முதல்வரின் கொலைக்கு சதி

Posted on

முதல்வர்னதுமே உங்க மைண்ட்ல “அம்மா” தான் வந்திருப்பாய்ங்க. நான் எழுத வந்தது ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர் பற்றி.

அதே சமயம் அம்மா மேட்டரையும் போட்டு உடைச்சுர்ரன். மற்ற விஷயங்கள் எப்படியோ ஆனால் ஸ்பெக்ட்ரம் ஜி – இலங்கை மேட்டர்ல இர்ரிட்டேட் ஆகி விபரீதமா எதையாவது நடத்திருவாய்ங்களோன்னு பட்சி சொல்லுது.

சுப்பிரமணியம் ஸ்வாமி 60 :30:10 ன்னு பாகம் பிரிச்சாலும் ஸ்வாமிய ஆரும் கண்டுக்கிடமாட்டாய்ங்க. ஏன்னா அவருக்கிருக்கிற கிரெடியபிளிட்டி என்னனு நாட்டுக்கே தெரியும்.

ஆனால் ஜெ வை பொருத்தவரை சூப்பர் மெஜாரிட்டியோட ஆட்சில உட்கார்ந்து இண்டர் நேஷ்னல் மீடியாவோட கவனத்தை கூட கவர்ந்திருக்கிற பார்ட்டி.

அம்மா என்னடான்னா ஸ்பெக்ட்ரம் ஜிங்கற அனகொண்டா பாம்போட தலை தில்லியில இருக்கிற மேட்டரை மறந்துட்டு அது ஏதோ தயாநிதி மாறனுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட மேட்டருங்கற ஃபீலிங்ல போட்டு தாக்கிக்கிட்டிருக்காய்ங்க.

இதுல சிதம்பரத்தை வேற போட்டு தாக்கறாய்ங்க. மன்மோகனார் சரியா பயிட்டு தூக்கறதில்லைன்னு சிதம்பரத்தை பி.எம் ஆக்கப்போறாய்ங்கனு ஒரு ஹன்ச். இதை பிரேக் பண்ணத்தான் அம்மா சிதம்பரத்தோட தேர்தல் வெற்றியே டுபுக்குன்னு ஒரு வேட்டை போட்டாய்ங்கனு சொல்லிக்கிராய்ங்க.

இலங்கையில ராஜபக்சே ,பொன்சேகா ரிலேஷன் என்னவோ இங்கன சோனியா சிதம்பரம் ரிலேஷன் கூட அதேதான். சிதம்பரத்தை அவ்ளோ ஈஸியா விட்டு கொடுத்துர முடியாது. அப்படியே விட்டுக்கொடுத்துட்டா சிதம்பரம் வாய திறந்துட்டா டங்குவார் அறுந்துரும்.

இலங்கை மேட்டர்ல தில்லியோட இன்டரஸ்ட் என்னனு அல்லாருக்கும் தெரியும். கிட்ணரு ஆட்த்ஹுல குளிக்கிறச்ச கோவணம் ஆத்தோட போயிருச்சாம். அப்பம் திரௌபதி தன் புடவையில இருந்து ஒரு கஜம் துணியை கிழிச்சு போட்டாளாம்.

உடனே கிட்ணர் ” யம்மாடி இன்னைக்கு ஒரு கஜம் துணியை கொடுத்து என் மானத்தை காப்பாத்தினே. ஒரு சந்த்ர்ப்பம் வரும்போது ஆயிரம் புடவை கொடுத்து உன் மானத்தை நான் காப்பாத்துவேன்னாராம்”

