எங்கே தப்பு பண்றோம்?

Posted on

வாழ்க்கையில “எங்கயோ தப்பு பண்ணிட்டம்”னு நினைக்காத ஆளில்லை. நினைக்காத நாளில்லை. அது இன்னா தப்புன்னு கொஞ்சம் முக்கி ரோசிச்சிருக்கன். ஸ்கான் பண்ணப்பட்ட கை.எ. பிரதியா படிக்கிற பொறுமை உள்ளவுக இப்பமே படிக்கலாம்.ஆடியோ பிரியர்கள் / டெக்ஸ்ட் பிரியர்களுக்கும் விருந்து நிச்சயம் . என்ன கொஞ்சம் முன்ன பின்னே பரிமாறப்படும். Read More

Advertisements

16 thoughts on “எங்கே தப்பு பண்றோம்?

  டவுசர் பாண்டி said:
  October 3, 2011 at 2:51 am

  நைனா,
  இப்பதேன் ஒன்னோட சைட்டுல உள்ள மேட்டருங்கள ரெம்ப நாளைக்கப்புறம் முழுசா படிச்சிருக்கன். அல்லாரும் ஆடியோ வாணாம் வாணாம்னு சொல்ல்றாய்ங்க. இருந்தாலும் கூட சேந்து நாமளும் பத்தோட பதினொன்னா சொன்னா நீ கோச்சிக்கிவியோன்னு பீல் பண்ணேன். ஆனா இன்னிக்கிதேன் சூடா படிச்சிருக்கேன் அதும் முழுசா. டேங்சு நைனா (உபயஸ்தருக்கும் சேத்துதேன்).

   Mani said:
   October 3, 2011 at 7:16 am

   பாண்டி! அண்ணன் ரொம்ப சூப்பரான மேட்ருங்களை கொடுக்க ஆரம்பிச்சிருக்கார். போகப் போகப் பாருங்க இனிமேல் களைகட்ட போகுது.

    S Murugesan said:
    October 3, 2011 at 7:46 am

    வாங்க மணி !
    பாண்டிதான் , நீங்கதான்னுல்ல ஆரு வேணம்னா – அட சோசியமே டுபுக்குன்னு வாதிடறவுக கூட கலக்கலாம்.

    இது ஒரு ஜங்க்சன் பாய்ண்ட் அம்புட்டுதேன்.

  Mani said:
  October 3, 2011 at 9:32 am

  டவுசர் பாண்டி! கே.பி. முறையில் சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை.
  பாரம்பரிய ஜோதிட முறையில் கிரகங்களுக்கு பார்வை, சேர்க்கை போன்ற பலன்களை நாம் கணக்கில் கொண்டு பலன் சொல்கிறோம்.

  ஆனால் கே.பி. முறையில் இவற்றை அவ்வளவாக கணக்கிடுவதில்லை, சில கே.பி. ஜோதிடர்கள் இவற்றையும் கணக்கில் கொண்டு பலன் சொல்கின்றனர்.

  உண்மையிலேயே கே.பி. ஜோதிடத்தின் விதிமுறைகள் தான் என்ன?

   டவுசர் பாண்டி said:
   October 4, 2011 at 6:50 am

   மணியண்ணே,
   இந்த சைட்டுல ஒங்க கேள்விக்கி வெட இருக்கான்னு பாருங்க.

   http://raja-general.blogspot.com/2010/10/blog-post_14.html

    Mani said:
    October 4, 2011 at 11:27 am

    பாண்டி! நீங்க கொடுத்த லிங்க் பார்த்தேன். அதில் கிருஷ்ணமூர்த்தி பத்ததியின் அருமை பெருமைகளையெல்லாம் சொன்னார்களே தவிர கே.பி. முறையை பயன்படுத்தி எப்படி தெளிவாக பலன் சொல்வது என்பதை பற்றி யாரும் விபரமாக சொல்வதாக தெரிவதில்லை.

    நானும் கே.பி. புஸ்தவங்கள் பலவற்றை படித்து பார்த்துவிட்டேன். எனக்கு புரியிற மாதரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.

