இல்லறம்_முதலிரவு

Posted on


இல்லறம் என்னவாயிற்று என்று மின்னஞ்சல் மூலமாக கேள்விக்கணைகள் தொடுத்த எண்ணற்ற நெஞ்சங்களுக்கு நன்றி.

சென்ற வாரங்களில் வேறு சில விசயங்களும் நடந்தேறின… ஓவ்வொரு பெயர்களில் ஆரம்பித்த அந்த புல்லுருவி, எனக்கும் சித்தூர் முருகேசன் என்ற பெயரிலேயே, “அதை வரைந்து போடுங்க, இதை வரைந்து போடுங்க” என்று தன் புத்தியில் நிறைந்திருந்த அசிங்கத்தை இறக்கி வைத்திவிட்டுச்சென்றது. அந்த வகையில் இப்படி ஒரு சில் அசிங்கங்களை இறக்கி வைக்க நாங்கள் களமாக இருப்பது குறித்து மகிழத்தான் செய்கிறோம்.

அதோடு சித்தூர் முருகேசன் பாவங்கள் பற்றிய பதிவுகளில் இல்லறம் குறித்தான செய்திகள் நிறைய வந்ததால், அன்பர்கள் அதையும் தெரிந்து கொள்ளட்டுமே என்று நான் சற்று அமைதியானேன். ஆனாலும் நேற்று சித்தூர் முருகேசனோடு சாட்டிக்கொண்டிருக்கையில் “ஒருவர் சொல்லி தீர்ந்துவிடக்கூடியதா இல்லறம்?” என்ற கேள்வியை எழுப்பினார்.

உண்மைதான். எந்தனை நபர்கள், எத்தனை விதமாக பேசினாலும் தீராத விசயங்கள் கொண்டது இல்லறம். சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவது போல இந்த சூரிய, சந்திரர் இருக்கும் வரை வற்றாத வாழ்க்கை நெறி இல்லறம். இப்பொழுதைய காலத்தில் கழுத்தை நெறிப்பதாக மாறிவிட்டது சோகமே சோகம்.

சரி. கடந்த பதிவில் திருமண தாலி கட்டி வாழ்த்துக்களோடு நிறைவு செய்தோம். ஞாபகமிருக்கும் என்று நம்புகிறேன். “அய்யா… அதை எதுக்காகய்யா ஞாபக படுத்தி படுத்துறே!” என்று நீங்கள் புலம்புவதும் எனக்கு கேட்கிறது. ஒருவருக்கு சோகமெனில் எல்லோருக்கும் அதுவே என்பதாக இந்த உலகில் நிகழ்வதிலை.

சில சமூக ஆய்வாளர்கள் திருமணம் குறித்து சொல்லும் பொழுது… இது ஒரு பெண்ணியல் அடக்குமுறை. தனக்குப்பிடித்தவளை தனக்கே வரித்துக்கொள்ளும் ஒரு முயற்சி. தனக்குப்பின் தன் வாரிசுகளே தன் சொத்துக்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு சுயநல செயற்பாடு என்றெல்லாம் சொல்லிவந்துள்ளனர்.

ஆனாலும் இந்த சமூகத்தின் வளர்ச்சியில் திருமணத்திற்கு முக்கிய அங்கம் இருக்கிறது. எனக்குக்கூட பாபாவில் ஒரு வசனம் எனக்கு பிடிக்கும்… “பொண்டாட்டி. பிள்ளை, குட்டி, மாமன், மச்சான்னு வேகுறதுக்கு பதில் ஒரு கட்டு விறகிலே வெந்துட்டு போய்டலாம்”

என்ன செய்யலாம் இப்பொழுது… ஒருவேளை இந்த திருமண பந்தம் என்ற ஒன்று இல்லாமல் போனால் வேறு மாதிரியான பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

திருமணம் மனிதரிடையே உடலுறவுகளை வழிப்படுத்துகிறது. கூடவே உறவுகளையும்… திருமணம் மனிதர்களின் காம இச்சைகளுக்கு ஒரு வடிகால். பொதுவாக திருமணம் தனிப்பட்ட ஒருவருக்கு அதை செய்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் ஒரு ஆண், ஒரு பெண் காம களியாட்டங்களில் இருந்தால் அது அவர்களை மட்டுமல்ல, மொத்த சமூகத்தையும் பாதிக்கிறது. எய்ட்ஸ் அல்லது அதைவிடவும் பலமான பால்வினை நோய்களிலிருந்து இந்த சமூகத்தை காக்கிறது.

