ஒரு குரங்கின் சுய சரிதம்

Posted on

ஒரு ஊர்ல ஒரு குரங்கு. பேரு மதி. ஆசையே உலகத்துன்பங்களுக்கு காரணம்ங்கற தத்துவம் சின்ன வயசுலயே தெரிஞ்சிருந்தாலும் (உபயம்: பாட புஸ்தவம்) எல்லாத்துக்கும் ஆசைப்படற வயசு.

ஊர்ல உள்ள குரங்கெல்லாம் கழுத்துல பேதி மருந்து குடிச்சா மலத்துல வர்ர நாடா புழு சைஸ்ல மைனர் செயின் போட்டுக்கிட்டு கண்டிக்கல்லு சைஸ்ல ஃபோனு, ஐ பாடுன்னு வச்சுக்கிட்டு லட்ச ரூபா பைக்குல சீறிக்கிட்டு கிடக்க

மதியோட அப்பா குரங்கு மட்டும் ” தாளி ! இப்பமே ஓசோன் கிளிஞ்சு தொங்குதாம். எங்கபார்த்தாலும் ஆக்சிடெண்ட். பெட் ரோல் விலைய கூட புல்லியன் மார்க்கெட்டு கணக்கா இன்றைய பெட் ரோல் விலை நிலவரம்னு அறிவிக்க எவ்வளவோ நாளில்லை “னுட்டு தடை போட்டுருச்சு.

அசலான மேட்டர் இன்னாடான்னா ” காசில்லை” அரசாங்க வேலையில இருந்தப்பயே பொறுப்பா பத்து காசு தேத்தற தெறமை இல்லை. இப்பம் எப்படா தேதி ஒன்னாகும்னு நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு கிடக்கு. இதுல வருசா வருசம் நான் உசுரோடத்தான் இருக்கேன்னு ஒரு சர்ட்டிஃபிகேட்டை வேற ட்ரஜரில சப்மிட் பண்ணனும். சென்ட்ரல் லைப்ரரியில மெம்பர் . டஜன் கணக்கா உறுப்பினர் அட்டை வச்சுக்கிட்டு வாரா வாரம் புஸ்தவமா கொண்டு வந்து படிக்கறதெ வேலை.

மதி டிகிரி முடிச்சு 10 வருசம் ஆகுது. இதுவரை நெரந்தரமா ஒரு வேலை கிடையாது. நல்ல வேளையா அப்பாகுரங்கு மத்த அப்பனுங்க மாதிரி தெண்டத்தீனி அது இதுன்னு நோகடிக்கிறதில்லை. ஆனால் உபதேச மழை பொழிஞ்சு கடுப்படிச்சிக்கிட்டிருக்கும்.

ஒரு நாள் ஸ்டோர் ரூமை ஒழிச்சிக்கிட்டிருந்தப்ப அரையடி உசரத்துல ஒரு வெள்ளி தம்ளர் ஒன்னு கிடைச்சது. அதை பார்த்ததும் மதியோட மனசுல இருந்து ஆசையே உலகத்துன்பங்களுக்கு காரணம்னு எக்கோ பண்ணிக்கிட்டிருந்த புத்தர் சின்ன வேலை இருக்கு வந்துர்ரன்னு சொல்ட்டு காணாம போயிட்டாரு

மதியோட மூளை ஃபார்மட் அடிச்ச கம்ப்யூட்டர் கணக்கா பரபரப்பாயிருச்சு. குளிச்சு ரெடியாயி என்னென்னவோ தகிடுதத்தம்லாம் பண்ணி – அப்பா குரங்குக்கு சாயந்திரம் வரைக்கும் தன்னை ஞா வராதபடிக்கு பீலா விட்டாச்சு. வெள்ளி டம்ளரை எப்படியோ கடத்தி கொண்டுவந்தாச்சு.பஜாருக்கு போயி தம்ளரை காசாக்கியாச்சு.

