ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையே

Posted on

இந்த பதிவுக்கான அசலான நோக்கத்தை இங்கேயும் சொல்லியிருக்கேன். ஒரு ஓட்டு ஓட்டிட்டிங்கனா புண்ணியமா போகும். ஜோதிடம் ஒரு விஞ்ஞானமேன்னு நிரூபிக்கிற அளவுக்கு நம்ம கிட்டே வாதங்கள் ஆயிரக்கணக்குல இருந்தாலும் அதை எடுத்து வைக்க ஒரு முகாந்திரம் வேணமே வெறுப்பு இல்லாம கொஞ்சம் பொறுப்பா வேற ஆராச்சும் ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேனுட்டு வாதங்களை எடுத்துவச்சா நல்லாருக்கும். அதை ஒரு முகாந்திரமா வச்சுக்கிட்டு நம்ம சரக்கையெல்லாம் அவுத்து விடலாம்னு கனவு கண்டேன். ஊஹூம்

கனமான வில்லன் ரோலை செய்ய பொருத்தமான வில்லன் நடிகர் கிடைக்காதப்போ ஹீரோவே டபுள் ரோல் பண்ற வழக்கத்தை துவக்கி வச்சது நம்ம தலைவருதேன். (ஹி ஹி எங்க ஊரு தேவுடு என்.டி.ஆரை சொன்னேன்)

நம்ம வாதங்களை முழுக்க கேட்டுட்டு குருவுக்கேத்த சிஷ்யனா குருவை மிஞ்சின சிஷ்யனான்னு நீங்களே முடிவு பண்ணுங்க

இப்படி வாதங்களை எடுத்து வைக்கறதே இதே வாதங்களை வேற ஆராச்சும் எடுத்துவச்சா யங் மாஸ்டர் சினிமாவுல ஜாக்கிசான் வாதாம் கொட்டைகளை நொறுக்கின கணக்கா நம்மாளுங்க நொறுக்கனும். அதுக்கான பயிற்சிதான் இந்த பதிவு.Read More

Advertisements

33 thoughts on “ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையே

  yoghi said:
  October 9, 2011 at 9:29 pm

  ஜோதிடம் உன்மைதான் ஆனா எப்டியாபட்ட சோதிடனும் நடடக்கப்போறத முன்னாடியே கனிக்கமுடியாது அப்டியே துள்ளியமா கனிச்சுட்டாலும் விதிய எதுத்து ஒன்னும் கிழிக்க முடியாது

  சோதிடம் யாரையும் காப்பாதுனதும் இல்ல சோதிடம் பாத்து வரப்போர தீமையை அட்லீஸ்ட் டைவெர்ட் பன்னிடலாம்னு சில சோதிடர்கள் நம்புராங்க‌

  ஆனா விதி அவுங்கலையும் பாத்து கைகொட்டி சிரிச்சுக்கிட்டு இருக்குன்னு பாவம் அவய்ங்களுக்கும் தெறியாது

  சோதிடம் சைன்ஸ் தான் கனக்குதான் என் அனுபவத்துல நடந்த விசயங்களை எந்த கிரஹ அடிப்படையில் அப்படி நடந்ததுன்னு கெஸ் பன்னலாம்
  மற்றபடி சோதிடம் பாற்த்து எதிற்காலத்தை த்றிஞ்சுக்காம இறுந்துட்டா பெட்டர்

  ஏன்னா இது சொந்த்த செலவுல சூனியம் வச்சுக்குர மாதிரி ( சாவர நாள் தெறிஞ்சுட்டா வாழ்ர மிச்ச நாட்கள் நரகமா ஆயிடும்)

  இதெல்லாம் என் சொந்த கருத்துதான் மாற்று கருத்து இறுந்த சொல்லுஙக‌

  chandhra mohan said:
  October 10, 2011 at 5:15 am

  dear sir kindly tell me the apple ceo steve jobs jothagam how he will achive the top number one in business and he died due to pancrea cacer in the age of 56

  கல்லூரி கலக்கல் said:
  October 10, 2011 at 8:37 am

  சரஸ்வதி பூஜை விடுமுறைக்குப் பின் அந்தக்கல்லூரி மீண்டும் செயல்படத்
  துவங்கியது. கல்லூரி வளாகத்தில் மாணவ சிங்கங்களும், மாணவிய குட்டிங்களும் ஒருவரையொருவர் விசாரித்தபடி இருந்தனர். சிலர் மங்காத்தா சினிமாவையும், வேலாயுதம் சினிமா ட்ரைலர் பற்றியும், பலர் அனுபவஜோதிடம் வெப்சைட்டை பற்றியும் (?) ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தனர். மணி கரீட்டா ஒம்போதரையானவொடனே அங்கு அதுவரையில் உறங்கிக்கொண்டிருந்த அந்த அலாரம் “க்ரீங்ங்ங்ங்….” என்று மிகவும் சத்தமாக் ஒலி எழுப்பியது.

  “ச்சே… கொஞ்சங்கூட நாட்டு நடப்ப பத்தி நாலு விசியத்த பத்தி ப்ரீயா பேச
  உட மாட்டுக்கானுங்கலே. மொதல்ல இதக்கழட்டி பேரிச்சம் பழத்துக்கு
  போட்டாத்தேன் சரி வரும்” …. என்று ஒலி எழுப்பிக்கொண்டிருந்த அந்த
  அலாரத்தை பார்த்து கமெண்ட் அடித்தவாறே கிளாசுக்குள் சென்று அமர்ந்தனர்.

  பேராசிரியர் சீனாமூனா கிளாசுக்குள் நுழைந்ததும் அனைவரும் மவுனமாக எழுந்து நின்றனர். அவர் “ஷிட்” (கெட்டவார்த்த இல்லீங்க்ணா) என்று சொன்னதும் அனைவரும் அமர்ந்தனர்.

  சீனாமூனா: வெல்கம் பேக். ஸ்டூடண்ட்ஸ்! சரஸ்வதி பூஜை எல்லாம் சிறப்பா
  கொண்டாடிருப்பீங்கன்னு நினைக்கிறேன். புக்ஸை எல்லாம் வச்சு நல்லா சாமி
  கும்புட்டீங்களா?

  (மாணவர்கள் கோரசாக ஆமாம் சார் என்று சந்தோசமாக கூறினர்)

  சீனாமூனா: ஓகே. (என்றவாறே வழக்கம்போல் அட்டெண்டன்சை முடித்த பிறகு புல் பிரெசண்டைகண்டு அசந்து போனார்) ஸ்டூடன்ஸ், உங்களுக்கு ஜோதிடத்தின் மீது உள்ள ஆர்வத்தைக் கண்டு சந்தோசப்படுகிறேன். போன கிளாசுல கே.பி ஜோதிடத்துல உள்ள ஒப்பெனிங்க பாத்தோம். இப்பம் பிரசன்ன ஜாதகத்தை பத்தி பாப்பம். மொதல்ல பிரசன்னம்னா இங்கிளிஷுல PRESENT. அதாவது தற்போதைய, அப்போதைய (!) நிலை.

  ஒருத்தர் ஜாதகம் வச்சிருக்காரோ இல்லையோ அவசரமா செல பிரச்செனைகள் வரும் போது பிரசன்ன ஜோதிடத்தால தெரிஞ்சுக்க விரும்புவார். அவரும் ஜோதிடரை தேடி போவார் . அல்லது தபாலிலோ தொலைப்பெசியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறுவார்.

  ட.பா: சார், இப்ப ஒருத்தரு பிரசன்னம் கேட்டு கடுதாசியோ, இல்லாங்காட்டி
  மெயிலோ, இல்ல போனோ பண்ணி மேட்டர சொல்லிப்புட்டாருன்னு வெச்சிக்குவம். நமக்கு அந்த நேரத்துல நெரிய சோலி இருந்து அத முடிச்சிட்டு பாக்கச்சில அவிங்க போன் பண்ண நேரத்த எடுக்கணுமா எப்டின்னு சொல்லுங்களேன். இப்ப வெளிய வச்சி மீட் பண்ணி ப்ராப்ளத்த சொல்லி கேக்கும் போது அந்த நேரத்துல நம்மள்ட்ட பஞ்சாங்கமோ எபிமேரிசோ இருக்காது? அப்டி இருக்கும்போது எப்டிசார் ?

  சீனாமூனா: குட். டவுசர் பாண்டி, நீ இப்பதான் உருப்படியா நல்ல கேள்வி
  கேக்க ஆரம்பிச்சிருக்க. கிளாச ஒழுங்கா கவனிக்கேன்னு உன்னோட கேள்விலேயே தெரியுது. ஓகே. ஜோதிடர் எப்பொழுது ஒரு விஷயத்திற்காக பிரசன்னம் பார்க்கவேண்டும் என்று அவருக்கு தோணுகிறதோ அந்த நேரத்தையே எடுத்துக்கொண்டு கணிக்க வேண்டும். அது முன்பே கேட்கப்பட்ட கேள்வியாக இருந்தாலும் சரி, அல்லது பின்பு நடக்கப்போகும் காரியத்திற்காக
  கேட்கப்படும் கேளிவியாக இருந்தாலும் சரி அவர் எப்ப கட்டம்போட பேனாவ தொரக்காரோ அந்த நேரந்தேன் பிரசன்ன நேரம். அதத்தேன் கணக்குல எடுக்கணும்

  மணி: சார், இப்ப ஒரு பிசியான ஜோசியர் கிட்டே 2 மணி நேரத்துல கொறஞ்ச.பட்சம் 20 பேராவது வருவாய்ங்க. அப்போ 20 பேரும் ஒரே வேலையா வந்தாப்லயா? 20 பேருக்கும் ஒரே முடிவு தானா?

