சனிப்பெயர்ச்சி 2011 : 12 ராசிகளுக்கு பலன்+ பரிகாரம்

Posted on

12 ராசியில மேஷத்துக்கு மட்டும் பலனை கொடுத்து ச்சூ காட்டி விட்டுட்டதால 11 ராசிக்காரவுகளூம் டெலிபத்தில பண்ண டார்ச்சர் தாங்கமுடியலிங்ணா.

மனசாட்சி:
ங்கொய்யால எப்படியோ திருப்பதி வேலைய தொடராம ஒரு மேட்டரையாச்சும் கம்ப்ளீட் பண்ணியே ..

12 ராசிகளுக்குமான சனிப்பெயர்ச்சி பலன்+ பரிகாரம்+ எச்சரிக்கைகளை படிக்க இங்கே அழுத்துங்க.

Advertisements

10 thoughts on “சனிப்பெயர்ச்சி 2011 : 12 ராசிகளுக்கு பலன்+ பரிகாரம்

  టవుసర్ పన్డి said:
  June 26, 2011 at 7:47 am

  సుపెర్ నైనా.

  டவுசர் பாண்டி said:
  June 26, 2011 at 12:29 pm

  நேத்து தூங்கப்போறதுக்கு மிந்தி எனக்குள்ளாற செல்ப் கமெண்டு குடுத்தேன். அதாவ்து இன்னிக்கி நைநாவே பேட்டி எடுக்குறதுக்கு சித்தூருக்கு கூட்டிட்டுப்போன்னு சொன்னேன். தாளி ஒனக்கு ஓயாம ஓசிப்பயணம் கேக்குதான்னு கோச்சிக்கினு ஒரு நைட் ஷோ (மிட்னைட் ட்ரீம்) கூட காட்டாம கரண்டு கட்டான டிவி பொட்டி மாறி வெறுமனையே ராத்தூக்கம் முஞ்சது. பாத்தேன், இது சரிப்படாதுன்னு நென்ச்சி பகல் கனவுலேயே, நைநாவே பேட்டி எடுத்துர வேண்டியதுதேன்னு மைண்ட தட்டி வுட்டேனுங்க்னா. அதோட எபக்டுதேன் இந்த கமெண்டு. என்ன பேட்டிக்கி போயிருவோம? எடைல வெலம்பரம்லாம் வராதுங்க்னா. நான் ஸ்டாப்தேன்.

  நைனா இந்நேரத்துக்கு எங்கண இருப்பாருன்னு உல்மன்ச விட்டு ஆட்டோ செர்ச் பண்ணுனேன். ஒரு நிம்சத்துக்கப்பால திடீர்னு டவர் கெடச்சிச்சி. அந்நியன் படத்துல வர்ற மாறி கேமேராவ எறக்கி ஜூம் பண்ணுனேன். நைனா சாம கோதாவரி பள்ளி வழியா ராம் மண்டிர்க்கு வேகமா போய்க்கினு இருந்தாரு. நானு ஜூம் பண்ணுற கோயிலுக்குள்ள என்டராயிட்டாறு. நமக்குத்தேன் கோயிலுக்கு போற பலக்கமில்லியா அதன் வெளியில வெயிட் பண்ணிக்கினு இருந்தேன். நைனா சாமிய கும்புட்டுட்டு வெளிய வரச்சே அங்கனையே ஆரம்பிச்சிட்டேன் பேட்டிய.

  டவுசர்: கும்புடுறேன் சாமி.

  நைனா: வணக்கந்தம்பி. நல்லாருக்கீங்களா?

  டவுசர்: ஆங்.. நல்லாருக்கேன் சாமி.

  நைனா: நீங்க…….. (அப்டின்னு பாடகர் மாறி ராகம் போட்டார்)

  டவுசர்: (பதட்டத்துடன்) நான் ஒங்களோட சைட்டுல உள்ள வாசகன். அடிக்கடி கமெண்டு போடுவன்.

  நைனா: அதெல்லாம் சரி. ஒங்க பேர சொன்னாத்தானே எனக்கு ஞாபகம் வரும்.

  டவுசர்: எம்பேறு டவுசர் பாண்டி சாமி.