வெயில் கொளுத்தறாப்ல ஒரு ஃபீலிங். ஜில்லுனு ஒரு பீர் அடிச்சே தீரனும்னு ஆயிருச்சு. பங்க்ல இருக்கிறதுலயே நீளமான சிகரட்டா அரை பாக்கெட் வாங்கிக்கிட்டு இருட்டு மூலையில போய் உட்கார்ந்து ஜில்லுன்னு ஒரு பீர். பாட்டில் என்னமோ ஜில்லுன்னுதான் இருந்தாப்ல ஞா. ஆனால் ஒரு ம..ருமில்லை.

என்னப்பான்னு கேட்க பவர் கட்டுசார்னான் பையன். ஸ்வர்கமா தோனின டாஸ்மாக்கே இப்பம் நரகமாயிருச்சு.அதை விளக்கெண்ணையா நினைச்சு குடிச்சு முடிச்சுக்கிட்டு வெளிய வந்தது மதி.. கையில காசு கரையுதே தவிர எதையும் அனுபவிச்ச கதையா காணோம்.

கடேசியில எய்ட்ஸ் பயத்தை காண்டோம் கொண்டு விரட்டிட்டு அந்த பெரிய தப்புக்கும் சித்தமாகி மேற்படி கற்புக்கரசிகள் நிற்கும் ட்ரான்ஸ்ஃபாரத்தை தேடிப்போனது மதி. இருக்கிறதுலயே சகிச்சுக்கும்படியான உருப்படியை செலக்ட் பண்ணி வண்டி வருமான்னு கேட்டு பூத் பங்களா கணக்கா இருந்த லாட்ஜு கவுண்டர்ல ஒரு மணி நேரத்துக்கு அநியாயமா ரூ200 கொடுத்துட்டு – அவளுக்கும் செட்டில் பண்ணி தான் பார்த்த படிச்ச கில்மா மேட்டரையெல்லாம் ஞா படுத்திக்கிட்டு கிட்ட போனப்ப பக்கத்து அறை கதவை ஒரு கும்பலே தப தபன்னு தட்டற சத்தம் கேட்டுச்சு.

மதிக்கு பக்குனு ஆயிருச்சு வெளிய வந்து விஜாரிச்சா அந்த ரூம் காரன் காலையிலருந்து கதவையே திறக்கலியாம். கெட்ட வாடை வருதாம். போலீசுக்கு ஃபோன் பண்ணா தட்டி எழுப்பிப்பாருங்க. அரை மணியில வர்ரோம்னாய்ங்களாம். சனம் தட்டின தட்டுக்கு அந்த அறைக்காரன் எழுந்தானோ இல்லையோ மதிக்கு மட்டும் எல்லாம் ஒடுங்கி போயிருச்சு. சொல்லாம கொள்ளாம வெளிய வந்தான்.

மணி 3 ஆயிருச்சு. எத்தனையோ மாசமா தின்ன நினைச்ச கனவு பிரியாணி கடைக்கு போய் பிரியாணி கேட்க எலக்சன் டைமில்லியா தம்பி பிரியாணி தீர்ந்து போயிருச்சு. குஷ்கா தரவான்னாய்ங்க. விதியில்லாம அதையும் தின்னுப்போட்டு பீடாவுக்கு போனான். பீடாக்கடைகாரன் பழுத்த வெற்றிலைய மறைச்சு வச்சு பீடா கட்டி கொடுக்க அதை மென்றபடி கையில காசு என்ன இருக்குன்னு தடவ முழுசா ஒரு ஐநூறு ரூவா நோட்டை காணோம். அது இருக்குன்னு தான் அலட்சியமா செலவு செய்துக்கிட்டிருந்தான். அது எங்கன மிஸ் ஆச்சுன்னு ஞா வரலை.

