நாங்களிருக்கிறோம்

Posted on

நேற்று… முன் அறிமுகமில்லா ஒருவரோடு பேசிக்கொண்டிருந்த பொழுது, தனக்கு நேர்ந்த சில கஷ்டங்களை சொல்லிகொண்டு வந்தார். நான் எப்பொழுதுமே நானாக வாயை திறப்பதில்லை. என் சிறுவயதில் ஏடாகூடமாக பேசி வாங்கிகட்டிக்கொண்ட அனுபவம், அப்படிச்செய்து விட்டது. சிலவேளைகளில் பலர் “நீ யாருய்யா, சம்மனில்லாம ஆஜராகிறே?” என்று கேட்டுவிட தயாராக இருக்கிறார்கள்.

வெளிப்பார்வைக்கு நான் அமைதியாக இருந்தாலும், சந்திரனும் அவரோடு கூடிய சனியும் என்னை அமைதியாகவே வைப்பதில்லை. சிந்தனைகள் சுழன்று கொண்டே இருக்கும். என் கைகள் ஏதேனும் வரைந்து கொண்டே இருக்கும். இல்லையேல் என் விரல்கள் ஏதேனும் தாளமிசைத்தபடியே இருக்கும்.

ஆகவே… எனக்கே தெரிந்துதான் கை, வாய் அடக்கமாக இருக்கிறேன்.

இத்தனை கட்டுரைகளில் ஒரு தடவை கூட என் ஜாதகம் சொன்னதில்லை. அதிலும் என் ஜாதகத்தில் வேறு சில ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு சொல்லப்போதே இல்லை. இந்த தளத்தை பொறுத்தவரை “உதாரணத்துக்கு என் ஜாதகத்தை எடுத்துக்க்ங்க… நம்மது கடக லக்கனம்…” என்று சொல்லி, சொல்லி, சொல்லி, சொல்லி, சொல்லிக்கொண்டே ஒரு பிம்பத்தை நம்ம சித்தூர் முருகேசன், ஒரு ஜாதக பிம்பத்தை பதித்துவிட்டார். அதை கலைய அனுமதிக்கலாமா?

எனக்கு அலைபேசுபவர் கூட,  “உங்க ஜாதகம் எனக்கு ஞாபகம் இருக்கு சார்… கடக லக்கினம் தானே… லக்கினத்துல சூரியன் இரண்டுல சந்திரன்… அதில பரிவர்த்தனை… ”

கிழிஞ்சது போங்க… சரி மேலே படிக்கலாம்…

நேற்று முன் அறிமுகமில்லா ஒருவரோடு பேசிக்கொண்டிருந்த பொழுது, தனக்கு நேர்ந்த சில கஷ்டங்களை சொல்லிகொண்டு வந்தார். நானும் எதிராளியின் மனம் நோகக்கூடாதே என்பதற்காக, சில “அப்படியா” “ஓ” “என்னாச்சு” “ அடடா”  “என்ன பண்றது” “கஷ்டந்தான்” என்பது மாதிரியான வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்களுக்குப்பிறகு… “நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்கிடாதீங்க.. என்னவோ, உங்களை பார்த்ததும் சொல்லணும்னு தோணுச்சி. அதான் மனசில இருக்கிற கொட்டிட்டேன். நான் வரட்டுமா தம்பி” என்றவாரே தளர்வாக திரும்பி நடந்தார்.

சில நேரங்களில், என் நெற்றியில் இடம் அதிகமிருப்பதால் வேறு ஏதாகிலும் எழுதியிருக்குமோ என்னவோ? பார்க்கும் புது நபரெல்லாம், ஏதேனும் பேச விழைவார்கள். அடடா! அய்யா! நான் அவர்களை சொல்லவில்லை… அப்படி அவர்கள் பார்த்து பேசி பழகியிருந்தால்… 12 பி பேருந்தில் நான் ஏறுவதற்கு பதிலாக, அது கூட என்மீது ஏறி இருக்கும். அதவிடுங்க. விசயத்துக்கு வாங்க…

ஏதோ எனக்கு ஓர் பிரச்சனை என்று அதில் குழப்பத்தோடு இருக்கும் மனிதர்கள் மட்டுமே என்னோடு தங்கள் பிரச்சனைகளை சொல்ல தயாராகிறார்கள். அவர்களுக்காக, அவர்களின் வார்த்தைகளை செவிமெடுத்து கேட்டு அவர்களை ஆறுதல் படுத்த என்னாலான ஒரு உதவி. அதற்கு தயாராகிவிட்டேன்.

