இல்லறம் _வாழ்க்கை முறை

Posted on

மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலைகள் இப்போழுது வரத்துவங்கியிருப்பதால் தாமதமாகிவிட்டது. நம்ம ஒரிஜினல் முருகேசன் சொன்னது போல, எவ்வளவு உழைக்கிறோமோ, அவ்வளவுக்கு சும்மா இருப்பதும் தேவையான ஒன்றுதான்.

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது சும்மா இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

இந்த அனுபவ ஜோதிடம் அன்பர்களை கொஞ்சம் கணக்கு எடுத்தால், பொதுவாக எல்லோருமே நடுத்தரவர்க்க மனிதர்களாகவெ இருப்பார்கள் என்று நம்புகிறேன். நானும் அவர்களில் ஒருவன்தான்.

நம்மைப்பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்களைப்போலவே, ஒரு பெரிய?! மனுஷ கூட்டமும் ஊரில் இருந்து வருகிறது. அதெற்கெல்லாம் தனிப்பட்ட வாழ்வு முறைகள், வழக்குமுறைகள் காலம் காலமாக இருந்துவருகிறது.

உதாரணமாக, போட்ட செருப்பை பாதங்களோடு ஒட்டிக்கொண்டே இருக்கும் மிகுந்த போலித்தன பகட்டு…
“ நான் போட்ட செருப்பை கழட்ட மாட்டேனாக்கும்” என்பதாக…
இந்தமாதிரியான் ஆட்களை பார்த்து நாம் என்ன நினைக்கிறோமென்றால், இது போன்ற ஒரு குப்பையாக நானும் மாற வேண்டும் என்று…

பூனையை பார்த்து புலி தன் கோடுகளை இழக்க எண்ணுகிறது… என்னய்யா… பழமொழியை மாற்றிச்சொல்லுகிறீர் என்கிறீர்களா? இதுதான் நிஜம்.
இந்த ஒப்பீடு நம் மனதை சிதைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அது இல்லறத்தையும் பாதிக்கிறது.

நீண்ட நாளுக்கு முன் ஒரு கட்டுரை படித்தேன், நம்ம ஒரிஜினல் முருகேசன் கூட ஒருமுறை சொல்லி இருந்ததாக ஞாபகம்.

ஒரு ஏழை பணக்காரனாக முயற்சிப்பதற்கு காரணம், ஒரு நடுத்தரவர்க்கம். அந்த நடுத்தரவர்க்கம், திடீர் பணக்காரர்களை வெல்ல போட்டி போடுகிறது. திடீர் பணக்காரனோ பரம்பரை பணக்காரனாக விருபுகிறான். பரம்பரை பணக்காரனோ தன் பெயரை நிலை நிறுத்த பரிதவிக்கிறான்.

ஒரு நிமிடம் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் என்ன காரணம்? என்று கண்மூடி யோசியுங்கள்… அடுத்தவரை ஒப்பிட்டுப்பார்த்ததால் வந்த வினைதான்… இல்லை என்று நீங்கள் சொன்னால்… இந்த விசயத்தை இன்னும் அலசலாம்… நான் ரெடி 🙂

என்றைக்கு உலகம் பொருளுக்கு பொருள் போய், பொருளுக்கு பணம், பணத்திற்கு பொருள் என்றானதோ அன்றைக்கு தொடங்கியது இந்த மனதில் ஏற்பட்ட கேன்சர்… 🙂 இன்று வழிவழியாக எல்லா ஜீன்களையும் ஆட்டுவிக்கிறது.

உடம்பையும், மூளையையும் வைத்துக்கொண்டு, மனம் செத்துப்போய் திரிகிறது… இந்த மனித இனம்.

இல்லறத்தில் மட்டுமல்ல, தனிமனித வளமையிலும் இருக்கிற பிரச்சனைகளுக்கு இதுதான் காரணம்.

அதீத பணமிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்… ஆனால் தமிழ்நாட்டு தாத்தா அப்படி இருக்கமுடியவில்லையே…

உங்களுக்கு தெரிந்த பைத்தியக்காரன் என்றும் ஒரே மாதிரி இருப்பதை காணலாம்… நீங்களோ ஒவ்வொரு நிமிடமும்… ஒவ்வொருவராக வேசம் போட்டுத்திரிகிறீர்கள்.

ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி ஒரு காகிதத்தில் உங்களைப்பற்றி ஒரு குறிப்பு எழுதுங்கள். அதில் எத்தனை உண்மை இருக்கிறது என்று உணருங்கள்.

உங்கள் ஜாதகத்தை எட்டாம் பாவத்திலிருந்து லக்கினபாவத்தை பாருங்கள்… ஆறாமிடமாகிறது. “ போட்டி, பகை, உடலில் ஏற்பட்ட, ஏற்படக்கூடிய நோய், உங்கள் வெற்றி, தோல்வி, உங்கள் செயல்பாடுகளையும்” குறிக்கிறது. அந்த எட்டாமிடத்து ஆறு… உங்கள் உயிரையும், மனதையும் பாதிக்காதிருக்குமா?

இதிலிருந்து கிடைக்கிற உண்மை… உங்கள் வாழ்க்கையோடு (எட்டாமிடம்) ஏற்படுகிற மாற்றம் ( ஆறாமிடத்து பலன் போல) உங்களை பாதிக்கிறது.

அடுத்த கட்டுரைவரை காத்திருக்கவும்… அப்போதானே சூடு பிடிக்கும் 🙂

Advertisements

One thought on “இல்லறம் _வாழ்க்கை முறை

  கிருஷ்ணா said:
  September 8, 2011 at 10:49 am

  //ஒரிஜினல் முருகேசன் //

  🙂

  //உங்களுக்கு தெரிந்த பைத்தியக்காரன் என்றும் ஒரே மாதிரி இருப்பதை காணலாம்… நீங்களோ ஒவ்வொரு நிமிடமும்… ஒவ்வொருவராக வேசம் போட்டுத்திரிகிறீர்கள்.//

  //நீங்களோ//

  நீங்களா (or) நாமா …ஹி ஹி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s