ஜோதிட பால பாடம்:5

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னமான கடகத்துக்கு பத்துல குரு வந்து கொஞ்சம் போல சீண்டிப்பார்த்துட்டாரு (வேறென்ன இருக்கிற வேலைய ஒழுங்கா பார்க்க விடாமத்தேன்) அவரு இந்த 30ஆம் தேதி வக்ரமாகப்போறாருங்கோ.
வக்ரம்னா என்ன சுபர் அசுபராயிருவாரு. அசுபர் சுபராயிருவாரு. பத்துல குரு இருந்ததாலத்தானோ என்னமோ ஜா.ரா கெட்ட ஆட்டம் போட்டாலும் “போவட்டும் போவட்டும்னு இருந்தம்.

குரு வக்கிரமாற சங்கதி ஜா.ராவுக்கு தெரியலை போலும். Read More

Advertisements

19 thoughts on “ஜோதிட பால பாடம்:5

  Sudharsan said:
  August 23, 2011 at 8:31 pm

  hai Murugesan sir,
  Ketu in 9th house will make a person to be deeply religious.He will visit many holy and sacred temples.To my knowledge ketu in 9th house will make a man both bold and courageous.Ketu dasa is the best dasa to understand the true meaning of life.

   S Murugesan said:
   August 24, 2011 at 6:07 am

   வாங்க சுதர்சன் ,
   நீங்க சொன்னதுல பேர் பாதி நிஜம். நீங்க சொன்னதெல்லாம் ஒர்க் அவுட் ஆறதுக்கு முந்தி 9 ஆம் பாவம் இன்றைய அறிவாலயம் மாதிரி காலி ஆயிரும்.

   ( வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை தெரிஞ்சுக்க உதவும்ங்கற பாய்ண்ட் 200 சதவீதம் நிஜம்.)

  கிருஷ்ணா said:
  August 24, 2011 at 9:55 am

  //Ketu in 9th house will make a person to be deeply religious.He will visit many holy and sacred temples.To my knowledge ketu in 9th house will make a man both bold and courageous.Ketu dasa is the best dasa to understand the true meaning of life.//

  இது என் வாழ்வில் அனுபவ உண்மை…
  நமக்கு மேஷ இலக்கணம் …கேது தனுசுவில் -குரு வீட்டில் ..தனது சொந்த நட்சத்திரத்தில் (மூலம்) …
  கேது திசை (22 -28 )…
  நெரிய ஆன்மிக (காம(கீழ்நிலை) + யோக(மேல்நிலை) ) அனுபவங்கள்….

  நெரிய கோவில் சுற்றிய பின் …தற்போது யோக வாழ்வில் இறங்கி விட்டேன்… 🙂

   S Murugesan said:
   August 24, 2011 at 10:36 am

   வாங்க கிருஷ்ணா !
   9ல உள்ள கேது ஞானத்தையும் மோட்ச மார்கத்தையும் தான் தருவாரு. ஞானம் ,
   மோட்ச மார்கத்துக்கும் கோவில் குளங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லே. இந்த உண்மைய புரிஞ்சிக்க சுத்த வச்சாரோ என்னமோ?

   9ஆம் பாவத்தின் இதர காரகத்வங்களுக்கு (அப்பா,அப்பாவழி சொத்து ,அப்பா வழி உறவு, உங்க முதலீடு,சேமிப்பு ,தூர தேச தொடர்புகள், அத்தொடர்புகளால் லாபம் ஆகிய விஷயங்களுக்கு) கேது உதவியா இல்லை தானே.. அதையும் சேர்த்து சொல்லுங்க

    கிருஷ்ணா said:
    August 24, 2011 at 12:14 pm

    விரிவாக சொன்னா நேரம் கிடைக்கும் போது கோவில் குளம் என்று ஒரு மூன்று வருடம் என்று சுற்றி இருப்பேன்…..அதனால் பெரியதாக ஞானம் வர வில்லை என்பது தான் உண்மை….ஆனால் இது தான் ஞான மார்கத்தின் ஆரம்பம்…

    அப்புறம் நீங்க போட்ட கெட்ட ஆட்டம் போல நான் விளையாடிய விளையாட்டுகள் பல…. 🙂 🙂

    அதை எல்லாம் கதை கதையாய் எழுதலாம்…நேரம் தான் இல்லை
    அது தான் ஞான யோக மார்க்கம் பக்கம் செல்ல வைத்தது…