  சீனாமூனா: ஆங்…நல்ல கேள்வி. இந்த கேள்விக்கி கேப்பில என்ன சொல்றாய்ங்கன்ணா ஒரு லக்னம் வேணம்னா ரெண்டு மன்னேரத்துக்கு ஒரே ராசில இருக்கலாம். பட் உப நச்சத்திராதிபதி வந்து நாலு நிமிஷத்துக்கு ஒரு தாட்டு நவன்டுக்கிட்டே இருக்கும். அந்த சப்லார்டு குறிக்கிற பாவங்கதேன் வந்த பார்த்திங்கள பத்தி சொல்லும். நாலு நிமிஷத்துக்கே இப்டின்னா எரநூத்தி நாப்பது நிமிஷம்னு (அதாவது ரெண்டு மன்னேரம்னா) எடுத்துக்கிட்டா முப்பது தாட்டி மாறும். சரி. இது மைன்யூட்டா கணிக்கிரதுக்குண்டான மொற. இதுக்கு நம்ம பாரம்பரிய சோதிடத்த எடுத்துக்கிட்டா பைனோரு நிமிஷத்துல அம்ச லக்னம் மாறும். நாடி சோசியத்த எடுத்துக்கிட்டா, ஓரை முறைல கண்டுபுடிச்சிரலாம். இப்ப உதாரணத்துக்கு ஒரே நாள்ல வர்ற ஆறு பிரசன்னத்த பாப்பம். இந்த சாதகத்த பாருங்க.

  மொதல்ல சனி ஓரைல ஒரு சாதகர் வர்றதா வெச்சிக்குவம். சனி ஓரை முடிரதுக்கு இன்னம் பதினஞ்சி நிமிசந்தேன் பாக்கி என்ற நெலமைல அவசரமா வந்து நம்மல்ல்ட்ட ஆலோசன கேக்குறாரு. செட்டர்ன்னாலே தொழிலு, யாவாரம் இந்தமாரி கொச்டினாருக்கும். இதுல இன்னொரு முக்கியமான பாய்ண்ட நாம நோட் பண்ணனும். அதாவது பார்ட்டி சனி ஓரை முடிய இன்னம் பதினஞ்சி நிமிஷம் முன்னக்கட்டியே வந்துருக்காருன்னா பார்ட்டி செய்யிற தொழில வுட்டு மாறவோ இல்லாங்காட்டி மாத்தவோ வந்திருக்காருன்னு ஹோரைநாதன் நமக்கு இன்டியூசன் குடுப்பாரு. அதுபோவ அதுல லேசா பிரச்சன இருக்குறதையும் சொல்றாரு பாருங்க. ஓரநாதன் செட்டர்ணுக்கு ரெண்டு ஆறு பத்தாம் தெசைல ராகு செவ்வாருக்கு. அது தடைய உண்டாக்குது. சோ சனிபகவானுக்கு மூணு ஏழு பைநோன்னாம் தசைல உச்ச சந்தரன், சொந்த பலத்துல சுக்கிரன், புதன்.

  சந்த்ரன்னா ட்ராவெல், புதன்னா யாவாரம், சுக்கிரன்னா லக்சரி பேஷன் சாமாங்க. சோ சனி ஒரைல பார்ட்டி இந்த யாவரத்த பத்தி கேக்க வந்திருக்காரு. நம்மள நம்பி இந்த யாவரத்த ஆரம்பிச்சிட்டாருன்னு வெச்சிக்குவம். ஆரம்பத்துல லேசா தடங்கல் வரும். அந்த நேரத்துல நம்மள டுபாக்கூருன்னு கூட (மனசுக்குள்ள) சொல்லுவாரு. பொறவு புதன் கன்னி ராசிக்கி வர்ற நேரத்துல பிக்கப்பாயிருவாறு. இதுக்கு அஞ்சாறு மாசம் ஆவணும். அடுத்தா குறு ஒரைல பாப்பமா?

  அடுத்தாப்புல குறு ஒரைல அடுத்த பார்ட்டி வர்றாருன்னு வெச்சிக்குவம். இங்க குறு வக்கிர நெலைல விருச்சிக ராசில இருக்காரு. அவர ஏழாம் ஊட்டுலருந்து மூணு பெண் கெரகங்கள் பாக்காங்க. அதுல ஒன்னு சொந்த ஊட்டுல உள்ள சுக்கிரன். சுக்கிரன்னா ஆம்பளைய பொருத்தவர பொஞ்சாதி. அடுத்து பாருங்க புதனும் சந்திரனும். இந்த ரெண்டு வேறும் கள்ளக்காதல் மற்றும் கள்ள உறவுகல வெளிச்சம் போட்டுக்காட்டுராய்ங்க. அதனால பொஞ்சாதி கூட சண்ட. இது காணாதுன்னு சனி பகவான் இந்த ரெண்டு வேதத்தையும் மொரச்சாப்புல பாக்காரு. இந்த சந்த்ரன சனிபகவான் கடுமையா மொரைக்கிரதால கள்ளப்பொன்ஜாதி வாக்குவாதம் பண்ணி வெலகி போவா. (ஏன்னா சந்திரந்தேன் அந்த வூட்டுலருந்து வெளிஎருர ஸ்டேஜிலதேன் இருக்காரு. சோ இப்டியே ஒரு பிரசன்ன சாதகத்த வெச்சி பார்ட்டிட்ட எதுவும் கேக்காம ஒரு கதை வசனமே எழுதி நூருனாலு ஓட்டிரலாம். எல்லாத்துக்கும் பொருமதேன் ரெம்ப முக்கியம். அடுத்தாப்புல சூரிய ஓரயப்பாப்பமா? இல்ல நீங்களே ஹோம் ஒர்க் பண்ணிட்டு வர்றீங்களா?

  மாணவர்கள்: (ஆலவுட்டா சரி என்று நினைத்தவாறே) சரி சார். ( என்றனர் கோரசாக)

  சீனாமூனா: ஓகே ஸ்டூடண்ட்ஸ். அடுத்த கிளாசுல இன்னம் டீப்பா பாப்பம். (என்று சொல்லி முடிக்கவும் மணி சரியாக ஒளித்தது)

   டவுசர் பாண்டி said:
   October 10, 2011 at 9:12 am

   //நாலு நிமிஷத்துக்கே இப்டின்னா எரநூத்தி நாப்பது நிமிஷம்னு (அதாவது ரெண்டு மன்னேரம்னா) எடுத்துக்கிட்டா முப்பது தாட்டி மாறும்//

   கொரட்ட உட்டுக்கினே டைப்படிச்சிட்டம்போலகீது. எரநூத்தி நாப்பதில்லீங்கோ. நூத்தி இருவதுன்னு கரீட்டா வாசிங்க. ஒரு கேள்விக்கி பதில் சொல்ல ஒரு பக்கத்துல சம்மரி எழுத வேண்டிருக்கு. நானு ஸ்ட்ரேயட்டா விசியத்துக்கு வரலாம்னாக்க நம்ம மைண்டு கண்டத கற்பன பண்ணி தொலச்சிருது. அதான் கமெண்டு இம்புட்டு பெருசா நீண்டுட்டுங்க்னா.

  டவுசர் பாண்டி said:
  October 10, 2011 at 9:25 am

  மணியண்ணே,

  ஒங்கள்ல்ட்ட ஒரு சாப்ட்வேர் கேட்டுருந்தேன். எந்த பதிவுல கேட்டேன்னு தேடிப்பாத்தேன். ஒண்ணம் அடபட மாட்டேங்கு. சரி அதான் இங்கன கேக்குறேன். காசு குடுத்து வாங்குநீங்கன்னா வேண்டாம். பிரீயா கெடச்சதுன்னா நெட்டுல உட்டு எங்க வவுத்துல பால வார்க்கலாம்லா.. நாங்களும் யூஸ் பண்ணி பாப்பம்லா. ஒங்களால நாலு சாதி சனத்துக்கு பயன்படும்லா. ஏதும் காப்பிரைட் பெரச்சன வரும்னு தோனுச்சின்னா வேண்டாம்னே. கேப்பில ஒரு சாதகம் கணிக்க ஒன்ற மன்நேரம் ஆவுது. மண்ட காயுதுனே.

   Mani said:
   October 10, 2011 at 8:03 pm

   பாண்டியண்ணே! உங்களுக்கு லிங்க் கொடுக்கனும்னு ரொம்ப ஆசைதான். ஆனா பைல் சைஸ் ரொம்ப பெரிசா இருக்குது. 100 MB வரை இருக்குது எப்படின்ணே அனுப்பறது. மெயில் ஐடி கொடுத்தா பிரிச்சு பிரிச்சு அனுப்பறேன். ஒன்ரை மணிநேரம் வேலை ஒரு நிமிஷத்தில முடிச்சிரலாமே? அதுவும் மெயிலுக்கு வாங்களேன். நம்மிடம் கே.பி.யில ஏகப்பட்ட கலெக்ஷன்ஸ் இருக்கு. அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பனும்னு ஆசையாயிருக்கு.

