தில்லு துரை பதில்கள் : திரு.கே.எஸ்

Posted on

பதிவர்: திரு.கல்யாண சுந்தரம்
வலைப்பூ: கல்யாணசுந்தரம் ப்ளாக்ஸ்பாட் .காம்

1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர்
– திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க

நம்மை சார்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் ஒரு மனிதனாக.

2.உங்க குடும்ப பின்னணி – அது இன்றைய உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுஙக

குடும்பத்தில் இருந்த சூழ்நிலைதான் என்னை எனக்கு உணர வைத்தது.

சுமை ஏற்றப்படும் போதுதான் அதை நம்மால் தாங்க முடியும் என்பதே தெரிகிறது. அதனால் குடும்ப பின்னணி – அதாவது கஷ்டமான சூழ்நிலை – என்னை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கு வகித்தது.

3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

கண்டிப்பாக நல்ல என்ஜாய் பண்ணினேன் – வகுப்பை கட் அடிப்பது கூட உண்டு (ஆங்கில வாத்தியாருக்கு பயந்து…!). நட்பு, விளையாட்டு (கபடி ரொம்ப நல்ல விளையாட்டுங்க), தினமும் பள்ளிக்கு எட்டு கிலோ மீட்டர் பேரூந்தில் பயணம்னு நல்ல என்ஜாய் பண்ணினேன். அப்போ என்ஜாய் மட்டும்தான் பண்ணினேன்….ஒழுங்கா படிக்கலியே… ஆனால் பள்ளி பருவத்தில் ஒழுங்கா படிக்கலைன்னா பாதிப்பு என்னன்னு ரொம்ப நல்லா உணர்ந்து அதுக்கப்புறம் படிப்பில் டாப் கியர்தான்….!!! அந்த பாதிப்புதான் என்னை நெறிப்படுதியதுன்னு நினைக்கிறேன்…இல்லன்னா இன்னிக்கி நான் ஆடிட்டர் ஆகி இருக்க முடியுமா???

இன்றைய மாணவர்களுக்கு என் ஆலோசனை:

நல்லா படிங்க, நல்லா விளையாடுங்க, பெற்றோர் சொல்றதை கேளுங்க, மனதில் யாராவது ஒருவரை முன்மாதிரியா வச்சிக்கோங்க – அப்போதான் அவரை போல் வரணும்னு ஒரு வேகம் பிறக்கும். நட்பு வாழ்க்கைக்கு ரொம்ப அத்தியாவசியமான ஒண்ணு, அதை தேடிப்போனா கிடைக்காது, அதெல்லாம் தானா அமைவது படிக்கும் காலங்களில், நட்பை மதிச்சி, நண்பர்களிடம் உண்மையா இருங்க.

4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

கண்டிப்பா ஹெல்ப் பண்ணுது. படிச்ச படிப்புதான் இன்னிக்கி வாழ்க்கை.

5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?

அகடமிக் சில்லபஸ்ல இல்லை. குரு எல்லாம் கிடையாது, நாமே கத்துகிட்டதுதான். கணிணியை பயந்து பயந்து தொட்ட அனுபவம் எல்லாம் உண்டு. முதன் முதலா excel -இல் work பண்ணும்போது, total பார்க்க கால்குலேட்டர் எடுத்த ஆள் நான்…(ஹி..ஹி..). அப்படி இருந்த என்னிடம் தன்னோட கணினியை துணிச்சலா கொடுத்த என் நண்பனுக்குத்தான் நன்றி சொல்லணும். கூடிப்போனா கணினி off ஆகிடும் அவ்வளவுதானே….எதையும் delete பண்ணாதேன்னு சொல்லி கணிணியை கொடுத்தான் என் நண்பன். அந்த தைரியம் நமக்கு இன்னிக்கி இருக்குதா? நம் குழந்தைகளுக்கு துணிச்சலா கணிணியை கொடுப்போமா நாம்? ஒரு நிமிடம் யோசிச்சி பாருங்க…!!!

6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது? பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்

22 வயதில். பதிவரா என்னை பற்றி சொல்ல பெருசா ஒன்னும் இல்லை. இருக்கிற ஒரு பிளாக்கில் தொடர்ச்சியா எழுதறது இல்லை, ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்ற மாதிரி, என்னோட பிளாக்கில் உள்ள விஷயங்களால் கவர்ந்து இழுக்கப்பட்டு நம்மளையும் follow பண்ணறாங்க…ஹூம்ம் (http://kalyana-sundaram.blogspot.com/)

7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

தானா தெரியறது, நட்பு வட்டாரத்தில் பேசுவது இதெல்லாம் அதை பற்றி ஓரளவு தெரிய வைக்கும். மிக கவனமா handle பண்ண வேண்டிய விஷயம் – அனாவசிய தொடர்புகள் தொல்லை.

8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே.. இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்

இருந்ததுண்டு… நம்பிக்கைதான் வாழ்க்கை. இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்ய வேண்டும். முயற்சி மட்டுமே முன்னேற்றத்திற்கான வழி, முடங்கி விடக்கூடாது.