ஒரு மனிதன் பக்குவப்படும் பொழுது, அவன் பேசுவதைக்கேட்க யாருமே இருப்பதில்லை. இந்த பக்குவம் காலத்தில் இறுதியில் மட்டுமல்ல, ஒவ்வொரு, நொடிக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆண், பெண், திருங்கை, சிறுவர், சிறுமி, இளைஞர், இளைஞி பேதமில்லை. இந்த பாஸ்ட் புட் காலத்தில் நாம் எம்பி 3 க்கு மட்டுமே செவிகளை திறந்து வைத்திருக்கிறோம். எந்நேரமும் அந்த பாடல்களாலேயே செவிகள் நிரம்பி வழிவதால் ஏனைய வார்த்தைகள் உட்செல்ல வழியில்லை.

திடீரென தோண்றிய இந்த எண்ணத்தை இதோ… இப்பொழுது சேவையாக செயல் படுத்திவிட்டேன். இதன் விபரம் கீழே தந்திருக்கிறேன்.

எனக்கும் வயது 41 ஆகிவிட்டது. என் அகராதியில் இந்தநாள் மட்டுமே… இருக்கிறது. நாளை என்பது என்னிடம் இல்லை. அது ஒருவேளை உங்களிடமிருக்கலாம். ஆகவெ என் வாழ்வில் ஏதேனும்… எனக்கு உதவும் இந்த மனிதர்களுக்கு ஏதேனும் என்னால் முடிந்த திருப்பி செலுத்துதல் இதுவாகும்.

இந்த உலகில் எவரின் உதவியும் இல்லாமல் நீங்கள் வாழவே இயலாது. நீங்கள் போட்டிருக்கும் சட்டை எடுத்துகொண்டால்…அது பருத்தியாக இருந்தால் அது இயற்கையின் கொடை. நவீன ரகமாக இருந்தால் அதை கண்டுபிடித்தவரின் உதவி, தனிப்பட தையலோ, முன்பே செய்யப்பட்டதோ, தையற்கலையரின் உதவி இப்படி நீண்டு கொண்டே போகலாம். அதற்கு நீங்கள் திருப்பி செலுத்துவது என்ன?

ஆக சேவை தொடங்கப்பட்டுவிட்டது.

இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், என் அமைதி நிறைய நபர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும். அதிலும் எனக்கு நிறைய அனுபவங்கள். ஒரு முறை புளி மூட்டை போல, கால் வைக்க இடமில்லாது (முன்பதிவு செய்ய தவறிவிட்டேன்) சென்னை சென்ற வேளையில் எல்லாருமே அனேகமாக பிதுங்கி வழிந்த வேளையில், ஒருவன் ஒரு 26 வயதிருக்கும் சொன்னான்

“இங்கே பாரு, இன்னொரு தடவ இப்படி கிணடல் பண்ற மாதிரி பார்த்த நடக்கிறதே வேற” என்றான். “என்னப்பா சொல்ற”“என்னமோ நீ மட்டும் நல்லா சொகுசா இருக்கணும்னு நினைக்கிற. நானும் அப்போல இருந்து பாத்துனுகிறேன்” என்றான்.

அருகிலிருந்தவர் “ஏன்பா. இவரு என்னாப்பா பண்ணாரு? எல்லாருந்தேன் நசுங்கினுகிறோம், நீ என்னாமோ இவர போய் திட்டினுகீற” என்றார்.

நல்லவேளை முகத்தில் பால் வடியுது என்று சொல்லவில்லை. இல்லை என்றால் யாராவது காபி, டீ பூஸ்ட், ஹார்லிகஸ், போன்விட்டா போட்டிருப்பர்கள்.

வடிவேலுவை யார், யாரோ போட்டு தள்ளிய பிறகு புலம்புவது போல “ என்னடா நடக்குது இங்கே?” என்று புலம்பாத குறை.

இதே போல ஒரு வாடகை வீட்டின் உரிமையாளர் எங்களை, கூடிய சீக்கிரம் வீட்டை காலி செய்து கொடுங்கள், வீட்டை விலைக்கு பேசியாகிவிட்டது என்றார். நானும் ஒரு மூன்று மாதத்தில் என்று வாக்களித்துவிட்டேன். இரண்டு மாதமாக நல்ல வீடு, என் வருவாய்க்கு ஏற்ற… நல்ல வீடு கிடைக்கவில்லை. இதற்கிடையில் வீட்டு உரிமையாளாரின் சகோதரர் என்னிடம் இரண்டு முறை சொல்லிவிட்டு போனார். அதற்கு நான் இன்னும் வீடு அமையவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் எதிர்பார்க்கிறேன் என்றேன்.

