சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்:சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)

Posted on

அண்ணே வணக்கம்ணே!
கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையாங்கற விளம்பரம் போல உங்களை ரெண்டு தாட்டி கேட்கனும்.ஏன்னா இந்த பதிவுல ஒன்னுக்கொண்டு தொடர்பில்லாத 3 பதிவுகள் அடங்கியிருக்கு. ஒன்னு தலைப்பிற்குரியது. ( சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்)

அடுத்தது பிரணாப் முகர்ஜி சாம்பர்ல ரகசிய காமிரா செய்தி குறித்த என் ஆய்வும் அதிரடி முடிவும்.

அடுத்தது நம்ம தமிழ் நியூஸ் சானல்களோட லட்சணத்தை பத்தினது. ஒழுங்கா படிக்காட்டாலும் கடைசி வரை ஸ்க்ரால் பண்ணிருங்ணா. ( வழக்கமா நாம பண்றதுதானே)

மேற்படி 3 பதிவுகளையும் ஒரே மூச்சில் படிக்க இங்கே அழுத்துங்க

Advertisements

12 thoughts on “சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்:சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)

  டவுசர் பாண்டி said:
  June 22, 2011 at 4:44 am

  ஒங்களுக்கு ஆவதவுங்க ஆருன்னு பாத்துருமா?

  இப்ப நாம பாட்டுக்கு நம்ம பாட்ட பாத்துக்குனு இருப்போம். ஆனாலு செளறு வந்து வோனுக்குனு வம்பு இலுப்பாங்க. செளறு ஆருன்னே ஒங்களுக்கு தெரியாது. ஆனாலும் ஒங்கள தேடி வந்து இன்சல்ட் பண்ணுவாங்க. இதுக்கு இன்னா காரணம்னா நாம போன சென்மத்துல செஞ்ச பாவ மேட்டருங்கதேன்.

  இப்ப சாதகரீதியா பாத்தாக்க போன சென்மத்துல செஞ்ச பாவ மேட்டருங்கள குறிக்கிறது எட்டாம் பாவம். இந்த எட்ட வெச்சி எட்டு போடுரவுகள கண்டுபுச்சிர்லாம்.

  சரி. நமக்கு ஆரு டிச்டபன்சு குடுப்பான்னு பாப்பம். ஒங்களோட செம்ம லக்னத்துக்கு எட்டாம் பாவத்த லக்னமாவோ இல்லாங்காட்டி ராசியாவோ வெச்சிருக்காங்களா உசாராயிருங்கோ. பார்ட்டிக்காரன் தேடி வந்து வம்புளுப்பான். அது போவ அந்த எட்டாம் பாவத்துக்குன்னு நச்சத்துற எழுத்து இருக்கும்லா அத தன்னோட நேமுல ஒப்பெநிங் லெட்டரா வெச்சிருக்காங்களா?. அது போவ எட்டாம் பாவத்தோட ஒனருக்குன்னு செல பட்டப்பேருங்க இருக்குமுல்லா அத வெச்சிருக்குரவுங்கல்ட்டையும் உஷார். அது போவ ஒங்களோட எட்டாம் பாவத்தோட தசைய நடப்பு தசையா வெச்சிருக்குரவுங்கல்டையும் சாக்கிரத.

  சரி. அப்டி பாத்தாக்க நேரிய வேறு இருப்பான்கல்லா?

  ஆமா?

  அப்ப அவிங்க அல்லாருமே நமக்கு ப்ராப்ளமா?

  இல்லீங்க்ணா. வேலியில போற ஓனான இழுக்குறதுக்கு முன்னாடி உசார் பன்னத்தேன் இந்த டிப்சு.

  அவிங்களால ஒங்களுக்கு எடஞ்சல் வருமான்னு பாப்பம்.

