ஜாதகம் பார்க்கலாமா?

Posted on

ந்த பதிவை பதிவேற்றும் பொழுதுதான்  “ஜோதிட தொடர் புதிர்” கான பின்னூட்டங்களை கண்டேன். எல்லாரும் ஒரு தினுசாத்தான் அலையிறாங்க…

நானோ, முருகேசனோ இதற்கெல்லாம் உண்ர்ச்சி வசப்படும் நபர்களில்லை. என்பெயரில் பின்னூட்டமிட்டால் என் ஒளிப்படம் கண்டிப்பாக வரும் என்பதை சக நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

இந்த அனுபவ ஜோதிடம் தளம் ஒரு நதிபோல… பிறப்பிடம் காண இயலாது. இதில் நீரைத்தவிர வேறு என்ன கலக்கிறது என்பதும் நதி அறியாது. அது பற்றி நதி கவலையும் கொள்ளாது. அதன் கடமை என்னேரமும் ஓடிக்கொண்டிருத்தல்.  வழியெங்கும் தாகம் தீர்க்க அதன் உபயோகம் இருப்பதுண்டு. அது சில வேளை பயிர்களுக்கும் பாயும், களைக்கும் பாயும். அதன் வேகத்தில் பாறைகள் மணலாக திரியக்கூடிய சாத்தியம் உண்டு. அதன் வேகத்தில் எதிர்நீச்சல் அபாயகரமானது….

இந்த உலகில் நல்லவர்களை மட்டுமே சூரியன் பொசுக்காது என்றால், இந்த உலகம் சுடுகாடத்தான் இருக்கும்.  என்வே இனிமேலாவது நான் என் களங்கங்களில் இருந்து விலகுவேன் என்று தீர்மானித்தலே நன்று.

ஹ்ம்ம்ம். விட்டால் பேசிக்கொண்டே இருப்பேன்…

இனி…Sugumarje_Caricaturist

இந்த பதிவை நான் எழுத ஆரம்பிக்கும் பொழுது கிழக்கே கும்பராசி உதயமும், கன்னிராசி அஸ்தமனமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதோடு சனிபகவானின் அஸ்தமனமும்.
திடீரென வானத்தைப்பார்த்து இதுவா? அதுவா என்று பார்த்து மகிழ்வது எனக்கு கண் வந்த கலை!?.

என் நண்பர் ஒருவர், சனி உச்சிவானில் இருக்கும் பொழுது கேட்டார்.

“இதை எப்படி சனின்னு சொல்றீங்க?”

“இந்த நேரத்தில், இந்த மாதத்தில் சனிதான் இருக்கும் என்பது பொது விதி. எனவே தான் இதை சனி என்று சொல்லுகிறேன்”

“ஹ்ம்ம்ம்”

ஜோதிட அறிவு என்பது ஒரு கணிதம். அதை புரிந்து கொள்ளுதல் இல்லாது அதிலிருந்து கிடைக்கக்கூடிய விடையை அனுபவிக்க இயலாது.

பொதுவாக வாய்ப்பாடு கூட 1 முதல் 12 வரைதான் இருக்கும். யாராவது ஒருத்தர் 16×12 எவ்வளோ? என்று கேட்டால் நாம்… இல்லை நான் யோசிப்பேன். ஆனால் விடை சொல்லிவிட்ட பிறகு ஒரு சந்தோசம் வருமே. அது போலவே ஒரு ஜாதகத்தை அலசி அதன் உண்மை காணும் பொழுதும் கிடைக்கும்.

முருகேசன் சொல்வது போல சரியாக சொல்லப்படுவது மட்டுமே ஜாதக அறிவு அல்ல. நாம் சொல்லும் பலன்களுக்கு சொல்லப்படும் மறுதலிப்பிலிருந்துதான் உண்மையான ஜாதக அறிவு பிறக்கிறது. ஒரு முறை என் நண்பரோடு இருக்கையில், (அவரும் ஒரு ஜோதிடர் தான்.) ஒரு ஜாதகம் பார்வைக்கு வந்தது. ஒரு 5 நிமிடம் நண்பர் கணக்கெல்லாம் போட்டுப்பார்த்துவிட்டு, ஜாதகனின் அடிப்படை குணநலன், தாய் தந்தை, சகோதர, சகோதரி, மாமன் உறவு எல்லாம் சொல்லிவருகையில், இல்லீங்க. இல்லீங்க. இல்லீங்க. என்றே ஜாதகர் சொல்லிக்கொண்டே வந்தார். நான் நண்பரை பார்த்தேன். மெலிதாக புன்னகைத்தேன். நண்பரும் புரிந்து கொண்டார். உடனே…

“இது காலசந்தி ஜாதகம், நீங்க போய் உங்களுடைய சரியான பிறந்த நேரத்தை கேட்டு வாருங்கள்… பிறகு பார்க்கலாம்.”