இனி நாம் அடுத்த நிகழ்வுக்கு செல்வோம்.

எல்லா திருமணங்களுக்கு பிறகும் அன்றைய இரவே முதலிரவாக கொண்டாடப்படுவதில்லை. அதற்கும் ?! கூட நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து முகூர்த்த நேரமும் குறித்தே அந்த முதலிரவு நிகழ்த்துகின்றனர்.

முதலிரவு என்றால் என்ன என்று இது வரை எந்த பெற்றோரோ, உறவினர்களோ, வேறு சிலரோ கற்றுக்கொடுத்ததாக இல்லை. இனிமேலும் இது அப்படித்தான் என்பது மன்னிக்க இயலாத குற்றம்.

“வளர்ந்த பிள்ளைக்கு இது கூட தெரியாதாக்கும்” என்ற கணைப்பு வேறு கிடைக்கும். இந்த இடத்தில் தான் இந்த ச்மூகத்திற்கு நல்ல சாட்டையடி கொடுக்க வேண்டியிருக்கும். திருமணத்திற்கு பிறகு எல்லா கேப்மாரி தனமும் சமாதானமாக போய்விடும் என்பது முட்டாள்தனமானது. எனக்கென்னமோ யாரோ ஒருத்தர்… பையனோ, பொண்ணோ பலிகடா ஆக்கி மகிழத்தான் இந்த திருமண அமைப்பே இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

சொல்லித்தெரிவதில்லை இந்த மன்மதகலை என்ற இந்த கற்றுக்கொடுத்தலில் மூன்றாந்தர சினிமாக்களும், வாராந்திர புத்தகங்களுமே முதல் இடத்தை அந்தக்காலத்தில் பிடித்திருந்தன. இப்பொழுது வலைத்தளங்கள் அந்த வேலையை ஒட்டுமொத்தமாக செய்கின்றன. திரைப்படங்களில் எல்லாருமே காதலுக்காக உருகுவதை காட்டுகிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஓவ்வொரு பிரச்சனைகளிலும் உருகுவதை ஒருத்தரும் காட்டுவதில்லை. நாமும் அந்த காதலிலேயே பிரேக் அடித்து விடுகிறோம்.

உடலுறவில் திருமணமில்லாமலிருக்கலாம். திருமணத்தில் எப்பொழுதும் உடலுறவு இருந்து கொண்டிருக்கிறது. திருமணத்தில் இணைந்த உங்கள் கணவரோடும், மனைவியோடும் அன்றைய தினமே உங்களைப்பற்றி புரியவைத்துவிட வேண்டும் என்பது ஆகாத வேலை.

பழக பழகத்தான் ஒரு மனிதரைப்பற்றி கொஞ்சமாவது அறிந்துகொள்ள இயலும். இவள் என் மனைவி, தாலியும் கட்டியாயிற்று, இனி எவன் கேள்விகேட்பான் என்ற மிதப்பில், இந்துக்கள் திருமண முறைப்படி, யாக குண்டத்தை சுற்றி வரும் பொழுதே அவளின் கையை இறுக்கிபிடித்தீர்கள் என்றால், அவள் வாழ் நாளெல்லாம் உங்கள் கையை உதற தயாராகிவிடுவாள்.

மணமகள் முகத்தில் கலங்கிய தோற்றமிருந்தாலும், அவள் இனிமேல் ஒரு முழுவதுமான மாற்றத்தை எதிர்கொள்ள தயாராவதால், மிகுந்த மனத்திடத்தோடு இருப்பாள், உன்னைக்கூட மாற்ற தயாராகிவிடுவாள். ஒரு மணமகனுக்கு இத்தகைய மாற்றம் நிகழ்வதிலை. எனவேதான் அவன் எப்பொழுதும் போல இதுவும் ஒரு நாள் என்று கடந்து விடுகிறான். அவன் தன் திருமண நாளை மறப்பதற்கும் இது தான் காரணம்.

மாப்பிள்ளையின் சிரிப்பும், பெண்ணுடைய அழுகையும் இன்றோடு கடைசி. இனி அது இடம் மாறிக்கொள்ளும் என்று ஒரு நகைச்சுவையாகக்கூட சொல்லுவார்கள்.

