நெல்லவுங்களே நாறிப்போக காரணம்

Posted on

” நல்லவனுக்கு தான் கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வருது ” ” நல்லதுக்கு காலமில்லே” – “கலி முத்திப்போச்சு” இந்த வசனங்கள் அடிக்கடி நம் காதில் விழுந்துக்கிட்டுதான் இருக்கு. இதுல கொஞ்சம் போல நெஜமும் இருக்கு.

வாஸ்துப்படி பார்த்தா ஆக்னேயத்துல பள்ளமிருந்தா அந்த வீட்டுல கொலைகாரன் வசிக்கனும். அல்லது வேசி குடி இருக்கனும். அப்படி குடி இருந்தா அந்த கொலைகாரனுக்கோ,வேசிக்கோ பெருசா,புதுசா எந்த பிரச்சினையும் வராது. ( வந்தா தாளி மின்னல் மாதிரி வந்துரும் – வந்தா சங்குதேன் – அது வேற கதை)

பை மிஸ்டேக் அந்த வீட்ல ஒரு சாந்த புருஷன் ( சாந்தாவோட புருசன் இல்லிங்ணா – சாந்தமா இருக்கக்கூடிய பார்ட்டின்னு அர்த்தம் ) இருந்தா அவர் கொலையாயிரலாம்.

அல்லது பத்தினி பெண் குடியிருந்தா அவிக விபத்துல் சிக்கலாம் அ வேசிப்பட்டம் சுமக்கவேண்டி வரலாம். இதனால மனசொடிஞ்சு தற்கொலை கூட பண்ணலாம்.

இந்த துர்பலன் அந்த வீட்டுக்கு போன 3 மாசத்துக்கு ஒன்ன்ரை வருசத்துக்குள்ள நடக்கலாம். மேற்படி கொலைகாரனோ -வேசியோ கதை க்ளைமேக்ஸுக்கு போறவரை ரொட்டீனா வாழ்ந்துருவாய்ங்க. இன்னம் சொல்லப்போனா சுக்கிர,செவ் காரகம் கொண்ட தொழில்கள்ள -அதுவும் சேல்ஸ் லைனா இருந்தா சூப்பர் டெவலப்மெண்ட் இருக்கும்.

ஆனால் மேற்படி வீட்டுல குடியிருக்க வேண்டி வந்த சாந்தபுருஷனோ – பத்தினி பெண்ணோ அந்த ஒன்னரை வருசம் நரகவேதனை அனுபவிப்பாய்ங்க. ஒன்னு கொலை பண்ற ரேஞ்சுக்கு வரனும் அ தற்கொலை பண்ற ரேஞ்சுக்கு வரனும் – அ வேசித்தனம் பண்ணனும்.

இந்த ரேஞ்சுக்கு வர அவிகளுக்கு என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் எல்லாம் கொடுக்கனுமோ அந்த மாதிரி ட்ரீட்மெண்டையெல்லாம் அந்த வாஸ்து கொடுத்துக்கிட்டிருக்கும்.

பயங்கர மனப்போராட்டம் ஏற்படும். கால் பந்தாட்டத்துல பந்தை எப்படி கோலுக்கு விரட்டறாய்ங்களோ அப்படி அந்த வாஸ்துவும் – அதன் விளைவா நடக்கக்கூடிய சம்பவங்களும் அந்த ஆண் பெண்ணை கொலைக்கோ -வேசித்தனத்துக்கோ விரட்டும். இப்பம் புரியுதா நெல்லவுகளுக்கே ஏன் சோதனை ஏற்படுதுன்னு?

இன்னொரு உதாரணத்தை பார்ப்போம்.

ஜாதகத்துல லக்னாத் அஞ்சாமிடம் புத்தி, புத்திர ,பூர்வ புண்ணிய ஸ்தானம். இங்கன சனி கீறாரு.கூடவே ராகுவும் கூட்டணி அமைச்சிருக்காரு.