அப்பா மதிய தூக்கத்துல இருப்பாரு.ஆளுங்கட்சியான பிறவு எதிர் கட்சில இருந்து மாறி வந்தவன் கணக்கா வீட்டுல செட்டில் ஆயிரவேண்டியதுதான். போற வழியில புதுப்பணக்காரன் கட்டின வீடு இங்கிலீஷ் சினிமாவுல போல பளபளத்தது. பத்தடி உசரத்துக்கு காம்பவுண்டு.அதுக்கும் மேல ஃபென்சிங். மதிக்கு ஏனோ தர்கமே இல்லாம உள்ளாற ஒரு ஸ்விங் ஃபூல் ,அதுல டூ பீஸ்ல ஒரு குட்டின்னு ஃப்ளாஷ் அடிக்க பர பரன்னு காமப்வுண்ட் சுவர் மேல ஏறினான். உள்ளாற நெஜமாலுமே ஒரு ஸ்விம்மிங் ஃபூல் இருக்க உள்ளே குதிச்சான். வீடு முழுக்க டை கட்டின ஆசாமிங்க இருந்தாய்ங்க. ஏதோ சி.பி.ஐ ரெய்டு போல. அவசரமா திரும்பறச்ச வால் பக்கம் எதுவோ நறுக்குன்னுச்சு. பார்த்தாமுள். பயங்கர வலி .

சூப்பர் ஸ்பெசாலிட்டில்லாம் அப்பாரம் தாளி சாதாரண எம்.பி.பி.எஸ்ஸுக்கிட்டே போற ரேஞ்சுல கூட காசில்லை. மதியம் போன லாட்ஜு கணக்கா இருந்த பில்டிங்ல வாசலுக்கு லெஃப்ட்ல சுவர் முழுக்க இழந்த சக்தி, விரை வாதம்னு பெரிய எழுத்துல எழுதப்பட்டிருக்க மதி தன் விதியை நொந்துக்கிட்டு உள்ளாற போயி மேட்டரை சொல்ல ஆயிரத்துல பேரத்தை ஆரம்பிச்சு இருபது ரூபாய்க்கு முடிச்சு ஒரு பெட்ல படுக்க வச்சாரு டாக்டரு.ஏனோ மதியம் லாட்ஜுல படுத்தது ஞா வந்தது.

டாக்டரு புதுமருமக சமையலறையில தடுமாறின கணக்கா இருக்கிற எல்லா சர்ஜிக்கல் ஐட்டங்களையும் முயற்சிபண்ணிக்கிட்டிருந்தாரு. அப்பம் பெரும்பான்மை உறுதின்னு நம்பிக்கையா ரிசல்ட்டுக்கு வெய்ட் பண்ணிக்கிட்டிருந்த பார்ட்டி சிங்கிள் டிஜிட்ல ஜெயிக்க அந்த கட்சி தலைவர் எப்படி அலறுவாரோ அப்படி ஒரு அலறல் மதிகிட்டேருந்து புறப்பட்டது.

இன்னாடா மேட்டருன்னா மதியோட வால் தமிழ்படத்துலருந்து வெட்டப்பட்ட ஈழத்தமிழர் ஆதரவு காட்சி கணக்கா கீழே கிடந்தது. மதிக்கு செமை கடுப்பாயிருச்சு. “கொய்யால .. பேப்பர் காரவுகளுக்கு சொல்லி ஒன்னை நாறடிக்கிறேன் பாரு”ன்னு ஆங்கார கூச்சலிட டாக்டரு காலை கெட்டியா பிடிச்சுக்கிட்டு “யப்பா நீ போலீஸுக்கு ஃபோன் பண்ணு – எஸ்.பிக்கு ஃபோன் பண்ணு – ஃபையர் இஞ்சினுக்கு ஃபோன் பண்ணிட்டு க்ளினிக்கையே கொளுத்திரு ஆனால் நிருபர் பசங்களை மட்டும் வரவச்சுராதப்பா.அவிகளுக்கு தினசரி வாய்க்கரிசி போட்டு குளிப்பாட்ட என்னால ஆகாது” ன்னு புலம்பவே ஆரம்பிச்சுட்டாரு.

