இல்லறம் ஒவ்வொரு நாளும் அறம்

Posted on

இல்லறம் ஒவ்வொரு நாளும் ரணம்.. ஆனால் நாம் இப்பொழுது ஒரு பரிசோதனை கடந்து விட்டதால்… இனி இல்லறம் ஒவ்வொரு நாளும் அறம்

மூன்று நாட்களாகவா அன்பை பற்றி யோசித்தீர்கள் என்று நீங்கள் கேட்கக்கூடும். அன்பு குறித்து யோசிக்க வேண்டியதில்லை. அது எப்பொழுதுமே வான் மழை போல பொழிந்து கொண்டுதான் இருக்கிறது.  நீங்களும் நானும் தான் நனைய மறுக்கிறோம்…

இந்த உலகில் அன்பு பற்றி பேசாதவர்கள் யாருமில்லை. அன்பு பற்றி உணர்ந்தவர்களும் யாருமில்லை. ஒரு தாயை கேட்டால், நேர நேரத்திற்கு மார்பில் போட்டு குழந்தைக்கு பால் புகட்டுகிறேனே அதுதான் அன்பு என்கிறாள். மனைவியை கேட்டால் அவரின் தேவை எல்லாம் நிறைவேற்றுகிறேனே அதுதான் என்கிறாள்.

ஒரு தந்தையை கேட்டால் அவள்(ன்) என்ன கேட்டாலும் வாங்கித்தருகிறேன், எவ்வளவு ஆனாலும்; அது அன்பிலாமல் என்ன? என்கிறார். கணவனை கேட்டாலும் அதே மாதிரியான பதிலே வரும்.
இதுவா அன்பு? இல்லை… இது கடமை.

கடமைக்கும், அன்புக்கும் மிகப்பெரும் வித்தியாசம் உள்ளது. ஒரு பேருந்தில் நீங்கள் பயணிக்கிறீர்கள். ஒரு 250 கிலோமீட்டர் பயணப்பாதை. முன்னும், பின்னும் செல்லும் பாதையில் உங்களை ஒரு பழுதும் இல்லாமல் ஊர்சென்று சேர்க்கிறாரே, உங்களுக்கு முன் அறிமுகமில்லா ஒரு வாகன ஓட்டி… ஒரு வேளை அவர் கடமைக்காக பேருந்து ஓட்டுவதானால், வீட்டில் இருக்கும் கஷ்டத்தை நினைத்து உங்களை வேறெங்காவது சேர்த்துவிடக் கூடுமல்லவா?

அன்பை எங்கெ காணலாம்? பிறந்த ஒரு குழந்தையை கவனியுங்கள். அக்குழந்தை சில மாதங்கள் அன்பில் திளைக்கிறது. அதற்கு பிறகு அது அங்கே இருப்பதில்லை… ஒரு பொருளை கொடுத்து பிடுங்கினால் ஆக்ரோசம் அல்லவா வருகிறது. உங்கள் வீட்டு வளர்ப்பு பிராணிகளை கவனியுங்கள்… முழுதாக, பலமாக உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கையை கவனியுங்கள்.

அன்பு என்பதை அப்பட்டமாக காட்ட இயலாது. அப்படி வெளிக்காட்டுவது அன்பாக இருக்கவும் முடியாது… என்னால் கற்றுக்கொடுக்கவும் இயலாது… இயற்கையை கவனிப்பதின் மூலம் அதன் அன்பை தெரிந்து கொள்ளலாம். அன்பு என்பதை நாம் இயற்கையிலிருந்துதான் கற்றுக்கொள்கிறோம்.

நமக்கெல்லாம் இந்த உலகில் இயல்பாக இருப்பதைக்கெடுப்பதே மன திருப்தி தரும் வேலை.

ஒரு சோதனைக்காக… உங்கள் இல்லத்தில் எல்லொரிடமும், அன்பு என்றால் என்ன என்று கேட்டுத்தான் பாருங்களேன்… என்ன பதில் கிடைக்கிறது என்று கவனியுங்கள்…. 99.99 சதவிகிதம் கடமையைத்தான் அன்பு என்று சொல்லுவார்கள்.

ஆனாலும் பெண்கள் அன்பானவர்கள் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டே இருக்கிறது… அப்படி சொல்லியே அவர்களை இன்னமும் புறந்தள்ளியே இருக்கின்றனர். வேகமாக ஓடுபவருக்கு ஒரு இரும்பிக்குண்டை காலில் கட்டியது போல அந்த பெண்களுக்கு அது ஒரு தடையாகவும் இருக்கும்.

