வாழ்க்கை : தேவை ஒரு சிறு புரிதல்

Posted on

ஒஷோவின் உதாரணத்தோட இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்.எலக்ட்ரிக் பல்பை கண்டுபிடிச்சவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஒரு தாட்டி கிராமத்துலருந்து அவரோட சொந்தக்காரரு இவரை பார்க்க வந்தார். ரா தங்க வேண்டியதாயிருச்சு.

எடிசன் தன் உறவுக்காரரை இரவு சாப்பாட்டுக்கு பிறகு மாடி அறைக்கு கூட்டிக்கிட்டு போனாரு. ஸ்விட்ச் போர்டை நோக்கி நாலடி வச்சாரு. ஸ்விட்சை போட்டாரு பல்பு எரிஞ்சது. ஓகே நீங்க படுத்துக்கங்கனு சொன்னாரு .இறங்கி போயிட்டாரு.

உறவுக்காரர் படுக்கையில படுத்துக்கிட்டாரு. ஆனால் தூக்கம் வரலை .அவருக்கு பல்புல்லாம் பார்த்து பழக்கமில்லை. வெளிச்சம் உறுத்துது. தூக்கமே வரலை. கஷ்டப்பட்டு அந்த பல்பை ஊதி ஊதிப் பார்க்கிறாரு அணைக்க முடியலை. அரண்டு போயிட்டாரு. அன்னைய ராத்திரி சிவராத்திரி ஆயிருச்சு.Read More

Advertisements

9 thoughts on “வாழ்க்கை : தேவை ஒரு சிறு புரிதல்

  டவுசர் பாண்டி said:
  September 27, 2011 at 7:00 am

  சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கேரளா மாநிலத்திலுள்ள ஆலப்புழாவில் ஜோதிடத்தை பற்றிய சிறப்பு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடுவராக திரு.சீனாமூனா அவர்கள் பங்கேற்றார்.

  ஜோதிடத்தில் சிறந்தது பாரம்பரியமே என்ற அணியில் நம்ம டானாபானாவும், ஜோதிடத்தில் சிறந்தது கேபி முறையே என்ற அணியில் திரு.மானாகானாவும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நவராத்திரி அன்று இரவு ஏழு மணிக்கு உங்கள் பன் டிவியில் ஒளிபரப்பாகும்.

  (பட்டிமன்றம் ஆரம்பிக்கிறது. அனைவரும் வருகின்றனர். இருக்கையில் அமர்கின்றனர். நடுவர் சீனாமூனா அவர்கள் பேசத்தொடங்குகிறார்)

  நடுவர் (சீனாமூனா): வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இன்று மக்களிடையே ஜோதிடத்தில் ஒரு பக்கம் ஈடுபாடு இருந்தாலும் இன்னொரு பக்கம் வெறுப்பு உண்டாகி இருக்கிறது. காரணம் ஜோதிடம் அல்ல. ஜோதிடர்கள்தான். ஜோதிடமா? அது மூட நம்பிக்கை! நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் அது நடக்கும். இவ்வாறாக மக்கள் புலம்புவதற்கு காரணம், ஜோதிடர்களிடத்தே வரும் வாடிக்கையாளர் மனதில் நினைத்தவற்றை அப்படியே கூற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஜோதிடத்தை ஜோதிஷமாக கூறவேண்டும். ஹோஷ்யமாகக் கூறக்கூடாது. பாரம்பரிய ஜோதிடத்தில் சாதாரணமாக ஜாதகத்தை ராசியிலிருந்து கணக்கிட்டு பலன்களை கூறுவது, பரிகாரம் செய்வது வழக்கம். திருமணமாகதவர்கள் பரிகாரம் செய்தும் திருமணம் நடக்காமல் தடை ஏற்படுகின்ற சமயத்தில் ஜோதிடத்தை இகழ்ந்து பேசுகின்றனர். இதற்கு காரணம்? சித்தர்களும், ரிஷிகளும் அருளிய ஜோதிடமா? அல்லது ஜோதிடர்களா? சிலர் தலைமுறை தலைமுறையாக உள்ள ஜோதிடமே மிகச்சிறந்தது என்றும், பலர் (?) கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையே சிறந்தது என்றும் கூவி வருகின்றனர். சரி இனி மன்றத்துக்கு வருவோம். முதலில் பாரம்பரிய அணியிலிருந்து ஆரம்பிப்போம்.

