அக்டோ.30 முதல் மார்ச் 22 ????

Posted on

அண்ணே வணக்கம்ணே !

நேத்து 45 நாள்ள ஒரு ராசிய விட்டு காலி பண்ண வேண்டிய செவ் அக்டோ 30 முதல் 158 நாள் சிம்மத்துல கேம்ப் அடிக்கிறாரு. இதுல 2012 ஜனவரி 23 வரை சாதா சஞ்சாரம், மார்ச் 22 வரை வக்ர சஞ்சாரம்.

இதனோட எஃபெக்ட் மேஷம் முதலான 12 ராசியினருக்கு எப்படியிருக்கும்னு இந்த பதிவுல சுருக்கமா பார்ப்போம்.

பொதுவா செவ் பாபகிரகம் என்பதால் 3,6,10,11 ல இருந்தா நல்லதுங்கறது ஒரு விதி. இதன் படி மிதுனத்துக்கு 3 ல் , மீனத்துக்கு 6 ல் , விருச்சிகத்துக்கு 10 ல் ,துலாமுக்கு 11 ல் செவ் நிற்பார் என்ற வகையில் இவிகளுக்கு நல்லதுன்னு சொல்லனும். மத்தராசிக்காரங்க கொஞ்சம் போல எச்சரிக்கையாத்தான் இருக்கனும்னும் சொல்லனும். இருந்தாலும் இன்னம் கொஞ்சம் டீப்பா பார்க்கறச்ச இந்த பலன் தலைகீழா மாறவும் வாய்ப்பிருக்கு.

அதனால டீப்பா பார்த்து ஒவ்வொரு ராசிக்கும் ரெண்டு காலகட்டத்துக்கான பலனை தனித்தனியா கொடுக்க வேண்டியிருக்கு. சாக்கிரதையா படிச்சு ஃபாலோ ஆயிக்கங்க. பெஸ்ட் ஆஃப் லக்.

ORU SOL:

செவ்வாய்னா ஏதோ ஆயா ராம் கயாராம்னு நினைச்சுராதிங்க. செவ் சரியில்லைன்னா தோஷ ஜாதகம்னு தனியா தூக்கிவச்சுர்ராய்ங்க. ஏன்னா அந்த அளவுக்கு செவ்வாய்ல மேட்டர் கீது. ராசி சக்கரத்துல எந்த கிரகம் செவ்வாயை பீட் பண்ணமுடியாம பின் தங்கி இருக்கோ அந்த கிரகத்தை கிரகயுத்தத்தில் தோற்ற கிரகம்னு சொல்வாய்ங்க. அது ஏறக்குறைய நம் மன்மோகனார் மாதிரி சோனியா இருக்கும்.

செவ்வாயை பத்தி சொல்லனும்னா இன்னைக்கெல்லாம் சொல்லலாம். அவரே சொல்றதை கேட்க இங்கே அழுத்துங்க.

1.மேஷம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

செவ் உங்களுக்கு 1/8 க்கான அதிபதி. சிம்மம் உங்களுக்கு அஞ்சாவது இடம் . ஆகவே செவ் காரகத்வத்துல யோக பலனையும் எதிர்பார்க்கலாம். அதே சமயம் சின்ன அவமானம், கோபம், அதி உஷ்ணம் இத்யாதியையும் ஃபேஸ் பண்ண வேண்டியதுதான். குறிப்பா குறை பிரசவம் நடக்க சான்ஸ் இருக்கு. சம்பந்தமே இல்லாம ஏதோ நினைப்புல தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா கதையா நெருப்பு,மின்சாரம்,கூர்மையான ஆயுதத்தால் அபாயம் கூட நேரலாம். டேக் கேர்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்கண்ட யோக பலனும் கோவிந்தா. அபாயம்,ஆபத்துகளும் பைபாஸ் ஆயிரும்.லக்னாதிபதியே வக்ரமாறதால உங்க இயல்புக்கு மாறா வாழ் நாள்ள நெனச்சு கூட பார்க்காத காரியத்தை எல்லாம் செய்ய துணிஞ்சுருவிங்க. காரியம் நல்லதா இருந்தா சரி. இல்லின்னா ஆப்புதேன்.