    ////கிருஷ்ணமூர்த்தி பத்ததியில் சனி பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, சந்திராஷ்டமம், ஏழரை சனி, கிரகங்களுக்குள் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம் இவை எதுவும் கிடையாது. செவ்வாய், சனி, சூரியன் இவை பாபக்கிரகங்கள், 6,8,12& பாப வீடுகள், பாப கிரகங்கள் பாப வீட்டில் இருந்தால் எல்லாம் கெடுதலாகத்தான் முடியும். கேது விருச்சிக ராசியில் 12-வது வீட்டில் இருந்தால் பொருள் பண இழப்பு என்றுதான் சொல்வார்கள். ஆனால் கே.பி. சிஸ்டத்தில் இவை எதுவும் கிடையாது./////

    இப்படி எதுவும் கிடையாது என்றால் எப்படி பலன் சொல்வது. நாம் பரம்பரை முறையில் இவற்றை வைத்து பலன் சொல்வது சரியாக தானே வருகிறது. கே.பி.யில் இவையெல்லாம் கிடையாது என்றால் ஜோதிடத்தை அளித்த முனிவர்கள் தவறாகவா நமக்கு சொல்லியிருப்பார்கள்.

    /////கிரகம் நின்ற நட்சத்திரம், அதன் அதிபதி, உப நட்சத்திராதிபதி இவற்றோடு பிறந்த நேரத்தை மட்டும் வைத்துப் பலன் சொல்கிறோம்./////

    அதான் இவற்றை பயன்படுத்தி எப்படி பலன் சொல்றதுன்னு தெளிவா சொல்லுங்களேன். இவற்றை கணிக்கறதெல்லாம் நம்ம சாப்ட்வேர்கள் சூப்பரா செய்யுது. ஆனா பலன்?

    பாண்டி! கே.பி. விதிமுறைகளை எளிமையாக வரிசைப்படுத்தி எவ்வாறு பலன் சொல்ல பயன்படுத்துவது என்று நீங்கள் சொல்லித்தருகிறீர்களா? இங்கு பாடம் நடத்தினாலும் ஓ.கே. இல்லை உங்கள் ப்ளாகில் செய்தாலும் ஓ.கே.

    எனக்கு தேவையானதெல்லாம் தெளிவான வழிமுறைகள் மட்டுமே. இதில் பாதி அதில் பாதி என்று வைத்து குட்டையை குழப்பி விட்டால் ஒன்றும் புரியமாட்டேங்குது.

    கிட்டதட்ட 2000 ரூவாய்க்கு மேல் கே.பி. புஸ்தவங்களை வாங்கியும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

    என்ன ஒரு நன்மை என்றால் எந்த விஷயங்களுக்கு எந்தெந்த பாவங்களை பார்க்க வேண்டும் என்று மட்டும் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

    மற்றபடி நமது புராண முறையை கேலி செய்வதும், கே.பி. முறையின் புகழ்பாடுவதும் தான் எழுதுகிறார்களே ஒழிய பலன் கூறும் வழிமுறைகள் ஒன்று போல் இருக்கமாட்டேன் என்கிறது.

    என்ன செய்யலாம் பாண்டி! எனக்கு வழிகாட்டுங்களேன். இதற்கு தான் நான் உங்கள் உதவியை கேட்டேன். நீங்கள் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

    கிருஷ்ணா said:
    October 4, 2011 at 1:23 pm

    ////நாளைக்கு மதியம் 2.12&க்கு நீங்கள் உங்கள் நண்பருடன் ஓட்டலுக்குப் போவீர்கள். இன்று இரவு 10.14&க்கு உங்கள் தந்தையிடம் கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுப்பார்.////

    ///// ‘4.29&க்கு சென்னையை அடைந்துவிடும்’ என்றாராம். அவர் சொன்ன அந்த நேரத்தில்தான் அந்த விமானம் சென்னையை வந்தடைந்தது./////

    ////எக்ஸ்கியூஸ் மீ. நீங்கள் வைத்திருக்கும் நோட்டில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பாடத்தில் 27&வது லைனில் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள். என்று சொல்லியிருக்கிறார்.////

    கேக்கறவன் கேனையனா இருந்தா….எருமை எரோப்ளேன் ஒட்டுது நு சொல்லுவாங்க போல
    இருக்கே….. 🙂

    கிருஷ்ண மூர்த்தி அவரு ஏதாவது யட்சிணி யை வசியம் செஞ்சு வச்சு இருப்பாரு…..

    சில குடு குடுப்பை காரன் கூட சில சமயம் சில விசயங்களை துல்லியமாக சொல்லுவது உண்டு…

    எந்த ஜோசிய காரனாவது இதுவரை தான் தவறாக சொல்லி அடி வாங்கியதை சொல்லிய துண்டா…. 🙂

    ஏதாவது பலித்து விட்டால் அதை ஊர் பூரா தம்பட்டம் அடிப்பது உண்டு….இது தான் மனித இயல்பு

    டவுசர் பாண்டி அண்ணன்….டைரக்ட்டா கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டாரு……கிரகண காலத்தில் பொறந்து இருப்பாரோ….