    //அப்பா,அப்பாவழி சொத்து ,அப்பா வழி உறவு, உங்க முதலீடு,சேமிப்பு //

    இதை 50 % நல்ல + கெட்ட பலன் என்று தான் சொல்ல வேண்டும்…ஏன்ன குடும்பத்த விட்டு விலகி (வேலை நிமித்தமாக ) உள்ளதால் 100 % பாதிப்பு இல்லை….
    அப்பாவுடன் அருமையான உறவு என்று சொல்ல முடியாது…அதே சமயம் மோசமான உறவு என்று சொல்ல முடியாது…

    சேமிப்பு ,முதலீடு என்று எடுத்து கொண்டால் ( அதாவது கேது ,சனி ஆதிக்கம் நிறைந்த நாளில் 7 ,8 தேதிகளில் ) செய்த முதலீடு கோவிந்தா கோவிந்தா தான்…..

    நமக்கு கேது திசை + ஏழரை சனி ஒரே நேரத்தில் ….

    ஒரு 1 லச்சம் ரூபாய்க்கு பங்கு சந்தையில் முதலீடு செய்தேன்….30 ஆயிரம் ரூபாய் ஆக இறங்கி போச்சு…இன்று வரை அந்த பங்குகளை வெளியே எடுக்க முடிய வில்லை…. 😦

    விடா முயற்சியாய் மீண்டும் பல முதலீடுகள் செய்து ….இரண்டு லச்சதிற்கு மேல் லாபம் பல பார்த்தேன்….
    இந்த பணத்தை வைத்து தான் நிறைய விளையாட்டுகள்….. ஹி ஹி 🙂

    கேது திசை முடியும் நேரத்தில் ….. ஏழரை சனி விட்டு விலகிய நேரத்தில் இனிமே யோகம் என்று நினைத்து அசட்டையாய் முதலீடு செய்ய ….இப்போது 5 லச்சம் முதலிட்டில் 3 லச்சம் பேப்பர் லாஸ் 😦 😦

    பொதுவாக கேது திசை ,ஏழரை சனி போன்ற கால கட்டங்களில் வீட்டுடன் ஒட்டமால் வேறு எங்கேனும் வேலை நிமித்தம் என்று பிரிந்து சென்று விடுவது நல்லது….

    உண்மையாய் சொன்னால் கேது திசை(கேது 9 ம் இடத்தில ) ஒரு மனிதன் போற்றி கொண்டாட வேண்டும்…அவ்வளவு அனுபவங்களை அள்ளி தருகிறது….
    ஆரம்பத்தில் கடினமாக இருக்கும்…முடிவில் நாம் பெரும் பல அனுபவங்களை பார்க்கும் போது….அருமை என்று தான் சொல்ல தோணும்…

    பற்று.. பேராசை.. இரண்டையும் குறைத்து கொண்டால் கேது திசை யோகம்….இல்லை என்றால் கேது அந்த வேலையை செய்வார்…. 🙂

    S Murugesan said:
    August 24, 2011 at 12:55 pm

    கிருஷ்ணா,
    உங்க அனுபவ சாரம் என்னன்னா? கேது தன் முதல் பாதியில வண்டியை ரிவர்ஸ்ல விடுவாரு ( கோவில் குளம்) பின் பாதியில ஞானத்தை தருவாரு. போறச்ச ஒரு ஒதை கொடுப்பாரு.

    //பற்று.. பேராசை.. இரண்டையும் குறைத்து கொண்டால் கேது திசை யோகம்….இல்லை என்றால் கேது அந்த வேலையை செய்வார்….//

    இது உங்க ஒக்காபிலரி. நம்ம ஒக்காபிலரியில கேது கொடுக்கிறது ரெண்டே சாய்ஸ் .
    1. சன்யாசி 2.பிச்சைக்காரன்

    உங்களுக்கு இவ்ளமாத்திரம் கேது ஒர்க் அவுட் ஆனதுக்கு காரணம் தனிமை.ஞானம் வேணம்னா “பசித்திரு தனித்திரு விழித்திரு ” இது ஆட்டோமெட்டிக்கா ஒர்க் அவுட் ஆகியிருக்கு உங்க‌ மேட்டர்ல

    கிருஷ்ணா said:
    August 24, 2011 at 1:18 pm

    //இது உங்க ஒக்காபிலரி. நம்ம ஒக்காபிலரியில கேது கொடுக்கிறது ரெண்டே சாய்ஸ் .
    1. சன்யாசி 2.பிச்சைக்காரன்//

    இதை அப்படியே ஏற்று கொள்ள முடியவில்லை தல
    இது உண்மை எனில் கேது திசைக்கு அடுத்து ஏன் சுக்கிர திசை வர வேண்டும்….சனி திசை தான் வர வேண்டும் ??

