பொய்யாகும் ஜாதக யோகங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே!

குறிப்பிட்ட சில கிரகஸ்திதிகளை -கிரக சேர்க்கைகளை யோகங்கள்னு சொல்றாய்ங்க. இந்த யோகம் இருந்தா அது வரும், இந்த யோகம் இருந்தா இது வரும்னு ஊத்தறாய்ங்க. ஆக்சுவலா யோகம்னா கலப்பு/சேர்க்கைன்னு பொருள் சொல்லலாம். இதை கவனிங்க.

சம்யோகம் = உடலுறவு

ரெண்டு அ டூ ப்ளஸ் கிரகங்கள் சேர்ரதுக்கு யோகம்னு பேரு. ஆனால் அசலான பொருளே மறந்து போற அளவுக்கு எங்காளுங்க ( நான் உட்பட) செய்துட்டம்.

இந்த விஷயத்துல உண்மை நிலை என்னங்கறதை ஒரு உதாரண ஜாதகம் மூலமாக ஒரு டெக்ஸ்ட் மற்றும் இரண்டு ஆடியோ ஃபைல்ஸ் மூலம் விளக்கியிருக்கேன் ( எத்தீனி மூலம்?)

Read More

Advertisements

23 thoughts on “பொய்யாகும் ஜாதக யோகங்கள்

  டவுசர் பாண்டி said:
  September 24, 2011 at 7:35 am

  வணக்கம் நைனா,

  நைநாவே சொல்லிட்டாப்ல. நம்மள டார் டாரா….. நமக்கு சொல்லியா குடுக்கணும் . சரிங்க்ணா. லேசா புள்ளையார் சுலி போட்டு ஆரம்பிக்கிறேன். நைனா சாதகத்துல ஆறு ஒம்போதாம்பாவாதியான குறு உச்சம் மாதிரிதேன் மேல்டாப்புல தெரியும். உள்ள நோன்டிப்பாத்தாக்க குறு லேசா வீக்கா இருக்காரு. சந்தேகம் உள்ளவைங்களுக்கு ஷட் பலம் மூலமா நிருபிக்கவும் ரெடிங்க்னா. நீங்க சொல்லலாம் அம்சத்துல நீசம்னு. கரீட்டுதேன்.

  நம்ம பாய்ன்ட் ஆப் வீவ் இன்னான்னா லக்ன உபனச்சதிராதிபதிய போக்கஸ் பண்நீங்கன்னாலே போதும். சரிங்க்ணா. நேத்து நைட்டு ஸ்பெக்ட்ரம் மேட்டருல ப.சிதம்பரம் ஐயாவ விசாரனைக்கி கொண்டுபோறத நியூசுல பாத்தேன். சரி. அவருக்கு எதுவும் அடுத்து முன்னேச்சம் இருக்கான்னு ஒரு கை பாத்துருவம்னு லேசா கட்டம் போட்டு பாக்கலாமுன்னு முயற்சி பண்ணேன். சரி. நைனாவோட சைட்டுல எதுனா அரசியல் நியூசு வந்துருக்கான்னு பாப்பானு வந்தேன். நானு நெரிய “முக்கிய” மேட்டருங்கள போட்டாக்க நீங்க ஆரும் பதிலுக்கு ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேன்றீங்க. இன்னாங்கடா இது நாம மாங்கு மாங்குன்னு மசாலா அரச்சி வெச்சா சனங்க சீண்ட மாட்டேன்றாய்ஞ்கலேன்னு லேசா ஒரு பீலிங்கு. சரிங்க்ணா. அது கெடக்கட்டும்.

  நம்ம அடுத்த பிரசன்னத்த இங்கன போடுறன். ஏற்கனவே ஜானகியன்னன பத்தி ஒரு பிரசன்னம் போட்டதுக்கு பேச்சு மூச்ச காணம். சனங்க அப்படியே ஊத்தி மூடிட்டாய்ங்க. அதேன் ஒரு சின்ன பீலிங்கு. நாம ரிஸ்க் எடுக்குற மேட்டர புல்லா சனங்க வேஸ்ட் பண்ணிடுறாய்ங்கப்பா. சரிங்க்ணா.

  வர்ற உள்ளாச்சி தேர்தல்ல நானு பொறந்த தொகுதில அதாவது நாப்பத்தி நாலாவது வாடுல அதிமுக சார்பா நிக்கிற பெருமாலன்னே நிச்சியம் தோத்துருவாருன்னு மிந்தா நேத்து பிரசன்னம் போட்டு கண்டு புடிச்சிட்டேன். மேற்படி பார்ட்டி இந்த மேட்டர படிக்க மாட்டாருங்குற தகிரியந்தேன். இருந்தாலும் ஈரக்கொல நடுங்கத்தேன் செய்து. யாரு செயிப்பான்னு பாத்தாக்க திமுகா சார்பா நிக்கிற ராதா கிருஷ்ணன்னந்தேன் செயிப்பாருன்னு டீப்பா அனலைஸ் பண்ணி சொல்ட்டன். இவரு இப்பதேன் உள்ளருந்து வெளிய வந்தார். என்னைய மாத்திர மாட்டாய்ஞ்கலேன்னு அவருக்கே சந்தேகம் வந்து கேட்டாரு. ஒரே அடியா அடிச்சி (அவர இல்லீங்க்ணா) சொல்ட்டேன். நம்ம கணிப்பு பாசுன்னா நமக்கு காசு. பெயிளுன்னா நாம பீசு. ரிசல்ட்டு ஆத்தா மேல பாரத்த போட்டுத்தேன் இந்த மாறி தில்லான சோலிய பாக்குறது. வெயிட் அண்ட் ஸீ.

