ஓ பக்கங்களும் – ஞானி சாரும்

Posted on

அண்ணே வணக்கம்ணே!

நேத்திக்கு கலைஞரய்யா போதும் விட்டுருங்கனு ஒரு ஐட்டம் போட்டேன். ஆக்சுவலா ரெட்டை வெடி வெடிச்சிருக்கனும். கல்கியில் ஞானி சாரோட உளறல்களை பத்தியும் நேத்தே எழுதியாச்சு. ஆனாலும்
இடையில இ.பி காரவுக புண்ணியம் கட்டிக்கிட்டா பதிவே போடமுடியாம போயிரப்போவுதுன்னு உசாராகி தாத்தா மேட்டரை மட்டும் அடிச்சு உட்டுட்டன். நல்லவேளை ஆரும் உனுக்கு இன்னா ரைட் கீதுன்னு கேட்கலை.

அந்த தகிரியத்துல இன்னைக்கு மேட்டர்.இந்த ஞானி ஐயா மோடி அரசிடம் “கைச்செலவுக்கு” பணம் வாங்கிக்கிட்டு சிறப்பிதழ் வெளியிட்ட கல்கியில ஓ பக்கங்களை எழுதிக்கிட்டு வர்ராரு. இதுக்கு மிந்தி விகடன்ல,குமுதத்துல எழுதினாரு.இப்பம் கல்கி

( ஓ பக்கம் இத்தீனி பத்திரிக்கைகளுக்கு மாறிவந்ததே அவரோட நேர்மைக்கு ஒரு ஆதாரம் – ஞானி ஐயா.. இந்த பதிவுக்கு கல்கியின் அடுத்த ஓ பக்கத்துல பதில் சொல்ல ட்ரை பண்ணாதிங்க. எடிட் பண்ணிருவாய்ங்க. சித்தூர் முருகேசனை எல்லாம் கல்கி காம்பவுண்ட் பக்கம் கூட விடமாட்டாய்ங்க – அப்பாறம் தன்மானம் அது இதுன்னு ஓ பக்கம் இன்னொரு தாட்டி பத்திரிக்கை மாற வேண்டி வந்துரப்போகுது.. ஃப்ரீயா உடுங்க)

ஞானி சாரு அந்த” இனத்தை சேர்ந்தவருன்னாலும் ஐயாவோட எழுத்துல ஒரு வித நேர்மை இருக்கும். துணிவிருக்கும். அவர் எழுதின பல விஷயங்கள்ள நமக்கு ஒத்தக்கருத்து உண்டு. ஆனாலும் லேட்டஸ்டா சின்னதா ஒரு அரசியல் அமைப்பு சட்டத்தையே எழுத முயற்சி பண்ணி – சகட்டுமேனிகு ரோசனைகள் முன் வச்சிருக்காரு. இன்னாடா ஒரு ஆறுதல்னா கல்கி சிறப்பிதழ் வெளியிட்ட மோடி கூட இதையெல்லாம் சீந்தமாட்டாரு.

அரசியல் தூய்மை , நிர்வாக /தேர்தல் சீர்திருத்தம் இது பற்றியெல்லாம் யோசிக்கிறவுக தாம் விரும்பியோ விரும்பாமயோ தங்களுக்கு/ தங்களை போன்றவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க ரூட்டை க்ளியர் பண்ணிக்கிறாப்லயே ரோசிக்கிறாய்ங்க. ( நான் உட்பட). இது ஞானி சாரோட ஓ பக்கத்தை படிச்ச பிற்காடுதான் நமக்கே ஸ்பார்க் ஆச்சு. Read More

8 thoughts on “ஓ பக்கங்களும் – ஞானி சாரும்

  டவுசர் பாண்டி said:
  October 12, 2011 at 2:44 pm

  ஜோதிடம் மூட(ர்களின்) நம்பிக்கையா?

  நாங்களும் கேப்போம்ல.

  ஏழாம் பாவம் பொஞ்சாதிய குறிக்கி. ஓகே. ஏழுக்கு ஏழான ஒன்னு (அதாவது பார்ட்டிக்காறன) கணவன குறிக்கி. எல்லாம் ஓக்கே. நாலாம் பாவம் தாய குறிக்கி. அப்டின்னா நாலுக்கேழு பத்து தகப்பனல்லா குறிக்கோணும். அத உட்டுப்புட்டு நாலுக்கு ஆறானா ஒம்போதாம் பாவத்த இன்னாத்துக்கு குடுத்துருக்காய்ங்க. சரிங்க்ணா. அஞ்சாம் பாவமா புள்ளக்குட்டிங்கள குறிக்கி. ஓகே. அஞ்சிக்கி ஒம்போதான ஒன்னு அப்பன குறிக்கி. டபுள் ஓக்கே. அப்டின்னா அஞ்சிக்கி நாளான எட்ட தாயெல்லா குறிக்கோணும். இன்னாங்கடா இது நீங்களும் ஒங்க புண்ணாக்கு சோசியமும். அதுக்குத்தேன் ஒங்களுக்கு பிரசன்ன சோசியம் வோனும்ன்றது.