  டனாபானா: நடுவுலவுள்ளவருக்கும் மற்றும் சபைலவுள்ள அனீவருக்கும் வணக்கம்பா. இன்னிக்கு நாட்டுல அதிகபச்ச சோசியக்காரவுக நம்ம பாரம்பரிய சோசியத்ததேன் பாலோ பண்ணிக்கிட்டு கெடக்காய்ங்க. ஊரூருக்கு பஸ்டாண்டுல கட இருக்கோ இல்லியோ, பஸ்ஸ்டாண்டு பக்கத்துல திருவள்ளுவர் சோதிட நிலையம் இருக்கும். அந்தளவுக்கு நம்ம பாரம்பரியம் பெயர் பெற்றது. சனங்களும் அதத்தேன் விரும்புறாய்ங்க. சித்தர்களும் மற்ற அறிவுஜீவிங்களும் தங்களோட தீர்க்கமான இன்டியூசனாளையும், தீர்க்கதரிசனத்தாலும், கண்டுபுடிச்சி ஓலைல எழுதி வெச்சிட்டு போனாய்ங்க. அந்த காலத்துல இப்பம் மாறி பெரிஸ்கோப், டெலஸ்கோப், சினிமாஸ்கோப்புன்னு பயாஸ்கோப் காட்டாம தங்களோட தவ வலிமையால கண்டுபுடிச்சி நம்மள மாறி சனங்களுக்கு பயன்படட்டும்னு ஓலைசுவடி மூலமா எளிதி வெச்சிட்டு பூட்டாய்ங்க. அப்பேற்பட்ட பொக்கிஷம் நம்ம பாரம்பரியம். அவ்வளவு ஏன் இன்னிக்கி கொயந்த வவுத்துல இருக்கச்சே ஆணா பொன்னான்னு ஸ்கேன் பண்ணி பாக்கிற அளவுக்கு டெக்குனாலாஜி வளந்தது ஒருபக்கம் கெடக்கட்டும். ஆநா மிந்தி ஒரு மண்ணும் கண்டுபுடிக்காத காலத்துலேயே பிறக்கப்போகும் குழந்தை ஆனா பொன்னான்னு துல்லியமா சொல்றலவுக்கு பாரம்பரியத்துல சொல்லிருக்கிறாய்ங்க. இதற்கு எதிரணியினர் பதில் சொல்ல முடிமா?

  மணாகானா: நடுவர் அவர்களுக்கு வணக்கம் மற்றும் பாரம்பரிய அணியினருக்கும் வணக்கம். நடுவர் அவர்களே, கே.பி சிஸ்டம் என்பது ஒரு பொக்கிஷம் போன்றது. அதில் ஆராய்ச்சி செய்ய செய்ய பல அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நண்பர் டானாபானா சொல்லியது போல் பிறக்க போகும் குழந்த ஆணா பெண்ணா என்று கண்டறிவதை கே.பி முறையில் துல்லியமாக கூறுவதுடன் பிறக்கப்போகும், நாள் மற்றும் நேரத்தையும் கூட சொல்ல முடியும். இருப்பினும் டானாபானா அவர்கள் அவரது பாரம்பரிய முறையை ஆதாரத்துடன் கூற முடியுமா?