அந்த மாதிரி ராஜீவ் மேட்டர்ல புலிகள் செய்ததுக்கு பழி வாங்க ஒரு இனத்துக்கே மெகா சமாதி ஒன்னை எழுப்பிட்டாய்ங்க. ஆனால் பாருங்க ஸ்ரீ பெரும்புதூர் சம்பவத்துல ராஜீவ் கூடவே இருந்து பரலோகம் போயிருக்கவேண்டிய மூப்பனார் எல்லாம் முடிஞ்சப்பாறம் வேட்டிய டப்பா கட்டாகட்டிக்கினு சீனுக்கு வந்து சீன் போடறார்.இதை என்ன ஏதுனு விஜாரிக்க துப்பில்லாம அவரோட வாரிசுக்கு மத்தியில மந்திரி பதவி. அவரு . தூத்துக்குடியிலருந்து இலங்கைக்கு கப்பல் விடறாரு.

என்னங்க இது சின்ன புள்ளத்தனமா இருக்குனு சலிச்சுக்காதிங்க. இதை விட சின்னப்புள்ளத்தனமா ரோசய்யாவை சி.எம் சீட்டை கிழிச்சு வெளிய அனுப்பினாய்ங்க தெரியுமோ? மைக்ரோ ஃபைனான்ஸ் காரவுங்க கெட்ட ஆட்டம் போட ரோசய்யா இதுக்கு பினனாடி இளவரசர், பட்டமகிஷில்லாம் இருக்கிறதை மறந்துட்டு ஆர்டினென்ஸ் பாஸ் பண்ண பார்த்தாரு. ஒடனே டெல்லில பிரணப்ஜி ரெஸ்பாண்ட் ஆகிறாரு. ஆர்டினென்ஸ் தூங்கப்போகுது ஒரு சில நாட்கள்ள ரோசய்யாவுக்கு கல்தா.

சரி இதுவாச்சும் கல்தாதான். ஆனால் ஜெ மாதிரியே டெல்லியோட ரோல் இருக்கிறது தெரியாம எங்க ஒய்.எஸ்.ஆர் வாய விட்டு அந்தரத்துலயே அந்தர்தியானமாயிட்டாரு.

கே.ஜி.பேசின்ல எரிவாயு கிடைச்சது. அப்பம் அம்பானி ப்ரதர்ஸ் பங்கு தகராறுல இருக்காய்ங்க. எரிவாயு பத்தி ப்ரஸ் கேட்டக்க ” இதை எங்கம்மா டிசைட் பண்ணுவாய்ங்க”னு சொன்னாரு ஒரு ப்ரதர்.

ஒய்.எஸ்.ஆர் சொம்மா வேடிக்கை பார்க்காம ” என்னா …அது.. இதென்னா ஒங்கப்பன் வீட்டு சொத்தா ஒங்கம்மா டிசைட் பண்றதுக்கு . இது தேசீய சொத்துடோய்”னு சவுண்டு விட்டாரு.

ஹெலிகாப்டரை வச்சு சில்மிஷம் பண்றது அம்பானி ப்ரதர்ஸுக்கு கை வந்த கலை. அண்ணன் தம்பிகளே ஒருத்தரு ஹெலிகாப்டர்ல இன்னொருத்தர் சர்க்கரை கொட்ட ஏற்பாடு செய்தவங்க.

ஒய்.எஸ்.ஆருக்கும் ஏற்பாடு பண்ணிட்டாய்ங்க. பத்து நிமிஷ கேப்ல வீட்லருந்து ஏர்போர்ட்டுக்கு வரவேண்டிய பைலட் 45 நிமிஷம் கழிச்சு வராரு. சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முந்தி பாரிய ரொக்கம் அவரோட அக்கவுண்ட்ல டெப்பாசிட் ஆகுது. சம்பவத்துக்கு அப்பாறம் ஆத்தரைஸ்டா அவிக ஃபேமிலிக்கு செக் தரப்படுகிறது.

ஆன கல்யாணத்துக்கு மேளம் எதுக்குன்னு நீங்க கேப்பிக. குழந்தை பிறந்திருக்கே. ஆமாங்ணா. மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஜெயபால் ரெட்டி தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர். ஆனால் பார்டர் ஃபீலிங்ஸையெல்லாம் இதுவரை காட்டினதே இல்லை.

