பதிவர்கள் பார்வைக்கு (அவசரம்)

Posted on

அண்ணே!
இந்தியாவுல நேரிடை ஜன நாயகம் அமலாகி – பிரதமரை மக்களே நேரிடையா தேர்ந்தெடுக்கற காலம் வந்தா அந்த தேர்தல் தவிர எந்த தேர்தல்லயும் ஓட்டு கேட்க கூடாதுன்னு இருந்தேன்.

ஆனால் ஒரு நாதாரி ( பேரை சொல்லனுமா என்ன?) டஜன் கணக்கா மெயில் ஐடி வச்சுக்கிட்டு தமிழ்10 திரட்டியில நம்ம பதிவை Bury பண்ணிக்கிட்டிருக்கு.

இதனால நம்ம பதிவு உடனே தெரியாது. நேரம் பிடிக்கும்.அதனால கீழெ உள்ள வாக்களிப்பு பட்டையை க்ளிக் பண்ணி பதிவுக்கு ஓட்டு போடுங்கண்ணே..

இப்பம் பதிவு:
பதிவுலகமும் ஒரு உலகம்தான். வேணம்னா குட்டி உலகம்னு சொல்லிரலாம். ( என்னைப் போன்றவுக போடற கில்மா பதிவுகளை வச்சு ஆருனா “குட்டிகள்” உலகம்னு சொன்னா நம்பாதிங்க) பதிவர்களும் மன்சங்கதான்.

வெளியுலகத்துல எப்படி மன்சங்க உள்ளதையெல்லாம் மிஸ்யூஸ் பண்ணிட்டு பார்ட்னர்கள் மேல,அரசாங்கம் மேல, பக்கத்து வீட்டுக்காரன் மேல, ஜாதகம் மேல ,ஜோசியர்கள் மேல பழி போடறாய்ங்களோ அப்படியே பதிவர்களாகிய நாமும் இந்த உன்னதமான மீடியாவை மிஸ்யூஸ் பண்ணிக்கிட்டிருக்கமோன்னு என் மனசுல ஒரு சம்சயம் உருவாயிருச்சு.

என்னை பொருத்தவரைக்கும் ஹை டெசிபல்ஸ்ல இப்படி உரத்த சிந்தனை செய்ய ஒரு காரணம் இருக்கு. அது என்னன்னா என் வலை எழுத்துக்களால எனக்கு பைசா புரளுது. மத்தவுகளுக்கு எப்படியோ தெரியாது.
புரள்ற பைசாவை சின்னதா பீர் அடிக்கவோ , குட்டி போடவோ , பார்ட்டி கொடுக்கவோ உபயோகிக்கிற அளவுக்கு கேடு கெட்ட கேரக்டரா இல்லைன்னாலும் நானும் சராசரி மனிதனா ரோசிக்க ஆரம்பிச்சுட்டனோன்னு ஒரு ஃபீலிங் வந்துருச்சு.

நம்ம ஆப்பரேஷன் இந்தியா அமலுக்கு என்னென்னவோ செய்து போண்டியாகி தாளி பொளப்ப பார்க்கவேண்டியதுதாங்கற நிலைக்கு வந்துட்ட சமயம் வலையுலகம் அறிமுகமாச்சு. ஆரம்பத்துல இதையும் ஆ. இ திட்ட பிரச்சாரத்துக்கு யூஸ் பண்ண பார்த்து அதெல்லாம் வேலைக்காகாதுன்னு முடிவு பண்ணி ( ஹிட்ஸ் சதம் போடவே நான் ததிங்கணத்தோம் போடவேண்டியதாயிருச்சு)

ஹிட்டை கூட்ட சூப்பர் ஹிட் சப்ஜெக்டான ஜோதிடத்தை கில்மா கலந்து கொடுக்க ஆரம்பிச்சேன். பக்க வாத்தியமா சைக்காலஜி. கச்சேரி களை கட்டிருச்சு. நாலு பேரை படிக்க வச்சே ஆகனும்னு நாம பண்ண சர்க்கஸ் சனத்தை கவர பைசாவும் புரள ஆரம்பிச்சது.

2009 மே முதல் இந்த 2011 நவம்பர் வரை ஹிட்டை கூட்டவும் கட்டிக்காக்கவும் -ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பணிகளை செய்யவுமே ரவுண்ட் தி க்ளாக் வேலை செய்யற மாதிரி ஆயிருச்சு. ஆப்பரேஷன் இந்தியாவை பத்தி பேச்செடுத்தாலே மெஜாரிட்டி சனம் காணாம போயிர்ராய்ங்க. நமக்குள்ளயா குற்றமனப்பான்மை நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே போகுது.

இதுக்கெல்லாம் என்னதான் தீர்வுன்னு ரோசிச்சிட்டிருந்தப்ப பழைய பதிவு ஒன்னு கண்ல பட்டது.
( நம்முதுதேன்) ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாயிட்டா ஓவர் நைட்ல இல்லின்னாலும் சீக்கிரமே சால்வ் ஆயிர கூடிய பிரச்சினைகளை – சனத்தை உடனடியா பாதிக்க கூடிய பிரச்சினைகளை லிஸ்ட் அவுட் பண்ணி இந்த விஷயங்களை பத்தி பதிவு போடுங்கன்னு கெஞ்சியிருந்தேன்.

