ஆத்தா இல்லாத ஆலயம்

Posted on

கடந்த ஞாயிறு அன்று சமயபுரம் சென்றிருந்தோம். தோம் என்றால் நானும் என் மனைவியும். ஒரு 10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் அடிக்கடி செல்வதில்லை.

பொதுவாக நான் கோவில் செல்வதே இறைவனை, இறைவியை நலம் விசாரிப்பது போலத்தான். நீ நல்லா இருக்கியா? நானும் நல்லா இருக்கேன் என்பதாகத்தான் இருக்கும்.
இப்படியான அணுகுமுறை வருவதற்கு காரணம்… என் இருபது வயதில் நான் எடுத்துக்கொண்ட குண்டலினி தியானம் தான். வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தில், அருள்நிதியான பிறகு ஒரு மூன்று வருடம் துரிய நிலை வரையிலான  பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறேன்… பணிச்சுமை காரணமாக என் தியான பயிற்றுவிப்பு இப்பொழுது இல்லை.

வேதாத்திரி மகரிஷியுடன்... அவரின் ஓவியத்திற்கு அவரின் கையெழுத்து...

இதோடு என் இருபத்தொன்று வயதில் ஓஷோ ரஜனீஷ் அவர்களின் “தர்ம தீர்த்தா சன்யாஸ் ஆஸ்ரமத்திலும்” என் பயிற்சியை பெற்றிருக்கிறேன்.

இப்படியான விசயங்களுக்கு என் இல்லத்தில் எனக்கு முழு சுதந்திரம் இருந்தது.  அந்த சுதந்திரம் குறித்து இப்பொழுது எண்ணிப்பார்க்கையில்… அது ஒரு அதிசய நிகழ்வாக இருக்கிறது…

வேதாத்திரி மகரிஷி நம் முழு வாழ்வின் அர்த்தங்களுக்கு வழிகாட்டி.  ஓஷோவோ வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கைக்கு வழிகாட்டி.

சரி இப்பொழுது ஆத்தா…

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து ரூபாய் கட்டணம். எல்லா அரசு, தனியார் பேருந்துகளிலும் செல்லலாம். தனியார் பேருந்துகளில் செல்லும் பொழுது காதில் பஞ்சு வைத்துக்கொள்வது நலம். இல்லையென்றால் பாடல்களாலேயே உங்கள் காதுகள் கிழிக்கப்படும்.
அதே போல சமயபுரம் வந்திருந்தோம். வழக்கமான கூட்டத்தைவிட விடுமுறை நாளென்பதால் இன்னமும் கூட்டம் அதிகம். கச்சாமுச்சாவென்று மனிதர்கள்!? வழிமறிக்கும் “செருப்பு இங்கே போடுங்க சார், அம்மா… இலவசம் தான் அதுக்கு பதிலா இந்த உப்பை வாங்கிக்கங்க… ஒரு வறுகடலை பேப்பர் கப் ஐந்து ரூபாய்… “பொழைச்சுப் போங்கடா”

வாசல் வழியே உள்ளே சென்றால்… கிழவி முதல் குமரி வரை “காணிக்கை போடுங்க சார், அம்மா,” என்றபடி சில்வர் தகடுகளில் பொறித்த மனித உருவங்கள் காட்டி… ஒன்று பத்து ரூபாயாம்…  இவர்களே… பணம் பொறித்த உருவங்களை காணிக்கையாக போட்டால், பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் தானே… இது கூட தெரியாமலிருக்கிறார்கள்… நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்கப்பா…

வழிமறித்த எல்லோருக்குமான என் பதில் “வேண்டாம்மா” ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு யாருமே இல்லாத ஒரு நாளில் ஆத்தாவை, சமயபுரம் மாரியம்மனை நலம் விசாரித்தது ஞாபகம் வந்தது. இத்தனை ஜனத்திரளை பார்க்கும் பொழுது… இரவு நேரங்களில் எவனுமே சும்மா இருக்க மாட்டானுக போல!? என்று யோசனை வந்தது… என்ன செய்வது… கடவுள் கொடுப்பதை மனிதன் மறுக்கவா முடியும்?

