ஒரு கடிதம் பதிவாகிறது : இஸ்மாயில்

Posted on

அண்ணே வணக்கம்ணே,
நமக்கு வர்ர மெயில் எல்லாம் ரெம்ப கான்ஃபிடன்ஷியல். ஆனால் இந்த மெயில் வேறு சாதி. நீளம் கருதி கமெண்டுக்கு பதில் மெயிலா வந்த மெயில். அதனால இதை பதிவா வெளியிடுகிறேன். சபை இது குறித்து தன் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இனி ஓவர் டு இஸ்மாயில்..

அய்யா வணக்கம்,
ஆண் பெண் வித்தியாசம் என்ற பதிவில் நான் எழுதிய கமெண்டுக்கு தொடர்ச்சி இது. கொஞ்சம் பெரிதாக இருந்ததால் மெயிலில் அனுப்பிவிட்டேன்.

எனக்கு ஜோதிட அறிவெல்லாம் ரொம்ப குறைவு. நான் ஒவ்வொரு கிரகத்தையும் அதன் அமைவிடம், பார்வை,
உட்கார்ந்திருக்கும் இடத்தின் அதிபதி, அது அமர்ந்த இடம், கிரகத்தின் இயல்பு, சேர்க்கை, கோச்சாரம், தசபுத்தியில் பலன்
இதெல்லாம் போட்டு ரொம்ப குழம்பிக்குவேன் முன்னெல்லாம். இப்போ ஒரு கிரகம் என்றால் இப்படித்தான் என்ற காரஹத்துவம் தெரிந்ததில் ஓரளவிற்கு தெளிய ஆரம்பித்து விட்டேன். இப்போ நீங்க சொன்ன படி வாழ்கையின் ஒவ்வொரு பிரிவுக்கும், பிரச்சினைக்கும் என்ன கிரகம் காரணம் என்று புரிய ஆரம்பித்து விட்டதால் எந்த கிரகத்தின் தாக்கம் எந்த அளவில் உள்ளது என்கிற அளவிற்கு புரிய ஆரம்பித்து விட்டது.

எனக்கு என்னவோ தற்போது உலகில் நடக்கும் விசயங்களை பார்க்கும் பொது மனிதன் ஒவ்வொரு விசயத்தையும் பகுத்தறிந்து பார்க்க ஆரம்பித்து விட்ட மாதிரி தெரிகிறது. சாமியார்கள், அரசியல்வாதிகள் மாட்டுவது, தொடரும் மக்கள் புரட்சி இவைகள் இதனை நிரூபிக்கிறது. முன்னெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே ஜோதிடம் சொல்லும். இப்போது அவர்களை விட மிக நன்றாக சொல்ல பலர் வந்துவிட்டனர்.

இவன் அதற்க்கு சரிப்பட மாட்டன் என்று யாரையும் எதற்கும் தள்ளி விட முடியாத அளவிற்கு எல்லோரும்
எல்லாமும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். நிறைய விஷயம் இப்போது வெப் உலகிலும் கிடைத்து விடுகிறது. ஏதேதோ விசயமெல்லாம் எளிமையாக கிடைக்கும் போது ஜோதிடம் அதுவும் மனிதன் தன்னை சுற்றி நடக்கும் விஷத்தை பற்றி அறியும் அறிவை சிக்கலான கணக்குகள், கணிதங்கள் மூலம் மனிதனை அதனிடமிருந்து தள்ளி வைப்பது நல்லதல்ல.

கிரகங்களை பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டால் ஒருவரும் ஜோதிடரை தேடி போகவே மாட்டார்கள். வேதாத்ரி மகரிஷி அவர்கள் நவகிரக யாகத்திற்கு பதிலாக பஞ்சபூத நவக்கிரக தவம் என்று ஒன்றினை அவரின் மனவளக்கலை சீடர்களுக்கு போதித்துள்ளார். அதன் உள்ளார்ந்த அர்த்தம் எத்தனை பேருக்கு புரிந்ததோ தெரியவில்லை. தாங்கள் கிரகங்களின் காரகதுவங்களை விளக்கியபின் அந்த தவம் செய்யும் போதும் எண்ணமும் ஆத்மார்த்தமாக நவகிரகங்களுடன் ஒன்ற முடிகிறது.

ஒட்டு மொத்தமாக ஜாதகத்தை வைத்து குழம்புவதை விட தனிப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் கிரகங்களை அணுகுவது மிகவும் நல்லது என்று எண்ணுகிறேன். இப்படி அக்கு வேறு ஆணி வேராக பிரித்து அணுகுவதை கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங்கில் “modular ” அப்ப்ரோச் என்பார்கள். இதுவே ராணுவத்தில் Stratified எவ்வளவு பெரிய இராணுவமாக இருந்தாலும் வீரர்களை சிறு சிறு குழுக்களாகவே(STRATA எனப்படும்) வைத்திருப்பார்கள்.(சுமார் 20 பேர் மட்டுமே). இதன் தத்துவம் அந்த குழு மெம்பர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டு ஒரு குடும்பமாக மாறிவிடுவார்கள். போரில் அவர்களில் ஒருவன் தாக்கப்பட்ட அவரின் குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆவேசப்பட்டு எதிரியை தாக்குவர்.