  எட்டாம் பாவத்துக்குரியவுங்க கேந்துரத்துல இருந்தாலோ, இல்ல லக்னாதிபதியோத் சேந்தாலோ, இல்ல லக்னாதிபதிய பாத்தாலோ எழ்ரதேன். அது போவ எட்டுக்கு ஒனறு பத்துக்குள்ள ஒனர பாத்தாலும் “எப்ப வரும் எப்டி வரும்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரீட்டா வரும்”

  எப்ப வரும்னு பாத்தாக்க, எட்டுக்குள்ள தசா நடக்கும்போது, எட்டுக்குள்ளவரோட சாரத்துல ஒரு கெரகம் நின்னு தசா நடத்தச்சில……………… அட போங்கப்பு. ரொம்ப ஒழப்பி ஒளப்பி நாக்கு தள்ளுது.

  டவுசர் பாண்டி said:
  June 22, 2011 at 5:19 am

  கைரேகைய பத்தி எழுதனும்னு நெனச்சாக்க நல்ல கை கெடைக்க மாட்டேங்குது. சரி நம்ம கைய ஸ்கேன் பண்ணி போடலாம்னு பாத்தாக்க நம்ம கை அல்லகையாகீது. கைய வெச்சி வாழ்க்கைய பத்தி சொல்லலாம்னு பாத்தாக்க நல்ல ஸ்டில்லு கெடைக்க மாட்டுக்கு. சரி போட்டும்.

  நமக்கு சுக்கிலம் வெளிய போயி ஒரு வருசத்துக்கு மேலாச்சி. ஒரு எழவும் புரிய மாட்டுக்கு. மொதல்ல அது என்ன கண்ட்ரோல் பண்ணிச்சி. நாமதேன் அடங்காத கேசாச்சே. இப்ப அது என்ன கண்டிசன்ல கீதுன்னே தெரில.

  ஆம்பளைங்க சாதகத்துல விந்துவ குறிக்கிறது சுக்கிரன். இந்த விந்துள உள்ள உயிரணுக்கள குறிக்கிறது சூரியன். அதேமாரி பொண்ணுங்க சாதகத்துல கருமுட்டைய குறிக்கிறது சுக்கிரன். சோ, சுக்கிர பகவான் இங்கன அல்லது அங்கனயாச்சும் நல்லாருக்கணும். பொதுவா சூரியன் சுட்டெரிக்கும். சுட்டெரிக்கிற சூரியனும் சுக்கிரனும் ஒரே நச்சத்துரத்துல விந்துள உள்ள உயிரணுக்கள நீர்க்க வெச்சிரும்.

  அதே மாறி சுக்கிரனும் சந்திரனும் ஒரே பாதத்துல இருந்தாலும் தண்ணி மாறி நீர்த்துரும். உயிரணுக்கள் எண்ணிக்கைய கொறிக்கும். அதே மாறி பொன்னுன்ன்க சாதகத்துல சுக்கிரனும் சந்திரனும் ஒரே பாதத்துல இருந்தா கருமுட்ட கர்ப்பபையில தங்காது. ஏன்னா சந்திரன் ஒரு நீர்க்கேரகம்னு நமக்கு தெரியுமே. இந்த மாரிருந்தா வெள்ளின்னு ஒரே டிசீஸ் சொல்லுவாங்க அது இருக்கும். அது போவ இதுல முக்கியமான மேட்டரு இன்னான்னா இந்த மூணு பார்ட்டியும் (சூரி,சுக்கி,சந்தி) எனிமீஸ் என்பது நோட் பண்ண வேண்டியது.

  சுக்கிரனுக்கு மொத கோணத்துல (ஒன்னஞ்சி ஒம்போதுல) இல்லாங்காட்டி ரெண்டாவது கோணத்துல (ரெண்டாறு பத்து) ராகு இருந்தா கர்ப்பத்துலையே கரு அழியும், அதாவது குழந்தை இறந்து பிறப்பார்கள். அப்டி மீறி வெளிய வந்தாலும் ஆயிசு கொஞ்சம்.

  அதே மாறி கேதுவும் இத மாறி (மேல சொன்ன மாறி) இருந்தா கர்ர்ப்பபைல அடப்பு இருக்கும். இல்லேன்னா கர்ப்பப்பை சின்னதாருக்கும். இதனால குழந்தை பிறப்பு தடைய உண்டு பண்ணும்.

  அதே மாறி சூரியனுக்கு மேல சொன்ன மாறி (!) ராகு இருந்தாலும் கர்ப்பத்துலையே கருவ பாதிக்கும். கேது இருந்தா தடைய உண்டாக்கும்.

