2012 ,ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை கொஞ்சம் கேர் ஃபுல்லா இருக்கனும்.

2.ரிசப ராசி:

இவிகளுக்கு 9 ,10 க்கு அதிபதியான சனி 6 ல நின்னது பொதுவிதிப்படி ஓகோ. ஆனால் சிறப்பு விதிப்படி பார்த்தா அஞ்சுல சனி இருக்கிறச்ச எதிர்கொண்ட அவமானங்கள், புத்ரஹானி, புத்தி ஹீனம்லாம் இவிகளை இப்பம் சாடிஸ்டிக்கா மாத்திரும். இந்த ரெண்டரை வருசம் சனங்களை டார்ச்சர் பண்றதே வேலையா ஆயிரலாம். அப்பா நோய் வாய் படலாம் அவரோட விரோதம் வரலாம். சொத்து தகராறு,சேமிப்பு ,முதலீடுல தக்ராறு,தூர தேச தொடர்புகளில் மனகிலேசம் ஏற்படலாம். செய்தொழிலில் கடன் வாங்க வேண்டி வரலாம்.போட்டி சாஸ்தியாயிரும். ஒரு சிலருக்கு தொழில் தொடர்பான வியாதி கூட வரலாம்.

3.மிதுன ராசி:

இவிகளுக்கு 8 , 9 க்கு அதிபதியான சனி 5 ல வர்ரது பொதுவிதிப்படி ரெம்ப கெட்டது. அவமானங்கள், புத்ரஹானி, புத்தி ஹீனம்னு ஃபேஸ் பண்ணவேண்டி வரும். சிலருக்கு தற்கொலை எண்ணமே கூட வரலாம். செத்துப்போனவன்லாம் கனவுல வருவான்.

ஆனால் ஒரு கட்டத்துல அதிர்ஷ்ட வசமா குறைஞ்ச விலைக்கு ஒரு சொத்து அமையலாம். அப்பா,சேமிப்பு ,முதலீடு ,தூர தேச தொடர்பு/பயணத்தில் இருந்த தங்கு தடை திடீர்னு விலகிரும்.

4.கடக ராசி:
இவிகளை பொருத்தவரை சனி 7 ,8 க்கு அதிபதி. இவரு 4 ல வர்ரது பொதுவிதிப்படி நல்லதில்லை. இதனால தாய்க்கு கால் , நரம்பு ,ஆசனம் தொடர்பான உடல் நல பாதிப்பு/பிரிவு , வீடு மாற்றம், வாகன வகையில் நட்டம், மாணவர்களுக்கு கல்வியில் பின்னடைவு, உத்யோகஸ்தர்களுக்கு சீட் சேஞ்ச், ட்ரான்ஸ்ஃபர் இத்யாதி நடக்கலாம்.

ஆனா திருமணமாகாதவர்களுக்கு தாய்வழி உறவுல பொருளாதார ரீதியா பிற்பட்ட குடும்பத்து பெண் மனைவியாகவும் வாய்ப்பிருக்கு.

5.சிம்ம ராசி:
இவிகளுக்கு சனி 6,7க்கான அதிபதி. இவர் 3 ஆமிடத்துக்கு வர்ரது பொதுவிதிப்படி நல்லதுதேன். இதனால் மனோ தைரியம் கூடனும். பிரயாணங்களால்,சகோதரவர்கத்தால் அனுகூலம் ஏற்படனும். அதே நேரம் மனைவியை காட்டும் ஏழாமிடத்து அதிபதியாக இவர் 3 ஆம் பாவத்துக்கு வர்ரதால மனைவிக்கு அல்லல் அலைச்சல் அவிகளுக்கும் உங்களுக்கும் இடையில் உரசல் ஏற்படலாம்.

சகோதரம் நோய் வாய்ப்படுதல் அ அவிகளோட முட்டல் மோதல் ஏற்படலாம்.கடன் வாங்கி பயணம் செய்யவேண்டியும் வரலாம். சவுண்ட் பாக்ஸ்ல பிரச்சினை வரலாம்.