மனித வாழ்கையின் பல்வேறு பிரிவுகள் ஒவ்வொன்றிலும் (பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கிய நிகழ்வுகளை) ஆதிக்கம் செலுத்தும் கிரகத்தை மனிதன் தனக்கு சாதகமாக மாற்றும் சாதக கணிதம் (ஜாதக கணிதம் அல்ல) குறித்த விரிவான அலசல், விவாதம் தொடங்கி வைக்கலாம். அதாவது symptom based அனலிசிஸ். ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூல கிரகம் எது, அதனை எப்படி வெற்றி கொள்வது என்று அலசலாம். சாதரணமாக வெளியில் செல்லும் போது சகுனம் பார்ப்பது போல எந்த வேலைக்கும் அந்த நேரத்தில் காரக கிரகத்தை புரிந்து எடுக்கும் வேலையில் வெற்றி கொள்வது எப்படி என்று விரிவாக அலசலாம். இதனை முழுமையாக புரிந்துகொண்டுவிட்டாலே கோள்களை கொண்டு கோலி ஆட ஆரம்பித்து விடுவான் புத்திசாலி.

எனக்கென்னவோ இதனை தாங்கள் ஒரு ப்ராஜெக்ட் ஆக எடுத்து முழுமையாக புத்தகமாக போட்டால் நல்லது என்று எண்ணுகிறேன். யோசிக்கவும்.

Advertisements

8 thoughts on “ஒரு கடிதம் பதிவாகிறது : இஸ்மாயில்

  வணக்கம் தலை,

  எனக்கும் கூட இஸ்மாயில் சொன்னதுலே ஒரு விசயம் ரொம்ப பிடிச்சி
  போச்சி..

  அது புத்தகம் வெளியிடுவது..
  அப்பத்தான் நீங்க எழுதினது ஒழுங்கா + தொடர்ச்சியா இருக்கும்.
  எங்களை மாதிரி கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்கும் புரியும்..

  புத்தகம் வெளியிடறீகளா ?

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

   S Murugesan said:
   July 6, 2011 at 5:54 am

   ஜா.ரா !
   தெலுங்குல வெளியிடற மாதிரி இருந்தா ஸ்பான்சரர்ஸ் பாக்கெட்லயே இருக்காய்ங்க. இலவசமாவே கூட வினியோகிக்கலாம். (போஸ்டேஜுக்கு வரைக்கும் காசு வாங்கிக்கிட்டு)
   தமிழ்லன்னா ரோசிக்கனும்?

  ISMAIL said:
  July 6, 2011 at 6:17 am

  புத்தகம் பற்றி நான் சொன்னது “LINDAGOODMAN ” 12 ராசிகரர்களின் இயல்புபற்றி விலாவரியாக
  ஆராய்ந்து எழுதின மாதிரி. உங்க புத்தகத்தை படித்தால் சாமானியனும் கிரகம் பற்றி புரிந்து கொள்ள வேணும்.
  வரலாறு முக்கியம் அமைச்சரே சாரி அய்யா.

   S Murugesan said:
   July 6, 2011 at 7:50 am

   இஸ்மாயில்!
   வரலாறு? யு மீன் புராண புருடாக்கள்? அதெல்லாம் உருவகக்கதைகள். அவற்றின் சாரத்தை/நோக்கத்தை/உள்ளர்த்தத்தை தவிர்க்க முடியாது என்றாலும் அதற்கு ஒரு பாராவுக்கு மேல முக்கியத்துவம் தரக்கூடாதுங்கறது என் கருத்து.

    Thirumalaisamy said:
    July 6, 2011 at 9:58 am

    அண்ணே ! ! தமிழ் ல வெளியிட யோசிக்க வேடியதில்லை என்பது என் கருத்து . நாங்க 1000 பேர் இருக்கோம் ல ( தங்கள் தளத்தை அனுதினமும் கிரி வலம் வருவோர் ) . சும்மா ஒரு சின்ன calculation பண்ணி சொல்லுங்க!!!
    இயன்றதை செய்வோம் !!!

    S Murugesan said:
    July 6, 2011 at 11:26 am

    திருமலைசாமி!
    பார்ப்போம். மொதல்ல நேரம் -அப்பாறம் கொட்டேஷன் -அடிமாட்டுவிலைக்கு செய்ய வேலூர்ல ஒரு “உத்தமர்” இருக்காரு – அப்பாறம் விலை நிர்ணயம்.

    அச்சடிச்சு வச்சுக்கிட்டு தேவுடு காக்கறது நம்ம ஜாதகத்துல கடியாது.அட்வான்ஸ் புக்கிங்குதேன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்வோம்ல..

    தங்கள் ஆர்வத்துக்கு நன்றி

   ISMAIL said:
   July 6, 2011 at 2:14 pm

   வரலாறு என்று நான் சொல்ல வந்தது impression . கதையல்ல.
   புத்தகத்தில் ஏற்றி வெளியிட்டு விட்டால், பின்னர் உங்களின் கான்செப்ட் விசயத்திற்கு யாருமே உரிமை கொண்டாட முடியாது.

    S Murugesan said:
    July 6, 2011 at 3:19 pm

    இஸ்மாயில் அவர்களே,
    மிக்க நன்றி. நிச்சயம் செய்துருவம். அல்லாத்துக்கும் மேலே ஆத்தா இருக்கு. கடைக்கண்ணால அவ பார்த்தா போறாதா ஏற்கெனவே M/S ஹ்ரீங்கார் பப்ளிகேஷன்ஸ் என்ற பேர்ல பதிவு பண்ணி வச்சிருக்கேன். (“ஹரீம்” புவனேஸ்வரி பீஜம்)

    பார்ப்போம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s