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த மலைக்கோட்டை அப்படியேதான் இருக்கிறது… அதை சுற்றுயுள்ள இடமும் அப்படியேதான் இருக்கிறது…ஆனால் இப்பொழுது…

அந்த ஞாயிறு அன்றும் ஒரு அலுவல் இருந்த காரணத்தால் சீக்கிரம் தரிசனம் காணலாம் என்றெண்ணி 25 ரூபாய் நுழைவு ரசீது பெற்றேன். கூடுதலாக 3 ரூபாய்க்கான அர்ச்சனை சீட்டு. ஆக 66 ரூபாய்… உப்பு விட்டுட்டீங்களே 🙂

“வாங்க வாங்க… ” என்று வரவேற்று “அப்படியே இந்த வரிசைல நில்லுங்க…”

பார்த்தால் நீண்ண்ண்ட வரிசை.ஒரு 4 U வை மேலும் கீழும் இணைத்தது போல மக்கள் வரிசை… எல்லாருமே சொந்தக்கதை சோகக்கதை பேசிக்கொண்டு,

இந்த “இது” எங்கே வாங்கினே? நல்லாயிருகே”

“பேஆ… பேஆ” வேறொன்னுமில்லை… குழந்தைக்கு விளையாட்டு காட்டுகிறார்கள்.

“அதுவா, அதை அப்படியே வச்சுடுப்பா… அதான் நான் நேத்தே சொன்னேன்ல, சும்மா சும்மா போன் பண்ணாத”

“சரி, அப்புறம். திருவானைகோவிலா… நேரம் இப்பவே 10 ஆய்டுச்சி”

“என்னா… வரிசை நகரவே மாட்டேங்குது?”

“டேய். பேசாம இருக்கமாட்டியா… ஒரு போடு போட்டேன்…” அம்மா, மகனைப்பார்த்து

“இல்லடி…. எங்கம்மா எப்பவும் அப்படித்தான், சரி வுடு”

“அக்கா, இங்க பாரு.. எப்படி ஏறி நிக்கறேன் பாரு…”

“கசகசன்னு இருக்குப்பா. பேனை போட்டவன்க… இங்கேயும் போட்டானுவல்லா”

“என்னமோப்பா… வேண்டுதலை நிறைவேத்தமுல்ல”

இன்னும் எழுதுக்கொண்டே இருக்கலாம்… இது போக ஒருத்தரை ஒருத்தர் பார்த்து வெட்கமடைகிறார்கள் நமக்கு இடது பக்கம் நின்றவர்கள், வலது பக்கம் வந்து நிறகும் பொழுது ஒரு லுக்… மறுபடி வரிசை மாறும் பொழுதும் ஒரு லுக்… ஆக இந்த வரிசைக்குள்ளாகவே காதல் கவிதை கூட எழுதிவிடலாம்… (ஜீ… கோவிலுக்கு வந்துட்டு… என்ன பேசுறீங்க நீங்க…? இது நீங்கள்… ஏம்ப்பா, இந்த இடம் புனிதமானது இல்லையா… இல்லை காதல் புனிதமானது இல்லையா? இது நான்… அப்போ வரேன் ஜீ… இது நீங்கள் )

ஒருவழியாக வெளிச்சுற்று முடித்தால், ஆத்தாளுக்கு தேங்காய் வெளி வாசலிலேயே உடைப்பு. அதற்கு இரண்டு ரூபாய். இங்கே உடைத்தால் அங்கே போய்டுமா?

உள்பிரகாரத்திலும் மூன்று வரிசை… மூட்டுவலியோடு ஒருத்தர் வந்தால் அவ்வளவுதான். ஆத்தாளை பார்க்கிறாரோ இல்லையோ, கட்டாயமாக மருத்துவரை பார்ப்பார். (என்னது ராமதாசா… அட ஏம்பா…) கை குழந்தையோடு வந்த தம்பதிகள் அதிகம்… ஒருவர் தானியம் கொண்டு வந்திருந்தார்… ஒருவர் ஆளுயுர மாலையும், பச்சை பட்டுச்சேலையும் தட்டில் வைத்து பரவசபட்டபடியே வந்தார்… ஆத்தா என்னென்ன வேலையெல்லாம் பார்க்கிறாள் பாருங்கள். எல்லாவற்றிற்கும் அவளுக்கு பரிசு கிடைக்கிறது. வெளியே கஞ்சிக்கு செத்தவனுக்கு 50 காசுகூட இல்லை… அவன் மட்டுமென்ன… ஆத்தா பிள்ளையில்லையா? அவனுக்கு பகிர்ந்தளிப்பது ஆத்தாளுக்கு போய்ச்சேராதோ…

நான் பிச்சைகாரர்களை ஊக்குவிப்பதில்லை. அய்யா என்றாலும், அம்மா என்றாலும் நான் எதும் தருவதில்லை. சாப்பாடு வாங்கிதரேன் சாப்டுகிறாயா? என்றால் வேணாங்க என்பார்கள். வேறென்ன வேண்டும்… காசுதான்?!  நான் நகர்ந்து விடுவேன்.