“ஓ. நான் பிறந்த நேரத்தை சொல்லக்கூடியவங்க இல்லிங்களே”

“சரி. கொண்டா…” என்றவாறு அந்த ஜாதகரின் சந்திரனிருப்பிடத்தையே லக்கினமாகக்கொண்டு பலன் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஏறக்குறைய சரியாக இருப்பதாகவே ஜாதகர் பாராட்டிச் சென்றார். இப்படியான சந்தர்ப்ப சாதகங்களையும் ஒரு ஜோதிடர் செயற்படுத்தவேண்டும்.

நான் ஜாதக ஆய்வு, பலன் சொல்லுவதை உப தொழிலாக பார்ப்பதற்கு மிகுந்த யோசனையாக இருந்தது. சித்தூர் முருகேசனும் அழைப்பு விடுத்தார். இதோ என்பயணம் இப்பொழுது அதை நோக்கி நடைபெறுகிறது. நான் காலத்தோடு எதிர் நீச்சல் போடுவதெல்லாம் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே நின்றுவிட்டது. என்னை அடிச்சுட்டு போறியா… அடி. கரையோரமா ஒதுக்குகிறாயா… ஒதுக்கு. சுழலில் சிக்கவைக்கிறாயா… சிக்கவை. எதற்கும் தயார் நான். இப்படித்தான் என் வாழ்க்கை.

“சுகுமார்ஜி… உன்வீடு பத்தி எரியுதய்யா” என்று யாராவது சொன்னால்… அப்படியா? எனக்கு சொல்றதுக்கு முன்னால் தீயணைப்பு நிலையத்திற்கு சொல்லிவிட்டாயா? என்று கேட்டு வேறு எந்த மாற்றமில்லாமல் இல்லம் வரும் ஆள் நான்.

அதைப்போலவே ஒரு சின்ன சின்ன அசைவையும் பார்த்து அதன் அர்த்தம் புரிதல் என்னிடம் அதிகமிருப்பதாக உணர்கிறேன். நீங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நான் உங்கள் வார்த்தைகளைவிட உங்கள் மனதையும், கண்களையும்,  வெளிப்படுகளையும் தான் கவனிப்பேன். உங்களின் உண்மை அறியமுற்படுவேன்.

என் வார்த்தைகளில் இருக்கக்கூடிய மெலிதான கிண்டல். கேலி யாருக்கும் புரிவதில்லை. அதாவது அந்த மனநிலையில் யாருமே இல்லை.

நம்மோடு அல்லது நமக்குள்ளே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் தன்னைத்தானே துன்புறுத்துவோர். இன்னொருவர் அடுத்தவரை மட்டுமே துன்புறுத்துவோர். மற்றொருவர் தன்னையும், பிறரையும் சேர்த்து துன்புறுத்துவோர்.

இந்த காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமூக உரையாடல்களில் சொல்லப்படாத வார்த்தைகளுக்கான அர்த்தங்களே புரிந்துகொள்ளப்படுகின்றன். எல்லா வாழ்வியல் பிரச்சனைகளுக்கும் இதுவே தான் காரணம். இதில் கொடுமை என்னவென்றால் இப்படியாக அறிந்துகொள்ளுதலே “அறிவு” என்று உணரப்படுவதுதான்.

பொதுவாக நான் ஜாதகம் பார்த்து பலன் சொல்லுவேன் என்பதே என்னைச்சார்ந்த நிறைய நபர்களுக்கு தெரியாது. இந்த உலகம் விசித்திரமானது. இல்லாதவர்களிடம் இருக்கு, இருக்கு என்று சொல்லும், இருப்பவர்களிடம் இல்லை, இல்லை என்று சொல்லும்.

ஆனால் காலத்தின் போக்கிலே செல்லும் என்னைப்போன்றவர்களுக்கு எந்த நேரமும் மாற்றம் தான். ஓஷோ சொன்னது போல “ஒரே ஆற்றில் நீ இரண்டு முறை நனைய இயலாது”. ஆக இந்த மாதம் முதற்கொண்டே கத்தரிகாய் கடைக்கு எதிர்கடையாக கருவாட்டு கடை வைக்காது கத்தரிக்காய் கடையே வைத்துவிட்டேன்.

