கிரகங்கள் : ஆக்டிவேஷன் -டீ ஆக்டிவேஷன்

Posted on

த பார்ரா ! கிரகமென்ன சிம் கார்டா ஆக்டிவேட் பண்றதுக்கு ..ன்னுட்டு நொட்டை சொல்லப்படாது. இன்னைக்கு நெட்ல உங்களுக்கு கிடைக்கிற எல்லா சோசிய மேட்டருமே அங்க இங்க ஆட்டைய போட்டதுதேன். அந்த மேட்டர் இல்லாம சோசியத்தை கத்துக்க முடியாதுதேன். இல்லேங்கலை. ஆனால் அதுவே சோசியமில்லிங்கண்ணா.

இது கமெண்ட் சைஸ் பதிவுமில்லை. மொக்கை பதிவுமில்லை. அதுக்கு மிந்தி ஒரு தர்ம சந்தேகம். இந்த அனுபவ ஜோதிடம் டாட் காம் உருவாவதற்கு முன்னே நம்மளோட நிர்வாண உண்மைகள் தூள் கிளப்பிக்கிட்டிருந்தது.

அப்பயாச்சும் தினசரி அப்டேட் பண்ணிக்கிட்டிருந்தோம். அதனோட வளர்ச்சிக்கு ஒரு லாஜிக்கல் காஸ் இருந்தது. அனுபவஜோதிடம் உருவானபிறகு பாவம் அது பெரிய ஊட்டுக்காரி கணக்கா ஆயிருச்சு. அனுபவஜோதிடம் ப்ளாகாச்சும் பரவாயில்லை அதுல ட்ரெய்லராச்சும் விட்டுக்கிட்டிருந்தோம். நிர்வாண உண்மைகளை கண்டுக்கறதே இல்லை.

இன்னைக்கு சிவராத்திரியாயிருச்சா கண் எரிச்சலோட ஸ்டேட் கவுண்டரை திறந்து பார்த்தேன். ஒரு இன்ப அதிர்ச்சி. எள்ளளவு அப்டேஷனும் இல்லாம நின்னு விளையாடிக்கிட்டிருக்குது.

அனுபவஜோதிடம் அப்படியில்லை ஒரு நாள் மொக்கை ஆயிருச்சுன்னா ஆயிரத்துலருந்து 600 அ 500 க்கு இறங்கிருது.

என் தர்ம சந்தேகம் இதுதான் கொண்டுவந்தால் மனைவிங்கற மாதிரி இருக்கிற இந்த வலைதளத்தை தொடர்வதா? அல்ல கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய் மாதிரி இருக்கிற ப்ளாகை கண்டுக்கறதா?

ஆங்கிலத்துல kavithaiனு அடிச்சா அதுலயும் தாய் வர்ரதை பாருங்க. அப்படியே கீழே கொடுத்திருக்கிற இமேஜ்ல நிர்வாண உண்மைகளோட தாக்கத் இன்னானு பாருங்க. தாளி ஒரு நாள் கூட 500 க்கு குறையல. சில தினங்கள் 700 ஐயும் தாண்டியிருக்கு.

1987ல அரசு வேலை கிடைச்சுட்ட கித்தாப்புல டூ வீலர் கேட்க அப்பாரு டூ வீலர் வாங்கி தரமாட்டேன்னதுக்கு வீட்டை விட்டு வெளிய வந்துட்டன். அந்த வேலைய போட்டு கொடுத்த ஆஃபீசரு அப்பாவோட சிஷ்ய கோடி.

அவரு தன்னோட சேம்பருக்கு கூப்டு உங்க ஃபேமிலி மேட்டர்ல நான் தலையிடமாட்டேன். ஆனால் ஒரு சின்ன அட்வைஸ். என்ன பண்ணாலும் வீட்டுக்குள்ள இருந்து பண்ணுன்னுட்டாரு.

19X64 வீட்டை சித்தாளோட சித்தாளா நின்னு கட்டினதுக்கு ( காசெல்லாம் அப்பன் காசுதேன்) ஒரு நன்றி கடனா மாடியில அட்டாச்ட் பாத்ரூமோட ஒரு அறைய கொடுத்திருந்தாய்ங்க.