  டவுசர் பாண்டி said:
  September 24, 2011 at 8:07 am

  பலன் சொல்ற நண்பர்களுக்காக நைனா சாதக கட்டத்த ஸ்கேன் பண்ணி அட்டச் பன்னிருக்கன். இது பாவச்சக்கரங்க்னா. ஒன்னாம்பாவம் ரெண்டாம்பாவம்னு கூட்டி கழிச்சி பார்க்கலாம். இப்ப உதாரத்துக்கு நைனா சதகத்துல குருவ எடுத்துக்கிட்டீங்கன்னா குறு வந்து இருவத்தியொரு டிகிரி நாப்பத்தி ஒம்போது நிமிஷம் நாப்பத்தி ரெண்டு செகண்டுல நிக்காரு. குருவோட உச்ச ச்புடமே அஞ்சி டிகிரளுருந்துதேன். இன்னம் உள்ள டீப்பா போணும்னா சனியோட (பூச) நச்சத்திரத்துல சூரியனோட உபனச்சத்திரத்துலதேன் குறு இருக்காரு. இப்புடி நோண்டி நொண்டியடிக்காம பாக்கலாம். கடகத்துல இருந்தாலே குறு ஆஹா ஓஹோன்னு சொல்லிரப்டாது. வைத்தியரு கையப்பாப்பாறு சோசியறு காலப்பாப்பாருன்றது ஒரு பயமொழி. (சாரிங்க்னா நமக்குள்ள கெட்டபயக்கம் இதான். நாம பாட்டுக்கு பேசிக்கினே இருக்கச்சில கெயவிங்க மாரி அந்தந்த நேரத்துல பொரிதட்டுற பயமொழிய அவுத்து விடுறது). அதனால நட்சத்திர கால பார்க்கலாம்.

   ISMAIL said:
   September 25, 2011 at 6:13 am

   அன்பிற்குரிய பாண்டி,
   தாங்கள் KP முறையில் சூட்சுமமாக ஜாதகம் கணிப்பதால் தான் இவ்வளவு விபரமாக சொல்ல முடிகிறது. காரணம் பரம்பரை முறையில் ஜாதகம் பார்க்க ராசி, அம்சம், பரல்கள், அச்டகவர்க்கம், என்று பல கணிப்புகளை கவனத்தில் கொண்டு சொல்லும் ஜோதிடர்கள் இப்போது குறைவு. அனால் KP முறையில் வெறும் ராசி கட்டமும், கோள்கள் நிற்கும் டிகிரி, முக்கியமாக உபநட்சதிரம் அதன் அதிபதியை கொண்டு ஓரளவு துல்லியமாக சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.
   அனால் இது பிரசன்னதுக்கு ஒத்து வருவதுபோல ஜாதக கணிப்புக்கு பலன்களுக்கு ஒத்துவருமா என்று கொஞ்சம் சந்தேகம். இது பற்றி விளக்கம் தேவை.
   நானும் ஆடிட்டர் அதன் இப்படியெல்லாம் சந்தேகம்.

    ISMAIL said:
    September 25, 2011 at 6:14 am

    அப்படியே உங்க மெயில் முகவரி கொடுங்களேன். பலமுறை பலர் கேட்டும் தரவே இல்லை. இப்பவாவது கொடுங்களேன்.

    டவுசர் பாண்டி said:
    September 26, 2011 at 3:31 am

    இஸ்மாயிலன்னே,

    //KP முறையில் வெறும் ராசி கட்டமும், கோள்கள் நிற்கும் டிகிரி, முக்கியமாக உபநட்சதிரம் அதன் அதிபதியை கொண்டு ஓரளவு துல்லியமாக சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.//

    என்ன னே இப்புடி புசுக்குன்னு சாதாரணமா சொல்லிப்புட்டீங்க. நீங்க சொன்ன அந்த “வெறும்” ராசிக்கட்டத்துக்குல்லாற கெரகங்கள அடைக்கிரதுக்குல்லாற போதும் போதும்னு ஆயி, எபிமெரிசா வெச்சி கால்குலேசன் போடுறதுக்குள்ள மண்ட காஞ்சிருதுனே. ஓரளவு ஓரளவு என்பது முயற்சி செய்யாதவங்க சொல்ற டயலாக்குனே. நீங்க நல்லா சாமிய கும்புட்டுட்டு கணக்கு போட ஆரம்பிங்க. உங்களோட உள்ளுணர்வை பொறுத்து சடார்னு அல்லது லேட்டாவோ பொறி தட்டும்னே. கேபிலதான் எல்லாத்தையும் சொல்ல முடியும்னு நான் சொள்ளளிங்க்னா. நீங்க எந்த முறையில் கணித்தாலும் எந்த முறையை பாலோ பண்ணினாலும் நல்லா தீர்க்கமா செய்ங்க போதும். உங்களோட சாமர்த்தியம், சமயோசிதம், வழிபாடுதேன் ரெம்ப முக்கியம். பாக்கப்போனா கே.பில கொஞ்சம் லேட்டஸ்ட் ஜெநேரசனுக்கு எத்த மாறி இருக்கும். மத்த படி கணக்கு கிணக்கு எல்லாம் நம்ம பாரம்பரியத்த அச்சானியா வெச்சித்தேன். நம்ம முன்னோருங்க கண்டுபுடிச்ச கணக்குங்கள (ஷட் பலம், ஆயுர்தாய கணக்கு,….) போட்டு வெட கண்டுபுடிக்கிரதுக்குல்லாற போட்டுருக்குற டவுசரு கலண்டு போயிருது. .