  டானாபானா: இந்த புள்ள மேட்டருக்கு ரெண்டு வேறு சாதகமும் வோணும். இப்ப ஆம்பள சாதகத்துல சூரியன்,குறு,சுக்கிரன் இந்த மூணு கெரகமும் ரெம்ப முக்கியம். ஆம்பள பையனோட பொறந்த சாதகத்துல இந்த மூணு கேரகத்தோட டிகிரியவும் கூட்டி முன்நூத்தருவத கயிச்சி வர்ற மீதிய மேசத்துலருந்து எண்ணுனா வர்ற ராசிதேன் பீஜ ராசி. இதே மாறி பொட்டபுள்ளைங்க சாதகத்துல சந்திரன், குறு, செவ்வா இந்த மூனையும் கூட்டி எண்ணுனா வர்ற ராசிதேன் சேத்திர ராசி. இந்த பீஜ சேத்திரம் மேல அலி கெரகங்க பார்வ படக்கூடாது. அப்டி பட்டா (யாருக்கு படுதோ) கொஞ்சம் சிக்கல். இன்னும் துல்லியமா வோனுமுன்னா பீஜ ராசியோட டிகிரி எத்தனாம் பாதத்துல உழுதோ அத அம்சத்துல கெஸ் பண்ணி வீக்கா இல்ல நார்மலான்னு செக் பண்ணிரலாம். இதுல இன்னொரு மிக்கியமான மேட்டரு இன்னான்னா ராகு இந்த பீஜ சேத்திர ராசில இருக்க கூடாது. அப்டிருந்தா கர்ப்பம் தரிக்கிரதுல கொஞ்சம் போல பெரச்சன வரும். இதெல்லாம் சாதபொருத்தம் பாக்கச்சிலையே சோசியக்காரன் பாத்துதேன் குடுப்பான். இப்ப பொறக்குற கொயந்த மேட்டருக்கு வர்றேன். அந்த பொண்ணோட வயசு கர்ப்பமான மாசம் இத வெச்சி கண்டுபுடிப்போம். இப்ப உதாரணத்துக்கு பொட்டபுள்ள வயசு இருவத்தஞ்சி, ஜனவரில உண்டாயிருந்தா பொட்டப்புள்ளதேன் பொறக்கும்.

  மாநாகானா: அப்ஜெக்சன் நடுவர் அவர்களே. இந்த முறைகள் எல்லாம் அந்த காலத்திற்கு வேண்டுமானால் ஒத்து வந்திருக்கலாமே ஒழிய நடைமுறையில் சாத்தியமாகாது. மேலும் இப்போதைய சூழ்நிலையில் கர்ப்பம் தரிக்கும் நாள் முதலியவற்றை கண்டறிவதிலும் பிரச்சினைகள் உள்ளது. ஆனால் இதற்கு கே.பி முறையில் தீர்வு உள்ளது. இருநூற்று நாற்பத்தி ஒன்பதுக்குள் ஓர் எண் வாங்கி அதன் மூலம் பிரசன்னம் பார்க்கும் பொழுது இரண்டு ஐந்து ஏழு ஆகிய பாவங்களை அலசினாலே துல்லியமாக கூறிவிடலாம். இதில் பிறக்கப்போகும் குழந்தை இரண்டாவது எனில் ஏழாம் பாவத்தை அலசவேண்டும். மேலும் கேள்வி கேட்ட நேரத்தில் உள்ள ஆளும் கோள்களை எடுத்துக்கொண்டு இந்த மூன்று பாவங்களிலுள்ள உப நட்சத்திராதிபதிகளில் யார் வலுவான குறிகாட்டியாக வருகிறாரோ அவரை எடுத்துக்கொண்டு அந்த எண்ணிற்கு கணித்த தசாபுத்தி அந்திர நாதர்கள் அனுகூலமாக வரும் நாள் மற்றும் நேரத்தையும் கூட துல்லியமாக கூறிவிட முடியும்.

  டானாபானா: சரி. எங்க பாரம்பரிய சோசியத்துல கூட பொறந்தவைங்க, தாய்மாமன், பாட்டன், முப்பாட்டன் வர எத்தினி வேறுன்னு துல்லியமா சொல்லிருவோம் கண்ணு.

