ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

Posted on

கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்துல திடீர் உடல் நல பாதிப்பால் மீடியா வெளிச்சத்துல இருந்து ஒதுங்கி இருந்த ரஜினி நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு அஃபிஷியலா தானே நிருபர்களை சந்திச்சு பேட்டி கொடுக்கிறது இதான் ஃபர்ஸ்ட் டைம்.

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி (கீழ்) வந்த ரஜினி , அங்கே காத்திருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியில் ரஜினி சொன்னதாவது:

என் ஹெல்த் நல்லாவே இருக்கு. ரசிகர்களின் பூஜைகளாலதான் நான் மீண்டு வந்தேன். ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்” ராவண் ” படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணேன். ( ஆருப்பா அது ரஜினி நடிக்கவே இல்லைன்னு பதிவு போட்டது ) ரெண்டு மூனு மாசத்துல ராணா ஷூட்டிங் ஆரம்பிக்கும். ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் வந்திருந்தார் ரஜினி. இரவு 7.30 க்கு ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்

ஹி ஹி.. இப்படித்தாண்ணே சனம் துண்டு துக்கடா பதிவு போட்டு ஹிட்ஸை அள்றாய்ங்க. ( பேட்டி மட்டும் நெஜம் தேன்)

கொசுறு:

தமிழ்மணம் பெரியார் வழிக்கு வந்துருச்சு. சோதிடப்பதிவுகளையெல்லாம் நீக்கப்போறாய்ங்களாம். ( நம்முதை நாமே நீக்க சொன்ன பிற்காடு நீக்கியிருக்காய்ங்க. -ஸ் அப்பாடா மரியாதை பிழைச்சது) அடுத்தது ஆன்மீக பதிவா? சொல் தமிழ்மணமே..!

Advertisements

3 thoughts on “ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

  கிருமி said:
  October 19, 2011 at 3:19 pm

  தமிழ்மணத்துக்கெல்லாம் மருவாதி குடுத்து எழுதணுமா என்ன? நா காட்டமா மலையாளிங்க பத்தி எழுதுன எதையோ தடை பண்ணினாங்க. போங்கடா மயிரேன்னுட்டேன். இப்போதைக்கு இண்ட்லி மட்டும் தான். கொஞ்ச நாளா சொடுக்கல் பரவால்ல.

   S Murugesan said:
   October 19, 2011 at 4:08 pm

   வாங்க கிருமி!
   கடவுளை குதப்புணர்ச்சிக்கு கூப்ட பதிவையெல்லாம் காட்டிக்கிட்டிருந்த தமிழ்மணத்துக்கு என்னவோ “நிர்பந்தம்”ஏற்பட்டிருக்கு. அவிகளுக்கும் சில பிரச்சினைகள் இருக்குமில்லையா?
   எப்படியோ ஒழியட்டும் விடுங்க.

   நாமார்க்கும் குடியல்லோம்
   நமனை அஞ்சோம்

  டவுசர் பாண்டி said:
  October 20, 2011 at 4:03 am

  இப்பிடி எழுதினாலும் சனங்க படிப்பாய்ங்க.

  இன்றைய நானா? நீயா? போட்டுப் பாத்துருவம் நிகழ்ச்சியில் நாம பாக்கப்போறது,

  காமத்தில் திருப்தி அடையாத பெண்கள் யார்? – ஜோதிட ரீதியாக ஒரு பகீர் அலசல்

  விளம்பர இடைவேளைக்கிப் பிறகு தொடரும்……

  இப்ப விளம்பரம்.

  ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்தால் ரத்தப் பொருத்தம் சரியாக அமைவதில்லை என்றும் திருமண வாழ்க்கை மற்றும் கருத்தரித்தலில் பிரச்சினை வரும் என்கிறார்கள். ஒருவன் விபத்தில் சிக்கி, அவனுக்கு மற்றவர் ரத்தம் ஏற்ற நேரும்பொழுது ப்ளட் க்ரூப் சரியாக இருக்கா என்று பார்க்கிறார்களே தவிர செவ்வா தோஷம் இருக்கா என்று பார்ப்பதில்லை. இதிலிருந்தே தெரிகிறது ஜோதிடம் எவ்வளவு பெரிய மோசடி என்று. ஆகையால் ஜோதிடத்தை நம்பாதீர்கள். பெரியார் வழி வந்த சூரமணியை மட்டும் நம்புங்கள். (என்னது சூரமணி ஆரா? அவருதாம்பா இந்த ப்ரோக்ராமோட ஸ்பான்சர்).

  வெல்கம் பேக். இன்றைய நானா? நீயா? போட்டுப்பாத்துருவம் நிகழ்ச்சியில காமத்த பற்றி பாப்பம். இப்ப காமத்த பத்தி ஜோதிடர்கள் கருத்தை கேட்பம்.