   பாண்டியண்ணே! இதெல்லாம் ஒரு எக்சேஞ்சுதான். நான் கொடுத்தா நீங்க கொடுக்கமாட்டீங்களா என்ன? பணம் இல்லிண்ணே பயந்துராதீங்க. நான் சொன்னது ஜோதிட அறிவை. நல்ல முடிவா சொல்லுங்களேன்.

    டவுசர் பாண்டி said:
    October 12, 2011 at 2:10 pm

    மணியண்ணே,

    என்னனே எண்ணிய போயி அண்ணன் கின்னன்னு சொல்றீங்க. எனக்கு ஆரும் மருவாதி குடுக்கக்கூடாதுன்னுதேன் நம்ம பேருக்கு முன்னாடியே மிந்தி மாட்டுன டவுசர இன்னம் கழட்டாம அப்டியே வெச்சிருக்கேன். நீங்க என்னடான்னா டவுசர கலட்டி விட பாக்குறீங்களே. நானு மூளைக்கி வேல குடுத்துதேன் எந்த சோளியவும் பண்றது. இருந்தாலும் நம்ம கேள்குலேசன் கம்பீட்டர் சாதகத்தையே தூள் பண்ணிட்டுன்னு சொன்ன ஒடனே லேசா சபலம் தட்டிச்சி. அதான் கேட்டேன். மத்தபடி கம்பீட்டரையே நோண்டிக்கிட்டு பலன் சொல்லிக்கிட்டுருந்தா நம்ம டப்பா டேன்ஸ் ஆடிரும். இருந்தாலும் ரெடிமேட் சாதகத்த உட சொந்தமா போட்ட சாதகத்துல நம்ம கைல உள்ள ஒரு பவர் கட்டத்துக்குள்ள போற எபக்கு கம்பீட்டரு சாதகத்துல வராதுனே. என்னனே மெயிளைடிஎல்லாம் கேட்டு பெரியாளாக்க பாக்குறீங்க. அப்டி பெருசா என்னத்தநே சீக்ரெட்டா கேட்டுற போறீங்க.

    Mani said:
    October 13, 2011 at 11:18 am

    சரி பாண்டி! நம்ம டீல் சரியாக வரலை போலருக்குது. மெயில் ஐடி மேட்டரை நான் உட்டுர்ரேன். சாப்ட்வேர் மேட்ரை நீங்க விட்ருங்க. ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் உங்களை மேடையில ஏத்தி நாலு விஷயங்களை மக்களுக்கு உபயோகமா சொல்ல வைக்கலாம்னு பார்த்தேன். நீங்க கமெண்டுலேயே ஓட்டிர்ரேன்னு ரொம்ப ரகசியம் பார்க்கிறதால இனிமே நான் உங்களை தொந்தரவு செய்ய விரும்பலை. நீங்கபாட்டுக்கு உங்க ஸ்டைல்ல கலக்குங்க. வர்ட்டா……..

    டவுசர் பாண்டி said:
    October 14, 2011 at 2:41 am

    மணியண்ணே,
    நானு எதுக்கு மெயிலைடி குடுக்கலன்னா நீங்க நம்மள ரெம்ப அறிவாளின்னு நெனச்சி கேட்டுப்புட்டீங்களா, அதான் நானும் உண்மைலேயே நாம அப்டி இருந்தா எப்டின்னு லேசா கற்பன பண்ணி பாத்தன். அதான் இம்புட்டு பிள்ட்டப்பு. ஆனா உண்மைலேயே நம்ம ரேஞ்சு தரடிக்கட்டுன்னு ஆத்தாளுக்கு மட்டுந்தேன் தெரியும். நீங்க ஏதும் தப்பா எடுத்துக்கிடாதீங்க்கனே. நமக்கு ஈகோ கொஞ்சம் சாஸ்தினே.

  டவுசர் பாண்டி said:
  October 10, 2011 at 2:39 pm

  எடைல சோசியத்துல ஒரு சின்ன அனுபவம் கெடச்சது. நாம (நேருல) சாமான்யத்துல சனங்கல்ட்ட சோசியத்த பத்தி மூச்சு உடுறது கெடயாது. செல தெரிஞ்ச பார்ட்டிங்க வழிய வந்து சோசியத்த பத்தி பேசுவாய்ங்க. மத்த படி நானு சோசியத்த காத்துக்கொண்டிருக்கும் மாணவன், ஒரு காலத்தில் சோசியத்தில் பைத்திய மானவன், வித்தியாச மானவன், மொத்தத்துல ஒரு எளிமையானவன்….

  ஹி..ஹி..ஹி (புல்லரிக்குல்லா?)

  ஆமா. அரிக்கும். நல்லா அரிக்கும்!

  எனுக்கும் அப்டித்தான் அறிச்சது.

  போன வாரத்துல நம்ம ப்ரெண்டு ஒருத்தன் மூலமா ஒரு பொம்பள நம்மகிட்ட வந்து அதோட கொறைய சொல்லி பீல் பண்ணிக்கிட்டு இருந்தது. நானு விந்துவ வெளிய உடாம மேல ஏத்திக்கிட்டு கெடக்குரதால செல செக்சுவல் பரிசோதனைகள கெரகங்க நம்மகிட்ட செஞ்சி பாக்கும். நாம விஸ்வாமித்திரர் இல்லாட்டியும் விஸ்வாமித்திரருக்கு விசுவாசமாவாச்சும் இருப்பமேன்னு நெனக்கிற கேசு. இந்த பொம்பள சாதாரண குடும்ப பொண்ணு கெடையாது. மொதல்ல குடும்ப பொன்னாத்தேன் இருந்துச்சி. எந்த நாதாரியோ குதூகலமா இருந்த இந்த பொம்பளையோட வாழ்க்கைல கும்மியடிச்சிட்டு போயிட்டான். அந்த லேடியோட சாதகத்த பாருங்க.

  மெயினா ராகுவ பாருங்க. ராகுக்கு மூணுல செவ்+சுக்+புத இந்த மூனும் சேந்தாலே புத்திய (அன்ஜாமெடம்) பேதளிச்சிரும். குறு பார்வை வேற இல்ல. சரி இந்த கெரக சேர்க்கைக்கி ஊடு குடுத்த பார்ட்டியாவது (சூரியன்) அந்த ஊட்ட கண்ணுலேயே வெச்சிருக்காரான்னு பாத்தாக்க அதுவும் இல்ல. அந்த ஊட்டுக்கு பன்னெண்டுல மறந்ஜிட்டாறு. சோ, இந்த அம்மணி வெபச்சாரத்துல தள்ளப்பட்டுருக்கு.

  போதாக்கொரைக்கி காதல தூண்டுற புதனுக்கு ஒம்போதுல கேது. இந்த காம்பினேசன் காமவெறிய அதிகமா விகாரமாக்கிட்டு. அதுபோவ புதன்னா தாய்மாமன் வகையறாவ குறிக்கும்.

  குறு தெச லாச்ட்டுல மேற்படி புள்ளிராசா அந்த அம்மணிய கற்பழிச்சிட்டான். இந்த அம்மணியோட சாதகத்த பாத்தா ஒடனே எனக்கு புலிப்பாணி சித்தர் நூத்தி முப்பத்தேழாவது பாட்டுல சொன்ன ஒரு செய்யுல்தேன் ஞாவத்துக்கு வருது.

   டவுசர் பாண்டி said:
   October 10, 2011 at 2:47 pm

   சாரிங்க்னா. கலரடிக்கிற ஆர்வத்துல மீனத்துல உள்ள சனி பகவான கவனிக்காம உட்டுபுட்டன். மீனத்துல ஒன்னும் வராதுங்க்னா.இத பாத்ததும் ராவணன் மகேன் இந்திரஜித் கத ஞாவம் வந்திச்சி. ராகு கேது எந்தளவுக்கு சாதகர ரிவர்சுல கொண்டுபோவுதுன்னு பாக்கச்சில கஷ்டமாத்தேன் இருக்கு.

  Mani said:
  October 10, 2011 at 5:41 pm

  அண்ணே! இப்போது தான் நேரம் கிடைத்தது.

  பதிவு சூ……ஊப்பரு.

  உங்க நோக்கம் ரொம்ப நல்ல நோக்கம். இந்த பவர்கட்டான இக்கட்டான நேரத்திலயும் எங்களை மாதிரி ஜோதிட ஆர்வலர்களுடைய ஆர்வத்தை தூண்டுகிற மாதிரியான விஷயங்களை எழுதற உங்களுக்கு மொதல்ல நன்றிசொல்லியே ஆகனும். நன்றி நன்றி நன்றி.

  சரி ஆரம்பம் எல்லாம் கொஞ்சம் ஓவரா போயிட்டுதோன்னு நினைக்கிறேன்.

  மேட்டருக்கு வரேன்.

