மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டரும் ஜோதிடமும்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
சத்ரு ரோக ருண உபாதைகள் இல்லாத பார்ட்டி உலகத்துலயே கிடையாது. இன்னம் சொல்லப்போனா இந்த உபாதைகள் இல்லாத நாடே கிடையாது. இந்த உபாதைகளை தவிர்க்க ஒரு அயனான பரிகாரத்தை தரத்தேன் இந்த பதிவு.

“ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா”னு எழுதி வச்சாரு கண்ணதாசன். இதையே சைக்காலஜி டெக்னிக்கலா மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னு சொல்லுது.

லக்னத்துல அ ஏழுல கச்சா முச்சான்னு கிரகங்கள் இருக்கிறது , அல்லது லக்னாதிபதி கெட்ட சகவாசம் பண்றது, மனோ காரகனான சந்திரன் சகட்டுமேனிக்கு கிரகங்களோட சேர்ந்திருக்கிறது இப்படியா கொத்த கிரக நிலைகள்ள பிறந்தவுக இந்த மன நோய்க்கு ஆளாக வாய்ப்பிருக்கு.

நம்ம ஜாதகத்துல லக்னத்துல சூரியன்,புதன், உச்ச குருன்னு 3 கிரகங்கள். இதுல லக்னாதிபதி+ மனோகாரகனான சந்திரனோட சுக்ர சேர்க்கை.

ஒரு வகையில (ஐ மீன் ஒரு கோணத்துல) பார்த்தா முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் நமக்குள்ளே இருக்கிறதா பீத்திக்கலாம்.

சூரியன் -சிவா – அழித்தல் , புதன் -விஷ்ணு -காத்தல் , குரு -பிரம்மா -படைத்தல் . ஆனால் இன்னொரு கோணத்துல பார்த்தா புதன் விரயாதிபதி , குரு ரோகாதிபதி.

சந்திர சுக்கிர சேர்க்கையிலும் ரெண்டு கோணமிருக்கு. சந்திரன் -மனம் , சுக்கிரன் -கலை ( இதையே சந்திரன்னா மனசு – சுக்கிரன்னா கில்மான்னும் அனலைஸ் பண்ணலாம்)

இதை நெகட்டிவா பார்த்தா சுக்கிரன் பாதாகாதிபதி ( நம்ம கடகலக்னத்துக்கு) . இதனாலதேன் இருக்கிறதுலயே வெள்ளை சாம்பார் தனமான ஜோதிட “கலையை” கூட நம்ம ஆசனத்துக்கு கடப்பாறை கொண்டுவர்ர ரேஞ்சுல வெளிப்படுத்திக்கிட்டிருக்கோம்.

இல்லாட்டி அய்யரு ஊஞ்சல்ல உட்கார்ந்திருந்தாரு -அய்யரம்மா காஃபி கொண்டு வந்து கொடுத்தாய்ங்கனு ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருந்திருந்தா கல்கியிலயே தொடர்கதை எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கலாம்.

சின்ன வயசுல நாம ரெம்ப சென்சிட்டிவ். “ஏண்டா பல் தேய்க்காம இட்லி சாப்பிட்டே இதைவிட ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க போட்ட கமெண்டுகளை படிக்கலாமே” னு அண்ணன் சொன்னதை தாங்கமுடியாம “உங்க சங்காத்தமே வேணாம்னு வீட்டை விட்டே வெளியேறிட்ட கேஸு.

கூச்சம் சாஸ்தி. ஒரு தாட்டி திருப்பதிக்கு போனேன். அண்ணனோட அறையில தான் ஹால்ட். சாயந்திரம் அங்கன இருந்த சொந்தக்காரவுக வீட்டுக்கு போனோம். போறச்ச கல்லா இருந்த குடல் கலக்க ஆரம்பிச்சது . நான் ரூமுக்கு போறேன்னேன். அண்ணன் ஒத்துக்கிடலை.

சொந்தக்காரவுக வீட்டுக்கு போயி போலாம். வாடான்னுட்டான். நான் ங்கோத்தா தேவையே இல்லை. விட்டுரு .ரூம்லயே பார்த்துக்கறேன்னுட்டன். ஆனால் அங்கன போனதும்..

“டே வெள்ளை! ஏதோ வேலையிருக்குன்னியே.. போகனுமா.. போறதாருந்தா போ.. போடா”னு லந்து பண்ண ஆரம்பிச்சிட்டான். பத்து நாளு தங்க போன நாம மறு நாளே பிச்சுக்கிட்டு சித்தூர் வந்துட்டம்.