வீட்டுக்குள்ள இருந்து எப்படி போராடறதுனு ரோசிச்சன். அப்பம் ஒரு ஐடியா ஸ்பார்க் ஆச்சு. தாளி .. நாமே சமைச்சு சாப்டா எப்படி இருக்கும்?

ஒடனே கோதாவுல இறங்கினேன். புக் நாலெட்ஜ் மேல நமக்கு நம்பிக்கை தளர்ந்துக்கிட்டிருந்த பீரியட் அது.அங்க இங்கே பேசி மேட்டரை கறந்தேன்.

பரீட்சைக்கு கொண்டு போற பிட்டு கணக்கா குறிப்பெல்லாம் எழுதிக்கிட்டு சமைக்க ஆரம்பிச்சேன். ஒரு நாலு நாள் சமைச்சதுல சமையல்னா என்னனு ஒரு அவுட் லைன் வந்துருச்சு. ங்கொய்யால உப்பு புளி,காரம் இதான் சமையல். சிலதுக்கு கல் உப்பு ,சிலதுக்கு சால்ட், சிலதுக்கு பச்சை மிளகாய்,சிலதுக்கு காஞ்ச மிளகாய், சிலதுக்கு மிளகாய் தூள். சிலதுக்கு லெமன்,சிலதுக்கு புளி. அவ்ள்தாங்கற ஞானோதயமாயிருச்சு.

ஒடனே குறிப்பையெல்லாம் தூக்கி கடாசிட்டேன். ஒரு நாள் புளி காய்ச்சலுக்கு ரெடி பண்னிட்ட பிறகு பார்த்தா பச்சை மிளகாயும் இல்லை, காஞ்ச மிளகாயும் இல்லை. நம்ம லாஜிக் படி மிளகாய் தூளை போட்டேன். கொதிக்க வச்சேன்.

மதியம் ஃப்ரெண்ட் ஒருத்தன் வந்தான். அது ஹைதராபாத் கையேந்தி பவன் வரை பார்த்துட்டு வந்த பார்ட்டி.. திங்க என்ன இருக்குன்னான்? சைனா டிஷ்ல அலங்கரிச்ச சாப்பாட்டையும் , குழம்பையும், எடுத்து வச்சேன்.

ஒரு ஈடு தின்னான். மறு ஈடுக்கு குழம்புல கரண்டியை விட்டு துழாவுறான்.” என்னடா துழாவறே” . ” என்ன மீன் குழம்பு வச்சிருக்கே ஒரு மீனையும் காணோம்” ங்கறான்

சமைத்துப்பார் புஸ்தவத்தை மனப்பாடம் பண்ணி சமைக்கிறதா இருந்தா உலகத்துல உள்ள எல்லா புஸ்தவமும் தேவைப்படும். ஆனால் சமையலோட பேசிக் என்னனு புரிஞ்சிக்கிட்டா எந்த இழவு புஸ்தவத்தையும் புரட்டாமயே உலகத்துல உள்ள எல்லா வித சமையலையும் செய்யலாம்.

நிறைய சோசியருங்க ஜோதிட விதிகளை அப்படியே வாந்தி பண்ணுவாய்ங்களே கண்டி ஒரே சீக்வென்ஸ்ல இரண்டு விதிகள் கிராஸ் ஆனா அதுல எது எஃபெக்டிவ்னு தெரியாது? இதுக்கு காரணம் என்னன்னா அவிகளோட யந்திரத்தன்மை – சுயமின்மை -ஆராய்ச்சி நோக்கில்லாமை .

ஆனால் நாம கே.பி.சுந்தராம்பாள் மாதிரி என்ன என்னனு கேள்வி கேட்டுக்கிட்டே இருப்போம்.பதில் கிடைக்கிற வரை நோண்டி நுங்கெடுத்துருவம்.

பை பர்த் நமக்கு வாய்ச்ச ஒரிஜினாலிட்டி கட்டுச்சோத்துக்கெல்லாம் திருப்தியடையாது. அதனோட ஃபார்முலா என்னனு எக்ஸ்ரே எடுத்து பார்த்துரும்.

ஜோதிட விதிகள் ஓகே. அந்த விதிகளுக்கெல்லாம் ஒரு அடிப்படை விதி இருக்குமே அது என்னானு பார்த்துரனும். ஒரு சில விதிகள் அந்த அடிப்படை விதிக்கு எதிரா இருந்தா கேள்வி கேட்காம தூக்கி போட்டுரனும்.