    டவுசர் பாண்டி அண்ணே….

    கலைஞர் கருணா எப்போ பூவுலக வாழ்வை விட்டு பொன்னுலக வாழ்வை அடைவார் (மண்டையை போடுவார் )?

    ஜெயலலிதா பிரதமர் ஆவார?

    விஜயகாந்த் முதல்வர் ஆவார?

    கேள்வி கேக்கப்படும் நேரம் :4-10-2011 6:48pm Coimbatore

    முடிஞ்சா இதுக்கு kp முறையில் பலன் சொல்லுங்க…..

    kp முறை நம்பத்தன்மை இதன் மூலம் தெரிந்து கொள்ள வசதியாய் இருக்கும்

    ////‘‘உங்களிடம் பலர் படிக்கின்றனர். இதைப் படிக்க என்ன தகுதி வேண்டும். அவர்களும் உங்களைப் போல் துல்லியமாகப் பலன் சொல்வார்களா?’’////

    இதை வைத்து தான் உண்மை என்ன என்று சொல்ல முடியும்….அனுபவத்தில் பார்த்தால் தான் தெரியும்

    ////கிட்டதட்ட 2000 ரூவாய்க்கு மேல் கே.பி. புஸ்தவங்களை வாங்கியும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.////

    மணி அண்ணே… உங்க தணியாத ஜோதிட தாகம் வியப்பாக உள்ளது
    நீங்க பார்த்த kp ஜோதிட அனுபவம் பத்தி சொல்லுங்களேன்…..

    கிருஷ்ணா said:
    October 4, 2011 at 1:49 pm

    சரி அரசியல் எதுக்கு….
    நேத்து எங்க ரூம்ல பட்ட பகல்ல….எங்க ரூம்ய தொறந்து (வழக்கமா ரூம் சாவிய பாத்ரூம்-ல தான் வைப்போம்–என்னா நாங்க ஒரு 5 பேர்…..friend யோட friend அவன் இவன் நு சொல்லி ஒரு 10 பேருக்கு மேல அடிகடி ரூமுக்கு வந்துட்டு போவாங்க )) ஒரு லேப்டாப் ஒரு PC travelling back நு ஆட்டை போட்டுட்டு போய்டாணுக….

    திருட்டு நடந்த நேரம்: 3-10-2011 In between 10:45am-11-15 am Coimbatore

    கடசியா ரூம் மேட் ஒருத்தன் 10:30 am க்கு ரூமா விட்டு போய் இருக்கான்….11:30 am க்கு ரூம் மேட் இன்னொருத்தன் ரூமுக்கு வந்து இருக்கான்…இடைப்பட்ட நேரத்தில் திருட்டு நடந்து இருக்கு…..

    டவுசர் பாண்டி அண்ணே….திருடன் யார்? ( நண்பர்களின் நண்பர்கள்…. அல்லது பக்கத்து வீட்டு ஆட்கள் ????) திருட்டு போன பொருள் கிடைக்குமா….(போலீஸ் கம்ப்ளைன் பண்ணி இருக்கு)……

    இதுக்கு kp சிஸ்டம் வச்சு பதில் சொல்லுங்க….

   ISMAIL said:
   October 4, 2011 at 1:45 pm

   ஆமாங்க பாண்டி. ஒரு வெற்றிகரமான தொழில் முறை ஜோதிடராக இருந்தும் திரு. மணி அவர்கள் கேபி முறையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கூச்சப்படாமல் உங்களிடம் கேட்கிறார். தாங்களே இதே தளத்திலேயே கேபி முறை விளக்க தொடர் போட்டால் சிறப்பாக இருக்கும். எதோ மணி அண்ணன் புண்ணியத்தில் நாங்களும் நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாய்ந்த மாதிரி கற்று கொள்வோமல்லவா?.

    Mani said:
    October 4, 2011 at 6:22 pm

    இஸ்மாயில் என்னது நான் வெற்றிகரமான தொழில் முறை ஜோதிடரா? எனது கதையை கிருஷ்ணாவுக்கு கொடுத்த பதில்ல பாருங்க.

  கிருஷ்ணா said:
  October 4, 2011 at 1:54 pm

  திருட்டு நடந்த நேரம்: 3-10-2011 In between 10:45am-11-15 am Coimbatore
  கேள்வி கேக்கப்படும் நேரம் :4-10-2011 7:20pm Coimbatore

   கிருஷ்ணா said:
   October 4, 2011 at 2:24 pm

   இதுல்ல ஒரு ஹைலைட் ஆனா விஷயம் என்னனா…..