6. கன்னி ராசி:
இவிகளுக்கு சனி 5 ,6 க்கு அதிபதி . இவர் ரெண்டாமிடத்துக்கு வர்ரது பொதுவிதிப்படி நல்லதில்லை. ஆனால் 5 – 2 பாவங்களுக்கிடையில் தொடர்பு திடீர் தனயோகத்தையும் தரலாம். அதே போல 6 -2 பாவங்களுக்கிடையில் தொடர்பு திடீர் தன நஷ்டத்தையும் தரலாம். மேலும் இது உச்ச சனி என்பதால் லாப நஷ்டம் ரெண்டுமே ஹை பட்ஜெட்ல நடக்குமுங்கோ. வாய் பேச்சால விரோதம் வரலாம் (காரியமும் நடக்கலாம்) குடும்பத்துல மெம்பர்ஸ் சாஸ்தியாகலாம் ,

பழைய சோறு/ஆறின சோறு சாப்பிடவேண்டி வரலாம்.( சில காலம்தேன்) சிலருக்கு நரம்பு தொடர்பான கண் நோய் வரலாம்.

7.துலா ராசி:

இவிகளுக்கு சனி 4 ,5 க்கு அதிபதி .இவர் ஜன்மத்துக்கு வர்ரது பொதுவிதிப்படி நல்லதில்லை. இதனால கண்ணாலமாகாத பார்ட்டிங்க தங்கள் தகுதிக்கு பல படி தாழ்ந்த பெண் மீது காதல் கொள்ளலாம். வெகு சிலர் வேலைக்காரி மேட்டர்ல சில்மிஷம் பண்ணி சீப்பட வாய்ப்பிருக்கு. அல்லது அப்படி ஒரு அபவாதம் வரலாம். டேக் கேர்.

ஆனால் கொஞ்சம் உன்னிப்பா பார்த்தா வாரிசுகள், தாய்,வீடு,வாகனம்,கல்வி ஆகியவற்றில் சிரத்தை கூடலாம்/கவனம் தேவைப்படலாம். சிரத்தை -கவனத்துக்கு ஏற்ற பிரதிபலனும் கிடைக்கலாம். எதிர்காலம் குறித்த கவலை உங்களை சரியான ரூட்டுக்கு திருப்பலாம். இப்பம் நீங்க எடுக்கிற முடிவு உழைப்புக்கு அஞ்சாததா இருக்கலாம்.

8.விருச்சிக ராசி:

இவிகளுக்கு சனி 3 ,4 க்கு அதிபதி. இவர் 12க்கு வர்ரது ( ஏழரை ஆரம்பம்) பொது விதிப்படி நல்லதில்லை. ஆனால் சகோதரர்கள்,பயணங்கள், தாய் ,வீடு,வாகனம், கல்வி வகையில் வரும் செலவுகளுக்கு அஞ்சாது செய்துகிட்டு வந்தா தப்பிச்சுரலாம். அந்த செலவு தண்டச்செலவாயிராம பார்த்துக்கங்க.

சுப செலவுகள் தாமதமாகலாம், தூக்கக்குறைவு ,தாம்பத்யத்தில் ஈடு பாடு குறையலாம். இரும்பு பொருள் ஏதாவது தொலைந்து போகலாம், கெட்டுப்போகலாம்.

குறிப்பு: லக்னாதிபதியான செவ் வக்ரம் பெறுவதால் 2012 ,ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை கொஞ்சம் கேர் ஃபுல்லா இருக்கனும்.

9.தனுசு ராசி:

இவிகளுக்கு சனி 2, 3 க்கு அதிபதி. இவர் 11 க்கு வர்ரது பொது விதி/சிறப்பு விதி ரெண்டு விதிப்படியும் நல்லதுதேன். டபுள் தமாக்கான்னா இதான்னு விசில் அடிக்காதிங்க – இன்னொரு கோணத்துல பார்த்தா உங்க லக்னாதிபதியான குருவுக்கும் சனிக்கும் பகை இருக்கிறதால சனி கொடுக்கிற பலன் எல்லாம் “ஒரு மாதிரியா” இருக்கும்.

ஐ மீன் தாமதமா கிடைக்கும் -அது ஏலத்துல வர்ர சொத்தாவோ – சோற்றுக்கில்லாத நிலையில் விற்கப்படும் சொத்தாவோ -கொலை /தற்கொலை நடந்த சொத்தாவோ -லாக் அவுட்ல இருந்த தொழிற்சாலையாவோ இருக்கலாம்.

குறிப்பு:

லக்னாதிபதியான குரு டிசம்பர் 25 வரை வக்ரமா இருக்கிறதால அதுவரை கண்ணாலம் கட்டியும் பிரம்மச்சாரி கதைதேன்.