இயற்கையாவே ஜாதகர் விஷயத்துல ப்ளானட் எப்போ எப்படி ஆக்டிவேட் ஆகுது எப்போ எப்படி ஆக்டிவேட் ஆகுதுன்னு பார்க்கனும். ஐ மீன் எப்போ எப்படி வேலை செய்ய ஆரம்பிக்குது ? எப்போ எப்படி வேலை செய்யறதை நிறுத்திருதுன்னு பார்க்கனும்.

உம்; எனக்கு வாக்குஸ்தானத்துல சந்திரன் சுக்கிரன் இருக்காய்ங்க. ஒரு காலத்துல ஐ மீன் 1998 வரை கூட கவிதை, இசை, பாட்டு இதில் எல்லாம் ஆர்வம் உண்டு. தெலுங்கு பாட்டுல்லாம் கேபரே மாதிரி புரிஞ்சும் புரியாம கலாய்க்கும்.( அதுலயும் வேட்டூரி சுந்தரராமமூர்த்தில்லாம் ஜெம். ஒவ்வொரு பாட்டுக்கு பொருள் சொல்ல ஒவ்வொரு புஸ்தவம் தேவைப்படும் ) ஆனால் ட்யூன் மட்டும் பச்சக்குனு மைண்ட்ல ஒட்டிக்கும்.

பாடிப்பார்க்க ஆசை இருக்கும். ஆனால் வார்த்தைகள் சிக்காது. இந்த சிச்சுவேஷன்ல தெலுங்கு ட்யூனுக்கு தமிழ்ல எழுதற கெட்டபழக்கம் வேற வந்துருச்சு. நாம எழுதினதாச்சே அதனால ஒரு வெறியோட தொடர்ந்து பாடறதுண்டு. பாடத்தெரிஞ்சவுக கிடைச்சா அவிகளை ட்ரெய்ன் பண்ணி பாட வச்சு ரெக்கார்ட் பண்ணி கேட்கிறதுண்டு.

கவிதைங்கறதே ஒரு வித குழந்தை தனம்.(தெய்வீகம்னும் சொல்லலாம்) கவிதையில உள்ள உலகம் வேறு. யதார்த்த உலகம் வேறு. பாரதியாரோட பொஞ்சாதி கஞ்சிக்கு நொய் இல்லாம பக்கத்து வீட்ல வாங்கி வந்து வச்சா அதை காக்கா குருவிக்கு போட்டு பாட்டு எழுதினாராம் பாரதி.

நம்ம ஜாதகத்துல சூரிய சந்திரன் ரெண்டு பேரும் சம பலத்தோட இருக்கிறதால நமக்கு உணர்வு வழி சிந்தனைகளோடு – அறிவு வழி சிந்தனையும் இருந்தது. 1991 முதல் 1994 வரை செய்த தனி ஆவர்த்தனம் -கூட பெருசா பாதிக்கலை ( ஏன்னா இலங்கைக்கு இந்தியா உதவின மாதிரி அப்பா உதவிக்கிட்டிருந்தாரு)

அப்பாவோட மரணத்துக்கப்பாறம் 1994 முதல் 1997 ல பட்டா .. லைஃபே ஷியாம் பெனகல்,சத்யஜித்ரே சினிமா மாதிரி ஆயிருச்சு. இந்த கதை,கவிதை,இசை,பாட்டுல்லாம் லைஃப்லருந்து கழண்டுக்க ஆரம்பிச்சது .ஒரே ஒரு 3 மாசத்துல லட்சத்து ரெண்டாயிரத்தை ஜீரணம் பண்ணிட்டு என் முகத்துலயே உமிழ ஆரம்பிச்ச சமுதாயம் என்னை கடவுளுக்கு ரெம்ப நெருக்கமாக்கிருச்சு.