ஓஷோ சொல்லுவார்… ஒரே ஒரு ஊசி மூலமாக ஒரு ஆணை பெண்ணாக மாற்ற முடிந்தால், முதல் ஊசி நான் போட்டுக்கொள்வேன் என்று. அவரே தொடர்கிறார்… பெண்ணிடமிருந்த அன்பு கருணை, பாசம் எல்லாம் பறந்தோடி ஆண்களிடம் வந்து விட்டது. அதற்கு பதிலாக, வீரம், வேகம், ஆளுமை ஆண்களிடமிருந்து பெண்களிடம் சேர்ந்து விட்டது. இருக்கலாம்… ஆனால் பெண்கள் இயற்கை ரீதியாக ஒரு அற்புத படைப்பு. அந்த படைப்புக்கு நான் தலைவணங்குகிறேன்… சமூக மாற்றம் அவர்களை பாடாய்படுத்துகிறது.

ஆனால் நாம் ஒவ்வொருவரும் அன்பை எதிர்பார்க்கிறோம். அது எப்படி இருக்கும் என்று தெரியாமல்… பொதுவாக ஒரு தேடல் நிறைவேறாமல் போனால் அங்கே ஒரு இறுக்கம் வரும். இசைத்தட்டு  ஒன்றில் விழுந்த கீறல் ஒரே வரியை மீண்டும் மீண்டும் பாடுவது போல நாம் அங்கேயே நின்று விடுகிறோம்.

அப்படியான ஒரு அன்பான எதிர்பார்ப்பில்தான் நம் திருமணமும் நடைபெறுகிறது.

சராசரியான ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரு எதிர்பார்ப்பு… என்னைவிடவும் இவர், இவள் என்மீது அன்பை பொழியலாம். வாழ்க்கை இப்பொழுது இருப்பதைவிடவும் மகிழ்ச்சிகர்மாக இருக்கும் என்று எண்ணுகின்றனர்.

மணமக்களாக மாறுகிற இருவருமே வெவ்வேறு சூழலில் வாழ்ந்து வந்தவர்கள்… தனியாக இருந்து, எண்ணங்களால் ஒன்றாக சேர்ந்து, அந்த நொடிகளை கடக்கவே மிக நீண்ட நாட்களாகும். சில இந்து மத திருமணங்களில்… தாலி கட்டுதல் என்ற சடங்குக்கு பிறகு… அந்த மணப்பெண்ணும், மணமகனும் இருவரை ஒருவர் தொட்டு, பேசி, தங்கள் தயக்கங்களை, கூச்சங்களை கலைக்கும் முகமாக மேலும் சில சடங்குகள் இருக்கும்… இருந்தன… கால மாற்றத்தில் அதெல்லாம் இப்பொழுது இல்லை. தாலி கட்டி முடித்தால், அர்ச்சனை செய்துவிட்டு “எப்படியோ போங்கடா” என்று சாப்பாடு ஹால் நோக்கி போய்விடுவார்கள்…

மணமக்களுக்கு பிறிதொரு நாளில் ஏதாவது பிரச்ச்னை என்றால் “ நல்லாத்தானே நடந்தது… அப்புறம் என்னாச்சி?” திருமணம் நன்றாகத்தான் நடந்தது… அந்த மனங்கள் தான் பிரச்சனைக்குள்ளாகி விட்டன. “அதுக்கு நாங்க என்னா பண்ணமுடியும்? நீங்கதான் பார்த்துக்கனும்” இப்படி தட்டிக் கழித்து அல்லது களித்து விடுவர்.

ஒரு திருமண நாளில் எப்படிப்பார்த்தாலும் ஒரு 500 பேருக்கு மேலாக, சொந்த பந்தங்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் இப்படி எல்லோரும் சேர்ந்து வந்திருந்து வாழ்த்துகின்றனர். அப்படியான திருமணவாழ்த்து இந்த மணமக்களை நன்றாக வாழ வைக்கிறதா? அப்படியானால்… திருமண மண்டபத்தில் அத்தனை பேரும் மணமக்களை வாழ்த்துவதை தவிரவேறு என்னதான் செய்கிறீர்கள்… ஒரு 10 நபர்கள், அட ஒரு நபர்…?

ஒரு வேளை இந்த வாழ்த்துகள் மணமக்களை சென்றடைவது இல்லையா?