  மாநாகானா: ஒங்க பாரம்பரிய தில்லாலங்கடி எங்களுக்கும் தெரியும்டி. ….[என்று “அந்த சூனா பூனா(கெட்ட வார்த்த இல்லீங்க்ணா) கணக்கை சொல்ல]

  டானாபானா: (கோவத்தில்) கையில் சிக்கியதைக் கொண்டு எறிய

  மானாகானா: (பதிலுக்கு) அருகில் உள்ள பிளாஸ்டிக் சேரைக்கொண்டு எறிய (அந்த இடமே போர்க்களமாக மாறியது)

  சீனாமூனா: புலவர்களே! சாந்தமாக உரையாடுங்கள். இது தமிழக சட்டசபை (?) அல்ல. ஜோதிட திருச்சபை. புலமைக்கி சக்தி தேவதாம்பா. ஆனா அது சண்டையா மாறிடப்டாது. ஆமா சொல்ட்டன். ப்ரீயா உடு சாரே. (மேலும் நிலைமை மோசமாவதை உணர்ந்த நடுவர்) இருதரப்பினரிடையே நடந்த விவாதங்களை பார்க்கும் பொழுது கே.பி.முறைக்கே அதிகம் செல்வாக்கு இருப்பது போல் தோன்றுகிறது. ஆதலால் கே.பி. முறையே சிறந்த முறை என்று தீர்ப்பளிக்கிறேன்.

  டானாபானா: (கோவத்தில்) நாட்டாம………. தீர்ப்ப மாத்து (என்று கத்த)

  சீனாமூனா: (அருகிலுள்ள பொத்தானை அழுத்த…)
  (அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக பாரம்பரிய அணியினரை வெளியேற்றினர்)

  Mani said:
  September 27, 2011 at 9:17 am

  டானாபானா – டவுசர் பாண்டி
  மானாகானா – மணிகண்டன்
  சீனாமூனா – சித்தூர் முருகேசன்

  ஏம்பா! டவுசர் பாண்டி! எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.

  கல்லூரி கலக்கல் said:
  September 27, 2011 at 2:51 pm

  அது ஒரு இனிய காலைப்பொழுது. சூரியன் மெதுவாக முப்பத்தி இரண்டு டிகிரியை முத்தமிட்டுக்கொண்டிருந்தார். அந்த ரம்மியமான சூழலில் பசுமையை வேலியாகக் கொண்டிருந்த அந்த கல்லூரிக்குள் இளஞ்சிட்டுக்கள் சிறகடித்து பறந்து கொண்டிருந்தன. மணி(time) சரியாக ஒன்பது முப்பது ஆன பொழுது மணி(bell) வேகமாக அலறியது. அனைவரும் வகுப்புக்குள் சென் று அமர்ந்தோம். பேராசிரியர் வந்ததும் வணக்கம் செலுத்திவிட்டு அமர்ந்தோம்.

  பேரா: டியர் ஸ்டூடண்ட்ஸ்! மை நேம் இஸ் முருகேசன். நான் உங்களுக்கு ஜோதிட பாடம் எடுப்பதற்காக வந்திருக்கிறேன். உங்கள் பெயரை வரிசையாக சொல்லுங்கள். பாப்பம்.

  என் பெயர் மணி, என் பெயர் இஸ்மாயில், என் பெயர் வினோத், என் பெயர் கல்யாண், என் பெயர் கிருஷ்ணா, என் பெயர் சுகுமார்ஜி, என் பெயர் தனிக்காட்டு ராசா, என் பெயர் ஜானகிராமன், என் பெயர் யோகி,….. (என்று ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தனர். கடைசி பெஞ்சில் இருந்து) என் பெயர் டவுசர் பாண்டி (என்று ஒருவன் சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டனர்) (வெட்கத்தில் அந்த மாணவன் புழுவாய் நெளிந்தான்)

  பேரா: சைலன்ட்…. சைலன்ட் ப்ளீஸ்…. பேருல என்ன இருக்குன்னு சிரிக்கிறீங்க. ஒகே. இன்றைக்கு முதல் நாள் என்பதால் அதுவும் ஜோதிட வகுப்பு என்பதால் கண்களை மூடி உச்சிஷ்ட கணபதியை ஒரு நிமிடம் நினைத்து, பிறகு இந்த புகைப்படத்தில் உள்ளவரை ஒரு கணம் தியானித்து அமருங்கள் (என்று புகைப்படத்தை http://1.bp.blogspot.com/-s9Re8o_Zq_s/Tl773RufOsI/AAAAAAAAAKY/GKBVOJL9mt8/s1600/my-guruji.jpg காட்டினார்)

