ஜூலை மாத ராசி பலன் – 1

Posted on

அன்பர்களே…
வரும் ஜூலை மாத்திற்குரிய ராசி பலன்கள் இங்கே தருகிறேன்.

பொதுவாகவே சூரியனின் பெயர்ச்சியை வைத்தே ராசிபலன்கள் சொல்வது வழக்கம். ஒவ்வொரு தமிழ் மாதமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. நாம் தான் மேற்கத்திய பாணியை நம் ரத்தத்தோடு கலந்துவிட்டவர்களாயிற்றே…

இந்த ஜுலை மாத்தத்தில் சூரியன் மிதுனத்திலும், கடகத்திலும் உலாவருகிறார். கடகத்தில் உலாவத்தொடங்கும் பொழுது அந்த சூரியன் தென் கிழக்கு நோக்கி நகர துவங்குகிறார். நாம் வழக்கமாக சொல்லுவது போல சூரியன் மிகச்சரியாக கிழக்கிலே உதிப்பதில்லை. உங்கள் வீட்டில் தினமும் காலையில் விழும் சூரிய ஒளிக்கற்றைகளை கவனித்து வாருங்கள். (சுகுமார்ஜீ, அதுக்கெல்லாம் எங்க ஜீ நேரமிருக்கு? )

ஜூலை மாதத்தை பொறுத்தவரை எனக்கு சோதனைக்குரிய மாதம். ஏனென்றால் அந்த மாதத்தில்தான் எனக்கு திருமணம் ஆனது… அதோடு ஆடி வந்ததால் கொஞ்ச நாள் ஜாமீன் கிடைத்தது. அதுக்குப்பிறகு ஆயுள் தண்டனைதான் 😦

வருடத்தில் ஆடி மாதம் விவசாயத்திற்கு மிக வளமை சேர்க்கும் மாதம். திருவிழா கொண்டாட்டங்களோடு, அறுவடைக்கால வருமானத்தை சந்தோசமாக செலவழிக்கலாம். திருமண மணமக்களுக்குத்தான் கொஞ்சம் கடினம். அந்த ஆடி மாதத்தை கணக்கிலெடுத்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்க வாய்ப்பாகும். சூரியன் மேசத்தில் தனித்தன்மை பெறுவதால். குழந்தை, குழந்தையின் தாய்க்கு மிகுந்த சிரமம் ஏற்படலாம், குழந்தையின் உச்ச (உச்சா இல்லீங்க) சூரியன் ஜோதிட ரீதியாக தந்தையையும் பாதிக்கும். ஆனால் இப்போதெல்லாம் சொன்னால்? அது அந்த காலத்தில்தான். கம்முனு கிட…என்பார்கள்.

ஜூலை மாதம்… ஆனி 16 நாள் முதல் ஆடி 17 ம் நாள் வரையிலானது

மேசராசிக்கான பலன்கள்
என்னதான் உழைத்தாலும் ஓய்வெடுக்க முடிவதில்லை. தொழில் மாற்றம், பணியிட மாற்றம் கைக்கெட்டும் தூரத்திலேயே வேடிக்கை காட்டுகிறது. எடுத்த வேலையை முடிக்க மிகுந்த பிரயாசை வேண்டியதாக இருக்கும். உடலில் சிறு பிரச்ச்னைகள் வந்து நீங்கும். விருந்து உபச்சாரங்களில் கலந்து கொள்வீர்கள். அடகு வட்டி போன்ற பிரச்ச்னைகள் முடிவுக்கு வரலாம். உங்கள் எதிரிகளின் பலன் அறிய முற்படுவீர்கள். மூத்த சகோதரகளின் மூலமாக ஏதேனும் நல்ல செய்திகள், உதவிகள் கிடைக்கலாம். இல்லாளோடு வாக்குவாதம் தவிர்த்தல் நலம். எதிராளியின் குணமறிந்து பேசவேண்டியது அவசியம். உடல் பலகீனமிருப்பதால் தொற்று நோய்கள் அண்ட விடாமலிருக்க வேண்டும். தெய்வ ஆசிகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களில் ஆர்வமாக இருப்பர்.

