சோதிட தொடர் புதிர் பதில்கள்

Posted on

அனைத்து சபையோருக்கும் நன்றி…
புதிர் தொடரில் வந்த 4 சாதகமும் ஆடிட்டர்களுடையது எனபதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

போட்டியில் பங்கேற்று சிறபித்த திரு அரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா அவர்களுக்கு நன்றிகள்.

//அதாவ்து நீங்க டுபாக்கூர் சாதகத்த போட்டு அவிக இமேஜ டேமேஜா ஆக்கிட்டீகன்னா?//

அந்த 4 சாதகர்களின் முழுவிபரங்கள் தேவை பட்டால் மெயிலில் தருகிறேன். நன்றி பாண்டி அவர்களே.

//புதிர்லாம் வேணாம் பாஸ். (ஏன்னா எனக்கு பதில் தெரியாதுல்லா!!!!)//

புதிர் தொடரை தொடரலாமா என்று முடிவெடுக்க ஓட்டேடுப்புக்கு விடலாமா என்பதை விவாதித்து முடிவு செய்து தருமாறு நமது வாசக நெஞ்சங்களை அன்புன் கேட்டுகொள்ளுகிறேன்.
நன்றி,
வினோத்..
நன்றி…

6 thoughts on “சோதிட தொடர் புதிர் பதில்கள்

  lordarul said:
  June 28, 2011 at 5:10 am

  Puzzles and Quiz will be helpful to identify talented people. So we need Quiz and Puzzles.

  டவுசர் பாண்டி said:
  June 28, 2011 at 5:19 am

  விநோத்தன்னே,

  நானு சும்மா டமாசுக்கு சொன்னேன். நீங்க புதிர தொடர்ந்து கணிடினுயூ பண்ணுங்க. நானு சும்மா ஏதாச்சும் ஒரு பேச்சிக்கு சொல்லுவேன். மத்தபடி நம்ம பேச்ச கேர் பண்ணாதீங்கோ.

  அடுத்த புதிருக்காண்டி சனங்க வெயிட்டிங்.

  //போட்டியில் பங்கேற்று சிறபித்த திரு அரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா அவர்களுக்கு நன்றிகள்.//

  ஹி..ஹி 🙂

  //ஆடிட்டர்களுடையது//

  எப்புடி இது ??
  புதன் பத்தாம் பாவ தொடர்பு ஆடிட்டர் ஓகே…..
  சுக்கிரன் பத்தாம் பாவ தொடர்பு ஓகே …
  சுக்கிரன் +புதன் =அறிவாளி +வியாபாரம் (கணக்கு)

  செவ்வாய் பத்தாம் பாவ தொடர்பு பெற்று உள்ளதே…ஒரே கன்புஸ்சா இருக்கே….இன்னப்பா இது படு பேசார கீது….

  பொது வாக கட்டத்தா வச்சு மட்டும் பலன் சொல்ல முடியாது என்பது தான் என் வாதம் கூட…
  இருந்தாலும்….நான்கு ஜாதகம் இருக்கும் போது அதில் ஏதாவது ஒற்றுமை இருக்கும் எனபதன் அடிப்படையில் தான் பலன் சொன்னேன்…..

  இந்த உலகத்துள்ள எத்தனையோ தொழில்கள் உள்ளன….
  பொதுவாக இது தான் தொழில் என்று யாராலும் உறுதி பட சொல்ல முடியாது….

  சரி..மணி அண்ணே ….நான்கு ஜாதகதுக்கும் உள்ள பத்தாம் பாவ தொடர்பு எப்படி இந்த ஆடிட்டர் தொழிலை தந்தது என்று கொஞ்சம் பார்த்து சொல்லுகளேன்….

  //புதிர் தொடரை தொடரலாமா என்று முடிவெடுக்க ஓட்டேடுப்புக்கு விடலாமா என்பதை விவாதித்து முடிவு செய்து தருமாறு நமது வாசக நெஞ்சங்களை அன்புன் கேட்டுகொள்ளுகிறேன். //

  தொடர வேண்டும் என்பது தான் என் விருப்பம் …
  ஆனால் ஜாதகம் Full detail தாங்க….

  Ismail said:
  June 28, 2011 at 5:48 am

  அய்யா வணக்கம். தனிக்காட்டு ராஜா அவர்கள் சொன்ன மாதிரி இந்த நான்கு ஜாதகத்திலும் பத்தாமிடம் புதனோடு
  நேரிடையாக தொடர்புகொண்டிருக்க வில்லை.
  ஆடிட்டர் ஆகா புதன் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சுக்கிரனும் சூரியனும் வலுவாக இருந்தால் மட்டுமே ஆடிட்டர் தொழில் இருக்க முடியம் என்று படித்த ஞாபகம்.
  இதில் சம்பந்தம் இல்லாமல் சனி, செவ்வாய் எல்லாம் வருகிறார்கள். எப்படி என்று விளக்கவும்.
  நானும் ஒரு ஆடிட்டர் என்பதால் இந்த ஆவல்.