  இந்த புத்திர தோசத்த உண்டாக்குறதே ராகுவும் கேதுவும்தான். இந்த ராகு ஒரு பக்கம் காலரா தூக்கி விடுற மாறி இருந்தா இன்னொரு பக்கம் கேது டவுசர கலட்டிருது. அட போங்கப்பு… இந்த வெளாட்டுக்கு நா வரல.

  டவுசர் பாண்டி said:
  June 22, 2011 at 5:24 am

  நானு அவுத்து உடுற மேட்டர படிச்சிக்கினு நீங்களா சட்டு புட்டுன்னு முடிவேடுத்துராதீங்கோ. எதுக்கும் நைநா மாறி பெரிய சொசியக்காரவுகல்ட்ட சாதகத்த காட்டி கண்ணாலத்த முடிங்கோ.

  Ismail said:
  June 22, 2011 at 5:50 am

  அய்யா
  எனக்கு ஒரு சந்தேகம். கோசார பலன்கள் பார்க்கும் போது ராசியை மையமாக துவக்கமாக வைத்து பார்ப்பது பரவலாக உள்ளது. பத்திரிக்கைகளில் குரு சனி பெயர்ச்சி பலன்கள் ராசியை ஆரம்பமாக வைத்தே சொல்லப்படுகிறது. ஏன் லக்னத்தை மையமாக வைத்து பார்ப்பதில்லை.

   S Murugesan said:
   June 25, 2011 at 3:52 am

   இஸ்மாயில்,
   லக்னம் ராசி சப்ஜெக்ட் ஏற்கெனவே ஒரு தாட்டி டிஸ்கஸ் ஆயிருச்சு.

   லக்னம் என்பது உடலை – ராசி என்பது மனதை காட்டும். லக்னம் சூரியனின் நிலையை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படும். ராசி சந்திரனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. கோசாரம் என்பது தற்காலிக மாற்றம். சிறு சிறு காரணங்களாலும் உடனடி மாற்றத்துக்குள்ளாவது மனதில் இயல்பு.
   (மனம் உடலையும் பாதிக்கும் என்பது வேறுவிஷயம்.) எனவே கோசாரம் சந்திர ராசியை அடிப்படையாக கொண்டு சொல்லப்படுகிறது. இது பொதுவிதி.

   அதே சமயம் இன் ஜெனரல் மனிதன் பேசிக்கலா 30 வயதுவரை உடலுக்கு அடிமை. அதற்கு பின் தான் மனம் சொல்வதை கேட்க ஆரம்பிக்கிறான்.

   இது மனிதனுக்கு மனிதன் வேறு படும் நானெல்லாம் 19 வயசுலயே மனசு சொல்றத கேட்க ஆரம்பிச்சுட்டன். 90 வயசுலயும் உடல் சொல்றதை மட்டும் கேட்கும் பார்ட்டிங்க இருக்காய்ங்க. (உ.ம் பேத்தியை கற்பழித்த தாத்தா)

   இன்னொரு க்ளூ. லக்னாதிபதி -ராசியாதிபதிகள்ள யாரு பலம் பெற்றிருக்கானும் பாருங்க. ஒரு ட்ரெய்ல் ரன் மாதிரி கோசார பலனை லக்னம் -ராசி ரெண்டையும் அடிப்படையா கொண்டு 3 மாசமாச்சும் ஃபாலோ பண்ணுங்க. எது மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு தெரிஞ்சுரும். ( கோசாரத்துல செவ் நிலைய வச்சுப்பாருங்க – கான் க்ரீட் ரிசல்ட் வரும்)

   என் ஜாதகத்துலயே லக்னாதிபதி+ராசியாதிபதி பரிவர்த்தனை -சம பலத்துல இருக்காய்ங்க. ( சூரிய ,சந்திரர்கள்) . பகல்ல ராசி வேலை செய்யும் – ராத்திரியில லக்னம் வேலை செய்யும்.

