இல்லறம்… பின்னோக்கும் காதலில்

Posted on

இல்லறம்…

மகளிர்களாலும் படிக்கப்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலர் நேரடியாவே சில ஆலோசனைகளை கேட்டு தெளிவடைகிறார்கள். அதிலும் இந்த இல்லறம் குறித்தான பிரச்சனையில்தான் அவர்கள் துன்புறுகிறார்கள் என்பதும் தெரிகிறது.

என்னால் முடிந்தவகையில் ஆறுதலும், ஆலோசனைகளும் தருகிறேன். தந்துகொண்டும் இருக்கிறேன். சென்ற அனுபவஜோதிட பதிவுகளில் ஒரு ஜோதிடன் ஒரு பெண்ணிடம் தகப்பன் அல்லது மகன் என்ற நிலையில் தான் அணுக இயலும் என்று சித்தூர் முருகேசன் குறிப்பிட்டு இருந்தார். எனது கண்ணோட்டமும் அதேதான். என்வே தயக்கம் வேண்டியதில்லை.

அவசர தேவையானால் எனது அலுவல் கைபேசியிலும் தொடர்பு கொள்க.

சென்ற கட்டுரையான “அழகான மார்பகங்கள்” நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அறிவியல் ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் சொல்லப்பட்ட முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் சொன்னால் அது அப்படித்தான் இருந்தாகவேண்டும் என்ற பாராட்டும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது… தெரிந்த, அறிந்த விசயங்களை சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளுதலே ஒரு மனிதனின் கடமை.

சில, வழக்கமான போலி சித்தூர்.எஸ்.முருகேசன் பின்னூட்டங்கள் வந்திருந்தன. இத்தனைக்கும் அந்த பதிவில், அவரின் பின்னூட்டங்களில் குறிப்பிட்டிருந்த எந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் நாம் சொல்லவில்லை.

இருந்தாலும் தளத்தின் தன்மை கெட்டுவிட்டதாக குய்யோ, முய்யோ என்று கத்திக்கொண்டிருந்தார். ஓவ்வொரு பின்னூட்டத்தையும் படித்து அவரின் மன நிலைக்காக வருந்திக்கொண்டிருந்தோம். அந்த அன்பர் நலமடைந்திருக்க வாழ்த்துகிறேன்.
சரி, செய்திக்கு வருவோம்…

வாழ்க்கையில் எல்லோருக்குமே இறந்த காலத்திலேயே கவனம் செல்லும். நிகழ்காலம் அவர்களை கொல்லும். இல்லறத்திலும் அப்படியே இருக்கும்.

“ஒரு ரிவைண்ட் பட்டன் இருந்திருந்தா… இவளை பெண்பார்க்கவே போயிருக்கமாட்டேன்… இவகிட்ட போய் ஐ லவ் யூன்னு சொல்லியிருக்கவே மாட்டேன். தாலி கட்டியிருக்கவும் மாட்டேன்.”

“இவருக்கு கழுத்தை நீட்டியிருக்கவே மாட்டேன். இத்தனை பவுன் போட்டு புண்ணியமில்லாம போச்சே…” என்பதான புலம்பல்கள் இருக்கும்.

நாம் வாழும் வாழ்க்கை, எதிர்காலத்தில் இருக்கிறதோ, நிகழ்காலத்தில் இருக்கிறதோ என்ற ஆராய்ச்சிக்கு முன்பாக… நாம் எல்லோரும் தினமும் இறந்து கொண்டிருக்கிறோம், தினமும் பிறந்துகொண்டிருக்கிறோம் என்பது உண்மை.

கிழக்கே உதிக்கும் சூரியனே, மேற்கில் மறைவதில்லை… அது கூட தினம் செத்துப் பிழைக்கிறது. ஒவ்வொரு கணமும். கோடிக்கணக்கான செல்கள தினம் செத்துமடிந்து, பிறக்கிறது நம் உடலிலும். இதை புரிந்து கொள்ளாத நாம் எங்கே நமக்கு பிழை நிகழ்ந்ததாக கருதுகிறோமோ அங்கேயே நின்று விடுகிறோம். அதற்கு பிறகு நிகழ்வதெல்லாமே பிழையாகவே கருதுகிறோம். கீறல் விழுந்த இசைத்தட்டு அடுத்த வரிக்கு போகாதது போல (இப்பொழுது டிவிடி கூட அப்படித்தான்)

இந்த நிலையில் இரண்டுவித மாற்றங்கள் நிகழும்… 1) நடந்த தவறை (தவறாக நினைத்ததை) ஏற்றுக்கொள்ளுதல் அப்படியே வாழ்தல் 2) அதை எதிர்த்து நின்று தன்னை தவித்துக்கொள்ளுதல் புதிய வாழ்வாக மாற்றிக்கொள்ளல்.

