பாவம் கேபிள் சங்கர்

Posted on

நம்ம ஜா.ரா மறுபடி வேலைய ஆரம்பிச்சுட்டாரு. கூகுல் காரனுக்கு ஒரு புகார் தட்டி விட்டிருந்தம். அது எதுனா ப்ராசஸ் ஆரம்பமாயிருச்சா என்னனு புரியலை.

பாவம் வலையுலக சூப்பர் ஸ்டார் கேபிள் சங்கர் ஒரு லட்சியத்தோட ஆரம்பித்த யு டான்ஸ் திரட்டியில பதிவு மழையே பொழிஞ்சிருக்காரு. பதிவுன்னா என்னமோனு நினைச்சுரப்போறிங்க. அல்லாம் நம்ம அய்யர் நம்ம கேரக்டரை செரிச்சுக்க முடியாம எடுத்த வாந்திதேன். அய்யரோட பழம் பதிவுகளை அப்பாவி ப்ளாகர்ஸோட ப்ளாக்ல கமெண்டா போட வேண்டியது . அந்த பதிவுக்கான லிங்கை இணைக்க வேண்டியது.

கக்காத பிள்ளை தக்காதும்பாய்ங்க. அது ஒரு ஸ்டேஜ் வரைதேன். எருமைமாடு மாதிரி ஆன பிற்காடும் கக்கிக்கிட்டு கிடந்தா குடல் வெளிய வந்துரும். எக்கேடோ கெட்டு போகட்டும். இதுவும் ஒரு அனுபவம். இதை அஸ்ட்ராலஜிக்கலா அனலைஸ் பண்ணுவமா?

நம்ம ஜாதகத்துல 6 க்குடைய குரு லக்னத்துல உச்சம் கூட சூரியன் இருந்து அவரை கட்டுப்படுத்தறாரு. அந்த சூரியனோட புதன் சேர்ந்து சூரியனை கட்டுப்படுத்தறாரு. ஆக மொத்தத்துல குரு தர வேண்டிய பலனை சூரியன் – சூரியன் தரவேண்டிய பலனை புதன் கொடுக்க முயற்சி பண்றாய்ங்க.

புதனுக்குரிய கடவுள் பெருமாள். பார்ட்டியோட பேரும் அதே தான். பாவம்.. ஜா.ரா தனக்கே தெரியாம நமக்கு பேருதவி செய்துக்கிட்டிருக்காரு. லக்னத்துல 6 க்குடையவர் உச்சம் பெற்றால் சத்ரு,ரோக ,ருண உபாதைகள் ஏற்பட்டு நாம சீரழியனும்.

ஆனால் பாவம் ஜா.ரா .. நம்ம தலை நெல்லா இருக்கனும். அவரு ஒரு எதிரியை பத்தி ரோசிச்சிக்கிட்டு கிடந்தா நோய் வராது – ஹெல்த்தியா இருப்பாரு – வழக்கு கியக்கு பாயாது -கடன் இல்லாம இருப்பாருன்னு இப்படி லந்து பண்ணிக்கிட்டிருக்காரு. வாழ்க ! இதுவும் ஒரு அனுபவம். இந்தமாதிரி அனுபவங்கள்தான் நம்ம பதிவுகளுக்கு மூலம்.

இதுவரைக்கும் நிர்வாண உண்மைகள் வலைப்பூவில் மட்டும் 1,618 பதிவுகள் போட்டிருக்கேன். (தெலுங்கு பதிவுகள் இதில் சேர்க்கப்படலை -அது கிடக்கும் 333 ) வித் அவுட் அப்டேட்ஸ் இந்த வலைப்பூவுக்கு கிடைக்கும் ஹிட்ஸ் தினசரி 1000. சனம் இதுல ஒரு பெரிய புதை பொருள் ஆராய்ச்சியே நடத்திக்கிட்டிருக்காய்ங்க.என்ன ஒரு பிரச்சினைன்னா அன்னன்னைக்கு போட்ட பதிவை அன்னன்னைக்கு படிக்க மாட்டாய்ங்க.