மதி சர்ஜிக்கல் ஐட்டங்கள் இருந்த ட்ரேயில இருந்து ஒரே ஒரு கத்தியை மட்டும் எடுத்துக்கிட்டு
” ங்கோத்தா இனி எவனுக்குனா வைத்தியம் பண்ணேன்னு தெரிஞ்சது ஒரே குத்து தான் கீழ விட்டா மேல வந்துரும்” னு வார்னிங் விட்டுட்டு கத்தியை சுழட்டிக்கிட்டே வெளிய வந்தது .

நடைபாதையில ஒருத்தன் கூகுல் இமேஜஸ்ல வர முலை மங்கை கணக்கான மாங்காயை வச்சுக்கிட்டு அதை கடிக்கவும் முடியாத வெட்ட கத்தியும் இல்லாம அவதிப்பட்டுக்கிட்டிருக்க மதி கத்தியை அவன் கிட்டே கொடுத்தான்.

அவனும் சந்தோசமா மாங்காயை வெட்ட கத்தி மேடத்துக்கு தேவையான மந்திரிங்க மேட்டர்ல சட்டம் கணக்கா பொசக்குன்னு வளைஞ்சு போச்சு.

மதி கடுப்பாகி அந்த மாங்காயை பறிச்சுக்கிட்டு நடந்தது. அந்த நேரம் பார்த்து எங்கயோ லோக்கல் அம்மன் கோவில்ல கூழ் ஊத்தற விழா போல. . மேளக்காரன் ஒருத்தன் கக்கூஸு போனா கழுவற பிளாஸ்டிக் மக்ல கூழை வச்சுக்கிட்டு குடிக்க முடியாம குடிச்சிட்டிருந்தான்.

நடுத்தர வகுப்பு மக்கள் மனசுல அன்னா உபயத்துல திடீர்னு கிளர்ந்தெழுந்த ஊழல் எதிர்ப்பு கணக்கா மதிக்குள்ள திடீர்னு ஒரு கருணை பீய்ச்சி அடிச்சது. மாங்காயை அவனுக்கு கொடுத்து இதை கடிச்சக்கன்னுச்சு.

அவனும் மாங்காயையும் கூழையும் ஒரு கை பார்த்துட்டான்.மதிக்கு தன்னோட வால் ஞா வந்தது. எதிராளி மாங்காயை தின்னதா தோனலை தன் வாலை சூப் போட்டு சாப்பிட்டதா தோனுச்சு. ஒடனே மதி சதிச்சிரிப்பு சிரிச்சு ” கொய்யால வாழ்க்கையில எதுவும் இலவசமா கிடைக்காது. என் வாலை கொடுத்து வாங்கின மாங்காய் அது.. அதுக்கு விலையா உன் மேளத்த எடுத்துக்கறேன்” னுட்டு மேளத்தை தூக்கிக்கிட்டு கிளம்பிருச்சு.

வாலு போயி கத்தி வந்தது டும் டும் கத்தி போயி மாங்கா வந்தது டும் டும் மாங்கா போயி மேளம் வந்தது டும் டும்னு அடிச்சிக்கிட்டே வர்ரச்ச மேளம் ஓசோன் மாதிரி கிளிஞ்சிருச்சு.

நீதி:

ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி கடைசியில எல்லாத்தையும் இழந்துர்ரதுதான் வாழ்க்கை

.

Advertisements

8 thoughts on “ஒரு குரங்கின் சுய சரிதம்

  டவுசர் பாண்டி said:
  October 17, 2011 at 5:07 am

  வணக்கம் நைனா,

  சூப்பர் கத. நச்சின்னு இருக்கு.