    கேது எந்த வீட்டில் உள்ளாரோ அதன் பலன் + கேதுவின் காரத்துவம் வொர்க் அவுட் ஆகும் என நெனைக்கிறேன்….

    கேது +குரு (கோடிஸ்வர யோகம் அல்லது ஞான யோகம் )

    எனக்கு தனுசுவில் குருவின் வீட்டில் இருந்ததால்…கோவில் (குரு) +யோகம் (கேது ) என வொர்க் அவுட் ஆகி இருக்கு…

    இதுவே உதாரணதுக்கு கும்ப லக்கணம் ,கேது துலாம் எனில்….

    கேது+சுக்கிரன் வீடு என்பதால் (9 ம் இடம் – நற்பலன் எனில் ) தந்திரா யோகம் தரும் என நினைக்றேன்….இல்லறத்தில் தந்திரா யோகத்தை முயற்சி செய்தால் ஜாதகன் ஞானம் பெறலாம்….

    இதுவே மீன லக்கினம் கேது துலாம் எனில்…. (8 ம் இடம்-துர்பலன் எனில் )….கேது+சுக்கிரன் வீடு என்பதால் பெண்கள் வழி பிரச்சினை….இவன் இரண்டாவது பொண்டாட்டியை…இவன் முதல் பொண்டாட்டியோட மாமனும் வைத்து இருப்பான்.. 🙂 அது தொடர்பான பிரச்சினை …வெட்டு குத்து…அல்லது வெறுத்து போய் குடும்ப பற்றை விடுத்து…ஆன்மிக பக்கம் திரும்புதல்…..

    மொத்தத்தில் நல்ல இடத்தில இருப்பின்….நல்ல விதத்தில் ஆன்மிகத்தின் பால் நாட்டம் வரும்….கெட்ட இடத்தில இருப்பின் கெட்டதை அனுபவித்த பின் ஆன்மிகத்தின் பால் நாட்டம் வரும்

    S Murugesan said:
    August 24, 2011 at 3:41 pm

    கிருஷ்ணா!
    கேதுவை பற்றி ரெம்ப குறைவா எஸ்டிமேட் பண்ணியிருக்கிங்க. கேது எவ்ளதான் நல்ல பொசிஷன்ல இருந்தாலும் தன் தசா புக்திகளில் கொஞ்சமாச்சும் ஆப்பு வைக்காம போகமாட்டாரு.

    அவர் நன்மைய தர்ரதே பின்னாடி தான் தரக்கூடிய தீமையோட எஃபெக்ட் பயங்கரமா உறைக்கனும்ங்கறதுக்காகத்தேன்.

    உ.ம் உங்களை 15 நாள் ஏ.சிலயே வச்சிருந்துட்டு தார் பாலைவனத்துல கொண்டு விட்டுர்ரது

  Mani said:
  August 24, 2011 at 5:38 pm

  கிருஷ்ணா! + நம்ம அண்ணன்!! ரெண்டுபேரும் சும்மா சரிக்கு சமமா விவாதிச்சிருக்கீங்க. உண்மையில் பால பாடத்தை காட்டிலும் உங்க இருவரின் கமெண்ட்கள் சொல்லும் அனுபவ பாடம் மிகவும் அருமை. என்னதான் நாம் ஜோதிட விதிகளை மாங்கு மாங்குன்னு படிச்சிவச்சாலும் அதில் எந்தவிதி அனுபவத்தில் நடக்கிறதோ அந்த விதி என்றைக்கும் நம் நினைவை விட்டு அகலாது.

  ///அவர் நன்மைய தர்ரதே பின்னாடி தான் தரக்கூடிய தீமையோட எஃபெக்ட் பயங்கரமா உறைக்கனும்ங்கறதுக்காகத்தேன்.////

  கிருஷ்ணா! நம்ம தலை இங்கன தான் ஜெயிச்சிருக்காரு. என்னதான் உங்களுக்கு கேது ஞானத்தை கொடுத்தாலும் யோகம்னா தனயோகம் அல்லது ஜீவன யோகம், பதவி, புகழ் அந்தஸ்து என்றுதான் இந்த உலகம் எதிர்பார்க்குது.