அன்றைய நிதி நிலைமைக்கு என் ப்ளாக்ல எழுதுங்க பதிவு பிடிச்சிருந்தா பரிசு ரூ.100 ன்னு ஆசை கூடகாட்டியிருந்தேன்.ஆனால் ஒன்னும் பேரலை. அதனால ஒரு தற்கொலை முயற்சி கணக்கா – ஒரு பரிகாரம் ரேஞ்சுல என் ப்ரியாரிட்டிஸ் பற்றியே பதிவுகள் போடலாம்னு இருக்கேன்.

2000 பேருக்காக ஜோதிடப்பதிவுகள் போட்டா ஹிட்டும் குறையாது . நம்ம கல்லா பெட்யும் நிரம்பும். கீழே தந்திருக்கிற ப்ரியாரிட்டி படி பதிவுகள் போட்டா ஹிட்டு புட்டுக்கும். வருமானமும் பாதிக்கும். ஆனாலும் சரி விடறதா இல்லை.சன் டிவியில அந்த வாரம் – இந்த வாரம்னு அலப்பறை பண்றாப்ல இது ப்ரியாரிட்டி வாரம்.

ஞாயிற்று கிழமைன்னாலே பதிவுலகம் ஈயடிக்கும். இதுல இந்த விஷபரீட்சை வேற. நோ ப்ராப்ளம். இந்த லைன் அப் பிடிக்காதவுக பழைய பதிவுகளை ரிவிஷன் பண்ணிக்கிட்டிருங்க. அடுத்த வாரம் ஜாயின் பண்ணிக்கலாம்.

எழுதறது நெல்ல விஷயம்னு மொக்கையா எழுதறதெல்லாம் நமக்கு பிடிக்காதுங்கோவ். இந்த மேட்டர்லயும் கில்மா,சைக்காலஜி,அஸ்ட்ராலஜி,செக்ஸாலஜி எல்லாம் உண்டு. பதிவுக்கு போயிரலாமா?

1.மனித உயிர்களுக்கு பெருகி வரும் ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்

2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் – சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள் – உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் – ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை

3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்

4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை – அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் – கல்வித்தரம்

5.வேலையின்மை, சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.

6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்

7.சுற்றுச்சூழல் – பொல்யூஷன் -காரணங்கள் – விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.

8.மக்கள் பிரச்சினைகளை பேசி – தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு – ஹ்யூமன் வேல்யூஸ்

9. மிஸ்டிக் சைன்ஸஸ் – ஜோதிடம் -வாஸ்து -கைரேகை முதல் டெலிபதி வரை

10. ஆன்மீகம் – தியானம் -யோகா

குறிப்பு: என்னங்கடா இது பதிவர்கள் பார்வைக்குங்கற தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்லியேன்னு கடுப்பாயிராதிங்ணா .மேற்கண்ட பத்து விஷயங்களை சக பதிவர்களும் டச் பண்ணா புண்ணியமா போகும்ங்கற வேண்டு கோளைத்தான் உங்க பார்வைக்கு கொண்டு வந்திருக்கேன்.

ஏற்கெனவே நீங்க இந்த விஷயங்களை டச் பண்ணி பதிவுகள் போட்டிருந்தா கமெண்ட்ல சுட்டியை கொடுங்க. அல்லாத்தையும் திரட்டி படிச்சு சிறப்பு பதிவே போட்டுருவம். உடுங்க ஜூட்..

Advertisements

3 thoughts on “பதிவர்கள் பார்வைக்கு (அவசரம்)

  superrsyed said:
  October 23, 2011 at 10:13 am

  ஒரு பன்னாட்டுக் கம் பெனி புதியதாக தயாரித்துள்ள புற்றுநோய்க்கான மருந்தை பரிசோதித்துப் பார்க்கவே அவர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஒரு பரிசோதனைக்கு 5000 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் வரை கிடைக்கும். அந்த பணத்தை வைத்து ராணியின் பள்ளிக்கூட கட்டணத்தை செலுத்தவும் அந்த மாதம் முழுவதற்குமான இரு வேளை உணவிற்கும் ……read more

  http://vaazgavalamudan.blogspot.com/2011/10/blog-post_20.html

   S Murugesan said:
   October 23, 2011 at 11:37 am

   சூப்பர் சையத் !
   பகிர்வுக்கு மிக்க நன்றி.

  superrsyed said:
  October 23, 2011 at 10:16 am

  அணுசக்தி தேவையா இல்லையா?

  எந்த நாடாவது அணுசக்தியை மின்சாரம் தயாரிக்க மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்று சொன்னால் அது பொய். ஏனெனில் அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும், அணு உலைகளில் கிடைக்கும் புளுடோனியத்தையும் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிப்பதுதான் அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை……..read more

  http://vaazgavalamudan.blogspot.com/2011/10/blog-post_1790.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s