  டவுசர் பாண்டி said:
  June 22, 2011 at 1:53 pm

  நேத்து நான் நம்ம முர்கேசு நைனா வூட்டுக்கு போனேன். அவரு ஊட்டுக்கதவ டொக்கு டொக்குன்னு தட்டுனேன். சத்தம் கேட்டு நாய் கொலச்சிச்சி. இன்னாங்கடா இது ஆளுங்க ஆரும் இல்லியான்னு தலைய திருப்பி சைடுல பாத்தா காலிங் பெல் சுச்சி இருந்திச்சி. ஒடனே பெல்ல அமுக்குனேன். ”கொடக்”குனு கதவு தொரந்திச்சி.

  பின்னாடி நைனா.

  திடீர்னு எலக்ட்ரிக் ஷாக் அடிச்சா எப்பிடி இருக்கும் அத மாறி பீல் பண்ணேன். காரணம், நைனா அதே செவப்பு சட்டயோட, அதே அரசியல்வாதி கும்புடோட என்னை வரவேற்கிறார்.

  நைனா: வாங்க டவுசரு. வாங்க. வாங்க. உள்ள வாங்க. (என்று வேகமாக கதவை திறக்க வந்தார். கேட்டின் முன் கொலச்சிக்கினு இருந்த நாயை வாயில் நுழையாத பெயரை சொல்லி போ என்று சொல்லியவாறே திறந்து, அவரது வீட்டின் வரவேற்பறைக்குள் என்னை அழைத்து சென்று உக்காருங்க என்று சோபாவை காட்டி உக்கார சொன்னார்.)

  நைனா: அப்புறம் டவுசர் என்ன இவ்வளவு தூரம். என்ன விஷேசம்?

  டவுசர்: இல்ல நைனா சோசியத்த பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்தேன்.

  நைனா: ஓ பேஷா பண்ணலாமே. (என்று சொல்லியவாறு தனது பார்வையை எதிரில் இருந்த கடிகாரத்தின் மீது செலுத்தினார்)

  டவுசர்: நீங்க பிசியா இருக்குறீங்கன்னு நெனைக்கிறேன். நான் வேணாம்னா அப்புறம் வரட்டுமா? (என்று தயங்கியவாறே கேட்டேன்)

  நைனா: (சுதாரித்தவாறே) இல்ல இல்ல மெனக்கிட்டு நம்மள தேடி வந்திருக்கிறீங்க. பரவால்ல இருங்க. என்ன தெரிஞ்சிக்கணும்னு சொல்லுங்க. (என்று சொல்லியவாறே என் தலைக்கு பின்னால் பிதாமகன் படத்தில் வரும் விக்ரமைப்போல் பார்த்தார்)

  டவுசர்: நைனா நீங்க சாதகம் கணிக்கிரதுக்கு எபிர்மேரிஸ் வெச்சி கணிங்கன்னு சொல்லிக்குடுத்தீங்க இல்லியா, என்னிடம் சிலர் இதெல்லாம் எதுக்கு? இந்த மாறி செய்றது வெட்டி வேலை என்று சொல்றாங்களே.

  நைனா: அப்படி பார்த்தால் ஜோதிடம் பார்ப்பதே வெட்டி வேலைதான். அதை இவர்கள் ஏன் செய்கிறார்கள்? செய்வதை திருத்தமாக செய்ய வேண்டும். தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்ள முயற்சி செய்யணுமே ஒழிய இப்படி வெட்டி வேலை என்று ஒதுங்கிக் கொண்டால் அவர்களால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.

  டவுசர்: சரி நைனா, இப்ப கொயந்த பெறக்குரத ஆன்காலம் பொன்காலம்னு பிரிச்சி சொல்றாங்களே. எப்டி அது நடமொரைக்கி கரீட்டா வருமா? அதப்பத்தி சொல்லுங்களேன்.

  நைனா: ஆங்… நல்ல கேள்வி. அது சரியா வராது என்பதுதான் என்னோட கருத்து. காரணம் ஸ்டேண்டர்ட் டைம் அமைப்புதான். பொதுவா ஆண் காலம், பெண் காலம் என்ற கணக்கீடு சுதேச மணியின் அடிப்படையிலான் நாழிகையில்தானே ஒழிய ஸ்டேண்டர்ட் டைம பேஸ் பண்ணி கணிக்கிரதல்ல.

  டவுசர்: புரிலயே நைனா. கொஞ்சம் வெலக்கி சொல்ல முடிமா?