  ஆனால் இந்த வகைகளில் உங்களுக்கு கேது பொருளாதார ரீதியில் அனுகூலமான பலன்களை தரவில்லை மேலும் அவர் தசா முடியும் போது தலை சொன்னமாதிரி உங்களுக்கு பங்குச்சந்தையில் பலத்த அடியை கொடுத்திருக்கார். எனவே கேது உங்களுக்கு படிப்பினையை தான் தந்திருக்கார். அதை நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. நீங்கள் அதை நல்லதொரு அனுபவமாக எடுத்துக்கொண்டீர்கள் அவ்வளவுதான். ஆனால் கேதுவால் நீங்கள் அடைந்த பொருளாதார பலன் 0 என்பது உண்மையாகிவிட்டதே!

  பொதுவாக நவக்கிரகங்களில் கேதுவைப் போல் கெடுப்பவர் இல்லை என்பார்கள். கெட்டால் தானே ஞானம் வரும். கேது நல்ல பலனை, யோகத்தை அதாவது தனயோகம், பெண்யோகம் முதலியவற்றை கொடுத்தாலும் தனது தசா முடியும் போது அவற்றை பிடுங்கிக் கொள்வார் அல்லது முந்தைய சனி, புதன் தசைகளின் யோகத்தை அனுபவித்தவர்களுக்கு மிகுந்த கஷ்டத்தை தருவார் அப்போதுதான் இவையெல்லாம் இந்ந உலகில் நிரந்தரம் இல்லை என்பதை நம்மால் உணர முடியும்.

  பின்பு வரும் சுக்கிரன் லக்னத்திற்கு சுபனாகி யோகங்களை தந்தாலும் முந்தைய அனுபவ ஞானத்தால் அவற்றை அளவோடு சுகித்து நாம் நன்மை பெறமுடியும். ஒருவேளை சுக்கிரனும் கெட்டிருந்தால் அவர்கள் தான் ஞான மார்க்கத்தில் வெற்றியடைகிறார்கள். ஏனெனில் சுக்கிரன் உலக இன்பங்களையெல்லாம் ஆடம்பரங்களையெல்லாம் வாரி வழங்கக்கூடியவர். அப்படி அனுபவிக்கும் ஒருவர் எப்படி அவற்றையெல்லாம் துறந்து ஞான மார்க்கத்திற்கு திரும்புவார். எனவேதான் கேது திசைக்கு பின்பு சுக்கிர தசை வருகிறது. பல ஞானிகளுக்கு சுக்கிரன் கெட்டிருப்பார். (உ.தா. சங்கராச்சாரியார் சந்திரசேகர ஸ்வாமிகள்)

  சலிக்க சலிக்க பெண்சுகத்தை அனுபவித்துவிட்டு ஞானம் பெற்றவர் தான் போகர் முனிவர். எந்த பொருளும் கிடைக்காதவரை தான் அதன் மீது மோகம் அதிகமாகும். அனுபவித்து சலித்துபோன பின்பு அதன் மீது பெரிதாக ஈர்ப்பு வராது. அப்படியே வந்தாலும் அளவோடு அந்த இன்பத்தை பெற்று அதன் மீது பற்று வைக்காமல் எளிதாக ஞான மார்க்கத்தை நோக்கி நாம் செல்ல முடியும்.

   S Murugesan said:
   August 24, 2011 at 9:54 pm

   மணி அண்ணே,
   ஏதோ பதிவை போட்டுட்டு போகலாம்னு வந்தேன். இப்படியே போயிர்ரன் நாளைக்கு இருக்கு கச்சேரி .

