ஜாதகத்தை க்ளோசப்ல பார்க்க ஒரு ட்ரிக்

Posted on

ஜாதகசக்ரத்தோட ஸ்னாப் ஷாட்டை ஜூம் பண்ணனும்னா கண்ட்ரோல் ப்ளஸ் அழுத்தலாம் . அல்லது ஜாதக இமேஜ் மேல் க்ளிக் பண்ணா போதும். ஜாதகத்தை க்ளோசப்ல பார்த்து பலன் சொல்ல இந்த டெக்னிக் உதவாது.

இதுக்கு நீங்க என்ன பண்ணனும்னா.. ஜாதகசக்கரத்தில் உள்ள ஒவ்வொரு பாவத்தையும் லக்னமாக கொண்டு 11 சக்கரங்களை கூடுதலா போட்டுக்கனும். அப்போ ஒவ்வொரு பாவத்தையும் இன்னம் டீப்பா அனலைஸ் பண்ற வாய்ப்பு ஏற்படும்.

உ.ம்: எதிர்கால மனைவி /மனைவியை பற்றி தெரிஞ்சுக்கனும்னா 7 ஆம் பாவத்தை லக்னமா வச்சு பாருங்க. உங்க எதிரிகள்/கடன்/நோய்களை பற்றி தெரிஞ்சுக்கனும்னா 6 ஆம் பாவத்தை லக்னமா வச்சு பாருங்க.

( கமெண்ட் சைஸ்ல பதிவு போட எங்களுக்கும் தெரியும்.. எங்களுக்கும் தெரியும்)

Advertisements

40 thoughts on “ஜாதகத்தை க்ளோசப்ல பார்க்க ஒரு ட்ரிக்

  வணக்கம் முருகேசன் சார்,

  ( கமெண்ட் சைஸ்ல பதிவு போட எங்களுக்கும் தெரியும்.. எங்களுக்கும் தெரியும்)

  இதைப் படிச்சிட்டு ஒரு 5 நிமிசம் சிரிச்சேன் சார்..

  நன்றி…

  திருவள்ளுவர் said:
  June 17, 2011 at 3:35 pm

  பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்………..

  sugumarje said:
  June 17, 2011 at 5:06 pm

  ஏன் ஏன் இப்படி? 🙂

   S Murugesan said:
   June 18, 2011 at 5:59 am

   சுகுமார்ஜீ !
   உங்க கேள்வி கமெண்ட் சைஸ்ல பதிவை பத்தினதோனு நினைச்சு பதில் தரேன். அல்லா சமயமும் நாம – நம்மாளுவ நினைச்சதே நடந்துக்கிட்டிருந்தா லைஃப் போரடிச்சுரும். கொஞ்ச நாளைககாச்சும் டோண்டு,உஜிலாதேவி நினைச்ச மாதிரியும் நடக்கனும்ல. திருஷ்டி கழியனும்ல. அவிக மனசும் குளிரனும்ல.

  டவுசர் பாண்டி said:
  June 18, 2011 at 2:01 am

  இன்னாங்கடா இது ஆச்சர்யமாகீது. நைனா ஸ்கூல கட்டடிச்சிக்கினு எங்க போனாருன்னு தெரிலயே. இன்னா நைனா நீ வர வர ஒழுங்கா அட்டெண்டன்ஸ் போட மாட்டுகுற. லீவு லெட்டர் குடுத்த மாறி தம்மாத்துண்டு சைசுல மேட்டர போட்டுக்கினு அங்க இன்னாப்பா செய்ற.

  டவுசர் பாண்டி said:
  June 18, 2011 at 2:07 am

  நைனா நீ சொன்ன அந்த சாலமன் ரிங் பத்தி நேத்திக்கி வந்த தினத்தந்தி வெள்ளி மலர் பேப்பருல ராசிபலன் கீழ துக்கடா சைசுல பாக்ஸ் மெஸ்சேஜ் போட்டுருந்திச்சி பாத்தியா நைனா? ஆராச்சும் படிச்சீங்கலாப்பா? நைனா சொன்ன அந்த குறு மேடு சாலமன் ரிங் மேட்டர் அப்டியே போட்டுருந்தது பாத்தீங்களா?

   S Murugesan said:
   June 18, 2011 at 6:03 am

   பாண்டி !
   சாலமன் ரிங்/குருவளையம்லாம் அகரமுதலி மாதிரி. இதுல முந்தி சொல்றது என்ன ? பிந்தி சொல்றது என்ன? கைரேகையில எந்த கிரகத்துக்கு பலம் – பலமில்லேனு நமீதா அனாட்டமி மாதிரி பளிச்சுனு தெரியும். செவ் தோஷம் இருக்கா இல்லியாங்கறது கர்ணன் கேமரா ஆங்கிள் கணக்கா பக்காவா தெரியும். விரைவில் கைரேகை பற்றிய ஒரு பதிவு நிச்சயம்.

   கிரகங்களை ஆக்டிவேட் -டீ ஆக்டிவேட் பண்றது பத்தி எனி ஐடியா?