  (மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று பேராசிரியரின் உத்தரவின்படி செயல்பட்டனர்)

  பேரா: ஜோதிடத்தை பற்றி நீங்கல்லாம் ஏற்கனவே நெறைய விஷயம் தெரிஞ்சிட்டு வந்திருக்குறதா பிரின்சிபால் சொன்னாப்ல. அது போக நெறைய பேரு ஜோதிடத்துல டிகிரியும் வாங்கிருக்குறதா சொன்னாங்க. அதனால உங்களுக்கு கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையை பற்றி ஓரளவுக்காவது தெரிஞ்சிருப்பீங்க. ஸோ, நாம ஸ்ட்ரேய்ட்டா பாடத்துக்கு போயிருவம். ஏதும் சந்தேகம் இருந்தா கீபோர்டால டைப் அடிச்சி இங்கன ஆட் பண்ணி வச்சிட்டுப் போங்க. நெக்ஸ்ட் அவர்ல வந்து கிளியர் பண்ணிடுறேன். ஒகே.

  மொதல்ல மங்களகரமா ஆரம்பிப்பம். உங்கள்ள யாருக்காவது சுப நிகழ்ச்சிகள்ல சந்தேகம் எதுவும் இருக்கா? (என்று கூறி முடித்தவுடன் சடாரென்று கடைசி பெஞ்சில் இருந்து ஒரு குரல்)

  ட.பாண்டி: ஸார், எனக்கு எப்பொழுது கல்யாணம் ஆகும்? (என்று முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு கேட்டவுடன், மறுபடியும் அனைவரும் கலகலவென்று சிரித்தனர்)

  பேரா: (லேசாக சிரித்தவாறே) நல்ல கேள்விதான். பொதுவாக நமது பிறந்த ஜாதகத்தை கொண்டு சொல்லும் பலன்கள் ஒருவேளை சரியாகவோ அல்லது தப்பாவோ வரலாம். ஆனால் பிரசன்ன ஜாதகத்தில் உங்களுக்கு நீங்கள் கேட்கும் மற்றும் எதிர்பார்க்கும் கேள்விகளுக்கு அக்யுறேட்டான பதில்கள் கெடைக்கும். இந்த முறையில் பிரசன்னம் மற்றும் பிறந்த ஜாதகங்களை அலசலாம். முதலில் பிரசன்ன ஜாதகத்தை பத்தி பாப்பம். இந்த பிரசன்ன முறையில் கணிக்க கோச்சாரமும், எரநூத்தி நாப்பத்தி ஒம்போதுக்குள்ள ஒரு நம்பரும் தேவைப்படும். இந்த எரநூத்தி நாப்பத்தி ஒம்போது நம்பர் ஒவ்வொன்னும் பொக்கிஷம் மாதிரி. சரி. தம்பி டவுசரு கல்யாணத்த பத்தி கேட்டீல்லா, நல்லா யோசிச்சி ஒரு நம்பர் குடு பாப்பம்.

  ட.பாண்டி: எழுவத்தி நாலு ஸார்.

  பேரா: (தனது வலது பக்க மூளையை தட்டியவாறே)………… ஆங் இப்பொழுது எழுவத்தி நாலுன்ற நம்பரு கடக ராசி பூச நச்சத்திரத்துல குருவோட உபனச்சத்திரத்துல உழுது. லக்னம் பதினாலு டிகிரி அம்பத்தி மூணு நிமிஷம் இருவது செகண்டுல வருது. இதே மாதிரி மத்த பாவங்களுக்கும் கணிக்கணும்

  இஸ்மாயில்: ஸார், இப்படி கணிக்கும் பொது எடத்துக்கு எடம் பாவங்களோட ஸ்டார்ட்டிங் பாய்ண்டு மாறாதா?