ஒவ்வொரு நாள் எல்லாத்தையும் எழுதிட்டாப்ல இருக்கே. புதுசா என்னத்தை எழுதறதுன்னு ஒரு எண்ணம் வரும். ஆனா சிலசமயம் ஆரோ சொன்னாப்ல ” என்னங்கடா இது ஸ்ருதி கூட்டலுக்கே இத்தீனி பதிவா? இன்னம் கச்சேரியே ஆரம்பமாகலை”ன்னும் தோணும். ( நம்முது கடகலக்னமுங்ணா)

ஏதோ நமக்குள்ள மட்டும்தேன் இத்தீனி சமாசாரம் இருக்குன்னு நினைச்சுரப்போறிங்க. ஒவ்வொரு மன்சனுக்குள்ளயும் எத்தனையோ மேட்டர் கீது. அவிகளுக்கு எழுத வாய்ப்பு கிடைக்கலை. நமக்கு கிடைச்சிருக்கு அதான் வித்யாசம்.

இந்த 44 வயசுல ஒரு வசதி இன்னாடான்னா தேவையில்லாத மேட்டர்லாம் மைண்ட்ல இருந்து எகிறிப்போச்சு. ( சில சமயம் நம்ம பழைய பட்லிங்களோட பேர் கூட மறந்து போயிருது வாத்யாரே) பல விஷயம் முக்கியமில்லாததா போயிருச்சு. டிவி விளம்பரம், புது நடிகைகளோட பேரு.. இந்த சமீப கால நடிகைகள்ளயே நம்ம மைண்ட்ல நின்னது ஒரு சங்கீதாவோட பேருதேன்.

மேலும் அனுபவங்கள் எதிரானப்ப சம்பவங்கள் நடந்தப்ப இருந்த புரிதலை விட இப்பம் சாஸ்தியாகியிருக்கு. அப்பம் புரியாத மேட்டர்லாம் இப்பம் அசால்ட்டா புரிஞ்சி போகுது. மாடு அசை போட்ட கணக்கா அசை போட்டு செரிச்சுக்க வேண்டியதா இருக்கு.ஒரு மேட்டரை பல கோணங்கள்ள பார்க்கும் கப்பாசிட்டி வந்திருக்கு. கடந்த கால அனுபவங்களை ஒரு க்ளான்ஸ் பார்த்துக்கிட்டு ஹ்யூமன் பிஹேவியர், பாடி லேங்குவேஜ் மாதிரி இன்னும் சில கான்செப்டுகளை வச்சு எதிராளி அடுத்து என்ன செய்வான்னு கெஸ் பண்ணா நூத்துக்கு 99 டாலி ஆகுது.

நம்ம அனுபவங்கள்னா கில்மா அனுபவங்கள் மட்டுமில்லை. கலந்து கட்டியான அனுபவங்கள் ஸ்கூல் போறதுக்கு மிந்தியே ஜூட்டாயிருச்சு. எங்க வீட்டு பக்கத்துல ஒரு மைதானம். அங்கன ஒவ்வொன்னா குடிசைகள் முளைச்சு சின்ன சேரியே உருவாயிருச்சு ( ஐ மீன் ஸ்லம் – தலித்துகளுக்கான குடியிருப்பில்லை ஏன்னா அதுல பல ஃபேமிலி வன்னியருங்கதேன் )

அங்கன இருந்து ஆரம்பிச்சா ஒவ்வொரு கட்டத்தையும் நம்ம அனுபவங்களையும் எழுத ஆரம்பிச்சா 44X365 பதிவுகள் போட்டுரலாம். சரிங்ணா மொக்கை போதும். மேட்டருக்கு வந்துர்ரன்.

அய்யரும் நானே முருகேசனும் நானே.

ஒரு காலகட்டத்துல அல்லாருமே “அவாளை” சகட்டு மேனிக்கு கிழிச்சிக்கிட்டிருந்தாய்ங்க. அவிகளோ கமுக்கமா இருந்தாய்ங்க. நாமதான் மாத்தி யோசிக்கிற ஆளாச்சே.