ரிஷபராசிக்கான பலன்கள்
சுடுசொல் பேசி அடுத்தவரை நிலைகுலைய வைத்தது போதும், இனி வார்த்தைகள் கட்டுக்குள் இருக்கும். மனம் தெய்வ நம்பிக்கையில் கவனம் கொள்ளும். காலையில் எழ முடியாதபடி சோம்பலாக இருக்கும். மனைவியோடு 50க்கு 50ஒட்டும், உரசலும் இருக்கும்.  தொழில் அதனால் கிடைக்கும் பலன் எதிபார்த்தல் போல இருக்காது. உடன் பிறந்தவர்கள் உதவ தயாராக இருப்பார்கள். பூர்வீக இடம் தொடர்பான விசயங்கள் முடிவுக்கு வரலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவைப்படும். கையிலிருக்கும் பணத்தை கரைத்துவிட்டு, கடன்வாங்கும் நிலைமை வரலாம். ஏதேனும் கோவில் சுற்றுலா செல்ல நினைப்பீர்கள். எதிராளியை புரிந்து கொள்ள குழப்பமாக இருக்கும்.

மிதுனராசிக்கான பலன்கள்
அளவுக்கு அதிகமான உடல் உஷ்ணத்திலிருந்து மெல்ல குணமடைவீர்கள். இருக்கும் தொழில் மூலமான வருமானம் சீராகும். நியாயமாக பேசினாலும் கிடைக்கும் கெட்டபெயரை நினைத்து வருந்துவீர்கள். தொழிலில் கிடைக்கும் வருமானம், வேலையில் கிடைக்கும் ஆதரவு போதுமானதாக இருக்காது. உங்களை சுற்றி எல்லோருமே எதிரிகளாக் இருக்கிறார்கள் என்று நினைப்பிர்கள். மாணவர்களுக்கு படிப்பு அயற்ச்சியை தரும். மனைவி வழியாக ஏதேனும் நல்ல செய்திகள் கிடைக்கலாம். கோவிலுக்கு செல்லும் ஆசை முற்பாதியில் நிறைவேறும். பிறகு நீங்களே தவிர்க்கும் சூழல் வரும். தெய்வ நம்பிக்கை கூடுதலாகும்.

கடகராசிக்கான பலன்கள்
முன்னைவிட உடல் பலகீனமாக உணர்வீர்கள். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரக்கூடும். தொழில் தொடர்பான விசயங்கள் சீராகக்கூடும். குழந்தைகள் சொல்கேளாமை, அவர்கள் மூலமாக சிறு பிரச்சனைகள் வரும். உடன்பிறந்தோர் மூலமாக சிறு தடங்கல்கள் உண்டாகும். மனம் குதூகலமிருந்தாலும் கொஞ்சம் சோகமும் இருக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறையோடு இருக்கவேண்டிவரும். தாகம் அதிகமிருக்கும். விருந்து விழாக்களில் பங்கெடுத்துக்கொள்வீர்கள். ஆன்மீக வழிபடுகளில் ஈடுபடுவீர்கள்.

 

 

அன்பன் சுகுமார்ஜி

குறிப்பு: தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசை இருப்புகளின் அடிப்படையில் காணும் பலன்களே பொருத்தமானதாக இருக்கும்.

தொடரும்…

 

Advertisements

7 thoughts on “ஜூலை மாத ராசி பலன் – 1

  kalyan said:
  June 27, 2011 at 2:03 pm

  அனுபவ ஜோதிடம் வலைதளத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. மாத ராசி பலன் எழுதி மெதுவா நம்முடைய தனித்தன்மையை விட்டு விலகுகிறோமோ என்ற எண்ணம் வருகிறது. மாதபலன், வாரபலன், தினப்பலன் சொல்ல நிறைய இதழ்கள் இருக்கிறதே…நமக்கும் இது தேவையா என்று யோசிக்க வேண்டிய நேரமோ என்ற எண்ணம் வருகிறது தல.

   S Murugesan said:
   June 27, 2011 at 2:40 pm

   கல்யாண்,
   கமல் ரெண்டு மாஸ் படம் கொடுத்தாதான் மருத நாயகம் பற்றி கனவே காணமுடியும்.

