அவாள் கூறும் டுபுக்கு பரிகாரங்கள்

Posted on

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.
ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.
ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.
மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன். ————————————– சித்தூர். எஸ். முருகேசன்.

நவக்கிரகத் தோஷங்கள்:
நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.
நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.
1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.
2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.
3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.
லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!
செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.
2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?
3. தானம் வழங்குதல்:
நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!
விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.
இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.
நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.
நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.
ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து “நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி கிரகங்கள் பேசட்டும்.
Read More

Advertisements

16 thoughts on “அவாள் கூறும் டுபுக்கு பரிகாரங்கள்

  Ismail said:
  June 28, 2011 at 8:06 am

  கொஞ்சம் அறிவுபூர்வமாக சிந்திப்பவனுக்கு கோள்களை வைத்து கோலாட்டம் போடும் அளவிற்கு ஜோதிடம் குறித்த எளிமையான அருமையான கட்டுரை.
  இதுதான் விதியை மதியால் வெல்லலாம் என்பதா?
  இந்த தளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஜோதிடர்களிடம் வேலை இருக்காது போலிருக்கிறது.
  ஜோதிடத்தை அதன் நடையிலேயே எளியமுறையில் புரிய வைக்கும் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி அய்யா.

   S Murugesan said:
   June 28, 2011 at 8:15 am

   இஸ்மாயில் சார்,
   என்னோட முடிவான லட்சியமே இதுதான். தட்டச்சு கத்துக்கொடுத்துட்டு கீ போர்டையே தூக்கி பார்ட்டி கிட்டே கொடுத்துர்ரது.

   நமக்கு ஆயிரத்தெட்டு தொழில் தெரியும் . நெத்தி வேர்வை நிலத்துல பட உழைச்சு பிழைக்கனும்ங்கறதுதான் நம்ம நோக்கம். அதை என்னிக்கு தெய்வம் தரப்போகுதோ தெரியலை

  பதிவு சூப்பர்
  தல போல வருமா 🙂

   S Murugesan said:
   June 28, 2011 at 1:28 pm

   ராசா !
   தலைக்கு எங்கருந்து கிடைச்சது? அதையும் மென்ஷன் பண்ணிருங்க.”அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுத சொரிவு “

  Sudharsan said:
  June 28, 2011 at 12:23 pm

  hai murugesan sir,
  You have mentioned that if Mars got spoiled in a person’s horoscope,he will take part or join in NCC or sports.((செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?)(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்)).I strongly feel that people with strong Mars will shine in sports or NCC.A person with weak Mars lacks courage and figthing spirit.He will get irritated easily, but cannot takepart in Martial activities.(sports and NCC).

   S Murugesan said:
   June 28, 2011 at 1:27 pm

   சுதர்சன் அவர்களே,
   என்னை என்ன தானமா வாங்கின பத்தாறு கட்டி, பூணூலால முதுகு அழுக்கை சொரிஞ்சுக்கிட்டு – காசேதான் கடவுளடானு கதை பண்ற “அவா”னு நினைச்சிங்களா?

   செவ்வாய் பலம் குடத்துல இருக்கிற தண்ணீர்னு வைங்க. நிறைகுடம் தளும்பாதே. அடி தடி – என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கேஸெல்லாம் அரைகுடம் தேன்.அதனாலதான் தளும்புதுங்க.

   ஸ்ட்ரீட் ஃபைட்ல கவனிச்சுப்பாருங்க. எவன் வீக்கோ அவன் தான் மொதல்ல கைய நீட்டுவான். சைக்காலஜிப்படி இது ரிவர்ஸ் எஃபெக்ட்.

   நீங்க எதிர்காலத்துல என்னவா இருக்கனுமோ இளமையில அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டா இருப்பிங்க. நானெல்லாம் ஜிம் போயிருக்கேன் – மஸில்ஸை எக்சிபிட் பண்ற மாதிரி ட்ரஸ் பண்ணியிருக்கேன். ஆனால் எந்த தெருவுக்கு போனாலும் உதைவாங்காம வந்ததில்லை.

   என் ரோல் “குரு” ஆனால் நான் என் இளமையில வேறு மாதிரி இருக்கத்தேன் ஆசைப்பட்டேன். எது நாட் அவெய்லபிள்ங்கறது சப்கான்ஷியஸா தெரிஞ்சுரும். ஆனால் ஈகோ உந்தி தள்ள மனசு அதுக்கே ஆசைப்படும்.

   இப்பம் புரியுதா?

  Sudharsan said:
  June 28, 2011 at 1:45 pm

  thanks for your response

  Ismail said:
  June 29, 2011 at 7:06 am

  ********NAKEERAN SEITHI*********

  கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு காளகஸ்தி கோவிலில் ராகு-கேது தோஷ சர்ப்ப நிவாரண பூஜை நடத்த கலைஞர் மூத்த மகள் செல்வி முடிவு செய்தார். இதன்படி அவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.

