இல்லறம் ஒவ்வொரு நாளும் ரணம்?

Posted on

இல்லறம்

இது ஒரு ஆய்வாக தர விரும்புகிறேன். ஆனால் சில அழுத்தமான செய்திகள் கொண்ட பதிவுகள் தர யோசிக்கவேண்டியுள்ளது. என்னுடைய எல்லா பதிவுகளிலும், உள்ளர்த்தமாக சில செய்திகள் பொதிந்திருக்கும். என்னிடம் உள்ள குறை அதுதான்.(!?)

ஒருமுறை படிக்கும் பொழுது ஒரு மாதிரியும், இன்னொரு முறை படிக்கும் பொழுது வேறு மாதிரியும் புரியக்கூடும். எழுதிய எனக்கே அப்படி தோன்றும் என்பது உண்மை… எத்தனை நபர்கள் இதை அறிந்துகொண்டார்களோ தெரியவில்லை.

 

ஆனால் சித்தர்கள் போல பரிபாசையில் எல்லாம் நான் எதையும் சொல்லவதில்லை. ஆகவே என்ன சொல்லவருகிறீர்கள் ஜீ என்ற குழப்பம் வேண்டாம். இந்த கருத்துக்களில் யாரும் உடன்பாடு கொண்டாக வேண்டும் என்பதில்லை. நான் அறியாததும் நிறைய இருக்கிறது இந்த உலகில். என் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை படிக்கும் பொழுது பயமாக இருக்கிறது… நான் சொல்ல வந்தது வேறு, பின்னூட்டம் குறிப்பது வேறு… ஒரு சிலரைத்தவிர. Sugumarje_Caricaturist

சித்தூர் முருகேசன் பதிவுகள் ஒரு சிதறு தேங்காய் போல… படாரென எல்லாவற்றையும் விரித்துக்காட்டும் தன்மை கொண்டது. அதே போலவே எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே முடிக்கும் தன்மை கொண்டவர். நானோ ஷாட் கட், ஷாட் கட் செய்து செய்தியை சொல்லுபவன். ஒரு சினிமாவாக எடுத்துக்கொண்டால், எங்கே இருந்து பார்த்தாலும் சித்தூர் முருகேசன் பதிவுகளில் சொல்லவருவதை புரிந்துகொள்ளலாம். சுகுமார்ஜியான, என் பதிவுகளை ஆரம்பம் முதலே படித்தாகவேண்டும். இந்த நடை எனக்கு பழகிவிட்டதால் அதையே தொடர்கிறேன்.

இது குறித்து பின்னூட்டமிட்டால் எனக்கு உபயோகமாக இருக்கும்.

இனி இல்லறம்.

சேவைக்காக asknrelief.blogspot.com என்கிறதளம் ஆரம்பித்து எனக்கு வந்த பெரும்பான்மையான மின்னஞ்சல்கள் தங்கள் குடும்ப விவகாரங்களுக்காகவே வந்திருக்கின்றன. எல்லாமே ஆண்கள்…பெயரில் மட்டுமா என்றும் தெரியவில்லை… அது எனக்கு தேவை இல்லை. கேள்வியும், அதற்கான பதில் மட்டுமே போதும். மறு பதில் தந்துகொண்டிருக்கிறேன் அதே மின்னஞ்சல் வழியாக.

இந்த உலகத்தின் மொத்த இயக்கத்தின் சுழி… உயிர்பித்தல்… அந்த உயிர்பித்தலில் இந்த உலகம் நிலைத்திருத்தல் என்பது ஒரு தொடர்கதை… இதற்கு இந்த இயற்கை எடுத்துக்கொண்ட ஒரு பாதை… ஆண் பெண்ணுக்கான உடலுறவு… இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.

இதற்கு இந்த சமூகம் ஏற்படுத்திகொண்ட ஒரு ஒழுங்கு நடவடிக்கை “திருமணம்”. காதல் என்பதில் கருத்துமாறுதல் எனக்கு இருந்ததில்லை… காதல் என்பதில் உள்முகமாக அதிரடியான காமம் இருப்பதை என்னால் மறுக்க இயலாது.

காதல், காதலித்து திருமணம் செய்யப்பட்டவ்ர்களாலேயே மறுக்கப்படுவதற்கு காரணம்… அந்த காமம் தீர்ந்த பின்னரும், இந்த காதல் தொடருமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கூட இருக்கலாம். ஆனால் காதல் ஜோடிகளை தண்டித்தல் என்பது கொடுமையானது. பெண்ணின் தந்தையே ஆள் வைத்து காதலனை கொன்ற நிகழ்வை சென்ற வாரங்களில் அறிந்து நான் வருந்தினேன். ஒரு காதல் ஜோடிகளுக்கு தனிப்பட்ட தண்டனை தேவையில்லை என்பதே என் கருத்து. காதல் பற்றி விசாரித்து, அவர்களின் காதல் தன்மை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தலே மிகச்சரியான தண்டனை என்றே நான் கருதுகிறேன். காதல் மறுக்கப்படுவதில் இன்னுமொரு காரணம், அடுத்தவ்ர்களின் சந்தோஷத்தை கெடுக்கும் மனப்பான்மை, அது பெற்ரோராக இருந்தாலும் கூட. வாழ்வுக்கான செக்யூரிட்டி இல்லை என்று பெற்றவர்கள் காரணம் சொல்வது… மேலோட்டமானது.