   என்னோட வண்டி (passion pro -red color) room வாசல்ல நிறுத்தி வச்சு இருந்தேன்,,,அதனோட key ரூம் குள்ள ஒரு பேக்-ல போட்டு இருந்தேன்…..

   ரூம் புல்லா பேக்,டிரஸ் எல்லாம் கலைச்சு நெரிய தேடி
   இருக்கராணுக….இந்த பைக் key இருந்ததது ஒரு பழைய பேக் என்பதால் அதை கண்டுக்கலை….ஜஸ்ட் எஸ்கேப் 🙂

   நம்ம பைக் செவ்வாய் + ராகு ஆதிக்கதுள்ள வருது….. திண்டல் முருகன் கோவில்லில் பூசை போட்டது + வேல் படம் முன்னாடி போட்டு இருக்கேன் ( எல்லாம் ஒரு பய பக்தி தான்….ஒழுங்கா ஓட்ட தெரியாதுல்ல 🙂 )

   அப்படியே திருட்டு நடந்த கிரக நிலையை பார்க்கும் போது விருச்சிக லக்கணம் ,லக்கனத்தில் ராகு , அம்சத்தில் செவ்வாய் விருச்சிகதில் ஆட்சி பலத்தில் இருக்கிறார்….

   காலம் கேட்டு போச்சு…… BE CAREFUL…. [[ நான் என்னை சொன்னேன் 🙂 ]]

   மணி அண்ணே அப்படியே உங்க ஸ்டைல்ல ஒரு ஆராய்ச்சி பலன ( kp or normal )சொல்லுங்க……

    Mani said:
    October 4, 2011 at 5:41 pm

    கிருஷ்ணா! தொலைஞ்சு போனது லேப்டாப், PC, Traveling bag எல்லாம் உங்களோடதா? அப்புறம் எப்பூடி இப்படி கமெண்ட்டெல்லாம் போட்டு நக்கலடிக்க முடியுது? டவுட்டு! 🙂 🙂

    என்னது அதெல்லாம் உங்களது இல்லியா?! அப்ப நாங்கல்லாம் (ஜோசியக்காரங்க) அம்பேல். ஆளைவுடு சாமியோவ்!!!!! 🙂 🙂

  Mani said:
  October 4, 2011 at 5:23 pm

  வாங்க கிருஷ்ணா!

  //////கேக்கறவன் கேனையனா இருந்தா….எருமை எரோப்ளேன் ஒட்டுது நு சொல்லுவாங்க போல
  இருக்கே….. /////

  //////எந்த ஜோசிய காரனாவது இதுவரை தான் தவறாக சொல்லி அடி வாங்கியதை சொல்லிய துண்டா…/////

  அடக்கடவுளே! நான் அப்படி இப்படி கொஞ்சம் போல டவுசர் பாண்டியிடம் நைஸ் பண்ணி ஏதுனா நாலுவிஷயம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா இப்படி சட்டியை ஒரேடியாப் போட்டு உடைச்சா நான் என்ன பன்னுவேன்? அந்த புள்ள டவுசர் பாண்டி வேற பொசுக்குன்னு கோவிச்சுகிற பார்ட்டி வேற? போச்சு எல்லாமே போச்சு.

  கிருஷ்ணா! இந்த ஈரோட்டு பசங்கல்லாம் இப்படி தான் இருப்பீங்களா? உங்களை சொல்லி குத்தமில்ல உங்க தாத்தாவை (பெரியார்) சொல்லனும்.

  /////மணி அண்ணே… உங்க தணியாத ஜோதிட தாகம் வியப்பாக உள்ளது
  நீங்க பார்த்த kp ஜோதிட அனுபவம் பத்தி சொல்லுங்களேன்…../////

  கிருஷ்ணா! ஜோதிடம்னு இல்லை நான் எதுல நுழைஞ்சாலும் அந்த விஷயத்தை முழுசா புரிஞ்சிக்கிற வரைக்கும் நிம்மதியா தூக்கம் வராது. நடுராத்திரியில திடீர்னு முழிப்பு வந்துரும். சதா அதைப் போட்டு அரைக்கிறது தான் நம்ம வேலையே! காசு, பணம், நேரம், காலம், மானம், மரியாதை இப்படி எந்த விஷயத்தையும் யோசிக்கரதே கிடையாது.