மேலும் நம்ம வாதங்களை முழு மூச்சா எடுத்து வைக்க ஒரு கவுண்டர் பார்ட் வேணமே. அதனால அய்யரா அவதாரம் பண்ணினோம். ( இப்பம் ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேன்னு பதிவு போடலியா அப்படி)

ஆனால் இந்த பாம்பு கீரிப்பிள்ளை சண்டை பதிவுலகத்துல போனியாகலை. அதனால திராட்டுல விட்டுட்டம். ஆனால் நம்ம ஜாரா இந்த மேட்டர் தெரியாம அய்யரா நாம போட்ட பதிவுகளையெல்லாம் கஷ்ட பட்டு பிரபலமாக்கிட்டிருக்காரு. அன்னார் நம்ம ஊர் பக்கம் வந்தா ஒரு இஞ்சி முரபா இலவசம்.

அன்னார் செய்து வரும் வேலைகள் நமக்கு எந்தளவுக்கு லிஃப்ட் கொடுக்குதுன்னு தெரிஞ்சும் அவருக்கு இதுவரை நன்றி சொல்லாதது தவறுதேன். சாரி ஜா.ரா அண்ட் தேங்க்யூ..

Advertisements

16 thoughts on “பாவம் கேபிள் சங்கர்

  டவுசர் பாண்டி said:
  October 14, 2011 at 3:26 am

  இன்னாங்கடா இது நாம ரெம்ப டீப்பா போட்டு பாத்த பிரசன்னம் சின்னாபின்னமாயிட்டா. பப்பரப்பாம்னு ஆயிட்டா.

   கிருஷ்ணா said:
   October 14, 2011 at 12:01 pm

   என்ன டவுசர் பாண்டி அண்ணே…..சொம்பு அடிவாங்கிடாப்புள்ள இருக்கு… 🙂 🙂

   கரை வேட்டி காரங்களுக்கு பிரசன்னம் பாக்குறப்ப கொஞ்சம் உசாறா இருங்க….இல்லைனா… ********* 🙂 🙂 🙂

    டவுசர் பாண்டி said:
    October 14, 2011 at 1:50 pm

    கிருஷ்னான்னே,

    மேற்படி சமாச்சாரத்துல மஸ்தா தில்லாலங்கடி வேலல்லாம் கீதுனே. நானு சும்மா ஒரு பேச்சிக்கி எண்ணிய நானே மட்டந்தட்டிருவன். நானு பிரசன்னம் போடுறதுக்கு மிந்தி செல காரியங்கள பண்ணிட்டுத்தேன் பாக்குறது. அதனால நம்ம கணிப்பு நூத்துக்கு தொன்னூத்தி ஏழு பெர்சன்ட் கரீட்டாத்தேன் வரும். மீதி மூணு பெர்சன்ட் வேணா பொய்யாகலாம். மத்தபடி நம்ம கணிக்கிற ஸ்டைலுல கெமிஸ் ட்ரி லேபுல செய்யிற மாறி அமில சோதனை கார சோதனைலாம் பண்ணிப்புட்டுதேன் கடைசில உறுதிசோதனை செய்வம். அதனால ஆத்தாமேல பார்த்த போட்டுட்டு ரிசல்ட்ட தில்லா போட்டு ஒடச்சிருவம். இருந்தாலும் எப்டி வருதுன்னு பாப்பம். என்னோட தீர்ப்பு இன்னான்னா, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜா.ரா. குற்றவாளியல்ல என்பதுதேன். எப்டி சொல்றேன்னா அவரு சைட்ட மிந்தி பாத்திருக்கன். அதுல உள்ள அவரு போட்டாயவும் பாத்துருக்கன். அதனால நம்ம கணிப்புல உள்ள அங்க அடையாளங்கள் அவரை குரிக்காட்டாத காரனத்தால இம்புட்டு துணிச்சலா சொல்லிட்டு கெடக்கன். ஆல்ரெடி திருட்டு பிரசன்னம்லாம் பாத்து கலக்கிருக்கோம்ல.

    S Murugesan said:
    October 14, 2011 at 2:17 pm

    வாங்க பாண்டி,
    அய்யர்னு மொட்டையா சொன்னா எப்படி? ayyar : இது நம்ம அவதாரம் ayyer: இது ஜாராவோட அவதாரம். நான் என்னைத்தான் க்ரிட்டிசைஸ் பண்ணேனே தவிர ஊரார் சைட்ல எல்லாம் பேண்டு வைக்கலை.