    Ismail said:
    June 18, 2011 at 6:43 am

    //கிரகங்களை ஆக்டிவேட் -டீ ஆக்டிவேட் பண்றது பத்தி எனி ஐடியா? //
    ஆகா போற போக்குல ஒரு சூப்பர் மேட்டர பத்தி பத்த வெச்சுட்டீங்களே. எனக்கு ரொம்ப நாலா குடஞ்சிட்டு இருக்கிற விஷயம். சீக்கிரமே எதிர்பார்கிறேன்.
    நவக்ரஹ ஹோமம் செஞ்சுட்டு எல்லா கிரஹமும் எனக்கு அடங்கிடுசுனு சொல்லர பார்டிங்களுக்கு பதில் சொல்லற மாதிரி போடுங்க அய்யா.

    S Murugesan said:
    June 18, 2011 at 8:20 am

    இஸ்மாயில் !
    வருது.. மேட்டர் வருது.. முக்கிய கான்செப்டே மேற்படி ஹோம பார்ட்டிகளோட கோவணத்தை உருவறதுதேன். அதே சமயம் சைன்டிஃபிக்கா,லாஜிக்கலா ஆக்டிவேஷன் -டீ ஆக்டிவேஷன் முறைகளை தரத்தான் போறேன்.

    என்ன ஒரு நிபந்தனைன்னா உங்க மாதிரி பார்ட்டிங்க எனக்காக பிரார்த்தனை செய்யனும். ( மேட்டர் நெத்தியடியா வெளிவர)

    Ismail said:
    June 18, 2011 at 10:48 am

    என்னங்க இப்படி கேட்டுடீங்க . எங்களுடைய பிரார்த்தனை என்றும் உண்டு.

    டவுசர் பாண்டி said:
    June 18, 2011 at 1:16 pm

    இந்த சாலமன்க்றவர் பைபிள்ல வர்ற ஒரு மன்னர். நியாமா, நல்ல மனசு உள்ளவர். அதுபோவ அவர் ஒரு ஜீனியஸ். அந்த மன்னர் கைல குருவளையம் தெளிவாருந்திச்சாம். இப்ப குருவளையம் நடு வெரலுக்கும் ஆள்காட்டி வெரலுக்கும் எடைல தொடக்கி குருமேடு வழியா வளைஞ்சி உள்ளங்கை ஓரத்துல அந்த விளிம்புல முடியும். இந்த வளையம் லைட்டா சின்ன கொடுமாரி இருந்தா அவிங்களுக்கு ஆசையும் இருக்கும், பக்தியும் இருக்கும்.

    டவுசர் பாண்டி said:
    June 18, 2011 at 1:06 pm

    நான் மந்திர ஈடுபாடு உள்ளவன்றாதள எந்த கேரகத்தால கேடு வரும்னு தெரிஞ்சா அந்த கேரகத்தோட கால உளுந்துற வேண்டியதுதேன். அதாவது அந்தந்த கேரகத்தோட காயத்திரி மந்திரங்கள அமாச பவுர்ணமில ஆயிரக்கணக்குல உரு ஏத்துவேன். தட்சணாமூர்த்தி தாத்தா மாறி மஞ்சத்துண்டு பச்சத்துண்டேல்லாம் நஹி. நம்ம ப்ரெண்டு இன்னா சொல்றான்னா ராசிக்கல்லுன்னு சொல்றான். அதுலயும் எங்க ஜெனுயினா குடுக்கிறாங்க. இன்னொரு ட்ரிக் இருக்குங்க்னா.

  டவுசர் பாண்டி said:
  June 18, 2011 at 2:25 am

  மன்சனுக்கு இனாத்துக்கு ஆன்ம கொறவு உண்டாது?

  சோசியத்துல மரும உருப்ப குறிக்கறது எட்டாம் பாவம். காலப்புருஷ லக்னமான மேசத்துக்கு எட்டாம்பாவம் விருச்சிகம். அதனால விச்சிக ராசியோட ஒனருதேன் மரும உருப்ப குறிக்கிற கெரகம். இந்த செவ்வா ரிலேட்டேட் மேட்டரெல்லாம் அதாவ்து கத்தி, கம்பு, ஆயுதம், சாமான் இந்த மாறி இதெல்லாம்(?) ஆண்குறியோட அமைப்பாவும். கிராமத்துல கூட காதல் மன்னர்கள் லவ்வர்ட டபுள் மீநின்க்ல இத சாட மாடையா சொல்லி போடுறதுக்கு சிக்னல் குடுப்பாங்கோ. பொதுவாவே கேது எந்தக்கேரகத்தோட சேந்தாலும் அந்த கேரகத்தோட பவர சுருக்கிரும். நேத்திக்கி கூட சந்திரன் கூட கேது சேந்தாக்க அல பாயிர மனச சுருக்கி ஒருமுகப்படுத்துரத பத்தி சொன்னேன். அது மாறி செவ்வா கூட கேது செந்தாலோ, இல்ல செவாக்கு ஒன்னஞ்சி ஒம்போதுல கேது நின்னாலோ, எட்டாம் வூட்டு ஒனருக்கூடயோ, அல்லது ஓனருக்கு கொனத்துலையோ நின்னாக்க உருப்ப சுருக்கி ஆண்மக்கொரவ உண்டாக்குது. குறு பார்வை இருந்தா கொஞ்சம் ஸ்ட்ரேந்து. இருந்தாலும் எடம் பொருள் பாத்து டிசைட் பண்ணிக்கோங்க.