1986லருந்தே ஆன்மீக நாட்டம் இருந்தாலும் -சாதனைகள் தொடர்ந்தாலும் 1997 வரை ங்கொய்யால இன்னைக்கு கண்ணா மூச்சி காட்டற பணம் மட்டும் கையில சிக்கினாங்கற கெட்ட எண்ணம் இருந்துக்கிட்டே இருந்தது. 1997 ல லட்சத்து ரெண்டாயிரம் செல்ஃப் ஷேவ் ஆன பிற்பாடுதான் உண்மையான பக்தி – ஒருவித அர்ப்பணிப்பு வந்ததுன்னும் சொல்லலாம்.

அதுக்கப்பாறம் கவிதைன்னா அது ஒரு ஏழுமலையானுக்குத்தேன். அல்லது ஆத்தாளுக்குத்தேன்னு ஆயிருச்சு. எப்பயோ போன ஜென்மத்து ஞாபகம் மாதிரி கவிதை ஊறினாலும் அது அமிலமாதான் ஊறும்.
இந்த களிம்பு ஏறிப்போன சமுதாயத்தை துலக்க.

ஆக நாம கவிதை, இசை, பாட்டுனு இருந்தவரை – சுக்ரன் டீ ஆக்டிவேஷன்ல இருந்தாரு.புவ்வாவுக்கு லாட்டரி அடிக்க வச்சாரு.

எப்போ நாம கவிதை, இசை, பாட்டு எல்லாத்தையும் விட்டுத்தொலைச்சோமோ ஆக்டிவேட் ஆகி தன்னோட காரகத்வங்களை கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு.

இதுலருந்து என்ன தெரியுது நமக்கு தீமை செய்யக்கூடிய நிலையில உள்ள கிரக காரகத்வங்களை கேள்வி கேட்காம அனுபவிக்க ஆரம்பிச்சா அது டீ ஆக்டிவேட் ஆகி அதனால் கிடைக்கவேண்டிய இன்ன பிற நல்ல பலனை பெற முடியாம செய்துருது – இன்னம் சொல்லப்போனா பெரிய அளவுல தீமையும் செய்ய ஆரம்பிச்சுருது.

இதே விதி நன்மை செய்யக்கூடிய கிரகத்துக்கும் பொருந்தும். அதனால நன்மை செய்யும் கிரகமாவே இருந்தாலும் .காரகத்வங்களை கேள்வி கேட்காம அனுபவிக்க ஆரம்பிச்சா அது டீ ஆக்டிவேட் ஆகி அதனால் கிடைக்கவேண்டிய இன்ன பிற நல்ல பலனை பெற முடியாம செய்துருது – இன்னம் சொல்லப்போனா பெரிய அளவுல தீமையும் செய்ய ஆரம்பிச்சுருது.

( ஏன்னா 1989 முதல் நாளிதுவரை நான் பார்த்த எந்த ஜாதகத்துலயுமே எந்த கிரகமுமே 100 சதம் நன்மை செய்யும் நிலையில் இல்லவே இல்லை- இதே போல எந்த ஜாதகத்துலயுமே எந்த கிரகமுமே 100 சதம் தீமை செய்யும் நிலையில் இல்லை – அல்லாரு பொயப்பும் ரெண்டும் கெட்டான் பேரணம்பாட்டாந்தான்)

நல்லது பண்ற கிரகத்தை ஆக்டிவேட் பண்ணனும்னா அது தந்துக்கிட்டிருக்கிற நல்ல பலனை வாலண்டியரா தியாகம் பண்ணனும். உ.ம் சுக்கிரன். இவர் வாகன காரகர். டூ வீலரை வீட்ல வச்சுட்டு பஸ்ஸுல ஆஃபீஸ் போனா சுக்கிரன் ஆக்டிவேட் ஆகி சீக்கிரமே கண்ணாலத்துக்கு வழி பண்ணுவார்.

கெட்டது பண்ற கிரகத்தை டீ ஆக்டிவேட் பண்ணனும்னா அது தரவிருக்கும் தீய பலனை நாமே நடத்திக்கனும். உ.ம் செவ் ரத்ததானம் செய்யலாம். ( ப்ளட் பேங்க்ல உங்களுக்கே ரத்த தானம் தேவைப்படுதுன்னு சொல்லிட்டா நான் பொறுப்பு கிடையாது)

குறிப்பு:
ஆமாங்ணா சுக்கிரனை பத்தி விஸ்தாரமா சொல்லிட்டு வந்திங்க . கில்மாவை பத்தி பிரஸ்தாவனையே இல்லையேனு கேப்பிக.சொல்றேன். சுக்கிரன் தன் சொந்தக்கால்ல நின்னதாலயோ என்னமோ.. கண்ணாலத்துக்கு மிந்தியும் சரி பிந்தியும் சரி அதை பத்தி ரோசிக்க வேண்டிய அவசியமே இல்லிங்ணா.