சனி 5 ல் :
ஜாதகர் மந்த புத்தி கொண்டவரா -தற்குறியா இருக்கனும். சோம்பேறியா இருக்கனும்.கஞ்ச பிசினாறியா இருக்கனும். சுத்தம், சுகாரம் எதையும் பார்க்கக்கூடாது. பிச்சைக்காரன் தட்ல இருந்து கூட சில்லறை காசை சுட்டுரனும். புண்ணாக்குலருந்து கூட எண்ணெய் எடுக்கனும். எதிராளி நான் கெட்டு நொந்து போயிட்டன்யா உனக்கு தரவேண்டியதை தரமுடியாத அளவுக்கு கதி கெட்டு போயிருக்கேன். என்னை விட்டுருன்னு காலை பிடிச்சு கெஞ்சினாலும் மனசு இரங்க கூடாது.

ஏலத்துல வர்ர பொருள் – கோர்ட்,கேஸ்,வில்லங்கத்துல உள்ள சொத்துக்களை – சோத்துக்கில்லாம விற்கிற சொத்துக்களை அரைவிலை – கால் விலைக்கு வாங்கி தானும் அனுபவிக்காம புதையலை காக்கும் பூதம் போல காக்கனும்.

இப்படி எல்லாம் இருந்தா வாரிசு மேட்டர்ல பெருசா பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் மிஞ்சிப்போனா வாரிசு உருவாக தாமதமாகும். அம்புட்டுதேன்.

ராகு 5 ல்:
இதன் படி ஜாதகர் பயங்கர மறதி -புத்தி குழப்பம் – சதி எண்ணங்கள் – சட்டவிரோத செயல்கள்ள ஈடுபாடு கொண்டவரா இருக்கனும். குடி -சூதுல ஈடுபாடு கொண்டிருக்கனும். இப்படி எல்லாம் இருந்தாலும் இதுவும் வாரிசு மேட்டருக்கு அனுகூலமானதல்ல.என்பதால் ஓரிரண்டு குறை பிரசவம் நடக்கறது – சில காலம் வாரிசில்லாம இருக்கிறதுங்கறதை தாண்டி பெருசா பிரச்சினை வராது.

ஒரு வேளை இந்த மாதிரி ஐந்தில் சனி +ராகு அமைப்பை கொண்டவர் இன்டலக்சுவல் – அப்பா அம்மாவுக்கு ஒழுங்கா சோறு போடறவர், தெய்வத்துக்கும் , தருமத்துக்கும் பயந்து நடக்கிறவர். ஹெல்ப்பிங் நேச்சர் கொண்டவர்னு வைங்க. அப்போ சனியும் ராகுவும் என்ன பண்ணுவாய்ங்க.

தாங்கள் ஜாதகரை எந்த ரேஞ்சுக்கு கொண்டுவரனும்னு நினைக்கிறாய்ங்களோ அந்த ரேஞ்சுக்கு அந்த ஜாதகர் வரும் வரை வாரிசே இல்லாம பண்ணிருவாய்ங்க -மன அமைதி இல்லாம செய்துருவாய்ங்க.

இப்ப புரியுதா நல்லவுகளுக்கு ஏன் சோதனை சாஸ்தின்னு?

இப்பம் இதுக்கு கச்சா முச்சான்னு பரிகாரம்லாம் சொல்ல ஆரம்பிச்சுருவிங்க. ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் எல்லாவிதமான பரிகாரங்களும் செய்தாச்சு.

இந்த பிரச்சினைக்கு அனுபவஜோதிடம் தர்ர பரிகாரம் என்னனு அடுத்த பதிவுல பார்ப்போம்.

Advertisements

18 thoughts on “நெல்லவுங்களே நாறிப்போக காரணம்

  தலை வாஸ்துலே கூட பிச்சி உதறீகளே ?

  வாழ்த்துக்கள்.

  //இந்த பிரச்சினைக்கு அனுபவஜோதிடம் தர்ர பரிகாரம் என்னனு அடுத்த பதிவுல பார்ப்போம்.//

  இதுதானே தலை முக்கியம்.. கண்டிப்பா அதை போட்டுறுங்கோ .. வேற சப்ஜெக்ட்டுக்கு தாவிடாதீகோ .. ( சும்மா.. )

  Mani said:
  June 18, 2011 at 5:24 am

  அப்பாடா தப்பிச்சோம். நான் கூட பயந்தே போயிட்டேன் தலை. சந்திர கிரகணம் வந்து நம்ம தலைக்கு எதாச்சும் பண்ணிடிச்சோன்னு. ஆனா நாங்க பயந்தபடி ஒன்னும் நடக்கல. அந்த கடவுளுக்கு ஒரு டேங்சு. இப்பதான் நம்ம பழைய தலை கொஞ்சம் கொஞ்சமா ரெக்கவரி ஆகிறாப்ல இருக்கு. கலங்குங்க தலை. அப்புறம் முடிஞ்சா அந்த ஜோதிட டிப்ஸ் தொடரை கண்டினியூ பண்ணுங்க, அருமையாக போய்கிட்டிருந்தது, இடையிலே பாதியிலேயே நின்னுடுச்சே. சும்மா சொல்லக்கூடாது நம்ம தலைக்கு மப்பு ஏறிடிச்சின்னா சும்மா கலங்கடிக்கிறால்லே.