   இந்த மாதிரி பிட்டா பிடிங்க, பொடிமாசு,தூள் பக்கோடா ரேஞ்சுல கொடுத்ததே உங்களையெல்லாம் பேச வைக்கனும்னுதேன். ( அடச்சே உண்மைய உடைச்சுட்டமே)

  Mani said:
  August 24, 2011 at 5:56 pm

  ////1 லச்சம் ரூபாய்க்கு பங்கு சந்தையில் முதலீடு செய்தேன்….30 ஆயிரம் ரூபாய் ஆக இறங்கி போச்சு…இன்று வரை அந்த பங்குகளை வெளியே எடுக்க முடிய வில்லை….////

  ///அசட்டையாய் முதலீடு செய்ய ….இப்போது 5 லச்சம் முதலிட்டில் 3 லச்சம் பேப்பர் லாஸ் ///

  நம்ம கதையும் இப்படிதான் ஆரம்பத்தில் நன்றாக போய்கிட்டு இருந்தது. நமக்கு தெரியாத டெக்னிக்கல் வழிமுறைகளே இல்லை. F&O ல் கூட ஏகப்பட்ட ஆட்டம் சும்மா சொல்லியடிக்கிற கில்லிமாதி ஆடினேன். F&O இப்போ செய்வதில்லை என்றாலும் பணம் எல்லாம் Investment ல் போய் மாட்டிகிட்டது.

  என்னதான் அறிவு, திறமை இருந்தாலும் நல்ல நேரம்ன்னு ஒன்று இருக்கே. அதுவும் நமக்குன்னு ஜாதகத்தில் ஒரு அமைப்பு இருக்குமே அந்த வளையத்தை தாண்டி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது போல் இருக்கிறது.

  அண்ணே! ஒரு வேண்டுகோள். உங்களுக்கு நேரம் இருக்கும் போது இந்த Stock Market ல் வின்னர் ஆக எந்தமாதிரி அமைப்பு இருக்கனும்? எந்தெந்த வீடுகளை, கிரகங்களை பார்க்கனும்ன்னு ஒரு அலசு அலசுங்களேன். எங்களைப் போன்ற (இ)அடி வாங்கினவங்களுக்கு எதாவது தேறுமான்னு பார்ப்போம்.

  என்னதான் எங்களுக்கு ஓரளவிற்கு ஜோதிட ரீதியாக தெரிஞ்சிருந்தாலும் உங்க அனுபவ நடையில, ஆராய்ச்சியில் படிக்கும் போது மிகவும் உபயோகமாக இருக்கும் என்ற ஆசைதான். நன்றி.

  ம்ம்…. பார்ப்போம் ஆத்தா மனசு வைக்கனும்.

   S Murugesan said:
   August 24, 2011 at 9:51 pm

   மணி அண்ணே !
   பேப்பர்லயே நான் பிசினஸ் பேஜஸை பார்க்க மாட்டேன். இதெல்லாம் தாளி 40கம்பெனிக்கு சம்பந்தப்பட்ட மேட்டருன்னு விட்டுர்ரது.

   ஆன்லைன் ஜோதிட ஆலோசனை துவங்கின பிறவுதான் நிறைய பார்ட்டிங்க இதுல சம்பந்தப்பட்டு இருக்கிறது உறைக்குது.

   நல்ல யோசனை சீக்கிரமாவே செய்வோம்

   கிருஷ்ணா said:
   August 25, 2011 at 10:11 am

   ////கேது பொருளாதார ரீதியில் அனுகூலமான பலன்களை தரவில்லை மேலும் அவர் தசா முடியும் போது தலை சொன்னமாதிரி உங்களுக்கு பங்குச்சந்தையில் பலத்த அடியை கொடுத்திருக்கார். எனவே கேது உங்களுக்கு படிப்பினையை தான் தந்திருக்கார். அதை நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. நீங்கள் அதை நல்லதொரு அனுபவமாக எடுத்துக்கொண்டீர்கள் அவ்வளவுதான். ஆனால் கேதுவால் நீங்கள் அடைந்த பொருளாதார பலன் 0 என்பது உண்மையாகிவிட்டதே!////

   உண்மைதான் மணி அண்ணே

   //சலிக்க சலிக்க பெண்சுகத்தை அனுபவித்துவிட்டு ஞானம் பெற்றவர் தான் போகர் முனிவர். //

   சிவன், கிருஷ்ணனுக்கு அடுத்து எனக்கு பிடிச்ச யோகி போகர் தான் ..ஹி ஹி 🙂

   கிருஷ்ணா said:
   August 25, 2011 at 10:24 am

   //என்னதான் அறிவு, திறமை இருந்தாலும் நல்ல நேரம்ன்னு ஒன்று இருக்கே. அதுவும் நமக்குன்னு ஜாதகத்தில் ஒரு அமைப்பு இருக்குமே அந்த வளையத்தை தாண்டி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது போல் இருக்கிறது.