Advertisements

15 thoughts on “கிரகங்கள் : ஆக்டிவேஷன் -டீ ஆக்டிவேஷன்

  Sankar Gurusamy said:
  June 21, 2011 at 4:30 am

  புரியுற மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு…

  இன்னும் கொஞ்சம் விளக்கங்கள் குடுத்தா நல்லா இருக்கும்…

  தொடர்ந்து ஒவ்வொரு கிரகத்துக்கும் இருக்கும் சில காரகத்துக்குவத்தை உதாரணத்துடன் விளக்கி பதிவுகள் வந்தால் நன்றாக இருக்கும்.. ஓரளவுக்கு புரியும் என்றும் நினைக்கிறேன்.

  மக்கள் நலன் கருதி இதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி.

  http://anubhudhi.blogspot.com/

  வணக்கம் முருகேசன் சார்,

  அற்புதமான செய்தியை சொல்ல வரீக.. பட் புரியலே..
  நல்ல விசயங்களை சொல்ல வரும்போது நல்ல தமிழில் சொல்லுங்கள் எனவும் பலமுறை சொல்லியாச்சி..

  ம்ம்ம்..

  அப்படியே சங்கர் குருசாமியோட வார்த்தைகளை பின்மொழிகிறேன்

  புரியுற மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு…

  இன்னும் கொஞ்சம் விளக்கங்கள் குடுத்தா நல்லா இருக்கும்…

  தொடர்ந்து ஒவ்வொரு கிரகத்துக்கும் இருக்கும் சில காரகத்துக்குவத்தை உதாரணத்துடன் விளக்கி பதிவுகள் வந்தால் நன்றாக இருக்கும்.. ஓரளவுக்கு புரியும் என்றும் நினைக்கிறேன்.

  மக்கள் நலன் கருதி இதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி.

   S Murugesan said:
   June 21, 2011 at 1:14 pm

   ஜா.ரா !
   இன்னொரு தொடரா ? ? ?
   (பெரிய எழுத்தில் வடிவேலு ஸ்டைல்ல படிங்க)

  அப்புறம் SUBSCRIBE VIA EMAIL ( COMMENTS ) என்னாச்சு ?

  சரண் சார் ப்ரீயா இல்லேன்னா .. நீங்க விரும்பினா ( நம்பினா ) உங்க பிளாகர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுங்க அடியேன் சரி செய்து தரேன்..

  உண்மையிலேயே பின் ஊட்டங்களைக் கண்டு அவர்களுக்கு உரிய பதில் தரமுடியமாட்டேன் என்கிறது.. புரிந்து கொள்ளுங்கள் தலை..

  Ismail said:
  June 21, 2011 at 5:09 am

  அய்யா இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதலாம்.
  ஒரு டேபிள் டைப்புல எல்லா க்ரஹத்துக்கும் எக்டிவேசன் விபரம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  PERUMALSIVAN said:
  June 21, 2011 at 5:58 am

  NALLAA ERUKKU

  Mani said:
  June 21, 2011 at 8:25 am

  ///1989 முதல் நாளிதுவரை நான் பார்த்த எந்த ஜாதகத்துலயுமே எந்த கிரகமுமே 100 சதம் நன்மை செய்யும் நிலையில் இல்லவே இல்லை- இதே போல எந்த ஜாதகத்துலயுமே எந்த கிரகமுமே 100 சதம் தீமை செய்யும் நிலையில் இல்லை – அல்லாரு பொயப்பும் ரெண்டும் கெட்டான் பேரணம்பாட்டாந்தான்////

  இதை தான் நான் பால், பாலிடால் அப்படின்னு ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணிரக்கூடாதுன்னு முன்பு சொன்னேன் தலை. ஒரு மாதிரி மிக்ஸிங்தான்.