  நைனா: ஓ தாராளமா. (என்று சொல்லும்போதே காபி வந்தது) எடுத்துக்கங்க.

  டவுசர்: இல்ல நைனா வரச்சிலதேன் குச்சிட்டு வந்தேன். (நைனா தொடர்ந்து வற்புறுத்த காப்பிய ஒரு மண்டு மண்டினேன்) டேங்சு நைனா.

  நைனா: ஆங்…. சுதேச மணிய பத்தி கேட்டீங்க இல்லியா? இப்ப ஒரு உதாரணத்துக்கு சித்தூருல ஒரு ஆண் குழந்தை காலை ஆறு பத்துக்கு பிறந்ததாக வைத்துக் கொள்வோம். அதுவும் திங்கள் கிழமையில். இப்ப நாம சூரிய உதயமோ, சுதேச மணியோ கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அப்படியே நாழிகையில் கணக்கிட்டால், ஒரு நாழிகை நாற்பது வினாடியில் குழந்தை ஜனனம் என்றால் அந்த நேரத்தில் ஆண் காலம், பெண் காலம் பட்டியல் படி பெண் ஜனனம்தான் வரும். ஆண்குழந்தை பிறந்துள்ளது என்று பார்க்கும் பொழுது பல ஜோதிடர்கள் செய்யும் காரியம் என்னன்னா, இந்த நேரத்துக்கு ஆண் குழந்தை பிறக்காது, பெண் குழந்தைதான் பிறக்கும் என்று கூறி ஆண் காலத்தில் வரும்படியாக நேரத்தை சரி செய்து விடுகிறார்கள். அது எப்படி சரியாகும்?

  டவுசர்: ஆமா..ஆமா (என்று நைனா சொல்ல சொல்ல பாதி நேரம் மண்டைய ஆட்டவும் மீதி நேரம் ஆமா ஆமா என்று சொல்லிக்கொண்டும் இருந்தேன்)

  நைனா: ரொம்ப டீப்பா உள்ள போறேனோ?

  டவுசர்: இல்ல நைனா நல்லா தெளிவாத்தேன் சொல்றீங்க. சொல்லுங்க. அப்புறம்?

  நைனா: இப்ப சொல்லப்பட்ட நேரமான காலை ஆறு மணி பத்து நிமிஷம் என்பது சரியான கடிகார மணி, வானொலி நேரம் என்று டைம் குறித்தவர் சொல்கிறார். ஆனால் கடிகார மணி என்பது ரேகாம்சம் எண்பத்தி இரண்டு டிகிரி முப்பது நிமிடத்திற்கு சரியாக்கப்பட்டது. சித்தூர் என்னும் ஊர் எழுவத்தி ஒன்பது டிகிரி புள்ளி ஒன்பது நிமிடத்தில் உள்ளது. ரேகாம்ச வித்தியாசம் மூணு டிகிரி இருபத்தி இரண்டு நிமிடம் வருகிறது. ஒரு டிகிரிக்கு நான்கு நிமிடம் வீதம் பொது மணிக்கும் சித்தூரின் சுதேச மணிக்கும் வித்தியாசம் பதிமூன்று டிகிரி இருபத்தி எட்டு நிமிடம் வரும். அதாவது இந்தியன் ஸ்டேண்டர்ட் டைம் காலை ஆறுமணி பத்து நிமிடத்திற்கு ஒரு குழந்தை ஜனனமானால் உண்மையான குழந்தை பிறந்த நேரம் சித்தூரின் சுதேச மணிப்படி காலை ஐந்து மணி ஐம்பத்தி ஆறு நிமிடம் முப்பத்தி இரண்டு வினாடிகள் ஆகும். இப்ப இதை ரவுண்ட் பண்ணும்பொழுது ஐந்து மணி ஐம்பத்தி ஏழு நிமிடம் என்பதற்குதான் ஜனனம் ஆகும். இந்த பதிமூன்று நிமிடம் (பதிமூநு புள்ளி இருவத்தி எட்டு) விடப்பட்டு கணக்கீடு செய்தால் கணிதம் எப்படி சரியாக வரும்? ஜோதிடர் விருப்பத்திற்கு ஐந்து நிமிடமோ அல்லது பத்து நிமிடமோ கூட்டியோ அல்லது குறித்தோ போட்டுவிட்டால் சரியான பிறந்த நேரம் கண்டுபிடித்து விட்டதாக கூற முடியுமா டவுசரு?