   S Murugesan said:
   October 12, 2011 at 2:54 pm

   பாண்டி ,
   4 ன்னா அம்மா. 9 னா அப்பா. அம்மாவுக்கு கவுண்டர் பார்ட் அப்பாதானே ( 6 எதிரிகளை/கவுண்டர் பார்ட்டை காட்டும்) அதனால இப்படி ஒரு விதிய வச்சிருப்பாய்ங்களோ என்னமோ?

  டவுசர் பாண்டி said:
  October 12, 2011 at 5:13 pm

  நம்ம சைட்டுல ஆடிக்கு கமெண்டு போட்டா அமாசைக்கிதேன் ரிலீஸ் ஆயி பதில் வருதுன்றதால நைநாட்ட போன்லயே டவுட்ட கிளியர் பண்ணிரலாம்னு ஒரு ஐடியா தோணிச்சி.

  விளைவு?

  எடுத்தேன் போன. சொலட்டுனேன் நம்பர.

  எதிர்முனையில் நைனா வருவாரு வருவாருன்னு போனு மேல போன போட்டு கை வலிச்சதுதேன் மிச்சம். டொய்யிங் டொய்யிங்நு சவுண்டு கேட்டதுதேன் மிச்சம். சரி முயற்சி திருவினையாக்கும்னு சொல்லுவாய்ங்க, நமக்கு திருவினையாக்கலானும் பரவால்ல எதிர்வினையாக்கிரப்டாதுன்னு நெனச்சிக்கிட்டே கடைசியா ஒருதாட்டி ரெண்டுல ஒன்னு பாத்துருவோமென்னு ட்ரை பண்ணேன்.

  கெடச்சி லைனு.

  ஆனா பார்ட்டி கட் பண்ணிட்டாரு.

  சரி நமக்கு டைம் சரியில்லன்னு சாங்காலம் ட்ரை பண்ணேன். மறுபடியும் ரிங் போச்சி. கூடவே நம்ம மானமும் போயிரும்னு நெனச்சி பயந்துக்கினே….

  டானாபானா: ஹலோ…

  சீனாமூனா: ஹலோ….

  டானாபானா: ஹலோ….

  சீனாமூனா: நாம ரெண்டு பேரும் இப்படியே மாறி மாறி சொல்லிக்கிட்டு கெடக்க வேண்டியதுதான். நீங்க யாருங்க?

  டானாபானா: வணக்கம் சாமி. நான் டவுசர் பாண்டி பேசுறேன். ஒங்களோட சைட்டுல கமெண்டு போடுவேன்லா?

  சீனாமூனா: ஒஹ்… ஆங். வணக்கம்ப்பா. என்ன விஷயம்? நல்லாருக்கியா?

  டானாபானா: ஆங்…நல்லேருக்கேன் சாமி. இல்ல இன்னிக்கி ஒரு கமெண்டு போட்டேன். அதப்பத்தி வெளக்கம் கேக்கலாமுன்னு…… நீங்க இப்ப ப்ரீயா இருக்கீங்களா சாமி. எடஞ்சளுக்கு மன்னிக்கணும். நான் வேண்ணா அப்புறம் ட்ரை பண்ணட்டா?

  சீனாமூனா: இல்ல பரவால்லப்பா. சொல்லு. இப்ப ப்ரீதான். என்ன டவுட்டு.

  டானாபானா: ரெம்ப நன்றி சாமி. அதாவது இப்ப ஒரு கமெண்டு போட்டேன். அந்த நாளுக்கேழு பத்தி. ஒஹ் அதுவா.

  சீனாமூனா: அது வேற ஒன்னுமில்லப்பா. நாளைக்கு தெளிவா கமெண்டுல சொல்றேன். இப்ப லைட்டா சொல்றேன். ஜென்ரளா லக்னத்துக்கு நாலாமெடம் தாயக்குறிக்கின்னு சோசியம் தெரிஞ்ச எல்லாருக்கும் தெரியும். எதுக்கு நால குடுத்தாய்ங்கண்ணா காலப்புருஷ கான்செப்ட் படி மேசத்துக்கு நாலு கடகம் தாய் வீடு. ஓனர் சந்திரன். சந்திரன் தாயுள்ளத்தோட..கடல் மாரி…வெள்ள மனசோட… இந்தமாரி நெறிய பில்ட்டப் இருக்கு. மொத்தத்துல சந்திரன் தாய குரிக்காருன்னு நமக்கு தெரியும். சரி அப்டின்னா ஒம்போதுக்கதிபதி குருல்லா வருது. சூரியன்தானே தந்தைய குரிக்கும்னு நீ கேப்ப. அப்டிதானே?

  டானாபானா: ஆமாம் சாமி.

  சீனாமூனா: இப்ப சின்ன வேல இருக்குறதால நான் நாளைக்கு தெளிவா கமெண்டுல சொல்றேன். ஓகேவா?