2.ரிஷபம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

செவ் உங்களுக்கு 12/7 க்கான அதிபதி. சிம்மம் உங்களுக்கு நாலாவது இடம். தாய்,வீடு வாகனம்,கல்வி வகையறாவில் பிரிவு, சிக்கல்,நஷ்டம் வரலாம். இதய நோய் உள்ளவர்கள் ஜாக்கிரதை. வறுமை தாக்கலாம். ஒரு சிலருக்கு ஒரு சில தகராறுகளுடன் திருமணம் ஏற்பாடாகலாம். அதிலும் ஒரு சிலருக்கு தாய்வழியில் ஏற்கெனவே விரோதமுள்ள உறவில் பெண் அமையலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்படி திருமணம் தொடர்பான வில்லங்கங்கள் முடிவுக்கு வந்து சுபகாரியம் நடக்கலாம்.

3.மிதுனம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

உங்களுக்கு செவ் 11/6 க்கு அதிபதி. சிம்மம் 3 ஆவது ராசி. சகோதர வர்கம் பாதிப்படையும்,அவர்களுடனான உங்கள் கம்யூனிகேஷன் பாதிப்படையலாம். உங்களுக்கு குருட்டு தைரியத்தால் கடன் கூடலாம், விரோதம் ஏற்படலாம். வில்லங்கத்தில் சிக்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்படி கெடுபலன் மாறும். சகோதரவகையில் உதவி கிட்டலாம்.

4.கடகம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
உங்களுக்கு செவ் 10/5 க்கு அதிபதி. இவர் ரெண்டுல வர்ரது விசேஷம் தான். இதனால் தொழில் முன்னேற்றம் காணும். வாக்குத்திறமை பளிச்சிடும். சிலருக்கு வாக்பலிதமும் உருவாகலாம். செவ் காரகத்தில் அதிர்ஷ்டம் வரிக்கும். உங்களையும் அறியாம சுடு சொல் வந்துராம பார்த்துக்கங்க. இதனால குடும்பத்துல சினன் கலகம் வந்து போகலாம். கண்கள் சிவக்கும்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

யோகத்துக்கு லீவு. மேற்சொன்ன தீயபலனும் பைபாஸ் ஆயிரும்.

5.சிம்மம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
உங்களுக்கு செவ் 9/4 க்கு அதிபதி. இவர் ஜன்மராசியிலயே வர்ரது நல்லதுதான். பெற்றோரால் நன்மை ஏற்படும். சில சமயம் ப்ரஷரை ஏத்தி விடுவாய்ங்க. அஜீஸ் பண்ணிக்கனும்.நெருப்பு,மின்சாரம்,கூர்மையான ஆயுதம், முன் கோபத்தால் கஷ்ட நஷ்டங்கள் வரலாம்.

முதலீடு,சேமிப்பு குறித்த சிந்தனை அதிகரிக்கும். நல்ல முடிவா எடுப்பிங்க.மனை,வீடு தொடர்பான வேலைகளும் நடக்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன நற்பலன் குறையலாம். தீயபலன் பை பாஸ் ஆயிரும்.

6.கன்னி:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
செவ் உங்களுக்கு 8 /3 க்கு அதிபதி .சிம்மம் விரயஸ்தானம். 8 க்கு அதிபதி -12ல் மறையறது நல்ல அம்சம்தேன். இது உங்களுக்கு பிராண ஹிம்சையா இருந்த அனேக விஷயங்களை செட் ரைட் பண்ணும். ஒரு சிலர் வீடு அ மனையை விற்று இந்த வேலைய செய்யவேண்டி வரலாம். சகோதர வர்கத்துக்கு கொஞ்சம் செலவழிக்கவேண்டி வரலாம். போட்டி சேலஞ்சுன்னு போகாதிங்க விரயம் தப்பாது.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன நல்ல பலன் குறையும். தீய பலன் பை பாஸ் ஆயிரும்.

7.துலா:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

7/2 க்கு அதிபதி 11 ல வர்ராரு. நல்லதுதான். இதனால் பூமி லாபம் ,பூமியால் லாபம்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கு.செவ் காரகம் நல்லாவே கை கொடுக்கும். ஆனா 7 -11 தான் வில்லங்கமானது. கண்ணாலமாகாத பார்ட்டின்னா பரவால்லை. கண்ணாலமான பார்ட்டியா இருந்தா சின்னவயசு பொண்ணு ஒன்னு ரெம்பவே டிஸ்டர்ப் பண்ணும் அவாய்ட் பண்ணிருங்க.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்கண்ட பலன்களில் வேகம் மெத்தகுறையும். டிஸ் அப்பாய்ண்ட் ஆயிராதிங்க. ஃப்ரீயா உடுங்க.