9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.

திருமணம் arranged marriage . குடும்பமா நாங்க பொண்னை பார்த்து (அதுக்கு முன்னாடியே photo -வில் பார்த்து) பேசி முடிவு பண்ணிட்டோம். போட்டோ பார்க்காமல் முதலில் ஒரு பெண்ணை பார்க்க பொய் ரொம்ப மன வருத்தப்பட்டேன். அந்த பெண்ணை பார்த்ததும் இது நமக்கான பெண்ணில்லைன்னு மனதில் எண்ணம் (ரொம்ப சின்ன பொண்ணுங்க டிகிரி படிச்சிக்கிட்டு இருந்ததுன்னு அங்கே போனப்புறம் தான் தெரியும்). அன்றே அப்பாவிடம் சொல்லிட்டேன், வீடு வீடா பொய் பொண்ணு பார்க்கிறது எனக்கு பிடிக்கலை, அது அவங்களை கஷ்டப்படுத்தும். அதானால் முதலில் போட்டோ பார்த்துட்டு நல்லா விசாரிச்சிட்டு முடிக்கணும்னு நினைச்சால் மட்டுமே பொண்ணு பார்க்க போகணும்னு சொல்லி அப்படியே அடுத்து பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணியாச்சி..!! (டீன் ஏஜ் மேட்டர்ஸ் ….. அய்யய்யோ…. நான் இல்லீங்கோ…)

10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

அப்படி இருந்தால் கண்டிப்பா அது நல்லதல்ல. குடும்ப வாழ்க்கைதான் இந்தியாவின் அடிப்படை. அது இல்லன்னா ஒண்ணுமே இல்லை.

11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க

இந்தியாவில் இப்போ மட்டுமல்ல இருபது வருஷத்திற்கு முன்னாடியே ஆம்பளைங்கதான் அதிகம். ஆனாலும் ஏன் வரதட்சிணை? நலல காளை கிடைக்கிறதில்லை. இப்படியே பெண்கள் சதவீதம் குறைஞ்சிகிட்டே போனா பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?

சூழ்ச்சி நிறைந்த சமூகம், யார் வார்த்தையையும் நம்ப முடியாத நிலை, அகம் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் உலகம் இது. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான், அதனால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். ஆனாலும், கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ள மனிதர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் – மிக குறைந்த அளவில். .

13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?

கண்டிப்பாக மலினப்படுத்தப்பட்டுள்ளது.

14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?

மிரட்டுவது போல தெரிந்தாலும், வாய்ப்புகளை நிறைய தருகிறது, நாம்தான் தேடிப்பார்த்து பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க

முதலில் உன்னை கவனி, பின் உன் குடும்பத்தை கவனி, பின் உன் கிராமம், உன் மாநிலம் என்று வசதி கூடும் போது நம் கவனிப்பின் எல்லையை கூட்ட வேண்டும். இங்கே கவனி என்பது தன்னிறைவு என்று புரிதல்.

16.எல்லாரும் எதிர்பார்த்த கில்மா மேட்டருக்கு வரேன். இது அத்யாவசியமா? அவசியமா? ஆடம்பரமா?

அவசியமான ஒன்று. அனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை. இது உடலின் தேவை, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க கூடாது.

17.கில்மா ஆன்மீகத்துக்கு உதவியா ? உபத்திரவமா? உண்மையான ஆன்மீகம்னு எதை சொல்விங்க?

ஆன்மிகத்தை தொடர்பு படுத்த தெரியலை. அனால் மன அமைதிக்கு அது வழி காட்டும் – முறையாக அனுபவித்தால். தன்னை உணர்வதே ஆன்மிகம்.

18.இருபது வருடத்துக்கு முந்திய மனிதர்களையும் – இன்றைய மனிதர்களையும் ஒப்பிட்டுபார்த்தா மிஞ்சுவது பெருமூச்சா? ஏக்கமா? துக்கமா?

ஏக்கத்தோடு கூடிய பெரு மூச்சி.

19.அரசியல் சனங்க வாழ்க்கைய நேரடியா பாதிக்குதுன்னு நம்பறிங்களா?

நம்பறேன்.

20.கலை,இலக்கியம், சினிமா பற்றிய உங்கள் கருத்து?

என்னை பொறுத்தவரை இவை எல்லாமே பொழுது போக்கு, மனதை ரிலாக்ஸ் பண்ணிக்க உதவும். அதனால் அவசியாமனவை. நாம் இவற்றில் நேரிடையாக நுழையாத பட்சத்தில் இதற்காக ரொம்ப நேரத்தை செலவு பண்ணுவதோ, analyse பண்ணுவதோ தேவை இல்லாத வேலை.

21 உங்களை அதிரச்செய்த .வலையுலகத்தின் இருண்ட பக்கம் ? உங்களை ஒரு ப்ளாகரா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி

இருண்ட பக்கம் பற்றி சொல்லும் அளவு அதை பற்றி தெரியலை.