10.மகர ராசி:

இவிகளுக்கு சனி 1 ,2 பாவங்களுக்கு அதிபதி. இவரு 10 ல் வர்ரது சிறப்போ சிறப்பு. பொதுவிதி,சிறப்பு விதிப்படி பார்த்தாலும் , சனி லக்னாதிபதிங்கறதாலயும் தொட்டுக்காட்ட ஒரு குறையும் இல்லாத நன்மைகள் ஏற்படும்.
கொஞ்சம் போல உடல் உழைப்பு தேவைப்படலாம், சுத்தம் பத்தம் பார்க்கமுடியாது. (கர்மயோகியான உங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா?)

மிதபாஷியான நீங்க பேச்சுக்கு முக்கியத்வமுள்ள துறை/செக்சன்லயும் கலக்குவிங்கன்னா பார்த்துக்கங்களேன். ஆனால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுக்கல் வாங்கல்ல மட்டும் இறங்காதிங்ணா.
மீறி இறங்கினா பாடி ட்ரபுள் கொடுக்க ஆரம்பிச்சிரும். குடும்பத்தை பிரிஞ்சிருந்தவுக ஒன்னு சேருவிங்க.

11.கும்ப ராசி:

இவிகளுக்கு சனி 1 , 12 பாவங்களுக்கு அதிபதி. இவர் 9 ல வர்ரது 50:50 ரேஞ்சுல நன்மை தீமைகளை கலந்து தரக்கூடிய அமைப்பு. லக்னாதிபதியா இவர் 9 ல வர்ரது நல்லதுதேன். இதனால அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனிங்கற மாதிரி “லாக்” ஆகியிருந்த நிலை மாறி மேற்கு திசை நோக்கி இடம் மாற வாய்ப்பிருக்கு. சொத்து,முதலீடு,சேமிப்புன்னு மனசு டைவர்ட் ஆகும்.

அதே நேரம் இவருக்கு விரயாதிபத்யமும் இருக்கிறதால ஆரம்பத்துல அப்பா,அப்பாவழி உறவு,சொத்து,
சேமிப்பு,முதலீடு வகைகளில் வீண் விரயம் /தாமதம் அலைக்கழிக்கும். தீமைகள் சனி துலாத்தில் தங்கும் ரெண்டரை வருட காலத்தில் முதல் ஒன்னேகால் வருசத்துலயும் – நன்மைகள் அடுத்த ஒன்னேகால் வருசத்துலயும் நடக்கலாம்.

12.மீனராசி:

இவிகளுக்கு சனி 12 , 11 பாவங்களுக்கு அதிபதி. இவர் எட்டுல வர்ரது பொதுவிதிப்படி ரெம்ப ரெம்ப கெட்டது. இதற்கான பலனை சுருக்கமா சொன்னா இவிக சொத்தை அடுத்தவன் அனுபவிக்க , அடுத்தவன் கடனுக்கு இவிக பதில் சொல்லவேண்டி வந்துரும். போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட் ,சுடுகாடுல்லாம் கூட பார்க்கவேண்டி வரலாம். ஹனுமான் டாலர் அணியவும். ( டி.வியி வரும் விளம்பர டாலர் அல்ல. கடைகளில் விற்கும் சாதாரண டாலர்) நிரந்தரமாக ராம நாமம் ஜெபிக்கவும். ராம நாமம் ஒலிக்குமிடத்தில் அனுமனுடைய சான்னித்தியம் ஏற்படும். பிராணபயம் உள்ளவர்களுக்கு/ அஷ்டம சனி பாதிப்பில் உள்ளவர்களுக்கு அபயம் தர வல்லவர் ஹனுமான் ஒருத்தருதேன்.

லாபாதிபதியாக இவர் எட்டில் மறைவது லாப நோக்குடன் செய்யும் வேலைகளில் சிக்கலை தரலாம். அதே நேரத்துல இவருக்கு விரயாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகமும் ஏற்படலாம். தீமைகள் சனி துலாத்தில் தங்கும் ரெண்டரை வருட காலத்தில் முதல் ஒன்னேகால் வருசத்துலயும் – நன்மைகள் அடுத்த ஒன்னேகால் வருசத்துலயும் நடக்கலாம்.

சனி பெயர்ச்சி என்றாலே நம்மவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுவது சகஜம். அதிலும் நம் ஜோதிடதிலகங்கள் ( ஹி ஹி.. நாம உட்பட) பேதிக்கு கொடுத்து ஒரு வழி பண்ணிவிடுகிறார்கள்.