   S Murugesan said:
   June 18, 2011 at 5:57 am

   பாண்டி !
   ஏறக்குறைய பாய்ண்டை பிடிச்சிட்டிங்க. ஆனால் செவ்வாய் எந்த இடத்துல இருக்காருங்கறதும் முக்கியமில்லையா? ( 3 ,6 ,10, 11 லருந்தா தோஷமில்லேனு சொல்லி வச்சிருக்கே) மேலும் செவ்வாயோட கேது சேர்ந்தா செவ் தோசத்துக்கு பரிகாரம்னு சொல்றாய்ங்களே. அது எப்படி?

   ஜஸ்ட் செவ் மட்டுமே ஆண்மைய தரும் – ஒழிச்சுரும்னு சொல்ட்டா எப்டி பாஸு.. கில்மாவுக்கு தொடர்பில்லாத பாவமே இல்லே. கிரகமே இல்லை . எல்லா சாலைகளும் ரோம் நகருக்கே செல்வது மாதிரி இருக்கிறது ஒரே பவர். செக்ஸ் பவர்.

   எல்லா கிரகங்களும் -பாவங்களும் தர்ரதும் செக்ஸ் பவர் தேன். இதை ருசுப்படுத்தி ஒரு தொடரே போட்டாப்ல கியாபகம்.

   பாய்ண்டு சூப்பர் .ஆனால் அல்லா ஃபேக்டர்ஸையும் கோ ஆர்டினேட் பண்ணி எழுதுங்க பாண்டி. நீங்க பாட்டுக்கு ஒரு பாய்ண்டை வச்சு பேட்டரி வீக்குன்னுட்டா நலலா கீற பேட்டரில்லாம் கூட லோ சார்ஜ் ஆயிரும்ல.

    டவுசர் பாண்டி said:
    June 18, 2011 at 1:07 pm

    சாரிங்க்னா மொத்தமா ஒரே கமெண்ட்ல சொல்றேன்.

    டவுசர் பாண்டி said:
    June 19, 2011 at 1:51 am

    வணக்கம் நைனா,

    ஹோமியோபதி வேற அலோபதி வேற. ஹோமியோபதி டாக்டருட்ட அலோபதில உள்ள டவுட்ட கேட்டா மன்சன் பேதியாயிருவாறு. ஹோமியோபதியையும் அலோபதியையும் மிக்ஸ் பண்ணா நமக்கு பேதியாயிரும். (சும்மா).

    டவுசர் பாண்டி said:
    June 19, 2011 at 2:56 am

    ஒரு சாதகத்துல என்ன தோஷம் இருந்தாலும் கஜகசெரி யோவம் இருந்திச்சின்னா ஆனைய கண்ட சிங்கம் மாறி அல்லா தோஷமும் வெலகிரும்.

  டவுசர் பாண்டி said:
  June 18, 2011 at 2:43 am

  ஒரு எளவு மேட்டருங்கோ. இன்னிக்கி சனங்க சொசியக்காரவுகள மடக்குறதுக்கு இந்த அறிவுப்பூர்வமான(!) கேள்விய கேட்டுப்புட்டு கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறத பாத்திருப்பீங்க. அதாவது சனங்க சண்டைலையோ, சுனாமிலையோ ஒரு கும்பலாவோ இல்லாங்காட்டி பஸ்சுலையோ மொத்தமா டிக்கட் வாங்கிடுரான்களே அவிக சாதகம் புல்லா ஒரே மாரியாருக்கும்னு கேப்பாங்கோ.

  அதுல இன்னா மேட்டருன்னா மண்டைய போட்டவன்களோட சாதகத்துல பூரா தசா புத்தி மார்கத்த காட்டுமான்னா அதான் இல்ல? இப்ப ஒரு சாதகத்துல ஜாயின்ட் மரண தோஷம் இருந்தா மட்டுமே அவிங்க கும்பல்ல கோவிந்தா போட்ட மாறி கும்பல்ல டிக்கட் வாங்குவாங்க. போட்டுத்தல்ற ராகுவும், உயிற குறிக்கிற குருவும் ஒன்னாவோ இல்லாங்காட்டி ஒன்னஞ்சி ஒம்போதுலையோ இருந்தாக்க அதுக்கு மரண தோஷம்னு பேரு. அதே மாறி லக்னாதிபதியும் ராகுவும் ஒன்னாவோ இல்ல கொனத்துலையோ இருந்தாலும் தோசந்தேன்.

  இப்ப கூட்டு மரண தோஷம் எப்டி லிங்காவுதுன்னா இந்த ராகுவும் கேதுவும் ஒன்னாவோ இல்ல கொனத்துலையோ மீட் பண்ணச்ச வேற கெரகங்க தொணைக்கி இருந்தா அந்த கெரகம் சம்பந்தமான ஆட்களையும் ஒரே க்ரூப்பா போட்டுரும். உதாரத்துக்கு குருவும், ராகு, லக்னாதிபத்தி இவிகளுக்கு கோணத்துல செவ்வா, சுக்கிரன் இருந்தா க்ரூப் டேத்து. இப்ப நாட்டுல எந்த எடத்துலயும் ஒரு பயர் ஆக்சிடேண்டோ இல்ல வாகன அக்சிதேண்டோ நடக்கச்ச அந்த பிளேச குறிக்கிற ராசிக்கி கோணத்துல (கொச்சாரதுல) குருவும் ராகுவும் நிச்சியம் இருக்கும். அலசி பாருங்க.

