ஏன் ஆத்தா ஏன்?

Posted on

இந்த பதிவோட தலைப்பை நம்ம வடிவெலு மாடுலேஷன்ல படிக்கனும். அப்ப அருஞ்சொற்பொருள் விளக்கம், தெளிவுரை ,கருத்துரைல்லாம் தேவைப்படாது. நாம ஏதோ நிர்வாண உண்மைகள்னு ப்ளாக் வச்சுக்கிட்டு நான் ஒன்லி அண்டர் தி சன்/ வானுக்கு கீழானவை மட்டுமல்லன்னு ஒரு ஸ்லோகன் வச்சுக்கிட்டு மனம் போன போக்குல கிறுக்கிக்கிட்டிருந்தம்.

படக்குனு நம்ம சரண் சார் வந்து அனுபவஜோதிடம் வலைதளத்தை ஏற்படுத்தி கொடுத்துட்டாரு. ” நீங்க என்ன வேணம்னா எழுதுங்க ..ஆனா அதுக்கும் ஜோதிடத்துக்கும் தொடர்பு இருந்தாதான் நல்லாருக்கும்னுட்டாரு. இதுவும் பெட்டராவே இருந்தது.

தனித்தனி மேட்டரா போட்டுக்கிட்டிருந்தா ஹிட்ஸ் கூடி குறையறதை பார்த்து பொங்குவதும், வடிவதுமா இருக்கிறது பிடிக்காம சின்ன சின்ன தொடரா போட்டுக்கிட்டிருந்தோம். இதுவும் நாட் பேட் தான்.

அவன் -அவள்-அதுங்கற தலைப்புல நம்மோட சாக்தேய அனுபவங்களை எழுத ஆரம்பிச்சோம்.ஆத்தா தன் திருவிளையாடலை ஆரம்பிச்சுட்டா. ஹிட்ஸ் அபவ் தவுசண்ட்லருந்து 900 க்கும் ஆயிரத்துக்கும் இடையில ம.மே.பூனை கணக்கா மாறிருச்சு.

என்னங்கடா இது 2 வருச ரெக்கார்டு நாறிருமோன்னு ஜோதிட பால பாடம்னு ஒரு சீரியலை துணைக்கு எழுத ஆரம்பிச்சோம்.

இதுவும் வசதியாதான் இருந்துச்சு. அப்பப்போ ஸ்பார்க் ஆற பாய்ண்டை அப்படியே போட்டுக்கிட்டு வந்தம். ஆனால் சனம் வரிசையா இல்லை அது இதுன்னு கிளறிவிட ஆடியோ லெசன்ஸ் ஆரம்பிச்சம். தாளி ஆரம்பிச்ச பிறவுதான் உறைக்குது இது வெறும் சீரியல் இல்லை. மெகாசீரியலுன்னு.

நம்ம லக்னத்துக்கு (கடகம்) மெகா சீரியல் எல்லாம் ஒத்துவராதுன்னு தெரிஞ்சும் இதை ஆரம்பிக்க வச்சுட்டு நம்மை கடன் காரன் கணக்கா கலங்க வச்சுட்டா ஆத்தா. அவன்-அவள் -அது சீரியலை ஆரம்பிச்ச இன்ஸ்பிரேஷன்ல ஆத்தாவுக்காக நாம தெலுங்குல எழுதியிருக்கிற கவிதைகளை வலையேற்றம் செய்யும் “கெட்ட” எண்ணம் வந்துருச்சு.

இதுக்காவ ஆள் தேட ஒரு சோம்பேறி கிராஸ் ஆக நாம ஒரு சிஸ்டத்தை கொண்டுபோய் அவன் கிட்டே வைக்க நாலு நாள்ள திருடங்க வந்து மானிட்டரை தூக்கிட்டு போக..விடாபிடியா ஒரு செகண்ட்ஸ் கலர் மானிட்டர் கொண்டுவைக்க மாசமா.. ஒன்னரை மாசமா தெரியலை . நாள் என்னமோ ஓடிப்போச்சு. கொய்யால ஒரு பாரா கூட டைப் அடிச்ச பாடா காணோம்.

இவனுக்கு அக்டோபர் 1 வரை வாயிதா கொடுத்திருக்கேன். ஒன்னும் பேரலைன்னா கழண்டுக்குவேன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லியாச்சு.

அவன்-அவள் -அது சீரியலையும் திராட்டுல விட்டாச்சு. இப்படி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை வேலையும் நகரமாட்டேங்குது – தொடர்களும் நொண்டியடிக்குது. பட்டா..குரு லக்னத்துக்கு பத்துல இருந்தப்பயே பெட்டரா இருந்துச்சு. இப்பம் என்னடான்னா எல்லாமே ட்ராகிங்ல இருக்கு.( இது குரு வக்ரமானதோட எஃபெட்க்டு போல – இதுல நம்ம ஜீவனாதிபதியான செவ்வாயும் நீசம்)

குருவக்ரம்:

இந்த நிலை டிசம்பர் 25 வரை தொடரும். இது தனுசு,மீன ராசிக்காரவுகளுக்கு ஆப்புவைக்கிற ஐட்டம்.