சனிப்பெயர்ச்சி என்றால் சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதாகும். சனிப்பெயர்ச்சி 2012 னு தலைப்பை கொடுத்திருந்தாலும் திருக்கணித பஞ்சாங்கப்படி 2011, நவம்பர் 17 ஆம் தேதியே சனி கன்னியிலருந்து துலாமுக்கு மாறிர்ராரு.

ராசிச்சக்கரத்துல துலாம் 7 ஆவது ராசி. இதனால உலக மக்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்,லவர்ஸ்,பார்ட்னர்ஸ்,
மனைவி(கள்) தொடர்பான பிரச்சினையே அதிகமா இருக்கும். துலாமுக்கு அதிபதி சுக்கிரன். இதனால் பெண்களுக்கு பிரச்சினை அதிகரிக்கும்.( வரதட்சிணை கொடுமை சட்டத்தை வாபஸ் வாங்கிருவாய்ங்களோ?) ஆண் பெண்களுக்கு கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். ( இம்பொட்டன்ஸி?)

சுக்கிர காரகம் கொண்ட தொழில்கள் எல்லாம் பாதிக்கப்படும். உ.ம் ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ், பூக்கள் ,கனிகளை பயிர் செய்வோர் நஷ்டமடையலாம். ஹோட்டல் தொழில் பாதிக்கும்.கள்ள உறவுகள் ,கலப்பு மணங்கள் அதிகரிக்கும். தொழிலாளர் வர்கத்தின் கை ஓங்கும். இப்படி இன்னும் பல விஷயங்களை சொல்லலாம்.

சனி அவரவர் ராசிக்கு 3,6,10,11 ராசிகளில் இருந்தால் நன்மையை தருவார் என்பது பொதுவிதி.தற்போது சனி வந்து அமர உள்ள துலாம் சிம்மத்துக்கு 3 ஆமிடம் , ரிஷபத்துக்கு 6 ஆமிடம்,ம்கரத்துக்கு 10 ஆமிடம், தனுசுக்கு 11 ஆமிடம்.

ஆக துலா சனி மேற்படி 4 ராசியினருக்கு நன்மை தரும் நிலயில் உள்ளார். மற்ற ராசியினருக்கு தீமை செய்யு நிலையில் உள்ளார் என்று கொள்கை அளவில்(?) கூறலாம்.

ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது இது மிக மிக தவறானதாகும்.பொது விதி எனும்போதே சிறப்பு விதியும் இருப்பதாகத்தான் பொருள்.சிறப்பு விதியின் படி பார்க்கும் போது பலன் தலை கீழாய் மாறவும் வாய்ப்புள்ளது.

சனிப் பெயர்ச்சி பலன்கள் என்றதுமே ஒவ்வொரு ராசிக்கும் தனி தனியாக பலன் எழுதிவிடுவது தான் வழக்கமாக உள்ளது. அப்படி எழுதும்போது ஒவ்வொரு வாசகரும் 12 ல் ஒரு பாகத்தை மற்றுமே படிக்கிறார். மற்ற 11 பாகங்களை அலட்சியப்படுத்திவிடுகிறார்.

ஆகவே அனைவரும் சனி குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொதுவில் சொல்லி விட்டு பிறகு வேண்டுமானால் ராசி வாரியாக பலன்களைப் பார்ப்போம்.

நம் நாட்டில் நிமிடத்துக்கு 4 குழந்தைகள் பிறக்கின்றனர். சுமார் 120 நிமிடங்களுக்கு அதாவது 2 மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். அதாவது ஒரே ஜாதகம். அதாவது பெரியார் பிறந்த அதே ஜாதகத்தில் பிறந்த 120 x 4 = 480 மைனஸ் 1 குழந்தைகள் என்னாச்சு ?