   S Murugesan said:
   June 18, 2011 at 5:48 am

   மணி அண்ணே,
   நம்முது கடகலக்னம். அதிபதி சந்திரன். எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட் (விமன் கூடத்தேன்). நமக்கு சொந்த ஒளி கிடையாது. அல்லாம் அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் தேன்.

   சில சமயம் நம்ம மூளை கவுத்து போட்ட சின்டெக்ஸ் டாங்க் மாதிரி ஆயிருது. சொந்த சரக்கை இட்டுக்கட்டி கொடுக்க மனசில்லா.

  PERUMALSIVAN said:
  June 18, 2011 at 6:38 am

  1.”வாஸ்துப்படி பார்த்தா ஆக்னேயத்துல பள்ளமிருந்தா ” anne ethula AAGNEYAM mna ennaa ????? agni moolaiya ???
  2. appuram enakku viruchaga lagnam paththula sevvaay + sukkiran sherkkai paththaam athibathi sooriyan is in 11th place along with puthan in kanni house . enakku eantha vhela anne settaagum ???????? YAARAVATH USOLLUNGAPPAAAAAAAAAAAAAAAAAAA??

  ( eppa oru container manufacturing companila asst engineer -raga erukken .pathinonnula puthan utchaththalayo ennamo entha jothidathumeethu oru aarvam .??!!
  ENAKKU ORUTHANUKKU KEEZHE VHELAI SEYRATHU PIDIKKA MAATTENGUTHU .KASTAMA ERUKKU . VHERA ETHAAVATHU PANNALAMAANU YHOSIKKIRAN ATHAAN KHETTAN ( vera ethavathunna sontha thozhilunga ?))

   S Murugesan said:
   June 18, 2011 at 8:21 am

   பெருமாள் சிவன்!
   உங்க ஹன்ச் கரீட். அக்னி மூலைதேன். உங்க ஜாதகத்தை/ அட்லீஸ்ட் ராசிக்கரத்தை மெயில் பண்ணிருங்க.அதான் பெஸ்ட்.

   இன்னொரு வேண்டுகோள். எழுதினா இங்கிலீஷ்ல எழுதுங்க அ தமிழ்ல எழுதுங்க இந்த தமிங்கிலீஷ் வேணாமே!

    PERUMALSIVAN said:
    June 18, 2011 at 9:50 am

    ok – G

    S Murugesan said:
    June 18, 2011 at 10:56 am

    இஸ்மாயில் & பெருமாள் சிவன்,
    நன்றி. மிக்க நன்றி.

  Name said:
  June 18, 2011 at 7:13 am

  ///ஆக்னேயத்துல பள்ளமிருந்தா /// அப்படீன்னா எந்த திசை இது

   S Murugesan said:
   June 18, 2011 at 8:16 am

   நேம்!
   தென் கிழக்கு ( சௌத் ஈஸ்ட்)

    Mani said:
    June 18, 2011 at 8:27 am

    தலை உங்க பலன் ஒர்க்அவுட் ஆகுதான்னு மேற்படி யாராவது யார்வீட்டுக்கு தென்கிழக்கு பகுதியில் பள்ள நோண்டி ஆள காலி பண்ணிட போறாங்க. அப்புறம் அவுங்க வீட்டிக்கு பக்கத்திலேயே வேசி ரெடி ஹா! ஹா!

    S Murugesan said:
    June 18, 2011 at 11:09 am

    மணி அண்ணே,
    வேசிதான்னு நான் சொல்லலியே. லைஃப் மீன்ஸ் ஆப்ஷன்ஸ். அதுவா அ இதுவா மாறலாம்.( ஐ மீன் வேசியாவோ அ கொலைகாரியாவோ?)