  ஜோ.அணி: பெண்களைப் பொறுத்த வரையில் காமம் என்பது தொட்டனைத்தூறும் மணற்கேணி போன்றது. ஆணைப் பொறுத்த வரையில் அது ஒரு பசி அவ்வளவுதான். பசி எடுக்கும் பொழுது ருசிப்பான். மற்ற நேரத்தில் ரசிப்பான். இப்ப பெண்களோட ஜாதகம்னு எடுத்திக்கிட்டா காமத்த குறிக்கிற சுக்கிரன் நல்ல நெலமைல இருந்து கண்ணால எரியாவான எழாமெடத்துல சூரியன் செவ்வா காம்பிநேஷநிருந்து கற்பு செக்ஸனான நாலாமெடத்துல பாவ கெரகங்க இருந்தாக்க அந்த பெண்மணி புருஷன்கூட சந்தோசமா இருக்க மாட்டா. அதனால வேலி தாண்டுவா. அப்பயும் ஆனப்பசிக்கி சோழப்பொரி கததேன். அதே மாறி சந்திர சுக்கிர காம்பினேஷனும் அப்டிதேன். சரி. இந்த சூரியன் செவ்வா காம்பினேஷன் நல்ல கெரகங்க பார்வை படாம எந்த எடத்துல இருந்தாலும் எலமைல வெதவன்னு பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு பேச்சு உண்டு. சனி அம்சத்துல சுக்கிரனும், சுக்கிரன் அம்சத்துல சனியும் இருந்தால் லெஸ்பியன் செக்சை விரும்புவாள். மேஷம், விருச்சிகம், மகரம், கும்பம் இதுல ஏதாவது லக்னமாகி சந்திரனும் சனியும் இணைந்தால் தாயும் மகளும் ஒரே ஆள் கூட ஜல்சா பண்ணுவாய்ங்க. அதே மாறி ஏழுல சூரியன் சந்திரன் செவ்வா மூணு வெறும் சேந்துருந்து கூட சனியிருந்தாலும் அல்லது பாக்கப்பட்டாலும் மாமியா மருமகன் கூட ஜல்சா தேன். இப்படி ஏகப்பட்ட கோட்பாடுகள் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளது.

  நாத்திக அணி: அதெல்லாம் ஏற்றுகக முடியாத கருத்து. ஜோதிடம் என்பது கட்டுக்கதை. உருட்டி பொரட்டி சொல்லும் பித்தலாட்டம். ஒரு பெண்ணை பார்த்தாலே அவளது கேரக்டர் எப்படி என்று சராசரி மனிதன் ஜட்ஜ் பண்ணி விடுகிறான். இந்த சீம ரகசியத்தை கண்டறிய சோசியம் வேறு தேவையா? ஒரு பெண் வளர்ப்பு முறைகளை பொறுத்தே நல்லதும் கேட்டதும் அமைகிறதே ஒழிய சோசியம்லாம் ஒரு மண்ணும் கெடையாது. இயற்கையிலேயே ஆணைவிட பெண்ணுக்குத்தான் காம உணர்வு அதிகம். நாயா பொறந்தாலும் நல்ல நேரத்துல பொறக்கனும்னு ஊற ஏமாத்தும் இந்த ஜோதிடத்தின் மூலம் பெண்ணின் காமத்தை அளப்பது என்பது கதையளப்பதற்கு சமம்.

  நடுவர்: ஓக்கே ஓக்கே கூழ் ………….. கூழ் டவுன்.

  ஓக்கே. இன்றைய நானா? நீயா? போட்டுப் பாத்துருவம் நிகழ்ச்சியில பெண்ணோட காமத்த பாத்தி பாத்தம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாறி சொன்னாய்ங்க. ஆனா இது எதுவும் சரியான ரீஷன் கெடையாது. நாம “நடந்துக்க” விதத்துலதேன் பெண்களோட காமம் ஏறுவதும் இறங்குவதும் இருக்கு என்று தீர்ப்பு கூறி மீண்டும் அடுத்த வாரம் ஒரு சுவாரசியமான திகிலூட்டும் விஷயங்களோட சந்திப்போம். அதுவரையில் உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் காபி.

  பார்வையாளர்கள்: என்னய்யா இது ப்ரோக்ராம். செக்ச பத்தி ஜிவ்வுன்னு ஏதாவது எத்துவானுகன்னு வந்தா புஸ்ஸுன்னு காத்து போன டயர் மாறி ஆக்கிட்டானுங்க. இதாம்பா அட்ராக்ட்டிவா தலைப்பு இருக்கச்சிலையே நெனச்சம். உள்ள ஒன்னும் இருக்காதுன்னு. காசு காலியானதுதேன் மிச்சம். போங்கப்பா நீங்களும் ஒங்க டவுசரும். (என்று புலம்பியவாறே பார்வையாளர்கள் கலைந்தனர்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s