  பாயிண்ட் நெ.1

  ///இந்தியாவுல (மட்டும்) நிமிஷத்துக்கு 4 குழந்தை பிறக்குது. 120 நிமிசத்துக்கு (சுமார்) ஒரே லக்னம் தான்,ஒரே ஜாதகம்தான் . ஆக 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது. ஆனால் ரஜினி காந்த் ஒருத்தருதேன் சூப்பற ஸ்டார் ஆறாரு. மத்த 479 குழந்தைங்க என்ன ஆச்சு?////

  அண்ணே! ஒரே லக்குனத்துல பொறந்தா மட்டும் ஒரே பலன் நடந்துராது.

  120 நிமிஷம் ஒரே லக்குனம்னே வச்சிகிட்டாலும். ஏறக்குறைய 13 நிமிடத்துக்கு ஒரு முறை நவாம்ச லக்னம் மாறிடும்.

  13 நிமிஷத்துல ராசிகட்டத்துல சந்திரனே கூட வேற ஊட்ல போயி உட்காந்தாலும் உட்காருவாரு. (சந்தியில சந்திரன் இருந்தா)

  ஒருவேளை நீங்க சொல்றமாதிரி ஒரே மாதிரியான ராசிக்கட்டம், நவாம்சம் எல்லாம் ஒரே மாதிரி இருக்குன்னே ஒரு வாதத்துக்கு வச்சிக்குவம்.

  சந்திரனுடைய நகர்வால் தசா புக்தி இருப்புல வித்தியாசம் வந்துடுமே. அதனால புத்திநாதர்களே மாறலாம். அதனால அவிய்ங்க அனுபவிக்கற பலன்கள்லையும் முன்னே பின்னே கிடைக்க வாய்ப்பு இருக்கு.

  இரட்டை குழந்தைகளுக்கு ஒரே ராசிக்கட்டம், நவாம்சம் எல்லாம் ஒரே மாதிரி இருந்தாலும் பலன்கள்ல வித்தியாசம் இருக்க காரணம் மத்த சக்கரங்கள்ல கிரகங்கள் ஒரே மாதிரி அமைவது கிடையாது. (தசாம்சம், துவாதாம்சம், சஷ்டியாம்சம்) நம்ப பாண்டியண்ணனை கேட்டா கே.பி.யில சப் லார்டு, சப் சப் லார்டு, சப் சப் சப் சப் சப் லார்டுகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது. அதனால பலன் மாறுதுன்னு சொல்லுவாரு.

  என்னைக் கேட்டால் ஒரே மாதிரியான நேரத்தில ஒரே இடத்தில எத்தினி குழந்தைகள் பொறக்கும். இந்தியாவுலயே நிமிஷத்துக்கு 4 குழந்தை பொறக்குது அதுவும் ஒரே எடத்துல எத்தினி பொறக்குதுன்னு யாரு கண்டா? வேற எடத்துல பொறந்தாக்கா லக்னம் மாறிடுமே. (அட்சாம்சம், ரேகாம்சம் மாறுவதால்)

  சரி ஒரே ஆஸ்பத்திரியில ஒரே நேரத்துல ரெண்டு வேற வேற குடும்பத்தில் (ஏழை, பணக்காரன்) குழந்தைகள் பிறக்குதுன்னு வச்சுக்குவோம். ரெண்டும் ஒரேவிதமான பலனை தான் அனுபவிக்கனுமா? அப்படீன்னு கேள்வி வரும்.

  அதுக்கு தான் ஜோதிடத்துல இடம், பொருள், ஏவல், குலம், கோத்திரம் அறிந்து ஜோதிட பலன்களை சொல்லனும்னு சொல்லிருக்காய்ங்க.

  அதாவது ஏழை குழந்தைக்கும், பணக்கார குழந்தைக்கும் ஒரே மாதிரியான பலன் நடந்தாலும். அவர்களின் மனநிறைவைப் பொருத்த மட்டில் ஒரே மாதிரியான மனநிலையையே அடைவார்கள் என்கிறது ஜோதிடம்.

  ஏழைக்கு லாபம் ரூ.1000 கிடைக்குதுன்னு வச்சிக்குவோம். பணக்காரனுக்கு 1 லட்சம் கிடைக்குதுன்னு வச்சிக்குவம். அவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் அடையும் மகிழ்ச்சியானது ஒரே அளவானதாக இருக்கும்.

  நம்மைப் போன்றவர்களுக்கு அட்டமாதிபதி தசா நடந்தால் நம்மை துண்டைக்கானோம், துணியைக் காணோம்னு ஒரு வழியாக்கிடும். ஆனால் அதே அட்டமாதிபதி தசா அம்பானிக்கு நடக்குதுன்னு வச்சிக்குவோம். அவருடைய லெவலுக்கு அவருக்கு இழப்பு ஏற்படும். அவமானங்கள், கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும். (அனில் அம்பானிக்கு இப்போ நேரம் சரியில்லையாம்)

  அதுக்காக அம்பானி ஏன் என்னை மாதிரி கஷ்டப்படலைன்னு கேட்கப்படாது. மனதளவில் இருவரும் ஒரே மாதிரியான கஷ்டங்களை தான் அனுபவிப்பார்கள். அவர் செல்வந்தராக பிறந்ததால் அவருடைய லெவலுக்கு ஏற்ற கஷ்டங்களை அவர் அனுபவிக்கிறார்.

  ஆக கிரகங்கள் பலன்களை ஒரே மாதிரியாக தான் வழங்குகின்றன என்பதை அவரவர் ஜாதகங்களை அலசிபார்த்தால் இந்த உண்மை புரியும்.

  Mani said:
  October 10, 2011 at 6:11 pm

  பாயிண்ட் நெ.2

  //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  பெண்கள் வயதுக்கு வந்த நேரத்தை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதை ருதுஜாதகம்ங்கறாய்ங்க. ஒருபெண் மோசமான ஜாதகத்துல பிறந்து யோகமான நேரத்துல வயசுக்கு வந்துட்டா என்னாகும்? அட ஒரு பொண்ணு யோகமான ஜாதகத்துல பிறந்து மோசமான ஜாதகத்துல வயசுக்கு வந்துட்டா என்னாகும்?

  ருதுஜாதகம் பவர்ஃபுல்லா? ஜனன ஜாதகம் பவர்ஃபுல்லா? ஏதோ ஒன்னுதான் பவர்ஃபுல்லுன்னா அடுத்தது டம்மியா? ( ஐ மீன் பொய்யா போகுமா?) அட ரெண்டுமே பவர்ஃபுல்லுன்னா சிண்டை பிச்சுக்கனுமா? இன்னாய்யா லாஜிக் இது?
  //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

  அண்ணே! எப்புடீன்ணே! இப்படி தெரியாதமாதிரியே கேள்வி கேட்டு அசத்தறீங்க.

  ஒருத்தருக்கு எத்தினி ஜாதகம் இருந்தாலும் அவிய்ங்க இந்த பூமியில அவதரிச்ச ஜெனின ஜாதகம் தான் பவர்புல்லு. ஏன்னா அந்த ஜாதகம் தான் அவிய்ங்க பிறப்பு முதல் இறப்பு வரை அவிய்ங்க அனுபவிக்கற பலன்களை துல்லியமா சொல்றதுக்கு உதவும்.

  அந்த காலத்துல கடிகாரம், மணி நேரம்லாம் அவ்வளவு துல்லியமா கிடையாது. ஒரு வேளை பிறந்த ஜாதக நேரம் தவறாக குறிக்கப்பட்டிருக்கலாம். இல்லை பிறந்த ஜாதகமே குறிக்கப்படாமல் இருந்திருக்கலாம். அந்த குறையை போக்கறதுக்குதேன் இந்த ருது ஜாதகம் கணிக்கற வழக்கம் வந்திருக்கனும்னு தோனுது.

  இதுலயும் ஒரு சிக்கல் இருக்கு. குழந்தை பிறப்புங்கறது பெரும்பாலும் அந்த குடும்பத்தில் உள்ள எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம். வீட்ல (அ) ஆஸ்பத்திரியில பிரசவம் நடந்தா பெரும்பாலும் சொந்த பந்தங்கள் அதை எதிர்பார்த்து இருப்பாங்க. ஒருத்தர் இல்லாவிட்டாலும் ஒருவர் குழந்தை பிறந்த நேரத்தை தோராயமாகவாவது குறித்து வைத்திருப்பார்கள்.

  ஆனால் இந்த ருது ஜாதகத்தில் பெண் ஏறக்குறைய 13, 14 வயதில் ருதுவாகிற போது அது பள்ளியில் அல்லது பஸ்ஸில், விளையாட்டு மைதானத்துல இப்படி எதாவது ஒரு இடத்துல ருதுவாகிற வாய்ப்பு அதிகம். வீட்ல ருதுவானாலும் கூட பயத்துல கொஞ்சம் தாமதமா சொல்ற வாய்ப்புகள் மிக அதிகம். எனவே ருது ஜாதகம் பெரும்பாலும் துல்லியமான ஜாதகம் இல்லை என்பது எனது கருத்து.