ஆந்திர மானில காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவரா சத்ய நாராயணா அப்பாயிண்ட் ஆனாரு. அந்த ஃபங்சனுக்கு வந்த ஜெ.ரெட்டி ” நாம பிராந்திய வாதி -உப பிராந்தியவாதி கிடையாதுய்யா – நாம தேசீய வாதிங்க”ன்னு பேசினாரு.

பல்ப் மாட்டிக்கிச்சு. தெலுங்கான காரன்லாம் டென்டெக்ஸை உருவிர்ரம்னு பாய்ஞ்சாய்ங்க. என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும் நான் ஒரு மந்திரி பார்ட் ஆஃப் கவர்ன்மென்ட். நான் தெலுங்கானா பத்தி பேசக்கூடாது அது இதுன்னு டகுலு விட்டாரு.

இப்பம் என்னடான்னா லைன் அப்பே மாறிப்போச்சு. தெலுங்கானா பேட்ஜ் வச்சுக்கிறாரு. தெலுங்கானா தலைகளையெல்லாம் கூப்டு விருந்து கொடுக்கிறாரு.

இடையில என்ன ஆச்சுன்னு கேட்கிறிங்களா? மத்திய பொதுக்கணக்கு குழு அறிக்கையில ஆந்திரமானிலம் கே.ஜி.பேசின்ல கிடைக்கும் கேஸ் மேட்டர்ல ரில்லையன்ஸுக்கு சலுகை கொடுத்த வகையில பல லட்சம் கோடி நஷ்டம்னு ஒரு பாரா வந்திருச்சு.

என்ன சலுகைங்கறிங்களா? சிம்பிள் அரசுக்கு கொடுத்தே ஆகவேண்டிய கேஸ் பங்கை குறைச்சுட்டாய்ங்க. ரெண்டு விலைய கொஞ்சம் கூட்டிக்க அனுமதி கொடுத்துட்டாய்ங்க தட்ஸால்.

இப்பம் புரியுதா அன்னைக்கு மனோகராவுல சிவாஜி கணக்கா சீறின ஒய்.எஸ.ஆருக்கு ஏன் ஹெலிகாப்டர்லயே ஆப்பு வச்சாய்ங்கன்னு?

அது மேலிடத்தோட ஆசியோட நடந்ததா? -அபயத்தோட நடந்துதா? அல்லது ஸ்கெட்சே மேலிடம்தானா? போறவர் போய் சேர்ந்துட்டாரு இருக்கிறவுக உசாரா இருந்தா சரி. உசாரய்யா உசாரு ..ஓரஞ்சாரம் உசாரு.

Advertisements

24 thoughts on “முதல்வரின் கொலைக்கு சதி

  டவுசர் பாண்டி said:
  June 20, 2011 at 4:14 am

  சூப்பர் நைனா. ரொம்ப நாளைக்கப்புறம் அரசியல் மேட்டர் வந்திருக்கு. லேட்டா வந்தாலும் லேட்டேச்ட்டாத்தேன் இருக்கு.

  வினோத் said:
  June 20, 2011 at 4:36 am

  அரசியல் என்பதே.. கொலை வஞ்சகம் சூது.. இவற்றின் மொத்த உருவமா?

  Thiru said:
  June 20, 2011 at 5:58 am

  neenga sollrathu kooda nadanthuruku vayipu iruku

  வினோத் said:
  June 20, 2011 at 12:47 pm

  நன்றி தல.. இத பாருங்க…
  http://vaiarulmozhi.blogspot.com/2011/04/blog-post_5056.html
  சித்ரா மகள் மரணம்.. சித்ரா மகள் 15 வருடம் காத்திருந்து…
  பிறந்த.ஆடிசத்தால் பாதிக்கபட்ட குழந்தையாம் ..
  5ம் பாவம் புகழ் பெருகியது காரணமா?