8.விருச்சிகம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
6/1 க்கு அதிபதியான செவ் 10 ல வர்ராரு. தொழில்,உத்யோகம் வியாபாரத்து மேல ஆர்வம் அதிகரிக்கும். கடனோ ஒடனோ வாங்கிப்போட்டு கூட ஃபாஸ்ட் அப் பண்ண ட்ரை பண்ணுவிங்க .பெஸ்ட் ஆஃப் லக். அதே நேரம் உடம்பையும் பார்த்துக்கங்க. இல்லாட்டி முடக்கிரும். ( முக்கியமா ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள்)

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
தொழில் ஆர்வம் -கடன் குறையும். அதே நேரம் ஹெல்த் ட்ரபுள் கொடுத்துரலாம். லக்னாதிபதியே வக்ரமாறதால உங்க இயல்புக்கு மாறா வாழ் நாள்ள நெனச்சு கூட பார்க்காத காரியத்தை எல்லாம் செய்ய துணிஞ்சுருவிங்க. காரியம் நல்லதா இருந்தா சரி. இல்லின்னா ஆப்புதேன்.

9.தனுசு:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

5/12 க்கு அதிபதியான செவ் 9 ல வர்ராரு. பூர்விக சொத்தை விற்கமுடியாம இருந்தவுக – ஃபிக்சட் உடைக்கலாமா வேணாமான்னு ரோசிச்சிட்டிருந்தவுக துணிஞ்சி ஒரு முடிவை எடுப்பிங்க. ஆனால் டிசம்பர் 25 வரை உங்க லக்னாதிபதியான குருவும் வக்ரம். அதனால் நாலு தாட்டி – நாலு கோணத்துல ரோசிச்சு டிசைட் பண்ணுங்க. சிலர் குறைஞ்ச விலைக்கு ஒரு சொத்தை வாங்கலாம். சிலர் பழைய வீட்டை இடிச்சு கட்டலாம். சிலர் வாங்கிப்போட்டிருந்த மனையில வீடு கட்ட ஆரம்பிக்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

அகல கால் வச்சுட்டமோன்னு ரெம்பவே நொந்துக்கற கால கட்டம்.

10 .மகரம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

4/11 க்கு அதிபதியான செவ் 8 ல வர்ராரு. தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையறாவுல நோய் விரோதம்/ கலகம், நஷ்டம்,வீண் விரயம்/ சிறு விபத்து /தடை வர வாய்ப்பிருக்கு டேக் கேர். மூத்த சகோதரர்/சகோதிரிக்கும் தீங்கு நேரலாம். அ அவிகளால உங்களுக்கு.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்கண்ட தீய பலன் மாறும்.ரிலீஃப் கிடைக்கும்.

11.கும்பம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

3/10 க்கு அதிபதி செவ் . இவர் 7 க்கு வர்ராரு. இது மனைவிக்கு/மனைவியால் அல்லல் அலைச்சலை தரலாம். சகோதர வர்கம் உதவிக்கரம் நீட்டலாம். தொழில் உத்யோகம் வியாபாரத்துல புதிய தொடர்புகள், ஒத்துழைப்பு கிடைக்கலாம். அந்த தொடர்பு போலீஸ்/மிலிட்டரி./ரயில்வே தொடர்பானதா இருந்தா குறுகிய கால ப்ராஜக்ட்னா ஓகே. அதாவது ஜன 22 க்குள்ள ஐசா பைசா தீர்ந்துரனும். இல்லாட்டி இமிசை தான்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன தொடர்பு / ஒத்துழைப்பு தேய ஆரம்பிக்கும்.

12.மீனம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

2/9 க்கு அதிபதி செவ். இவர் 6 க்கு வர்ராரு. கடன் வாங்க வேண்டி வரலாம், உங்க பேச்சுல சூடு கூடும். குடும்பத்துல சலசலப்பு வரும். கண் நோய் வரலாம். சொத்து/ முதலீட்டின் மேல் கடன் வாங்க வேண்டி வரலாம். தூர பயணம் தள்ளிப்போகலாம். அ அது வீண் விரயமாக முடியலாம். தூர தேச தொடர்புகளால் கடன் விரோதம் ஏற்படலாம். ஒரு சிலர் சொத்தை அடகு வச்சும் கடன் வாங்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன தீய பலன் குறையும்.டிசம்பர் 25 வரை உங்க லக்னாதிபதியான குருவும் வக்ரமா இருக்கிறதால உசாரய்யா உசாரு .ஓரஞ்சாரம் உசாரு.

Advertisements

One thought on “அக்டோ.30 முதல் மார்ச் 22 ????

    ISMAIL said:
    October 22, 2011 at 4:50 am

    இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கலை. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s