    //………பிரசன்னதுக்கு ஒத்து வருவதுபோல ஜாதக கணிப்புக்கு பலன்களுக்கு ஒத்துவருமா……//
    அல்லாத்த்க்குமே ஒத்து வரும்னே. அண்ணே நீங்க நம்மள கேபி மார்கெட்டிங் பார்ட்டின்னு நெனச்சிப்புடாதீங்க. நம்ம முன்னோருங்க கண்டுபுடிச்ச ஜாமக்கோல் ஆருடம், கடிகார ஆருடம், தாம்புல பிரசன்னம், இப்புடி பல இருக்குனே. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இதுல கலக்குறாய்ங்க. அம்புட்டு ஏன், நம்மூரு பக்கத்துல ஒருத்தரு, கிளி சொசியத்த வெச்சி செயலலிதா தாயிதேன் சி.எம் ஆவும்னு மிந்தி சொல்லி கலக்கிருக்காறு. எல்லாம் அவிங்கவிங்க வாங்கி வந்த அல்லது வாங்க முயற்சி பண்ணி கெடச்ச வரம்னே. கடவுள நம்புங்க. மந்திர ஜெபம் பண்ணுங்க. அதிகாலைல மெடிடேசன் பண்ணுங்க. இன்னிக்கி அமாவாசதேன்.

  Mani said:
  September 24, 2011 at 6:53 pm

  வாங்க டவுசர் பாண்டி. உங்க ஜாதக கணிப்பை பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது துல்லியம்னா அப்படி ஒரு துல்லியம் சும்மாவா ஆடிட்டராச்சே அதான் பின்றீங்க வாழ்த்துக்கள்.

  ஆமாம் இந்த கணிதத்தை மேனுவலா போட எம்புட்டு நேரமாகும்? ஒரு ஜாதகத்துக்கு அரை மணிநேரம் ஆகுமா? சரி இதே மாதிரி தொடர்ந்து ஒரு 10 ஜாதகம் வந்தா என்ன பன்னுவீங்க. ஜாதகம் கணிக்கறதுக்கே நாக்கு தள்ளிடுமே. அதிலும் ஏதாச்சும் சின்ன சின்ன தப்பு வர்றது சகஜம் தானே.

  நாம கணிணியில கணிச்சதும், நீங்க மேனுவலா கணிச்சதும் டிசிரி செகண்ட் சுத்தமா அப்படியே வந்துருக்கு பாருங்களேன்.

  நான் இரண்டுவிதமான இணைப்புகளை கொடுத்துருக்கேன்.
  இணைப்பு கீழே

  1. வருடத்திற்கு 365.25 நாட்கள் தசா புக்திகளை கொண்ட கணிதமுறை.
  http://www.mediafire.com/?82kggavhiahyufg

  2. வருடத்திற்கு 360 நாட்கள் தசா புக்திகளை கொண்ட கணித முறை.
  http://www.mediafire.com/?0xbv20jyu72i89y

  எதுக்கு இரண்டுவிதமான கணிதமுறையென்றால் எனது அனுபவத்தில் 360 நாட்கள் முறையில் நடக்கும் தசா புக்தி பலன்கள் சரியாக வருகிறது. நம்ம தல இரண்டு வித முறைகளையும் ஒப்பிட்டு பார்த்து தற்போது நடக்கும் தசா புக்திகளை அனுபவத்தில் எது சரியாக நடைபெறுகிறது என சோதித்துக்கொள்வதற்காக தான்.

  சரி பலன்கள்? அதான் நம்ம தல ஆடியோ பதிவுல சொல்லிட்டாரே. நாம மொதல்ல அலசினது ட்ரையல் (லக்னத்திற்கு மட்டும்) தான் தல முழுசா சொல்லிட்டதால நாம அலசினாலும் சரியாக வருமான்னு தெரியலை.

  நம்ம தலைக்கு 360 நாட்கள் தசா முறைப்படி
  செவ்வாய் தசாவில் சனி புக்தி ஜனவரி 2011 முதல் பிப்ரவரி 2012 வரைக்கும் நடக்குது. (கிட்டதட்ட 1 வருடம் 2 மாசம்)

  செவ்வாய் கடகலக்ன யோகாதியாகி 4ல் கேதுவுடன் அமர்வு.

  செவ்வாய் ராகு சாரம், கேதுவும் ராகு சாரம். ராகுவானவர் 10ல் கேது சாரம்.

  செவ்வாய் கேதுவுடன் இணைந்ததாலும் தன் வீடான 5க்கு 12ல் அமர்ந்ததாலும் செவ்வாய் தசாவில் 5 ம் வீட்டின் பலன்கள் (புத்தி, பூர்வ புண்ணியம், புத்திரர்கள், புகழ், தெய்வ அனுகூலம், மன நிம்மதி) போன்ற பலன்கள் சிறப்பாக இருக்காது. இக்கால கட்டத்தில் இந்த பலன்களால் ஏதாகிலும் மனம் வருத்தப்படக்கூடிய சம்பவங்கள் நிகழும். இவற்றால் இழப்புகளையும் பெற நேரிடும். இந்த சேர்க்கை 4ல் அமைந்ததால் 4ம் வீட்டின் பலன்களும் நடைபெறும். சுகக்குறைவு, பூர்வீக சொத்துகளில் பிரச்சினைகள், வீடு, மனை, வாகன வகைகளில் இழப்புகள், தாய் வழி உறவினர்களால் பிரச்சினைகள் போன்ற பலன்கள் நடைபெறும்.

  செவ்வாயானவர் 10க்குடையவராகி தன்வீட்டை பார்ப்பதால் ஜீவன வழிகளில் முன்னேற்றத்தை ஓரளவிற்கு தரும் நிலையைப் பெறுகிறார்.

