ஜூலை மாத ராசிபலன் -2

Posted on

இந்த பதிவிற்கு முந்தைய பதிவு வரை சுகுமார்ஜியாகிய நான்,  ராசி பலன் எழுதியதில்லை. சென்ற பதிவில் சொல்லப்பட்ட முதல் பின்னூட்டம்படி. எல்லோருமே இதை சொல்லுகிறார்களே… இங்கேயுமா என்று கேட்டிருந்தார் அன்பர். நானும் கொஞ்சம் பின்வாங்கினேன். ஆனால் சித்தூர் முருகேசன் உள்ளே புகுந்து நெறி படுத்திவிட்டார்.

இந்த சுகுமார்ஜி தரும் ராசிபலன் சூப்பர்… என்றெல்லாம் சொல்லுவதற்கில்லை. பலன்கள் எல்லாமே பத்தோடு பதினொன்று என வைத்துக்கொள்ளவே வேண்டும்.

இதை படித்து ஒரு சின்ன ஒத்துப்பார்த்தல் மிக அவசியம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இருக்கக்கூடாது. இந்த பலன்களை 100 சதம் நம்பவும் ஆளிருக்கும், 100 சதம் மறுக்கவும் ஆளிருக்கும். எனவே இந்த பலன்கள் பொதுவானவையே. தனிப்பட்ட ஜாதக ஆய்வுகளே மிகச்சரியாக அமையும்.

நான்… இந்த ஜோதிடத்தை நம்ப மறுப்பவர்களுக்காகவே, ராசிபலன் கூறுவதாக வைத்துக்கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரை அவர்களே முக்கியமானவர்கள். அப்படியான நல்ல உள்ளங்களால் தான் இந்த ஜோதிட அறிவு சரியான இடம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இதில் 1 சதவிகித பலன்கள் கூட சரியாக இல்லை என்று சொன்னால் அடுத்த முறை அதை சரிசெய்ய முயற்சிப்பேன். ஒரு இல்லத்தரசி தன் கணவனுக்கு சமைப்பாள் என்றால் மிக மிக சுவையாக சமைப்பாள். தன் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து சமைத்தால் சொல்லும்படிக்கு சமைப்பாள். ஒரு இல்லத்தின் 10 நபர்களுக்கு சமைத்தால் ஓரளவு சுவையாக சமைக்கமுடியும். 100 நபர்களுக்கு… கொஞ்சம் பதட்டமாகிவிடுவாள். 1000 நபர்களென்றால் யோசிப்பாள். பத்தாயிரம் அல்லது அதற்குமேலே என்றால், என்னமோ சமைக்கிறேன்… நல்லா இல்லையென்றால் குறை சொல்லாதீங்க என்று சொல்லிவிடுவாள்.

படிக்கிற எல்லாருக்குமே பொருத்தமான, சுவையான ராசிபலன் அத்தகையதுதான். மேலும் இதை படித்த சிலர் எனக்கு மிகச்சரியாக இருக்கிறது என்று சொன்னபொழுது, அப்படியானால் மற்ற ராசிக்கான பலன்களையும் எழுது முடித்துவிடலாம் என்று எண்ணியே மேலும் தொடர்கிறேன். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி, வணக்கங்கள்.

சிம்மராசிக்கான பலன்கள்
மனதிற்குள் திட்டமிட்டபடியே உறங்கசெல்வதால் காலையில் எழும்பொழுது கண் எரிச்சல், தலைவலி ஒரு வழி செய்யும். நிலம், மனை தொடர்பான விசயங்கள் உடனே முடிவுக்கு வரவேண்டும். இல்லையேல் அடுத்த 30 நாட்களுக்கு மேலே காத்திருக்க வேண்டிவரும். எதிராளிக்கு அவ்வப்பொழுது சாபமிட தயாராக இருப்பீர்கள். அதாவது அவ்வளவு கோபமிருக்கும். பக்கத்து வீட்டாரிடம் பகைத்துக்கொள்ளாதிருத்தல் நலம். பகைவர்களின் திட்டங்கள் வீணாகும். இல்லத்தில் வழக்கமான பிரச்சனைகள் இருக்கும். மாணவர்கள் நல்ல ஆர்வமுடன் இருப்பார்கள். கண் தொடர்பான உபாதைகள் வரலாம். தெய்வீக உலா செல்ல பிரியப்படுவீர்கள். ஏற்கனவே திருமணம் ஆகாதோருக்கு(?!) திருமண வாய்ப்புக்கள் அமையலாம். பொதுவாக கவலைப்படாதீர்கள் சனி உங்களுக்கு, சாலையின் ஆரஞ்சு விளக்கை எரிய விட்டிருக்கிறார். உங்கள் பயணத்திற்கு கவனமாக இருங்கள்.

கன்னிராசிக்கான பலன்கள்
சரியான சோம்பேறி என்ற பட்டம் இப்பொழுது கிடைத்திருக்கிறது தானே… ஆனாலும் திட்டமிடுதலும், செயல்பாடுகளும் சரியாகவே இருக்கும். மாணவர்களின் படிப்பும் நன்றாக இருக்கும். தொழில் சிறந்தாலும் வருமானம் கொஞ்சம் கையை கடிப்பதால், கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை. உடன்பிறந்தோர்களுடனான சொத்து அல்லது தொழில் பிரித்தல் நடைபெறும். உடல் பலகீனம் வந்து நீங்கும். தெய்வநம்பிக்கை வரும். காது தொடர்பான நோய்கள் வரலாம். தொழில் அல்லது இடம் மாறுதல் கிடைக்கும். திருமண சேதி வரலாம்.