ம்ம்ம், ஆராய்ச்சி கட்டுரைகணக்காக இப்படி யோசித்து எழுதினால்… நோகாம நொங்கெடுக்க சில நபர்கள் இருக்காங்க இல்லையா.. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதால் தான் எங்களால் அடுத்தடுத்து மறு ஆராய்ச்சிக்கு போய்விடமுடிகிறது. இல்லையென்றால் போலி சித்தூர்.எஸ்.முருகேசன் மாதிரி கண்ட கமெண்ட்லாம போட்டுக்கொண்டு அங்கேயே நின்றுவிட வேண்டியதுதான்.  இது மாற்றம் ஒன்றுக்கு உதாரணம்.

இரண்டாவது… நான் இது போல பதிவுகளோ, பின்னூட்டமோ கூட இனிமேல் போடப்போவதில்லை… என்று இணையத்திலிருந்து ஒதுங்கிக்கொள்வது போல…( யாருப்பா அது இப்பவே குரல் கொடுக்கிறது… )

இல்லறத்தை பொறுத்தவரை தம்பதி என்றாலும் கூட அவர்கள் தனித்த ஒரு ஆணும், பெண்ணும் தான். என்னதான உடலாலும், உள்ளத்தாலும் இணைந்தாலும்… தனியே, தன்னந்தனியே தான். ஒட்டிக்கொண்டிருப்பதாக… தெரியும்… ஒட்டவே ஒட்டாது…

ஒரு உதாரணம்… (இன்னொன்னா? அப்புறம்?… விரிவுரையாளராக வேலை பார்ப்பதற்கு அர்த்தம் வேண்டாமா என்ன?) ஒரு காதல் திருமண தம்பதியினர் விவாகரத்து நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது… அலறியடித்து அந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் ஓடிவந்து

“என்னடா,  என்னதாண்டா நடந்திச்சி? சொல்றா… அப்படி என்னடா பிரச்சனை.. நாங்க அவங்க கிட்ட பேசுறோம்டா!”

“இல்லடா, இப்ப நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை. என் மனைவியை நானே எப்படிடா குறை சொல்ல முடியும்?”நண்பர்கள் அமைதியாயினர்.

ஒரு வழியாக விவாகரத்து ஆகிவிட்டது.“டேய். இப்பவாவது சொல்லுடா… என்னதாண்டா நடந்திச்சி? சொல்றா… அப்படி என்னடா பிரச்சனை!”

“ஸாரிடா… இனி அவங்க யாரோ, நான் யாரோ… யாரோ ஒரு பொண்ணை பற்றி தவறா பேச என்னால முடியாது”நண்பர்கள் திகைத்து நின்றனர்.

இல்லறம் தொடர்பான பதிவுகளில், முதலிரவு வரை வந்துவிட்டு, மீண்டும் திருமண நிகழ்வுக்கு செல்லவேண்டியதாகிவிட்டது. நூலை சிக்கலில்லாமல் பிரிக்க வேண்டுமென்றால், முடிச்சை அவிழ்த்தால் சுலபமாகிவிடுமே… அதனால்தான்.

ஆக… கணவனாக வரப்போகிறவனை மனைவியாக ஆகப்போகிறவள் அல்லது மனைவியாக வரப்போகிறவளை கணவனாக ஆகப்போகிறவன் நல்ல சல்லடை போட்டு அலசவேண்டும். பல்(சை)லையும், பணத்தையும் பார்த்து ஏமாந்து விடக்கூடாது…

உள்ளே மிருகமிருக்கிறதா? மனிதமிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு பெண் தனக்குப்ப்திலாக தன் ஆத்தாளை உருவகப்படுத்தியிருக்கலாம், ஒரு பையன் தனக்குப்பதிலாக தன் அப்பனை உரித்திருக்கலாம். அதாவது, வாழப்போகிறவர்கள் வாழ்ந்து முடித்தவர்களின் சிந்தனைகளை தன் மூளையில் திணித்துக்கொண்டிருப்பது கேடானது. அதனால் தான் அவர்கள் இந்த வாழ்வை, இந்த நிமிடத்தை அவர்கள் இழந்துகொண்டே இருக்கிறார்கள். இழப்பது தெரியாமலேயே, தன் வாழ்வைக்கூட முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள்…