செவ் நீசம்:

இந்த நிலை விருச்சிக,மேஷ ராசிக்காரவுகளுக்கு விசேஷ ஆப்பு

நம்முது ஒரு பிரபலமான பஞ்ச் ” எத்தனை உக்ரமான யுத்தம் பண்ணாலும் – சமாதானத்துக்குன்னு ஒரு சன்னலை திறந்துவைக்கனும். – என்னதான் அமைதி ஒப்பந்தம் கை.எ ஆனாலும் எதிர்கால யுத்தத்துக்கு ஒரு பாய்ண்டை கேட்ச் பண்ணி வச்சுரனும்”

இதே சீக்வென்ஸ்ல இன்னொரு பஞ்ச்:

எத்தனாம் பெரிய ப்ராஜெக்டை ஆரம்பிச்சாலும் பாதியில கழண்டுக்க ஒரு விண்டோவை (சன்னலுங்கோ) ஓப்பன்ல வைக்கனும். ( நாலு பக்கம் நெட் போல்ட் போட்டுட்டா நம்ம லக்னக்காரவுகளுக்கு மூச்சு திணற ஆரம்பிச்சுரும்.)

பாதியில கழண்டுக்க ஒரு ஜன்னலை சட்டம் அடிக்காம விட்டிருந்தோம்.அதை இப்பம் ஓப்பன் பண்றோம். நாளிதுவரை போட்ட ஆடியோ பதிவுகளை (கேட்டு பயன்பெற்ற) சீடப்பிள்ளைகள் ஒழுங்கா இன்னொரு தாட்டி கேட்டு – உபமானம்,உபமேயம் -சொந்தக்கதை – எல்லாத்தையும் வெட்டி டெக்ஸ்ட் ஃபைலா அடிச்சு நமக்கு மெயில் பண்ணனும். அல்லது அவிகளே நேரடியா சைட்ல போஸ்ட் பண்ணவும் வாய்ப்பு தரப்படும்.

இந்த காரியம் முடிஞ்ச பிற்பாடுதேன் அடுத்த ஆடியோ பாடம். (உஸ்.. அப்பாடா)

இதை படிச்சுட்டு ஒடனே அந்த புண்ணியாத்மா சுடுகாட்டு பூஜை அது இதுன்னு ஆரம்பிச்சுருமோ என்னமோ? முந்தா நாள் கூட கால் டஜன் கமெண்ட்ஸ். வோர்ட் ப்ரஸ்ல போட்டா ஐ.பி நெம்பரை ட்ரேஸ் பண்றோம்னு ப்ளாகர்ல வந்து பேண்டு வைக்குது.

ஆத்தாளுக்கும் நமக்கும் உள்ள கம்யூனிகேஷன் மட்டும் பக்காவா தான் இருக்கு. ( பக்கா =கனிந்து) காரியத்துல பார்த்தா எல்லாமே கச்சா தான் ( கச்சா = காய்). இந்த மாதிரி சிச்சுவேஷன்ல தான் “ஏன் ஆத்தா ஏன்?”னு மனசு கூவுது.

விடை இப்ப வருமோ? எப்ப வருமோ? 2001 வாக்குல டீப் மெடிட்டேஷனுக்கு பிறகு சவாசனத்துல அதை தொடர்ரப்ப விஜயவாடா நித்யானந்தம்னு ஒரு வார்த்தை காதுல ஒலிச்சது. இப்பம் அதே பேர் கொண்ட பார்ட்டியோட கம்ப்யூட்டர் வைரஸ் அட்டாக்ல கோமால கிடக்கு.

அதை ரெக்டிஃபை பண்ணி தர்ரதா கமிட் ஆனேன். பார்ட்டிக்கு நேரம் இல்லை(யாம்) . கல்லைகண்டா நாயை காணோம் நாயை கண்டா கல்லை காணோம்னு நாள் ஓடிட்டிருந்தது. இன்னைக்கு தாளி சி.பி.யுவை கழட்டி வச்சுரு. நான் கொண்டு போய் ரெடி பண்றேன்னு சொன்னேன்.

அந்த ஜ.சோ என்னபண்றானோ ஆத்தாளுக்குத்தேன் வெளிச்சம். ஒரு வேளை அந்த கம்ப்யூட்டர் ரெடியாறதுக்கும் நம்ம ஸ்பிரிச்சுவல் அச்சீவ்மெண்டுக்கும் எதுனா தொடர்பு இருக்குமோன்னு ஒரு ஹேஷ்யம். பார்ப்போம்.

இந்த மந்த நிலைமைக்கு இன்னொரு காரணமும் இருக்கு. நமக்கு ராசிக்கு ரெண்டுல சனின்னு பல் வைத்தியர் கிட்டே போகாமயே இருந்தம். சரி சனி 3 ஐ பார்க்கிறாரேன்னு போயிட்டம். அழகா சிரிக்கம். சனி கொவிச்சுக்கிட்டாரு போல. போனசா சூரிய சனி சேர்க்கை

எது எப்படியோ மெகா ப்ராஜெக்டுல இருந்து கழண்டுகிட்டோம். ( நாட்ல என்னென்னமோ நடக்கிறச்ச வெறுமனே ஜோதிஷத்தை கட்டி அழறது கில்ட்டிய கொடுக்குது -இனி அல்லாத்தையும் கிழிக்கலாம்ல) தயவு செய்து ஆரும் ஆடியோவை டெக்ஸ்டா மாத்திராதிங்கண்ணா.

கலிகாலத்துல நல்ல காரியம்லாம் பண்ணப்படாது. அப்பாறம் உங்க இஷ்டம். ( எனக்கு கஷ்டம்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s