துலாம்ராசிக்கான பலன்கள்
கையில் உலகலவு திட்டமிருக்கு… கையிலதான் ஒன்றுமில்லை… அடுத்தவரை கிண்டல் செய்தே வாழ்க்கை ஓடுது. தொழில மாற்றம் இப்பொதைக்கு வேண்டாம். தெய்வழிபாடு மிகும். ஆனால் கோவில் செல்ல மனமிருக்காது. நண்பர்கள் துணை இருக்கும். மிக சுலபமாக பணம் கிடைக்கும்… வாங்கி… மாட்டிக்கொள்ளவேண்டாம். உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் எழும். இல்லத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் நடைபெறும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை.

விருச்சிகராசிக்கான பலன்கள்
பரபரப்பாக இருக்கிறீகள். ஆனால் ஏனென்று தெரியவில்லை… எது சொன்னாலும் வீட்டில் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். பாதங்களில் புண், கொப்பளங்கள் வந்து நீங்கும். மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். தெய்வீக வழிபாடு இருக்கும். கையில் வந்த பணம் தண்ணீராக கரையும். மாணவர்களின் படிப்பு நன்றாக இருக்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் இருக்கும். இரவில தூக்கமின்றி இருப்பீர்கள். யோசிக்க முடியாது திணறல் இருக்கும். ஞாபக மறதி ஏற்படலாம்.

 

அன்பன் சுகுமார்ஜி

தொடரும்…

 

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

கணிணி தொழில் நுட்ப வடிவமைப்பு, ஓவியம், மென்பொருட்கள் பற்றிய என் தொழில்நுட்ப தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.

என் தளமுகவரி: www.sugumarje.com
என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

________

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

_________

Advertisements

8 thoughts on “ஜூலை மாத ராசிபலன் -2

  selva said:
  June 29, 2011 at 8:14 am

  Hi

  June month ended.i think title is wrong.pl check it

  Thanks
  selva

   Sugumarje said:
   June 29, 2011 at 8:52 am

   சுட்டிகாட்டியதற்கு நன்றி… திருத்தப்பட்டு விட்டது

  சிவ யோகி said:
  June 29, 2011 at 8:44 am

  //ஜூலை மாத ராசி பலன் – 1//
  //ஜூன் மாத ராசிபலன் -2//

  ஆமா நீங்க என்ன ராசி-னே….
  உங்க ராசிப்படி நீங்க இப்படிக்கா தப்பா தலைப்பை சொல்லுவீங்களா-னே 🙂

   Sugumarje said:
   June 29, 2011 at 8:53 am

   தூக்கமின்மை… லை…ன்னாக மாறிவிட்டது. குட்டியதற்கு நன்றி…

    சிவ யோகி said:
    June 29, 2011 at 9:42 am

    //லை…ன்னாக மாறிவிட்டது//

    ஜோதிட லைன் எனபதால் லை..ன்னாக மாறிவிட்டதோ 🙂

    சிவ யோகி said:
    June 30, 2011 at 7:20 am

    கீழ் கண்ட இரண்டு மறு மொழிகளில் முதல் மட்டும் சிவ யோகி க்கு உரிய தன்மை யுடைய என்னால் வெளியிடப்பட்டது…

    /////லை…ன்னாக மாறிவிட்டது//
    ஜோதிட லைன் எனபதால் லை..ன்னாக மாறிவிட்டதோ :)////

    கீழ் கண்ட மறு மொழி வேறு ஒரு நபரால் (டவுட் தனபாலு ??) சிவ யோகி என்ற பெயரில் வெளி யிடப்பட்டது..

    ////சரி சரி,
    ஆனது ஆச்சு. மிச்சம் மீதி உள்ளதையாவது சரியா சொல்லுங்க 🙂 ////

    சிவ யோகி என்பது யாரோ ஒரு மனிதர் பெயர் என்று நெனைக்க தேவை இல்லை….யோகி என்பது ஒரு தன்மை…
    உதாரணத்துக்கு ஸ்வாமி என்பது பெயர் அல்ல ….தன்னை உணர்ந்தவர்களை ஸ்வாமி என்று அழைக்கலாம்…
    பிரேமானந்தா, ஜெயேந்திரர் போன்றோர் ஸ்வாமி என்ற தன்மைக்கு களங்கம் விளைவித்தவர்கள்….
    ஓஷோ என்பது கடவுள் தன்மையை குறிப்பது…கால போக்கில் ஓஷோ என்பது பெயர் ஆகி விட்டது….
    சிவ யோகி என்ற பெயரில் யாரேனும் மறு மொழி இட்டால் நீங்கள் அதற்கு யுரிய தகுதி உண்டா என்று யோசனை செய்து சிவ யோகி என்ற பெயரை பயன் படுத்தவும்….

    சித்தூர் முருகேசன் அவர்களே….
    இது போல் வேறு பெயர்களுக்கும் களங்கம் விளை விக்குமாறு மறு மொழி வந்தால் ..உங்களுக்கு சரி என்று தோன்றினால் மட்டும் வெளி இடவும் ..

  சிவ யோகி said:
  June 29, 2011 at 2:50 pm

  சரி சரி,

  ஆனது ஆச்சு. மிச்சம் மீதி உள்ளதையாவது சரியா சொல்லுங்க 🙂

  krishnamoorthy said:
  June 30, 2011 at 5:55 am

  கையில் உலகலவு திட்டமிருக்கு.
  well Said but you have some drive by some natural force .
  good and best.
  thank you

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s