இளம் வயதில் ஒருவன் வெட்டவரலாம், வெட்டும் வாங்கலாம். அவனே இளமை கடந்த பிறகு அந்த செயலுக்காக பயப்படுவதை காணலாம். அது வாழ்வின் அனுபவத்தால் வரும் படிப்பினை. ஆனால் சகவாசத்தால் அவன் அதிலேயே நின்றால், அவன் காலம் முழுவதும் அப்படியே வாழ்ந்து முடிக்கிறான்.

சரி… ஆணும் பெண்ணும் எப்படி ஒருவரை ஒருவர் சோதனை செய்வது…

கையிலிருக்கிற ஸ்மார்ட் போனில் சாட்டால் ஜொள்ளிடுவதை விட, பேசுகிற பேச்சில் ஆளை எடைபோடுங்கள். பேச்சில் காமம் ஒழுகினால் ஒதுங்கிப்போங்கள். கேட்டகேள்விக்கு பதில் சொல்லாமல், நிறைய கேள்வி கேளுங்கள்…

ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லாதீர்கள், சொல்லவிடாதீர்கள். வார்த்தைகளில் இருக்கிற உண்மையை சோதனை செய்யுங்கள். பின்னால் எல்லாம் சரியாக போய்விடும், சரி செய்துவிடலாம் என்பதெல்லாம் ஆகாத வேலை. பின்னால் இருந்து யார் போட்டுக்கொடுக்கிறார்கள் என்று பாருங்கள்.

அவர்கள் குடும்பத்தில் யார் ஆளுமை இருக்கிறது என்று கவனியுங்கள். அந்த நபரின் போக்கு நல்லதா என்று யோசியுங்கள். சில வருடங்களுக்கு பின்னே என்று கொசுவர்த்தி சுத்திப்பாருங்கள். ஏதாவது ஒரு சில விசயமாவது தென்படும். அந்த விசயத்தில் கவனம் வையுங்கள்…

கவனம்… காமம் என்கிற கலவையைக்கொண்டு இல்லறத்தை கட்ட இயலாது.

என்னங்கப்பா இது… ரொமப அட்வைசா எழுத ஆரம்பிச்சுட்டேனோ 🙂

தொடரும்… இல்லறம்…

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

குறிப்பு: இந்த இலவச சேவையில் ஜோதிட ஆலோசனை கேட்வர்களுக்கு… ஒரே ஒரு கேள்வி தங்கள் ஜோதிடத்தின் வழியாக கேட்டாலும் ஆய்வு இல்லாமல் பதில் தர இயலாது… எனவே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு வருந்துகிறேன். முடிந்தவரை பதில் தந்து கொண்டிருக்கிறேன்…

 

3 thoughts on “இல்லறம்… பின்னோக்கும் காதலில்

  yoghi said:
  August 18, 2011 at 11:07 pm

  நல்ல பதிவு அனைவற்ும் தெற்ிந்துகொள்ள்வேன்டிய விசயங்கள்

  நன்றி

   S Murugesan said:
   August 19, 2011 at 12:23 am

   யோகி அண்ணே !
   நம்ம ஜீ சூப்பர் சப்ஜெக்டை பிடிச்சிருக்காரு. அதுவும் இந்த சாஃப்ட் வேர் யுகத்துக்கு ரெம்ப அவசியமான சப்ஜெக்ட்.

   ஏற்கெனவே நாம மனைவி அமைவதெல்லாம், ஆசை அறுபது மோகம் முப்பது நாள் இத்யாதி தலைப்புல தொடரே கிழிச்சாச்சு.

   நம்ம ஜீ புண்ணியத்துல விவாகரத்து சதவீதம் இன்ன பிற குடும்ப – சமூக -பொருளாதார குற்றங்கள் குறையட்டும்.

   ஜீக்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள்

  yoghi said:
  August 19, 2011 at 4:10 pm

  ஜீ இல்லறத்தைப்பற்றி தய்வு செய்து தொடற்ந்து எழுதுஙக‌
  நெறையபேர் எப்டி குடும்பம் நடத்துரதுன்னு தெரியாம முழிபிதுங்கிகிட்டு இருக்காங்க( நாமும்தான்) ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்

  நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s