  ரூ.2000-லாம் ஒரு விஷயமே கிடையாது. நான் ஜோதிடத்தை கத்துகிட்டது என்னவோ சில காரணங்களுக்காக தான். ஆனா அதை கத்துக்க ஆரம்பிச்சதுக்கபுறம் தான் உறைச்சது நான் புடிச்சது புலி வாலைன்னு. நான் விட நினைஞ்சாலும் அது என்னிய விடாது போலருக்கு.

  இதுவரைக்கும் ஜோதிடத்துக்காக நான் செலவழிச்சதுன்னு கணக்கு பார்த்தா ஒரு 50,000 வரை ஏன் அதுக்கு மேல கூட இருக்கும். (ஜோதிட டிப்ளமோ, பி.ஏ.டிகிரி, புஸ்தவம், கணிணி, சாப்ட்வேர்கள்) இன்றைய நாளது வரை உங்ககூட பேறசது வரை. எனது ஆயுசு இருக்கறதுக்குள்ளாற என்னால இதையெல்லாம் முழுசா தெரிஞ்சுக்க முடிமோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனா எனது கடைசி மூச்சிருக்கும் வரை எனது தேடுதல் மட்டும் ஓயவே ஓயாது.அப்படி ஒரு வெறி.

  இதெல்லாம் வீட்ல தெரிஞ்சா சட்னிதான் ஏதோ சொல்லி சமாளிச்சிக்டிருக்கேன். ஆனா இதுவரை ஜோதிடத்தை பயன்படுத்தி என்ன சம்பாதிச்சிருப்பேன்னு நினைக்கறீங்க? பூஜ்யம்தேன். நீங்கெல்லாம் நினைக்கற மாதிரி நான் தொழில்முறை ஜோதிடர் கிடையாது. உங்களைப் போன்றே தேடுதலில் இருக்கும் ஒரு சாதாரண மாணவன் மட்டுமே. இங்கன பலன் சொல்றதெல்லாம் ஒரு உரைகல் மாதிரி நான் கத்துக்கிட்டதை வைத்து நம்ம அறிவை டெஸ்ட் பண்ற ஒரு லேப் மாதிரின்னு வச்சுக்கங்களேன்.

  நான் பொதுவா கணக்கு பாக்கிற ஆள்கிடையாது. நெல்லை விதைச்சா நெல்லை அறுவடை பண்ணனும்னு நினைக்கிற ஆள் கிடையாது. அட வைக்கோல் கிடைச்சா கூட போதும். நாம நெனைச்சது நடந்துருச்சே நாம இறங்கின வேலை சக்சஸ் ஆயிச்சுன்னா போதும் அதுவே எனக்கு திருப்திதான்.

  ///நீங்க பார்த்த kp ஜோதிட அனுபவம் பத்தி சொல்லுங்களேன்…..///.

  சொல்றேன் நான் கே.பி. முறையில் ஜாதகம்லாம் யாரிடமும் பார்க்லை. நம்ம அனுபவத்தையும், கேள்விகளையும் லிஸ்ட் அவுட் பண்ணா அது சீக்கிரம் முடியற வேலைகிடையாது. ஜோதிடத்தில் நம்ம ஆராய்ச்சி கிட்டதட்ட 12 வருட கதை அதையெல்லாம் நேரம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்.

  Mani said:
  October 4, 2011 at 5:46 pm

  ////மணி அண்ணே அப்படியே உங்க ஸ்டைல்ல ஒரு ஆராய்ச்சி பலன ( kp or normal )சொல்லுங்க……////

  நானு பிரசன்னம் எல்லாம் பார்க்கிற அளவுக்கு இன்னும் பெரிய ஆளா ஆவலீங்கோவ்!

  (மனசாட்சி: இந்த கிருஷ்ணாகிட்ட ரெம்ப ஜாக்கிரதையா இருக்கனும்ப்பா. நாம எதாச்சும் ராகு, கேதுன்னு எக்குதப்பா உளறபோயி அப்புறம் நம்மை நார் நாரா கிழிச்சு தொங்கப்போட்டுருவாரு எதுக்கு வம்பு உடு ஜுட்!.)

  Mani said:
  October 4, 2011 at 5:49 pm

  ////கலைஞர் கருணா எப்போ பூவுலக வாழ்வை விட்டு பொன்னுலக வாழ்வை அடைவார் (மண்டையை போடுவார் )?////

  உங்க வண்டி தப்பிச்சுதுல்ல இதுவும் கேட்பீக. இதுக்கு மேலயும் கேட்பீக. எவனாவது கரைவேட்டிகாரன்கிட்டே கேளுங்களேன் ஒருவேளை உங்களுக்கு மிகச்சரியாக சொன்னாலும் சொல்லுவாங்க. 🙂 🙂 வர்ட்டா……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s