  டவுசர்: நிச்சியமா முடியாது நைனா. ஆனா ஆரும் இத்த கண்டுக்கிட மாட்டேன்கிறாங்களே. இத்த ஒரு மேட்டர கண்டுக்குட மாட்டுக்காங்க. (என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கொசு என்னிடம் கேட்காமல் முகத்தில் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருப்பதை தடுக்க வேகமாக அடிக்க என்னை அறியாமல் உண்மையிலேயே என் மூஞ்சில அடிக்கச்ச வலி தாங்க முடியாம ஆ….நு கத்த…… கண்ண தொறந்து பாக்கேன்…………அடத்தூ………..இம்புட்டு நேரம் நாம கனவா கண்டோம்………. என்று மணிய பார்க்க மணி கரீட்டா காலைல ஆறு பத்து (!)….. வேக வேகமா எந்திச்சி பாத்ரூமுக்கு ஓடுனேன் வேற எதுக்கு? கடமைய முடிக்கத்தேன்.

  ஒகே. பாய். நாளைக்கி தூங்கும் போது கலர் கனவு வந்திச்சின்னா இங்கன வந்து அவுத்து உடுறேன்.

   டவுசர் பாண்டி said:
   June 24, 2011 at 3:21 am

   மணியண்ணே,

   நம்மள்ட்ட உள்ளதெல்லாம் கடைச்சரக்கு. காகிதப்பூ மனக்காதுன்னு நெனைக்கிறேன். நைனாதேன் பொதுவா சாதகத்த நோண்டி நுன்கேடுப்பாறு. இனி நாம அல்லாரும் சேந்து நைநாட்ட நுங்கேடுப்போம். ஓகேவா.

    S Murugesan said:
    June 24, 2011 at 5:23 am

    பாண்டி!
    நைனாட்ட நுங்கெடுத்தா பரவாயில்லை. நைனாவை நுங்கெடுத்துரப்போறிங்க

  Sudharsan said:
  June 22, 2011 at 5:14 pm

  Hai Murugesan sir,
  If any planet is in “Vargothammam”(placed in same sign in both rasi and navamsa),it is considered to be more powerful than lagna lord.Is this fact correct?Kindly clarify

  Mani said:
  June 22, 2011 at 5:18 pm

  அனுபவ ஜோதிட வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.

  முந்தைய பதிவு ஒன்றில் டவுசர் பாண்டி யாரு என்கிற ஆராய்ச்சியில் நான் சறுக்கிவிட்டேன். அநியாயமாக ஒன்றும் அறியாத டவுசர் பாண்டியை கண்டுபிடித்துவிட்டதாக பீற்றிக்கொண்டு அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பிவிட்டமைக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

  நான் அவரப்பட்டு நமது வாசகர் Yoghi என்கிற Superrsyed தான் டவுசர் பாண்டி என்று தவறாக கணித்துவிட்டேன்.

  உண்மையில் Supperrsyed மிக சாமர்த்தியமாக என்னை திசைதிருப்பி விட்டார்.

  டவுசர் பாண்டிக்கும் Yoghi என்கிற Superrsyed க்கும் உள்ள வித்தியாசம் எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

  நமது தளத்தில் டவுசர் பாண்டியின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறார். அதனையும் அவரது பின்னூட்டத்தையும் உங்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.