  நைனா: ஹே……… நீதானா அது. ஒன்னயத்தான் வலை வீசி தேடிக்கிட்டு இருந்தேன். ஏ…. என்னப்பா… சைட்டுல ஒன்னோட ரவுசு தாங்க முடியலப்பா. பாத்தா காலேஜ் ஸ்டூடன்ட் மாறி இருக்குறே. ஒன்னோட அலப்பர இருக்கே…

  டவுசர்: அப்டில்லாம் இல்ல சாமி.

  நைனா: இந்த வயசுல ஒனக்கு எப்படி ஜோதிடம் தெரியும்?

  டவுசர்: (பாட்சா படத்துல வர்ற ரசினி தம்பி மாறி படார்னு கைய மேல தூக்கி) எல்லாம் தானா வந்ததுங்க.

  நைனா: அய்யா டவுசரு, நம்மகிட்டே ரஜினி மாதிரி பிலிம் காட்டுறியா?

  டவுசர்: இல்ல நைனா. ஒங்கள்ட்ட சோசியத்துல உள்ள செல டவுட்டுகள கிளியர் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். (என்று பிளேட்டை திருப்பினேன்)

  நைனா: அப்டி என்ன டவுட்டுப்பா? தாராளமா கேளு. முடிஞ்சா சொல்றேன்.

  டவுசர்: இல்ல நைனா. இந்த ஏழர சனின்னு சொல்றாங்கல்லா. அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

  நைனா: ஓ…. அதானா. நான் என்ன ஏதோன்னு நெனச்சிட்டேன். இப்ப ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கிற ராசிக்கு பன்னிரண்டாவது ராசி, ஒன்றாவது ராசி, ரெண்டாவது ராசிகளில் கோச்சார சனி சஞ்சாரம் செய்வதையே ஏழரை நாட்டுச்சனின்னு சொல்லிருக்காங்க. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் ரெண்டர வருஷம் கணக்குல ( 3 X 2 1/2 = 7 1/2 ) இருப்பாரு. இப்ப உதாரணத்துக்கு சனி பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் போது பன்னிரண்டாம் வீடான கன்னி ராசிக்காரர்கள், சஞ்சரிக்கும் ராசியான துலாம் ராசிக்காரர்கள், இரண்டாம் வீடான விருச்சிக ராசிக்காரர்கள், இந்த மூணு ராசிக்காரங்களுக்கு ஏழற சனி நடக்கும்.

  டவுசர்: ஓ சரி சரி….. இப்ப பெரும்பாலும் அல்லா சோசியக்காரவுகளும் செம்ம ராசியவும், நச்சத்துரத்த வெச்சியும் மள மளன்னு மலை மாறி பலன்கள அடிக்கிட்டு போறாங்களே. அப்டி பாத்தா எழ்ற நடக்குற அம்புட்டு ராசிக்காரவுகளுக்கும் எபக்டு ஒரே மாரியாருக்கும்?

  நைனா: ஆங்… நல்ல கேள்வி. அனைவரையும் பாதிக்காது. பொதுவாக கோச்சார பலன்கள் எழுதும் பொழுது ஒரு தனி மனிதனுடைய ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகங்களையும் கணக்கில் கொண்டு பலன் எழுத வேண்டும். அப்பொழுதுதான், அந்த பலன்கள் அந்த மனிதனுக்கு பொருந்தும். ஒவ்வொரு தனிமனிதனின் ஜாதக அமைப்பும் வெவ்வேறாக இருக்கும். சந்திரனை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரே ராசியில் பலகோடி பேர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஏழரை ஆண்டு சனி காலத்தில் கஷ்டப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பெர்த் சார்ட்டிலுள்ள குருவோ, அல்லது கோச்சார குருவோ, கோச்சார சனியை பார்த்தால் அல்லது சேர்ந்தால் ஜாதகனுக்கு எந்தவித துற்பலன்களும் நடக்காது.

  டவுசர்: புரிலயே நைனா. இன்னும் கொஞ்சம் வெளக்குங்களேன்.