    சப்போஸ் அந்த வீட்டு பெண் நல்ல மாதிரின்னு வைங்க. வாஸ்து தோஷம் காரணமா நீங்க இது பலான பார்ட்டியோன்னு நினைக்கிறாப்ல ஒரு சில அறிகுறிகள் ஏற்பட்டிருக்கலாம்.

    தோற்றத்தை வைத்து ஒரு ஹன்ச் ல நூல்/டீல் விட்டா என்ன ஆகும் ? கொலை காரியா மாறலாம். இப்பம் புரியுதா? வேசி அ கொலைகாரின்னு உங்க கேள்வியை திருத்திக்கங்க..

  Mani said:
  June 18, 2011 at 8:28 am

  //இதுக்கு கச்சா முச்சான்னு பரிகாரம்லாம் சொல்ல ஆரம்பிச்சுருவிங்க//

  பள்ளத்தை மண்ணைப் போட்டு மூடிரனுமா தலை. 🙂 🙂

   S Murugesan said:
   June 18, 2011 at 11:04 am

   மணி அண்ணே!
   கும்பகோணம் பக்கம்லாம் சமாதியும் எழுப்பிரனுமாம். (ஹி ஹி)

  டவுசர் பாண்டி said:
  June 18, 2011 at 1:56 pm

  வாஸ்துன்னு எடுத்துக்கிட்டாக்க சூரியன் வூட்டுல வலது பக்க சன்னல குரிக்கி. சந்திரன் எடது புற ஜன்னல், பாத்ரூம், தண்ணி தொட்டி, கெணறு பைப் லைன் இதெல்லாம் குரிக்கி. செவ்வா பெட்ரூம குரிக்காரு. புதன் வரவேற்பறை, கெஸ்ட் தன்குற ரூம், புள்ளைங்க படிக்கிற ரூமு, புக்குக உள்ள ரூம்.

  குறு வந்து பூஜை அறைய குரிக்காறு. சுக்கிரன் வந்து கிச்சன மேன்சன் பண்றாரு. சனி ஸ்டோர் ரூம குரிக்காறு. ராகு வூடோட தலைவாசல குரிக்காறு. கேது பின்வாசல, கக்கூஸ, மாடிப்படிய குரிக்காறு. இப்ப மனுஷனுக்கு கண்ணு ரொம்ப முக்கியம். கண்ணு இல்லாட்டா எதையும் பாக்க முடியாது.

  அதே மாறி பாக்குறதுக்கு கண்ணு மட்டும் தேவைப்படாது. வெளிச்சமும் வோணும். அதே மாறி வெளிச்சம் இருந்து பார்வை இல்லன்னாலும் பாக்க முடியாது.

  இந்த கண்கள் வூட்டோட வலது பக்க சன்னல சூரியன் குரிக்காறு. அதே மாறி சந்திரன் எடது பக்க சன்னல குரிக்காறு. ஒரு வூட்டுல ஜன்னலே இல்லன்னா எப்டி இருட்டடஞ்சி கெடக்கும். ராகுவும், கேதுவும் இருட்டு கெரகம். சூரிய சந்திர கேரகனம் உண்டாரதுக்கு இந்த ராகு கேதுதேன் காரணம்னு நமக்கு தெரியும்.

  ஒரு ஊட்டுல வெளிச்சம் இல்லாம இருந்திச்சின்னா அங்கன சூரியனும், சந்திரனும், ராகு கேதுவால் பாதிக்கப்பற்றுக்காங்கன்னு அர்த்தம். அந்த மாறி ஊட்டுல உள்ள தலைவரோ இல்ல வாசிக்கிறவங்க சாதகத்த பாத்தீங்கன்னா அவிங்க சாதகத்துல சூரியனுக்கு, இல்ல சந்திரனுக்கு ஒன்னஞ்சி ஒம்போதுல ராகுவோ, இல்ல கேதுவோ இருக்கும். அந்த மாறி உள்ள ஊட்டல உள்ளவுங்களுக்கு குழந்தை பிறப்பில் தடை இருக்கும். அப்டியே இருந்தாலும் கொஞ்ச ஆயுள் வீக்காருக்கும். பேய் பிசாசு டார்சர் இருக்கும்.