  //////////////////////////////////
  டவுசர் பாண்டி said…
  //தல, சதுர்த்தசிக்கும் பவுர்ணமிக்கு எடைல மொளச்சிக்கினேன். பொரக்கச்சிலையே என்கூட அல்லா மொள்ளமாரித்தனமும் கூடவே வந்து ஒட்டிக்கினு. என்னோட சாதகத்துல ஒரு கெரகமும் உச்சம் கடியாது. அல்லா சோசியக்காரவுகளும் என்னோட சாதகத்த பாத்துக்கினு இது தரித்திரம் புடிச்ச சாதகம்னுதேன் சொல்வாக. நீ இன்னா புச்சா ஏதும் சொல்ல போறீயா? தல எனக்கு ஒரு பலான ஆசை. இன்னான்னு கேளு. எனக்கு காளிதேவி அம்மனை நேருல பாக்கணும். அது முடியுமா முடியாதான்னு சொல்லு. இப்ப பிளாஸ் பேக்கு. மிந்தி ஒரு தாட்டி தீவிரமா காளி மந்திர உச்சாடனம் செஞ்சிக்கினு இருந்தேம்ப்பா. எண்ணூர தாண்டி போய்க்கினு இருக்கச்சுல சோன்னு மழை சின்ன இடியோட வந்து தியானத்த கலச்சிட்டுப்பா. இத ஒரு சாமி கைல சொன்னா, அவுரு ஒன்னோட சாதகத்துல மழைக்கு காரகன் சுக்கிரன் நீசம்னு சொல்லிட்டாருப்பா. நீ எதா இருந்த பாத்து சொல்லு கண்ணு.
  //////////////////////////////

  டவுசர் பாண்டி ஜாதகத்திற்கான இணைப்பு link-ஐ கீழே கொடுத்திருக்கிறேன்.

  http://imageshack.us/photo/my-images/716/tavusarjathakam.jpg/

  நம்ம டவுசர் மீன லக்னம், மகர ராசியில் பிறந்தவர்.

  ஆனால் Yoghi என்கிற Superrsyed விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்.

  அதனை அவரே கீழ்கண்ட பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார்.

  ////////////////////////////////////////////////
  yoghi May 5, 2011
  Reply
  விருச்சிக லக்னம் 8/11 க்கு அதிபதி 8ம் அதிபதியா பாவியாக‌வும் 11இல் லாபாதிபதியாவும் குலப்பம் பன்னிக்கிட்டு இருக்காரு(லக்னதுலயேதான் சூரியன்,புதன்,ஆட்ச்சிபெர்ர செவ்,உச்சம்பெர்ர ராகு எல்லரும் இருக்காங்க)
  நான்பாட்டுக்கு சிவனேன்னு என் குலத்தொல்ில பார்த்துக்கிட்டு இருந்தேன் இப்பொ ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு ((யோகி,கலியுக சித்தர்,மகான் முக்காலம் உனர்ந்தவர்)) எப்டிவேன சொல்லிக்கலாம்///
  என்னப்பார்த்து நீ பெரிய ஜோதிடரா வருவேன்னு சூட்ச்சுமம சொல்லிட்டாரு
  அதான் சும்ம இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி நானும் ஜோசியம் பாக்குரேன்ன கெலம்பிட்டேன்.
  /////////////////////////////////////////////

  இப்போது டவுசர் பாண்டிக்கும் Yoghi என்கிற Superrsyed க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று வாசகர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாக புரிந்திருக்கும்.

  டவுசரு என்னை மன்னிச்சிருப்பா. நீ சொன்னது உண்மைதான். எனக்கு யார பார்த்தாலும் டவுசரு பாண்டியாவே தெரியிறாங்க. நீ சொன்னபடி டாக்டரை போய் பார்த்தேன் அவரு என் தலையில கழண்டு கிடந்த ஸ்ரூவை டைட் பண்ணிவிட்டாரு அப்புறம் வந்து அனுபவ ஜோதிடம் தளத்தில் ஆற அமர உக்காந்து பார்க்கிறேன். அப்புறம் தான் தெரிஞ்சது டவுசர் பாண்டி வேற Yoghi என்கிற Superrsyed ங்கறவரு வேறன்ற உண்மை என் மரமண்டைக்கு உறைச்சது.

  சரி நான் ஏன் டவுசரை தேடறேன். டவுசர் மிக அருமையான விஷயங்களை தெரிந்தவர். அவர் எழுதும் ஜோதிட விஷயங்கள் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் இல்லை. ஓரளவிற்கு ஜோதிடத்தில் அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சாதாரண வாசகர்கள் ஒரு முறைக்கு பலமுறை படித்தால் மட்டுமே ஓரளவிற்கு புரியும்.