யோசித்துபாருங்கள்… நீங்களும் நானும்… வேணாமா… சரி நான் மட்டும், எல்லாம் இழந்து நின்றால் பிச்சை எடுக்க யோசிப்பேன். அப்படி ஒரு நிலையில் பிச்சை கேட்கவே மாட்டேன். கிடைத்தால் சாப்பிடலாம் அவ்வளவே. எப்படியாகிலும், உழைத்து சாப்பிடும் எண்ணமே அதிகம் இருக்கும். வாழ்ந்து கெட்டவன்தான் பிச்சைக்காரனாவான் என்று சொல்லுவதுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் பிச்சை ஒரு பிசினஸ்…

சரி. ஆலத்திற்குள் வாங்கப்பா… ஆத்தா முன்னால் ஒரு ஆறு ஏழு உண்டியல்கள்… எல்லாவற்றிலும் அன்புளிப்பு !? இன்னார், இன்னார் ( பின்னே சும்மாவா குடுப்பாய்ங்க…!?)

கர்ப்பகிரக வெளிவாசல் உள்ளே நுழைந்தால்…

“வேகமா போங்க… நகருங்க…”
“அட.. போங்கம்மா… ” இது ஒரு போலீசம்மா…
“பார்த்துட்டு போய்க்கிட்டே இருங்க”

பக்தர்கள் கொண்டு வந்த பட்டுப்புடவை, மாலை, இதர பூசைக்கான பொருட்கள் எல்லாமே வாங்கி, வாங்கி கர்ப்பகிர்கத்தின் வாசலில் வைத்து… கையாலேயே போங்க, போங்க…

நான்…“இந்தாங்க அர்ச்சனை சீட்டு…” கையிலிருந்து வாங்கி, பெருவிரல் நுழைத்து கிழித்து, ஏற்கனவே கிழிந்த ஒரு பாலிதீன் பையில் திணித்தார்… இப்ப பார்த்தா நான் தான் அர்ச்சனை செய்யனும் போல…

ஆத்தாளை பார்ப்பதற்குள்… தள்ளு தள்ளு… ஓ… ஒருவேளை தள்ளினால் நன்றாக பார்க்கவிடுவார்களோ?

அடப்பாவிகளா? யோசிப்பதற்குள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்…

என் மனைவியோ “ஏங்க நீங்க நல்லா பார்த்தீங்களா?”
மனசுக்குள் “யாரை?”
“நல்லாவே பார்க்கலைங்க… இவ்வளவு நேரம் வரிசைல நின்னு… கொஞ்சநேரம் பார்க்கவிட மாட்டேங்கிறாங்களே… இதுக்காக இன்னொரு தடவையா வர முடியும்?… ம்ம் அடுத்தமுறையாவது நல்லா பார்க்கணும்…” புலம்பியபடியே வந்தாள்.

இது தான் மக்களின் பலவீனம்…

இந்த ஆலயத்தில்  இருக்கிற அலுவலர்கள், காவலர்கள். அர்ச்சகர்கள் எல்லோருமே ஒரு இயந்திரத்தனமான இயக்கத்தில் இருக்கிறார்கள். எல்லாம் வருமானம் தரும் எதோ ஒரு புதுமையான தொழிற்சாலை போல இருக்கிறது. எல்லாவகையிலும் தானாகவே காசு கொட்டுவதால் அங்கே உழைப்பு என்பது யாருக்குமில்லை. போதாத குறைக்கு எல்லாவற்றிற்கும் கட்டணம். சிலருக்கு ஆத்தா சீக்கிரம் கண் திறக்கிறாள்… ஏதாவது அலுவலர்கள் கையில் தந்த பிறகு… இல்லையென்றால் “புரவலர்” ஆகிவிடவேண்டும். ஒரு 20 வருடத்திற்கு தமிழ்நாட்டின் எந்த கோவிலுக்கும் 5 நபர்கள் கொண்ட குழுவாக சும்மா… தரிசிக்க முடியும்.