    அய்யரோட அவதார நோக்கம் “அவாளை” எல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வர்ரது. ஒரு கவுண்டர் பார்ட்டை நாமே கிரியேட் பண்ணி மேற்படி சப்ஜெக்ட்ல முழுமையான வாதம் நடக்கவும் – இன்னம் மயக்கத்துல உள்ள சூத்ராளை தட்டி எழுப்பறது.

    ஆனால் அந்த நோக்கம் நிறைவேறாதுன்னு தெரிஞ்சு போனதால ஆட்டம் க்ளோஸுன்னு விட்டுட்டம். நம்ம ஜாரா அந்த கன்டென்டை எல்லாம் 1 வருசத்துக்கப்பாறம் எடுத்து சந்து முனையில சிந்து பாடிட்டாரு.

    என்னமோ நமக்கு பெரிய அளவுல டேமேஜ் பண்ணிக்கிட்டிருக்காப்ல பார்ட்டிக்கு ஒரு எண்ணம். அதனால தான் ” அன்பரே ! நீங்க ஒன்னத்தையும் பிடுங்கலை வலையுலகம் கண்டுக்காம விட்டுட்ட பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடருக்கு சம்பளமில்லாத பி.ஆர்.ஓவா பப்ளிசிட்டி கொடுத்துக்கிட்டிருக்கிங்கன்னு சொல்லத்தேன் இந்த டாப் சீக்ரெட்டை போட்டு உடைச்சேன்.

    உண்மையிலயே ஜா.ரா அப்பாவின்னா தன் பக்கத்து ஆதாரங்களை பட்டியலிட சொல்லுங்க. ( என் ஐடியில ஆரோ வள்ளாண்டாங்க. என் ப்ளாகை ஹாக் பண்ணிட்டாய்ங்கங்கறதெல்லாம் உடான்ஸு)

    அபாத்திர தானம் ஆபத்தானது. உங்க இரக்கத்தை அப்பாவிகளுக்கு காட்டினா ஓகே. அடப்பாவிகளுக்கு காட்டினா நாஸ்திதேன்.

    டவுசர் பாண்டி said:
    October 14, 2011 at 2:51 pm

    ஆஹா! கதை ட்வெல்பி பட ஸ்டோரி மாறிலா திரும்புது. நைனா, நானு எப்பயும் ஒங்க கட்சிதேன். மத்தபடி சோசியம்னு வரச்ச சீக்ரெட்ட போட்டு ஒடைக்கலாம்னு பாத்தேன். மத்தபடி ஜா.ரா. ஆருன்னே நமக்கு தெரியாதுங்க்னா. நானு இந்த ஆட்டத்துக்கு வரலேங்க்னா.ஆழ உடுங்க சாமியோவ்.நானு இந்த வெளாட்டுக்கு வரலேங்க்னா.

    கிருஷ்ணா said:
    October 14, 2011 at 2:50 pm

    ///என்னோட தீர்ப்பு இன்னான்னா, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜா.ரா. குற்றவாளியல்ல என்பதுதேன்////

    நானும் அப்படிதான் நினைக்கிறன்… 🙂
    இப்போ புதுசா எனக்கு ஒரு டவுட் கெளம்ப ஆரம்பிச்சிருச்சு….
    டவுசர் பாண்டி தான் முருகேசோ என்று 🙂 🙂

    டவுசர் பாண்டி said:
    October 15, 2011 at 1:41 am

    அடப்பாவிங்களா,

    மட்டன கடிச்சி, பீஃப்ப கடிச்சி, கடைசில சிக்கன கடிச்ச கதையா, நம்ம பக்கம் கேமராவ திருப்பி விடுறீங்களே. கிருஷ்ணான்னே, எண்ணிய மட்டும் கோர்த்து விட்டா எப்டி? அப்டின்னா நாம பழகுனதுக்கு என்ன அர்த்தம்னே. நாம ஒண்ணா சேந்து தானே செஞ்சம். நீங்களும் தொணைக்கி வாங்கனே. கடைசி நேரத்துல இப்பிடி கழண்டுகிட்டா எப்டினே?