  ///நல்லது பண்ற கிரகத்தை ஆக்டிவேட் பண்ணனும்னா அது தந்துக்கிட்டிருக்கிற நல்ல பலனை வாலண்டியரா தியாகம் பண்ணனும். உ.ம் சுக்கிரன். இவர் வாகன காரகர். டூ வீலரை வீட்ல வச்சுட்டு பஸ்ஸுல ஆஃபீஸ் போனா சுக்கிரன் ஆக்டிவேட் ஆகி சீக்கிரமே கண்ணாலத்துக்கு வழி பண்ணுவார்.///

  தலை நல்ல பலனை தந்துகிட்டு இருக்கிறப்ப ஏன் தலை அதை டிஸ்டர்ப் பண்ணணும். கண்ணாலத்தால மனுசனுக்கு நிம்மதி போச்சின்னா அது எப்படி தலை நல்ல பலனா இருக்கும்.

  ///கெட்டது பண்ற கிரகத்தை டீ ஆக்டிவேட் பண்ணனும்னா அது தரவிருக்கும் தீய பலனை நாமே நடத்திக்கனும். உ.ம் செவ் ரத்ததானம் செய்யலாம்.///

  கடா வெட்டி கறி படையல் போட்டா அதுவும் செவ்வாய்க்கு பரிகாரம் தானே. சில பேரு எலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி அறுத்து பரிகாரம் செய்வார்களே அதுவும் செவ்வாய்க்கான பரிகாரமாக கொள்ளலாமா? ஏன் கேட்கிறேன் என்றால் இரத்தப்பலிக்கு மற்ற பொருட்கள் இருக்கும் போது ஏன் தேவையில்லாமல் இரத்ததானம் செய்து நம்ம பவரை உருவிக்கனும். இதை அனுமானத்தில் தான் கேட்டேன் எனது கருத்தாக கொள்ள வேண்டாம். நீங்கள் விளக்கினால் போதும்.

  ramesh venkatapathy said:
  June 21, 2011 at 10:27 am

  தல என்ன சொல்ல வர்றாருன்னா, செவ்வாய் டேமேஜ்னா ரத்த விரயமாகும்! அதனால நாமளே முன்னாடியே, ரத்ததானம் பண்ணிட்டா, எதிர்பாராம வர்ற ரத்த இழப்பு வாய்ப்பு, குறையலாம் என்கிறார்! சரியா தல?
  (தல’க்கு என்ன ஞாபகம் வருதா?)

  சிவ யோகி said:
  June 21, 2011 at 10:47 am

  //கடா வெட்டி கறி படையல் போட்டா அதுவும் செவ்வாய்க்கு பரிகாரம் தானே. சில பேரு எலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி அறுத்து பரிகாரம் செய்வார்களே அதுவும் செவ்வாய்க்கான பரிகாரமாக கொள்ளலாமா?//

  மணி சார் ,
  கடா வெட்டுனா….நாம அந்த உயிர்-ர எடுத்து கர்மாவ சேர்த்துகரோம்…..அந்த உயிர்-ருக்கு விடுதலை தரோம்…அந்த உயிர்-ன் கணக்கில் புண்ணியம் சேருகிறது …நம் கணக்கில் கர்மா சேருகிறது…… எனவே அந்த கெடா பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்…அடுத்த ஜென்மத்தில் அது மாடாக பிறக்கலாம்….

  கர்மாவை விலக்க வேண்டுமாயின் …..நம்முடையதை ஏதாவது கொடுக்க வேண்டும்….

  சிவ யோகி said:
  June 21, 2011 at 10:48 am

  Message//( ஏன்னா 1989 முதல் நாளிதுவரை நான் பார்த்த எந்த ஜாதகத்துலயுமே எந்த கிரகமுமே 100 சதம் நன்மை செய்யும் நிலையில் இல்லவே இல்லை- இதே போல எந்த ஜாதகத்துலயுமே எந்த கிரகமுமே 100 சதம் தீமை செய்யும் நிலையில் இல்லை – அல்லாரு பொயப்பும் ரெண்டும் கெட்டான் பேரணம்பாட்டாந்தான்) //

  நீ சொல்லுறது சரி தான்பா முருகேசு….
  முருகேசு, எந்த கிரகமும் நன்மையும் செய்யல….தீமையும் செய்யல….
  ஆப்பு அங்கே அங்கே சொருகி வச்சு இருக்காங்க….நாம தான் போய் ஆப்பு மேல குந்திகினு ….அய்யோ..அம்மா …சினேகா-நு கத்துரோம்….