  முதலில் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு வி.ஐ.பி. வரிசையில் சென்று ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.

  அங்கு சென்றதும் செல்வி உள்ளிட்ட அவருடன் சென்றவர்கள் மிருத்யுஞ்ஜெயலிங்கம் முன்பு அமர்ந்தனர்.

  கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயர்களில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்தினர்.

  இந்த தோஷ நிவாரண பூஜை முடிந்ததும் அவர்கள் கோவிலுக்குள் சென்று கருவறையில் உள்ள வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டனர்.

  அதன்பிறகு அவர்கள் மிருத்யுஞ்ஜெயலியங்கம் அருகே சென்று வேத பண்டிதர்களிடம் சிறப்பு ஆசி பெற்றனர்.

   S Murugesan said:
   June 29, 2011 at 1:53 pm

   இஸ்மாயில் !
   சர்ப்பதோஷ பரிகார பூஜை?
   நக்மா கங்குலி கூட செய்தாப்ல ஞா

   // மிருத்யுஞ்ஜெயலிங்கம் //
   ஆரு உசுருக்கு ஆபத்து வந்துருச்சு?

  சிவ யோகி said:
  June 29, 2011 at 2:54 pm

  முருகேசன்ஜி,

  ஒட்டு மொத்த பிராமணர்களும் மோசமானவர்கள் இல்லை. கொஞ்சம் போல பரவலாக திங் பண்ணுங்க பாஸு. ஒன்னு ரெண்டு நல்லவர்களும் இருக்கிறார்கள். வெளுத்ததெல்லாம் பாலும் இல்லை. கறுத்ததெல்லாம் சாக்கடையும் இல்லை. நல்லா ரோசிங்க பாஸு. 🙂

   S Murugesan said:
   June 29, 2011 at 5:42 pm

   சி.யோகி !
   அவாள் ( லோகாயதமா) கெட்டாத்தேன் சமுதாயத்துக்கு லாபம். சூத்திராள் உருப்பட்டா லாபம். அப்படி கெட்டுப்போன பிராமணாள் சேவைய இந்த நாடும் – நானும் மறந்ததே இல்லையே..

   ஒன்னு ரெண்டு நல்லவா இல்லை . அல்லாருமே நல்லவாதான். தனியா இருக்கிற வரை. இன்னொரு ” நூல் ”
   மாட்டினா தான் சிக்கல்.

  ஐய்யராத்து அம்பி said:
  June 30, 2011 at 8:38 am

  ஏண்டா முருசோ! ஐய்யர் குண்டிய நோண்டலன்னா நோக்கு தூக்கம் வராதோ. என்னமோ பார்ப்பனர்களால தான் உலகமே கெட்டு போய் கிடக்குங்கறமாதிரி எழுதற. அவாள் நல்லாருந்தவரைக்கும் இந்த லோகம் நன்னா இருந்துது. ஒன்னொன்னுக்கும் தெளிவான வழிமுறையை ஏற்படுத்தி வச்சா. சாஸ்திர சம்பிரதாயங்களை இத்தனை வருஷம் கட்டி காத்துண்டு வந்தா. எப்ப உன்னை மாதிரி சூத்திர பசங்க தலையெடுக்க ஆரம்பிச்சானுங்களோ அப்ப புடிச்சது சனி. எதுல பார்த்தாலும் அசிங்கம் பண்ணிட்டு இருக்காள். உன்னை மாதிரி எத்தனை விஷமிகள் வந்தாலும் அவா எல்லாம் இன்னமும் எதுக்கும் பயப்படாம அவா கடமைய ஒழுங்கா செஞ்சிட்டு இருக்கா. ஆனா உன்னை மாதிரி உருப்படாத சூத்திரப்பசங்க தான் லோகத்த மாத்திர்றேன், உருப்பட வைக்கிறேன்னு சவுண்டு உட்டுகிட்டுகிட்டு ஊரை ஏமாத்தி உலையில போடுறேள். நோக்குகெல்லாம் ஜோதிடம் தெரியும்னு சொல்லிகிட்டு திரியறேளே அவாள் இல்லைன்னா இந்த விஷயமெல்லாம் நோக்கு எப்படி வந்திருக்கும். எதாச்சும் அரைகுறையா தெரிஞ்சு வச்சின்டு ஊரை ஏமாத்திட்டு திரியாதே. அடக்கி வாசி இல்லாட்டி உன் பருப்பெடுக்கவும் அந்த பிராமனாளுக்கு தெரியும். புரியுதா.