   S Murugesan said:
   June 20, 2011 at 8:05 pm

   வினோத் ஜீ,
   இதை நாம எம்.ஜி.ஆர் மேட்டர்ல பார்க்கலாம்.( வாரிசில்லை -ஆனால் பெரும்புகழ்) கலைஞர் மேட்டர்ல பார்க்கலாம் ( முக.முத்து) என்.டி.ஆர் மேட்டர்ல கூட பார்க்கலாம்.அவர் புகழின் உச்சத்துல இருந்தப்ப தலைச்சன் தற்கொலை – சமீபத்துல கூட ஒரு வாரிசு தற்கொலை. உள்ளது எதுவும் உருப்படாததுங்க.

  வருகை பதிவு தோழர்களே..

  Name said:
  June 20, 2011 at 2:27 pm

  sugumarji nhm-la poe yatha yathayo azhuthi pathuttan onnum valaikku agala. vaera root sollunga.yannakku tamil typing tharium. thala pala edangalla sujathava gnappka padduthuraru.super. konjama josiyatha pathium ellunga CM.

  viji said:
  June 20, 2011 at 2:35 pm

  paeru poda maranthuttan. ( My comment is awaiting moderation.) ethu yappadi vanthathu.

  டவுசர் பாண்டி said:
  June 20, 2011 at 3:20 pm

  கும்புடுறேன் சாமி. இன்னிக்கி கைரேகைய ஒரு கை பாத்துருவோமா?

  இன்னிக்கி காலைல கைரேக சீக்ரெட்டுகள அவுத்து வுடனும்னு நெனச்சேன். ஆனா பாருங்க இந்த பாழாப்போன கரண்டு “இப்ப வாணாம் நைட்டு வந்து ப்ரீயா தட்டி வுடு” நு ஒரு சொல்லிச்சி. அதேன் இப்ப வந்துட்டேங்க்னா.

  கைரேகைய பொருத்தவறைக்கி ஆம்பளைக்கி ரைட்டு. செல பார்ட்டி லெப்டுக்கு இம்பார்டன்ஸ் குடுத்தா லெப்டத்தேன் பாக்கோணும். அதே மாறி தாய்க்குலங்களுக்கு ஒன்லி ரைட்டுதேன்.

  சரி. ஆம்பளைக்கி ரைட்டு மட்டும் போதுமாண்ணா அதான் இல்ல. ரைட்டு வந்து ராசிக்கட்டமா டீல் பண்ணுங்கோ. லெப்ட நவாம்சமா டீல் பண்ணுங்கோ. அதாவது ரைட்டுல செல ரேகைங்க க்ளியரா இல்லீன்னா லெப்ட வெச்சி அதோட பொசிசன பாத்துக்கங்க. அதாவது நாம வழக்கமா சாதகத்துல கேரகத்தோட பொசிசன அம்சத்துல பல்ஸ் பாப்போம்லா அத மாறி. ஓகேவா.

  சரி. இப்ப எந்தெந்த கெரகம் எந்தெந்த வெரல குரிக்கின்னு பாப்பம். இந்த ஷ்நாப்ப http://imageshack.us/photo/my-images/43/24375274.jpg/ ஒரு தாட்டி க்ளிக் பண்ணி பாருங்கோ. ரேகைய வெச்சே ஒரு சாதகம் எலிதுருவம்.

  இப்ப உதாரணத்துக்கு நைனா சாதகத்துல யோவக்காரன் குறு உச்சம். அதனால நைனாவோட ஆள்காட்டி வெரல் மேல பாத்துதேன் இருக்கும். அதாவது குறு உச்சம்னு படத்துல நைனா சொல்லாம சொல்றாரு. (சும்மா)

  இன்னாங்கடா அஞ்சி கெரகந்தேன் இருக்குன்னு கண்பீசாயிராதீங்கோ. நாளைக்கி வெலாவரியா டைப் பண்றேன் சாரி அவுத்து விடுறேன்.