  நைனா: ஓ தாராளமா. இப்ப கோச்சார சனியை பிறந்த ஜாதகத்திலுள்ள (சனியின்) நட்பு கிரகங்களோ அல்லது கோச்சார நட்பு கிரகங்களோ பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ சனி கிரகத்தின் துற்பலங்கள் ஜாதகனை பாதிக்காது. இதுக்கு ஆப்போசிட்டா ஜாதகத்திலுள்ள (சனியின்) பகைக்கிரகந்களோ அல்லது கோச்சாரத்தில் உள்ள பகை கிரகங்களோ சனியை பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ கெட்ட பலன்கள் நடக்கும். அதே மாதிரி, குறு, சுக்கிரன், புதன் இந்த மூணு கிரகங்களும் ராகுவும் சனிக்கு நட்பாகும். செவ்வா, கேது, சூரியன், சந்திரன் இந்த நான்கு கிரகங்களும் சனிக்கு பகையாகும். இதன் படி கோச்சார சனியை, பிறந்த ஜாதகத்திலுள்ள குறு, சுக்கிரன், புதன், ராகு சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ நல்ல பலன்களே நடக்கும். அது போக, கோச்சாரத்தில் உள்ள குறு, புதன், சுக்கிரன், ராகு, கோச்சார சனியை பார்த்தாலும் நல்ல பலன்களே நடக்கும். கோச்சார சனியை, பிறந்த ஜாதகத்திலுள்ள, செவ்வா, கேது, சூரியன், சந்திரன் சேர்ந்தாலோ, அல்லது பார்த்தாலோ தீய பலன்களே நடக்கும். அதனால பலன் சொல்லும் பொழுது கொஞ்சம் பாத்து சொன்னாலோ (?), அல்லது சேர்ந்து சொன்னாலோ (??) நல்லாருக்கும்.

  அது போக ஜாதகத்துல தர்ம கர்மாதிபதி யோகம், கஜ(யானை)கசேரி யோகம் இருந்தால் ஜாதகனை ஏழரை சனி ஒன்றும் யானையை கண்ட பூனை போல் ஒன்றும் செய்யாது. பிறந்த ஜாதகத்தில் துர்யோகங்கள் இருந்தால் மட்டுமே ஏழரை சனியின் பாதிப்பை பார்ட்டிக்காரன் உணர்வான். குறிப்பா சொல்லனும்னா பிறந்த ஜாதகத்தில் சந்திரன் செவ்வாய் சேர்க்கை, சந்திரன் கேது சேர்க்கை இருந்தால் ஏழரை சனியின் பாதிப்பு அதிகமாக இருக்கும். குறு பார்வை சந்திரனுக்கு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு குறையும்.

  டவுசர்: இம்புட்டு நேரம் பொறுமையா பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி நைனா.

  நைனா: நன்றில்லாம் இருக்கட்டும். ஒன்னோட உண்மையான பேரே டவுசர் பாண்டிதானா?

  டவுசர்: இல்ல நைனா. என்னோட உண்மையான…………. (அதுக்கப்புறம் நாங்க பேசுனது பெர்சனலா போனதுனால இங்கன சென்சார் பண்ணிட்டேனுங்க்னா).

  டேங்சு நைனா, டேங்சு நைனா, டேங்சு நைனா……. இப்பிடி மாறி சொல்லிக்கிட்டு இருக்கும்போதே மூஞ்சில புளிச்சினு தண்ணி வந்து உளுந்தது. கண்ண தொறந்து பாத்தா எயித்தாப்புல என்னோட அம்மா.

  “நானும் அப்பத்துலருந்து பாத்துட்டு இருக்கேன் டேங்சு நைனா டேங்சு நைனான்னு தூக்கத்துலயே ஒளரிட்டு இருக்குற. என்னடா ஆச்சு ஒனக்கு. பள்ளி வாசலுக்கு கொண்டுபோய் தண்ணி தெளிக்கனுமாடா? ”

  “இல்லம்மா அப்டில்லாம் ஒன்னும் இல்ல என்று சமாளித்தவாறே மொட்டை மாடிக்கி சென்று வானத்தில் சிமிட்டிக்கொண்டிருந்த நச்சதிரன்களை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

   டவுசர் பாண்டி said:
   June 26, 2011 at 12:56 pm

   கனவுல நைனாவ எப்டி ஜூம் பண்ணேன்னு இந்த வீடியோவ http://www.youtube.com/watch?v=KGkRBsq2t3A லைட்டா ஓட விடாம பாத்துருங்க.