   அண்ணே! ஒரு வேண்டுகோள். உங்களுக்கு நேரம் இருக்கும் போது இந்த Stock Market ல் வின்னர் ஆக எந்தமாதிரி அமைப்பு இருக்கனும்? எந்தெந்த வீடுகளை, கிரகங்களை பார்க்கனும்ன்னு ஒரு அலசு அலசுங்களேன். எங்களைப் போன்ற (இ)அடி வாங்கினவங்களுக்கு எதாவது தேறுமான்னு பார்ப்போம்.//

   ஷேர் மார்க்கெட் டை பொறுத்தவரை வெற்றி பெறுபவர் யார் தெரியுமா

   கஷ்ட காலத்திலும் அடக்கிட்டு (தோல்வி மன உளைச்சலை சொன்னேன் ) எவன் உள்ளானோ அவன் தான் மீண்டும் வெற்றி பெறுவான்

   21000 சென்செக்ஸ் இருந்த போது 1 லச்சம் invest பண்ணி 70000 நஷ்டப்பட்டேன் ..மீண்டும் sensex 8000 வந்த ஏறியபோது 2 லச்சம் வரை லாபம் பார்த்தேன்…..

   அப்போதே stoploss வைத்து தான் இனி விளையாட வேண்டும் என்று நினைத்தேன் …..

   இப்போது 5 லச்சம் முதலிட்டில் 3 லச்சம் பேப்பர் லாஸ்
   நான் பண்ணிய மிக பெரிய தவறு stop loss வைக்காமல் அசட்டையாய் இருந்தது ஒன்னு தான்….

   அனுபவமே அருமையான ஆசான் 🙂

  Surya said:
  August 25, 2011 at 5:04 am

  கேதுவும் செவ்வாயும பத்தில் = இதை தொட்டு இருக்கிறிர்கள் . பட் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா .
  .
  Surya

   S Murugesan said:
   August 25, 2011 at 5:30 am

   சூர்யா(?) !
   அல்லாரும் அவிகவிக ராசிச்சக்கரத்தை முன்னாடி வச்சுக்கிட்டுதேன் பாடம் படிக்கிறியளா? சுதர்சனுக்கு சொன்ன பதில் தேன் உங்களுக்கும். நான் அங்கன சொன்னதை அப்ளை பண்ணி உங்க வெர்சனை (தப்பா இருந்தாலும் பரவால்லை). கமெண்டா போடுங்க.

   மதியம் என் வெர்சனை தரேன்.( இதுவும் கல்வெட்டு கடியாது. ஜாதகரோட அனுபவம் என்ன சொல்லுதுங்கறதுதேன் முக்கியம்)

  கிருஷ்ணா said:
  August 25, 2011 at 10:13 am

  //நம்ம கதையும் இப்படிதான் ஆரம்பத்தில் நன்றாக போய்கிட்டு இருந்தது. நமக்கு தெரியாத டெக்னிக்கல் வழிமுறைகளே இல்லை. F&O ல் கூட ஏகப்பட்ட ஆட்டம் சும்மா சொல்லியடிக்கிற கில்லிமாதி ஆடினேன். F&O இப்போ செய்வதில்லை என்றாலும் பணம் எல்லாம் Investment ல் போய் மாட்டிகிட்டது.//

  ஒஹ் என் இனமா நீங்களும் 🙂

  F&O ரிஸ்க் அதிகம் என்பதால் இதுவரை ஒதுங்கி உள்ளேன்

  kalyan said:
  August 26, 2011 at 3:52 pm

  share market விஷயம் பற்றி நம்ம தலை ஒரு விஷயம் சொல்லி இருக்கார். ராகு கேது 1 & 7 -இல் இருந்தால் அவங்க share market -இல் நஷ்டப்படுவாங்கன்னு சொல்லி இருக்கார். உண்மையா இல்லியான்னு மணி மற்றும் கிருஷ்ணா தான் சொல்லணும்.

   S Murugesan said:
   August 26, 2011 at 4:22 pm

   கல்யாண் !
   ராகு கேது 1-7 ல் இருப்பது மட்டும் அல்ல சில பாவாதிபதிகளுடன் ராகு /கேது சேர்வதும் ஷேர் வகைகளில் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s