ஒரே ஒருபெரியார் தான் பஞ்சக்கச்சங்களை எதிர்த்து ஏறக்குறைய செஞ்சுரி அடிக்க முடிகிறது. ( நானும் அப்படித்தான் பெரியார் என்ற நினைப்பில் என் தெலுங்கு வலை தளத்தில் ஐயர்களுடன் மோதி ஆப்பு வைத்துக்கொண்டேன். ஒரு கட்டத்தில் அங்கன இருந்த ஒரே திரட்டியிலும் என் வலைப்பூ தடை செய்யப்பட்டுவிட்டதென்றால் பாருங்களேன்)

ஜாதகமே ஒன்று என்றாலும் – கிரக ஸ்திதிகள் ஒன்றே என்றாலும் இயற்கை மனித யத்தனத்துக்கும் வாய்ப்பு வைத்து தான் செயல்படுகிறது. இந்த அழகில் இரண்டே கால் நாட்களுக்கு ஒரே ராசி தான் எனும்போது , ஒவ்வொரு ராசியிலும் எத்தனை கோடி பேரை அடைக்கிறார்கள் பாருங்கள். ( நாம கணக்குல வீக்கு ஆருனா கணக்கு போட்டு சொல்லுங்கப்பு)

இதுவே முடிவான உண்மை என்றால் இந்திய மக்களின் வாழ்வுக‌ள் 12 விதமாகத்தானே இருக்க முடியும். உண்மை நிலை அப்படியா இருக்கு? நோ ! ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு விதம்.

ஜாதகம் என்பது வாகனம் மாதிரி. ஜாதகப்படி நடக்கும் தசாபுக்திகள் ரோடு மாதிரி , இவர்கள் கூறும் சனி/குரு/ராகு/கேது பெயர்ச்சி எல்லாம் அவ்வப்போது ட்ராஃபிக்கில் ஏற்படும் சிறுமாற்றங்கள் போன்றது. (முதல்வர் வரும்போது ட்ராஃபிக்கை நிறுத்தலியா அது மாதிரி. )

சரி நான் எதற்கு குறுக்கே . 12 ராசிக்காரவுகளும் தெரிஞ்சுக்க வேண்டிய சமாசாரங்களை சனி பகவானையே உங்களுடன் பேசச்சொல்லி விடுகிறேனே.

உங்கள் ஜாதகமே இல்லாமல், பிறப்பு விவரங்களும் இல்லாமல் உங்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் உள்ளாரா இல்லையா என்று தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நிலையில் இலை என்றால் குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை செய்துகொள்ளுங்கள்

ஹலோ சனி ஸ்பீக்கிங்:

செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன்.

கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள்.

சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4 x ரெண்டரை வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன்.

இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன்.

நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன்.

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ் போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? ‘ஆம்’ என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? ‘ஆம்’ என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

பரிகாரங்கள்

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது

ஓகே முன்னுரையே பதிவு அளவுக்கு போயிருச்சு. இப்பம் உங்க ராசிக்கு துலா சனி என்னமாதிரியான பலனை தருவாருன்னு பார்த்துருவம்.

( இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமா பிரதிகூலமான்னு மொத்தமா படிச்சுட்டு கடேசியில முடிவு பண்ணுங்க)

சனி அனுகூலமானால்:
நீங்கள் சுதந்திரர் – அடிமைத்தொழிலில் இருந்தாலும் உங்களை கண்டுக்கற நாயே இருக்காது. மலச்சிக்கல் இருக்காது. நீங்க ஆரம்பிக்கிற வேலை ஒன்னு பத்தா டெவலப் ஆகும். ( நல்ல +கெட்டவேலைகள்) உ.ம் ஒரு கடன் வாங்கினா அது இன் டைம் பைசலாகும் பத்து கடன் வாங்குவிங்க. ஒரு பொய் கேஸு போட்டா பத்து கேஸு போடுவிங்க.

ஆப்போசிட் செக்ஸ் அட் ராக்ட் ஆகும் அவிக கோ ஆப்பரேஷன் கிடைக்கும். சிஸ்டர் டைம் என்னனு கேட்டதுக்கு ஈவ் டீசிங் கேஸெல்லாம் தரமாட்டாய்ங்க. அகால போஜனம்,அகால நித்திரை,முகத்துல எண்ணெய் வழியறது, முடி உதிர்ரது மாதிரி லொள்ளெல்லாம் இருக்காது. என்றும் 16 கணக்கா வலம் வருவிக. நிமிர்ந்த நடை பழகும். நீங்க சம்பளமே தரலின்னாலும் தொழிலாளர்கள் கோ ஆப்பரேட் பண்ணுவாய்ங்க.