  நாளைக்கி நீங்க டவுசருக்காண்டி எதிர்பாக்கணும்லா! அதுக்காண்டி ஒரு சின்ன அளப்பறைய இங்கன அலம்பிட்டு போயிடுறேன். சோசியக்காரவுகளுக்கு பேதியாக்குரதுக்காண்டி செல சீக்ரெட்டுகள சொல்றேன்னு தப்பா பீல் பன்னிராதீங்கோ. யாம் பெற்ற இம்பம் பெருக….

  சரி. தலைப்பு செய்திக்கு வந்துர்ரன்.

  வெறும் கையை வைத்து சாதகனின் பிறப்பு முதல் இறப்பு வரை துல்லியமாக ரேகை மூலம் தெரிந்துகொள்ள ஆர்வமா? உங்கள் அ.ஜோ. தளத்தை தொடர்ந்து வாசியுங்கள்.

  சந்துல சிந்து வரும். கைல லென்சோட இருங்க…….

  superrsyed said:
  June 20, 2011 at 5:05 pm

  தலை கைய்யில செவ்வா மேடுதான் தூக்கலா தெரியுது அதுல எதுனா குருக்கால ரேகை இருந்தா தெருச்சன்டை,ஆயுததால தாக்கப்படலாம்
  ரேகை இல்லாட்டி அதே சன்டையில தலைக்கு வெற்றி நிச்சயம்

   Mani said:
   June 20, 2011 at 5:11 pm

   ஏம்ப்பா சயீது நீங்க டவுசரா இருப்பீங்களோ! சும்மா நம்ம தலை கையை ஷோ காட்டும் போதே அவருக்கு பலன் சொல்றீங்களே. ரெண்டு கையையும் காட்னா அவரு கதையை முடிச்சிடுவிங்க போலிருக்கே.

  Sudharsan said:
  June 20, 2011 at 5:22 pm

  Hai mani sir,
  Thanks for your response in rajini’s article.It was excellent.I have one doubt.Which planets are responsible to make a man very brave and courageous?.Some people are very bold and some are very timid(lacking courage)?.can you clarify?

  Mani said:
  June 20, 2011 at 5:38 pm

  //Which planets are responsible to make a man very brave and courageous?.//

  ஒரு மனிதனின் வீரம், தைரியம் இவற்றை குறிக்கும் கிரகம் மட்டும் என்றால் செவ்வாய் கிரகம் தான்.

  செவ்வாய் பலம் பெற்றால் ஒருவன் எப்பேர்பட்ட கூட்டத்தையும் அடக்கி தனக்கு கீழே பணியாற்ற வைக்க முடியும். அரசியல்தலைவர்களுக்கு செவ்வாய், சூரியன் பலம் அதிகம் இருக்கும். மேலும் ராகு 3, 6ல் மறைந்து காணப்பட்டால் அவனது எதிரிகளை ஈவிரக்கம் இல்லாமல் பந்தாடுவர்.

  ஜாதகத்தில் 3ம் பாவம் வீரம், தைரியம், வீரியம், ஆளடிமை, சகோதரர்கள் முதலியவற்றை குறிக்கும். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதா?

  3க்கு அதிபதி கேந்தி கோணம் பெற்றாலும், 3ம் வீட்டுக்கு சம்பந்தம் பெற்றாலும் நல்ல தைரியவானாக, தன்னம்பிகை உடையவனாக, முயற்சிகளில் வெற்றிபெறுபவனாக இருப்பான். முக்கியமாக அதில் ம்ம்ம் பலே கில்லாடி மக்கா தான்.