  ருது ஜாதகத்துல தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்களை நாம பிறந்த ஜாதகத்துலயே தெரிஞ்சிக்க முடியும். பெண்களின் ஒழுக்கத்தை மட்டும் எதிர்பார்க்கின்ற ஆணாதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடு இந்த ருது ஜாதகம். மோசமான கிழமை, திதி, நட்சத்திரம், லக்னம் போன்றவற்றில் ருதுவான பெண்கள் ஒழுக்கம் குறைந்தவர்களாக இருப்பார்கள் என்று ருது ஜாதகம் சொல்கிறது.

  பெண்களின் பிறந்த ஜாதகத்தில் லக்னம், 3ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 12ம் இடம் போன்றவற்றின் மூலம் பெண்களின் குணத்தை, காம நடவடிக்கைகளை மிகச்சரியாக சொல்லிவிட முடியும். சந்திரனுடனோ அல்லது லக்னத்திற்கோ செவ்வாய் சம்பந்தம் ஏற்பட்டு குரு போன்ற சுபக்கிரக பார்வை இல்லாது இருப்பின் அவள் குணக்கேடு உடைய பெண்ணே.

  சுக்கிரன், செவ்வாய் இணைந்து செவ், சனி, சுக் வீடுகளில் இருந்து பாபக்கிரகங்கள் சனி, செவ், ரா, கேதுக்களுடன் பார்வை (அ) இணைவு பெற்றிருந்தாலும் அப்பெண் குணக்கேடு உடையவளாக இருப்பாள். இந்த கிரகநிலை ஆணுக்கும் பொருந்தும்.

  பிறந்த ஜாதகத்தின் படி அந்த பெண் ஒழுக்கமானவளாக இருந்து ருது ஜாதகப்படி நிச்சயம் அவள் நல்ல நாளில், நேரத்தில் தான் ருதுவாக முடியும். அப்படி இல்லாதபட்சத்தில் ருது ஜாதகம் குறித்த நேரங்களில் எதாவது தவறுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

  எனவே ருது ஜாதகம் என்பது தனியாக பார்த்து பலன்சொல்ல வேண்டிய ஒன்றல்ல. அது பிறந்த ஜாதகத்துடன் ஒப்பிட்டு பலன்களை சொல்ல வேண்டிய ஒன்றே. பிறந்த ஜாதகமே வலிமையானது. இரண்டுமே வலிமையாக இருக்கும்பட்சத்தில் நாம் சிண்டையெல்லாம் பிச்சிக்க தேவையே இல்லை. நம் வேலை எளிதாக முடிந்துவிடும்.

  Mani said:
  October 10, 2011 at 6:34 pm

  பாயிண்ட் நெ.3

  ////////////
  மாங்கல்ய தோஷம் உள்ள பெண் தீர்காயுள் கொண்ட ஆணை கல்யாணம் பண்ணிக்கிட்டா இவ ஜாதகப்படி விதவையாவாளா? அ அவன் ஜாதகப்படி இவளோட மாங்கல்ய தோஷம் ஃபணாலாகி சுமங்கலியா இருப்பாளா?/////////////

  மாங்கல்ய தோஷம் உடைய பெண் தீர்க்காயுள் ஜாதகனை மணந்தால் நிச்சயம் இருவருக்கிடையில் பிரிவு ஏற்படும். ஒரு வேளை ஆயுள் பலம் குறைவுள்ள ஜாதகனை மணந்தால் மாமா (பையன்) டிக்கெட் வாங்கிடுவார். இதுல சந்தேகமே வேண்டாம்.

  ///////////////////அவள் ஜாதகமும் வேலை செய்யனும்.இவன் ஜாதகமும் வேலை செய்யனும். அப்பத்தேன் ஜோதிடம் உண்மையாகும் . அதெப்படி ரெண்டு ஜாதகமும் வேலை செய்யும்? ரெண்டும் வேலை செய்தா என்ன பலன்?///////////////////////////

  செய்யும் செய்யும். இந்த காலத்துல ஏதுண்ணே சுமங்கலி, விதவையெல்லாம். அடுத்த கண்ணாலம்தேன். அதுவும் இல்லின்னா லிவிங் டுகெதர் (அப்படின்னா இன்னாதா? ஒலகம் தெரியாதவுங்க கேக்குற கேள்வி தெரியாதவுங்க யாருகிட்டயாவது கேட்டு தெரிஞ்சுக்கங்க. இல்லாட்டி நெட்ல தேடுனீங்கன்னா நெறியவே கடிக்கும்.) இப்ப இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. இதுக்கு போயி சுமங்கலி, விதவைன்னுட்டு அதெல்லாம் அந்தகாலம்.

  பெரும்பாலும் மாங்கல்ய தோஷம் உடைய பெண்ணிற்கு வெளியூரில், வெளிநாட்டில், ராணுவத்தில் பணிபுரியும் பையனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால் இருவரும் நலமாக இருப்பார்கள்.

  அப்ப பிரிவு?.

  அதான் தொழில் நிமித்தமாக இருவரும் ஏற்கனவே பிரிந்திருக்கிறார்களே. அப்புறம் எதுக்கு விவாகரத்தெல்லாம்?

  இப்படி ரெண்டு பேரும் பிரிஞ்சிருந்தா எப்படி சந்தோஷமா வாழறதாம்?

  என்னது தோஷமும் இருக்கும் சந்தோஷமும் வேணுமா? நல்ல கதையா இருக்கே.

  கருத்துவேறுபாடு, சந்தேகம் இத்யாதியெல்லாம்?

  தம்பதிகள் ரெண்டுபேரும் பிரிஞ்சிருக்கும் போது இதெல்லாம் ஒரு கேள்வியா? யாருக்கு எது வசதியோ அப்படி இருந்துட்டு போக வேண்டியது தான். அப்புறம் தோஷம் இருக்கறதுக்கு ஒரு அருத்தம் வேணாம்? (நீங்களாக ஏதுனா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு கடியாது) வர்ட்டா…….

  Mani said:
  October 10, 2011 at 6:55 pm

  பாயிண்ட் நெ.4

  /////////////////சராசரியா ஒரு லக்னம் ரெண்டுமணி நேரம் இருக்கும். ஒரு பிசியான ஜோசியர் கிட்டே 2 மணி நேரத்துல கு.பட்சம் 20 பேராவது வருவாய்ங்க. அப்போ 20 பேரும் ஒரே வேலையா வந்தாப்லயா? 20 பேருக்கும் ஒரே முடிவு தானா?//////////////

  என்னது 2 மணி நேரத்துல 20 பேருக்கு ஜோசியம் சொல்றதா?! ஒருத்தனை சமாளிச்சு அவன் கொடுக்கற 20 ரூவாய வாங்கறதுக்குள்ள (என்னது! 500 ஆ வந்தவன் நம்ம வீட்ல எதுனா கழட்டிட்டு போயிட போறான்) குறைஞ்சது அரை மணி நேரமாவது ஆகும். என்னதான் அதட்டி உருட்டி சொன்னாலும் அவன் சோசியரை நோண்டி நுங்கெடுக்காம விடமாட்டான்.

  அப்படின்னா 2 மணி நேரத்துக்கு 8 பேரைதான் சமாளிக்க முடியும். 20 பேருன்னா? கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில ஊசி போடுற மாதிரி டக் டக்குன்னு முடிக்கனும். இப்ப ஆப்ரேஷனே சீக்கிரம் முடிச்சிர்ரானுங்க.

  ரொம்ப பிளேடு போடுறேனா? சரி மேட்டருக்கு வரேன்.

  ////////////அதாவது கேள்வி கேட்ட நேரத்துல எந்த லக்னம் உதயமாகியிருக்கோ அதுக்கு எத்தனையாவது பாவத்துல என்னென கிரகம் இருக்குன்னு பார்த்து பார்ட்டி வந்த வேலை என்ன? அது ஆகுமா ஆகாதான்னு சொல்றதுதான் ஆரூடம்.//////////////////

  அண்ணே! நம்மகிட்ட வர்றவனுங்க எல்லாரும் வெறுங்கையோட ஜாதகம் இல்லாமலா வருவானுங்க. யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் வரலாம். அவிய்ங்களுக்கு ஆரூடம் பார்த்து சொல்ல வேண்டியது தான். எல்லாரும் ஆரூடம் கேட்டு வந்தானுங்கன்னா ஊருல வேலை இருக்கு நாளைக்கு வாங்கன்னு எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்.

  ஜோதிடரே புதன் ஆதிக்கத்துல தானே வருவார். அவருக்கா பேசத்தெரியாது?

  நீங்க சீரியசா கேட்டாலும் இதான் பதில். ஏன்னா? ஆரூடம் சொல்றதெல்லாம் 100 க்கு 100 அப்படியே சரியாக வருமான்னு எனக்கு தெரியலை. அப்படியே வந்தாலும் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 5 ஜாதகருக்கு ஆரூடம் சொன்னா போதும். ஆரூடம் என்பது நம்மிடம் கேள்விக் கேட்டு வருபவர் சதா அந்த கேள்வி தொடர்பான சிந்தனையிலேயே இருப்பதால் அவருடைய எண்ண அலைகளின் வெளிப்பாடு தான் கேள்வியாக வரும். (மனதில் இருந்தா தானே வாயில வார்த்தையாக வரும்) எனவே அந்த நேரத்திற்கு ஜாதகம் கணித்து பார்த்து அப்போதைய லக்னம், கிரக நிலைகளைக் கொண்டு அவரது எண்ணம் நிறைவேறுமா? என்று சொல்ல முடியும்.