ஏன் ஆத்தா உட்பட எல்லா இறைவனும் இப்படி மாறிப்போனார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

வரிசையில் வரும் மனிதரோ, பக்தி பரவசத்தோடு இருக்கிறான். தன் உள்ளார்ந்த மனதின் வெளிப்பாடாகவே, இந்த ஆத்தாளை மட்டுமல்ல எல்லா ஆலயங்களில் இருக்கும் இறைவனையும் எண்ணுகிறான். அந்த பரவசத்தோடு, அந்த எண்ணத்தை, சிறு வயதிலிருந்தே நம்பிவந்த இந்த ஆத்தாளை பார்த்து, இந்த நாள், இந்த ஞாபகம், இந்த பயணம் ஒரு மாற்றத்தை தரும் என்று நம்புகிறான்.

இது எல்லா மனிதருக்கும் பொருந்தும். எல்லா இறைவனுக்கும் பொருந்தும்.

ஆம்… நம்பிக்கை… அது ஆத்தாளுக்கு அப்பாற்பட்டது.

எந்த கோவிலிலும் ஆத்தாவோ, அப்பனோ, மாமனோ இருப்பதில்லை.

அந்த மனிதனின் நம்பிக்கைதான் இருக்கிறது.

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

கணிணி தொழில் நுட்ப வடிவமைப்பு, ஓவியம், மென்பொருட்கள் பற்றிய என் தொழில்நுட்ப தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.

என் தளமுகவரி: www.sugumarje.com
என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

________

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

_________

 

Advertisements

10 thoughts on “ஆத்தா இல்லாத ஆலயம்

  Sankar G said:
  July 1, 2011 at 10:40 am

  கூட்டமாக இருக்கும் கோவில்களில் இது ஒரு பெரிய தொல்லை. கூட்டமில்லாத சில நாட்களை தேர்ந்தெடுத்து செல்வது புத்திசாலித்தனம்.

  ஆத்தா இல்லாத ஆலயத்துக்குள் ஒருவரும் செல்லமாட்டார்கள். இதுவும் ஆத்தாவின் திருவிளையாடல்தான்.

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  PERUMALSIVAN said:
  July 1, 2011 at 11:29 am

  //பொதுவாக நான் கோவில் செல்வதே இறைவனை, இறைவியை நலம் விசாரிப்பது போலத்தான். நீ நல்லா இருக்கியா? நானும் நல்லா இருக்கேன் என்பதாகத்தான் இருக்கும்.//
  naanum entha katchi thaanungo konja neram ninnu appanaiyo aaththaalaiyo paaththukine nalamvisaarichi appuram azhuthu ,thitti ,sirichi ,konji,phesi ,kathai solli ,paattu paadi,panna thappu ,seytha nallathu appadi eppadinu oru rendu maasa edaivelikkaana life statementai avanga kitta koduththuttu vanthuduven.ellaam manasuliye thanungo .
  apparum ethaiyum khetka koodathunum (vhenduthal) manasula nenaisukkittuthaan phoven .sila nheram khettu viduvathum undu. avanga munnaadi ennoda punch ; ENNE ENNAA PANNANUMNU UNGALUKKU THERIYUM .so UNGA VIRUPPAPPADI PANNUNGA !

  sumar-g -yin sani santhiran sherkkai eppadithaan enga erunthaalum ethaiyaavathu aazhamaa yhosichikitte erukkumaaaaaaaaaaaaaaaa!!!!!!!!!!

  ennai kooda eppadithaan paadu paduthuthu ADA UNMAIYATHAANGA SOLRAN.

  UNGALIN SINTHANAI PAARVAI NALLAA ERUKKU .

  தனி காட்டு ராஜா said:
  July 1, 2011 at 12:20 pm

  //என் இருபது வயதில் நான் எடுத்துக்கொண்ட குண்டலினி தியானம் தான். வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தில், அருள்நிதியான பிறகு ஒரு மூன்று வருடம் துரிய நிலை வரையிலான பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறேன்… பணிச்சுமை காரணமாக என் தியான பயிற்றுவிப்பு இப்பொழுது இல்லை.//

  ஜீ…எனக்கு சில சந்தேகங்கள்
  காலேஜ் படிக்கும் போது (ஏறக்குறைய அதே இருபது வயதில்) காய கல்ப பயிற்சி கற்றேன்…..
  பருவ கிளர்ச்சி காரணமாக அதை தொடர்ந்து அப்போது செய்ய வில்லை….( இப்போ நமிதா ரசிகனா ..அப்போ நக்மா ரசிகன் 🙂 )