  Mani said:
  June 20, 2011 at 5:43 pm

  /////Some people are very bold and some are very timid(lacking courage)?.can you clarify?////

  போல்ட் டைப் என்றால் என்ன என்னை மாதிரி ஔறுவாயனா. ஔறுவாயனுக்கெல்லாம் 2ம் அதிபதி அல்லது 2ம் வீடு அவுட் அவனே அவன் பேச்சை கேட்க மாட்டான் அப்புறம் எவன் அவன் பேச்சை கேட்பான்.

  timid என்றால் கோழையா? 3ம் வீடு பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது செவ்வாய் பலமிழந்து விட்டாலோ கரப்பான் பூச்சிக்கெல்லாம் உயிர் போய் உயிர் வரும்.

  Mani said:
  June 20, 2011 at 6:02 pm

  கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் காதல் நோயை கண்டுபிடிச்சேன். சிஷ்யா சிஷ்யா, இது சரியா சரியா. மானே தேனே மயிலே குயிலே என்று நீ உறங்கும் போது உளறல் சத்தம் கேட்டேன் இன்று.

  நான் ஆளானப்பட்ட ஜோதிட
  ரகசியங்களையே நோண்டி நுங்கெடுக்றவன் நம்மகிட்ட டவுசரு தப்பிக்க முடியுமா?

  டவுசர் பாண்டி-யும் நானே
  Superrsyed – ம் நானே
  Yogi – யும் நானே

  எப்பூடி டவுசரு உன் முகமுடி கலைஞ்சி போச்சா. இனிமேல ஒழுங்கா நேரடியாக விபரங்களை நம்ம அண்ணாச்சி பதிவுல போடனும். பின்னூட்டத்தில பதிவு போட்ட ஒதை பின்னிபுடுவேன் பின்னி படுவா. யாருன்னு நினைச்ச நம்பள.

   Mani said:
   June 21, 2011 at 5:04 am

   //உங்கள்ுக்கு செய்த தவ
   ற்ுக்கு மன்னிப்பு கேக்கனும் என்ன மன்னிச்சுடுங்க //

   என்னப்பா பெரிய வார்த்தையெல்லாம் கேக்குறிங்க. நீங்க என்ன தப்பு பண்ணிங்க நான் உங்களை மன்னிக்க. நான் உண்மையைச் சொன்னதால் எனக்கு தான் வருத்தமாக இருக்கிறது. பழைய கலாய்க்கும் டவுசர் பாண்டி இன்னிக்கு ஆப்சென்ட் நாம ரெண்டு பேரும் என்னமாய் கலாய்ச்சோம் இப்படி சைலணட் ஆகிட்டீங்களே.

   //உங்களுக்கு என்னா செய்வினை பன்னிருக்கென் ரதையும் கன்டுபிடிச்சுட்டிங்கன்னா//

   அடப்பாவி மக்கா இன்னாது செய்வினை செஞ்சிருக்கியா. ஐயோ கடவுளே இந்த அநியாத்தை பாருங்கோ. அப்பா நான் புள்ளகுட்டிகாரன் என்னிட உட்ருப்பா ஒனக்கு ஒரு புண்ணியமா போவும்.
   (எந்த செய்வினையும் என்னை ஒன்னும் பன்னாது. ஏன்னா நாம சிங்கமல்ல)

    superrsyed said:
    June 21, 2011 at 8:23 am

    மனியன்னே எவ்லோபெரிய ஜொதிட புலி நீங்கோ ஆனா உங்கல்ட்ட மரைவான விசயங்கள் பற்றிய ஞானம் கொஞ்சம் கம்மிதான்னெ நல்லா யொசிச்சு பாருஙக நீங்க என் தமிழை குரை சொன்னீஙலே அதுக்கப்புரம் என்னா நடந்துச்சு கிருஸ்துவர் மேட்டர்ல உஙகல சிக்கவச்சு இதே தளத்துல ஒஙகல பொது மன்னிப்பு கேக்கவச்சம்ல அது நம்ம செய்வினைதான் அதுக்குதான் மன்னிப்பு கேட்டென் மன்னிச்சுடுங்கன்னே