  அதுவும் நிமிஷத்துக்கு ஒரு கேள்வியை மாத்தி மாத்தி கேக்குற பார்ட்டிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது? ஏன்னா அவங்க நோக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இல்லை. சோதிடரை சோதிப்பதே. அவங்களுக்கு என்ன பதில் சொல்லனும்னு ஜோசியருக்கு தெரியாதா என்ன?!!!!

  Mani said:
  October 10, 2011 at 7:08 pm

  பாயிண்ட் நெ.5

  //////////சோதிட விதிகள் தொகுக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆயிருச்சு. உலகம், நாடு ,மக்கள்,மக்கள் வாழ்க்கை ,கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் எல்லாமே மாறிப்போச்சு. ஆனால் இன்னைக்கும் அதே அரதப்பழசான விதிகளை வச்சுக்கிட்டு ஜல்லியடிக்கிறாய்ங்களே .. இதுல தர்கம் இருக்கா? நியாயம் இருக்கா?/////////////

  என்னண்ணே! பன்றது. வெள்ளைக்காரனும் புளுட்டோ, நெப்டியூன், யுரேனஸ் அப்படின்னு கிரகத்தையெல்லாம் போட்டு பார்த்துட்டான் ஒன்னும் பிடிபட மாட்டேங்குது.

  ஜோதிடவிதிகள் அந்த கால முனிவர்கள் அவர்களது தவ, ஞான நிலைகளில் இருந்த போது எழுதினதா இருக்கலாம். அவிய்ங்க நிலையில் இன்னிக்கு யாருனா இருந்தா காலத்துக்கு ஏத்தமாதிரி அடுத்த வெர்ஷனை மாத்தி எழுதலாம்.

  பெருசா ஏதும் மாறின மாதிரி தெரியலை. அந்த காலத்துல காயின் காசு. இப்ப ரூவா நோட்டு, அந்த காலத்துல யானை, குதிரை வாகனம், இப்ப பென்ஸ் கார், சாதா கார். அந்த காலத்தில குருகுலக் கல்வி இப்போ பள்ளிக்கூடம். அந்த காலத்தில் மன்னர் ஆட்சி இப்ப ஜனநாயகம்ங்ற பேர்ல கொடுங்கோல் ஆட்சி (வலுத்தவன் வைத்ததே சட்டம்) சாதி மதம்லாம் சொல்லவே வேணாம் அப்படியேதான் இருக்கு.

  ரொம்பல்லாம் போட்டு குழப்பிக்க தேவையில்லைண்ணே! சமய சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி ஜோதிடம் கூறும் வழிமுறைகளை கொஞ்சமாக மாற்றிச் சொல்லனும் அவ்வளவுதேன். அதாவது கிழவிக்கு சுடிதார் போட்டு விட்டா போச்சு. (அதுக்குன்னு நம்ம தலையில கட்டிவிடக்கூடாது)

  Mani said:
  October 10, 2011 at 7:15 pm

  பாயிண்ட் நெ.6

  ////////பாலாரிஷ்ட தோஷம்னு ஒரு விஷ்யம் இருக்கு. குறிப்பிட்ட கிரக நிலையில குழந்தை பிறந்தா அது உயிர் வாழாதுன்னு சொல்றாய்ங்க.ஆனால் அதே கிரக நிலைகளை கொண்ட ஜாதகங்கள் திருமணம், சந்தானம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பா பலன் கேட்டு இன்னைக்கும் வருதே. அவிக ஏன் சாகலை? அப்ப பாலாரிஷ்ட தோஷம்ங்கறது டுபுக்கா?//////////

  இருக்கலாம் தான் இல்லேங்கலை. ஒருவேளை அவிய்ங்க பிறந்த போது சாதகமான தசா புக்திகள் நடந்து பாலாரிஷ்டம் வராமல் தடுத்திருக்கலாம். வளர்ந்தபின்பு அதே கிரக நிலைக் காரணமாக குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்களை, மான அவமானங்களை சந்தித்திருக்கலாம். (நீங்களே கூட சொல்லியிருக்கீங்க ஒருத்தனுக்கு பெரிய அவமானம் வந்தா அவனுக்கு மாரகம் வந்த மாதிரிதான்)

  பாலாரிஷ்ட கிரக விதிகள் ராசிக்கட்டத்துக்கு மட்டும் சொல்லியிருந்து அம்சத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் பாலாரிஷ்டம் நிகழ வேண்டிய அவசியம் இல்லையே. ஏதோ ஜஸ்ட் மிஸ்ஸிங் அவ்வளவுதான். அதுக்காக ரொம்ப பெட்டர்னு சொல்ல முடியாது. மிஞ்சிப் போனா மத்திம ஆயுசுல போகப்போறாய்ங்க. விடுங்க…

  Mani said:
  October 10, 2011 at 7:22 pm

  பாயிண்ட் நெ.7

  //////////ராமர் ஜாதகம் , அனுமார் ஜாதகம்னு பார்க்கிறோம். சிலர் தகட்டுலயே கீறி வித்துக்கிட்டிருக்காய்ங்க.
  (அவற்றை அனலைஸ் பண்ணி பார்த்தா வா.வெ ) அவிக தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்தது ஆரு? பர்த் சர்ட்டிஃபிகேட் இஷ்யூ பண்ணது ஆரு? அவிக பர்த் டீட்டெயில்ஸை இந்த சோதிடப்புலிகளுக்கு தந்தது யாரு?////////

  அண்ணே! ராமர் யாரு? தசரத சக்கரவர்த்தியோட மகன். அவருக்கு சேவைசெய்ய ஒரு பெரிய கூட்டமே இருக்கும். எனவே ராமர் பிறந்த நேரத்தையெல்லாம் குறிச்சு வைக்கறதுக்குன்னு பெரிய ஜோதிட அவையே ரெடி பண்ணி வச்சிருப்பார்ல. குலகுரு, அரசவை சோதிடர், அரசவை மருத்துவர் இவங்களுக்கெல்லாம் இதைவிட என்ன வேலை? அதுவும் ராமர் அவதாரமாக கருதப்பட்டவர். காலங்கள் அழிந்த பின்பும் அவர் புகழ் மறையவில்லை. ஜாதகம் மட்டும் எப்படி மறைந்துவிடும்.

  இது சும்மா நம்ம கற்பனைதேன். அதுக்குன்னு அனுமார் அப்பா அம்மா யாரு. அவருக்கு யாரு பிரசவம் பார்த்தான்னு எனக்கு தெரியலைன்ணே. ஏதுனா புராணத்துல இருந்து படிச்சா அப்புறம் வந்து சொல்றேன். இல்லை நம்மாளுங்க யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்களேன்.

   கிருமி said:
   October 13, 2011 at 3:36 pm

   ராமர் ஜாதகம் பத்தி பாட்டுல சொல்லியிருக்காங்க. அத நம்ம ஆளுங்க, துட்டாக்குறாங்க.

  Mani said:
  October 10, 2011 at 7:31 pm

  பாயிண்ட் நெ.8

  ////////நட்சத்திர தோஷங்களை பற்றி சொல்லும் போது ஆண் நட்சத்திரங்களுக்கு தோஷமில்லேன்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. தோஷம் என்ன ப்ரெஸ்ட் கான்சரா பெண்களை மட்டும் எஃபெக்ட் பண்றதுக்கு. இது வடி கட்டின மேல் சாவனிசமில்லையா? இதுல என்னத்தை தர்கம் வாழுது?///////////////

  அண்ணே! ஒரு ஆணையும் பெண்ணையும் எதுக்குண்ணே சேர்க்கிறாங்க? வம்ச விருத்திக்கு தானே. பெண்களுக்கு எதுக்கு சொன்னாங்கன்னா? குழந்தை பெத்துக்கறது யாரு? பெண்தானே. குழந்தை பெற முடியாத பெண்ணை மக்கள் தொகை குறைவாக உள்ள அந்த காலத்தில் ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைத்தால் எப்படி மனித இனம் தழைத்து ஓங்கும்.

  ஒரு பெண்ணால் அதிகபட்சம் எத்தினி குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்? ஆனால் ஒரு ஆண் 100 பெண்களை சேர்ந்தால்? ஒரு கிராமமே ரெடி. இதெல்லாம் மருத்துவம், விஞ்ஞானம் வளரும் முன்பே நம் முன்னோர்கள் சூட்சுமமாக அறிந்து செய்த வேலைகள். காலப்போக்கில் அவை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு தவறாக வழிநடத்தப்பட்டதால் வந்த பிரச்சினைகள் தான் இந்த மேல்சேவனிசம் இத்யாதியெல்லாம்.

  Mani said:
  October 10, 2011 at 7:35 pm

  பாயிண்ட் நெ. 9 & 10.