சனி பிரதிகூலமானால்:

சொந்த தொழிலிலே இருந்தாலும் கண்ட நாய்க்கு பயந்து நடக்கவேண்டியதாயிரும். வேலைகாரவுகளே ஆப்புவச்சிருவாய்ங்க. துவங்கின வேலை ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு நின்னுரும். ஆப்போசிட் செக்ஸால லோள்ஸ். அகால போஜனம் -அகால நித்திரை -பகல் கொட்டாவில்லாம் உண்டு.குடல் கல் குடலாயிரும். முகத்துல எண்ணெய் வழியும் முடி உதிரும் .சின்னவயசா இருந்தாலும் வெள்ளை முடி வரும். முகத்துல கிழட்டுத்தனம் வந்துரும். கூன் போட ஆரம்பிச்சிருவிக.

Advertisements

6 thoughts on “சனிப்பெயர்ச்சி பலன் ( 2011 -2013)

  டவுசர் பாண்டி said:
  October 24, 2011 at 2:39 am

  அடடே, நல்ல நல்ல பதிவுங்கள சுடச்சுட படிக்க முடிலயே. எலக்சன் வந்துட்டாலே லோக்கல் சொசியக்காரங்கள்ளருந்து இன்டர்நசனல் ப்ராடுங்க (எண்ணிய சொன்னேன்) வர ஒரே பிசிதேன். நம்ம வார்டுல கவுன்சிலரா நிக்கிற தம்பி எண்ணிய நம்மூரு மேயருகிட்ட அறிமுக படுத்தி வெச்சது. மேயருகிட்ட பேசிக்கிட்டு இருக்கச்ச நம்ம ஏரியா வார்டுல நிக்கிற தம்பி நானு சோசியம் பாக்குறத பத்தி லேசா பத்த வச்சிட்டு (இன்னாங்கடா இது டவுசருக்கு மேயரு டீளிங்க்லாம் இருக்குன்னு நெனச்சிப்புடாதீங்க. எலக்சன் நேரத்துல மட்டும் அவுனுங்க நமக்கு கழுவ கூட (கால சொன்னேங்க்னா) ரெடியாருப்பானுங்க. வெறும் டேட் ஆப் பெர்த்த குடுத்துக்கிட்டு நமக்கு நேரம் எப்டி இருக்குன்னு கேட்டாரு. அந்த நேரத்துல பஞ்சாங்கம் வேற கைல இல்ல. நமக்குத்தேன் சோசியத்துல நெறைய செப்படி வித்த தெரியும்லே. அவசரத்துக்கு அந்த நேரத்துல யூஸ் பண்ணேன். அதுபோவ நமக்கு எலய தளமொரைங்க சாதகத்த ஆயரத்தி தொள்ளாயிரத்தி எழுவத்தி ஆருலருந்து தொன்னித்தி மூணு வர அலசுனதால கெரக நெலைங்க லேசா கண்ணு முன்னாடி வந்துச்சி. நாடி சொசியத்த யூஸ் பண்ணி பாத்தன். வெள்ளிக் கெளம கவுண்டிங்க்னு சொன்னாரு. பிரசன்னம் போடலாம்னா எபிமெரிஸ் ப்ளஸ் டேபிள்ஸ் கைல கெடையாது. வாயக்குடுத்து புண்ணாக்க விரும்பாம நாடி சொசியத்துலையே அந்த ச்பாட்டுலையே அலசி பாத்தன். அந்த தம்பிதேன் செயிக்கும்க்ற மாறி லேசா ஒரு மெஸ்சேஜ் (டெக்ஸ்ட் மெஸ்சேஜ் இல்லீங்க்ணா) கெடச்சிச்சி. தனம் (அந்த தம்பியோட பேருங்க்னா) நீதாண்டா நிச்சயம் ஜெயிப்பன்னு ஒரே போடா போட்டுட்டு அவன தெம்பாக்கிட்டு ஆள உடுங்கடா சாமின்னு பின்னங்கால் பெடரில அடிக்க ஒரே ஓட்டம். ஊட்டுல வந்துதேன் மூச்சு வந்தது. நாம பாட்டுக்கு வாக்கு குடுத்துட்டு வந்துட்டம். ரிசல்ட்டு எதாச்சும் ஒன்னுக்கெடக்க ஒன்னு ஆச்சுன்னா அப்பறம் தம்பி நம்ம மூஞ்சில முளிக்காது. அதுபோவ அந்த தம்பி ஒருவளில நமக்கு சொந்தம்வேற. பஞ்சாங்கத்த பொரட்டி பாத்தன். கவுண்டிங் அன்னிக்குள்ள கோச்சாரத்த நோட் பண்ணேன். பிரசன்னத்த போட்டுப்பத்தன். அப்புறந்தேன் நிம்மதியே வந்திச்சி. இத்தினிக்கும் அந்த தம்பிய எய்த்து நிக்கிறது ஒரு பெரிய செல்வாக்குள பார்ட்டிங்குறது வேற விஷயம். பொதங் கெழமை வந்தது. கரீட்டா மதியம் ஒன்நேகாளுக்கு நம்மள தேடி வந்தது. அண்ணே ஜெயிச்சிட்டம்நேன்னு சொல்லி மக்ரூனு பொட்டியோட கண்ணுல ஆனந்த கண்ணீரோட வந்திச்சி. பொறவு ஒரு கவர்ல மஞ்ச கலர் ரூவா நோட்டுங்கள வச்சி, இத வச்சிக்கங்கனேன்னு வற்புறுத்த நமக்கு அந்த நேரத்துல கொள்க இடிச்சது. சும்மா குடுத்தாக்கூட அவன் நீட்டுரதுக்குள்ள அப்பிருவம். ஆனா சோசியம் சொன்னதுக்கான்டின்னு சொன்ன ஒடனே (மனச கல்லாக்கிட்டு) அதெல்லாம் வாணாம்பா. இருக்கட்டும்னு சொல்லி அந்த தம்பியவும் அவனோட கூட்டாளியவும் ஒருவழியா அனிப்பி வச்சேன். பொறவு அந்த தம்பி மத்தியானம் சின்ன ட்ரீட்டு குடுத்து நன்றிய தெரிவிச்சது.