  Mani said:
  June 28, 2011 at 6:44 am

  ///சரி..மணி அண்ணே ….நான்கு ஜாதகதுக்கும் உள்ள பத்தாம் பாவ தொடர்பு எப்படி இந்த ஆடிட்டர் தொழிலை தந்தது என்று கொஞ்சம் பார்த்து சொல்லுகளேன்…. ///

  ஒருத்தருக்கு தொழிலை சொல்லனும்னா வெறும் 10ம் பாவத்தை மட்டும் பார்த்து சொல்வது அவ்வளவு சரியாக வராது. ஏனெனில் 2, 6, 10, 11 ஆகிய பாவங்களையும் பார்க்கனும்.

  2ம் பாவம் பலமாக இருந்தால் வாக்கால் வருமானம், ஆலோசனை, ஜோதிடம் போன்ற வழிகளில் வருமானம் வரும், 11ம் பாவம் எந்த வீடுகளோடு தொடர்பு இருக்கோ அந்த வழிகளில் வருமானம் வரும். 6மிடம் நாம் செய்யும் வேலையை குறிக்கிறது. 10ம் பாவம் ஜீவனத்தை குறிக்கிறது.

  இப்படி ஒருவருக்கு பல தொழில்கள் வெவ்வேறு காலகட்டத்தில் அமைய வாய்ப்பு ஏற்படும். இதுல நாம வாகனத்தொழில்ன்னு சொல்லி வைக்க அவரு ரியல் எஸ்டேட் செய்துகிட்டு இருப்பாரு.

  1) முதல் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
  சிம்ம லக்னம். பத்தில் ராகு சுக்கிரன் வீட்டில், சூரியன் சாரம் பெற்றுள்ளார். சூரியன் அறிவாற்றலை குறிக்கின்ற 5ம் வீட்டில் குரு, புதன் இணைவு. 6ம் வீட்டை குறிக்கும் சனி 10ஐ பார்க்கிறார்.

  மேலும் அம்சத்தில் 10ம் அதிபதி சுக்கிரன் குருவீட்டில் இணைவு. மற்றும் அம்சத்தில் 10ல் புதன் உள்ளார். எனவே புதன் சம்பந்தம் வருகிறது.

  எனது கணிப்பு படி இவர் வெறும் ஆடிட்டர் தொழில் மட்டும் பார்க்க மாட்டார். உப தொழில்களும் உண்டு. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் போன்றவையும் அவருக்கு அமையலாம்.

  2) இரண்டாவது சாதகம் மிதுனலக்னம். பொதுவாக மிதுன லக்னத்தார் கணிதத்தில் புலமை பெற்றவர்களாக இருப்பர். இந்த சாதகத்தில் புதன் சூரியன் சனி சம்பந்தம் பெற்று 6ம் வீட்டில் இணைவு. மற்றும் 10ம் வீட்டதிபதி குரு 8ல் நீசம். அந்த 10ம் வீட்டதிபதி குரு அம்சத்தில் மிதுனத்தில் புதன் வீட்டில். மேலும் அம்சத்தில் புதன் 10ம் வீட்டில் போன்றவற்றோடு தொடர்பு படுத்தி பாருங்கள் ஓரளவிற்கு சரியாகதான் வரும்.

  3) இது வடநாட்டு முறை சாதகம் மேலும் பிறப்பு விபரமும் இல்லை. இது எனக்கு அவ்வளவு சரியாக புரியவில்லை. யாராவது நமது முறைப்படி கட்டம் போட்டால் வசதியாக இருக்கும்.

  4) இது கும்பலக்ன சாதகம். புதன் உச்சம் பெற்று 2ம்மிடத்தை பார்வை செய்கிறார், சுக்கிரன் நீசம் சனி சம்பந்தம், மேலும் 10ல் செவ்வாய் ஆட்சி, சனி பார்வை. அம்சத்திலும் புதன் ஆட்சி பெற்றுள்ளார். சூரியன் வர்கோத்தமம் பலம். மேலும் 6க்குடையவர் சூரியன், குரு சம்பந்தம்.

  இப்படி பல விதங்களில் பார்த்தாலும் மூன்று சாதகத்திலும் புதன் சம்பந்தம் பலமாக அமைந்துள்ளது. சூரியனும், குருவும் வேறு தொடர்பு பெற்றுள்ளது. இது போன்ற காரணங்களால் ஆடிட்டர் தொழிலுக்கு வந்திருக்கலாம்.

  ஆனாலும் இவர்களுக்கு ஆடிட்டர் தொழில் மட்டுமே இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இன்னும் வேறு பல தொழில்களும் இருக்கும். மற்றவை உபதொழிலாக இருக்கும்.