  செவ்வாய் தசாவில் ராகு, குரு புக்தி காலங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சென்றிருக்கும். ஆனால் தற்போது நடைபெறுவது சனி புக்தி

  செவ்வாயும், சனியும் பாஸ்பரம் சஷ்டாஷ்டமாக அமைந்திருப்பதாலும், சனியானவர் அஷ்டமாதிபதியாகி 9ல் அமர்ந்திருப்பதாலும் சனிபுக்தி காலம் அவருக்கு சோதனையான காலமாக இருக்கும். எப்படிதான் தல எம்புட்டு கஷ்டம் வந்தாலும் தாங்கிகிட்டு நம்மிடமெல்லாம் கலகலப்பாக பழகுகிறாரோ தெரியவில்லை. (லக்ன குரு தான் காரணம்)

  சனியானவர் 7, 8க்குடையவராகி 9ல் அமர்ந்ததால் மனைவி வழியில் சில நன்மைகளை தருவார். சனி 3ம் பார்வையாக 11 ஐ பார்ப்பதால் சில திடீர் தனவரவுகளும் கிடைக்கலாம்.

  சனி 8-க்குடையவர் என்பதால் பலவிதங்களிலும் இணையத்தில் அந்த போலி ஆசாமியால் மிகுந்த மன உளைச்சல், அவமானம் போன்றவற்றை அடைய வேண்டிய நிலையேற்படுகிறது. மற்ற இடங்களிலும் இதே நிலைதான்.

  சனியானவர் 7ம் பார்வையால் 3ஐ பார்க்கிறார். தனது முயற்சிகளில் கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டிய நிலைமை. மேலும் 10ம் பார்வையால் 6ம்மிடத்தை பார்ப்பதால் கடன், ரோகம், எதிரிகளால் தொல்லை போன்ற பலன்கள் நடைபெறும்.

  ஆனாலும் சனியை குரு பார்க்கிறார். அனைத்தையும் சமாளித்து எந்தவித சேதாரமும் இல்லாமல் நம்ம தலை இதிலிருந்து மீண்டு வருவார்.

  சனியானவர் நம்ம தலையை மிகவும் படுத்தி எடுத்துவிட்டார் போலும். ஒரு பக்கம் ஏழரை சனி, மற்றொரு பக்கம் செவ் தசா, சனி புக்தி என இருதலைகொள்ளி எறும்பாக தவிக்க வேண்டிய நிலை.

  வரக்கூடிய சனிப்பெயர்ச்சியும் வாக்கு சனியிலிருந்து விடுதலை. சனிபுக்தி பிப்ரவரி 2012ல் முடிவு போன்றவை ஓரளவிற்கு நன்மையை தரும்.

  அடுத்து வரக்கூடிய புதன் புக்தியால் நம்ம தலைக்கு என்ன நன்மையோ இல்லையோ அனுபவ ஜோதிட வாசகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனெனில் புதன் 3, 12க்குடையவராகி லக்னத்தில் குரு, சூரியனுடன் இணைவு பெற்று அமர்ந்துள்ளார்.

  3ம்மிடம் எழுத்து, பத்திரிக்கைதுறைகளை குறிக்கிறது. 12ம்மிடம் இவற்றால் பிறருக்கு சேவைசெய்வதை குறிக்கிறது. புதன் ஜோதிடத்திற்கு காரகன். மேலும் எந்த ஜாதகத்திலும் சனிசாரம் பெற்ற புதன் இருந்தால் மிகச்சிறந்த ஜோதிடராக இருப்பார் என்பது விதி. நம்ம தலை ஜோதிடத்தில் சும்மா சுழற்றி சுழற்றி அடிக்கப் போகிறார் பாருங்களேன்.

  கேது, சுக்கிர புக்தி காலங்களில் எச்சரிக்கையாக இருங்கள் தலை. சூரிய, சந்திர புக்திகள் சுமாராக இருக்கும்.

  அடுத்து வரும் ராகுதிசை (ஜூலை 2015க்கு பிறகு) யோகதிசை?…..

  ஆமேட எருது சுறா நண்டு கன்னி. தன்னில் கருநாகம் புகுந்திட பூமேடந் தன்னில் ராச யோகம் – ஜாதக அலங்காரம்.

  யோகாதிபதியான செவ்வாயின் வீட்டில் ராகு, செவ்வாயின் பார்வை, கேது சாரம், கேது செவ்வாய் இணைவு. போன்றவை ராகுவிற்கு நற்பலனை தர ஏதுவாக இருக்கும். செவ்வாய் தசாவில் பெற வேண்டிய நற்பலன்களை ராகுபகவான் தருவார். குருவின் பார்வையோ, அல்லது சேர்க்கையோ இருந்திருந்தால் இன்னும் சிறப்பக இருந்திருக்கும் என்ன செய்வது அவ்வாறு அமையவில்லையே.

   S Murugesan said:
   September 25, 2011 at 12:54 am

   மணி அண்ணே,
   உங்க பொறுமைக்கும் ஆழமான ஆய்வுக்கும் நன்றி. சோதிடத்தில் சரியான பலன் சொல்ல ஆழமான ஆய்வே சில சமயம் தடைக்கல்லாகிவிடுகிறது.

   பல சமயம் மேம்போக்கா பார்க்கையில் படக்குனு ஸ்பார்க் ஆகிற மொதல் பாய்ண்டே பர்ஃபெக்டா இருக்கும். ( நம்ம அனுபவம்)

   நீங்க பாலமுருகன் மயிலேறி மூவுலகை வலம் வந்த கதையா அனலைஸ் பண்ணியிருக்கிங்க. பார்ப்போம்.