  Mani said:
  October 14, 2011 at 5:14 am

  ////அய்யரும் நானே முருகேசனும் நானே./////

  ஓகோ கதை இப்படி போகுதா?

  ஸ்ரீனிவாச ஐயங்கார் = சித்தூர் அய்யர் கோபி கிருஷ்ணன் = http://ayyarthegreat.blogspot.com = சித்தூர் முருகேசன் = ஹிட்ஸ் = ?????????

  இந்த விஷயம் தெரிந்து தான் போலி உங்களை கிழிக்கறாரா?

  போலி முருகேசன் = போலி ஸ்ரீனிவாச ஐயங்கார் = http://ayyerthegreat.blogspot.com = etc. etc., = ???????

  இதில் பாதிக்கப்பட்ட அப்பாவியின் மனம் என்ன பாடுபடும்.

  எனக்கு வாத்தியார் பாட்டுதான் ஞா. வருது.

  கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
  நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
  அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
  அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

  பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
  உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.

  கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
  நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது.

  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

   S Murugesan said:
   October 14, 2011 at 5:46 am

   மணி அண்ணே !
   அய்யர் பேர்ல பதிவு போட்டதோட நாம ஷாட் கட் பண்ணிட்டம். எடிட்டிங் செக்சன்ல குப்பைக்கூடைய கவிழ்த்து பொறுக்கி அதை ஊரெல்லாம் இரைத்தது – நம்ம பேர்லயே வந்து சாக்கடை கமெண்ட் போட்டு நாறடிச்சது இத்யாதி பெருமை எல்லாம் நம்ம ஜா.ராவுக்குத்தேன். இதுல அப்பாவி ஆருமில்லை. அடப்பாவிக தான்.

   நமக்காச்சும் ஒரு நல்ல நோக்கம் இருந்தது ( கவுண்டர் பார்ட்டை வச்சு இன்னம் க்ளியரா அவாளை கிளிக்கிறது) ஆனால் ஜாராவுக்கு ?

    கிருஷ்ணா said:
    October 14, 2011 at 10:40 am

    ஒவ்வொருவருக்குமே அவர்கள் செய்தால் சரி…மற்றவன் செய்தால் குத்தம்…
    நீங்கள் உங்கள் மீது சேற்றை (ஐயர் தி கிரேட்) வாரி இறைத்து கொண்டீர்கள்….போலி முருகேசு மலத்தை வாரி இறைத்தார்…இதில் என்ன பெரிய வித்தியாசம்??
    தற்சமயம் சனி புத்தி… வாக்கு சனி வேறு….
    யாரை தான் குத்தம் சொல்ல??
    இதில் கோபி கிருஷ்ணன் என்று ஒரு ரோல் வேறு….
    அவர் வேறு உங்களை புகழ்வது போல ஒரு bulid up ??
    எதற்கு இந்த தேவை இல்லாத வேலை???

    கிருஷ்ணா said:
    October 14, 2011 at 10:47 am

    இதை பார்வை யாளனாய் இருந்து படிப்பவன் என்ன நினைப்பான்…. 😦

   கிருஷ்ணா said:
   October 14, 2011 at 10:43 am

   //நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.//

   நீங்கள் சொல்ல்வது சரி …குற்றம் குற்றமே

   //இதில் பாதிக்கப்பட்ட அப்பாவியின் மனம் என்ன பாடுபடும்.//

   😦

   டவுசர் பாண்டி said:
   October 14, 2011 at 1:59 pm

   என்னது.. நைனா அய்யரா? சாரிங்க்னா. அய்யர் வந்து நைனாவா? இன்னாங்கடா இது ஒரே ஆச்சர்யமாகீது. சீரணிக்க முடிலீங்க்னா. ஏற்கனவே மண்ட கொலம்பித்தேன் திரியிறன். இதுல புதுசா நீங்க வேற கொளப்பி உடுரீன்களே.