  /////////அரசியல்ல எல்லா கட்சி காரவுகளும் (சுயேச்சை உட்பட) சோசியம் பார்த்துத்தான் தேர்தல்ல நிக்கிறாய்ங்க. ஆனாலும் ஒரு தொகுதியில ஒரு வேட்பாளர்தான் ஜெயிக்கிறாரு. மத்தவுக தோத்துத்தான் போறாய்ங்க. தோத்தவன் தோக்கறோம்னு தெரிஞ்சே வாரி இறைச்சு தோற்கிறானா? அல்லது வெற்றி உனக்கேன்னு தப்பா சொல்லப்பட்ட பலனை நம்பி நிக்கிறானா?

  சினிமா உலகத்துல எல்லா தயாரிப்பாளரும் சோசியம் பார்த்துத்தேன் படம் பண்றாய்ங்க. ஆனால் பலதும் பப்படமாயிருது ஏன்?//////////////

  ஆசை யாரை விட்டது? செய்யாதேன்னு சொன்னா கேட்கவா போறானுங்க. அவனுங்க தலையெழுத்து போனியாகனும்னா யாரால என்ன பண்ண முடியும் சொல்லுங்க.

  Mani said:
  October 10, 2011 at 7:46 pm

  பாயிண்ட் நெ.11

  ////////////குரு பலம் வந்துருச்சு கங்கணம் கூடியிருக்குங்கறாய்ங்க. அல்லது குரு சரியில்லை தம்பதிகளுக்குள்ளே பிரச்சினை வரும்னு சொல்றாய்ங்க அது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு எந்த சோசியரும் சொல்லமாட்டேங்கறாரு. சோசியம் விஞ்ஞானம்னா காரண காரியத்தை விளக்கலாமே./////////

  குருன்னா யாரு? மஞ்சள் நிறத்துக்கு அதிபதி. தங்கத்தி்ற்கு அதிபதி. மாங்கல்யத்திற்கு தங்கம் தானே வேணும். ஜோதிடத்தில குருவிற்கு பேரு தனக்காரகன்.

  குரு பலம்ன்னா. கோச்சாரத்துல இந்த தனத்திற்கு காரகனான குருபகவான் பலமாக உள்ளார் என்று பொருள். எனவே சாதகருக்கு தாராளமான பணப்புழக்கம், வேண்டிய உதவிகள் கிடைக்கும்.

  கல்யாணம்னா சும்மாவா? வீட்டை கட்டிப் பார். கண்ணாலத்தை செய்து பார்ன்னு சும்மாவா சொன்னாங்க. தனி ஒரு மனிதனால முடியற வேலையில்லையே இது. அட லவ் மேரேஜ் கூட சாட்சி கையெழுத்து போட 4 பேரு உதவி வேணுமே. என்னது யாருமே இல்லாம கண்ணாலமா? பார்த்து வேலை முடிஞ்சதும் கழட்டி விட்டுரப் போறான்.

  குருவை ஏன் புத்திரகாரகன்னு சொன்னாங்க? நம்ம விந்துவை குறிக்கறது என்னவோ சுக்கிரன்தான். ஆனால் அதில் உள்ள உயிரணுக்களை குரு தான் குறிக்கிறார். குருபலம் இல்லாமல் இருந்தால் கில்மால்லாம் ஒர்க்கவுட் ஆகாது. கில்மா சரியில்லை, ஊட்டுக்காரன் கையில காசும் இல்லை. தம்பதிகளுக்கு இடையே சண்டை வராம பாலாறும், தேனாறுமா ஓடும். பூரிகட்டை அடிதான் விழும்.

  இதையெல்லாம் பத்து பேரு முன்னால சோசியர் சொல்ல முடியுமா? அதான் இப்ப வேணாம். குரு பலம்மில்லை. அப்புறம் பார்க்கலாம்னு சொல்றார். சும்மா சோசியரை நோண்டி நோண்டி கேட்டா அப்புறம் அவரு விலாவரியா சொல்ல ஆரம்பிச்சா அவன் கதை நாறுமே பரவாயில்லையா?.

  sugumarje said:
  October 10, 2011 at 7:54 pm

  டவுசரு அருமையான அலசல்… கலக்கிட்டீங்க…
  ஒரிஜினல் சுகுமார்ஜி

  Mani said:
  October 10, 2011 at 7:56 pm

  பாயிண்ட் நெ.12

  /////பரிகாரம்ங்கற பேர்ல சகட்டுமேனிக்கு யாகம் ,தானம் தருமம்லாம் பண்றாய்ங்க. ஆனாலும் பதவி பறிபோகுது. கைதுலருந்து கோர்ட்டுதான் காப்பாத்துது. ஜாதகத்தை வச்சு பலன் – பலனை தவிர்க்க பரிகாரம்.
  பரிகாரம் டுபுக்குன்னா பலனும் டுபுக்குத்தானே. பலன் டுபுக்குன்னா ஜாதகம் ஜோதிடம் எல்லாமே டுபுக்குத்தானே?///////

  அண்ணே! பரிகாரத்தை பற்றியெல்லாம் நீங்க சொல்லாத விஷயங்களையா நாம சொல்ல போறோம்?

  நேரம் சரியில்லைன்னா என்ன ஆகும்? தோல்வி, நஷ்டம், உடல், மன பாதிப்புகள் இத்யாதியெல்லாம் நடக்கும்.

  கிரகம் பிடுங்கறதுக்கு முந்தியே நாமே செலவு பண்ணிட்டா?

  கண்டக்டர் ஃபைன் போடுறதுக்குள்ள டிக்கெட் எடுத்துட்டா பிரச்சினையில்லையே?

  அப்படின்னு நினைச்சு பரிகாரம் செய்யறோம். அதுக்கு போதும்னா நம்மை விட்டுருது. போதலைன்னா? உள்ளதையும் புடுங்கிறது. (வினை விளைவு, கர்மா தியரி)

  நாம முன்ஜென்மத்தில புடுங்கினதை நாமே மரியாதையா ஒழுங்கா வட்டியோட திருப்பி கொடுக்கறதுக்கு பேரு தான் பரிகாரம். அளவுக்கு மீறி அட்டகாசம் பண்ணி வச்சிருந்தா பரிகாரம்லாம் எடுபடாதுங்கோவ்….. கிரகம் சும்மா அதுபாட்டுக்கு காஞ்சமாடு கம்மங்கொல்லையில புகுந்தமாதிரி மேஞ்சுட்டு போயிரும்.

  அண்ணே! சும்மா ஒரு கவுண்டர் கொடுப்பம்னு தான் பொருமையா என்னுடைய அறிவுக்கு எட்டின வரைக்கும் பதில் கொடுத்திருக்கேன். இதுமாதிரி நீங்க தொடர்ந்து கௌப்பிவிடுங்க. நாங்களும் ஏதுனா உளறி வைக்கிறோம். தப்புன்னா உங்க கோணத்தில சில பாயிண்டுகளை சொல்லுங்க எங்களுக்கும் உபயோகமா இருக்கும்.

  எக்காரணத்தைக் கொண்டும் திராட்டுல விட்ராதீ்ங்கண்ணே!

  நன்றி.

   S Murugesan said:
   October 11, 2011 at 6:44 am

   மணி அண்ணே !
   வாழ்த்துக்கள். இன்னாடா நாம மாஞ்சு மாஞ்சு அடிச்சா சீனா மூனா ஒரு வரில வாரிவிடறாரேனு திட்டிக்கிடாதிங்க.

   ராத்திரி சிவராத்திரி காலையில எந்திரிச்சு 8 முதல் 11 வரை பவர் கட் .பவர் கட் நேரத்தை வீணாக்காம பதிவு எழுதிட்டன்.இப்பம் அடிச்சு போடனும்.

   பரிகாரத்துக்கு நீங்க கொடுத்த விளக்கம் கொள்கை அளவுல ஓகே. கிரகம் ஏற்படுத்த உள்ள இழப்புக்கும் – ஜாதகர் இழக்க முன் வந்ததுக்கும் இடையில கேப்பு இருந்தா ஆப்பு கியாரண்டி. அதுலயும் பரிகாரத்தை “ஆரு” பணத்துல பண்றாய்ங்கன்னும் ஒரு பாய்ண்ட் வருதே.

   நம்ம பையன் ஒருத்தன் ஃபோன் பண்ணான். ” அண்ணே ..பொஞ்சாதிக்கு சிசேரியனுன்னு சொல்ட்டாய்ங்க். கையில காசுல்லண்ணே ..எதுனா சொல்லுங்கண்ணே”

   நாம உடனே ” தம்பி.. ஒரு கால் கிலோ சிக்கன் பக்கோடா வாங்கி எதிர்ல வரவனுக்கெல்லாம் கொடுத்துரு”ன்னோம்.

   சிசேரியனுக்குன்னு உள்ளாற போன பிற்பாடு குழந்தை ஒரு குட்டிக்கரணம் போட்டு தானாவந்து விழுந்துருச்ச்.

   இதே பரிகாரம் பத்துவட்டி காரனுக்கோ , அப்பா அம்மாவை முதியோர் இல்லத்துல விட்டவனுக்கோ சொன்னா ஒர்க் அவுட் ஆகுமா?