   முயற்சியின்மைக்கு வழி மொதல்ல நோண்டி நுங்கெடுத்துரனும். மேம்போக்கா -அசால்ட்டா பார்க்கிற ஸ்டேஜ் வரனும்னா மொதல்ல உங்க ஸ்டைல்ல கணிச்சு கணிச்சு நாக்கு தள்ளனும்.

   வாழ்த்துக்கள். கீப் இட் அப்.

    Mani said:
    September 26, 2011 at 7:34 am

    ////சோதிடத்தில் சரியான பலன் சொல்ல ஆழமான ஆய்வே சில சமயம் தடைக்கல்லாகிவிடுகிறது.////

    அண்ணே! நாம எதாவது தப்பா சொல்லியிருந்தா திருத்திடுங்கண்ணே!

    ////////பல சமயம் மேம்போக்கா பார்க்கையில் படக்குனு ஸ்பார்க் ஆகிற மொதல் பாய்ண்டே பர்ஃபெக்டா இருக்கும். ( நம்ம அனுபவம்) /////

    என்னருந்தாலும் உங்களைப் போல வருமா?

    ////நீங்க பாலமுருகன் மயிலேறி மூவுலகை வலம் வந்த கதையா அனலைஸ் பண்ணியிருக்கிங்க.////

    அதாவது கொழந்தை தத்துபித்துன்னு மழலை பேசுமே அது மாதிரியாண்ணே!.

    ///முயற்சியின்மைக்கு வழி மொதல்ல நோண்டி நுங்கெடுத்துரனும். ///

    இது கொஞ்சம் புரியலை.

    ////மேம்போக்கா -அசால்ட்டா பார்க்கிற ஸ்டேஜ் வரனும்னா மொதல்ல உங்க ஸ்டைல்ல கணிச்சு கணிச்சு நாக்கு தள்ளனும்.////

    சரியோ! தப்போ குளத்தில குதிச்சா தானே நீச்சல் வரும்.

    ////வாழ்த்துக்கள். கீப் இட் அப்.///

    வாழ்த்தெல்லாம் பெரிய வார்த்தைங்கண்ணே! நாம கணிச்ச பலன்ல ஏதுனா சரியா இருந்தா கன்பாஃர்ம் பண்ணுங்களேன். தப்பு ஏதுனா இருந்தா என்னன்னு சொன்னீங்கன்னா எதிர்காலத்தில நம்ம தவறை திருத்திக்க வசதியா இருக்கும்.

    S Murugesan said:
    September 26, 2011 at 11:17 am

    மணி அண்ணே !
    உங்க அனலைஸ் பர்ஃபெக்ட். இப்படித்தான் சின்ன விஷயத்தை கூட விடாம தொட்டு தோல் உரிக்கனும். நான் சொல்லவந்தது என்னன்னா இப்படி உரிச்சு உரிச்சுத்தான் (வெங்காயம்?) கடைசியில ஒன்னும் மிஞ்சாதுன்னு புரிஞ்சுக்கிடனும். அதுக்காவ ஆரம்பத்துலயே அதான் ஒன்னுமில்லையாமேன்னு சொல்லக்கூடாது.

    முருகன் மயிலேறி மூவுலகை சுத்தின மாதிரின்னா ” நியாயமா”ன்னு அர்த்தம். இதுல குழந்தை குட்டிங்கற கான்செப்டையெல்லாம் நான் ரோசிக்கலை.

    வினாயகர் பண்ணது டகால்ட்டி வேலை.( ஆனால் இவர் அதுக்கு மிந்தியே ஏதோ ஒரு யுகத்துல மூவுலகையும் சுத்தி அலைஞ்சுட்டு தாளி அம்மா அப்பா தான் உலகம்னு ரியலைஸ் ஆகியிருக்கனும்)

    இதே சிச்சுவேஷன் அடுத்த யுகத்துல வந்தா முருகர் கூட அப்பா அம்மாவை தான் சுத்தி வருவாரு. (இந்த முடிவுக்கு வரனும்னா அவர் ஏற்கெனவே மூவுலகை சுத்திவந்திருக்கனும்)

    நீங்க சொல்லிட்டு வந்த எல்லாம் விஷயமும் எதிர்காலத்துக்கு சம்பந்தப்பட்டது. நம்ம கிட்டே டைம் மெஷின் இருந்தா ஏறி பார்த்துட்டு உடனே சொல்லிரலாம்.

    இந்த சனி புக்தியை பொருத்தவரை என் கணிப்பு என்னன்னா ஒரு எட்டு நாள் “உள்ளே” போடறதோ அல்லது தலைமறைவா இருக்கவேண்டி வர்ரதோ நடக்கலாம். பிற்பாடு குரு பார்வை காரணமா அந்த உள்ளாற போன மேட்டரே “ராஜ யோகத்தை” தரலாம்.

    சனி புக்தி முடியட்டும். உங்க கணிப்பையும் என் கணிப்பையும் மேட்ச் பண்ணி நடந்ததை பகிர்ந்துக்கறேன்.

    Mani said:
    September 26, 2011 at 11:41 am

    அடேங்கப்பா! முருகன் மயிலேறி மூவுலகம் சுற்றியதை ஜோதிடத்தோடு நீங்கள் தொடர்பு படுத்தி விளக்கியது அருமை. அதாவது இப்படி ஆரம்பத்தில் என்னை மாதிரி உரிச்சு உரிச்சு பலன் சொன்ன பிறகு அனுபவத்தில் டக்குன்னு பலன் சொல்ற திறமை வந்துடும்னு சொல்ல வர்ரீங்க.

    அண்ணே! நாங்கெல்லாம் சின்னபசங்க உங்கள மாதிரி அனுபவஸ்தர்கள் சொற்களையெல்லாம் புரிஞ்சிக்கற அளவுக்கு ஞானம் பத்தாது.