   Ismail said:
   June 18, 2011 at 4:29 am

   //இப்ப கூட்டு மரண தோஷம் எப்டி லிங்காவுதுன்னா இந்த ராகுவும் கேதுவும் ஒன்னாவோ இல்ல கொனத்துலையோ மீட் பண்ணச்ச வேற கெரகங்க தொணைக்கி இருந்தா அந்த கெரகம் சம்பந்தமான ஆட்களையும் ஒரே க்ரூப்பா போட்டுரும். //

   ராகுவும் கேதுவும் ஒன்னாகவா ராகுவும் குருவுமா?
   கொனத்துல – இது என்னனு புரியவில்லையே அண்ணா

    S Murugesan said:
    June 18, 2011 at 5:52 am

    இஸ்மாயில் !
    இதே கேள்வியை ஒரு பார்ட்டி கேட்டப்போ நான் ” திருப்பதி போறவன்லாம் திருப்பதி பஸ்ஸை அடிச்சு பிடிச்சு ஏறினாப்ல”னு சொன்னேன்.

    இந்த மேட்டருக்கு பொதுவான கிரக நிலையை விட அவரவர் தனிப்பட்ட கிரக நிலைகளுக்கிடையில் ஒரு கோ இன்சிடென்ஸ் இருப்பதுதான் முக்கியம்ங்கறது என் கருத்து.

    ஒரு பேருந்து ஆக்சிடென்ட் ஆகறதுக்கு கொஞ்சம் முந்தி இறங்கினவுகல்லாம் எப்படி தப்பிச்சாய்ங்க. ஆக்சிடெண்ட் ஆவறதுக்கு கொஞ்சம் முந்தி ஏறினவுகல்லாம் எப்படி மாட்டினாய்ங்கன்னா அவிக தனிப்பட்ட கிரக நிலைதான் இதுக்கு காரணமா இருக்க முடியும்.

  Mani said:
  June 18, 2011 at 6:02 am

  தலை இது இதுக்கு தான் அந்த டவுசரு கூட சேராதீங்கண்ணு சொல்றது. கேட்டீங்களா தலை. இப்ப என்னாச்சு நம்ம டவுசரு வியாதி உங்களுக்கும் தொத்திக்கிச்சே கடவுளே நான் என்ன பண்ணுவேன்.

  டவுசரு தான் தன்னோட டீடெயிலு வெளியில தெரியக்கூடாதுன்னு கமெண்டில பதிவு எழுதறாரு. உங்களுக்கு என்ன வந்தது தலை. நீங்க எதுக்கு கமெண்ட் சைஸ் போடனும்னு என்ன தலையெழுத்து.

  அ.ஜோ. வாசகர்களே இங்க வாங்க.

  மணி : இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
  அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே

  நம்ம அண்ணன் கெட்டது எதனாலே!, எதனாலே!

  சித்தூர்ஜி : அதுவா இங்க வாங்கப்பா சொல்றேன்.

  நானும் ஒழுங்காதான் பதிவு எழுதிகி்ட்டு இருந்தேன். திடீர்ன்னு நம்ம தளத்தில டவுசரு பிட்டு பிட்டா டிப்சு போட்டுகிட்டு இருந்தாரா. அவருக்கு பதில் கொடுத்து கொடுத்து அவரு வியாதி எனக்கும் தொத்திகிச்சி. அந்த பாதிப்பில் இருந்து என்னால சீக்கிரம் மீளமுடியல அதான் இப்படி கமெண்ட் சைசுல பதிவு எழுதவேண்டியதாயிடுச்சி. வைத்தியருக்கிட் போயி ஊசி போட்டதுக்கப்புறம் நான் யாருன்னு எனக்கு புரிஞ்சிடுச்சி. என்னதான் சிங்கம் கண்ணுகுட்டியோட சேர்ந்தாலும் சிங்கம் சிங்கம் தானே. அதான் மறுபடியும் எனக்கு அட நாம் சிங்கம்லே (மகம்-1ம் பாதம்) அப்படிங்கற ஞா வந்திடிச்சி. அதான் பழையபடி மறுபடியும் ஜோதிட விஷயங்களை தூக்கலா எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன். அதோட ஆரம்பம் தான் “நல்லவுங்களே நாறிபோக காரணம்ன்னு பதிவு எப்படி டக்கரா ஆரம்பிக்குதா? வெயிட் வெயிட் இன்னும் சரக்கு மஸ்தா கீது. இப்பதானே உள்ள போயிருக்கு நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா வெளியில வரும்” அதுவரை கொஞ்சம் பொறுங்கப்பூ. வர்ட்டா..

   டவுசர் பாண்டி said:
   June 18, 2011 at 1:18 pm

   ஹா, ஹா, நல்ல காமெடி. மணியண்ணே நல்லா மனியடிக்கிரீங்க.

  Mani said:
  June 18, 2011 at 6:32 am

  நவக்கிரகங்கள்ல சேர்க்கைன்னு ஒன்னு இருக்கே அது ரொம்ம பேஜாரான ஒன்னு. நல்லவன் கெட்டவன் கூட சேரக்கூடாது. சேந்தாக்கா என்ன?