  ராசா… பொதுவா ஜோதிடத்திலேயே மிகவும் கடினமான பிரிவு தொழிலையும், ஆயுளையும் கணித்து சொல்றது தான். பல ஜோதிடர்கள் இந்த கான்செப்டை அவ்வளவாக தொடமாட்டார்கள் மேலோட்டமாக தான் பார்ப்பார்கள். இதே மனைவியை பற்றி சொல்ல சொல்லுங்களேன். அது ஒரு மாதிரி அப்படி இப்படி, சண்டை சச்சரவு என்று பெரிய கதையே வரும்.

  ஜோதிடத்தில் எல்லாவற்றையும் திரைப்படம் போல சரியாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவ்வளவு சரியாக வராது. வரும் வாடிக்கையாளர் தனது பிரச்சனையை கூறி அது எதனால் எவ்வளவு காலம் இருக்கும். எனது பிரச்சனை எப்போது தீரும். என்று கேட்டால் ஓரளவு ஜோதிட ஞானம் உள்ளவர்களும் கூட அவர்கள் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து அவர்கள் அறிவிற்கு ஏற்றவாறு ஒரு தீர்வை சொல்லிவைப்பார்கள்.

  இது ஒரு மிஸ்டிக் சைன்ஸ் கல்லை விட்டு எறியலாம். மாங்கா விழுந்தால் லாபம். விழாவிட்டால் மறுபடியும் கல்லெடுக்க வேண்டியது தான்.

  நானும் நீங்கள் எழுதிய பலன்களை படித்தேன். நீங்கள் லாஜிக்கா சரியாக தான் எழுதியிருந்தீங்க. ஆனா எல்லோராலயும் எல்லா நேரத்திலயும் சரியாக சொல்லிவிட முடியாது. சிலர் இந்த விஷயத்தில் பதிலை தங்கள் மனதில் வைத்து விடை என்ன வருகிறது என்று ஒப்பிட்டு பார்ப்பார்கள். சிலர் தவறானாலும் பரவாயில்லை என்று தைரியமாக எழுதுவார்கள். அது அவர்கள் விருப்பம். அதற்காக மற்றவர்கள் அனைவரையும் ஒரே தராசில் வைத்து தவறாக கமெண்ட் போட்டதால் தேவையில்லாமல் தங்கள் பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று விலகியிருக்ககூடும்.

  புதிர் எப்படி இருக்கனும்ன்னா. சரியான உறுதி செய்யப்பட்ட பிறப்பு விபரங்களோட கொடுக்கப்பட்டிருக்கனும்.

  இரண்டாவதாக பதிலை கமெண்டில் போட்டால் ஒருவர் பதில் மற்றவர்களோடு ஒப்பிட ஈயடிச்சான் காப்பி கதையாக ஆகிவிடும். எனவே மின்னஞ்சலில் பதிலை அனுப்ப சொல்லலாம்.

  புதிர் விடைகளை வெளியிட குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கலாம். சரியான காலகட்டத்தில் பதிலை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களோடு வெளியிடலாம்.

  பதிலை வெளியிடும் போது ஒவ்வொருவரும் அனுப்பிய மின்னஞ்சல் பதில்களில் யார் சரியாக எழுதியிருக்கிறார்கள் என்பதை வினோத் பதிவில் அவர்கள் அனுப்பிய விளக்கத்துடன் எழுதலாம். அதற்கு மதிப்பெண் போடலாம்.

  இப்படி இருந்தால் மிகவும் நல்ல ஒரு ஆரோக்கியமான புதிர் போட்டியாக இருக்கும் என்பது எனது கருத்து.

  புதிர் போட்டிக்கு பதில் அனுப்பியிருப்பவர்கள் கமென்டில் நான் புதிர் போட்டிக்கு பதில் மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன் என்று வருகை பதிவு போடலாம்.

  இங்கு வருபவர்கள் அனைவரும் நன்றாக அனுபவம் பெற்ற ஜோதிடர்கள் இல்லை. அனுபவம் அதிகம் பெற்றவர்களுக்கு எல்லாம் பதிவு படிக்கவோ, எழுதவோ நேரம் இருக்காது. அப்படியே இருந்தாலும் அவர்கள் வேலையில்லாமல் இதற்கெல்லாம் விடை எழுதிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

  நம்மைப் போன்ற ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தான் இங்கு வருகிறோம். படிக்கிறோம். விவாதிக்கிறோம். அவர்களது கருத்துகள் ஒரு நேரம் சரியாக இருக்கும், பல நேரம் தவறாக இருக்கும். இதனால் சோதிடமே பொய், சோதிடர்களே போலி என்றெல்லாம் சாடக்கூடாது. அப்படி எல்லாம் விமர்சித்தால் யாரும் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

  என்னவோ என்னை காணுமேன்னு தேடறீங்களேன்னு வந்து ஔறிவச்சேன். சரிவந்தா பாருங்க. இல்லாட்டி விட்டுதள்ளுங்க. அடுத்த முறை பார்ப்போம்.

  சரி வர்ட்டா….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s