இல்லறத்தை மீண்டு (ம்) தொடர்வோம்…

குறிப்பு: என்னதான் பக்கம் பக்கமாக எழுதினாலும், யுனிவர்சிட்டி எக்ஸாம் மார்க் போல ஒரிரு பின்னூட்டம் தான்  வருகிறது…
😦
பகிர்ந்தளிங்க(ம்மா)ப்பா…

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

————–

Advertisements

15 thoughts on “இல்லறம் ஒவ்வொரு நாளும் அறம்

  தனி காட்டு ராஜா said:
  July 6, 2011 at 6:18 am

  //ஒரு திருமண நாளில் எப்படிப்பார்த்தாலும் ஒரு 500 பேருக்கு மேலாக, சொந்த பந்தங்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் இப்படி எல்லோரும் சேர்ந்து வந்திருந்து வாழ்த்துகின்றனர். அப்படியான திருமணவாழ்த்து இந்த மணமக்களை நன்றாக வாழ வைக்கிறதா? அப்படியானால்… திருமண மண்டபத்தில் அத்தனை பேரும் மணமக்களை வாழ்த்துவதை தவிரவேறு என்னதான் செய்கிறீர்கள்… ஒரு 10 நபர்கள், அட ஒரு நபர்…?//

  ஒரே நாளில் இரண்டு மூன்று திருமணங்களுக்கு சென்று வாழ்த்த வேண்டி கட்டாயம் இருப்பவர்களும் உள்ளனர் 🙂

  சட்டியில் இருந்தானே அகப்பையில் வரும் 🙂

  முதலில் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் நன்றாக வாழ்ந்தாதானே …அடுத்தவனை வாழ்த்த மனம் வரும்
  அவன் அவனுக்கே ஆயிரம் பிக்கல் பிடுங்கள் 🙂

  அது என்னமோ தெரியல ….பெரும்பாலும் 90 சதவித மணவாழ்க்கை தோல்வியில் தான் முடிவடைகிறது… இருந்தாலும் நம்மூர் அறிவாளிகள் திருமணத்தை முன் நிறுத்துவது ஏன் என்று தெரியவில்லை

   S Murugesan said:
   July 6, 2011 at 7:47 am

   ராசா !
   திருமணம் என்பதே உயிரியல் விதிகளுக்கு எதிரானது. இந்த உண்மையை உணர்ந்து திருமணம்+ மணவாழ்வை ப்ளான் செய்தால் சிக்கலை தவிர்க்கலாம்.

    ராசா said:
    July 6, 2011 at 9:04 am

    தல
    அப்ப கண்ணாலம் ஒரு மாய்மாலம் தானா
    அப்ப என்ன மாதிரி பொண்ணு பாத்துக்குட்டு இருக்குற பய புள்ளைங்க எல்லாம் ஊட்டுல ஸ்டாப் பண்ண சொல்லிரலாமா
    ஆனா சமுகம் நீ ஆணா என்று கேட்க ஆரம்பிக்குமே ..அப்ப என்ன சாதிக்க இங்கனே வந்தோம் ..பிறப்பு அறுக்க மட்டும் தானா
    அப்படின பிறப்பு அறுக்க வைடிங் லிஸ்ட்ல இருக்குற மூததையகளுக்கு யார் உதவுவது

    நாம் பெத்துக்க போற புள்ள நம்ம முன்னாள் தாத்தா/பாட்டி தானே

    அப்புடி இருக்குறப்ப இந்த கண்ணால மேட்டர் கண்டிப்பா பண்ணிக்கனுமா/வேண்டாமா ….

    அல்லாருமே குழப்புரங்காலே ..

    கண்ணாலத்துக்கு முன்னாடியே கண்ண கட்டுதே

    சமுதாய விதி எப்பவுமே இயற்கை விதிக்கு மாறாவே இருக்கே …ஏன்..தல

    ஜி

    அன்பு வேறு கடமை வேறு என்பது நல்ல கருத்து..அதுவே உண்மையாகவும் இருக்கலாம்

    அப்புடி இருக்குறதுக்கு கூட (கடமை செய்ய கூடஅன்பு வேண்டுமே –பஸ் டிரைவர் கூட அவர நம்பி இருக்குற குடும்பத்து மேல இருக்குற அன்பினால் வந்த கடமயினால் ) தானே ஒழுங்கா வண்டி ஓட்டுறார் ..மத்த படி தண்ணி அடிச்சிட்டு ஓட்டுற ஆளுங்க கூட உண்டே …