அனுபவ ஜோதிட திலகம் சித்தூர் முருகேசனின் அனுபவ ஜோதிடத்தில் சுகுமார்ஜியின் சோதிட ஆய்வு… அந்த உயர்ந்த உள்ளம் வாழ்க வளமுடன்.

ஒரு மின்னஞ்சல் வந்தது. சித்தூர் முருகேசன் 250… நீங்க 499 ஆ? ஆ?

சித்தூர் முருகேசன் இப்பெல்லாம், “நேக்கு தெலுசுலேது”ன்னு சொல்றதுக்கு பதிலா “நாக்கு தள்ளுது”ன்னு சொல்றதா ஞாபகம். இந்ததொகை ஒருவித கட்டுப்பாட்டை தரும். அதோடு நான் ஒரு ஓவியமும் தருகிறேன் அல்லவா. அதனால்தான்.

அதோடு எந்நேரமும் கிரகங்கள் பிடியில் நான் இருந்தாலும், நான் அவர்களை பிடித்துக்கொண்டிருப்பதில்லை. (ஜி… ஓவரு) அதாவது கிரகங்கள் பற்றியோ, ஜாதகங்கள் பற்றியோ, படித்த நூல்களைப்பற்றியோ இருப்பதில்லை. (என்ன ஜீ சொல்லவர்ரீங்க) அதானப்பா பற்றி, பற்றின்னு சொல்லிட்டேனே. பற்றின்னா பிடித்துன்னு அர்த்தமில்லையா? எனவே கிரகங்களை பிடித்துக்கொண்டிருப்பதில்லை. அதுபாட்டுக்கு அது. நான் பாட்டுக்கு நான். ஹி.ஹி.

அதனால் தான் வினோத் தரும் போட்டியிலெல்லாம் கலந்து கொள்வதில்லை. என்னிடம் நீங்கள் திடீரென கன்னிக்கு ஏழாமிடம் என்னஜீ என்றால். யோசித்து… மீனம் என்று சொல்லவேண்டியது வரும். படக் படக்னு சொன்னா அறிவாளிதான் சொல்லமுடியும், அனுபவசாலி சொல்ல இயலாது. ஆனால் அனுபவசாலிவேசம் போட்டா வெளுக்காமல் போகாது.

நாம் படிக்கும், பெறும் எல்லா ஜோதிட விசயங்களிலும், விசயத்தோடு, ஆராய்ச்சியும் கலந்தே இருக்கிறது. விசயத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்ச்சியை தள்ளிவிடுதல் கூடாது.

சரி. இதை எல்லாம் படித்துவிட்டு… ஜி. இப்ப என்ன சொல்லவர்ரீங்க? என்று கேட்பார்கள். இதே கேள்வி சித்தூர் முருகேசன் பதிவுகளிலும் கேட்கப்படுகிறது. என்னைக்கேட்டால் நாட்டின் சட்டதிட்ட ஷரத்துக்கள்தான் நீங்கள் கேட்பது போல ஒரே சீராக இருக்கும். இந்த பதிவுகள், இதென்ன பஞ்ச தந்திர நீதி கதையா?

இது கூட மக்களிடம் இருக்கிற குறைகள் தான்.

எதைச்சொன்னாலும் சுருக்கச்சொல்லு என்கிற கதை… அதான் அம்மா கூட மம் ஆகிவிட்டது.  ம்….  அறிவை பெறுதலில் நேரத்தைச்சுருக்கி, பொழுதுபோக்கில் நேரத்தை விரித்துவிட்டோம் நாம்.

நல்லது, இனி ஜாதகம் பார்க்கலாம்.

அன்பன்
சுகுமார்ஜி.

———
இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief@gmail.com

———
கணிணி தொழில் நுட்ப வடிவமைப்பு, ஓவியம், மென்பொருட்கள் பற்றிய என் தொழில்நுட்ப தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.
என் தளமுகவரி: www.sugumarje.com
என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

Advertisements

6 thoughts on “ஜாதகம் பார்க்கலாமா?