   கிருஷ்ணா said:
   October 14, 2011 at 2:40 pm

   /////ஸ்ரீனிவாச ஐயங்கார் = சித்தூர் அய்யர் கோபி கிருஷ்ணன் = http://ayyarthegreat.blogspot.com = சித்தூர் முருகேசன் = ஹிட்ஸ் = ????????? /////

   ////அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
   அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது////

   மணி அண்ணே,
   அறிவையும் நம்ப கூடாது….. அதையும் கடந்து உள்ளொளி உள்ளது …அதையும் நம்ப கூடாது….அதை உணர வேண்டும் ….அதை உணர உணர ..பின் அதில் லயிக்க வேண்டும் ….அது மட்டுமே சாஸ்வதம்…..
   மற்ற எல்லாமே ((ஒருநாள் வெறும்)) மண்…..

   ரமண மகரிஷி சாமாதி-க்கு சென்று வெறுமனே அமர்ந்து இருந்தால் ….சூச்சமாமா மாற ஆரம்பிப்பீர்கள்…..
   அந்த சூச்சமம் தான் யார் என்பதை சொல்லும்….
   அதனால் தான் தன்னை உணர்ந்த யோகிகள் வெறுமனே வாழ்ந்தார்கள்…..

   ////நமக்காச்சும் ஒரு நல்ல நோக்கம் இருந்தது ( கவுண்டர் பார்ட்டை வச்சு இன்னம் க்ளியரா அவாளை கிளிக்கிறது) ஆனால் ஜாராவுக்கு ?
   ////

   நமது மன ஆணவம் உலகத்தையே மாற்ற துடிக்கிறது ….
   இறுதியில் மண்ணோடு மண்ணாக மாறுகிறது…..
   நல்ல நோக்கம் என்பது ஆணவத்தின் அண்ணன்….. கெட்ட நோக்கம் என்பது ஆணவத்தின் தம்பி 🙂
   அண்ணன் ஒரு வகையில் சரிதான் என்றாலும்
   மன’திடம்’ (விழிப்பாக இருக்க) வேண்டும் 🙂

   சரி இதை எல்லாம் என்னிடம் ஏன் சொல்லுகிறாய் என்கிறிர்களா…..

   சும்மா உங்ககிட்ட சொல்லுற மாதிரி என்கிட்டே நானே சொல்லி சரி பார்த்துகிட்டேன் 🙂

  swami said:
  October 15, 2011 at 3:35 am

  அண்ணன் பேச்சுக்கே நூற்றியெட்டு மாடுலஷுன் வைசிருக்கப்ப, எழுத்துக்கு எத்தனை அவதாரம் வச்சு இருக்காரோ , கிருஷ்ணனுக்கே வெளிச்சம்!! டவுசர் (!!!)அவதாரம் என்னைக்கு வெளிவரபோகுதுன்னு தெரியலை.

   டவுசர் பாண்டி said:
   October 16, 2011 at 2:53 am

   ஸ்வாமியன்னே,

   என்னனே பொடி கிடி வெச்சி எதோ சொல்றீங்க. ஒன்னும் புரியலேன்னே. டவுசர் டவுசர்தேன். கிருஷ்ணா கிருஷ்ணாதேன். ஸ்வாமி ஸ்வாமிதேன். நீங்க நீங்கதேன். நான் நாந்தேன். எதுக்குனே ஆளுங்கள போட்டு கொளப்பிக்கிட்டு மனசையும் கொளப்புறீங்க. நம்ம பாரம்பரிய சோசியத்துக்குல்லாரையே எத்தினியோ கொலப்படிங்க கெடக்கு. அதுக்கே இன்னம் வெட தெரிய மாட்டேங்கு. உதாரத்துக்கு சூரியன் இருக்குற எடத்துக்கு ஒம்போதாம் எடத்துக்கு சூரியனோட அஷ்ட வர்க்கத்துல எத்தினி பரல் இருக்கோ அத்தினி வேறு அப்பனோட கூட பொறந்தவைங்கன்னு மிந்தி உள்ள ரெக்கார்டு இப்ப செல்லுபடியாக மாட்டுக்கு. ஆனாலும் நாம பாரம்பரிய சோசியத்ததேன் இன்னம் கொண்டாடிக்கிட்டு கெடக்கம். இத மாறி இன்னம் நெரிய கொலப்புடி இருக்குங்க்னா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s