விடை கொடு தமிழ்மணமே! (வடை போச்சே)

Posted on

விடை கொடு தமிழ்மணமே!

அண்ணே வணக்கம்ணே! நாம வலையுலகத்துக்கு வந்த புதுசுல ஆங்கிலத்துல தான் எழுதிக்கிட்டிருந்தம். அந்திமழை கிராஸ் ஆக டைரக்டா ஆன் லைன்லயே டைப் பண்ணி மொத கவிதையை அனுப்பினோம். இன்னம் சில காலம் அந்திமைழையில எழுதின பிற்காடு கழண்டுகிட்டோம். நம்மை மொத மொதலா ஐடென்டிஃபை பண்ணி ஊக்கப்படுத்தினது கோவி.கண்ணன் தான்.அவருதேன் தமிழ்மணத்தை அறிமுகம் செய்து வச்சாரு.அப்பல்லாம் தமிழ்மனம் , தேன் கூடுன்னு ரெண்டு திரட்டி தேன்.

கடவுளையே குதப்புணர்ச்சிக்கு கூப்பிடற பதிவெல்லாம் அமோகமா தமிழ்மணத்துல பப்ளிஷ் ஆயிட்டிருந்த காலம் அது. நாமும் நம்ம பங்குக்கு – வலைப்பூவோட பேருக்கேத்த வகையில கில்மா பதிவுகள் போட்டுக்கிட்டிருந்தம். ஆனா தமிழ்மணம் எதையும் கண்டுக்கிடலை.(சமீப காலமா கட் பேஸ்ட் – ஆபாசம்னு நிறைய பதிவுகளை தடை பண்ணதா கேள்வி.)

ஒரு கட்டத்துல பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்னு ஒரு பதிவு எழுதினம்.அந்த சமயம் கலைஞர் ஆட்சி நடக்குது. தாத்தா சோனியா தயவை எதிர்பார்த்து ஆட்சி நடத்திக்கிட்டிருந்த காலம்.அது. புலிகளுக்கு ஆதரவா ஆரு வாயை திறந்தாலும் – அட நேரம் கெட்டு போயி கொட்டாவி விட வாயை திறந்தாலும் உள்ளே வைக்கிற நிலை.

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எதுனா எச்சரிக்கை வந்ததா அ சுயக்கட்டுப்பாடா அ எதுக்கு லொள்ளுங்கற மென்டாலிட்டியா தெரியாது ” நிர்வாண உண்மைகள்” வலைப்பூவை தடை செய்துட்டதா சொல்ட்டாய்ங்க. அந்த சமயம் நம்ம ஏவரேஜ் ஹிட்ஸ் ஜஸ்ட் 420 தேன் ( ஒரு நாளைக்கு)

என்னங்கடா இது வளர்ந்து வர்ர சமயம் ஆப்படிச்சுட்டானுவளேன்னு கடுப்பாயி கடுமையா திட்டி பதிவெல்லாம் போட்டேன். ஆனால் இப்பம் நம்ம ஆவரேஜ் ஹிட்ஸ் ஆயிரம். தமிழ்மணம் மூலமா வர்ரவுக நெம்பர் ரெம்ப குறைவு. காரணம் நெம்பர் ஆஃப் திரட்டிகள். இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னன்னா 50+ சதவீதம் விசிட்டர்ஸ் டைரக்டா கூகுல் மூலமா வந்துர்ராய்ங்க

அல்லாம் சரிபா.. இப்பம் எதுக்கு விஜய்காந்த் கணக்கா இந்த புள்ளிவிவரம்லாம்னு கேப்பிக, சொல்றேன். நிர்வாண் உண்மைகளை தடை பண்ணப்பயே நம்ம தங்கச்சி பதிவான அனுபவஜோதிடத்தையும் தடை பண்ணி வச்சுருந்தாய்ங்க. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டுட்டம்.

இடையில ( சில மாதங்களுக்கு மின்னே தான் ) இன்னா நினைச்சாய்ங்களோ அனுபவஜோதிடத்தை மட்டும் சேர்த்துக்கிட்டாய்ங்க. நாம மன்னாப்பு கடிதம் – வருத்த கடிதம்லாம் எதுவும் தரலிங்கண்ணா. சேர்த்துக்க சொல்லி மன்னாடவும் இல்லிங்ணா.

அந்த சமயம் பார்த்து சரண் அனுபவஜோதிடம் டாட்காம் க்ரியேட் பண்ணி கொடுத்துட்டாரா. அதை தமிழ்மணத்துல சேர்க்க ட்ரை பண்ணா ” போனாப்போவுதுன்னு ப்ளாகை சேர்த்திருக்கம் . அதே உள்ளடக்கத்தோட இந்த வலை தளத்தை சேர்க்கமுடியாதுங்கற டோன்ல தெரிவிச்சாய்ங்க.