   ராசி பலன் எல்லாம் ஹிட் புல்லர். 2011 குரு பெயர்ச்சியை படிச்சவுக எண்ணிக்கை 10,600

   நாம ரெம்ப டீப்புக்கு போறதால குறையற ஹிட்ஸை ராசி பலன் பேலன்ஸ் பண்ணிரும்.

   எல்லாமே ஒரு கணக்குத்தேன். நம்ம லட்சியம் என்னமோ ஜோதிடம் குறித்த விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்தி – அதை விஞ்ஞான பூர்வமாக்குவதுதான்.

   தனித்தன்மைய காப்பாத்திக்கனும்னா அப்பப்போ அதை லூஸ் பண்ணவும் கத்துக்கணும்

    sugumarje said:
    June 27, 2011 at 2:59 pm

    நல்லவேளை நாலோட நிறுத்திவிடலாம்னு யோசித்துக்கொண்டிருந்தேன்… உள்ளே புகுந்து நெறி படுத்திட்டீங்க 🙂

    S Murugesan said:
    June 27, 2011 at 3:18 pm

    சுகுமார்ஜீ,
    ஒரு தாட்டி அஷ்டமத்துல சனி+செவ் கூட்டு ஏற்பட்டுப்போனதை கவனிக்காத பாவத்துக்கு கலைஞர் ரேஞ்சுல திருட்டு ரயிலேறி சொந்த ஊருவர்ராப்ல ஆயிருச்சு ( 45 நாள் எஃபெக்ட்)

    நீங்க சூரியனை பிடிச்சதை விட செவ்வாயை பிடிச்சிருந்தா பலன் நெத்தியடியா ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

    அவர்தான் கமாண்டர் ஆஃப் தி ப்ளானட்ஸ் ஆச்சே.
    மத்த எட்டு கிரகம் பிரதிகூலமா இருக்க ஒரே ஒரு செவ்வாயோட பலத்துல எங்க ஊரு எம்.எல்.ஏ ஹேட்ரிக் அடிச்சாரு.

    எக்ஸ் பார்ட்டிக்கு செவ் தவிர மத்த கிரகமெல்லாம் அனுகூலம் ஆனாலும் பப்பு வேகலை.

    நீங்க தூள் பண்ணுங்க..

    டவுசர் பாண்டி said:
    June 27, 2011 at 3:25 pm

    சுகுமார்ஜியன்னே,

    ஒங்க சைட்ட ஓபன் பண்ணா ஷட்டர் மெதுவா தெறக்குதே? கொஞ்சம் எண்ண கிண்ண போட்டு வேகமா தெறக்குற மாறி வைக்கலாமுல்லா? சைட்டுல உள்ள ட்ராயிங்க்ஸ் அல்லாமே நச்சுனு கீது.

    டவுசர் பாண்டி said:
    June 27, 2011 at 3:19 pm

    சுகுமார்ஜியன்னே,

    ராசிபலன் சேப்டர் சூப்பர். நாலோட நிருத்திப்புடாதீங்க. கொரயவும் போட்டு சனங்க மனச நெரச்சிருங்கோ. நம்ம ராசி இன்னும் வரலேன்னு சனங்க (நானுந்தேன்) எதிர்பாத்துக்கிட்டு இருக்காங்கோ. மீதியவும் போட்டீங்கன்னா புண்ணியமாப்போவும்.

   S Murugesan said:
   June 28, 2011 at 5:53 am

   கல்யாண் ,
   தமிழ்வெளியில் சுகுமார்ஜீயின் “ஜூலை மாத ராசி பலன்” டாப் 9 ல வந்திருக்கிறதை பாருங்க. அஞ்சுவிரலும் ஒரே அளவுல இருந்தா காதுகுடைய கூட முடியாது.

   ஒவ்வொரு விரல் ஒவ்வொரு அளவுல இருக்கனும் அப்பத்தேன் கெட்டகாரியம் கூட பாசிபிள். (நோகடிக்கிறெனு நினைக்காதிங்க -எதையோ சொல்லிவாயடிச்சுட்டேங்கற ஃபீலிங் இருந்தா அது போயிரனும்னுதான் இந்த கமெண்ட்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s