இதான் நம்ம கேரக்டர். இந்த அழகுல டீன் ஏஜ் பிரச்சினைகளை எல்லாம் ஆருகிட்ட டிஸ்கஸ் பண்றதாம். அப்பத்தேன் திருச்சில இருந்து நம்ம நண்பன் சம்மர் லீவுக்கு வந்திருந்தான். ( கொல்ட்டி -சாம்பார் மேட்டர் சொல்லி நொந்த அதே நண்பன்) அவன் தான் கில்மா மேட்டர்ல அதுவரைக்கும் நமக்கு இருந்த தயக்கம்,கூச்சம், போலித்தனம் எல்லாத்தையும் ஒழிச்சு கட்டினான்.

ஆனால் அந்த ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பண்ண இங்கன ஆள் கிடையாது. அதனால டிஸ்கஸ் பண்ணி தெளிவு பெற ஒரு கவுண்டர் பார்ட் தேவைப்பட்டது. அப்பம் சுஜாதாவோட கணேஷ் வசந்த் ரெம்ப பிரபலம். நமக்கும் சுஜாதா மேல ஒரு அபிமானம் இருந்தது. உபரியா நாம ரஜினி ரசிகன் வேற ( அந்த காலத்துல)

சுஜாதாவோட வசந்த், நம்ம திருச்சி நண்பன், ரஜினி காந்த் + நாம எப்படில்லாம் இருக்கனும்னு நினைக்கிறோமோ அந்த அம்சங்கள் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி முகேஷ்னு ஒரு கேரக்டரை உருவாக்கினோம்.

நாம எழுதற கதைகள் நம்ம கேரக்டர் வந்தா அதுக்கு நிச்சயம் முகேஷ்ங்கற பேருதான். 1991 ல கலப்பு திருமணம் – வேலையின்மை -ஏழ்மை – நாயடில்லாம் நல்லாவே பக்குவப்படுத்த கொஞ்சம் இறங்கி வந்து “அழகு”ங்கற கேரக்டரா மாறினோம்.

முகேஷ் ஹீரோயிக் கேரக்டர். அழகு கொஞ்சம் போல மோரல்ஸ் -லட்சியம்லாம் உள்ள சாமனியன். ஓஷோவை படிக்க ஆரம்பிச்ச பிற்காடுதான் முருகேசனை இந்த முருகேசன் டோட்டலா அங்கீகரிக்க முடிஞ்சது.

இதையெல்லாம் எவனும் சொல்லிக்க மாட்டான். ஆனால் நாம சொல்லிக்குவம்.ஏன்னா நமக்குள்ள எந்த ஹிடன் அஜெண்டாவும் கிடையாது. நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதியாகனும்ங்கற மேட்டரையே உடைச்சாச்சு. இனி மறைக்க என்ன இருக்கு?

அரசியல்ங்கற சர்க்கசை பார்த்து பார்த்து சர்க்கஸ் வீரர்களை எல்லாம் அட்மைர் பண்ண ஆசாமி நாம. நம்ம கேரக்டர் பஃபூன் கேரக்டரா கூட இருக்கட்டும். இன்னைக்கு நாம பார்த்து அட்மைர் பண்ண சர்க்கஸ் வீரர்கள் ஆருமில்லை.

நோ ஐ.சி ( இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) . ஒரு கை பார்த்துர்ரதே சரி. நாம ஜனாதிபதி ஆகிறோமோ இல்லையோ. மனசை நெல்லா சூப்பர் ரின் போட்டு வெளுத்தாச்சு.

ஒதகாத மேட்டரையெல்லாம் போட்டு அடைச்சு நம்ம எழுத்தும் பேச்சும் மலச்சிக்கல் காரனோட அபான வாயு மாதிரி நாற கூடாது. சரி சைக்காலஜி போதும். அஸ்ட்ராலஜி மேட்டர் ஒன்னு சொல்றேன்.

லக்னத்துக்கு ஆறாம் பாவத்துக்கும் தொடர்பு ஏற்பட்டா கடன் ,நோய், வழக்கு இத்யாதி தொல்லைகள் வரும். எந்த காரியத்தை எடுத்தாலும் வாயிதா, தடை.

இதுக்கு நான் ஒரு சில பரிகாரம் சொல்றது வழக்கம்.

1.ஒரே சப்ஜெக்டை எடுத்துக்கங்க. அதுக்கு பாசிட்டிவா ஒரு பக்கம் – நெகட்டிவா ஒரு பக்கம் எழுதுங்க.

உ.ம் வரதட்சிணை நல்லது /வரதட்சிணை கெட்டது.