    S Murugesan said:
    September 26, 2011 at 1:15 pm

    மணியண்ணே !
    உங்களுக்கு புரியலின்னா நான் சரியா சொல்லலைன்னு அருத்தம். ஃப்ரீயா உடுங்க. அனுபவஸ்தருங்கற விருதை கொடுத்தை கிழவாடியாக்கிராதிங்க.

    நாங்களும் யூத்துதான் நாங்களும் யூத்துதான் ( வடிவேலு மாடுலேஷன்ல படிங்கண்ணா)

   டவுசர் பாண்டி said:
   September 26, 2011 at 3:53 am

   மணியண்ணே,

   நம்ம கணக்குக்கு மார்க் போட்டதுக்கு ரெம்ப நன்றினே. இது ஆடிட்டர் நாயிங்க போட்டாத்தேன் துல்லியமா வரும்னு இல்லீங்க்ணா. ஆருனாலும் மூளைய யூஸ் பண்ணி போட்டாலும் கரீட்டா வரும்னே. அல்லாமே கணக்குதேன். செல சாப்த்வேருங்கள்ள அயனாம்சம் இடிக்கும். நீங்க போட்ட சாப்ட்வேரு ஒருவேள ரிஸ்க் எடுத்து தயாரிச்ச பார்ட்டிங்கலோடதா இருக்கலாம். அதாவது கே.பி எபிமேரிச அப்படியே சாப்த்வேருல லோட் பண்ணிருக்கலாம். ஒரு வேல நைனா பொறந்த வருஷத்துக்கு மட்டும் கரீட்டா இருக்கலாம். இப்ப உதாரணதுக்கு நானு மிந்தி டேட் ஆப் பெர்த்த வெச்சி ஒரு கணக்கு போட்டு காட்டுநேன்லா. அது நைனா மாறி முழு நச்சத்துரத்துல பொறந்தவங்களுக்கு துல்லியமா காட்டும். மித்தவங்களுக்கு பல்ல காட்டிரும். அதனால நாம அந்த நேரத்துல நம்ம ஏழாம் அறிவ யூஸ் பண்ணா நல்லாருக்கும். இல்லாங்காட்டி பார்ட்டிக்காறான் ஐந்தாம் அறிவ யூஸ் பண்ணி நம்மள அடிக்க வந்துருவான்.

   உங்களோட ஜாதக அலசல் ஸ்டைல் அசத்தலா இருக்குனே.

    Mani said:
    September 26, 2011 at 6:19 pm

    ////ஒரு வேல நைனா பொறந்த வருஷத்துக்கு மட்டும் கரீட்டா இருக்கலாம். இப்ப உதாரணதுக்கு நானு மிந்தி டேட் ஆப் பெர்த்த வெச்சி ஒரு கணக்கு போட்டு காட்டுநேன்லா. அது நைனா மாறி முழு நச்சத்துரத்துல பொறந்தவங்களுக்கு துல்லியமா காட்டும்.//////

    பாண்டி! கீழே பாருங்க சிதம்பரத்தோட ஜாதக லிங்க் அதுவும் நீங்க போட்ட மாதிரியே அச்சு பிசகாம வந்திருக்கு. எப்பூடி! நாங்கல்லாம் யாரு.

    கே.பி. முறையில் சிதம்பரம் ஜாதகம்.
    http://www.mediafire.com/?l5cpqgryv70z1d4

    ////மித்தவங்களுக்கு பல்ல காட்டிரும்.////

    காட்டாது பாண்டி காட்டாது. வால், தலை நட்சத்திரங்களுக்கும் நம்ம சாப்ட்வேர் சரியாகவே காட்டும். வேணுமினா ஒரு பாதி நட்சத்திர சாதகத்தை போடுங்களேன். அதையும் டெஸ்ட் பண்ணிருவம்.

    அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் யாருக்கும் தெரியாம தலைல முக்காடு போட்டுட்டு உங்க நெஜமான ஐடியுடன் நம்ம மெயிலுக்கு வாங்களேன். ப்ரீயா தரேன். அப்புறம் உங்க இஷ்டம். வர்ட்டா….

    டவுசர் பாண்டி said:
    September 27, 2011 at 4:01 am

    மணியண்ணே,

    வாட் எ சர்ப்ரைஸ். உண்மைலேயே நானு கிறுக்குன கணக்கு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சுனே. பரவால்ல எனக்கும் கொஞ்ச காண்டு மூல இருக்குன்றது உங்களோட கமெண்ட படிச்ச பொறவுதேன் தெரிது. அப்புறம் ஒன்னுனே, வெக்கம் சூடு சொறன இல்லாம கேக்குறேன், நீங்க யூஸ் பண்ணுற அந்த சாப்ட்வேரூ காசு குடுத்து வாங்குனதுன்னா நமக்கு வாணாம். பிரியா கெடச்சதுன்னு நமக்கும் கொஞ்சம் கருண காட்டி லிங்க் பண்ணி விட்டீங்கன்னா புன்னியமாப்போவும். ஒரு கட்டத்த போட்டு ஒம்போது கெரகத்த அடைக்கிரதுக்குல்லாற போதும் போதும்னு ஆயிருதுனே. நானு கொஞ்சம் திமிரு புடிச்ச ஆளு. இருந்தாலும் நீங்க நம்மள ரெம்ப காதல் பண்றீங்கன்னு நெனைக்கிறேன். இதுக்கு மின்னாடி டவுசர் பாண்டி அட் ஜிமெயில் டாட் காமுன்னு ஒரு இமெயில் கிரியேட் பண்ணிவெச்சிருந்தேன். யூடீப்பு வீடியோ அப்லோட் பண்ணுறதுக்கு தேவைப்படுது. அதுக்கு என்ன பாஸ் வேர்டு வச்சித்தொளைச்சென்னு வெடதெரியாம முழிச்சிக்கிட்டு கெடக்கன். இருந்தாலும் கண்டு புடுச்சிருவோம்ல.