   ஜெ ஆனையே கொடுத்தாய்ங்க. ஆனால் தெய்வம் ஆணை கொடுக்கலியே..

   குறிப்பு: ஐட்டத்தை அடிச்சுட்டு மத்த பாய்ண்டுகளுக்கும் நிச்சயமா ரெஸ்பாண்ட் ஆறேன். வெய்ட் ப்ளீஸ்

    Mani said:
    October 13, 2011 at 11:22 am

    சிசேரியன் செலவை சிக்கன் பக்கோடாவுல முடிக்கறதுக்கு எந்தளவுக்கு டைமிங் சென்ஸ் வேணும். அண்ணே! ஆயிரம் இருந்தாலும் உங்களைப் போல வருமா?!!

    S Murugesan said:
    October 13, 2011 at 12:41 pm

    மணி அண்ணே !
    இதுல நாம கிழிச்சது ஒரு மண்ணுமில்லை. அந்த பையன் ரெம்ப நல்ல மாதிரி ஒரு சலூன்ல கூலிக்கு வேலை செய்துக்கிட்டு அப்பா,அம்மா,அக்கா,தம்பி எல்லாரையும் காப்பாத்திக்கிட்டிருந்து கடவுள் அருளால புதுசா கடை போட்டு அல்லாடிட்டிருந்த நேரம் அது.

    அந்த பையனுக்கு உதவனும்னு கடவுள் முடிவு பண்ணிட்டாரு. நம்மை ஒரு கருவியா உபயோகிச்சுக்கிட்டாரு. அவ்ளதேன்..

    இதே பரிகாரம் பத்து வட்டி பார்ட்டிக்கு ஒர்க் அவுட் ஆகுமா? அல்லது அந்த பையனே வேற மாதிரி ஆசாமியா இருந்திருந்தா ஒர்க் அவுட் ஆகியிருக்குமா? நஹி..

   steephan said:
   October 11, 2011 at 10:51 am

   அடேயப்பா மனிசார் கிட்ட எக்கச்சக்க மேட்டர் இருக்கு. ப்ரில்லியன்ட் !
   excellent MR. MANI thanks for sharing

  டவுசர் பாண்டி said:
  October 11, 2011 at 2:12 am

  //இப்ப ஒரு பிசியான ஜோசியர் கிட்டே 2 மணி நேரத்துல கொறஞ்ச.பட்சம் 20 பேராவது வருவாய்ங்க. அப்போ 20 பேரும் ஒரே வேலையா வந்தாப்லயா? 20 பேருக்கும் ஒரே முடிவு தானா?//

  நா டைப்படிச்ச கமெண்ட திரும்ப படிச்சி பாக்கும்போது “ச்சே…. இன்னும் கொஞ்சம் நல்லா வெளக்கிருக்கலாமே” அப்டின்னு அடிக்கடி ஒரு கொற தோணும். இப்டித்தான் டிசைனிங் நாளும் சரி மிக்சிங்நாளும் சரி எல்ல்லாத்துளையும் செஞ்சி முடிச்சாப்பொரவு இன்னம் மேட்டர பெட்டரா பன்னிருக்கலாமேன்னு மைண்ட்ல உருத்திக்கிநேருக்கும். அதுக்குள்ளே கரண்டு பூட்டா அடிச்ச மேட்டரு பூரா கானாமபூடும். எல்லாம் ஒரு பயந்தேன். சரி அது போவட்டும். மேட்டருக்கு வர்றேன்.

  //இப்ப ஒரு பிசியான ஜோசியர் கிட்டே 2 மணி நேரத்துல கொறஞ்ச.பட்சம் 20 பேராவது வருவாய்ங்க. அப்போ 20 பேரும் ஒரே வேலையா வந்தாப்லயா? 20 பேருக்கும் ஒரே முடிவு தானா?//

  இந்த கேள்விக்கி நா குடுத்த பதிலா திரும்ப படிச்சி பாக்கச்ச இந்த உதாரணத்தையும் சொல்லிருக்கலாமேன்னு தோணிச்சி. கடியாரத்த பாருங்க. லக்னம்ன்றது சின்ன முள் மாறி கற்பன பண்ணிக்கங்க. பைய்யா ஸ்லோ மூவிங்க்லதேன் நவலும். ஆனா பெரிய முல்லுன்றது சப்லார்டு மாறி வெச்சிக்கங்க. சப்சப் லார்டுன்னா நொடிமுள்ள எடுத்துக்கங்க. என்ன உதாரணம் கரீட்டா ஒத்து வருதா?

  ரெண்டு மன்நேரம் (ரெண்டு மன்னேரம்ன்றது ஒரு “குத்து” மதிப்புதேன். ஒவ்வொரு ராசி இருப்பப் பொறுத்து மாறும்) ஒரே எடத்துல (லக்னம்+சின்னமுள்) இருந்த மாரிதேன் தெரியும். பட் அதுக்குள்ளே எம்புட்டு வேகமா வேல நடக்குன்றத பூதக்கண்ணாடி வெச்சி பாத்தீங்கன்னா நீங்களே புரிஞ்சிப்பீங்க. இதே கான்செப்டுதேன் அங்கனையும் வரும். (அடத்தூ…. இதெல்லாம் ஒரு உதாரணம்… அப்டின்னு சொள்ளமாட்டீங்கதானே)

   S Murugesan said:
   October 12, 2011 at 7:07 am

   வாங்க பாண்டி!
   இது நான் ஒங்கள மாதிரி பார்ட்டிகளை சீ(தூ)ண்டி விட ரெய்ஸ் பண்ண பாய்ண்ட். நீங்க கேபி சிஸ்டத்துல சப்லார்டை வச்சு சொல்றிங்க.

   ஆனால் seeker வந்த நேரத்தை கம்ப்யூட்டர்ல ஃபீட் பண்ணி ஜாதகம் போட்டு ஸ்க்ரீன்ல வச்சுக்கிட்டு பார்த்தா ஜனனதசையில் இருப்பு மாறும். அதே போல நடப்பு தசா புக்தியும் மாறும். கு.பட்சம் அந்தரம் நிச்சயமா மாறும். கிரகங்கள் நின்ன டிகிரி மாறலாம். நட்சத்திர பாதம் மாறலாம். சந்திரன் ராசியே மாறலாம் ( கடந்த ராசியின் எட்ஜ்ல இருந்திருந்தா)

   இதைப்பொறுத்து பலன் மாறும். அப்பாறம் இன்னொரு முக்கியமான மேட்டர் வந்தவுக எல்லாரும் ஒரே வேலையா – ஒரே பரிமாணம் உள்ள வேலையா வரமாட்டாங்களே

   அவிக வந்த வேலைக்கு எந்த கிரகம் காரகம் – எந்த பாவம் காரகம்னு பார்த்து பலன் சொல்லலாம். என்னருந்தாலும் ஆரூடம்ங்கறது கவுத்து மேல நடக்கிற மாதிரிதான். ஒழுங்கு மரியாதையா ஜாதகத்தை வச்சு சொல்றது பெஸ்ட்.

   டாப் சீக்ரெட்:
   கேள்வி கேட்கிற பார்ட்டி தன் உடலில் எந்த பாகத்தை தொட்டுக்கிட்டே உள்ளாற வந்தாரு. அறையின் எந்த மூலையை தேர்ந்தெடுத்து உட்கார்ந்தாரு. தாம்பூலம் , கரன்சி மேல இருக்கிற நெம்பர் இதையெல்லாமும் டாலி பண்ணிக்கிட்டா நிச்சயமா டிஃப்ரண்ட் ரிசல்ட்ஸ் வரும்.

    டவுசர் பாண்டி said:
    October 12, 2011 at 3:10 pm

    //டாப் சீக்ரெட்:
    கேள்வி கேட்கிற பார்ட்டி தன் உடலில் எந்த பாகத்தை தொட்டுக்கிட்டே உள்ளாற வந்தாரு. அறையின் எந்த மூலையை தேர்ந்தெடுத்து உட்கார்ந்தாரு. தாம்பூலம் , கரன்சி மேல இருக்கிற நெம்பர் இதையெல்லாமும் டாலி பண்ணிக்கிட்டா நிச்சயமா டிஃப்ரண்ட் ரிசல்ட்ஸ் வரும்//

    சரியா சொன்னீங்க நைனா. நைனா ஒன்னாட்டம் பெரிய சோசியருங்க இன்னாத்துக்கு பிரசன்ன சோசியத்த கைல எடுக்க மாட்டுக்காய்ங்க.

    S Murugesan said:
    October 12, 2011 at 5:59 pm

    பாண்டி !
    ஆருடத்துல எப்டி கரீட்டா கரீட் ஆன்சர் வருமோ அப்படியே கரீட்டா தப்பான ஆன்சர் வந்து மொக்கையாகவும் சான்ஸ் இருக்குனு ஒரு உதறல். அதான் அப்படி சைடு வாங்கி ஜாதகத்தை பேஸ் பண்றோம்.

  டவுசர் பாண்டி said:
  October 12, 2011 at 3:08 pm

  மணியண்ணே,

  நீங்க நல்லா அருமையா பதில் சொல்லி அசத்திருக்கிறீங்க. தொடர்ந்து கலக்குங்கனே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s