  எதுக்காண்டி இந்த பெரும அடிக்கிறேன்னா பாரம்பரியத்த ஒருபக்கம் கிழிச்சிக்கிட்டு கெடந்தாலும் அந்த பாரம்பரிய சொசியந்தேன் அவசரத்துக்கு கைக்குடுக்கு. ஆனாலும் கலைஞா தாத்தா மாறி வேஷம் போடுற கொணம் மட்டும் நம்மகிட்ட போமாட்டுக்கு. அடுத்தாப்புல எலக்சன் ரிசல்ட்ட எப்புடி பிரசன்னத்துல பாக்குறதுன்னு ஒரு கை பாத்துருவம். அப்புறம் நீங்களும் சோலோவா கலக்குங்க.

  டவுசர் பாண்டி said:
  October 24, 2011 at 3:04 am

  இந்த மாறி தேர்தல் சம்மந்தமா அனலைஸ் பண்ணச்ச கொறஞ்ச பட்சம் சாதகம் இருந்தா நல்லதுதேன். ஆனா அரசியல் வாதிங்க எங்கன நெசமான சாதகத்த குடுக்குறாய்ங்க. ஒன்னு ரெண்டுவேற தவுர மத்தவுக அல்லாருமே எம்ஜார் கொள்கைய விரும்புறாய்ங்க. நெலமா இப்டி இருக்கச்ச நாம மண்டைய ஒடச்சி கணக்கு போட்டு வெடைய போட்டு ஓடைக்கச்ச, எலக்சன் ரிசல்ட்டு நம்மள பாத்து பல்லக்காட்டிருது. அதுக்குத்தேன் இருக்கவே இருக்கு பிரசன்னம். இந்த தேர்தல் சம்மந்தமா அனலைஸ் பண்ணச்ச ஒன்னு ஆறு நாலு பைனொன்னு பாவங்களோட சப்லாடு ஒன்னு ரெண்டு மூணு ஆறு பத்து பைனொன்னு பாவங்கள குரிக்காட்டனும். ஆமான்னா ஆமா இல்லேன்னா இல்ல. என்ன கொலப்புதா? வேணாம்னா அடுத்தாப்ல கட்டங்கட்டி வெளக்கிர்ரன். கணக்கு போட்டு தோத்தாலும் பரவால்லனே. ஆனா கணக்கு போடாம மட்டும் செயிச்சிராதீங்கனே.

  டவுசர் பாண்டி said:
  October 24, 2011 at 3:33 am

  கேபில முக்கியமானதே அயனாம்சந்தேன். அந்த அயனாம்சத்த கம்பீட்டர நோண்டிக்கிட்டு கெடக்காம நாமலே மேனுவலா போட்டுப்பழகிட்டா என்ன?

  அதானே?

  வாங்க இன்னிக்கி இந்த அயனாம்சத்த ஒரு கை பாத்துருவம்.