அடுத்த வாரத்தில் அந்த ச்கோதரர் வந்தார். மீண்டும் அதே வார்த்தைகள். இரண்டு நாளில் தெரிந்துவிடும், எனவே காத்திருங்கள் என்று சொல்லி முடிக்கும் முன்னே

“என்ன கிண்டல் பண்றியா?, நான் எவ்வளவு சீரியஸா சொல்லிட்டு இருக்கேன், நீ என்னமோ, சிரிச்சுகிட்டே பதில் சொல்லிட்டு இருக்க… (அவர் வயது அதிகம்) ”

“ஏங்க, நாந்தான் சொல்ரேன்லங்க… இரண்டு நாள்ல முடிவுதெரியும்னு, வேற என்ன சொன்னேன் நான்” என்று அவரிடமே கேட்டேன்.

“அது தெரியுது, அதை சொல்லும்ப்போது என்னமோ முட்டாள் பயகிட்ட பேசுறமாதிரி பேசுற?” என்றார்

அடப்பாவிகளா… நான் அப்பாவிடா! என்று மனதில் சொல்லிவிட்டு,

“சரி… இப்ப என்ன உடனே காலி பண்ணணுமா… சரி…” என்று சொல்லிவிட்டு நான் என் அலுவலகம் சென்றுவிட்டேன்.

சொன்னபடி மூன்று மாதத்தின் இறுதியில் புதுவீடு புகுந்தேன்.

பொதுவாக காலத்தின் போக்கில் தன் சுயத்தை, அமைதியை, சந்தோசத்தை, தனித்துவத்தை இழந்து பரிதாபத்துகுரிய ஜீவனாக கடனாக வாழ்ந்து, தனக்கு நேர்ந்த அந்த பாதிப்பால் எதிராளியையும் சீர் குழையச்செய்யும் அந்த மனிதர்களுக்கு என்னாலான ஒரு உதவி செய்யலாமென்று நினைக்கிறேன்.  எனவே…

எந்த ஒரு மனிதரும், எந்த மன, உளவியல், உடலியல் பிரச்சனைகளுக்கு என்னை அணுகலாம். ஜாதகப்படியோ, அவரின் கேள்விகள் மூலமாகவோ, வேறு சில பொதுவான விபரங்கள் மூலமாகவோ நான் பதிலளிக்க காத்திருக்கிறேன். தனிப்பட்ட ரகசியங்கள் ரகசியங்களாகவே வைக்கப்படும்.

கண்டிப்பாக நேரடியாக அல்ல, அல்ல ,அல்ல.

அலைபேசியில் மட்டுமே, அலைபேசியில் மட்டுமே,
ஆலோசனை நேரம் பிற்பகல் ஒரு மணிமுதல், நான்கு மணிவரை… (Daily 1.00 pm to 4.00 pm only) அதற்கு பிறகு வரும் அழைப்புகள் தவிர்க்கப்படும்.

இந்த சேவை வரும் வியாழன் (23-06-2011) முதல் செயல்படுகிறது.

மேலும் விபரம் வலைத்தளத்தில் காணலாம். அந்த வலைத்தளத்தில் உங்கள் வேதனைகளை, கருத்துக்களை பகிரலாம்.
*இந்த சேவை வியபாரமில்லை. சேவை பொதுநலன் கருத்தில் மட்டுமே. *கட்டயமில்லை, தனி நபரின் விருப்பதிலேயே சேவை. *பணம் பெறுதல் அல்லது தருதல் இல்லை.*பணமோ அல்லது பொருளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. *தனிப்பட்ட ஒருவரின் விபரங்கள் காக்கப்படும். *குறிப்பட்ட காலம் தவிர வேறு எந்த காலத்திலும் இப்படியான சேவை வழ்ங்கப்படமாட்டாது. (Daily 1.00 pm to 4.00 pm only)*மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கப்படும். *விபரங்கள் தேவை இருப்பின் மற்றுறொரு நாளில் பதில் கிடைக்கும். *ஒருவரே மறுமுறை கண்டிப்பாக அழைக்கக்கூடாது. அவர் தவிர்க்கப்படுவார். *மறுசுழற்சிக்கு மூன்றுமாதம் காத்திருக்கவும். *அலைபேசி அழைப்பு, தொடர்புடைய தகவல் தொடர்பு நிலையத்தையும், இயக்குனரகத்தையும் பொறுத்தது.*அழைப்பு கிடைக்கமால் போனாலும், துண்டிக்கப்பட்டாலும் அதில் சேவை தருவோர் பொறுப்பாக மாட்டார். *எந்த வித முன், பின் விளைவுகளுக்கும் சேவை தருவோர் கட்டுப்பட மாட்டார். *வேறு எந்த வகையான சட்ட, வழக்கு, விசாரணைகளுக்கும் சேவை தருவோரை நிர்பந்திக்க இயலாது. *சேவை இயக்கமும், நிறுத்துதலும் சேவைதருவோருக்கே சொந்தமானது. *துளியும் பொருத்தமில்லா, விசயங்கள் அல்லது கேள்விகள் அறவே தவிர்க்கப்படும். அழைப்பும் துண்டிக்கப்படும்.*இந்த சேவைகள் குறித்து கைப்புள்ளைகளின் சந்தேகங்களுக்கு சேவைதருவோர் பதில் சொல்லவேண்டிய கட்டாயமில்லை.