  பன்றியோட சேர்ந்த கன்றும் கெடும் அப்படின்னு, அப்புறம் கன்றுகுட்டி …..திங்க போயிடும்.

  இதுல ஒரு நன்மை இதுல யாரு பவருன்னு பார்க்கனும் அவருதான் அங்க ராஜா. அதாவது கெட்டவன் பவருன்னா கன்னுகுட்டி பன்னியாயிடும்.

  நல்லவன் பவருன்னா பன்னி கன்னுக்குட்டியாயிடும். ரெண்டும் சமமா இருந்தா ஒருமாதிரி காக்டெயில் மாதிரி கலந்துகட்டி அடிக்கும்.

  ராகு, கேதுக்களோட ஏன் மத்த கிரகங்கள் சேரக்கூடாதுன்னு சொல்றாங்க. சேர்ந்தா வீக்காயிடும்ன்னு சொல்றாங்க.

  ராகு, கேது இரண்டும் நிழல் கிரகங்கள். அதாவது அவர்கள் கடுமையான இருட்டுபகுதிகளாக வான்வெளியில் உலவுகின்றனர். அவர்கள் அருகில் மற்றக் கிரகங்கள் சென்றால் அவர்களது சுய உருவம், குணம் மறைந்து இருட்டில் மூழ்கிவிடும். அவிய்ங்க பவர ராகு, கேதுக்கள் டபாய்ச்சுடுவாங்க.

  சமீபத்தில் சந்திர கிரகணம் ஏற்படும் போது சந்திரன் அப்படிதான் ராகு ஏரியாவுல போய் மாட்டிகிட்டாரு. கொஞ்ச நேரத்தில காணாம போயிட்டாரு. நம்ம முருகேசு அண்ணன் கூட சொன்னாரு சந்திரன் காரகத்துவம் பாதிக்கப்படும்ன்னு. அந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளின் கதி என்னவாயிருக்கும்.

  அப்படிதேன் சூரியனும், சூரியன் ரொம்ப பவர்ஃபுல் கிரகம். அவரோட ஒளி ரொம்ம ரொம்ப அதிகம். அவருகிட்ட மற்ற கிரகங்கள் ரொம்ப டீப்பா நெருங்கினாக்கா அவரோட ஒளியில மற்ற கிரகங்கள் இருக்கிறதே தெரியாதபடி ஆயிரும். அதைதான் ஜோதிடம் அஸ்தமனம் அப்படீன்னு சொல்லுது.

  சந்திரன் நம்ம பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் இல்லையா. அதனால அது கூட மற்ற கிரகங்கள் சேர்ந்தால் அதனோட பாதிப்பு நமக்கு மிகவும் அதிகமா இருக்கும். இதை அனுபவபூர்வமா பல ஜாதகங்களில் நீங்க பார்க்கலாம்.

  குருவோட மற்ற கிரகங்கள் சேர்ந்தா குரு என்னவோ சுமாராதான் பலன் கொடுப்பாரு, ஆனா குருவோட சேர்ந்த கிரகம் திருந்தி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிச்சுடும்.

  இதுமாதிரி இன்னும் நிறைய இருக்கு இதுக்கு மேல இங்க எழுதினா அப்புறம் கமெண்டில் பதிவு போடற பார்ட்டின்னு நம்மள முத்திரை குத்திடுவாங்க வர்ட்டா… (இப்ப மட்டும் என்ன வாழுதாம்)

   S Murugesan said:
   June 18, 2011 at 8:24 am

   மணி அண்ணே!
   சந்திரன் கேதுவோட சேர்ந்தாதான் ஆப்பு. அப்பாறம் பவரா உள்ள நெல்ல கிரகம் தீய கிரகத்தை திருத்திரும்னு சொல்றிங்களே. ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.

   ஒரு கேன் ரெம்ப பால் இருக்கு ஒரே ஒரு குப்பி பாலிடால் இருக்கு. பாலில் பாலிடாலை ஊத்திட்டா மெஜாரிட்டியா இருக்கிற பால் பாலிடாலை திருத்திருமா?

    டவுசர் பாண்டி said:
    June 19, 2011 at 5:33 am

    நைனா,

    பவர உள்ள கேரகத்தோட பாக்க தூக்கலா(அதிகமா) இருந்து தீய கேரகத்தோட பாக்க கம்மியாருந்து பேக்ளருந்துச்சின்னா பாளிடாளுக்கு எபக்டு கொறஞ்சிரும்.

    மாத்தி யோசி மாமு.

  Mani said:
  June 18, 2011 at 9:00 am

  //ஒரு கேன் ரெம்ப பால் இருக்கு ஒரே ஒரு குப்பி பாலிடால் இருக்கு. பாலில் பாலிடாலை ஊத்திட்டா மெஜாரிட்டியா இருக்கிற பால் பாலிடாலை திருத்திருமா?//

  யுவர் ஆனர் நீங்க சொல்றதும் ஞாயம்தான், நான் என்ன சொல்ல வரேன்னா?..

  //குருவோட மற்ற கிரகங்கள் சேர்ந்தா குரு என்னவோ சுமாராதான் பலன் கொடுப்பாரு, ஆனா குருவோட சேர்ந்த கிரகம் திருந்தி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிச்சுடும்.// இப்படி சொல்றேன்.