    Mani said:
    June 21, 2011 at 9:12 am

    பாண்டி நானெல்லாம் ஜோதிட புலியும் கிடையாது எலியும் கிடையாது. ஜோதிடம் நமக்கு ஒரு ஹாபி அவ்வளவுதான். அப்புறம் நீங்க தமிழ்ல எழுதறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்திங்க எப்படி இவ்வளவு அழகா சென்னை தமிழில் வெளுத்து வாங்கினீங்க. அப்புறம் நீங்கதான் முஸ்லீம் இல்லை தானே அப்புறம் எதுக்கு suppersyed ன்னு முஸ்லீம் பேரு வச்சிருக்கீங்க. உங்க நெஜ பெயரிலேயே வாங்க நிறைய விஷயங்களை ஜோதிட ரீதியா நாம இங்க அலசலாம் ஓ.கே. பழைய விஷயங்களை எல்லாம் மறந்துடுங்க. நானும் மறந்துட்டேன். ஓ.கே. வர்ட்டா…

    டவுசர் பாண்டி said:
    June 21, 2011 at 2:09 pm

    மணியண்ணே,

    லவ்வுல விழுந்த பொண்ணுங்களுக்கு ரோட்டுல போற வார அல்லாருமே அவளோட லவ்வரா தெரியுமாம். அந்த கதையாகீது. சோசியம் சொல்றதெல்லாம் இருக்கட்டும். மொதல்ல ஒரு நல்ல டாக்டரா போயி பாருங்க. போறதுக்கு மிந்தி அவர்ட்ட இந்த வார்த்தைய மனப்பாடமா சொல்லுங்க .

    “டாக்டர், எனக்கு யாரப்பாத்தாலும் டவுசர் பாண்டி மாதிரியே தெரியுது? இந்த நோயிக்கி என்ன பேரு? ரோட்டுல யாரு நடந்து போனாலும் அவுங்க டவுசரோட போற மாதிரியே தெரியுது? எனக்கு கண்ணுல கோளாறா? இல்ல மண்டைக்குள்ள ஏதாவது நட்டு கிட்டு கலண்டுருக்கான்னு செக் பண்ண முடியுமா? அப்டி கலண்டுருந்தா டைட் பண்ணிவிடுங்கள். ஏன்னா எனக்கு அனுபவஜோதிடம் என்ற வெப்சைட்டில் யாரைப்பாத்தாலும் டவுசர் பாண்டி மாதிரியே தெரிகிறது ”

    என்ன சொல்லுவீங்களா.நம்ம சைட்டுல வேற ஆருக்காச்சும் டவுசர் மேனியா இருந்தா அவிங்களையும் தொணைக்கி கூட்டிட்டு போங்கோ. செய்வீங்களா?

  Sudharsan said:
  June 20, 2011 at 6:08 pm

  thanks.

  //டவுசர் பாண்டி-யும் நானே
  Superrsyed – ம் நானே
  Yogi – யும் நானே//

  அப்பூடியா ?
  கண்டுபிடிச்ச மணி சாருக்கு ஒரு ஓ…

  //பழைய கலாய்க்கும் டவுசர் பாண்டி இன்னிக்கு ஆப்சென்ட் நாம ரெண்டு பேரும் என்னமாய் கலாய்ச்சோம் இப்படி சைலணட் ஆகிட்டீங்களே.//

  டவுசரு பாண்டி அண்ணே (சும்மாகாட்டி ஒரு மரியாதை )
  பெயரில் என்ன இருக்கு…….
  நீங்க டவுசுராவே வந்து கலக்குங்க….
  உங்க பேரு எங்களுக்கு முக்கியம் இல்லை….உங்க அனுபவம் தான் முக்கியம்…..
  அது தான் எங்களுக்கு வேணும்…..