நாம எத்தீனி பஞ்சாயத்தை செட்டில் பண்ணியிருக்கம். நம்ம பஞ்சாயத்தை செட்டில் பண்ணத்தெரியாதா? நாம ஐயா அனுபவஜோதிடம் வலைப்பூவை நீக்கிருங்க. தளத்தை சேர்த்துக்கங்கன்னு மெயில் பண்ணோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

நானும் தமிழ்மணம் மூலமா வர்ர வாசகர்களை ஏன் இழக்கனும்னு அதுல பாதி இதுல பாதின்னு மேனேஜ் பண்ணிக்கிட்டிருந்தேன்.

நேத்து இன்னைக்கு அனுபவஜோதிடம் வலைப்பூ மேட்டர்ல ஒரு திருப்பம். ஜோதிடம்தொடர்பான பதிவுகளை எழுதக்கூடாதாம்.

இதே காரணத்தை காட்டி தொடர்ந்து ரெண்டு பதிவுகளை பட்டியல்ல இருந்து நீக்கினதா தெரிவிச்சாய்ங்க. ஜோதிடப்பதிவுகளை தொடர்ந்து எழுதறாப்ல இருந்தா உங்க வலைப்பூ முடக்கப்படும்னும் எழுதியிருந்தாய்ங்க.

அந்த “பெருமையை” அவிகளுக்கு ரெண்டாவது தாட்டி கொடுக்க விருப்பமில்லாம ” பாஸ் ! முடக்கிருங்க”ன்னு மெயில் பண்ணிட்டன்.

நம்ம சிக்ஸ்த் சென்ஸ் என்னா சொல்லுதுன்னா நாம வெற்றிகரமா ( ஐ மீன் ஃபைனான்ஷியலாவும்) வெற்றி நடை போடறதால “எதுனா” செய்வோம்னு எதிர்பார்த்தாப்ல இருக்கு .( ஐ மீன் கட்டண சேவை/ நன் கொடை)

கடவுள் புண்ணியத்துல கட்டண சேவைய நாடும் நிலை நமக்கில்லை. நன் கொடை தரலாம்தான். ஆனால் நம்ம நிபந்தனை தெரியும்ல . நம்மோட டாப் டென் ப்ரியாரிட்டில மட்டும் பதிவுகளை திரட்டறாப்ல இருந்தா தாராளமா தரலாம்.

இவிக அவாளை வாழ வைக்க கோவில்,குளம், தீர்த்தயாத்திரை பதிவுகளையும், சனங்க நமைச்சலுக்கு சொறிஞ்சுக்க , அடுப்பங்கரை, சினிமா பதிவுகளையும் திரட்டி செய்யும் சேவையில பங்கு கொள்ள நமக்கு விருப்பமில்லிங்ணா. அதான் நன்கொடை ஏதும் தர்ரதாயில்லை.

மொத்தத்துல திரட்டிகள் உலகத்து ” புதுவெள்ளம் ” தமிழ்மணத்தை தடுமாற வச்சிருக்குன்னு நினைக்கிறேன். (பொருளாதார ரீதியா) காலத்துக்கேத்தாப்ல அப்டேட் பண்ணிக்கனும். அதான் வெற்றிக்கு வழி. அதுலயும் பொருளாதார ரீதியிலான வெற்றிக்கு வழி. அதை விட்டுட்டு தமிழ்மணம் ஏதோ சங்கப்பலகைங்கற ஃபீலிங்ல லொள்ளுபண்ணா உள்ளதும் போச்சுரா நொள்ளக்கண்ணானு ஆயிரும். அப்பாறம் அவிக இஸ்டம்.

Advertisements

6 thoughts on “விடை கொடு தமிழ்மணமே! (வடை போச்சே)

  டவுசர் பாண்டி said:
  October 16, 2011 at 2:41 am

  வணக்கம் நைனா,

  தமிழ்மணத்த உடு நைனா. மக்கள் மனம் இருக்கே. இன்னாத்துக்கு பீல் பண்றே. ஒரு பார்ட்டிக்கி ஹிட்ஸ் அதிகமானா இந்த மாறி அரிப்பெடுத்து அலம்பல் பண்ணத்தான் செய்வாய்ங்க. இதால மேற்படி டிப்சு கிப்சு கெடைக்குமான்னு நாக்க தொங்கப் போட்டு வர்றது சகஜம்தேன். நன்கொட குடுத்தா ஒனக்கு நல்லா கொட புடிப்பான்வ. இல்லாங்காட்டி அதே கொடக்கம்பியாள மூலாதாரத்துல குத்தி திரும்பி பாக்காம ஓடிரும்பாய்ங்க. இதெல்லாம் தொழில்ல சகஜமப்பு. லூசுல உடு நைனா.