  ஜோதிடத்தில வெட்டு, ஒன்று, துண்டு இரண்டு அப்படீன்னு பால், பாலிடால்ன்னு முடிவு பண்றது சரியாக வருமா தலை. ஒரு மாதரி மிக்ஸிங்கா தான் பலன் தரும். அதுல எது பலமா இருக்குன்னு பார்த்து பாதிப்பு அதிகம் இல்லை அப்படின்னு வேணா சொல்லிவைக்கலாம் என்று எனது கருத்து.

   S Murugesan said:
   June 18, 2011 at 11:02 am

   மணி அண்ணே!
   என் கேஸையே எடுத்துக்கங்க. வாக்கு ஸ்தானத்துல சந்திரன் சுக்கிரன் இருக்காய்ங்க. சந்திரன்னா சைக்காலஜி – சுக்கிரன்னா செக்ஸாலஜி ரெண்டுலயும் இப்படி புகுந்து அப்படி வந்துர்ரம். என்ன ஒரு பிரச்சினைன்னா செக்ஸாலஜி எழுதறதால கவனிப்பு கூடினாலும் குட்வில் குறையுது. ஏன்னா சுக்கிரன் நமக்கு பாதகாதிபதி.

   வளர்பிறை சந்திரன்- சுக்கிரன் சேர்ரது ஒன்னும் பா.ஜ.க காங்கிரஸ் கூட்டு மாதிரி நடக்கக்கூடாத சம்பவம் ஒன்னுமில்லை. ஆனால் இதுலயே யாரோட இம்பாக்ட் தூக்கலா இருக்குன்னா சுக்கிரனோட இம்பாக்டுதான் தூக்கல் அதுவும் செல்ஃப் சைட் கோல் மாதிரி தேன்

    Mani said:
    June 18, 2011 at 11:24 am

    அண்ணே! பாதகாதிபதி கான்செப்ட் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க. என்னண்ணே இந்த ஜோதிடம் ஒரே குழப்பமா இருக்கு. நீங்க டீப்பா ஆராய்ச்சி பன்னுவீங்களே அப்படி இந்த கான்செப்டையும் ஒரு போடு போடுங்க. எதனால பாதகாதிபதின்னு சொல்லிவச்சாங்க?

    லக்னத்துக்கு 9ம் அதிபதி பெரிய்ய்ய யோகாதிபதி அப்படின்னு சொல்லிவச்சிபுட்டு படார்ன்னு ஸ்திர லக்னத்துக்கு அவரு பாதகாதிபதின்னு ஒரு குண்டை தூக்கி போட்டா என்னன்ணே பன்றது. லாபாதிபதி கதையும் இதே தான்.

    நான் அறிந்த வரையில் இந்த பாதகாதிபதிகளை விட பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகம் அதிக பாதகத்தை செய்யும். மாரகாதிபதிகளை விட மாரக ஸ்தானத்தில் உள்ளவர் மாரகம் செய்வதில் பலமானவர் என்று படித்திருக்கிறேன். அனுபவத்திலும் அதிகம் ஒத்துவருகிறது.

    ஒரு வீட்டதிபதியை விட அந்த வீட்டில் இருப்பவர் தான் அந்த வீட்டின் பலன்களை செய்வதில் முதன்மையானவர்.

    இது எப்படின்னா நாம என்னதான் பார்த்து பார்த்து சொந்த வீடு கட்டி வச்சிருந்தாலும் பிச்சைக்காரன் வரும் போது அந்த வீட்டில் நாம இருந்தா காசு போடலாம். நாம வாடகைக்கு விட்டிருந்தா அவரு தானே காசு போடுவார். வீட்ல யாரும் இல்லின்னா வீட்டு ஓனர் எங்கன இருக்காரோ அவரு நிலைமைக்கு ஏற்றமாதிரி பலன் இருக்கும்.

    இங்கன பிச்சைகாரன்தான் ஜாதகர். வீட்டு ஓனர் தான் நவக்கிரகங்கள்.

    டவுசர் பாண்டி said:
    June 18, 2011 at 12:54 pm

    ஜென்ரளா சாதகத்துல பன்னெண்டு பாவம் உண்டுன்னு நமக்கு தெரியும். அந்த பன்னெண்டு பாவங்கள்ளையும் எட்டாம் பாவமானது பார்ட்டிக்காரன் போன சென்மத்துல செஞ்ச பாவ மேட்டருங்கள குரிக்கி. அஞ்சாம் பாவம் போன சென்மத்துல செஞ்ச புண்ணிய மேட்டருங்கள குரிக்கி.

    ஒரு சாதகம்னு எடுத்தாக்க முக்கியமான பாவங்க நாலு. அதாவ்து சென்ம லக்னம், சென்ம ராசி, லக்னத்துக்கு பத்தாமெடம், ராசிக்கி பத்தாமெடம். எந்த ஒரு பாவம்னாலும் அந்த பாவத்திற்கு அழிவத்தர்றது (அந்த பாவத்திற்கு) எட்டாம் பாவம். இந்த கேட்டகிரில காலபுர்ச லக்னமான மேசதுக்கு எட்டுக்குல்லவர் செவ்வா. ஸோ, காலப்புர்ச மேட்டர்படி செவ்வா ஒரு பாவ கெரகம். மேசதுக்கு பத்தாமேட மகரம்.

