ஜோதிடம் என்பதை நான் இப்பொழுது மறுப்பதற்கில்லை… ஏன்?

Posted on

அன்பர்களே,

ஜோதிடம் தன்னை இகழ் என்று நம் மகாகவி பாரதியார் பாடிவைத்தார். அவரின் கவிதைகளின் வீச்சு அவரின் அற்புதமான அறிவு விளக்கத்தை காட்டும். அப்படியான பொழுதில் அவர் இவ்வாறு சொன்னதின் அர்த்தம், அதை தவறாக பயன்படுத்தாதே என்பதாகவே தான் இருக்கும் என்பது… என் விளக்கம்.

இப்பொழுது இந்த கலந்துரையாடல் மகாகவி பாரதியாரின் அந்த வார்த்தைகளை பற்றியல்ல.

நாம் வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் இழந்து வருகிறோம். தத்துவ விசாரணைகளில் சொல்வது போல நமக்கு மூன்றே பருவம். குழந்தை, இளமை, முதுமை…

குழந்தைப்பருவமும், இளமைப்பருவமும், அநுபவங்களை தேடித்தேடி கற்றுக்கொள்ளும் காலம். முதுமையிலும் அதே தொடர்தல் அந்தோ பரிதாபம். சிலருக்கு வேகமும், அலட்சியமும் முதுமை தொடங்கும் வரை இருக்கும். அந்த நாட்களில் எது சொன்னாலும், கவனத்தில் கொள்ளாது, எல்லாம் எனக்குத்தெரியும் என்பதாக கடந்து போய், பிறகு முதுமையில் வருந்துவதில் என்ன பலன் இருக்க முடியும். 99 சதவீத மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருப்பதாக நான் அறிகிறேன்.

வாழ்க்கை அப்பொழுதே வாழ்ந்து எழுதி முடிக்கவேண்டிய பரிட்சைகள் கொண்டது. புரிந்தவர்கள் அப்பொழுதே வாழ்ந்து களிப்பர். வாழ்வின் எந்த நிலையிலும் வருத்தமோ, துன்பமோ வராதிருக்கும் அற்புதமான வாழ்வில் வாழ்வார்கள்.

அந்த வழியில் இந்த ஜோதிடம் தன்னை இகழ்ந்ததும் நடந்திருக்கும். ஆம் நிச்சயமாக நான் சொல்லமுடியும். காலப்போக்கில் அது உங்களை தன் பக்கம் இழுத்திருக்கும். அப்படியே நீங்கள் ஜோதிடத்தை நம்பாமல் போனால் ஜோதிடத்திற்கோ, அல்லது கிரகங்களுக்கோ ஒரு பழுதும் இல்லை. நீங்கள் பிறக்காதபொழுதும் அவை இயங்கிக்கொண்டுதான் இருந்தன. நீங்கள் இறந்து மடிந்தபிறகும் அவை இயங்கிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன.

அப்படி நீங்கள் ஜோதிடத்தை நம்ப நேர்ந்த ஒரு சில காரணங்களை இங்கே பகிர்ந்துகொள்ள வாருங்களேன்….

உங்கள் கருத்துக்களை பகிர இந்த தளத்திற்கு வாருங்கள் asknrelief

மின்னஞ்சலில் தெரிவிக்க விரும்பினால் asknrelief

அன்பன் சுகுமார்ஜி

——————-

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

——————

கணிணி தொழில் நுட்ப வடிவமைப்பு, ஓவியம், மென்பொருட்கள் பற்றிய என் தொழில்நுட்ப தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.
என் தளமுகவரி: www.sugumarje.com
என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

Advertisements

One thought on “ஜோதிடம் என்பதை நான் இப்பொழுது மறுப்பதற்கில்லை… ஏன்?

    டவுசர் பாண்டி said:
    June 26, 2011 at 2:44 pm

    சுகுமார்ஜியண்ணே,

    தங்களது சேவைக்கு என்னோட வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s