    Mani said:
    September 27, 2011 at 9:30 am

    /////அப்புறம் ஒன்னுனே, வெக்கம் சூடு சொறன இல்லாம கேக்குறேன், நீங்க யூஸ் பண்ணுற அந்த சாப்ட்வேரூ காசு குடுத்து வாங்குனதுன்னா நமக்கு வாணாம். பிரியா கெடச்சதுன்னு நமக்கும் கொஞ்சம் கருண காட்டி லிங்க் பண்ணி விட்டீங்கன்னா புன்னியமாப்போவும். /////

    பாண்டி! கே.பி. முறையில நீங்க ஜாதகம் கணிக்கறதுக்கு படற கஷ்டம் எனக்கு தெரியும். அதான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு போட்டேன். நீங்க என்னடான்னா ஏழாம் அறிவு அது இதுன்னு பிலிம் காட்டுனீங்களா அதான் கொஞ்சம் சுத்தல்ல விட்டேன்.

    லிங்க் கொடுக்கறதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை கொடுத்துருவோம். ஆனா அதுக்கு மிந்தி சின்னதா ஒரு டீலிங் வச்சிக்கலாமா? டவுசர்பாண்டி அட் ஜிமெயில் டாட் காம் ஐடியெல்லாம் குடுக்ககூடாது.

    ஒரிஜினல் ஐடி வேணும். எனக்கு மட்டும் அனுப்பினா போதும். எதுக்குன்னா சந்தேகம் கேட்கும் போதெல்லாம் தொடர்பு கொள்ள வசதியாக இருப்பதற்கு தான். எம்மாம் பெரிய வேலைய ஈசியா முடிக்க ஏற்பாடு செய்யறேன். இது கூட கொடுக்கலைன்னா எப்பூடி?!

    அப்புறம் சில விஷயம் இருக்கு அது என்னன்னா? உங்க நைனா சைட்ல நீங்க பதிவு போடனும். அப்புறம் அந்த மரண ஜோதிடம்… ஸ் ஸ் அப்பப்பா இப்படி ஏகப்பட்ட கோரிக்கைகள் இருக்கு. பிட்டு பிட்டா மல்லு படமாட்டம் நீங்க டிப்சு கொடுத்தா பாதி புரியுது மீதி ஒரே கொயப்பமாகீது. அதான் இந்த வழி. இது அல்லாத்தையும் நீங்க போடுறதா ஒப்புகிட்டா உங்க மெயிலுக்கு லிங்க் கொடுக்கிறேன்.

    எப்பூடி! போட்டு வாங்கிருவம்ல (சும்மா) நாங்கெல்லாம் யாரு. வர்ட்டா……….

    கிருஷ்ணா said:
    September 27, 2011 at 12:57 pm

    மணி அண்ணே,
    சப்தாமாசம் ,திரக்கோணம் அப்படின்னு இரண்டு கட்டம் ஜாதகத்துள்ள போட்டு இருக்காகங்களே அதன் பயன் என்ன??
    கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க….
    அப்புறம் திதி சூன்யராசி பத்தியும் சொல்லுங்க….

    ராசி படி மேஷ லக்கணம் வருது
    நவாம்சம் .திரகோணம் இரண்டுமே சிம்ம இலக்கணமா வருது…
    சப்தமாசம் கடக லக்கணம் வருது…..இது எல்லாம் என்ன ???

    kalyan said:
    September 27, 2011 at 5:04 am

    ((இது ஆடிட்டர் நாயிங்க போட்டாத்தேன் துல்லியமா வரும்னு இல்லீங்க்ணா))

    டவுசர்பாண்டி அண்ணே ஆனாலும் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா? அது என்ன “ஆடிட்டர் நாயிங்க?” தன்னையும் தன் இனத்தையும், தன நாட்டையும் கீழ்த்தரமாக பேசுவதில் இந்தியனுக்கு இணை யாருமே கிடையாது. எழுத்து சுவாரசியம் வேணும் என்பதற்காக ஆடிட்டர் நாயிங்க என்று சொல்வது கொஞ்சம் கூட சரி இல்லீங்கண்ணா. ஒரு சக ஆடிட்டர் என்ற முறையில் ஒரு வேண்டுகோள், இனியாவது இப்படி தரம் தாழ்த்தி பேச வேண்டாம். ஒரு மதிப்பிற்குரிய professional -ஆ இருக்கும் நீங்க இப்படி சொல்வது ரொம்ப கஷ்டமா இருக்குது. இனியாவது ஆடிட்டர்களை அதாவது உங்களையும் உங்களை போல ஆடிட்டரா ஆணவங்களையும் இப்படி கீழ்தரமா பேசவேண்டாம். இது ஒரு அன்பான வேண்டுகோள்.

  டவுசர் பாண்டி said:
  September 26, 2011 at 4:22 am

  நானு கீச்சாம் பூச்சாம்னு இருக்குன்றதுக்காண்டி ஒர்க்கிங்ச காட்டாம நீட்டா சனங்க பாக்கட்டுமுன்னு ஒரு கட்டம் ரெண்டு எழுத்துன்னு போட்டா நீங்க இது போடுறது பெரிய சீமையான்னு கேட்டுப்புட்டீங்க. இதுவும் கேப்பிக. இதுக்கு மேலயும் கேப்பீக (சும்மா).