  பேரா: நல்ல கேள்வி. ஒரே அட்சாம்சத்துல உள்ள ஊருன்னா அதே ஆரம்ப முனைதான் வரும். அது போவ ரேகாம்சம் மாறுனாலும் முனைகள் மாறாது. அதனால நாம எந்த எடத்துல இருந்து நோண்டி நுங்க எடுக்குரோமோ அந்த எடத்துக்குல அட்சாம்சத்த மட்டுமே கணக்குல எடுத்துக்கணும். அடுத்த கிளாசுல புக்ஸ உங்களுக்கு அறிமுகப்படுத்துறேன். அத வெச்சி நீங்களே கணிக்கவும் சொல்லித்தர்றேன். இன்னிக்கி மொத நாளுன்றதால லேசா ஒரு இன்றடக்சன் மட்டும் குடுக்குறேன். இதுல அயனாம்சமும் ரெம்ப முக்கியம். அந்தந்த வருஷத்துக்குன்னு ஒவ்வொரு அயனாம்சம் உண்டு. அத மட்டுந்தேன் யூஸ் பண்ணனும்.

  மணி: ஸார் அப்ப அயனாம்சமும் கேபி க்கு என்று உள்ளத தான யூஸ் பண்ண வேண்டிருக்கும்?

  பேரா: ஆமாம் மணி. சரியா சொன்னீங்க. (என்று சொல்லி முடிக்கவும் மணி சரியாக ஒலித்தது)

  பேரா: ஒகே ஸ்டூடண்ட்ஸ். நாளைக்கு அக்குவேறா ஆணிவேரா பிரிச்சி மேஞ்சிருவோம். (இப்ப நெரிய சோலி இருக்குபா. நாளைக்கி வர்றேன்)

  கல்லூரி கலக்கல் said:
  September 27, 2011 at 2:53 pm

  அது ஒரு இனிய காலைப்பொழுது. சூரியன் மெதுவாக முப்பத்தி இரண்டு டிகிரியை முத்தமிட்டுக்கொண்டிருந்தார். அந்த ரம்மியமான சூழலில் பசுமையை வேலியாகக் கொண்டிருந்த அந்த கல்லூரிக்குள் இளஞ்சிட்டுக்கள் சிறகடித்து பறந்து கொண்டிருந்தன. மணி சரியாக ஒன்பது முப்பது ஆன பொழுது மணி வேகமாக அலறியது. அனைவரும் வகுப்புக்குள் சென் று அமர்ந்தோம். பேராசிரியர் வந்ததும் வணக்கம் செலுத்திவிட்டு அமர்ந்தோம்.

  பேரா: டியர் ஸ்டூடண்ட்ஸ்! மை நேம் இஸ் முருகேசன். நான் உங்களுக்கு ஜோதிட பாடம் எடுப்பதற்காக வந்திருக்கிறேன். உங்கள் பெயரை வரிசையாக சொல்லுங்கள். பாப்பம்.

  என் பெயர் மணி, என் பெயர் இஸ்மாயில், என் பெயர் வினோத், என் பெயர் கல்யாண், என் பெயர் கிருஷ்ணா, என் பெயர் சுகுமார்ஜி, என் பெயர் தனிக்காட்டு ராசா, என் பெயர் ஜானகிராமன், என் பெயர் யோகி,….. (என்று ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தனர். கடைசி பெஞ்சில் இருந்து) என் பெயர் டவுசர் பாண்டி (என்று ஒருவன் சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டனர்) (வெட்கத்தில் அந்த மாணவன் புழுவாய் நெளிந்தான்)

  பேரா: சைலன்ட்…. சைலன்ட் ப்ளீஸ்…. பேருல என்ன இருக்குன்னு சிரிக்கிறீங்க. ஒகே. இன்றைக்கு முதல் நாள் என்பதால் அதுவும் ஜோதிட வகுப்பு என்பதால் கண்களை மூடி உச்சிஷ்ட கணபதியை ஒரு நிமிடம் நினைத்து, பிறகு இந்த புகைப்படத்தில் உள்ளவரை ஒரு கணம் தியானித்து அமருங்கள் (என்று புகைப்படத்தை http://1.bp.blogspot.com/-s9Re8o_Zq_s/Tl773RufOsI/AAAAAAAAAKY/GKBVOJL9mt8/s1600/my-guruji.jpg காட்டினார்)