  மேலும் டவுசர் பாண்டி பின்னூட்டதிலேயே பொழைப்பை ஓட்டுகிறார். பிட்டு பிட்டாக எழுதுவதால் அவர் எழுதுவதில் தொடர்ச்சி இல்லாமல் யாருக்கும் புரியவும் இல்லாமல் அவரது திறமை வீணாகிப் போகிறது.

  அதனால் தான் நான் அவரிடம் கேள்விகள் கேட்பது போல் கேட்டு விளக்கமாக எழுத வைக்கிறேன். நாம் அனைவரும் அவரிடம் தனிப்பதிவாக போடலாமே என்று வேண்டுகோள் வைத்தும் டவுசர் அதனை நிராகரித்துவிட்டார். ஏன் என்றால் அவர் தர டிக்கெட்டாம், அரைகுறையாம், நாம் எதிர்பார்க்கும் விஷயங்கள் அவரிடம் இல்லையாம் இது அவரின் பதில்.

  அவர் தாழ்வு மனப்பான்மையால் அவ்வாறு பின்வாங்குகிறாரா? அல்லது அவரைப்பற்றிய விபரங்கள் தெரிய வேண்டாம் என்று பின்வாங்குகிறாரா? என்று தெரியவில்லை. உண்மையில் அவரைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம் என்னால் அவரது நைனாக்கிட்ட சொல்லிட்டு தனிப்பதிவு போடலாமே. நைனா மேலயே டவுசருக்கு நம்பிக்கையில்லாம போயிடிச்சா? என்னவோ தெரியலை.

  டவுசர் பாண்டி உங்களுக்கு நமது அனுபவ ஜோதிடம் தளத்தின் வாசகர்கள் அனைவரின் சார்பாக எனது வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் அறிந்த தெரிந்த விஷயங்களை உண்மையிலேயே பிறருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதைப்பற்றி நீங்கள் தனிப்பதிவில் எழுதலாம். அப்போது அது சம்பந்தமாக வினாக்கள், ஐயம், மேலாதிக்க தகவல்கள் அந்த பதிவின் பின்னூட்டத்தில் மற்றவர்கள் கேட்பார்கள். அதற்கு தாங்கள் விரும்பினால் பதில் அளிக்கலாம்.

  இதன் மூலம் உங்கள் விஷயங்கள் ஒரு முழுமையாக ஒரே பதிவில் பின்னாளில் நமது தளத்தை படிப்பவருக்கு உபயோகமாக இருக்கும். இங்கு உங்ளுக்கு எழுத விருப்பமில்லையென்றால் உங்கள் கடையில் எழுதலாம். லிங்க் மட்டும் இங்கே போட்டால் நாங்கள் அங்கு வருகிறோம்.

  செய்வீர்களா டவுசர் பாண்டி. இல்லை பழைய படி நானெல்லாம்………அப்படிங்கற புராணம் தானா.

   டவுசர் பாண்டி said:
   June 24, 2011 at 3:16 am

   மணியண்ணே,

   நீங்க சொல்றது அல்லாமே கரீட்டுதேன். எம்சாருட்ட சாதம் கேட்டீங்கன்னு வைங்க, அவ்ரு கேக்குற பார்ட்டிய பொறுத்து ஒடனே இன்ஸ்டன்ட் சாதகம் குடுப்பாரு. ஒரு வேல டவுசரும் ஒரு ப்ராடா இருக்குமோ. இன்னாங்கடா இது ஆரத்தேன் நம்ப. டவுசரு ஒரு டுபாக்கூருன்னு இம்புட்டு நாலு தெரியாம போச்சே.

  superrsyed said:
  June 22, 2011 at 6:54 pm

  தல சொன்னா மாதிரி போஸ்ட்மார்ட்டம் ஜோதிடர்கள் நெரையபேர் நம்ம தளத்துல உலாவுராமாரிகீது நடக்கப்போரத முன்ன்ககூட்டியே சொல்லக்கூடிய ஜோதிட சிரோன்மனிங்கோ யாருனா இருந்திஙகன்னா நம்ம ஜாதகத்த கொஞம் பாத்து பலன் சொல்லுங்கப்பு உஙலொக்கு புன்னியமா போவும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s