    மகரத்துக்கு எட்டாமெடம் சிம்மம் ஓனர் சூரியன். ஸோ சூரியனும் ஒரு பாவ கெரகம். மேசத்த பொறுத்த வர அஞ்சிக்குள்ளவரா சூரியன் வர்றதால சூரியன பாதி நல்லவர் மீதி கெட்டவரும் வெச்சிக்கலாம். இப்ப கால்புர்ச ராசின்னு சொல்றது கடகத்த. கடகத்துக்கு பத்தாம் ஊடு மேஷம்.

    மேசத்துக்கு எட்டு விச்சிகம்-செவ்வா. ஸோ செவ்வாவும் ஒரு பாவ கெரகம். காலபுர்ச மேட்டர்படி லக்னத்துக்கும், ராசிக்கும் செவ்வா பாவியா வர்றதால செவ்வா ஒரு கொட்ரமான பாவி. சனியபோல் ராகுவும், செவ்வவ போல கேதும் செயல்பட்ரதால ரெண்டுவேருமே பாவ கெரகங்கள்.

    அதே மாறி பாதக ச்தானம்னு எடுத்துக்கிட்டாக்க சர லக்னங்களுக்கு பதினோராம் வூடு, ஸ்திர லக்னங்களுக்கு ஒம்போதாம் ஊடு, உபய லக்னங்களுக்கு ஏழாம் ஊடு பாதகச்தானம்னு சொல்லுவாங்க. அது எப்டி வந்திச்சின்னு தெரிஞ்சிக்கினு பலன் சொன்னா ஷோக்காருக்கும்.

    இப்ப கெரகங்கள மூணு டைப்ல அதாவ்து சர, ஸ்திர, உபய கெரகம்னு வெச்சிக்குவோம். சர ராசிக்கி (மேச,கடக,துலா,மகர – செவ்வா,சந்,சுக்,சனி) மட்டுமே சொந்தக்காரரா வர்ற கெரகம் சந்திரன். அதே மாறி ஸ்திர ராசிக்கி (ரிஷ,சிம்,விருச்,கும் – சுக்,சூரி,செவ்,சனி) மட்டும் சொந்தக்காரரா வர்றது சூரியன், அது போவ உபய ராசிக்கி (மிது,கன்,தனு,மீன – புதன்,புதன், குறு,குறு) மட்டும் ஓனரா வர்றது குருவும் புதனும். இப்ப ஸ்திர ராசிக்கி மட்டும் ஓனரா வர்ற கெரகம் சர ராசில நீசமாச்சின்னா அந்த கெரகம் அல்லா சர ராசிக்கும் பாதகத்த செய்யும்.

    அதே மாறி ஸ்திர கெரகம்(சூரி) நீசமடைர சர ராசிய (துலா) ஆரம்பமா எண்ணி அந்த ஸ்திர கேரகத்தோட சொந்த ஊடு (சிம்) வர எண்ணி (பதுனொன்னு), அந்த ஊடு சர ராசிக்கி எந்த பாவமா வர்தோ அந்த பாவம் அல்லா சர ராசிக்கும் பாதகஸ்தானம். டீப்பா பாக்கனும்னா, ஸ்திர ராசிக்கி மட்டும் ஓனரா வர்ற சூரியன் சர ராசியான துலாத்துல நீசாமாராறு. இப்ப துலாத்துலருந்து சிம்ம ராசி வர என்னுனாக்க சிம்ம ராசி துலாத்துக்கு பதுநோராமெடம்.

    அது போவ துலாம் ஒரு சர ராசி. ஸோ, அல்லா சர ராசிகளுக்கும் பதிநோராமெடம் பாதகச்தானங்கோ. இதே மாரிதேன் ஸ்திர ராசிக்கும், உபய ராசிக்கும் வரும். நீங்களே போட்டுப்பாருங்க. தெரிஞ்சவுங்க எச்கேப்பாயிருங்கோ. இந்த கான்செப்ட் உபய ராசிக்கி மட்டும் இடிக்கும். அதாவ்து உபய ராசிக்கி மட்டும் ஓனரான புதன் இன்னொரு உபயமான மீனத்துல நீசமாராறு.

    இப்ப மீனம் டு கன்னி என்னுனாக்க ஏழு வரும். ஸோ, அல்லா உபய லக்னத்துக்கு எழாமேடம் பாதகஸ்தானம். அதே மாறி மீனத்துலருந்து கவுன்ட் பண்ணா மிதுனம் நாலாம் வூடு. நாலாம் வூட்ட இன்னாத்துக்கு பாதக்ச்தானமா எடுக்கலன்னா மிதுனத்ள எந்த கெரகமும் உச்சமோ, நீசமோ அடையாது. அது போவ போவ புதன் மிதுனத்துக்கு ஆச்சி வூடு. பட் கன்னில உச்சமடைராறு அது போவ கோணமும் அதேன். இதனால கன்னிராசி புதனுக்கு ஆச்சி, உச்சம், மூலத்திரிகோண வூடு.

