இல்லறம் அறம்

Posted on

இல்லறம் அறம்

என்ன ஜீ கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையா தலைப்பு குறுகிட்டே வருதுன்னு கேட்கின்றீர்களா? இல்லறம் அப்படித்தான் இருக்கும்.

அதன் சிறப்பை வேறு வார்த்தைகளின் மூலமாக வெளிப்படுத்த வேண்டியதே இல்லை. இல்லம்+அறம்… இல்லறம்.

இதை எழுதும் பொழுது என் நண்பர் சொன்னார்… தவறு ஜீ… இல்லாத+அறம் அல்லது இல்லை+அறம் = இல்லறம். என்று… அந்த நண்பர் வருத்தப்படும் கணவன் சங்கத்தின் வரிசையில் இருப்பார் போலிருக்கிறது.

இந்த இல்லறம் செய்தியை நான் தருவது தான் புதிது. ஏற்கனவே நம்ம சித்தூர் முருகேசன் அடித்து துவைத்து காயப்போட்டு விட்டார். கவிதை07 ல் கூறு கட்டி வைத்திருக்கிறார்… அவரும் ஒரு அனுபவஸ்தர் அல்லவா…

ஒரு கணவனும் மனைவியும் எப்படி இருக்கவேண்டும்? மண்ணும் மழையும் போல, சேலையும் நூலும் போல, பூவும் நாறும் போல இப்படி பல சொல்லலாம்… ஆனால் அதெல்லாம் வாழ்த்த உதவும், வாழ்க்கைக்கு உதவாது.

ஆனால் ஓஷோ என்னசொல்கிறார் தெரியுமா? ஒருத்தர் சாடிஸ்ட், இன்னொருத்தர் மாசோசாடிஸ்ட். எந்த உலக திருமண தம்பதிகளுக்கும் இது பொருந்தும். ஒரு வழி காட்டியும் தேவையில்லை.

ஆனால் இதன் அர்த்தம் ஒரே நிலையில் அல்ல. கரண்ட் போல… ஒரு சுற்று, ஒவ்வொரு சுற்றாக இருக்க வேண்டும். கல் ஆனாலும் கணவன்.. ஃபுல் ஆனாலும் புருசன்னு இருக்கக்கூடாது. கணவன் ஆர்பாட்டம் செய்தால் மனைவி இறங்கி வரனும், மனைவி ஆர்பாட்டம் செய்தால் கணவன் இறங்கி வரனும். அவ்வளவுதான்.

ஒரு பதிவிற்கு இரண்டு மூன்று நாள் இடைவெளி தருவது ஒரு யோசனைக்காகத்தான்… (ஜீ… அதெல்லாம் வேண்டாத வேலை, வந்தமா, பதிவ போட்டமான்னு போய்க்கிட்டே இருக்கனும்….) (ஏ. யாரப்பா அது? )

உண்மைதான் யோசனைக்கெல்லாம் ஏது நேரம்?. வாழைபழத்தை ஊட்டி விட்டாத்தானே, நமக்கெல்லாம் சாப்பிட்டு பழக்கம். இந்த ஒருத்தர் சாடிஸ்ட், இன்னொருத்தர் மாசோசாடிஸ்ட். மிகச்சரியாகவே இருக்கும். எப்பொழுதுமே இயற்பியல் விதிப்படிக்கூட ஒன்றை ஒன்று சார்ந்து தானெ ஓடிக்கொண்டிருக்கிறது.

இதை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தல் என்று சொல்லக்கூடாது என்றே கருதுகிறேன். விட்டுக்கொடுத்தல் அவரின் மனதில் வடு உருவாக்கும். உனக்காக நான் விட்டுக்கொடுத்தேனே என்று சொல்லும்படி அல்லது எனக்காக நீயும் விட்டுக்கொடு என்ற ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தும்.

வாழ்வியலில் திருமணவாழ்வு அந்தந்த நாட்களிலேயே படித்து, பரிட்ச்சை எழுதி பலன் காணும் ஒரு வழிமுறை… எத்தனை காலம் ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதிய நாள், புதிய பாடம் தான். யாரோ ஒருவர்… அது கணவனோ, மனைவியோ ஆளுமை என்ற எண்ணம் இருந்தால் அது அந்த இணைப்பை ஒரு வழி செய்திடும். இந்த ஆளுமை ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவர் இல்லம் சார்ந்த இன்னொருவரின் ஆலோசனை மூலமாக வருவது.

முதல் நாளின் தனிமையில் நீங்கள் அந்த பெண்ணோடு, அல்லது அந்த ஆணோடு எப்படி பழகுகிறீர்கள் என்பதை பொறுத்தே ஒவ்வொரு நாளும் தொடங்கும்.

அநேக திருமண தம்பதியருக்கு திருமணத்திற்கு அடுத்த நாளே சாந்தி முகூர்த்தம் என்ற ஒன்றை வைத்துவிடுகின்றனர். அந்த வார்த்தையை கேட்ட உடனே எண்ணம் முழுதும் நேற்று பார்த்த ஒளி ஒலி படபடக்கும். அப்புறம் காஞ்ச மாடு கம்பு காட்டுல் புகுந்த மாதிரிதான்… ஒரே அதளகதளம்.