குறிப்பு: இந்த சேவையில் தகுதியுடைய எல்லோரும் சேரலாம். வாருங்கள் தோழர்களே! ஒரு தனிமனிதனுக்கு சுகமளிப்பதில் ஒரு சமூகத்தை வளமாக்கும் உண்மை இருக்கிறது.

சேவைக்குறிய அலைபேசி எண்: +91 8124 99 76 98

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: asknrelief

சேவைக்கான வலைத்தளம்: asknrelief.blogspot.com

சேவையை நன்கு பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்…அன்பன்சுகுமார்ஜி
____________
ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.
____________

Advertisements

20 thoughts on “நாங்களிருக்கிறோம்

  Sankar Gurusamy said:
  June 21, 2011 at 9:36 am

  திரு சுகுமார்ஜி, இப்படிப்பட்ட சேவை சிந்தனை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாழ்த்துக்கள்.

  இது எல்லோரும் செய்துவிடக்கூடிய வேலை இல்லை என நினைக்கிறேன். இதில் சேர்பவர்களுக்கு ஆர்வம் மட்டுமல்லாமல் சில கிரக அமைப்புகளும் சாதகமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதற்கான கிரக அமைப்பு இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இதில் இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  எப்படிப்பட்ட கிரக அமைப்பு இருப்பவர்கள் இப்படிப்பட்ட ஆலோசனைகள் கூறும் சேவைக்கு சால பொருத்தமாக இருப்பார்கள் என்பதை தாங்களோ திரு முருகேசனோ விளக்கினால் அவர்கள் பங்கு பெற வசதியாக இருக்கும்.

  நன்றி…

  http://anubhudhi.blogspot.com/

   sugumarje said:
   June 21, 2011 at 2:30 pm

   வாழ்த்துக்கு நன்றி… எல்லோரிடமும் பகிந்து கொள்ளுங்கள் சங்கர் குருசாமி

  சிவ யோகி said:
  June 21, 2011 at 10:35 am

  //சில நேரங்களில், என் நெற்றியில் இடம் அதிகமிருப்பதால் வேறு ஏதாகிலும் எழுதியிருக்குமோ என்னவோ? பார்க்கும் புது நபரெல்லாம், ஏதேனும் பேச விழைவார்கள்//

  🙂 🙂

  //வெளிப்பார்வைக்கு நான் அமைதியாக இருந்தாலும், சந்திரனும் அவரோடு கூடிய சனியும் என்னை அமைதியாகவே வைப்பதில்லை. சிந்தனைகள் சுழன்று கொண்டே இருக்கும்.//

  பொதுவாக யோகி களின் சாதகத்தில் சனி சந்திர யோகம் உள்ளது….
  சனி சந்திரன் தொடர்பு இருந்து புதன் நன்றாக இருந்தால்…அவர்களின் சிந்தனை மாறுபட்டதாக இருக்கும்….
  சனி சந்திரன் தொடர்பு இருந்து புதன் வலு இழந்தால் ….அதிக பட்சமாக பைத்தியம் கூட பிடிக்கலாம் ….