  காய கல்ப பயிற்சி மூலம் இளமையாய் வாழலாம் என்று சொல்லுகிறார்கள்….
  ஆனால் வேதாத்திரி மகரிஷி தோற்றத்தை பார்க்கும் போது…இளமை ஏதும் தெரிய வில்லையே…..அவரும் சாதாரண முதியவர் போலவே தெரிகிறார்…

  நீங்கள் காய கல்ப பயிற்சியின் பலன் ,முறை ,அதே போல் குண்டலினி பயிற்சின் காரணமா தோன்றும் மெய் யுணர்வு போன்றவற்றை விளக்க முடியுமா …..பயிற்சி முறை தேவை இல்லை…..அதன் பின் உள்ள உண்மை ,உணர்வு போன்றவை…..

  அதன் காரணமாக தாங்கள் உணர்ந்த மெய் ஞானம் போன்றவற்றை……முக்கியமாக மரண நேரத்தில் எவ்வாறு பயன் படுகிறது….மரணத்தை வெல்ல முடியுமா ??

  பொது வாக ஒரு குரு வேதாத்திரி மகரிஷியை விட்டு மற்றொரு குரு ஓஷோவை நாட என்ன காரணம் ?

  இப்போது நடை முறை வாழ்வில் நீங்கள் கற்ற தியானம் எவ்வாறு உதவுகிறது?
  தொடர்ந்து நீங்கள் தியானம் செய்தால் மட்டும் அந்த energy உள்ளதா அல்லது இயல்பாகவே உங்களுக்கு அந்த energy நிலை உள்ளதா ? ( ரொம்ப ஓவரா கேள்வி கேக்குரனோ 🙂 )

   S Murugesan said:
   July 1, 2011 at 1:15 pm

   வினோத்ஜீ,
   சுட்டிகளை தரும்போது அவற்றை சுருக்கி தரலாமே ! http://www.tinyurl.com. இந்த வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமில்லை. அல்லாருக்கும்.

    Mani said:
    July 2, 2011 at 7:26 am

    அண்ணே என்னது நீங்க எழுதினது எல்லாம் இந்த வெப்சைட்டில் இருக்கு. இதுல admin யாருன்னு தெரியலையே. அல்லது உங்க வெப்சைட்டுகளில் ஒன்றா. நான் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை என்னமோ ஓரளவிற்கு தான் இருக்கும் என்று நினைத்தேன். இப்படி இந்த வெப்சைட்டில் உள்ள கில்மா விஷயங்களை டீப்பா பிரிச்சி மேஞ்சிருக்கரதை பார்த்தால் நிச்சயமாக ஒரு செக்ஸ்ஸாலாஜி டாக்டரால் கூட முடியாது போலருக்கே. அடேங்கப்பா. தலை நீங்க உண்மையிலேயே எல்லாத்திலேயும் பெரிய ஆளுதான் போலருக்கே.

    S Murugesan said:
    July 2, 2011 at 9:14 am

    Mani Anne,
    paaraattukku nandri. Amaam website url tharave illaiye

    S Murugesan said:
    July 2, 2011 at 8:09 pm

    நன்றி மணி !
    பதிவை சுட்டிருக்கிறீர்கள், கு.ப பதிவின் கடைசியில் நன்றி: சித்தூர்.எஸ்.முருகேசன் என்று போட்டு பெரியமனிதர் ஆகுங்கள் என்று கமெண்ட் போட்டிருக்கேன். பார்ப்போம்.

    என்ன? பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பாங்கறிங்களா? – இப்படி முன் -பின் அனுமதி இல்லாம சுட்டா என்ன ஆகும்னு அப்பாறம் சொல்றேன்.( ஜோதிட ரீதியாத்தான்)

  தனி காட்டு ராஜா said:
  July 1, 2011 at 12:31 pm

  ////http://illamai.blogspot.com/2011/07/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FoHNK+%28%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%29////

  நானும் கூட படிச்சேன்….அந்த பதிவை ஊக்குவிக்க கமெண்ட் கூட போட்டேன்…..ஆனா ஆபீஸ்ல படிச்சதால கடைசி points ஏதும் படிக்கல்ல….

  இப்போ ஒரு முறை முழுதும் படிச்சா தான் தெரியுது
  தல….. உங்க பதிவ காப்பி அடிச்சு இருக்கறாங்க போல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s