மறு நாள் விடிந்தால் ஆப்பு ஆரம்பம். தாலி கட்டிய உடனே, இவள் எனக்கானவள்… இவளை நான் என்ன வேண்டுமானலும் செய்யலாம்… நாம் ஆண்பிள்ளை… அதனால் என் ஆண்மையை காட்டுகிறேன் என்பதான வேகம் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கிறது. இருக்கட்டும். அந்த பெண் உனக்கான அதே எண்ணத்தில் இருந்தால் சரிதான். எல்லா பெண்களும் இயல்பாகவே இருப்பதில்லை… அந்த திருமண நாளில்… ஒரு சிலர் விதிவிலக்கு. அந்த பெண்ணின் மனம், எண்ணம், சொல், செயலறிந்து நடந்து கொள்ளுதல் நலமானது. ஒரு ஆரம்பம் கோணலாக வரைந்தால் அந்த ஓவியமும் முழுதும் அப்படித்தான் இருக்கும். நீங்கள் வேண்டுமானால் வாருங்கள். என்னிடம் கோணலான ஓவியம் நிறைய குப்பையில் இருக்கிறது…

பேஸ்புக்கிலும், (முகநூலாம்யா…) ஆர்குட்டிலும் ( இதுக்கு தமிழ் பேர் வைக்கலையோ) எந்த _ (டேஷ்ன்னு சொல்லுங்க) வந்தாலும் ஆவ்சம், அழகு, அற்புதம், கலக்கிட்டீங்க, கொன்னுட்டீங்கன்னு சொல்லி மகிழ்கிற ஒருவர்… இதில் ஒரு வார்த்தையை, மனைவியிடம் சொல்லிப்பாராட்ட தயக்கம் ஏனொ?

இன்னும் வரும்….

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

குறிப்பு: இந்த இலவச சேவையில் ஜோதிட ஆலோசனை கேட்வர்களுக்கு… ஒரே ஒரு கேள்வி தங்கள் ஜோதிடத்தின் வழியாக கேட்டாலும் ஆய்வு இல்லாமல் பதில் தர இயலாது… எனவே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு வருந்துகிறேன். முடிந்தவரை பதில் தந்து கொண்டிருக்கிறேன்…

அனைத்து தரப்பினரும் எந்த விதமான ஆலோசனைகளும் (ஒன்று மட்டும்) மின்னஞ்சல் வழியாக மட்டும் பெற முடியும். (கூடுதலாக ஒரு அலைபேசி இப்பொழுது இல்லை )

 

Advertisements

4 thoughts on “இல்லறம் அறம்

  S.Murugesan said:
  July 11, 2011 at 5:05 pm

  சுகுமார்ஜீ !
  தம்பதிகள்ள //ஒருத்தர் சாடிஸ்ட், இன்னொருத்தர் மசாக்கிஸ்ட். // இந்த பாயிண்டை ஓஷோ சொல்லி -அது என் மைண்ட்ல ஏறி நான் எழுதினேனா? அ நான் எழுதினதை எப்பயோ படிச்ச ஞா ல நீங்க ஓஷோவை கோட் பண்ணிங்களா ?புரியலை.

  சொன்னது ஆரா இருந்தாலும் இது சூப்பர் பஞ்ச். இதுக்கு ஒரு பிற்சேர்க்கையை சேர்க்க விரும்பறேன்

  பகல்ல சாடிஸ்டா உள்ளவுக ராத்திரியில மசாக்கிஸ்டாவும் – பகல்ல மசாக்கிஸ்டா உள்ளவுக ராத்திரியில சாடிஸ்டாவும் மாறுவதை கவனித்திருக்கிறீர்களா?

  மேற்படி வரிகள் இடம் பெற்ற என் பதிவுக்கான தொடுப்பு இதோ:

  http://kavithai07.blogspot.com/2010/08/5_12.html

  Harikumar A said:
  July 12, 2011 at 1:17 pm

  //ஆவ்சம், அழகு, அற்புதம், கலக்கிட்டீங்க, கொன்னுட்டீங்கன்னு சொல்லி மகிழ்கிற ஒருவர்… இதில் ஒரு வார்த்தையை, மனைவியிடம் சொல்லிப்பாராட்ட தயக்கம் ஏனொ?
  Excellent, super lines…

  kalyan said:
  July 12, 2011 at 7:47 pm

  ((வாழ்வியலில் திருமணவாழ்வு அந்தந்த நாட்களிலேயே படித்து, பரிட்ச்சை எழுதி பலன் காணும் ஒரு வழிமுறை… எத்தனை காலம் ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதிய நாள், புதிய பாடம் தான்.))

  கண்டிப்பாக எத்தனை நாள் ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதிய நாள், புதிய பாடம் தான். அதை புரிஞ்சுக்காம வீண் சண்டை போட்டுதானே இன்னிக்கி நிறைய கேஸ்கள் பரிட்சையில் பெயில் ஆகி விவாகரத்துன்னு போய் நிக்குதுங்க அல்லது வீட்டுக்குள்ளேயே எதிரும் புதிருமா நிக்குதுங்க.

   S Murugesan said:
   July 13, 2011 at 1:02 am

   கல்யாண் ஜீ,
   நம்ம பிறவியோட நோக்கமே க்ர்மங்களை தொலைக்கிறதுதான். ஆருனா சுகம் கொடுத்தா அவிக நம்மை கருமத்தை கூட்டறாய்ங்கனு அர்த்தம். ஆருனா இம்சை கொடுக்கிறாய்ங்கன்னா அவிக நம்மை கருமத்தை ஒழிக்கிறாய்ங்கனு அர்த்தம். இது புருசன் பொஞ்சாதி மேட்டர்லயும் கரீட்டா நடக்கு.

   இந்த ரகசியத்தை புரிஞ்சிக்கிட்டா எவனும்/எவளும் போலீஸுக்கு – கோர்ட்டுக்கு போகவே மாட்டான்./மாட்டாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s