காதலர்களுக்கு, திருமணம் என்பது தண்டனையா? பட்டிமன்றமே நடத்தலாம்…

இந்த காமம், காதல், திருமணம் குறித்து சித்தூர் முருகேசன் தன் பதிவுகளில் சொல்லாத நாளில்லை. அவர் பதிவுகளின் சாரமே அதுதான்…

ஆக. ஒரு திருமணம், ஒரே நிலையான வேகத்தில், அல்லது வளர்ச்சில் செல்ல காமம் எனப்து உள்முகமாக இருக்கிறது… அந்த காமம் நாளடைவில் அன்பாக மாறவேண்டியது அவசியம்… அது பலர் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுதெல்லாம் நிறையபேருக்கு காமம் என்பதின் அர்த்தம் விளங்கிய அளவுக்கு, அன்பு என்பதின் அர்த்தம் விளங்கியபாடில்லை. அதை விளங்கிக்கொள்ளவும் நேரமிருப்பதில்லை. காமத்தையே அன்பாக புரிந்து கொள்கின்றனர். தன் தொடைமேல் ஏறும் கைகள் எப்படி அன்புக்கானதாக இருக்கும் என்று ஒரு பெண் பிள்ளைக்கு புரிய வைக்க ஏதுமில்லை. சொல்லவும் யாருமில்லை. வயதானவர்களோ… அன்பு என்பதை கடமை என்றும், திருப்பி செலுத்தக்கூடியதாகவும் நினைத்துகொள்கின்றனர். அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது.

இந்த இளைஞர்கள் உலகில் அவர்களுக்கு… எல்லா அறிவுரைகளும், பிறர் மனதை கெடுக்கும்  அடுத்தவர்களாலேயே கிடைக்கின்றன. அந்த மூளைச்சலவையை யாரும் தவிர்ப்பது இல்லை.

இந்த உலகில் நாம் பார்க்கும், பகிரும் எல்லாமே ஒரு விதைக்குள் அடங்கிய காமத்தைத்தான் போதிக்கின்றன. நாம் நமக்குள் உட்செலுத்திய பின் காமம் விகாரமாக வளர்ந்து, எண்ணம், சொல், நடவடிக்கை எல்லாவற்றிலும் காமமே பிரதானமாக இருக்கிறது. நான் அவளின் அன்புக்காகவே காதலித்தேன் என்று யார் சொல்லுவார்… ஆனால் காமத்திற்காக காதலித்தேன் என்று எவரும் சொல்லமாட்டார்.

இந்த காதலும், திருமணத்திற்கு சிறிது நாள் கழித்து கிழிந்து விடுகிறது. பெற்றோர் பார்த்து, பார்த்து செய்து வைத்த திருமணமும் சிறிது நாளில் கிழிந்து விடுகிறது. நிறைய கிழிசல் நமக்கு தெரியாமலிருக்கிறது. அல்லது தெரியாமல் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

இந்த கிழிசலுக்கு காரணம்… அன்பு… அந்த அன்பு இல்லாதிருத்தலே…

சரி அன்பு என்பது யாது?

ஒரு முறை பாலகுமாரனிடம் “ நீங்கள் பிரபலமாக இருந்தால், எழுதும் எல்லாவற்றையும் படித்துவிடுவோம் என்ற நம்பிக்கையா?” என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர்… “வளர்ந்த நீ எனக்கு தேவையில்லை… வரக்கூடிய சமூகத்திற்கு தரவேண்டிய செய்தியும், கடமையும் எனக்கு இருக்கிறது” என்றார்.

அதுபோலவே நானும் இப்பொழுது இறங்கி இருக்கிறேன்.

இந்த அனுபவஜோதிடம்  வலைமனையில் எல்லாவற்றையும் இந்த சமூகத்தில் இருக்கிற நான்கு பிரிவு மக்களில் மூன்று பிரிவினர் படிக்கின்றனர்…

அந்த நான்காவது சமூகம் இன்னும் வாழ்வுக்காகவே போராடிக்கொண்டிருப்பதால் இருப்பதால் அவர்களை விட்டுவிடலாம்.

அநேகமாக மற்ற எல்லா சமூகமும் குழப்பத்தில் இருப்பதாகவே இருக்கிறது.

ரொம்பவும் யோசிக்க வேண்டாம்…  அன்பு என்பதை இல்லறத்திற்கான அடுத்த பதிவில் காண்போம்.

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

————–

Advertisements

4 thoughts on “இல்லறம் ஒவ்வொரு நாளும் ரணம்?

  oose said:
  July 2, 2011 at 8:28 am

  doordharshan-la try pannunga. ithayallam solla chance kidaikkum.

  yoghi said:
  July 2, 2011 at 10:48 am

  ஒரு காதல் ஜோடிகளுக்கு தனிப்பட்ட தண்டனை தேவையில்லை என்பதே என் கருத்து. காதல் பற்றி விசாரித்து, அவர்களின் காதல் தன்மை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தலே மிகச்சரியான தண்டனை என்றே நான் கருதுகிறேன். /////

  சூப்பர்ஜீ
  நல்ல சிந்திக்கவேன்டிய மேட்டர்

  Kalyan said:
  July 2, 2011 at 3:08 pm

  DEAR SIR,
  SUYA INBAM KURITHTHA UNGAL KARUTHTHU ENNA?

  தனி காட்டு ராஜா said:
  July 4, 2011 at 6:41 am

  //ஒரு காதல் ஜோடிகளுக்கு தனிப்பட்ட தண்டனை தேவையில்லை என்பதே என் கருத்து. காதல் பற்றி விசாரித்து, அவர்களின் காதல் தன்மை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தலே மிகச்சரியான தண்டனை என்றே நான் கருதுகிறேன்.//

  I have also same opinion too 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s