   covaisiva said:
   July 1, 2011 at 4:41 am

   ஏம்பா அம்பி. உனக்கு இங்கு என்ன வேலை. நல்ல புள்ளைய உனக்குன்னு உங்களுக்குள்ளேயே ஜால்ரா போடற ப்ளாக், வெப்சைட்ல போய் எங்கள மாதிரி சூத்ராள போதுமான அளவிற்கு திட்டி எழுத்து. உங்க வீட்டில் தனி அறையில் கேட்ட வார்த்தைகளில் திட்டி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்.
   நாங்க சூத்ராள்கள் தான் உனக்கு சோறு போடறோம், தண்ணி ஊத்தறோம். நீ மட்டும் மேல உக்காந்துட்டு இவ்வளவு நாளை போட்ட ஆட்டம் போதும். நாங்க நாங்களாகவே
   “நிற்கும் வரை கம்பமை நிற்போம். எழுத்தால் பூகம்பமாய் எழுவோம்”.
   சாஸ்திர சம்பிரதாயமே எங்களை ஏமாற்ற நீங்கள் உருவாக்கி வைத்ததுதான். இனி நாகளே சாஸ்திரம் மட்டுமல்ல சரித்திரமும் படைத்துகொள்கிறோம். போய் மணியை மட்டும் ஆட்டுங்க. இங்க வந்து ஆட வேண்டாம்.

    S Murugesan said:
    July 1, 2011 at 6:10 am

    கோவை சிவா !
    அய்யராத்து அம்பிகளுக்கும் நமக்கும் உள்ள ஒரே வியாஜ்யம் என்னன்னா..

    தங்கள் இனத்தவரின் – கடந்த கால -சரித்திர சதிகளுக்காக -வெட்கப்படறதா அறிவிக்கனும்.

    வேதமா? சாஃப்ட் வேரா? டிசைட் பண்ணிக்கனும்.
    வேதம்தான்னா குடுமி வச்சுக்கிடனும் . மவுசை தூக்கி விசிரனும்.

    சாஃப்ட் வேர் தான்னு முடிவு பண்ணா வேதம் – யாகம்னு ஜல்லியடிக்கக்கூடாது.

    இங்கன சாஃப்ட்வேர்ன்னா சகல லோகாயத சோர்ஸ்களையும் சேர்த்துக்கிடனும்.

    அதை விட்டுட்டு ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு ஜல்லியடிக்கிறது – தங்கள் இனத்து சோப்ளாங்கிகளை ப்ரமோட் பண்ண சூத்திராளை ரோட்டுக்கு விரட்டறது – சூத்திராளோட அதிகாரத்தை -செக்ரட்ரி -ஐ.ஏ.எஸ்ங்கற முறையில அனுபவிக்கிறது – என்கொய்ரி வந்தா மட்டும் திராட்டுல விட்டுட்டு கழண்டுக்கறது இந்தமாதிரி காட்டி/கூட்டி கொடுக்கிற வேலைகளை விட்டுரனும்.

    கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா டப்பா டான்ஸு ஆடிரும். மீசை குப்பைக்கு போயிரும்.

    அம்பீ .. யு ப்ளீஸ் கன்டின்யூ ..உங்க வெர்சன் என்னனு நாங்களும் தெரிஞ்சிக்கிடறோமே

  தனி காட்டு ராஜா said:
  July 1, 2011 at 7:07 am

  //வேதமா? சாஃப்ட் வேரா? டிசைட் பண்ணிக்கனும்.
  வேதம்தான்னா குடுமி வச்சுக்கிடனும் . மவுசை தூக்கி விசிரனும்.

  சாஃப்ட் வேர் தான்னு முடிவு பண்ணா வேதம் – யாகம்னு ஜல்லியடிக்கக்கூடாது. //

  கரெக்டா அம்பியோட பாய்ண்ட(நான் “அவா”ளோட இரட்டை வேடத்தை சொன்னேன் ) புடிச்சிக 🙂 🙂

   S Murugesan said:
   July 1, 2011 at 8:27 am

   வாங்க ராசா,
   நன்றி. இதுல இனொரு சோகம் என்னன்னா நம்மாளுங்களே ‘ பாவம் ஆச்சு போச்சு ..அவாளே நொந்து கிடக்கிறப்ப நீங்க வேற ஏன் இப்படி குடையறிங்க”ன்னுட்டு வக்காலத்து வாங்கறதுதேன்.

   நாம தேளை கொல்லனும்னும் சொல்லமாட்டம். கொடுக்கை நீக்கிரனும்தான் சொல்றோம். தேள் = பிராமணாள் கொடுக்கு = பிராமணீயம் (இதுக்கு நம்ம டிக்சனரில விலாவாரியான தனி அர்த்தம் இருக்குதுங்ணா. முக்கியமான பாய்ண்ட் காட்டி/கூட்டி கொடுக்கிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s