  S Murugesan said:
  June 25, 2011 at 6:15 am

  //நாம் சொல்லும் பலன்களுக்கு சொல்லப்படும் மறுதலிப்பிலிருந்துதான் உண்மையான ஜாதக அறிவு பிறக்கிறது.//

  ” அடை மழையாய் பொழிந்தேன் – உம்மில்
  ஞான முடை தீரவில்லை
  முடை நாற்றம் குறையவில்லை”

  என்று கவிதை எழுதி கண்ணீர் விட்ட பார்ட்டி நான்.

  சுகுமார்ஜீ !
  உண்மையை சொல்கிறேன். இந்த ஒரு வரி போதும்.

  ” நீ எழுது..
  நீ எழுதியதில் எது பழுது?”
  என்ற என் வரி உண்மை என்று நான் உறுதி செய்துகொண்டேன்.

  தொடரட்டும் உங்கள் பணி. ஒழியட்டும் மடமைப்பிணி

  Thirumalaisamy said:
  June 25, 2011 at 6:55 am

  அய்யா ! மிகச்சிறந்த சேவை , நிச்சயம் பல உள்ளங்கள் உங்களின் அனுபவத்தின் மூலம் ஈகோ என்ற மேலுறையை கலட்டி வைக்கப்போகிறது …நன்றி .

  //நம்மோடு அல்லது நமக்குள்ளே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் தன்னைத்தானே துன்புறுத்துவோர். இன்னொருவர் அடுத்தவரை மட்டுமே துன்புறுத்துவோர். மற்றொருவர் தன்னையும், பிறரையும் சேர்த்து துன்புறுத்துவோர்.//

  அருமையான மனோதத்தவ வார்த்தைகள்.. வாழ்த்துக்கள் சுகுமார்ஜீ

  டவுசர் பாண்டி said:
  June 26, 2011 at 2:05 am

  சுகுமார்ஜியன்னே,

  வாழ்த்துக்கள்.

  சிவ யோகி said:
  June 27, 2011 at 6:29 am

  //நானோ, முருகேசனோ இதற்கெல்லாம் உண்ர்ச்சி வசப்படும் நபர்களில்லை. என்பெயரில் பின்னூட்டமிட்டால் என் ஒளிப்படம் கண்டிப்பாக வரும் என்பதை சக நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.//

  //“சுகுமார்ஜி… உன்வீடு பத்தி எரியுதய்யா” என்று யாராவது சொன்னால்… அப்படியா? எனக்கு சொல்றதுக்கு முன்னால் தீயணைப்பு நிலையத்திற்கு சொல்லிவிட்டாயா? என்று கேட்டு வேறு எந்த மாற்றமில்லாமல் இல்லம் வரும் ஆள் நான்.//

  அட நீங்க வேற…. என் வீடு பத்தி எரிஞ்சா …அதுல Wills சிகரெட் பத்த வைக்குற ஆளு நானு 🙂

  //இந்த உலகில் நல்லவர்களை மட்டுமே சூரியன் பொசுக்காது என்றால், இந்த உலகம் சுடுகாடத்தான் இருக்கும். என்வே இனிமேலாவது நான் என் களங்கங்களில் இருந்து விலகுவேன் என்று தீர்மானித்தலே நன்று.//

  நல்லது கெட்டது எல்லாம் இந்த உலகத்தில் இல்லை…..
  சூரியன் பூமிக்காக ஒளியை தந்து கொண்டு இல்லை….சூரியன் இயல்பு சுட்டு எரிப்பது….பூமி ஒரு குறிப்பிட்ட தொலைவில் உள்ளதால் …அந்த ஒளி பூமிக்கு நன்மை தருகிறது…. மற்ற கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் அல்லது மிக தொலைவில் உள்ளதால் பெரிய அளவில் நன்மை இல்லை…

  பூமி போல் இருப்பவர்களுக்கு நான் நல்லவன் …மற்றவர்களுக்கு நான் கெட்டவன்

  இந்த சிவ யோகி யின் சக்திக்கு எந்த களங்கமும் இல்லை…வெறுமனே சுட்டு எரிப்பது என் இயல்பு 🙂

  இப்போது பிரச்சினை சூரியனால் வர வில்லை …டவுட் தனபாலு என்ற சனியால் தான் வந்து விட்டது….
  சூரியனுக்கும் சனிக்கும் என்றும் ஒத்து வராது தானே…
  ஆமா…நீங்க என்ன குருவா ? ( I mean குரு ஆதிக்கம் பெற்றவாரா …மீன/தனுசு லக்கணம் ?? )

  PERUMALSIVAN said:
  June 30, 2011 at 6:27 am

  nallaa erukkuthu nandri !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s