    Thirumalaisamy said:
    June 27, 2011 at 5:56 am

    திரு டவுசர் பாண்டி அண்ணே !!!
    நல்ல அணுகுமுறை …ஆனா நமக்கு அத பத்தி ஒன்னும் தெரியாது ( ஹையோ சோதிடத்த சொன்னேன் ) இருப்பினும் பதிவின் தெளிவையும் , நீங்கள் உரையாடல் போல எடுத்துரைத்த விதத்தையும் விரும்புகிறேன் ( செரி பாராட்டுகிறேன் வெச்சுக்கோங்க ) !!!

  டவுசர் பாண்டி said:
  June 26, 2011 at 3:20 pm

  இன்னா நைனா,

  நீ மிந்தி மாறி அடிக்கடி சைட்டுக்கு வராம சைடு வாங்கிக்கினே இருக்குற.

   S Murugesan said:
   June 26, 2011 at 5:11 pm

   பாண்டி !
   நான் ஏதோ பிரவுசிங் செலவுக்கு ஆகும்னு ஆன்லைன் ஜோதிட ஆலோசனை ஆரம்பிச்சேன். அது என்னடான்னா வீட்ல சிஸ்டம் வச்சு – நெட் கனெக்சன் வாங்கி -தந்தி வேலைக்கும் குட் பை சொல்லி ரவுண்ட் தி க்ளாக் வேலை செய்யற ரேஞ்சுக்கு போயிருச்சு.

   பதிவு போடறேனே அதான் ரிலீஃப். இந்த ப்ரஷராலதான் சபையில நடக்கிற ஜோதிட விவாதங்கள்ள கூட பார்ட்டிசிப்பேட் பண்ணமுடியலை.

  Thirumalaisamy said:
  June 27, 2011 at 5:44 am

  2 1/2 மணிக்கு ஒரு தரம் ( உங்க டயலாக் தேன் ) மார்ரதால யோ என்னவோ நிறைய மாற்றங்கள் ( பதிவுகள் பத்தி சொன்னேன் ) . ஆனா அதுலயும் தப்பு ஒன்னும் இல்ல , அத்தி பூத்த மாதிரி தொடர்புகள் ( பழைய பதிவுகளுடன் ) இருந்தாலும் , புதிய பதிவுகள் மிகவும் உபயோகமாகவே உள்ளது !!! நன்றி .

   S Murugesan said:
   June 27, 2011 at 9:37 am

   திருமலை சாமி,
   கடக ராசி/லக்ன காரனை நதியோட ஒப்பிடலாம். நதி போகும் பாதைய பார்த்து “ங்கோத்தா இதெங்கே கடலை போய் சேரப்போகுதுன்னு நினைச்சிருவாய்ங்க. ஆனால் க்ளைமேக்ஸ்ல கரீட்டா கடல்ல போய் கலந்துரும்.

   ஜோதிடப்பதிவுகள் எனக்கு உபயோகமானவை. ஒரு ரிவிஷன் மாதிரி .மேலும் என் மேதாவிலாசத்தை வெளிச்சம் போடறதால புது புது க்ளையண்ட்ஸ் கிடைப்பாய்ங்க.

   ஆனால் என் மனசு சுய நலத்தால் சுருங்குவதைவிட பொது நலத்தால் விம்முவதையே நான் விரும்புகிறேன்.
   இதுவும் சொந்த சரக்கில்லிங்கண்ணா.. ‘அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் தான்”

   எங்கோ ஏதோ ஒரு நெஞ்சம் எதை கேட்டு துடிக்கிறதோ அது என்னை வந்தடைய பதிவு உருவாகிறது.

  //கடக ராசி/லக்ன காரனை நதியோட ஒப்பிடலாம். //

  என்னோடது கடக ராசி …பூச நட்சத்திரம் 🙂
  (சும்மா ..சும்மா )

   S Murugesan said:
   June 27, 2011 at 2:42 pm

   அரை வேக்காடு அண்ணே,
   பெரியவுக சொம்மாவா சொன்னாய்ங்க.. “இனம் இனத்தோடு சேரும்”ன்னு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s