  இன்னா நைனா, நீ வர வர மிந்தி மாறி சூட்டிப்பா இல்லியே. இங்கன எலக்சன் நடந்துக்கிட்டு இருக்கு. நாங்களே பீதியில கெடக்கம். நீ என்னடான்னா தாத்தா பேரப்புள்ளைங்களுக்கு கத சொல்றமாரி கத சொல்லி எங்கள தூங்க வெச்சிக்கினு இருக்குற. நீ பாட்டுக்கு தீவாளிநா சரவெடி மாறி, எலக்சன்னாலே “சித்தூர் முருகேசன்னு” ஒரு இமேஜ க்ரியேட் பண்ணி வெச்சிட்ட.ஒனக்கு இன்னும் வயசாவள மாமு.. நீ இன்னும் யூத்துதேன். எலக்சன் ரிசல்ட்டு ஏதாவது போடு நைனா. கத நல்லாருக்கு. ஆனா இந்த நேரத்துல கொரங்கு கதைய படிச்சிக்கிட்டு இருந்தோம்னு வையேன், கட்சிக்காரங்க நம்மள கொரங்காக்கிருவாய்ங்க. அரசியல் நியூஸ் ஏதாச்சும் போட்டு பட்டைய கெளப்பு மாமு. சனங்க வெய்ட்டிங்.

   S Murugesan said:
   October 17, 2011 at 6:00 am

   பாண்டி !
   உள்ளாட்சி தேர்தல்ல வெற்றி தோல்விய தீர்மானிக்கிறது தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கு. கட்சிங்கறது கடேசி பட்சம்தேன்.

   எம்.ஜி.ஆர் உசுரோட இருந்தப்பயே திமுக செயிச்சிருக்கு. அதெல்லாம் வேற சமாசாரம். நம்மளோட அடுத்த பதிவு ராஜபக்சேவின் எதிர்காலம் – ஜோதிட ஆய்வு

    டவுசர் பாண்டி said:
    October 18, 2011 at 3:15 am

    எலங்கை பார்ட்டிய அனலைஸ் பண்ணப் போறதுக்கு ரெம்ப நன்றி நைனா. எதும் நாலு வார்த்த நல்லதா சொல்லுபா. இருந்தாலும் நைனா ஒரு தில்லுதொரன்னு அல்லாத்துக்கும் தெரியும். (இப்பிடி உசுப்பேத்தி ஒடம்ப ரணகலமாக்கலீங்னா). ஏற்கனவே எடக்கு மொடக்கா சோசியம் சொன்னதுக்காண்டி நம்ம பாசக்காரண்ணன் ஒரு சோசியர கூப்புட்டு கொஞ்ச நாளைக்கி கட்டத்த என்றதுக்கு பதிலா கம்பிய என்னிக்கிட்டு இரு ராசான்னு வஸ்தி பண்ணிக்குடுத்துருக்காராம். இருந்தாலும் நம்ம நைனா ஆந்த்ராவையே (மூன் பாபு) கலக்குன ஆளாச்சே.

  Raja said:
  October 17, 2011 at 1:36 pm

  வணக்கம் அய்யா,

  நான் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். ஜோதிட விஷயங்களைப் படிக்கிறேன்.
  தங்களது வெப் சைட் பார்த்தேன். மிக்க நன்றி.

  என்னால் மாலை எட்டு மணிக்கு மேல் தான் இவ்விஷயத்தில் ஈடுபடமுடிகிறது. ஆனால், சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஜோதிடத்தில் ஈடுபடக்கூடாது, தரித்திரம் வந்து சேரும் என்று சிலர் சொல்லுகிறார்கள்.

  அக்கூற்றில் சாஸ்திரப்படி அர்த்தம், விளக்கம் உண்டா என்பது எனது கேள்வி. தயவு செய்து எனது சந்தேகத்தைப் போக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி,

  ராஜா

   S Murugesan said:
   October 17, 2011 at 5:09 pm

   அய்யா,
   இந்த விதி ஏற்படுத்தப்பட்ட போது மின் விளக்குகள் கிடையாது. ஜாதகம் ஜாதக விதி எல்லாம் பனை ஓலையில எழுதி வச்சிருப்பாய்ங்க.