  அயனாம்சன்னாலே தளவளிம்பாய்ங்க. நம்பாதீங்க. அப்பம் கண்டு புடிச்சவங்கல்லாம் வானத்துலருந்தா வந்தாய்ங்க. ஓக்கே.

  நியூகோம்ப் அப்டின்ற சைண்டிஸ்ட் வந்து வர்சத்துக்கு பைவ் சீரோ புள்ளி டூ த்ரீ டபுள் எய்ட் போர் செவென் பைவ் செகண்டு (போன் நம்பர் மாறி ஞாவம் வெச்சதால அப்டியே வந்துட்டுங்க்னா) ரிவர்சுல நவண்ட பொறகே காலப்புர்சா லக்னமான மேஷம் ஆரம்பமாவுதுன்னு சொல்லி வெச்சிருக்காரு. துல்லியமா சாதகம் கணிக்கனும்னா இத ஆட்டத்துக்கு சேத்துக்கநும்னே. நம்ம பாரம்பரிய சோசியத்துல ஒன்லி முன்னூத்தி அறுவது டேஸ் ஆர் அலோடு. லீப்பு கீப்புகள கூட்டி கழிச்சி பாக்கும்போது முன்னூத்தி அருவத்தி அஞ்சி நாள்தேன் கரீட்டாருக்கும். சரிங்க்ணா. எந்த வர்சத்துக்கு அயனாம்சம் பாக்கனுமோ அந்த வர்சத்துலருந்து எரநூத்தி தொன்னித்திஒன்ன கலிங்க (ரிவர்சுல போவுதுல்லா அதுக்காண்டிதேன் இந்த கழித்தல்). வர்ற பேலன்ச மேல சொன்ன போன் நம்பரால பெருக்கி வந்த வெடய மூவாயரத்தி அரநூறால வகுத்து வந்த ஆன்சர நோட் பண்ணிக்கங்க. புல்லிக்கி முன்னாடி உள்ளத குரிச்சிக்காங்க. குரிச்சத மூவாயரத்தி அரநூறால பெருக்கி பாருங்க. …… ஆராச்சும் மேக்கொண்டு தெரிஞ்சிக்க விரும்புறீங்களா. டைப்படிச்சிக்கிட்டு இருக்கச்ச ஒரு யோசன வந்தது. நீ பாட்டுக்கு முக்கி முக்கி அடிக்க. ஆனா சனங்க ஆறும் படிக்கிற மாறி தெரிளிஎப்பா. சரிங்க்ணா. இதுக்கு மேல சொல்லனுமா. (யாராச்சும் வாசிக்கிரைங்கலான்னு தெரிஞ்சிக்கதேன் கேக்கன்)

  நானு போடுற கமெண்டுங்க பூரா கூகுள் காரன் டமில் மொழிபெயர்ப்பு சைட்டுல அடிச்சி பிடிச்சி சண்டை போட்டுத்தேன் இங்கன கொண்டாந்து ஏறக்குரன். நானு கோடின்னு டைப் பண்ணா கொடின்னு காட்டுது. பழையன்னு அடிச்சா பாளையன்னு காட்டுது. இப்பிடியே சொல்ல வந்த விஷியங்கள பாதி சண்ட போடுறதுலையே முடிஞ்சிருது. அதன் பாதி பாதிய முளின்கிகிட்டு கெடக்கன்.

  arul said:
  October 24, 2011 at 4:06 am

  nice post anna

  yoghi said:
  October 24, 2011 at 8:34 am

  நல்ல வேளை நம்முது தனுசு ராசி 2 1/2 வருசம் கவலை இல்லை
  டபுள் அடி அடிக்கவேன்டியதுதான்

  அதுக்கப்புரம் 7 1/2 சனிய சமாளிக்க நம்ப தல ஐடியா குடுக்கமாட்டாரா….

  Sudharsan said:
  October 24, 2011 at 9:01 pm

  Hello Murugesan sir,
  One important point about Saturn is,It can even change the actions decided by lagna lord and lord of fifth house.This point is neglected by many astrologers
  //கண்ணாலமாகாத பார்ட்டிங்க தங்கள் தகுதிக்கு பல படி தாழ்ந்த பெண் மீது காதல் கொள்ளலாம்//
  This is one of the notable points in your article.This point is also not explained by many astrologers.Keep it up.
  SABARIMALAI FASTING AND IYAPPAN DARSHAN IS BEST REMEDY FOR THE EFFECT OF SATURN.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s