    இன்னும் தெளிவு படுத்தினால் நலம் …நீங்க கேள்வி கேக்க சொன்னதுனால உதிச்ச கேள்வி :)……இது கேக்குறதுக்கே லாயக்கு இல்லாத கேள்விய கூட இருக்கலம்

    S Murugesan said:
    July 6, 2011 at 11:29 am

    ராசா !
    திருமணம் இயற்கைக்கு -உயிரியல் விதிக்கு எதிரானது. இந்த கருத்துல நமக்கு மாற்றமில்லை. ஆனால் நான் சொல்லவந்தது திருமணத்தை தவிர்த்த மத்த விசயங்கள்ளயாச்சும் உயிரியல் விதிகளை -இயற்கைய மதிச்சு நடந்தா சமாளிச்சுரலாம்னுதேன்.

    பீக் ஹவராச்சே – ஹெவி ட்ராஃபிக்காச்சேனு வீட்லயா உட்கார்ந்துக்கறம்.

    S Murugesan said:
    July 6, 2011 at 11:47 am

    ராசா !
    ஒரு காலத்துல “உனக்கு 22 எனக்கு 32″ன்னு ஒரு தொடர்கதை (?) எழுதினேன். அதுல இந்த அத்யாயத்தை முன் கதையெல்லாம் ஸ்க்ரால் பண்ணிட்டு படிச்சுப்பாருங்க.

    இல்லறம் குறித்த ஒரு புதிய தரிசனம் ஏற்படும்

    தனி காட்டு ராஜா said:
    July 6, 2011 at 12:22 pm

    ராசா வுக்கு ராஜாவின் பதில் ( நமக்கு தெரிஞ்ச அளவுக்கு )

    உண்மையில் கல்யாணத்தின் அடிப்படை என்ன?
    கல்யாணத்தின் மூலம் கிடைக்கும் லாபம் தான் என்ன ?

    அப்பா அம்மா நண்பர்கள் எல்லாம் துணையாய் இருக்கும் போது நமக்கு வாழ்க்கை துணை என்று சொல்ல படுகிற பெண்ணால் கிடைக்க கூடிய முக்கியமான சுகம் தான் என்ன ?

    கல்யாணம் ஆனா முதல் நாளே சாந்தி முகூர்த்தம் வைப்பதன் காரணம் என்ன?

    கல்யாணத்தின் அடிப்படை செக்ஸ் தான்

    செக்ஸ்சின் அடிப்படை தான் என்ன??

    மரணம் பற்றிய பயம் அல்லது மரணத்தை வெல்ல அல்லது மரண ஞாபகம் இல்லாமல் இருக்க செக்ஸ் ஒரு மருந்து..

    கல்யாணம் மூலம் மனிதன் புது உறவு ஏற்படுத்தி கொண்டு புது வாழ்வு தொடங்கும் போது மரணத்தை பற்றி மறந்து போய் பொண்டாட்டி, குழந்தை கள், நல்ல/கள்ள உறவுகள் என்று வாழ்கையை வாழ ஆரம்பிக்கிறான்.
    பணம் ,பதவி அது தொடர்பான வாழ்த்துகள்,பிரச்சினை என்று முற்றிலும் மரணத்தை மறந்து போகிறான்.

    (( பொண்டாட்டி பக்கத்துக்கு வீட்டு காரனோடு ஓடி போகாமல் இருந்தால் 🙂 ) ஒரு அறுபது வயதில் பிள்ளைகள் கல்யாணம் என்று எல்லாம் நல்ல படியாக முடிந்து கண்டிப்பாக ஒரு தனிமை ஏற்படும்.

    இப்போது மரணத்தை வெல்ல வேறு ஒரு வழியும் கிடையாது…எனவே ஆன்மிகம் நோக்கி திரும்புகிறான்…

    பொதுவாக ரொம்பவும் சராசரியாக புத்தி வேலையும் மனிதன் ஒரு 50 -60 வயதில் ஆன்மிகம் நோக்கி திரும்புகிறான்.

    ஆன்மிகம் மூலம் மரணத்தை வெல்ல முடியும்.
    ஆன்மிகத்தின் நிழல் தான் காதல்,செக்ஸ் ,மது எல்லாம்.
    நிழலா – நிஜமா முடிவு நம் கையில் ?