  உங்களோடது தனுசு லக்கினம் ….( புதன் உச்சம் என்பது ஏற்கனவே போட்டு வாங்கியாச்சு )
  சனி சந்திரன் ரிஷபத்தில் …சரி தானே

  //இத்தனை கட்டுரைகளில் ஒரு தடவை கூட என் ஜாதகம் சொன்னதில்லை. அதிலும் என் ஜாதகத்தில் வேறு சில ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு சொல்லப்போதே இல்லை//

  அட …சும்மா சொல்லுங்க ஜி 🙂

   sugumarje said:
   June 21, 2011 at 2:42 pm

   ஹி.ஹி ஹி எதிர்பார்ப்புக்கு நன்றி… என் ஜாதகம் ஒரு நாள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும், நான் பிரபலமான பிறகு. அப்பொழுது உங்களுக்கு தானாகவே கிடைக்கும். (ரொம்ப ஓவரா இருக்கோ!? )

  வாழ்த்துக்கள் 🙂

   sugumarje said:
   June 21, 2011 at 2:44 pm

   என்னப்பா, Founder of அரைவேக்காடு மெத்தட்ஸ், ஒரே வார்த்தைல முடிச்சிட்டீங்க…!?
   நன்றி

  Ismail said:
  June 21, 2011 at 11:05 am

  வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே எம்மிடத்தில் வாருங்கள் நாம் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவோம். – இயேசு
  இந்த அவசர அழுத்தம் நிறைந்த உலகில் உங்களை போல நல்ல உள்ளங்கள் நிச்சயம் தேவை. என்ன ஒரு ஆச்சர்யம் பாருங்கள் இப்போது தான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் எனது மகனின் பள்ளியில் பேரன்ட்ஸ் மீட்டிங் கலந்துவிட்டு வந்தேன். அங்கு ஒருவர் இப்பெல்லாம் ஸ்கூல் படிக்கும் பசங்க கூட ரொம்ப பதட்டம மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கவுன்செல்லிங் ஆரம்பத்திலிருந்தே தந்தாக வேண்டும் என்றார்.
  உங்களின் பணி வாழ்க வளர்க. இறையருளும் குருவருளும் தங்களின் சேவைக்கு துணை நிற்கட்டும்

   sugumarje said:
   June 21, 2011 at 2:44 pm

   வாழ்த்துகளுக்கு நன்றி!

  Mani said:
  June 21, 2011 at 11:23 am

  வில்லோனை சொல்லால் வளை.

   sugumarje said:
   June 21, 2011 at 2:45 pm

   அய்யா மணி… எனக்கு சொல்றீங்களா, இல்லை உங்களுக்காகவே சொல்லிக்கிறீங்களா?

    Mani said:
    June 21, 2011 at 5:27 pm

    மற்றவர்களுக்கு சொல்கிறேன் ஜீ (உங்களை வளைக்க)

  டவுசர் பாண்டி said:
  June 21, 2011 at 2:23 pm

  சுகுமார்ஜியன்னே, சூப்பர் பதிவு. உங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்.

  //நம்மது கடக லக்கனம்…” என்று சொல்லி, சொல்லி, சொல்லி, சொல்லி, சொல்லிக்கொண்டே ஒரு பிம்பத்தை நம்ம சித்தூர் முருகேசன், ஒரு ஜாதக பிம்பத்தை பதித்துவிட்டார். //

  நைனா அப்டி சொன்னதுல தப்பில்லீங்க்னா. நாம புரிஞ்சிக்கிட்டதுல தப்பிருக்கலாமில்லியா? (இது ஜால்ரா இல்லீங்க்ணா)

   sugumarje said:
   June 21, 2011 at 2:48 pm

   நோ சீரியஸ்..
   சும்மா… நாங்க அப்படித்தான் கிண்டல் செய்துகொள்வோம்… எங்களையே கூட

    டவுசர் பாண்டி said:
    June 21, 2011 at 3:05 pm

    ஆஹா நாந்தேன் அப்ப தப்பா புரிஞ்சிட்டேனா?

    நான் சொன்ன டயலாக்க இப்ப எனக்கே ரிப்பீட்டாக்கிட்டீங்களே. சூப்பர் அருமையான பதில்.

    Mani said:
    June 21, 2011 at 3:15 pm

    அப்பாடா டவுசரு வந்துட்டியா இன்னிக்கு பூரா கிளாஸ் வெறிச்சோடி கிடந்தது எங்கடா டவுசரை காணோமேன்னு அல்லாரும் துக்கம் அனுசரிச்சிகிட்டு இருந்தோம். உன் கொரலை கேட்டதும் அட நம்ம டவுசர் சாகலை உசிரோடதான் இருக்குன்னுன்னு துள்ளிக் குதிச்சிகிட்டு வந்துட்டோம். நீ நல்லா இருக்கனும். ஒனக்கு ஒன்னும் ஆவாது டவுசரு. அந்த ஆத்தா உனக்கு துணையிருப்பா. நாங்க துணையிருக்கோம். வர்ட்டா….