2.பத்திரிக்கைகள்ள ஆசிரியருக்கு கடிதம்னு ஒரு பகுதி இருக்கும். அதுக்கு ஏதாவது ஒரு புனைப்பெயர்ல உங்க துறை – பகுதியின் பிரச்சினைகளை எழுதி அனுப்புங்க. அந்த புனைப்பெயருக்கு சொந்தம் கொண்டாடாதிங்க.

3.எந்த ஒரு நல்ல வேலையானாலும் சொந்த காசுல செய்யாதிங்க. கடன் வாங்கி செய்ங்க.

உஸ் அப்பாடா.. சைக்காலஜி அஸ்ட்ராலஜி ரெண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு போட்டாச்சு. தமிழ் மணத்துல வெறுமனே சோசியத்தை பத்தி எழுதினா இது செல்ஃப் ப்ரமோஷன் போஸ்டுன்னு ரிமூவ் பண்ணிர்ராய்ங்க தலை.

Advertisements

6 thoughts on “மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டரும் ஜோதிடமும்

  arul said:
  October 15, 2011 at 7:21 am

  romba simple remedy nice anna

  yoghi said:
  October 15, 2011 at 11:08 am

  நல்ல எளிமையான பரிகாரம் நன்றி

  அப்டியே மல்டி பர்ச்னால்டிக்கூம் சரிபன்ன எதுனா பரிகாரம் மேட்டர் இறுந்தா எடுத்து உடுஙக ரொம்ப உபயோகமா இறுக்கும்

   S Murugesan said:
   October 15, 2011 at 12:11 pm

   யோகி அவர்களே !
   நல்ல கேள்வி. பதிவில் சொன்னாப்ல அனேக கிரகங்களோட தாக்கம் இருந்தா அந்த கிரகங்களை ரெண்டு க்ரூப்பா பிரிங்க.

   ஒன்னு லக்னாத் சுபர்கள். ரெண்டு லக்னாத் பாபிகள்.

   சுபர்கள்ள கூட பரஸ்பரம் முரண்பாடோ தீவிரத்தை உருவாக்கக்கூடிய கூட்டமைப்பு இருந்தாலும் ரிஸ்குதேன்.

   உ.ம் சூரி,செவ்

   சுபர்களை விட்டுட்டு பாபிகள் காரகம் வகிக்க கூடிய நிறத்து ஆடை அணிகலனை அதிகம் உபயோகிக்கனும்.
   அதே நேரம் பாபிகள் காரகத்வத்தில் கன்சம்பஷனை குறைக்கனும்.

   உதாரணமா குரு என்றால் தங்கம் அணிவதை கூட தவிர்த்துரனும்.

   டிஸ்டர்பன்ஸ் ராகு கேதுக்களால ஏற்படுதுன்னா அதுக்கு வேற பேக்கேஜ் இருக்கு.

   இப்படி பாப கிரகங்களை டியாக்டிவேட் பண்ணா அவற்றின் இம்பாக்ட் குறைந்து சுப கிரகங்கள் ஆக்டிவேட் ஆகி அவை காட்டும் வழியில் மனம் பயணிக்கும் . சிக்கல் குறையும்

  Sudharsan said:
  October 16, 2011 at 1:09 pm

  hai Murugesan sir,
  I have moon and mars combination in lagna.My lagna is Kadagam.I ‘m subjected to severe multiple personality problem.Is it due to moon or mars?.I could never sleep in night.My mind is subjected to severe agitations.I sleep only from morning 5a.m to 9a.m.Can you belive it?.But it’s true.Can you suggest a good remedy for this?

   S Murugesan said:
   October 16, 2011 at 3:27 pm

   வாங்க சுதர்சன் !
   உங்க ஜாதகத்துல குரு+சனி/ராகு/கேது சேர்க்கை இல்லின்னா சரவண பொய்கையில் முருகன் ஆறு குழந்தைகளாக மிதக்கும் காட்சியை உங்க படுக்கைக்கு முன்னாடி வச்சுக்கிட்டு அதையே பாருங்க. அப்பாறம் கண்ணை மூடி கற்பனை பண்ணுங்க.

   ஸ்படிக மாலை அணியலாம் . வேல் உருவம் பொறித்த டாலர் அணியலாம். வெள்ளை நிற பெட் ஸ்ப்ரெட்ல படகு , மீன்கள் – வெள்ளை தலையணை உறையில் எதுனா ஆயுதம் பொறிக்கப்பட்டிருந்தா நல்லது.

   படுத்ததும் ப்டக்குனு தூங்கிருவிக. வாழ்த்துக்கள்.

  Sudharsan said:
  October 16, 2011 at 3:52 pm

  Hai murugesan sir,
  Thanks for your fast response.As you mentioned,I will do the remedy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s