உருப்படியான விஷயங்களை(யும்) படிக்க நிறைய பேர் இருக்கிறாங்கன்னு புரியுது. மற்றபடி பிளாக்கரா என்னை பற்றி சொல்ல ஒண்ணுமே இல்லை (பார்க்க : கேள்வி எண் ஆறுக்கான பதில்).

22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?

நம்ம தலை, அப்புறம் எண்.கணேசன் எழுதும் தன்னம்பிக்கை சம்மந்தப்பட்ட பிளாக், ஒரு சில நகைச்சுவை பிளாக்குகள்

23. ஜோதிடம் மற்றும் அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?

ஜோதிடம் பற்றி அதிகம் தெரியாது, அனால் அனுபவ ஜோதிடத்தில் வரும் விஷயங்களை நான் சம்மந்த பட்டதோட தொடர்பு படுத்தி பார்க்கும் போது “அட இது சரியா இருக்குதே”ன்னு ஒரு புரிதல் கிடைக்கிறது. அதனால் ஜோதிடத்தில் ஆர்வம் கூடுகிறது.

24. இந்த கேள்விகளுக்கு பதில் தரும்போது ங்கொய்யால பொஞ்சாதி கூட இத்தீனி கேள்வி கேட்டதில்லைனு நொந்துக்கினிங்களா? நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சிங்களா?

கேட்க ஆள் இருக்கிறது என்று ஒருவித சந்தோசம். யாராவது கேட்டால் தானே நம் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும்.

25.இதுல நான் கேட்க மறந்த – நீங்க ரெம்ப நாளா பகிர்ந்துக்க நினைச்சு பகிர முடியாத விசயம் எதுனா இருந்தா சொல்லுங்க.
முன்பெல்லாம் சினிமா விமர்சனம் பத்திரிகைகளில் படிப்போம், இப்போ பிளாக்கர்கள் ரொம்ப பிரிச்சி மேயறாங்க. தொழில் நுட்பம் பற்றி எல்லாம் பேசறாங்க, கேமரா ஆங்கிள் சரி இல்லைன்னு சொல்லுவாங்க, இசை தரம் குறைந்து விட்டதுன்னு சொல்லுவாங்க, இதெல்லாம் கொஞ்சம் “too much “-ஆ படலியான்னு கேட்க தோணும். ஹும்ம்ம் யாரை கேட்கிறது? ஒரு படத்தை விமர்சிக்கும் நபர், அதிலுள்ள அனைத்து தொழில் நுட்ப விஷயங்களையும் அலசுவார்… அவ்வளவு விஷயமும் அவருக்கு தெரிந்த மாதிரி பேசுவார்… அனைத்து விஷயங்களையும் ஒரு மனிதன் தெரிஞ்சி வச்சிக்க நடைமுறையில் சாத்தியமில்லை என்பது எழுதறவங்களுக்கு என்னிக்கித்தான் புரியுமோ…

Advertisements

6 thoughts on “தில்லு துரை பதில்கள் : திரு.கே.எஸ்

  வாழ்த்துக்கள் கல்யாண சுந்தரம் சார்,

  உங்க பிளாக் போய் பார்த்தேன் – பங்கு சந்தைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை..

  எனிவே நல்லா எழுதறீங்க… வாழ்த்துக்கள்

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

   kalyan said:
   July 6, 2011 at 5:58 am

   நன்றி திரு.ஜானகிராமன் அவர்களே.

  தனி காட்டு ராஜா said:
  July 6, 2011 at 5:09 am

  //கேமரா ஆங்கிள் சரி இல்லைன்னு சொல்லுவாங்க, இசை தரம் குறைந்து விட்டதுன்னு சொல்லுவாங்க, இதெல்லாம் கொஞ்சம் “too much “-ஆ படலியான்னு கேட்க தோணும். ஹும்ம்ம் யாரை கேட்கிறது? ஒரு படத்தை விமர்சிக்கும் நபர், அதிலுள்ள அனைத்து தொழில் நுட்ப விஷயங்களையும் அலசுவார்… அவ்வளவு விஷயமும் அவருக்கு தெரிந்த மாதிரி பேசுவார்… அனைத்து விஷயங்களையும் ஒரு மனிதன் தெரிஞ்சி வச்சிக்க நடைமுறையில் சாத்தியமில்லை என்பது எழுதறவங்களுக்கு என்னிக்கித்தான் புரியுமோ…//

  🙂 🙂

   kalyan said:
   July 6, 2011 at 5:59 am

   நன்றி திரு.தனிக்காட்டுராஜா அவர்களே.

  Sankar G said:
  July 7, 2011 at 6:05 am

  அருமையான பதில்கள்… தங்கள் வலைத்தளம் பார்த்தேன் அருமையாக உள்ளது…

  வாழ்த்துக்கள்..

  http://anubhudhi.blogspot.com/

   kalyan said:
   July 7, 2011 at 8:53 pm

   நன்றி சங்கர் அவர்களே. உங்க ப்ளாக் நிதானமா உக்காந்து படிக்க வேண்டிய ப்ளாக். படிச்சிட்டு அப்புறமா உங்களோட பேசறேன்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s