  டானாபானா: ஆங்… ரெம்ப நன்றி சாமி பதில் சொன்னதுக்கு.

  சீனாமூனா: நல்லது..

   S Murugesan said:
   October 12, 2011 at 5:57 pm

   பாண்டி!
   அந்த சந்திரனுக்கே ஒளிய கொடுக்கறது சூரியன் தானே. அம்மா அப்பச்சி ஊட்டனும்னா அப்பா வேலை வெட்டிக்கு போயி காசு கொண்டாந்தாதானே ஊட்டமுடியும். அதனல பித்ருகாரகனா சூரியனை டிசைட் பண்ணியிருப்பாய்ங்கனு நினைக்கிறேன்.

    டவுசர் பாண்டி said:
    October 13, 2011 at 2:38 am

    ஆமா நைனா. நீங்க சொன்னதும் கூட்டிக் கழிச்சி பாத்தா கரீட்டாத்தேன் வருது.

    இருந்தாலும் நாடி சோசியத்துல இதுக்கு என்ன சொல்றாய்ங்கண்ணா, மொதல்ல நாடி சோசியம்னா கடந்த காலத்த பத்தி புட்டு புட்டு வைக்கிறது. ஓல்ட் இஸ் கோல்டு தேன். இல்லேங்களா. பட் வர்ற பார்ட்டிங்க பூரா எதிர்காலத்த பத்தித்தேன் தெரிஞ்சிக்க விரும்புவாய்ங்க. அந்த எடத்துலதேன் பிரசன்னம் என்டராவுது. சரிங்க்ணா. பாரம்பரிய சோசியத்துல பார்ட்டிய மென்சன் பண்றது லகனம்னு சோசியத்துல ஏபிசிடி தெரிஞ்சவைங்க அல்லாத்துக்குமே தெரியும். அதே மாறி நாடி சோசியத்துல பார்ட்டிக்காறன குறிக்கிறது ஜீவக்காரகனான குறு பகவான்னும் நமக்கெல்லாம் தெரியும். ஷோ, குறு பகவானோட ஊடு தனுசு. தனுசுக்கு ஒம்போதாமெடம் சிம்மம் (சூரியன்). அந்த ஒம்போதுக்கு (அதாவது டேடிக்கி) அஞ்சி (தனுசு வருதா) ஜீவக்காரகன் ஊடு. கூட்டிக்கழிச்சி பாருங்க. கணக்கு டேளியாவும்.

    ISMAIL said:
    October 13, 2011 at 5:46 am

    எதோ என்னாலான குழப்பம். கடக ராசியில் இருந்து மகர ராசி வரை பார்த்தல் சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி அப்படின்னு ஒரு வரிசை வருது.
    கொஞ்சம் ரிவர்ஸ் பார்த்தல் சிம்ம ராசி முதல் கும்ப ராசி வரையும் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று வருகிறது.
    இந்த வரிசை அமைப்பிற்கும் சோதிட கணிப்பிர்க்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?

    டவுசர் பாண்டி said:
    October 14, 2011 at 4:11 pm

    சிவசத்தி யோவம்னு பெருசுங்க சொல்லுவாய்ங்க. அத மாறி ஏதாவது இருக்கும்னு நெனைக்கேன். திருவிளையாடல்ல புள்ளையாரு ஞானபலத்த வாங்கி சூஸ் போடுறதுக்காண்டி அவ்வை கெயவிட்ட, அம்மையப்பன் பத்தி வெளக்கம் கேப்பாருல்லா. அத மாறி ஏதாவது இருக்கும்னு நெனைக்கிறேன். அல்லாத்துக்கும் சின்ன ஊடு பெரிய ஊடுன்னு ரெண்டு ரெண்டா குடுத்த ஆண்டவன் சூரிய சந்திரருக்கு மட்டும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு ஒத்த ஊட்ட குடுத்துட்டாரு.

    நீங்க கேட்ட கேள்வி சம்மந்தமா போன வருசத்துல ஒரு புராணக்கத ஒன்னு படிச்சேன். ரிவைன் பண்ணி பாத்தன். வர மாட்டுக்கு. ஆனா சைண்டிபிக்கா என்ன காரணமுன்னு தெரிலனே.

  டவுசர் பாண்டி said:
  October 12, 2011 at 5:40 pm

  நைனா போன்ல சொன்ன இந்த விஷியத்த இங்கன சொல்லாம உட்டுட்டேங்னா.

  களத்திரகாரகன்னு இன்னாத்துக்கு சுக்கிரன சொல்றாய்ங்கன்னா காலபுர்ஸ கான்செப்ட்படி மேசத்துக்கு ஏழு துலாம் (சுக்ரன்) பொஞ்சாதிய குரிக்கி. பொஞ்சாதிக்கி ஏழு (அதாவ்து துலாத்துக்கு ஏழு) மேசம் (செவ்வா) ஹஸ்பண்ட குரிக்கி. இன்னம் இந்த பெல்லி (கன்னால) மேட்ட்ருல நெரிய கில்லி இருக்குங்னா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s