  நீங்க கேட்டது கரீட்டுதேன்.

  துல்லியமான பலன்களுக்கு பாவச்சக்கரம்தேன் லாய்க்கு. நானு ஒரு பரிகார கான்செப்ட பாலோ பண்ணிட்டு இருக்கான். அதாவது எனக்கு புதன்+குருவாலதேன் பொயப்பு ஓடுது. இதனால உத்தார் உறவினருங்க கொல்லிக்கண்ண வெச்சிரக்கூடாதுன்னுதேன், எந்த புதனால எனக்கு வருமானம் வந்ததோ அதே புதனோட காரகத்துவங்களை (திரை மறைவில்) இலவசமாக செஞ்சி குடுப்பேன். இது சீக்ரெட் ஆப் டவுசர் எனர்ஜி.

   vinoth said:
   September 26, 2011 at 10:51 am

   டவுசர் பாண்டி அவர்களே
   அதே புதன் , குறு காரகதில் சோதிட கல்வியும் வரும் எனவே ஆயுர் பாவம் பார்ப்பது எப்படினு சொல்லி குடுங்க

    டவுசர் பாண்டி said:
    September 27, 2011 at 3:42 am

    விநோத்தன்னே,

    ஒங்க ஆர்வத்துக்கு ரெம்ப நன்றிண்ணே. ஆயுள் கணக்குதானே சொல்ட்டா போச்சு. ஆயுல பலம் பாக்கனும்னா ஷட் பலம் பாக்கணும். ஷட்பலம்ன்றது ஸ்தான, கால, அயன, நைசர்க்கிக, திக்கு, சேஷ்டா இப்பிடி ஆறும் சேந்ததுதேன். இப்ப இந்த ஸ்தான பலம் பாக்கச்ச அதுல உச்ச, கேந்திராதி, யுக்மாயுக்ம, சப்த வர்க்கஜ இப்பிடி நாலு பலம் பாக்கணும். இதுல சப்த (ஏழு) வர்க்கஜ பலத்துல ராசி வர்க்க, நவாம்ச வர்க்க, த்ரேஷ்கான வர்க்க, துவாதசாம்ச வர்க்க, சப்தாம்ச வர்க்க, ஹோரா வர்க்க, திரிசாம்ச வர்க்க இப்பிடி ஏழு வகை பலமும் பாக்கணும். அதே மாறி கால பலத்துளையும் நதோன்னத, திராத்திரி திரிபாக, தின, மாத, வருஷ, ஹோரா, பட்ச இப்பிடி எட்டு வகை பலம் பாக்கணும். இப்பிடி ஒரு கெரகத்துக்கு ஷட் பலம் பாக்கணுமுன்னா இருவத்தினாலு வகையான பலமும் பாத்து சொன்னாத்தேன் துல்லியமா இருக்கும். என்ன மொதல்ல லேசா தல சுத்தும். பொறவு நீங்க மத்தவங்கள சுத்த விடுவீங்க.

    ஒங்களுக்கு எந்த மெத்தடுலவேனம்னாலும் சொல்லித்தர்றேன். கேபில வேணுமா? இல்லாங்காட்டி நம்ம தலைமுறை சோசியத்துல வேணுமா? கேபின்னா ரெண்டு மூணு பொஸ்தவம் வாங்க வேண்டிருக்கும். நம்ம பாரம்பரிய சோசியத்துல சொல்லனும்னா ஆனந்த போதினி பஞ்சாங்கம் வெச்சிருந்தா கிரக ஸ்புடம் போட வஸ்தியாருக்கும். இதுல நீங்க கெரகங்களோட பார்வ பலமும் பாக்க வேண்டிருக்கும்.

    Vinoth Kumar said:
    September 27, 2011 at 7:05 am

    எந்த முறை பெஸ்ட்டுன்னு நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க பாண்டி….
    மேலும் http://groups.google.com/group/anubavajothidam மெயில் குரூப்பை ஆரம்பித்திருக்கிரேன். உங்க மெயில் ஐடியை வைத்து நீங்களும் சேருங்க..ஜகன்னாதா ஹொரொ குருப்பை போல … எல்லாருக்கும் பயன்படும்படி .. எழுதுங்க பாண்டி…

    Vinoth Kumar said:
    September 27, 2011 at 11:32 am

    பாண்டி,… என்னன புக் வாங்கனும்னு சொல்லுங்க… வாங்கிடரேன்.

  Mani said:
  September 28, 2011 at 5:54 am

  /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  சப்தாமாசம் ,திரக்கோணம் அப்படின்னு இரண்டு கட்டம் ஜாதகத்துள்ள போட்டு இருக்காகங்களே அதன் பயன் என்ன??
  கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க….
  அப்புறம் திதி சூன்யராசி பத்தியும் சொல்லுங்க….

  ராசி படி மேஷ லக்கணம் வருது
  நவாம்சம் .திரகோணம் இரண்டுமே சிம்ம இலக்கணமா வருது…
  சப்தமாசம் கடக லக்கணம் வருது…..இது எல்லாம் என்ன ???
  ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

  கிருஷ்ணா! இதெல்லாம் தெரிஞ்சாதான் துல்லியமா பலன் சொல்ல முடியும்ங்கறது வாஸ்தவம் தான். நாம மொதல்ல ராசி, நவாம்சம் மட்டும் உபயோகப்படுத்தி பலன் சொல்ல பழகுவோம். அப்புறம் இதையெல்லாம் ஆராயலாம். ஆரம்பத்திலேயே இதையெல்லாம் போட்டு குழப்பிக்கொண்டால் அப்புறம் எதையுமே சொல்ல முடியாத நிலைக்கு ஆளாகிவிடுவோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s