   S Murugesan said:
   October 16, 2011 at 6:15 am

   வாங்க பாண்டி !
   ப்ரிண்ட் மீடியாதான் அப்படின்னா இங்கனயும் இதே இழவான்னு ஒரு ஜெர்க் அவ்ளதான். மத்தபடி வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  yoghi said:
  October 16, 2011 at 10:49 am

  சமூகத்தில் கீழிறுந்து மேலெ வறும்போது மனிதன் சந்திக்கும் நிகழ்வுகள் சில‌

  1, ஏய் இதோபார்ரா இவனுக்கு இதேல்லாம் தேவையா இதெல்லாம் இவனால முடியுமா போன்ற கேலியும் கின்டலும்

  2,அய்யோ இன்னாடா இவன் ஒரு டைப்பா வர்ர‌ானே ஹூம்ம் எவ்லொதான் போரான் பார்க்கலம் (ஆச்சர்யம் கலந்த குழப்பம்)

  3,ஆஹா இவன் டேஞசர் பார்ட்டி இவன வள‌ர வுட்டா நமக்கு ஆப்புதான்(பொராமை)

  4,இவன என்னாபன்னா கவுக்கலாம்? என்னா பன்னா பார்ட்ட பல்பு வாஙும் இல்ல போட்டு தல்லிரலாமா?(சதி முதுகுல குத்தப்பாக்குரது இப்டி)

  5,அவுரு பெத்த ஆளுப்பா சூப்பர் மேன் என்னா சொன்னாலும் சறியா இருக்கும் அவருகிட்ட வாலாட்டதே (பாராட்டு)

  6,ஏய் அவர் யாருன்னு தெறியுமா எஙக ஊர்க்காரர் எஙக அன்னாவோட ஃப்ரென்ட்டுக்கு மாமா உடைய சித்தப்பா (கடைசில ஒருவழியா அங்கிகாரம்)

  எல்லாறும் நாம எந்த ச்டேஜ்ல வந்துகினு கீரோம்னு கன்டுகினா வறுத்தப்படுரதுக்கு ஒன்னுமே இல்ல

  அரசியல்ல இதெல்லாம் சாதாரனம் தல ஃப்ரீய உடுஙக‌

   S Murugesan said:
   October 16, 2011 at 11:43 am

   யோகி அண்ணே !
   அப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கிங்களே. சூப்பர்ணே. இதையே நீங்க நீட்டி முழக்கி இங்கிலீஷ்ல எழுதி புஸ்தவமா போட்டிருந்தா மில்லியனராயிருக்கலாம். ஹும்..தமிழரா பிறந்து தமிழ்ல எழுதியிருக்கிங்களே..அதான் சோகம்..

  yoghi said:
  October 16, 2011 at 11:04 am

  சார் ப்லீஸ் 7 வது மேடர் விடுப்ட்ட்ருச்சு
  7, நாளென்னா செய்யும்,கோளென்ன செய்யும் யார் வேனா இன்னாவேனா சொல்லிக்கோ வெக்கம் அச்சம் சூடு சொரனை இன்ஃப்ரியாரிடி இன்னும் பல….. எதும் இல்லாம எல்லாத்தையும் வென்ற நிலை

  இதுல ப்ராப்லம் என்னன்னா இந்த ச்டேஜ் வர்ரதுக்குல்ல பல பேருக்கு ஆயுசே முடிஞ்சு போயிடுது

  சின்ன வயசுலயே சில பேரு இந்த ச்டேஜ அச்சிவ் பன்னிட்ராய்ங்க எப்டின்னா
  அவங்கல கேது பின்னி பெடல் எடுத்துருப்பாரு
  என்னா தல நா சொல்ர மேட்டர் சரியா வருதா?

   S Murugesan said:
   October 16, 2011 at 11:42 am

   வாங்க யோகி !
   நூத்துல ஒரு வார்த்தை சொன்னிங்க. கேது பின்னி பெடலெடுத்து ஞானத்தை கொடுக்காரு. இல்லேங்கலை. ஆனால் மன்சனுக்கு மறதினு ஒரு வியாதி இருக்கே.

   ஒருத்தி காதல்னு ஆப்படிச்சா தாடியும் பேனுமா இருக்கான். ஆறு மாசத்துல மறுபடி காதல்ங்கறான்.

   நல்ல வேளையா நமக்கு பழைய சம்பவங்களை அழகா தொகுத்து தரக்கூடிய கடக லக்னமா அமைஞ்சது.

   நல்ல மாட்டுக்கு ஒரு அடி நல்ல மன்சனுக்கு ஒரு சொல்லு – லைஃப்ல வாழ்வாங்கு வாழ்ந்தாலும் சாவுதான். – பிச்சை எடுத்தே வாழ்ந்தாலும் சாவுதான்.

   மரணத்தை தடுக்குமா.. ஊம் வா சரண்டர். தாளி.. சுக்கிர த்சை கேது புக்தி ஒன்னு போதும்..ஞானம் பிறக்க.

   மேலும் நாம பிறந்ததே 7 ஆம் தேதி – நட்சத்திரம் மகம் – ஜாதகத்துல பஞ்சமாதிபதி+கேது காம்பினேஷன் -அதும் வித்யா ஸ்தானத்துல..

   நாம தினசரி உயில் எழுதி வச்சுட்டு உச்சா போய் வந்துதேன் படுக்கறோம்ல. நாம எப்பயும் ஃப்ரீதேன்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s