  நான் கூட விஜயகாந்த் -நு பேருல ஒரு இரண்டு கமெண்ட் போட்டேன்….
  அப்புறம் குடு குடுப்பை காரன் என்ற பேருல இரண்டு கமெண்ட் போட்டேன்….
  ம்….இன்னொரு பேருல அடிக்கடி கமெண்ட் போட்டு கொண்டு உள்ளேன்….ம்…அதை பற்றி இப்போது தெரிஞ்சிக்க வேண்டாம்…

  இப்போ…போலீஸ் வேலைல இருக்கோம் -நு வெச்சுக்குவோம்….டுட்டி டைம் -ல போலீஸ் டிரஸ் போடலாம்……மத்த டைம் -ல சாதரணமா இருக்கலாம் ..டவுசுரு கூட போடலாம்..

  அந்த டைம்க்கு என்ன தேவையோ அதை செய்பவன் தான் யோகி…
  பகவத் கீதை கிருஷ்ணனை பாருங்க…புல்லாகுழல் வாசிக்கிறான்…..அதே சமயம் குரு சேத்திரம் போர் புரியவும் செய்கிறான்…..அந்த மாதிரி தான் எல்லாமே ஒரு நாடகம் தான்…. மன பக்குவம் தான் முக்கியம்…..

  நீங்க தொடர்ந்து டவுசுரா வலம் வாங்க…..உங்க அறிவு ,அனுபவம் எங்களுக்கு தேவை…
  ALL ARE WELCOMING YOU டவுசர் பாண்டி 🙂

  டவுசர் பாண்டி said:
  June 21, 2011 at 1:51 pm

  ஐயா புண்ணியவான்களே,

  ஒலகத்துல ஒரு ரசினி, ஒரு கமலு, ஒரு முர்கேஷ் நைனா தேன் இருக்க முடியும். அத மாரி ஒரே ஒரு டவுசர் பாண்டிதேன். ஒங்களோட கற்பனைக்கி அளவில்லையா. ரசினி மாறி மிமிக்கிரி பண்ணா ஒடனே ரசிநின்னு நம்பிர்றதா. நம்ம பேருல ஆருப்பா அங்கன ரவுசு காட்றது. ஏற்கனவே நைனாவ டவுசருன்னு சொன்னீங்க. அப்பால ஒங்களுக்கு புரிய வெக்கிரத்துள்ள டவுசரு கலண்டு போச்சு. இப்ப இன்னாடான்னா டிசைன் டிசைனா கற்பன பண்றீங்க.ரூம் போட்டு யோசிப்பீங்களோ. இன்னும் வுட்டா டவுசருதேன் மணிந்கிற பேருல வர்றாருன்னு சொல்லிருவீங்க போல. ஒங்களோட கற்பன வளத்துக்கு அளவில்லியா ராசாக்களா. அக்சுவலா எங்கூருல இன்னிக்கி கரண்டு கட்டாவுற டைம காத்தால மாத்திட்டாங்க . அதேன் எட்டி பாக்க முடியாம போச்சி. இன்னும் ரெண்டு நாள் வராட்டி, டவுசருக்கு கண்ணு காது மூக்கெல்லாம் வெச்சி, நீங்களா ஒரு கதைய ஏவிஎம்கு ரெடி பண்ணி தேவி தேட்டருல ரிலீஸ் பண்ணி எரநூருனாலு ஓட்டிருவீங்க போல. நல்லா ரெண்டு முழியவும் தொறந்து வெச்சி வாசிங்கோ. நானு சிவயோகியும் இல்ல, மணியும் இல்ல, சையத்தும் இல்ல, தனிக்காட்டு ராசாவும் இல்ல, எஸ்.முருகேசனும் இல்ல, சுகுமார் ஜெவும் இல்ல. நான் நாந்தேன். நீங்க நீங்கதேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s