   படிக்கிறது கஷ்டம் , மேலும் ஜாதகத்துக்கு பலன் சொல்றப்ப சு – சுக்கிரன் , ச – சனி சு வை ச வா புரிஞ்சிக்கிட்டு பலன் சொன்னா என்னாகும்?

   எச்சரிக்கை:
   இரவில் பாப கிரகங்களுக்கு பலம் அதிகம். அதனால பலன் சொல்றவுக மட்டும் அடக்கி வாசிக்கனும். இதான் மேட்டர்.

   மத்தபடி நீங்க சோசியம் கத்துக்க தடையேதுமில்லை..

    ராஜா said:
    October 19, 2011 at 5:49 pm

    ரொம்ப சந்தோஷம் சார்

    நான் அரிச்சுவடி படிக்கிற லெவல்லதான் இருக்கேன்.

    ஊக்கம் குடுத்ததுக்கு நன்றி சார்

  vellai appan said:
  October 17, 2011 at 9:23 pm

  அய்யா நீஙக சொல்றதும் சரிதான் தேமேன்னு இறுக்குரத வச்சு திருப்தியா வாழ்ற‌வன பாற்த்து இந்த உலகம் >… குன்டுசட்டியில குதிரை ஓட்டுரான்….அரைச்சமாவையே எத்துன நாலைக்கு அரைப்பே …
  பிழைக்க தெறியாதவனே அப்டின்னுது

  ஆலாளுக்கு டிஃப்ரன்ட் டிஃப்ரன்ட்டா சொன்னா பாவம் வெகுளிப்பையன் எத நல்லதுன்னு எடுத்துக்க‌

   S Murugesan said:
   October 17, 2011 at 10:03 pm

   வெள்ளையப்பன் @ ஜா.ரா !
   என் எழுத்துக்களை ஆரு படிக்கிறாய்ங்களோ இல்லையோ ஃபுல் ஸ்டாஃப் கமா கூட விடாம படிக்கிறது நீங்கதேன்

   எங்கயோ இண்டு இடுக்குல நமக்கு சின்ன வயசுல வெள்ளைன்னு ஒரு பேர் இருந்ததை சொல்ல அதை சிக்குனு பிடிச்சு கமெண்ட் போடறிங்களே. ஹேட் ஸ் ஆஃப்!

   மொதல்ல வெகுளிப்பையன் தனக்கு தான் சொல்லிக்கவேண்டியது இன்னாடான்னா ” நைனா நீ பேசிக்கலா உசுரு. உசுரோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் என்ன? உயிர் வாழ்தல் – தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்ளுதல் – பரவுதல்.

   ஒனக்குள்ள பெரிய விதைத்தொழிற்சாலையே இருந்தாலும் கண்ட இடத்துல விதைய விட முடியாது – விட்டா நசுக்கிருவாய்ங்க.

   பரவுதல்னா வெறுமனே இனப்பெருக்கம் மட்டுமில்லை.சொத்து சேர்க்கலாம். பணம் சேர்க்கலாம். பதவி வாங்கலாம்.

   அது முடியலியா 11 மாசம் ரொட்டீன்ல லைஃப்ல இருந்துட்டு 12 ஆவது மாசம் மஸ்தா ட்ராவல் பண்ணலாம் – சென்றிடுவீர் எட்டுதிக்கும் னு பாரதியார் சொன்னாப்ல சென்று ஞான செல்வத்தை திரட்டிக்கிட்டு வரலாம்.

   ஏதோ ஒரு இழவு பழமொழி சேகரிக்கிறிங்களா – நாட்டுப்பாடல் சேகரிக்கிறிங்களா எதை சேகரிக்கறிங்கங்கறது முக்கியமில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s