  (மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று பேராசிரியரின் உத்தரவின்படி செயல்பட்டனர்)

  பேரா: ஜோதிடத்தை பற்றி நீங்கல்லாம் ஏற்கனவே நெறைய விஷயம் தெரிஞ்சிட்டு வந்திருக்குறதா பிரின்சிபால் சொன்னாப்ல. அது போக நெறைய பேரு ஜோதிடத்துல டிகிரியும் வாங்கிருக்குறதா சொன்னாங்க. அதனால உங்களுக்கு கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையை பற்றி ஓரளவுக்காவது தெரிஞ்சிருப்பீங்க. ஸோ, நாம ஸ்ட்ரேய்ட்டா பாடத்துக்கு போயிருவம். ஏதும் சந்தேகம் இருந்தா கீபோர்டால டைப் அடிச்சி இங்கன ஆட் பண்ணி வச்சிட்டுப் போங்க. நெக்ஸ்ட் அவர்ல வந்து கிளியர் பண்ணிடுறேன். ஒகே.

  மொதல்ல மங்களகரமா ஆரம்பிப்பம். உங்கள்ள யாருக்காவது சுப நிகழ்ச்சிகள்ல சந்தேகம் எதுவும் இருக்கா? (என்று கூறி முடித்தவுடன் சடாரென்று கடைசி பெஞ்சில் இருந்து ஒரு குரல்)

  ட.பாண்டி: ஸார், எனக்கு எப்பொழுது கல்யாணம் ஆகும்? (என்று முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு கேட்டவுடன், மறுபடியும் அனைவரும் கலகலவென்று சிரித்தனர்)

  பேரா: (லேசாக சிரித்தவாறே) நல்ல கேள்விதான். பொதுவாக நமது பிறந்த ஜாதகத்தை கொண்டு சொல்லும் பலன்கள் ஒருவேளை சரியாகவோ அல்லது தப்பாவோ வரலாம். ஆனால் பிரசன்ன ஜாதகத்தில் உங்களுக்கு நீங்கள் கேட்கும் மற்றும் எதிர்பார்க்கும் கேள்விகளுக்கு அக்யுறேட்டான பதில்கள் கெடைக்கும். இந்த முறையில் பிரசன்னம் மற்றும் பிறந்த ஜாதகங்களை அலசலாம். முதலில் பிரசன்ன ஜாதகத்தை பத்தி பாப்பம். இந்த பிரசன்ன முறையில் கணிக்க கோச்சாரமும், எரநூத்தி நாப்பத்தி ஒம்போதுக்குள்ள ஒரு நம்பரும் தேவைப்படும். இந்த எரநூத்தி நாப்பத்தி ஒம்போது நம்பர் ஒவ்வொன்னும் பொக்கிஷம் மாதிரி. சரி. தம்பி டவுசரு கல்யாணத்த பத்தி கேட்டீல்லா, நல்லா யோசிச்சி ஒரு நம்பர் குடு பாப்பம்.

  ட.பாண்டி: எழுவத்தி நாலு ஸார்.

  பேரா: (தனது வலது பக்க மூளையை தட்டியவாறே)………… ஆங் இப்பொழுது எழுவத்தி நாலுன்ற நம்பரு கடக ராசி பூச நச்சத்திரத்துல குருவோட உபனச்சத்திரத்துல உழுது. லக்னம் பதினாலு டிகிரி அம்பத்தி மூணு நிமிஷம் இருவது செகண்டுல வருது. இதே மாதிரி மத்த பாவங்களுக்கும் கணிக்கணும்

  இஸ்மாயில்: ஸார், இப்படி கணிக்கும் பொது எடத்துக்கு எடம் பாவங்களோட ஸ்டார்ட்டிங் பாய்ண்டு மாறாதா?