சிலர் முதலிரவு மூன்று நாளுக்கு பிறகுதான் என்று ஒரு வரைமுறை வைத்திருக்கிறார்கள். அந்த மூன்று நாட்களுக்கும், அந்த தம்பதியருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கும் என்ற முறையில்… ஆனாலும் அந்த தம்பதியருக்கு தனியறை கிடைக்கும்.

கிடைக்கின்ற தனிமையில் ஒருவரை ஒருவர் மன, உடல் ரீதியாக பேசி, தொட்டு பழகிக்கொள்ளுதல் நலம். ஆனால் ஒவ்வொரு செயலிலும் ஒரு ஒழுக்ககட்டுப்பாடு இருத்தல் அவசியம். காணத ஒன்றை கண்ட மாதிரியாக பிடித்து விளையாடினால் அதோ கதி… பிறகு நான் பஞ்சாயத்திற்கெல்லாம் வர இயலாது. ஞாபகமிருக்கட்டும்.

முக்கியமாக நடிக்காதீர்கள். அதேபோல ரொம்ப நல்லவராகவும் காட்டதீர்கள். எனக்கு இது பிடிக்கும். நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க என்று படுத்தாதீர்கள். நீங்களே பேசாதீர்கள், அவர்களை பேச விடுங்கள். காது கொடுத்து!? என்ன சொல்லுகிறார்கள் என்று கேளுங்கள். தயக்கம் காரணமாக முதல் நாள் பேசாதிருக்கலாம் (இப்ப எல்லாம் அப்படி இல்லீங்க… யாரப்பா அது…). உங்கள் மனதிற்குள் இனி இவள் எனக்குத்தான் என்று மந்திரம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

ஒரு முகம் தெரியாத ஒருவரை பழக தயாராவது போல செயல்படுங்கள். உங்கள் தந்தை முதலிரவில் எப்படி நடந்து கொண்டார் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பெண்ணுக்கு அவரின் தாய் மூலமாக தெரிந்துவிடும். (சாரம். சித்தூர் முருகேசன்)

ஆக ஒவ்வொரு நாளும் அவளோடு பழகுங்கள். கிடைத்த தனிமையில் தள்ளி இருங்கள். காமத்தில் தடை ஏற்படுத்தினால் தான் மடைதிறந்த வெள்ளமாக பாயமுடியும். அந்த காமத்தில் திளைக்கவும் முடியும். ஓட்டைப்பாணையாக இருந்தால் திருமணம் அர்த்தமற்றுப்போய்விடும் வாய்ப்பு அதிகம்.

அடக்கிவைக்கிற காமம்… அத்தகைய காமத்தை பற்றி சொல்லாதவர்களில்லை. இதில் ஞானிகளும் உண்டு. இறைவனை நோக்கிய பக்தி வழிபாடுகளில், பாடல்களில், கோரிக்கைகளில் காமம் கலந்திருப்பதை நாம் அறியலாம். உயிரினத்தின் அதிகபட்ச ஆசைகளின், ஆர்வத்தின் வெளிப்பாடு காமம்.

அது இறைவனுக்கே செய்து மகிழும் பொழுது, சக தோழிக்கு, உங்கள் வாழ்க்கை துணைக்கு செய்தாலென்ன? எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால் அதற்குப்பின் அந்த பாத்திரத்தில் எதுவுமே இருப்பதில்லை என்பதை நினைவுறுத்துங்கள்… சரியா?

இனி அந்த மூன்றாவது நாளின் இரவில் என்ன நிகழும்?

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

குறிப்பு: இந்த இலவச சேவையில் ஜோதிட ஆலோசனை கேட்வர்களுக்கு… ஒரே ஒரு கேள்வி தங்கள் ஜோதிடத்தின் வழியாக கேட்டாலும் ஆய்வு இல்லாமல் பதில் தர இயலாது… எனவே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு வருந்துகிறேன். முடிந்தவரை பதில் தந்து கொண்டிருக்கிறேன்…

 

Advertisements

One thought on “இல்லறம்_முதலிரவு

    தனி காட்டு ராஜா said:
    July 26, 2011 at 8:02 am

    //“பொண்டாட்டி. பிள்ளை, குட்டி, மாமன், மச்சான்னு வேகுறதுக்கு பதில் ஒரு கட்டு விறகிலே வெந்துட்டு போய்டலாம்”//

    🙂 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s