    இந்த ஒரு மேட்டராலையே கன்னி ராசிக்கி மட்டும் இம்பார்ட்டன்ஸ் குடுத்திருக்காங்கோ. இப்ப உதாரணத்துக்கு ஒரு பேச்சிக்கி நாலாமேடத்த உபய ராசிக்கி பாதக ஸ்தானமா எடுத்துக்குவம். இப்ப தனுசுக்கு நாலு மீனம். தனுசு மீனம் ரெண்டுக்கும் குறு ஓனர். அதாவ்து லக்னாதிபதியே பாதகச்தானாதிபதியா வர்றாரு. ஆராச்சும் தனக்கு தானே கெடுதல் பண்ணிக்குவாங்களா.

    அதுபோவ மிதுன லக்னத்துக்கு நாலு கன்னி. மிதுனம்,கன்னி ரெண்டுக்கும் புதன் ஓனர். மிதுன லகனத்துக்கு புதன் பாதகம் செய்ய மாட்டாரு. ஸோ, உபய ராசிக்கி நாலாமேடத்த பாதக செக்சனா எடுத்துக்கல.

    sugumarje said:
    June 19, 2011 at 11:01 am

    அய்யா டவுடரு… சட்டு புட்டுனு ஒரு கயித்தாலே டவுசரை இறுக்க கட்டிட்டு ஒரு முழுசா பதிவா போடப்பா…
    முருகேசன் சொன்னாப்பலா… படிக்கும் போதே கண்ண கட்டுதுப்பா…
    எதும் கயிறு வேனா வாங்கித்தரட்டா?

    sugumarje said:
    June 19, 2011 at 10:57 am

    //இது எப்படின்னா நாம என்னதான் பார்த்து பார்த்து சொந்த வீடு கட்டி வச்சிருந்தாலும் பிச்சைக்காரன் வரும் போது அந்த வீட்டில் நாம இருந்தா காசு போடலாம். நாம வாடகைக்கு விட்டிருந்தா அவரு தானே காசு போடுவார். வீட்ல யாரும் இல்லின்னா வீட்டு ஓனர் எங்கன இருக்காரோ அவரு நிலைமைக்கு ஏற்றமாதிரி பலன் இருக்கும்.

    இங்கன பிச்சைகாரன்தான் ஜாதகர். வீட்டு ஓனர் தான் நவக்கிரகங்கள்.//
    அய்யா மணி அவர்களே… தூளு 🙂

  டவுசர் பாண்டி said:
  June 18, 2011 at 1:24 pm

  பொதுவாவே ஒரு சாதகத்துல நால்லையோ, ஆறுலையோ, எட்டுலையோ, பன்னேண்டுலையோ பாவக்கேரகங்களும் சுபக்கேரகங்களும் இருந்தா அந்த பார்ட்டி போன சென்மத்துல பிராமனனயோ, இல்ல பசுவையோ இல்ல நல்ல மனுஷனையோ போட்டுத்தல்லிருப்பாங்கன்னு பெருசுங்க சொல்லிருக்குங்க. எப்டின்னு தெரில. அப்டி பாத்தா அல்லாருமே பாவிதேன்.

  Mani said:
  June 18, 2011 at 1:52 pm

  பாதக ஸ்தானத்தை பற்றி டவுசரு விளக்கம் கொஞ்சம் சரியாக தான் இருக்கு. ஆனாலும் இதில் இன்னமும் ஏதோ விஷயம் இருக்கும் போல் தெரிகிறது. எதுக்கும் நம்ம முருகேசு அண்ணன் கொஞ்சம் டீப்பா அலசினா நல்லாருக்கும்ன்னு தோணுது. யாரும் அலசலன்னா நானே கோதாவுல இறங்கலாம்ன்னு இருக்கேன். பார்ப்போம்.

   டவுசர் பாண்டி said:
   June 18, 2011 at 2:15 pm

   மணியண்ணே

   பூனைக்கு ஆரு மணி கட்டுறதுன்னு யோசிக்காதீங்க. நீங்களே(மணி) கட்டிருன்களேன்.

  Maravan said:
  June 18, 2011 at 6:03 pm

  அண்ணா, ஒருத்தனுக்கு/ஒருத்திக்கு இத்தன வயசுல தான் கல்யாணம் நடக்கும், சொந்தத்துல கல்யாணம் நடக்காது அப்டிலாம் அவனோட/அவளோட ஜாதகத்த பார்த்து சொல்ல முடியுமா?

   S Murugesan said:
   June 19, 2011 at 1:33 am

   மறவன் !
   சொல்லலாமே.

    Maravan said:
    June 19, 2011 at 9:04 am

    அண்ணா, நீங்க சொல்லணும் நான் கேக்கணும்

    Parayan said:
    June 19, 2011 at 9:18 am

    அண்ணா, ஒரு பெண்ணை கற்புள்ளவள் என்பதை ஜாதகத்தில் பார்க்கலாமா?

  Harikumar A said:
  June 20, 2011 at 6:01 am

  இங்கே படிக்க படிக்க ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசை அதிகமாயிட்டே இருக்கு. என்னை பத்தி நல்லா தெரிந்ஞ்சுக்கவும், ஜோதிடம் கத்துக்கவும் நான் என்ன செய்யனும், எங்கே போகனும் (URL). ரூட்ட போடுங்க, Please.

  கிருமி said:
  September 22, 2011 at 6:37 pm

  // விரைவில் கைரேகை பற்றிய ஒரு பதிவு நிச்சயம். //
  எங்கே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s