  பேரா: நல்ல கேள்வி. ஒரே அட்சாம்சத்துல உள்ள ஊருன்னா அதே ஆரம்ப முனைதான் வரும். அது போவ ரேகாம்சம் மாறுனாலும் முனைகள் மாறாது. அதனால நாம எந்த எடத்துல இருந்து நோண்டி நுங்க எடுக்குரோமோ அந்த எடத்துக்குல அட்சாம்சத்த மட்டுமே கணக்குல எடுத்துக்கணும். அடுத்த கிளாசுல புக்ஸ உங்களுக்கு அறிமுகப்படுத்துறேன். அத வெச்சி நீங்களே கணிக்கவும் சொல்லித்தர்றேன். இன்னிக்கி மொத நாளுன்றதால லேசா ஒரு இன்றடக்சன் மட்டும் குடுக்குறேன். இதுல அயனாம்சமும் ரெம்ப முக்கியம். அந்தந்த வருஷத்துக்குன்னு ஒவ்வொரு அயனாம்சம் உண்டு. அத மட்டுந்தேன் யூஸ் பண்ணனும்.

  மணி: ஸார் அப்ப அயனாம்சமும் கேபி க்கு என்று உள்ளத தான யூஸ் பண்ண வேண்டிருக்கும்?

  பேரா: ஆமாம் மணி. சரியா சொன்னீங்க. (என்று சொல்லி முடிக்கவும் மணி சரியாக ஒலித்தது)

  பேரா: ஒகே ஸ்டூடண்ட்ஸ். நாளைக்கு அக்குவேறா ஆணிவேரா பிரிச்சி மேஞ்சிருவோம். (இப்ப நெரிய சோலி இருக்குபா. நாளைக்கி வர்றேன்)

   கிருஷ்ணா said:
   September 28, 2011 at 11:26 am

   //என் பெயர் கிருஷ்ணா, என் பெயர் தனிக்காட்டு ராசா //

   கிருஷ்ணா=தனிக்காட்டு ராசா
   அண்ணே டவுசர் பாண்டி….ரொம்ப நா வகுப்புக்கு வரமா இருந்தா இப்படி தான்….. 🙂
   தனிக்காட்டு ராசா கிருஷ்ணா வா அவதாரம் செய்து விட்டார்…..

   கிருஷ்ணா said:
   September 28, 2011 at 11:30 am

   ////ஸார், எனக்கு எப்பொழுது கல்யாணம் ஆகும்? (என்று முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு கேட்டவுடன், மறுபடியும் அனைவரும் கலகலவென்று சிரித்தனர்) ////

   இப்போ ஏற்கனேவே கல்யாணம் ஆன மணி அண்ணன் மாதிரி ஒருத்தர் இப்படி ஒரு கேள்விய கேட்ட என்ன பண்ணுவேள் 🙂

   கிருஷ்ணா said:
   September 28, 2011 at 11:39 am

   ///ட.பாண்டி: எழுவத்தி நாலு ஸார்.////

   @கல்லூரி கலக்கல் டவுசர் பாண்டி அண்ணே

   213

   எனக்கு எப்போ கண்ணாளம் கட்ட முடியுமுனு பாத்து சொல்லுங்கோ…..
   கேள்வி இடம் :கோயம்புத்தூர் , நேரம் : 5:06 pm September 28 2011

   [[[அனேகமா டவுசர் பாண்டி அண்ணன் கிட்ட இருந்து இதுக்கு பதில் வராது என்பது எனது கிருஷ்ண பிரசன்னம் 🙂 ]]]

  அ.ஜொ.தீவிர வாசகன் said:
  September 27, 2011 at 7:40 pm

  சிந்தித்து தெளிய வேன்டிய நல்ல கருத்துக்கள் பகிற்வுக்கு நன்றி

  முந்தய பிறவி அடுத்த பிறவி படைப்பின் இரகசியம் இதப்பத்தியெல்லாம் ஜோதிட ரீதியில் விளக்கினால் இதுக்கான ஜாதக கட்டத்துல உள்ள சீக்ரெட்டுங்கலையும் ஃபுல்லா இல்லாட்டாலும்

  சின்ன பிட்டு மாதிரி சொன்னாலும் நல்லா இறுக்கும் நம்ம சைட்டும் பழயமாதிறி களைகட்டும் நாம்மலும் மனி போன்றவற்களையும் நல்லா கலாய்க்கலாம் ஒரே ஜாலியா இருக்கும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s