    டவுசர் பாண்டி said:
    June 22, 2011 at 3:38 am

    மணியண்ணே,

    நான் தினம் தினம் செத்து செத்துதான் மறு பொழப்பு பொழச்சிட்டு இருக்கேன். எப்டிங்கிரீங்களா? நானு கும்பக ப்ரானயாமான்குற ஒரு பேட்டைல டெயிலி உள்ளே வெளியேன்னு வெளாட்டு காட்டிக்கினு, அரட்டுனா மொரண்டு புடிக்கிற நம்ம மூச்ச அது போக்குலயே போயில் அரமன்னேரம் உள்ள மெதுவா நவத்துவாரம் வழியா எச்கேப்பாவாத அளவுக்கு கன்ட்ரோல் பண்ணி பண்ணி மரணத்தின் விளிம்பை எட்டியிருக்கிறேன். இந்த வெசப்பறிச்சைல நானு எப்ப மூர்ச்சையாயி சாவேன்னு தெரில. ஆனா நான் யோவத்துல சஹாஸ்ராரத்த ரீச்சாவாம என்ன மேல அனுப்பிராதன்னு என்னோட உள்மனசுட்டயும் ஆத்தாட்டாயும் ஒப்பந்தம் பேசி கையெழுத்து வாங்கிருக்கேன். ஆனா உடுக்க சவுண்டு எப்பயும் நம்ம காதுல கேட்டுக்குநேதான் இருக்கும். அதனால கவலைப்படாதீங்க ராசா.

  Thirumalaisamy said:
  June 22, 2011 at 5:32 am

  மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா !!!
  நிச்சயம் இந்த சேவை அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் மகிழ்ச்சி. ..

  krishnamoorthy said:
  June 23, 2011 at 7:54 am

  மனசு எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்கும் சுகுமாரை போல .ஆனால் நல்லதாகவே இருக்கும் .
  என்றென்றும் அன்புடன் ,
  சுகி …

  PERUMALSIVAN said:
  June 30, 2011 at 6:42 am

  ////ஒரு மனிதன் பக்குவப்படும் பொழுது, அவன் பேசுவதைக்கேட்க யாருமே இருப்பதில்லை///

  entha vaaarthagal elaam eppadi sikkumenraal santhiran ,puthan , sukkiran ethula ethaavcathu oru paartiyaavathu ungalukku utchamaaga erukkunum.
  sariyaa????????? anne!!!!!!!!

  super lines !

   S Murugesan said:
   June 30, 2011 at 6:54 am

   பெருமாள் சிவன் !
   ////ஒரு மனிதன் பக்குவப்படும் பொழுது, அவன் பேசுவதைக்கேட்க யாருமே இருப்பதில்லை///

   பக்குவப்படறதுன்னா “எதை சொல்றது -எதை சொல்லாம இருக்கிறது” ங்கற ஜாலாக்கா சில பெருசுங்க நினைச்சு “அள்ளி விடறதால” தான் கேட்க ஆருமே இல்லாம போயிர்ராய்ங்க.

   நமக்கு 45 வயசு ஆகுது.. டீ சிகரட் கொடுத்து கேட்கிறாய்ங்களே.. சீக்ரெட் என்னடான்னா உண்மைகளை நிர்வாணமா நிறுத்தனும்.

   16 கஜம் பட்டு கட்டி நிறுத்தினா போடாங்கொய்யாலன்னிரும் இளைய தலைமுறை. காய் பக்குவப்படும்போது (கனியும் போது) எப்படி கிளியும், வண்டும் தேடி வருதோ அப்படியே மன்சன் நெஜமாலுமே பக்குவப்பட்டா இந்த ஒலகமே கேட்கும்.

   விவேகானந்தர் இன்னா சொல்றாருன்னா ஒரே மேட்டரை 14 வருசம் சொல்லு. 15 ஆவது வருசம் உன் சொல் வேதமாகும்.

   நம்மை பொருத்தவரை வே ஆஃப் ப்ர்சண்டேஷன் மாறுமே தவிர மேட்டரு மட்டும் மாறவேயில்லை. இதை படிக்கிற பெருசுங்க இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணிப்பாருங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s