  முருகேசு …ஒரு விஷயம் தான் உணமையிலும் உண்மை….
  விதிய மதியால வெல்லலாம் …..மத்த படி வேற ஒன்னும் பண்ண முடியாது
  நீ உன் மனச மாத்திக்கிற வரை…..உன் தலை எழுத்தை மாத்த முடியாது…

  இப்போ நீயே பாருவே…..நல்ல விஷயம் எல்லாம் பேசுற….அப்பாலிக்கா போய் கட்டை பிடிய ஊதி தள்ளுற…..
  கட்டை பிடிய ஊதி தள்ள காரணம் Nipple Complex அப்படின்னு நான் சொல்லுல ..ஓஷோ சொல்லுறாரு…

  //டூ வீலரை வீட்ல வச்சுட்டு பஸ்ஸுல ஆஃபீஸ் போனா சுக்கிரன் ஆக்டிவேட் ஆகி சீக்கிரமே கண்ணாலத்துக்கு வழி பண்ணுவார்.//

  என்ன முருகேசு….. இப்படி ஊதி விடுற ….
  முருகேசு…..டு வீலர் ல போனா தான் நாலு மொக்கை பிகர் ஆவது சாதகனை திரும்பி பார்க்கும்….நெறைய இடம் சுத்துனா தானே ஏதாவது மாட்டும் 🙂

  Ismail said:
  June 21, 2011 at 10:50 am

  //கெட்டது பண்ற கிரகத்தை டீ ஆக்டிவேட் பண்ணனும்னா அது தரவிருக்கும் தீய பலனை நாமே நடத்திக்கனும்//
  இது புரிகிறது. அந்த கிரகத்தை அக்டிவேட் ஆகவே செய்யாமல் இருக்க அதோட உச்சி மண்டைல ஆணி வைத்து அடித்து வைப்பது.

  //நல்லது பண்ற கிரகத்தை ஆக்டிவேட் பண்ணனும்னா அது தந்துக்கிட்டிருக்கிற நல்ல பலனை வாலண்டியரா தியாகம் பண்ணனும்//
  அய்யா யோசித்து பார்த்த நல்லது செய்யும் கிரகம் நல்லது பன்றதுனாலதானே நமக்கு நல்லது நடந்துட்டு இருக்கு. அப்புறம் எதுக்கு தியாகம். ஒரு வேலை அந்த கிரகத்தில் நமக்கு வேண்டும் என்கிற பலன் பெற அது கொடுக்கும் நமக்கு அப்போதைக்கு அவசியமில்லாத நல்ல விசயத்தை தியாகம் செய்ய சொல்கிறீர்களா.

   Ismail said:
   June 22, 2011 at 4:38 am

   அய்யா இத கொஞ்சம் விளக்குங்களேன்.

  Harikumar A said:
  June 21, 2011 at 1:16 pm

  // இங்கே படிக்க படிக்க ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசை அதிகமாயிட்டே இருக்கு. என்னை பத்தி நல்லா தெரிந்ஞ்சுக்கவும், ஜோதிடம் கத்துக்கவும் நான் என்ன செய்யனும், எங்கே போகனும் (URL). ரூட்ட போடுங்க, Please.

  இது என்னுடய ரீபீட்டு, பதில கொடுங்க ப்ளீஸ். மறுபதிவுக்கு Sorry.

   S Murugesan said:
   June 21, 2011 at 4:53 pm

   ஹரிகுமார் அவர்களே!
   திரு சுப்பையா அவர்கள் எல்.கே.ஜி லெவல்ல இருந்து டிகிரி லெவல் வரை வகுப்பறைங்கற வலைப்பூவுல சொல்லித்தரார். தூள் பண்ணுங்க. இங்கன வெறுமனே ஆராய்ச்சிதான் நடக்கும். தலை முடியெல்லாம் குத்திட்டு நிக்கும்.
   http://www.classroom2007.blogspot.com

  டவுசர் பாண்டி said:
  June 21, 2011 at 1:52 pm

  சூப்பர் நைனா. கலக்கலான பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s