  இப்ப ஒரு தெருவுல கடைசில உள்ள உள்ள ஊட்டுக்கு ரைட் சைடு உள்ள சன்னலுக்கு தெருக்குத்து இருந்தா அந்த ஊட்டுல ஆண் வாரிசு இருக்காது. அப்டி இருந்தாலும் வீக்குதேன். தெருவோட முடிவ குறிக்கிறது ராகு.

  ஒரு தெரு லாச்டுல உள்ள ஊட்டுல எடது பக்க சன்னலுக்கு தெருக்குத்து இருந்தா அந்த ஊட்டுல பெண் வாரிசு இருக்காது. மீறி இருந்தா கொஞ்சம் பாதிப்புருக்கும்.

  டவுசர் பாண்டி said:
  June 18, 2011 at 2:03 pm

  ஒரு செல வூட்டுல பெரிய சைசுல ஜன்னல் வெச்சிருப்பாங்க. ஆனா சன்னல் மூடியோ இல்ல ஸ்க்ரீன் போட்டு மரச்சோ இருக்கும். அந்த மாறி வூட்டுல குடியிருக்குரவங்க சாதகத்துல சூரியனோ இல்ல சந்திரனோ ராகுவால பாதிக்கப்பட்ருக்கும். அதாவது சூரியனுக்கு இல்ல சந்திரனுக்கு ஒன்னஞ்சி ஒம்போதுல ராகு இருக்கும். செல வூட்டுல பெட் ரூமு எல்லாத்தையும் விட பெருசா இருந்தாக்க அங்கன செவ்வா ராகுவால பாதிக்கப்பட்டு இருப்பார்.

  அங்க உள்ளவங்க சாதகத்துல செவ்வாக்கி ஒன்னஞ்சி ஒம்போதுல இல்லாங்காட்டி ரெண்டுல ராகு இருப்பார். இது மேயினா பொண்ணுங்க சாதகத்துல இருக்கும். கணவன (செவ்) பாதிக்கும். இந்த மாறி அமைப்புல பெண்கள் செக்சுல ட்ராவெல் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு விரும்புவாங்க.

  டவுசர் பாண்டி said:
  June 18, 2011 at 2:13 pm

  இந்த வாஸ்து மேட்டருல ஒரு முக்கியமான சமாச்சாரம் இன்னான்னா, பெட் ரூமும் கிச்சனும் அடுத்தடுத்து இருந்தா சோக்காருக்கும். இல்ல பெட் ரூம் வாசலும் கிச்சன் வாசலும் ஒரே நேர்கோட்டுல எதிரெதிரா இருந்தா நல்லது. அப்டி இருந்தா புருசனும் பொஞ்சாதியும் அன்னியோன்மா இருப்பாங்க. தாம்பத்யம் நல்லாருக்கும். ராசி கட்டத்த வெச்சி பாத்தாக்க இந்த மேட்டர் க்ளியராவும். மேசமும் ரிசபமும் அடுத்தடுத்து இருக்கும். மேஷம் செவ்வா. ரிசபம் சுக்கிரன். செவ்வான்னா புருஷன். சுக்கிரன்னா பொஞ்சாதி. அதே மாறி துலாம்னா சுக்கிரன்(பொஞ்சாதி). விருச்சிகம்னா கணவன்.

  அருண் கணேஷ் said:
  June 18, 2011 at 2:32 pm

  பொதுவான டவுட்.
  பதிவோடு தொடர்பில்லாததற்கு மன்னிக்கவும். நான் இப்போது தான் கற்று வருகிறேன்.
  ஜாதகத்தில் நாலாம் வீடு கிரகம், ஐந்தாம் வீடு கிரகம்… பார்த்து பலன் சொல்றாங்க.
  அந்த வீட்டில் கிரகம் (கட்டம் காலியாக இருந்தால் ) இல்லையென்றால் எப்படி பலன் சொல்வது.

  நன்றி!!!

   S Murugesan said:
   June 18, 2011 at 3:59 pm

   வாங்க அருண் கணேஷ்!
   கட்டம் காலியா இருந்தா என்ன.. அந்த கட்டத்துக்குரியவர் எங்க இருக்காரு, அந்த கட்டத்தை ஆரெல்லாம் பார்க்கிறாய்ங்கனு பார்த்து பலன் பலன் சொல்லவேண்டியதுதான். (ரெம்ப கஷ்டம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s