    நிழலில் கொஞ்ச நாள் இளைப்பாறி விட்டு நிஜத்தை நோக்கி செல்வது தான் புத்தி உள்ள மனிதனுக்கு அழகு.

    கல்யாணம் என்பது நமக்குள் நாம் செய்து கொள்ளும் ஏற்பாடு தான்.
    ஆன்ம வாழ்வுக்கு லிவிங் together நல்ல option 🙂
    முடிவு நம் கையில் !!!

  suseela said:
  July 6, 2011 at 10:25 am

  நல்ல கருத்துக்கள் மிச்சம் விசயங்களையும் எழுதுங்க‌

  டவுட்டு தனா said:
  July 6, 2011 at 10:38 am

  என்னாங்கடா இது சுனாமி அடிச்ச ஊருமாதிரி வெரிச்சோடி போய்கெடக்குதே
  நம்ப கோள்சொல்லி டவுசர கானோம் சோதிடமேதை மனி அன்னனையும் கானோம் அறிவு மின்னல் வினோத்தை கானோம் புரட்சி சோதிடரையும் கானோம் (இது கானாமல் போனோர் பற்றிய அறிவிப்பு இல்லைங்னா) தயவு செய்து எல்லோரும் வந்துருங்கன்னா( /// இனிமேல் தனுசு ராசியின் வாலை நான் சுருட்டி மடக்கி வச்சுக்கிட்டு நல்ல புல்லையா நீஙக சொல்ரத மட்டும் கேட்டுக்குரேங்னா}]]]]

   சிவ யோகி said:
   July 7, 2011 at 5:42 am

   என்னது …..நம்ம டவுட் தன பாலுவா இது …இப்படி ஒரு அறிக்கை கொடுப்பது 🙂
   நல்ல காலம் பொறந்துருச்சு சாமியோவ் 🙂

  rajesh said:
  July 6, 2011 at 11:18 am

  மிகவும் நன்றாக உள்ளது ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  http://astrovanakam.blogspot.com/

  Sudharsan said:
  July 6, 2011 at 5:10 pm

  hai murugesan sir,
  I found that people who have saturn in second house,does not enjoy good married life(nearly 80%).But people who have guru in second house have enjoyed best married life.Can you clarify?

   S Murugesan said:
   July 6, 2011 at 11:59 pm

   சுதர்சன் !
   ஆர்வத்துக்கு நன்றி. நம்ம ஸ்கூல்ல குரு,சனின்னு மொட்டையா பிரஸ்தாபிக்க கூடாது. லக்னாத் பாபியா? சுபனா? எந்த லக்னம்னு மென்ஷன் பண்ணிட்டு பேசனும்.

   இதுல அந்த குருவோ/சனியோ நின்ன நட்சத்திர சாரம் கூட முக்கியம். நீங்க சொல்ற ” நான் பார்த்தவரை’ “80% “ங்கறதெல்லாம் தேர்தல் கருத்து கணிப்பு மாதிரி. அதை எல்லாம் நம்பாதிங்க.

   இன்னம் கொஞ்ச நாளு சுப்பையா வாத்தியாரை ஃபாலோ பண்ணுங்க . நல்லது. நம்ம சைட்டு உருப்படாத சைட்டு. இதுல கடைக்கால் எல்லாம் கிடைக்காது.

  அனுபவ ஜோதிடத்தில் குறித்துக் கொள்ள வேண்டிய அருமையான சிந்தனை.

  வாழ்த்துக்கள்

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  Natarajan P said:
  July 7, 2011 at 4:23 am

  தல…இந்த ஓஷோ சாமியார் எப்போ பாத்தாலும் யாரையாவது அல்லைல போட்டு தாக்கிட்டு இருப்பாரே….அதுவும் ஜோஷ்யகாரன மதிக்க மாட்டான்…ஏன் எப்போ பாத்தாலும் நடுவுல இந்த ஆள் சொன்னத இழுத்து விடறிங்க????

   S Murugesan said:
   July 7, 2011 at 7:18 am

   நடராஜன் !
   பூட்டுகளாக மாறிப்போன சாவிகளையெல்லாம் திறந்து கொடுத்தவர் ஓஷோ.

   தங்களை போன்றவர்களிடையில் அவரே ஒரு பூட்டாக கிடப்பதை உணர முடிகிறது.

   ஜோதிடம் பற்றிய அவர் கருத்துக்களை “மறைந்து கிடக்கும் உண்மைகள்” புத்தகத்தில் படிச்சுப்பாருங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s